Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. இந்தத் தலைப்புக்காகவே... 1000 பேர் இந்தப் பக்கத்தை பார்வையிட வருவார்கள். 😂
  3. யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்! தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று (04) மாலை அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 04.02.1957 அன்று சிறீலங்காவின் ஒன்பதாவது சுதந்திர தின நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர். திருமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்ட முயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது இளைஞரான தியாகி நடராஜன், அரச படைகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் தேசியக் கொடியுடன் மண்ணில் வீழ்ந்து மாய்ந்த நிகழ்வு அன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தையே உலுக்கியது. 1957, பெப்ரவரி 4,ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக ஒன்பதாவது ஆண்டில் முதல் தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுடன் சிங்கள அரச படைகளின் துப்பாக்கி சூட்டில் உயிரந்த திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜனின் 69,வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தாயக நினைவேந்தல் பணிமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தாயக நினைவேந்தல் குழுவினர் மற்றும் தமிழ்த் தேசிய பற்றாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தியாகி நடராஜன் அவர்களின் உருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செய்து மாலை அணிவித்து கருத்துரைகள் வழங்கியிருந்தனர். https://athavannews.com/2026/1463307
  4. ஆண்குறிகள் அழுக்கானவை நீலாவணை இந்திரா 1 கோதுமை ரொட்டியென நிலத்தைச் சூடேற்றிக் கொண்டிருக்கும் சூரிய வெப்பம் தகிக்கின்ற பட்டப்பகலில் நான் அக்காட்சியைக் கண்டேன். ரோமன் ஃபாதரின் முகம் வழக்கத்தை விடவும் அதிகமாக விகாரமடைந்திருந்தது. அவர் கைகளில் இருந்த சவுக்கு மரக்கம்பின் முனையில் சிறுதுளி இரத்தம் அப்பியிருந்ததைக் கூட என்னால் கவனிக்கமுடிந்தது. வெயில் கொதித்துக் கொண்டிருக்கும் அந்த நண்பகலில், ஒழுங்காகவும் ஒழுங்கின்றியும் கட்டப்பட்டிருக்கும் கல்லறைகளுக்கு நடுவில் குச்சானை முட்டுக்காலில் வைத்திருந்தார். பள்ளிக்கூடம் விட்டுத்திரும்பிய நீலக்களிசனைக் கூட மாற்றாமல் கிழிக்கப்பட்ட சட்டையுடன் முகமெங்கும் அழுது வடித்த கண்ணீர்க்கறையுடன் வானத்தைப் பார்க்கும் படியாக அவன் இருந்தான். அவனது களிசனில் மூத்திரம் ஒழுகியிருந்தது. முன்னால் சில துண்டுப் பத்திரிகைகளும் அதில் அரைகுறை ஆடைகளுடனான நடிகைகளது புகைப்படமும் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு நஞ்சு குடித்துச் செத்துப்போன டேவிட்டின் கல்லறைக்கு மேல் பெரு மணலைப் பரப்பி வைத்திருந்த ஃபாதர், அவனை முட்டுக் காலில் இருத்திய விதத்தைப் பார்க்க எனக்கு அழுகையாக வந்தது. அவர் அவனை எதற்காகவோ திட்டிக்கொண்டிருந்ததையும் வேசியின் மகன் என்று உரத்துக் கூறியதையும், நான் மறைவில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தேன். அவன் நிச்சயமாகக் கையும்களவுமாகப் பிடிபட்டிருக்க வேண்டும். (சுயமைதுனம் செய்யும் போதே ஃபாதர் அவனைக் கண்டிருக்கவேண்டும்.) நிலத்தில் விழுந்த பனம்பழம் போன்ற தொத்திப்பான முகத்தையுடைய குச்சான், மெலிந்த தேகமுடையவன், எண்ணை அப்பிய முகத்துடன், கிறிஸ்துமஸ் இற்கு வழங்கப்படும் சட்டையை வருடம் முழுக்கப் போட்டுக் கொண்டு அலையும் எங்களைப் போன்றவர்களுள் அவனும் ஒருவன். அவனைச் சரியாக அடையாளம் காட்ட வேண்டுமென்றால் அவனது சூத்தாமட்டியின் மீது ஏறியிருக்கும் தசைத்துண்டத்தில் அதிகளவு மயிர்களுடன் ஒரு மாங்காய் மச்சம் இருக்கும் குறளி வித்தைக்காரனானவன், தனது சகோதரி மேர்லினுடன் தேவாலயத்தின் விடுதியில் தான் வசித்துவருகின்றான். அப்துல்லாஹ் தான் முதன் முதலாக எங்களுக்குச் சுயமைதுனம் செய்யப் பழக்கிவிட்டவன். ஆண்குறியிலுள்ள தோலை மேலும், கீழுமாக அசைக்கையில், அதிலிருந்து வெண்ணிறமாக திரவம் பீச்சியடிக்கும் போதெல்லாம் உடலுக்குள் ஏற்படும் கிளர்ச்சியை எங்களால் விவரிக்க முடியவில்லை. அதிலிருந்து நாங்கள் அடிக்கடி அதனைத் திரும்பத் திரும்பச் செய்ய ஆசைப்பட்டோம். அப்துல்லாஹ்வின் கரைவலைத் தோணியின் மறைவில், தேவாலயத்தின் பின்புறமுள்ள கல்லறைகளுக்குள் உள்ள பனை மரங்களுக்கிடையில், சவுக்குமரப் பற்றைக்குள், கடலை ஒட்டியிருந்த பாறைகளின் மறைவில் என நானும் குச்சானும் தனித்தனியாகவோ, சேர்ந்தோ சுயமைதுனம் செய்து கொண்டோம். எங்களுக்குள் அது அலாதியான ஒரு ஆசையைத் தூண்டிவிட்டது. சாப்பாடு, தண்ணீர் போல நாங்கள் தினமும் அதனை செய்து கொண்டோம். பள்ளி லைப்ரரியில் இருந்து பழைய நாளிதழ்களில் உள்ள நடிகைகளின் புகைப்படங்களைக் கிழித்துக் கொண்டு வந்தோம். அதைப் பார்த்துக் கொண்டே செய்வதற்கும் பழகியிருந்தோம். அப்படியொரு நாளிதழ் புகைப்படத்தில் வெள்ளையாக இருந்த நடிகையை குச்சான் விரும்பத் தொடங்கினான். அவளைப் போன்ற ஒரு பெண்ணைத்தான் காதலிப்பேன் என்றும் கூறிக் கொள்வான். அவன் தனது அம்மா மர்யத்தையோ அப்பாவையோ பார்த்ததில்லை. ஆனால் இந்த நடிகையைப் பார்க்கும் போதெல்லாம் எனது அம்மாவின் பழைய புகைப்படத்தைப் பார்ப்பது போன்றே இருக்கும் என்று குச்சான் சொல்வான். ஒரு தடவை கூட அந்தப் புகைப்படத்தை அவன் பிரிந்ததே இல்லை. தனக்கு விருப்பமான கணிதப்புத்தகத்தினுள் அதை ஒழித்து வைத்திருந்தான். 2 சிம்னி விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கும் கருக்கல் பொழுதொன்றில் கடல் பெரும் பூதம் போலக் காட்சியளித்தது. மர்யம் சிவப்புக் கற்கள் பதித்து வைத்திருந்த தனது தங்கத் தோடுகள் இரண்டையும் கழற்றிவைத்துவிட்டு கண்ணாடியின் முன்னால் அமர்ந்திருந்தாள். இரசமிழந்து தேய்ந்து போயிருந்த உடைந்த கண்ணாடியின் மீதிருந்த பல்லியொன்று அவளது நிர்வாணத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. அவளது கழுத்தின் கீழே கண்டித்துப் போயிருந்த இரத்த வடுக்கள் தென்பட்டன. முலைகள் இரண்டும் பருமனில் பெரிதாகியிருந்தன. சகாயப்பனை திருமணம் செய்த போதிருந்த நீளமான முடி அவளிடமிருக்கவில்லை. அவை கொட்டப்பட்டிருந்தன. இடது காதுக்கு மேலால் சிறுநரையுடன் மொட்டையாகத் தலை தெரிந்தது. பெரும்பாலும் இப்போதெல்லாம் அவளிடம் வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இளம் வயதாக இருந்தாலும் தொடர்ந்தும் அரிசிக்கும், சாளை மீன்களுக்காகவும் உடலை விற்றுக் கொண்டிருப்பவளிடம் தேகச்சத்து குறைந்து போயிருந்ததே அதற்கான காரணமாயிருந்தது. கண்ணாடியின் முன்னால் அமர்ந்திருந்த மர்யம் கைகள் இரண்டையும் உடலோடு சேர்த்து இறுகப்பற்றிக் கொண்டு எழுந்தாள். அன்று குளிர் மிகவும் அதிகமாக இருந்தது. கிழிந்த பாயில் படுத்துக் கொண்டிருந்த மேர்லின் மீது தன்னுடைய போர்வையை எடுத்துப் போர்த்தினாள். அவளுக்குத் தூக்கம் வருவதாக இல்லை. பைபிளை எடுத்துப் புரட்டினாள். மத்தேயு 11 வசனம் 28 ல் ‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்’ என்கிற வசனத்தை வாசித்தவள் மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டாள். ரோமன் ஃபாதரேர் அவள் சேர்ச்சின் தாழ்வாரத்தில் இளைப்பாறுவதைக் கூட அனுமதிப்பதில்லை. அப்படியிருக்கையில் தேவாலயத்திற்குள் உள்ள தேவனால் இரட்சிக்கப்படுதல் நடைபெறாத காரியமாகவே இருந்தது. அவள் ஒரு விபச்சாரி என்பது அனைவருக்கும் பட்டும் படாமலும் தெரிந்திருக்க, அவள் தேவாலயத்திற்குள் வரக்கூடாதென்பதும் ஊரில் இருக்கும் வரைக்கும் கல்லறைத்தோட்டத்தில் ஊழியம் செய்ய வேண்டுமென்பதும் தேவாலய நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டிருந்த சட்டமாயிருந்தது. இந்த நிலையில்தான் மர்யத்திற்கும் ஜேக்கப்பிற்குமான சந்திப்பு நிகழ்ந்தது. அந்தக் கடற்கரையோரக் கிராமத்திற்கு வருகை தந்திருந்த தொண்டு நிறுவனத்தின் ஊழியனாக அவன் இருந்தான். அவுஸ்திரேலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேக்கப்; கிறிஸ்தவத் தொண்டு நிறுவனமொன்றின் கணக்காளராக இருந்தான். சுனாமியால் சிதிலமடைந்த தேவாலயத்தினைப் புனரமைப்புச் செய்து மீளவும் ரோமன் ஃபாதர் மூலம் கிறிஸ்தவச் சபைக்கு ஒப்புக் கொடுக்கும் பணி அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனால் எப்போதும் கடுகடுப்பாக இருக்கும் ஃபாதர் அவனிடம் மட்டுமே குழைந்து குழைந்து பேசுவார். அதிக வளர்த்தியுடன் இருந்தவன் நவீன முறையில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் தேவாலயத்தின் நில வரைபடமொன்றைத் தன்னோடு எப்போதும் வைத்திருந்தான். அதனுடன் தேவாலய ஊழியர்கள் தங்குவதற்கென ஒரு தங்குமிடமும், சமையலறையும் அதற்கான தாழ்வாரமும் கூடவே கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. வேலைத்தளத்தைப் பார்வையிடுவதுடன் அதற்கான பணத்தினை வங்கியிலிருந்து பெற்று வழங்குவதும் பின்னர் தினக் கணக்குகளைக் குறித்து வைத்து வாரம் ஒரு முறை குறித்த தொண்டு நிறுவனத்தின் மேலாளருக்குக் கணினி மூலம் அறிவிப்பதும் அவனது வேலையாக இருந்தது. அந்த ஊரில் இருந்த எல்லோரும் ஜேக்கப்பை வெள்ளைக்கார பொஸ் என்றே அழைத்தார்கள். மர்யமும் அவனை அப்படியே அழைத்தாள். ‘வெள்ளைக்கார பொஸ் தேத்தண்ணி குடிக்கிறீங்களா?’ கட்டிட வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மர்யத்தின் கேள்விகளால் உந்தப்பட்டு ‘என்ன?’ என்பது போல விழிகளை உயர்த்தினான். மர்யம் தனது கைகள் இரண்டையும் மேல் கீழாகத் தேத்தண்ணியை ஆற்றுவது போல் சைகை காட்டியபடி வெறும் குவளையொன்றை வாயருகே வைத்து ஊதி ஊதி தேநீரை அருந்துவது போல் பாவனை செய்தபடி தேநீர் வைத்திருக்கும் பிளாஸ்க்கைக் காட்டினாள். அவனும் மனதுவிட்டுச் சிரித்துக் கொண்டே ஆம் என்றபடி தலையாட்ட அவள் ஒரு குவளைத் தேநீரை அவனுக்கு வழங்கினாள். இஞ்சியின் ரசம் ஏறியிருந்த தேநீரைப் பருகியவன் சீனி அதிகம் என்றாலும் சுவையாக இருக்கிறது என்று ஆங்கிலத்தில் கூற எதுவும் அறியாதவளாக மர்யம் சிரித்தபடி முகத்தைத் துடைத்தவாறே விடைபெற்றாள். ஜேக்கப் இற்கான உணவைத் தயாரிக்கவென இருந்த தேவாலயச் சமையற்காறி ரோசம்மா, மேல் வருத்தங்கண்டு வரமுடியாமல் போகவே அந்த வேலைக்காக மர்யம் நியமிக்கப்பட்டாள். ஜேக்கப்பிடம் பணிவாக நடந்துகொள்ள வேண்டும், வேண்டிய வேலைகளைச் செய்து கொடுக்க வேண்டும். அடிக்கடி தொந்தரவு செய்யக்கூடாது, அவனது நீண்ட மேலங்கியை ஸ்திரி பண்ணிக்கொடுக்க வேண்டும், அதிகம் பேசக்கூடாது. வெள்ளைக்காரர்களுக்கு அதிகம் பேசும் கறுப்பர்களைப் பிடிப்பதில்லை. ஆகவே கவனமாக இருக்கவேண்டும் என்கிற ரோமன் ஃபாதரின் பல நிபந்தனைகளுடன், அவள் அவனது வசிப்பிடத்திற்குள் நுழைந்த போது, ஜேக்கப் தனது குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தான். விடுதியில் யாரும் இல்லாததால் அவனது குளியலறைக்கதவு தாழ்ப்பாள் இடாமலே இருந்தது. முழு நிர்வாணத்துடன் அவன் குளித்துக் கொண்டிருந்த கோலம் மர்யத்திற்கு விநோத அனுபவமொன்றை ஏற்படுத்தியது. மெல்லிய பாடலொன்றை உரத்துப்பாடிக் கொண்டிருந்தவன் தனது முகத்தில் விழும் நீரை கழுத்தளவு வளர்ந்த தலை மயிர்கள் மீது கைகளால் தடவிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்தான். பக்கவாட்டில் சிலுவையில் அறையப்படாத இயேசு நாதராக இருந்தவன் பாடலின் சந்தத்திற்குப் பொருத்தமில்லாத குரல்வளத்தோடு அலட்டிக் கொண்டிருந்தது, ரசிக்கும் படியாக இல்லாதது போல அவனுக்கு வேறு விதமான உடலமைப்பும் இருந்ததையும் மர்யம் கவனித்தாள். தொடைகளிலோ, மார்பிலோ மயிர்கள் இல்லாத வழவழப்பான தேகத்தை ஜேக்கப் கொண்டிருந்தான். மார்பு சற்று இறக்கமாயிருந்தது. பெண்களுக்கான மார்பின் அளவில் பாதிக்கும் குறைவான அளவு கீழ் நோக்கியதான மார்பகங்களும் வழக்கத்திற்கு மாறான இடுப்பும் அவனுக்கிருந்தது. ஆண்குறி மிகவும் சிறியதாக இருந்தது. அந்த ஊரில் இருக்கும் ஆண்கள் பலரிலும் சிறிதான ஆண்குறி அவனுடையதாக இருந்தது. அடர்ந்து திரண்ட மயிர்களில் கீழிருக்கும் அடர்த்தியான வீங்கியபடியிருக்கும் சகாயப்பனின் நீண்ட ஆண்குறி ஸ்கலிதம் அடைந்தபின் சுருங்கிவிடும் அளவிலும் சிறிதான அளவில் அது இருந்தது. கடல் நீரின் உப்புத்திரண்டிருக்கும் ஆண்குறிகள் பலவற்றை அவள் உள்ளெடுத்துக் காறி உமிழ்ந்த தருணங்களையெல்லாம் அவனது உறுப்பு அவளுக்கு ஞாபகப்படுத்தியது. தலையைத் திருப்பி அவளை ஒரு கணம் அவன் பார்த்தான். எந்த சலனமுமின்றி அவனது இடுப்பின் கீழ் ஆராய்ச்சி நடாத்திக் கொண்டிருந்த மர்யத்தை ஒரு நிமிடம் உற்றுப்பார்த்தவன் உஷ்…. என்று சத்தம் எழுப்ப சுய நினைவுக்கு வந்தவள் சற்று பார்வையை வேறுபக்கமாகத் திருப்பிக் கூரையை வெறித்தாள். ஈரமான தலையுடன் வெளியேறியவன் என்ன என்பது போல சைகை செய்ய பூனைக் கண்களுடன் இருந்த மர்யம் இன்னுமொரு பூனைக் கண்களுடன் இருந்தவனை உற்றுப்பார்த்தாள். சமையல் வேலைகளுக்காக வந்திருக்கிறேன் என்றவள் “கோக்கி” சமைக்க என்றாள். எனக்குத் தமிழ் தெரியும் என்றவனை ஆச்சரியம் மேலிடப் பார்த்தாள் மர்யம். அவனை நிர்வாணத்துடன் பார்த்தது குறித்து எதுவும் அலட்டிக்கொள்ளாதவன் உடைகளை மாற்றிவிட்டு மேசையின் மீதிருந்த மாம்பழத்துண்டுகளை உண்டுவிட்டு வெளியேறினான். விடுதி புழுதி படிந்து கிடந்தது. ஆங்காங்கே புத்தகங்கள் சிதறிக்கிடந்தன. மேசை மீதிருந்த சீனிப்பேணியைச் சுற்றி வட்டமிட்டு பின்னர் நேர்கோடாய் நகரும் எறும்புகள் சமையற்கட்டை நோக்கிப் பயணித்தன. கருகிய வாழைப்பழத்தோல்கள் நிலத்தில் கிடந்தன. ரோசம்மாள் வராததால் அவ்விடுதி சொற்பத்துக்குள்ளே ஜேக்கப்பால் குழப்பி வைக்கப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டினாள் மர்யம். அறையைக் கூட்டித் துப்பரவு செய்தபின் பின் கிணற்று நீரை வாளியில் அள்ளி எடுத்துக்கொண்டு தரை முழுவதையும் கழுவிச்சுத்தம் செய்தாள். ஜேக்கப்பினுடைய உடைகளை முழுமைக்குமாகத் துவைத்துக் காயப் போட்ட பின்னர் சமையல் வேலைகளைச் செய்துவிட்டு வீட்டின் முற்றத்தில் வந்து அமர்ந்து கொண்டாள். தாமதமாக வருகை தந்த ஜேக்கப், தனது கையில் ஒரு டைரியையும், ஆங்கில நூலொன்றையும் வைத்திருந்தான். உடனே மேலங்கியை மாற்றிவிட்டு உணவு மேசையில் அமர்ந்தவனுக்கு உணவு பரிமாற எத்தனித்தாள் மர்யம். அவளை இடைமறித்தவன் நீயும் உட்காரு சாப்பிடலாம் என்றான். அவள் ஒருவித ஆச்சரியப் பார்வையை அவன் மீது செலுத்தினாள். அதை உணர்ந்து கொண்டவன். ஆங்கிலத்தில் சிற் என்றான். தனித்து விடப்பட்டிருந்த செம்மறியாடொன்றை இழுத்துக் கட்டியது போன்ற மனநிலையில் அவளிருந்தாள். அவனது தமிழ் உச்சரிப்புக்கள் வேறுவிதமாக இருந்ததையும் மர்யம் கவனிக்கத் தவறவில்லை. ‘நீ சில்வியா பிளாத் படித்திருக்கிறாயா?’ என்றான். ‘இல்லை’ என்றாள் மர்யம். சில்வியா பிளாத்தின் டியூலிப் கவிதையை விவரிக்கத் தொடங்கியவன் அவை ரோஜா மலர்களிலும் அழகானவை. குளிர்காலம் வரும் போது அவை இன்னும் அழகாக இருக்கும். எப்போதெல்லாம் எனக்கு மனம் உறுத்தலாக இருக்கிறதோ அப்போதெல்லாம் டியூலிப் மலர்களுள்ள தோட்டத்தில் கவிதைகளுடன் நான் அமர்ந்து விடுவேன். அந்தப் பொழுது மிகவும் ஆசுவாசமாக இருக்கும். இன்றைய உணவு ரொம்பச் சுவையாக இருந்தது என்றவன், சில இனிப்புக்களைக் கொடுத்துச் சென்று வா என்று அவளை வழியனுப்பி வைத்தான். 3 தேவாலயமும், விடுதியும் கட்டிமுடிக்கப்பட்டுக் கையளிக்கப்படவிருந்த நாட்களுக்கு முன்னராகவே ஜேக்கப்பிற்கும் மர்யத்திற்கும் இடையில் இனம்புரியாதவொரு அன்பும், உறவும் காணப்பட்டது. திராட்சை வைனையும், தென்னஞ்சாராயத்தையும் அருந்திக்கொண்டிருந்த மாலைப்பொழுதொன்றில் மேர்லினை நலம் விசாரித்தவன் தானும் அவளைப்போலவே வாழ ஆசைப்பட்டதைக் கூறினான். நிறைவெறியில் தலைமுத்திய தனது தந்தையைப் பற்றி ஏகத்திற்குத் திட்டித்தீர்த்தவன் தமிழும், ஆங்கிலமும் கலந்தபடி தனது கதையைக் கூறத் தொடங்கினான். ‘மர்யம் உன்னை நான் காதலிப்பதாக நீ நினைக்கிறாயா?’ என ஆரம்பித்தவன் அவளது பதிலைக் கேட்காமலே ‘இல்லை’ என்றான். அப்படியென்றால் உன்னுடன் செக்ஸ் வைக்க விரும்புகிறேனா என்று கேட்டவன் அதற்கும் அவளைப் பதில் கூற விடாமல் ‘நிச்சயமாக இல்லை… ஆம் நிச்சயமாக இல்லை’ என்று தலையை இருபக்கமாக ஆட்டியபடி பேசினான். சவுத் வேல்சில் தான் பிறந்தேன். சரியாகச் சொன்னால் அங்கே கடற்கரையோரமாகக் கழிமுகம் இருக்கும் யம்பா எனும் சிறுநகரம். அழகான நகரமது. எனது தந்தை அங்கிருந்த தபால் நிலையத்தில் கடைநிலை ஊழியராக இருந்தார். அங்கு வரும் பொதிகளைப் பக்கத்திலுள்ள இலூக்கா, பலினா, லிஸ்மோர் ஆகிய நகரங்களுக்கு விநியோகிப்பது அவரது வேலையாக இருந்தது. ஓரளவு திக்கிப் பேசும் அவரின் கோபத்தின் இரண்டாவது இலக்காக நான் இருந்தேன். ஆம்… முதல் இலக்காக எனது அம்மா இருந்தாள். எழுபதுகளின் பின்னர் அதிகமாகப் பயிரிடப்பட்ட கரும்புத் தோட்டமொன்றில் கரும்பு வெட்டும் வேலை அவளுடையது. தினமும் நீராவிப் படகொன்றில் பயணித்துக் கரும்புத் தோட்டத்திற்குச் சென்று விடுவாள். அங்கு நீள் வரிசையில் இருக்கும் கரும்புகளை வெட்டிய பின்னர், உருட்டிச் செல்லப்படும் சக்கர வண்டிகளில் ஏற்றிவிட்டு மீளவும் வெட்டச் சென்று விடுவாள். கரும்பு வெட்டு இல்லாத நாட்களில் தொழிற்சாலையில் இருக்கும் உபரி வேலைகளுக்காகவும் அவள் செல்வதுண்டு. பாடசாலை விடுமுறைவிடும் நாட்களில் நானும் அவளுடன் கரும்புத் தோட்டத்திற்குச் செல்வது வழக்கமாய் இருந்தது. அகலமான பாத்திகளின் இடையே நீள் வரிசையில் நடப்பட்டிருக்கும் கரும்புகள் உங்கள் ஊரிலுள்ள கிளிசரியாத் தடிகளைப் போன்று மொத்தமாகக் காணப்படும். அவற்றை அம்மா வெட்டித்தர, ஒவ்வொரு கரும்பாக நான் சக்கர வண்டியில் போடுவேன். அவள் என்னை வேலை செய்ய விடுவதேயில்லை. எனது உள்ளங்கை வியர்க்கும் போது அவற்றை தனது உள்ளங்கைகளால் அழுத்தித் துடைத்து விடுவாள். பின்னர் சிறுதானியங்களை அவித்த நீரை நானும் அவளும் பருகுவோம். அது ஒரு விலை குறைந்த சூப் போன்று இருக்கும். அங்கிருந்து பயணமாகி வீட்டிற்கு வரவும், அப்பா வரவும் சரியாக இருக்கும் என்று கூறிய ஜேக்கப் தலையின் மேல் சுழலும் மின்விசிறியை உற்று நோக்கினான். நான் ஒரு ஆண் போன்று இல்லாதது அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. எனது நடவடிக்கைகளில் ஒருவிதப் பெண் தன்மை இருந்தது. அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. வைத்தியர்கள் அது ஹார்மோன் பிரச்சினையாக இருக்கலாம் என்றார்கள். நான் முழுமையாக ஆணாக இருக்கவில்லை என்பதை நானே உணர்ந்தேன். ஆனால், நான் ஒரு முழுமையான பெண்ணும் இல்லை என்பதையும் உணர்ந்தேன். என்னோடு படித்த பையன்களது பிறப்புறுப்பு போன்று என்னுடையது இருக்கவில்லை, உடலும் இருக்கவில்லை ஆனால் திருநங்கை எனும் அளவிற்கும் நான் இருக்கவில்லை இப்படியான ஒரு உடலியல் பிரச்சனை எனக்குள் இருக்கிறதை என்னுடைய பதின்ம வயதின் ஆரம்பத்திலேயே நான் அறிந்து கொண்டேன். எனக்கு ஆண்களின் மீது ஈர்ப்பு வரவில்லை, பெண்களின் மீது சுத்தமாக வரவேயில்லை. இந்தச் சமூகத்தைக் குறித்தான ஒருவித அச்சம் என்னிடம் இருந்து கொண்டேயிருந்தது. அதை விடவும் தனது பெல்ட்டினால் அடிக்கும் அப்பாவிடம் அதிக பயம் இருந்தது. ஆணின் நடத்தைகள் கைவரப்பெறாத என்னை அவர் திட்டியபடியே இருந்தார். இதற்காகவே நான் ஆண் போன்று நடிக்கப் பழகிக்கொண்டேன். அவ்வப்போது அந்த நடிப்பு தோற்றுப்போகும் வேளையிலெல்லாம் நான் மீண்டும் தாக்கப்பட்டேன். என்னால் அம்மாவும், அம்மாவின் கண்ணீரால் நானும் திரும்பத் திரும்ப உடலளவிலும் மனதளவிலும் தாக்கப்பட்டோம். நான் முழுமையற்ற ஆணாகவும், முழுமையற்ற ஆண் உறுப்புடனும் பிறந்தது குறித்து வெட்கப்பட்டேன். என்னுடைய உடல் சார்ந்து எனக்குக் கழிவிரக்கம் உண்டானது. அதை நான் வெறுத்தேன். அப்பாவையும் வெறுத்தேன். ஆண்களையும், ஆண்மையையும் வெறுக்கத்தொடங்கினேன். நான் நேசித்தது அம்மாவை மட்டும்தான் என்றான். அப்பாவின் அதிகாரத்தில் இருந்து தப்பிக்கவே நான் திருச்சபையின் விடுதியில் சேர்ந்தேன். அப்பாவிடம் இருந்து விடுதலை பெற்றதொரு உணர்வு இருந்தாலும் அம்மாவை இழந்தது குறித்து வருத்தமடைந்தேன். அங்கிருந்து பல நாடுகளுக்குச் சென்றேன். தனிமையில் வாழ்ந்தேன். இந்தியாவில் இரண்டு வருடத்திற்கும் மேலாக இருந்தேன். தமிழை நன்கு பேசவும், கொஞ்சம் வாசிக்கவும் கற்றுக் கொண்டேன். கச்சத்தீவு தேவாலயத்திற்குச் சென்றிருக்கிறேன். அங்கிருந்து இங்கு வந்தேன் என்றவன் தனது வைனின் இறுதிமிடறையும் பருகினான். யாரும் எனது தனிமைக்கு ஆறுதலாக இருக்கவில்லை என்று அவளது கைகளைப்பற்றி முத்தமிடவும், மர்யத்தின் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர்த்துளியொன்று ஜேக்கப்பின் கைகளை நனைக்கவும், ரோமன் ஃபாதர் அவ்விடுதிக்குள் நுழையவும் சரியாக இருந்தது. தேவாலயமும், விடுதியும் திறக்கப்பட நாட்குறிக்கப்பட்டவுடன் அவுஸ்திரேலியாவில் இருந்து குறித்த தொண்டு நிறுவனத்தின் மேலாளர்களும், பணியாளர்களும் வருகை தந்திருந்தனர். தேவாலயத்திற்கு வெள்ளை நிறமும், முன்னான மேல் தளத்திற்கு நீல வண்ணமும் பூசப்பட்டிருந்தது. ரோமன் ஃபாதரின் தலைமையில் ‘அர்ச்சிப்பு’ நிகழ்விற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்தபடியிருக்க, ஊர் மக்கள் தேவாலயத்தின் முன்றலில் திரண்டிருந்தனர். வர்ண விளக்குகளால் ஆலயம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன் மண்டபத்தில் கருணை பொங்கிய இயேசுவைத் தாங்கிய அன்னை மரியாள் திருவுருவச்சிலை நிறுவப்பட்டிருந்தது. மெழுகுவத்திகளுடன் ஊர்வலமாக மக்கள் திரண்டிருந்தனர். மேர்லினோ ஜேக்கப் வாங்கிக் கொடுத்திருந்த புதிய சட்டையை அணிந்திருந்தாள். மர்யம் வாசலில் நின்றபடி கருணை கூர்ந்த கடவுளைத் தொழுது கொண்டிருந்தாள். கொரிந்தியார் 13:7 இல் உள்ளபடி அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும் என்ற வாசகம் பதிக்கப்பட்டிருந்த வளைவை நோக்கி வெளிப்பட்ட ஜேக்கப், வாசலில் நின்று கொண்டிருந்த மர்யத்தின் கைகளைப் பிடித்து ஆலயத்திற்குள் அழைத்துவர ரோமன் பாஃதர் உள்ளிட்ட ஊரவர்கள் எரிச்சலுடன் அவனைப் பார்த்தனர். சமையற்காரி ரோசம்மாளைத் தாண்டி உள்ள வந்தவன் யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் நடத்தையில் பிழைத்த அகோலா, அகோலிபாளைத் தண்டித்தது போல் கர்த்தராகிய இயேசு இவளைத் தண்டிப்பதாக இருந்தால் அவளை தேவாலயத்தில் ஊழியம் செய்யும் நிலைக்கு வழியேற்படுத்தியிருக்கமாட்டார். அவளைக் கல்லெறிந்து கொல்லுமளவிற்கு இங்கு தூய்மையான ஆண்கள் எவருமில்லை. அவளது குடும்பத்தாரைத் தொண்டு நிறுவனம் தத்தெடுக்கிறது. இந்த ஆலயத்திற்குப் பாத்தியப்பட்டவளாகச் சாகும் வரை அவள் ஊழியம் செய்யட்டும். அவளுக்கான மாதச் சம்பளத்தை எங்கள் தொண்டு நிறுவனம் பார்த்துக்கொள்ளும். சமையல்காரி ரோசம்மாளுக்கு உதவியாகவும், சபை ஊழியர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுக்கவும் அவளுக்கு இந்தத் திருச்சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். ரோமன் ஃபாதர் இதனை வழிமொழிவார் எனக்கூறவே சபை ஒரு கணம் துணுக்குற்று நின்றது. பசப்பி, வெள்ளைக்காரனை மயங்கிப் போட்டாள் என்று சில குரல்கள் அலை மோதப் புதிய தேவாலயத்தின் சுவர்களில் அவை எதிரொலித்து அடங்கின. மர்யம் கண்ணீர் மல்க ஜேக்கப்பின் கால்களில் விழவும் எதுவும் செய்ய முடியாத ஃபாதர் தேவனின் ஆசி அதுவென்றால் அப்படியே ஆகட்டும் என்று கூறவும், மெழுகுவத்திகள் கரைந்தொழுகிப் பலரது விரல்களைச் சுட்ட போதே திருப்பலி ஆரம்பமானது. சில தினங்களுக்குப் பின்னர் ஜேக்கப் அவுஸ்திரேலியா திரும்பிச் செல்ல வேண்டிய சூழல் வந்தது. இறுதியாக அவன் மர்யத்தைச் சந்திக்க வந்த போது அவள் அழுது கொண்டிருந்தாள். அவளை ஆசுவாசப்படுத்தியவன் அவளது புகைப்படமொன்றை அவளுக்குப் பரிசளித்தான். நான் எனது அம்மாவுடன் உன்னைக் காண மீண்டும் வருவேன் என்று ஜேக்கப் உறுதியளித்துச் சென்ற மூன்றே மாதத்தில் கர்ப்ப வாந்தியெடுத்தாள் மர்யம். மர்யத்திற்குத் தலைசுற்றலுடன், காய்ச்சலும் ஆரம்பமானது. ஊர் முழுக்க வெள்ளைக்காரனுடன் படுத்தெழும்பி விட்டாள் வேசை என்கிற பிதற்றல் கதைகள் அதிகம் உலாவத் தொடங்கின. விடுதியின் அறையில் அவளை வைத்திருப்பது ரோமன் ஃபாதருக்கு எரிச்சலைக் கிளப்பியது. அவளது வயிறு வளருகையில் தேகம் மெலிந்து சூம்பிப்போனது போலானது. சமையல்காரி ரோசம்மாள் மட்டும் அவளுக்கு ஆதரவாக இருந்தாள். மெல்ல மெல்ல இருமத்தொடங்கியவள் அடிக்கடி மூச்சிரைப்பிற்கு உள்ளானாள். இரத்தம் கலந்த சளி அவளுடலில் இருந்து வெளியானது. அதைக்குறித்து அவள் சட்டை செய்யாதிருந்தாள். இரவு முழுக்கக் கண்களை மூடியபடி இருந்தாள் பின் தீராத இருமலால் அவதிப்பட்டாள். பைபிளை வாசித்தபடி உளமாற தனது கணவன் சகாயப்பனை நினைத்துக் கர்த்தராகிய இயேசு என்னும் ஆண்டவர் தனக்குப் பாவமன்னிப்பு அளிப்பார் என்று புலம்பினாள். இருமல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. தேய்பிறை நாளொன்றில் சமையல்காரி ரோசம்மாள் உதவியுடன் குறைமாதக் குழந்தையாகக் குச்சானைப் பெற்றெடுத்தவள் காச நோயால் பீடிக்கப்பட்டதை அறியாமலே சிலநாட்களின் பின் இருமி இருமிச் செத்துப் போனாள். விடுதியில் இடம் கிடைத்தாலும், கல்லறைத் தோட்டத்தில் இடம் கிடைக்காததால் கடற்கரையோரத்திலே அவளது சடலம் புதைக்க அனுமதிக்கப்பட்டது. ரோமன் ஃபாதர் தள்ளி நிற்க ரோசம்மாளும் சில மீனவர்களும் சேர்ந்து சடலத்தைப் புதைக்க குச்சானைக் கைகளில் ஏந்தியபடி மேர்லின் அழுது கொண்டிருந்தாள். அதன் பிறகு மர்யத்தின் அத்தனை வேலைகளையும் சேர்ச்சின் விடுதியில் தங்கியிருந்த மேர்லின் செய்து கொண்டே தனது தம்பியையும் ரோசம்மாளின் உதவியுடன் வளர்த்து வர எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்துடன் அவளை அடிமை போல நடாத்தத் தொடங்கினார் ரோமன் ஃபாதர். 4 வழக்கம் போல குச்சானும், நானும் தும்பி பிடிக்கக் கிளம்பிக்கொண்டிருந்தோம். உலங்கு வானூர்தி போல படபடவெனச் சிறகடித்துக்கொண்டு திமிருடன் அலைகிற தும்பி, சிறு செடிகளுக்குள் புகுந்து புகுந்து பின்னர் ஏதாவது ஒரு செடியிலுள்ள இலையின் நுனியில் அமர்ந்திருந்து, தனது உடைந்த கண்ணாடிச்சில்லுகளை ஒட்ட வைத்திருப்பது போலிருக்கும் கண்களைச் சுழற்றி அங்குமிங்கும் இரைகௌவிகளை நோட்டமிட்டபடியிருக்கும். அப்போதுதான் குச்சான் தன்னுடைய வேலையைத் தொடங்குவான். அடிக்கடி வியர்த்துக் கொண்டிருக்கும் தனது உள்ளங்கையைச் சட்டையில் தடவியபடி முடிதும்பைச்செடிகளைக் கற்றையாகப் பிடித்து எடுத்துக் கொள்வான். முடிதும்மையின் பூக்கள் வெள்ளை நிறத்தில் கொள்ளை அழகுடையதாயிருக்தும் அவை மேர்லினைப் போல, எனது அம்மாவைப் போல, எனது அம்மாவைப்போலவே அந்தத் துண்டுப்பத்திரிகையில் இருக்கும் நடிகையைப் போல மென்மையானதும் அழகானதுமாகும் என்பான். மேர்லினுக்கு முடிதும்பைப்பூக்களை ரொம்பப் பிடிக்கும் அதை அவள் வட்டமிட்டுச் சேர்த்து இடியப்பம் போல செய்வதுண்டு. அதற்காகவென முடிதும்பைப்பூக்களைப் பத்திரப்படுத்திவிட்டு இலைகளுடன் கூடிய செடிகளை எடுத்து வைத்திருப்பான். பூனைக்கண்களையுடை குச்சான் மெல்ல மெல்ல பூனை போல நடக்கத் தொடங்குவான். தும்பியின் வால் நீட்டப்பட்டிருக்கும் திசையில் பணிந்து செல்வான். முடிதும்பைக்கற்றையைக் கண நேரத்தில் அதன் மீது போடுவான். ‘ஒரே அமுக்கு…. மாட்டிவிட்டது… மாட்டிவிட்டது…’ என்று கத்துவான். பின்னர் ஒவ்வொரு முடிதும்பைச்செடிகளாக விலக்க அது செடிகளுக்கிடையே உள்ள இடைவெளியினூடாகப் பறந்துவிடும். அன்றும் அப்படித்தான் பல பிரயத்தனங்களுக்குப்பிறகு தும்பியொன்றைப் பிடித்தவன். சொப்பின் பேக்குகள் நிறைய முடிதும்பைப்பூக்களை எடுத்துக் கொண்டு பெருங்கடலின் அலைவாக்கரையோரமாக ஓட்டமெடுத்தான். கத்திக்கூச்சலிட்டபடி வெறி கொண்டு ஓடினான். மேர்லின்… மேர்லின்… இன்று நான் பச்சைத்தும்பியொன்றைப் பிடித்துவிட்டேன் என்றபடி ஓடினான். அவன் கூடவே நானும் பற்களும் ஈறுகளும் தெரியும் படிச் சிரித்துக் கொண்டே ஓடினேன். வழக்கத்திற்கு மாறாக, தேவாலயத்தின் முன்பு மக்கள் திரண்டிருந்தனர். விடுதியின் தாழ்வாரத்தில் மேர்லின் குத்துக்காலிட்டிருந்தாள். அவளது தலைமுடி நறுக்கப்பட்டிருந்தது. ரோசம்மாள் செருப்பை எடுத்து ஆங்… ஆங்… என்றபடி ரோமன் ஃபாதரை மூச்சிரைக்க அடித்துக் கொண்டிருந்தாள். அவள் நிறைவெறியில் மூர்க்கத்துடன் இருக்கும் புருஷனொருவன் பொண்டாட்டியைப் போட்டு அடிப்பது போல அடித்துக்கொண்டிருந்தாள். அப்பாவிப் பெண்ணை நாசம் செய்துவிட்டாயே பாவி என்று கத்தினாள். இறைவனுக்குச் சாட்சியாய்த் தொண்டு செய்ய வந்தவன் செய்கிற காரியமா எனப் பெண்களில் சிலர் குமுறினர். அங்கிருந்தவர்கள் அடித்த அடியில் ஃபாதரின் நீண்ட வெள்ளை அங்கி கிழிந்திருந்தது. கிழிந்த சட்டையில் தாடை உடைந்ததால் கசிந்திருந்த இரத்தத் துளிகள் அப்பியிருந்தது. அவர் முட்டுக்காலில் இருத்தப்பட்டிருந்தார். டேவிட்டின் கல்லறை மீதிருந்த குச்சானை விடவும் பரிதாபமான நிலையில் அவர் இருந்தார். செருப்பை வைத்திருந்த ரோசம்மாள் அவரது முகத்தில் காறி உமிழ்ந்தாள். என்னை…. மன்னித்…. என்று ஏதோ சொல்லத் தொடங்க ஃபாதரின் முகத்தில் மீண்டும் ஒரு அடி விழ, அவர் நிலை தடுமாறி தரையோடு தரையாகச் சாய்ந்தார். அவரது ஆடை கிழிக்கப்பட முழு நிர்வாணமாக நின்றவர், தனது இரு உள்ளங்கைகளாலும் அழுக்கேறிய தனது பிறப்புறுப்பை மறைத்தபடி அழுதடங்கினார். பொலிசார் சற்று நேரத்திலே அங்கு வருகை தந்தனர். மேர்லினை ஆம்பியூலன்ஸில் ஏற்றியவர்கள் ஃபாதரை தூக்கி நிறுத்தினர். உச்சக்கட்ட வலியில் தள்ளாடிக் கொண்டிருந்த அவரை பொலீஸ் ஜீப்பை நோக்கி அழைத்துச் சென்றனர். அப்போதுதான் நான் அதனைக் கண்டேன். தனது பிருஷ்டங்களை மறைக்க முடியாமல் எதிர்த்திசையில் தலைகுனிந்தபடி நடந்து கொண்டிருந்த ஃபாதரின் சூத்தாமட்டியின் மீது ஏறியிருக்கும் தசைத்துண்டத்தில் அதிகளவு மயிர்களுடன் ஒரு மாங்காய் மச்சம் இருந்தது, குச்சானுக்கு இருப்பதைப் போலவே! illustration by Sam Weber பாக்கியராசா மிதுர்ஷன் எனும் இயற்பெயரையுடைய நீலாவணை இந்திரா என்பவர், இலங்கையைச் சேர்ந்தவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்று உயிரியல் பிரிவில் அணுத்தொழில்நுட்பத்தில் இளமாணிப் பட்டத்தை நிறைவு செய்துவிட்டு தற்போது அதே பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிர்த் தொழிநுட்பப் பாடப்பரப்பில் தனது முதுமாணிப் பட்டத்திற்கான கற்கைநெறியினை மேற்கொள்கிறார். இவரது கக்கூஸ் வாளி எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு தடைப்பட்டு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட இவரது இரண்டு கவிதைகள் கிழக்கின் கவிக்கோர்வையிலும், றெதிநெந்தா என்று பேசப்பட்ட சிறுகதையொன்று கிழக்கின் நூறு சிறுகதைகளில் நூறாவதாகவும் வந்துள்ளது. கிழக்குப் பண்பாட்டலுவல்கள் நூலின் அடிப்படையில் இவரே மிகவும் இளம்வயதுடைய கிழக்கு மாகாண சிறுகதை எழுத்தாளர் ஆவார். மேலும் விவாதங்களிலும், மேடைப்பேச்சுக்களிலும் செயற்பட்டு வருகிறார். https://thadari.com/penises-are-dirty-nilavanai-intira/
  5. புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்! வரலாற்று சிறப்பு மிக்க தேவ்னி மோரி புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சியானது இன்றைய தினம் (05) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஹுணுபிட்டி கங்காராம விகாரையில் ஆரம்பமாகவுள்ளது. இன்று (05) காலை முதல் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை ஏழு நாட்கள், 24 மணி நேரமும், வரலாற்று சிறப்புமிக்க ஹுணுபிட்டி, கங்காராம விகாரையில் இந்த புனித சின்னங்களை இந்நாட்டு மக்கள் தங்கள் கண்களால் கண்டு வழிபடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான வசதிகளும், ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக, பிரதமர் மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட “ புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனத்தின் ஆரம்ப நிகழ்வைக் குறிக்கும் வகையில் புத்த பெருமானின் புனித சின்னங்களுக்கு நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முதல் மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த இடமான குஜராத்தின் அரவல்லி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தேவ்னி மோரி தொல்பொருள் தளத்தில் உள்ள புத்த மடாலய வளாகத்தில் உள்ள ஸ்தூபியின் அருகே 1960 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது இந்த புனிதச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த இடத்தில் இரண்டு புனிதச் சின்ன கலசங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், அவற்றில் ஒன்றில் இந்த புத்த பெருமானின் புனித சின்னங்கள் கிடைத்தன. அங்கு காணப்பட்ட கலசத்தில் உள்ள கல்வெட்டு, “புத்த பெருமானின் புனிதச் சின்னங்கள் வைக்கப்பட்ட இடம்” என்று எழுதப்பட்டிருந்தமை, இவற்றின் புனிதத்தை மேலும் உறுதிப்படுத்தும் வலுவான சான்றாகும். இந்தியாவின் பரோதா அருங்காட்சியகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்தப் புனிதச் சின்னங்கள், இதுவரை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை என்பதுடன், இலங்கை மக்கள் இந்த புனிதச் சின்னங்களை தங்கள் கண்களால் பார்த்து வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை ஆகும். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக புனிதச் சின்னங்கள் நேற்று (04) பிற்பகல் இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதுடன், அங்கு சிறப்பு மத வழிபாடுகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், புனிதச் சின்னங்கள் ஹுணுபிட்டி கங்காராம விகாரைக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர், மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களுக்கு மத்தியில், புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசன நிகழ்வை ஆரம்பித்து வைத்து, புனித சின்னங்களுக்கு ஜனாதிபதி முதல் மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டார். அதன்படி, இன்று (05) காலை முதல் பெப்ரவரி 11 ஆம் திதி வரை ஏழு நாட்கள், 24 மணி நேரமும், வரலாற்று சிறப்புமிக்க ஹுணுபிட்டி, கங்காராம விகாரையில் இந்த புனித சின்னங்களை இந்நாட்டு மக்கள் தங்கள் கண்களால் கண்டு வழிபடும் வாய்ப்புக் கிடைக்கவுள்ளதுடன், இதற்கு தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய-இலங்கை நட்பை வலுப்படுத்தும் இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில், குஜராத் மாநில ஆளுநர் கலாநிதி தேவ்விரத்திற்கு ஜனாதிபதி விசேட நினைவுப் பரிசையும் இதன்போது வழங்கினார். ஹுணுபிட்டி, கங்காராம விகாரையின் விகாராதிபதி வண. கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரர், சிறப்பு நினைவுப் பரிசொன்றையும் ஜனாதிபதிக்கு கையளித்தார். வரலாற்று சிறப்புமிக்க தெவ்னி மோரி புனித சின்னங்களை இந்நாட்டிற்கு தரிசனத்திற்காக கொண்டு வருதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்திய பதில் உயர் ஸ்தானிகர் சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையே பரிமாற்றப்பட்டது. சியம் மகா நிகாயவின் மல்வத்து தரப்பின் அநுநாயக்க வண. திம்புல்கும்புரே விமலதம்ம அநுநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் மற்றும் சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் Shartse Khensur Rinpoche Jangchup Choeden தேரர், இந்தியாவிலிருந்து வருகை தந்த மதிப்பிற்குரிய மகா சங்கத்தினர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட அமைச்சர்கள், இலங்கைக்கான இந்திய பதில் உயர் ஸ்தானிகர் சத்யாஞ்சல் பாண்டே, உட்பட இந்திய அரசாங்கத்தின் விசேட பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, அமைச்சுகளின் செயலாளர்கள், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்புப் படைகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://athavannews.com/2026/1463278
  6. இலங்கை மீனவர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு! ஜனவரி 29 அன்று இந்திய கடலோர காவல்படையினரால் இலங்கை மீனவர்கள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. 2026 ஜனவரி 29, அன்று கடலில் இலங்கை மீனவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பான ஊடக அறிக்கைகளை கவனித்ததாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. தகவல்களைச் சேகரித்த பின்னர், இந்திய கடற்படை அல்லது இந்திய கடலோர காவல்படை வீரர்களால் அத்தகைய தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று உயர் ஸ்தானிகராலயம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியது. அத்துடன், மீனவர்களின் வாழ்வாதாரக் கவலைகளுக்கு மனிதாபிமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், எந்த சூழ்நிலையிலும் பலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேலும் கூறியது. இந்த விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் உயர் ஸ்தானிகராலயம் தொடர்பில் உள்ளது என்றும் அது குறிப்பிட்டது. ஜனவரி 29 ஆம் திகதி, வென்னப்புவ மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்த 12 இலங்கையர்கள், இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்தபோது இந்திய கடலோர காவல்படை வீரர்களால் தாக்கப்பட்டதாக மீனவர்கள் குழு ஒன்று குற்றம் சாட்டியது. சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அரசாங்கம் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் என்று மீனவர் சங்கத்தினர் கோரியிருந்தனர். மூன்று மீன்பிடி படகுகள் தாக்கப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்ததாகவும், இந்திய கடலோர காவல்படை வீரர்கள் தாக்குதலை நடத்த இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். https://athavannews.com/2026/1463304
  7. இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு! இந்தியா தான் விரும்பும் எந்த நாட்டிலிருந்தும் மசகு எண்ணெயைக் கொள்வனவு செய்வதற்கு சுதந்திரம் உள்ளது என்று ரஷ்யா புதன்கிழமை (04) கூறியுள்ளது. மேலும், எரிசக்தி இறக்குமதியை பல்வகைப்படுத்துவதற்கான புது டெல்லியின் முயற்சிகள் புதிதல்ல என்றும் சுட்டிக்காட்டியது. பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக அமெரிக்காவிலிருந்தும், ஒருவேளை வெனிசுலாவிலிருந்தும் வர்த்தக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மசகு எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வந்தது. ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து அறிவித்த கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை ரஷ்யா மட்டுமே வழங்குவதில்லை என்பதை நாங்கள், ஏனைய அனைத்து சர்வதேச எரிசக்தி நிபுணர்களுடன் சேர்ந்து நன்கு அறிவோம். இந்தியா எப்போதும் ஏனைய நாடுகளிடமிருந்து இந்த பொருட்களை வாங்கியிருக்கிறது. எனவே, இந்தியாவின் நிலைப்பாட்டில் ரஷ்யா அசாதாரணமான எதையும் நாங்கள் காணவில்லை. ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் ரஷ்யாவிற்கு இதுவரை வரவில்லை – என்றார். இதற்கிடையில், ரஷ்ய மசகு எண்ணெயை முழுமையாக மாற்றுவது இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு நடைமுறைக்கு மாறானது என்று ரஷ்யாவில் உள்ள எரிசக்தி ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்தியா பதப்படுத்தும் மசகு எண்ணெயில் கிட்டத்தட்ட 88 சதவீதத்தை பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களாக இறக்குமதி செய்கிறது. 2021 வரை இந்தியாவின் இறக்குமதியில் ரஷ்ய எண்ணெய் வெறும் 0.2 சதவீதமாக இருந்தது, ஆனால் 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் மொஸ்கோவைத் தவிர்த்த பின்னர் தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய மசகு எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்தது. நிகழ்நேர பகுப்பாய்வு நிறுவனமான Kpler இன் தரவுகளின்படி, இந்தியாவின் ரஷ்ய மசகு எண்ணெய் இறக்குமதி 2026 ஜனவரி முதல் மூன்று வாரங்களில் ஒரு நாளைக்கு சுமார் 1.1 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் சராசரியாக 1.21 மில்லியன் பீப்பாய்களாகவும், 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் காணப்பட்ட 2 மில்லியன் பீப்பாய்க்கும் அதிகமாகவும் இருந்தது. https://athavannews.com/2026/1463293
  8. லண்டனில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தின போராட்டம்! இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து நேற்றையதினம் வடக்கு – கிழக்கில் மாபெரும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் குறித்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் உறவுகளால் லண்டனிலும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த போராட்டம் பேரணியாக பாராளுமன்றம் நோக்கி நகர்ந்தது. இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழர்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை என தெரிவித்தும், தமிழ் தேசிய கொடியை தாங்கியவாறு இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1463312
  9. அதென்ன சுமந்திரனை பற்றி கதைச்சால் மட்டும் நானாவுக்கும் அவரின் அனுதாபிக்கும் பின்பக்கம் வேர்க்குது? உடனேயே புலிவாந்தியோட வருகினம்!
  10. உந்த ஆளின்ர முழு நேர வேலை இனவாதம் கக்கிறது . எதோ ஒரு பாம்பு கக்கிவிட்டு , அதையே திரும்பவும் தானே உண்ணுமாம் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்.
  11. Today
  12. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கொலை செய்ய முயற்சித்த நபருக்கு ஆயுள் தண்டனை ; நீதிமன்றம் தீர்ப்பு! 05 Feb, 2026 | 08:56 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயன்ற வழக்கில், குற்றவாளியான ரியான் ரூத்திற்கு ஆயுள் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், புளோரிடாவில் உள்ள டிரம்பிற்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் அவர் விளையாடிக் கொண்டிருந்த போது, புதர்களுக்கு இடையே துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த 60 வயதுடைய ரியான் ரூத் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை புளோரிடா நீதிமன்றத்தில் நீதிபதி ஐலீன் கேனன் முன்னிலையில் நடைபெற்றது. ரியான் ரூத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, வழக்கறிஞர் இல்லாமல் தனக்காகத் தானே வாதிட்டார். கடந்த செப்டம்பர் மாதம் நடந்த விசாரணையில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டபோது, நீதிமன்றத்திலேயே பேனாவால் தனது கழுத்தைக் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், "இது ட்ரம்பை கொலை செய்ய நடந்த முயற்சி, ஆனால் நான் தோற்றுவிட்டேன்" என அவர் குறிப்பிட்டிருந்தது முக்கிய ஆதாரமாக அமைந்தது. புதன்கிழமை (04) நடைபெற்ற இறுதித் தீர்ப்பின் போது, நீதிபதி ஐலீன் கேனன், "உங்களது இந்த சதித் திட்டம் மிகவும் திட்டமிடப்பட்ட மற்றும் கொடூரமானது. ஒரு மனித உயிரைப் பறிக்க முயன்ற உங்களது செயல் ஜனநாயகத்திற்கு எதிரானது. நீங்கள் அமைதியானவரோ அல்லது நல்லவரோ அல்ல." எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ரியான் ரூத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காகக் கூடுதலாக 07 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனை என்பதால் அவர் தனது வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிக்க வேண்டியிருக்கும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ரியான் ரூத்தின் புதிய வழக்கறிஞர் மார்ட்டின் ரோத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து, இரண்டாவது கொலை முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237849
  13. சீன - ரஷ்ய பொருளாதார பரஸ்பர ஒத்துழைப்பு இனியும் தொடரும் - இரு நாடுகளின் ஜனாதிபதிகளும் உறுதி 05 Feb, 2026 | 12:14 PM சீனா - ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் ஜனாதிபதிகளும் நேற்று புதன்கிழமை (4) வீடியோ அழைப்பில் பேசி, கலந்துரையாடியதில், பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு இனியும் தொடரும் என உறுதிபடக் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகிய இருவரும் நேற்று வீடியோ கொன்பிரன்ஸில் பேசிக்கொண்டபோது தமக்கிடையிலான வர்த்தக உறவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். எரிசக்தி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் தொடர்ச்சியாக இணைந்து செயற்படுவதென உறுதி செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற 80வது ஆண்டு நிறைவை கடந்த ஆண்டு மொஸ்கோவிலும் பெய்ஜிங்கிலும் முறையாகக் கொண்டாடினோம். அவற்றை நாம் இணைந்து கொண்டாடியதன் மூலம் வரலாற்று உண்மையை நிலைநிறுத்தவும் உலகில் அமைதியை மீட்டெடுக்க கோடிக்கணக்கான உயிர்களை தியாகம் செய்த நமது மக்களின் வீரத்தை நினைவுகூர்ந்து, நமது இரு நாடுகளின் ஒற்றுமையையும் பாதுகாக்கத் தயாராக இருப்பதை ரஷ்யாவும் சீனாவும் உலகிற்கு நிரூபித்துள்ளது. நமது இரு நாடுகளின் இறையாண்மை, பாதுகாப்பு, சமூக பொருளாதார செழிப்பு, மக்கள் தங்களது வாழ்க்கையின் முன்னேற்றப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெறுவது ஆகியவற்றை உறுதி செய்வதற்கான நமது அனைத்து கூட்டு முயற்சிகளுக்கும் எமது ஆதரவை உறுதிப்படுத்த விரும்புகிறேன்” என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார். கடந்த ஒரு வருடமாக, நமது இரண்டு சந்திப்புகளும் சீன - ரஷ்ய உறவுகளை ஒரு புதிய கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல உதவியுள்ளன” என சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் கூறினார். அத்துடன் அவர், “இரண்டாம் உலகப் போரின் விளைவுகளையும் சர்வதேச நீதிக் கொள்கைகளையும் நிலைநிறுத்துவதற்காக தம்மால் பகிரப்பட்ட தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்தி, பாசிச எதிர்ப்புக் கூட்டணியின் வெற்றியினது 80வது ஆண்டு நிறைவை நாங்கள் மனதார நினைவுகூர்ந்தோம். நமது இரு நாடுகளின் வர்த்தகமும் சீராக வளர்ந்து வருகிறது. அதேவேளை புதிய துறைகளின் முன்னேற்றத்துக்கான ஒத்துழைப்பும் துரிதப்படுத்தப்படுகிறது. மேலும், நமது கலாசார மற்றும் மனிதாபிமான உறவுகளும் புதிய உயரத்தை எட்டியுள்ளன. மக்களிடையேயான கருத்துப் பரிமாற்றங்களும் முன்னரை விட துடிப்பானதாக காணப்படுகிறது. 2026 ஆண்டானது சீனாவின் 15வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் ஆண்டாக உள்ளது. இக்காலகட்டத்தில் உயர்தர வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்த சீனா உறுதிபூண்டுள்ளது. அத்துடன் புதிய வளர்ச்சிக் கட்டத்தின் புதிய வாய்ப்புகளை ரஷ்யா உட்பட அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்துகொள்ளவும் சீனா தயாராக உள்ளது” என சீன ஜனாதிபதி தெரிவித்தார் https://www.virakesari.lk/article/237872
  14. அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் அரசியல் தீர்வு உள்வாங்கப்படுவது அவசியம் - கலாநிதி குமாரவடிவேல் குருபரன் 04 Feb, 2026 | 06:23 PM (நா.தனுஜா) தற்போது பேசப்படும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அன்றேல் அந்த அரசியலமைப்பிலிருந்து ஒரு சமூகம் வெளித்தள்ளப்பட்டுவிடும் என கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், அப்புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்குவதற்காக தேசிய ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்ததும், தொழில்நுட்ப ரீதியாக உறுதியானதும், உண்மையிலேயே சகலரையும் உள்ளடக்கியதுமான ஓர் அணுகுமுறையை நிறுவும் நோக்கில் 'வன் டெக்ஸ்ட் இனிஸியேட்டிவ்' (One Text Initiative) எனும் அமைப்பினால் செவ்வாய்க்கிழமை (3) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு கலந்துரையாடல் செயன்முறையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி இதுபற்றிய தகவல்களைப் பகிர்வதுடன், கருத்தாடல்களைக் கட்டியெழுப்பும் நோக்கில் citizen's constitution.lk என்ற இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துரைக்கையிலேயே குருபரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் 2022 ஆம் ஆண்டு உருவான 'அரகலய' மக்கள் எழுச்சிப்போராட்டத்தின் பின்னரேயே தீவிரமடைந்திருக்கின்றன. இருப்பினும் அதன் பின்னரான தேர்தல்களில் வாக்களித்த தமிழ்மக்கள், தமக்கான அரசியல் தீர்வுக்கு முன்னுரிமையளித்து, அதனைப் பிரதிபலிக்கும் வகையிலேயே வாக்களித்திருக்கிறார்கள். அந்தவகையில் தற்போது பேசப்படும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அன்றேல் அந்த அரசியலமைப்பிலிருந்து ஒரு சமூகம் வெளித்தள்ளப்பட்டுவிடும். அதேபோன்று இலங்கை ஒரு பல்லின அரசு என்பதை நாமனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறோமா என்ற கேள்விக்கான பதிலைக் கண்டறியவேண்டும். அதனூடாக மாத்திரமே சகலரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அரசியலமைப்பை உருவாக்கமுடியும். அதுமாத்திரமன்றி அரசியலமைப்பில் சில சொற்பதங்களை உள்ளடக்கிவிட்டு, அதனை சிங்களவர்களுக்கு ஒருவிதமாகவும், தமிழர்களுக்குப் பிறிதொரு விதமாகவும் கூறி சமாளிக்கமுடியாது. அதனடிப்படையிலேயே கடந்த காலங்களில் 'ஒருமித்த நாடு' மற்றும் 'ஏக்கிய இராச்சிய' உள்ளிட்ட சொற்பதங்கள் தொடர்பான தர்க்கங்கள் உருவாகின. தற்போது பெரும்பான்மைப்பலத்துடன் ஆட்சிபீடம் ஏறியிருக்கும் இந்தப் புதிய அரசாங்கத்துக்கு, சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறான அரசியலமைப்பை உருவாக்குவதற்கும், அதனை அனைத்து மக்களையும் ஏற்றுக்கொள்ளச்செய்வதற்குமான பெருவாய்ப்பு காணப்படுகின்றது. அவ்வாய்ப்பு உரியமுறையில் பயன்படுத்தப்படவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/237833
  15. இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நாட்டின் வளங்கள் சிறுபான்மை மக்களுக்கும் பகிரப்பட வேண்டும் - மேயர் அதாவுல்லா 05 Feb, 2026 | 09:52 AM (ஏ.எல்.நிப்றாஸ்) நாடு சுதந்திரமடைந்து நாம் இன்று 78 வருடங்களைக் கொண்டாடுகின்ற போதிலும் மக்கள் குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்கள் பல்வேறு காரணங்களினால் இன்னும் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர மேயருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார். மூவின மக்களும் இணைந்து காலனித்துவ சக்திகளிடம் இருந்து மீட்டெடுத்த நாட்டின் வளங்கள் சரியான முறையில் பகிரப்படவில்லை. மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை உணரச் செய்வது அவசியம். இதன் ஒரு அங்கமாக நாட்டின் இன விகிதாசாரத்திற்கு அமைவாக அனைத்து வளங்களும் பகிரப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார். அக்கரைப்பற்றில் நேற்று புதன்கிழமை (4) இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வில் உரையாற்றிய மேயர் அதாவுல்லா மேலும் கூறுகையில் இலங்கையின் வளங்களை கொள்ளையிடுவதற்காக காலனித்துவாதிகள் நாட்டுக்குள் வந்தனர். மூவின சமூகங்களும் ஒன்றுபட்டு போராடி சுதந்திரத்தை பெற்றோம். ஆனால் சுதந்திரம் கிடைத்த பிறகும் இலங்கையின் வளங்கள் மீது வெளிநாட்டுச் சக்திகள் குறியாக உள்ளன என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இலங்கை தன்னகத்தே எல்லா வளங்களையும் வைத்துக் கொண்டு வெளிநாடுகளிடம் எல்லாவற்றுக்கும் கையேந்துகின்ற பாணியிலான ஒரு பொருளாதார கொள்கையை கடைப்பிடிக்கக் கூடாது. நமது வளங்கள் சரியாக பராமரிக்கப்பட்டுரூபவ் உள்நாட்டுப் பொருளாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும். இப்போது மூன்றாவது உலகப் போர் வெடித்துவிடுமோ என்ற அச்சர் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே யுத்தமொன்று ஏற்பட்டு அதன் விளைவாக இலங்கை தனிமைப்படுத்தப்பட்டு, மீண்டுமொரு பொருளாதார வீழ்ச்சிக்கு ஆளாகிவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். வளங்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு அவற்றில் இருந்து உச்சபட்ச பலனைப் பெறுவதற்கு இரு மொழிகளை பேசும் நான்கு இன மக்களும் முன்னிற்க வேண்டும். மிக முக்கியமாக இன விகிதாரசத்திற்கு ஏற்ப நாட்டின் வளங்கள் இனிமேலாவது பகிரப்பட வேண்டும். அப்போதுதான் சிறுபான்மை மக்கள் சுதந்திரத்தின் பரிணாமங்களை உணர்வார்கள் என்றார். https://www.virakesari.lk/article/237856
  16. இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன பதவியேற்பு! 05 FEB, 2026 | 12:08 PM இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன இன்று வியாழக்கிழமை (05) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். நாட்டின் 42வது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட அவர், இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237871
  17. 'வெளியாகாத ரீமேக் படத்துக்கு விருதா?' அரசு திரைப்பட விருதுகள் சர்ச்சையாவது ஏன்? பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் மீனாட்சி சுந்தரம் பிபிசி தமிழுக்காக 4 பிப்ரவரி 2026 தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்களுக்கு, சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு திரைப்பட விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். கடந்த அதிமுக ஆட்சியிலும் பல ஆண்டுகளாக விருதுகள் அறிவிக்கப்படவில்லை. திமுக ஆட்சி ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையிலும் விருதுகள் குறித்த அறிவிப்பு வராமல் இருந்தது. இந்நிலையில், ஏழு ஆண்டுகளுக்கு, அதாவது 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரைக்குமான விருதுகள் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. அதேபோல், சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டன. திரைப்படம், சின்னத்திரை சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டன பிப்ரவரி 13ம் தேதி சென்னையில் நடக்கும் விழாவில் இந்த விருதுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார். தமிழ்நாடு அரசின் விருது பெற உள்ளவர்கள், தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். அதேசமயம், இயக்குநர்-தயாரிப்பாளர் பா.ரஞ்சித் விருது அறிவிப்பு வந்த மறுநாள் வெளியிட்ட அறிக்கையில் ''தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?" என குறிப்பிட்டுள்ளார். அதேபோல், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும், தான் இயக்கிய 'மிக மிக அவசரம்' படத்திற்கு விருது வழங்கப்படாததற்கு அதிருப்தி தெரிவித்தார். படக்குறிப்பு,இயக்குநர் பா. ரஞ்சித் சேரன் கூறியது என்ன? இயக்குநரும், நடிகருமான சேரன் தனது எக்ஸ் தள பதிவில், ''பெண்களுக்கு இலவச பாஸ், திருமணத்திற்கு அரசு உதவி இதெல்லாம் செய்கிறது அரசு. பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும், வாழ்ககைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என கருத்தோடு விளம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்டிருந்த திருமணம் திரைப்படம் தேர்வு குழுவினரால் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மையை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுகிறது." என தெரிவித்துள்ளார். நேர்மையான முறையில் பாரபட்சமின்றி யாரும் ஒதுக்கப்படாமல் விருதுகள் சென்றடைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். "அரசுகள் மாறலாம். அரசின் நிலைப்பாடு என்றும் பாரபட்சமாக இருக்க கூடாது'' என சேரன் தெரிவித்துள்ளார். அதேபோல், நடிகை லட்சுமிப்ரியா, "'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்', 'மண்டேலா' திரைப்படங்கள் தேசிய விருதுகளை வென்றன. ஆனால் மாநில விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. இதை நான் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். தயவுசெய்து விளக்குங்கள் '' என தெரிவித்துள்ளார். படக்குறிப்பு,மண்டேலா படம் இந்த படத்துக்கு விருதா? நடிகர்கள் விமல், ஸ்ரேயா நடிப்பில் உருவான 'சண்டக்காரி' என்கிற திரைப்படத்திற்கு 2020 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது சிறந்த திரைப்படம், சிறந்த பாடகர், சிறந்த கலை இயக்குநர் ஆகிய பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு திரைத்துறையினர், நடிகர், நடிகைகள் பலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதற்கு காரணம், சண்டக்காரி படம் மலையாளத்தில் உருவான, 'மை பாஸ்' என்கிற திரைப்படத்தின் ரீமேக் திரைப்படமாகும். சண்டக்காரி இன்னும் திரையரங்குகளிலோ, ஓடிடியிலோ வெளியாகவே இல்லை. அப்படி இருக்கும்போது, எப்படி அந்த படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். குழந்தை நட்சத்திரங்கள் ஆதங்கம் பட மூலாதாரம்,monicasiva_offl படக்குறிப்பு,மோனிகா அதுமட்டுமல்லாமல், கைதி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மோனிகாவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார் "ஐந்து வயதிலிருந்தே நான் திரைப்படத் துறையில் நடித்து வருகிறேன். 2016 முதல் 2022 வரை, இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். அவற்றில் பல திரைப்படங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு, கொண்டாடப்பட்டன. சில திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தாலும், நான் நடித்த பல கதாபாத்திரங்கள் நினைவில் நிற்கக்கூடியவையாக இருந்தன." என குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும், சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றவர்கள், அங்கீகாரத்தை அளிக்கும் அளவுக்கான வேடத்தில் நடிக்கவில்லையோ என்ற கேள்வி எழுவதாக மோனிகா தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,ashwanth_ashokkumar படக்குறிப்பு,அஸ்வந்த் மற்றொரு குழந்தை நட்சத்திரமான அஸ்வந்த், "இந்த விருதில் நான் இருப்பேன் என்று நினைத்தேன். குறிப்பாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காவது கிடைக்கும் என்று நம்பினேன். அது கிடைக்கவில்லை. மை டியர் பூதம் படத்திற்காவது கிடைக்குமென மிகவும் எதிர்பார்த்தேன். அதுவும் இல்லை. தேர்வுக்குழுவினர் இம்மாதிரி படங்களை பார்க்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது. ஒரு கலைஞன் நடிப்பது எதற்காக? அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் நடிப்பதே வீண்தானே?" எனக் கேட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு திரைப்பட விருதுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தயாரிப்பாளர், இயக்குநர் சுரேஷ் காமாட்சி பிபிசியிடம் கூறுகையில், "திரைப்பட விருது குழுவின் நடுவர் தேர்வில் தவறு இருப்பதாக கருதுகிறேன். இனிமேல் விருது வழங்கும் போது இப்படி மொத்தமாக பல ஆண்டுகள் சேர்த்து வழங்காமல் ஒவ்வொரு ஆண்டுக்கும் உடனே வழங்க வேண்டும்" என்றார். "விருது பெறுபவர்களை உரிய முறையில் கௌரவப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். விருதுகள் விஷயத்தில் வெளிப்பட தன்மை தேவை. பெண் போலீசாரின் உடல் மன வலியை சொல்லும் 'மிக மிக அவசரம்' படத்துக்கு தமிழக அரசு விருது கிடைக்காதது வருத்தமே" என்கிறார் அவர். விருது அறிவிப்பு குறித்து நடிகர் எஸ்.வி.சேகரிடம் பிபிசி சார்பில் பேசினோம். "விருது கிடைத்தவர்கள் சந்தோசப்படுவதும். விருது கிடைக்காதவர்கள் வருத்தப்படுவதும் வழக்கமான ஒன்றுதான். இனி விருது கமிட்டியில் தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். எனக்கு சாதனையாளர் விருது கிடைத்து இருக்கிறது." என்றார். தேர்வு குழு கூறுவது என்ன? சின்னத்திரை விருதுகள் தேர்வு குழு கமிட்டியில் இருந்த இயக்குநர் மங்கை அரிராஜன் பிபிசியிடம் கூறுகையில், " சினிமா சின்னத்திரை விருதுகளை தேர்ந்தெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியின் ஏழு பேர் உறுப்பினர்கள். இந்த குழு ஒவ்வொரு ஆண்டும் வெளியான படங்களில் சிறந்த படங்களை முதல் சுற்றில் தேர்வு செய்யும். பின்னர் அடுத்தகட்ட தேர்வுக்கு பின் எது சிறந்த படம், சிறந்த நடிகர் என்பதை தலைவரான நீதிபதி முடிவு செய்வார். இதில் எந்த பாகுபாடும் கிடையாது எந்த சிபாரிசும் கிடையாது தேர்வுக்குழு செயல்பாடுகள் நம்பிக்கையானவை." என்றார். சில காரணங்கள், சில ஓட்டுகள் வித்தியாசத்தில் சில படங்கள் தேர்வாகியிருக்கலாம் என்றும் சில நல்ல படங்கள் விருதை தவறவிட்டு இருக்கலாம் என்றும் இது எல்லா போட்டிகளிலும் எல்லா விருது நிகழ்வுகளிலும் நடப்பது தான் என்றார் மங்கை அரிராஜன். விருது கமிட்டியில் இருந்த இளையபாரதி பிபிசி தமிழிடம், "விண்ணப்பித்தால் மட்டுமே விருது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வோம். பலர் விண்ணப்பிக்காமல் விருது ஏன் வரவில்லை என்கிறார்கள். சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மேற்கு தொடர்ச்சி மலை படங்கள் அப்படித்தான். நூற்றுக்கணக்கான படங்கள் வந்தன. இவ்வளவு படம் பார்த்து அரசியல் பாகுபாடுகள் இன்றி விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சில படங்கள் நன்றாக இருந்தன. அதனால் சில முக்கியமான படங்கள் தவறிவிட்டன. இது அனைத்து விருது நிகழ்விலும் நடப்பதே. இதில் பாகுபாடு இல்லை" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3689lp9e3ro
  18. தற்காலிக விசா வைத்துள்ளவர்கள் கனடாவை விட்டு வெளியேறுகிறார்களா ? – கண்காணிப்பு முறையை அமுல்படுத்த கனடா அரசு தீர்மானம் Published By: Digital Desk 3 05 Feb, 2026 | 09:52 AM தற்காலிக விசாவுடன் கனடாவில் தங்கியிருக்கும் நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்களா என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறனை உருவாக்க கனடா அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குடிவரவு அமைச்சர் லீனா டியாப் (Lena Diab) தெரிவித்துள்ளார். கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை (IRCC) மற்றும் கனடா எல்லை சேவைகள் முகமை (CBSA) சில தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பான தகவல்களை கண்காணிக்கக்கூடியதாக இருந்தாலும், தற்காலிக விசாவுடன் உள்ளவர்கள் எத்தனை பேர் கனடாவை விட்டு வெளியேறுகின்றனர் என்பதைக் கணக்கிடுவதற்கான எளிய முறை தற்போது இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார். குடிவரவு துறையின் தகவலின்படி, 2026 ஆம் ஆண்டில் சுமார் 19 இலட்சம் தற்காலிக விசாக்கள் (வேலை மற்றும் கல்வி அனுமதிகள் உட்பட) காலாவதியாக உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 21 இலட்சத்துக்கும் அதிகமான தற்காலிக விசாக்கள் காலாவதியாகியுள்ளன. “உலகின் பல நாடுகள் ஏற்கனவே இத்தகைய கண்காணிப்பு முறைகளை பயன்படுத்துகின்றன. கனடாவும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து,” என லீனா டியாப் கனடியன் பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய தொலைபேசி நேர்காணலில் தெரிவித்துள்ளார். CBSA-வின் புலனாய்வு மற்றும் அமுலாக்க பிரிவின் துணைத் தலைவர் ஆரன் மெக்ரோரி, கடந்த ஒக்டோபர் 21 அன்று நாடாளுமன்ற குழுவில் வழங்கிய சாட்சியத்தில், கனடாவை விட்டு வெளியேறும் நபரின் பயண முறை, பிறந்த திகதி மற்றும் பயண ஆவணங்களை கண்காணிக்க முடியும் என்றார். ஆனால், விசா காலாவதியான காரணத்தால் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறுகிறாரா என்பதை தானாகவே கண்டறியும் வசதி தற்போது இல்லை என்றும், அவ்வாறு சரிபார்ப்பது ஒவ்வொரு வழக்காக மேற்கொள்ள வேண்டிய கடினமான செயல்முறை என்றும் அவர் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் தற்காலிக விசாவுடன் கனடாவுக்கு வந்தவர்களால் அகதி கோரிக்கைகள் அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் காட்டுகின்றன. அந்த ஆண்டில் 1,12,000-க்கும் அதிகமான தற்காலிக குடியிருப்பாளர்களும் சுமார் 22,000 மாணவர் விசா வைத்திருந்தவர்களும் அகதி அந்தஸ்துக்காக விண்ணப்பித்துள்ளனர். இதில் தற்காலிக குடியிருப்பாளர்களின் விண்ணப்பங்களில் 14 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர் விசா வைத்திருந்தவர்களில் 20 சதவீத விண்ணப்பங்களே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அகதி கோரிக்கைகளை பயன்படுத்தி கனடாவில் தங்கும் காலத்தை நீட்டிக்கும் முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில், எல்லை பாதுகாப்பு சட்டமூலம் C-12 கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த சட்டத்தின் படி, 2020 ஜூன் 24க்குப் பிறகு கனடாவில் ஒரு ஆண்டுக்கும் மேலாக தங்கியிருப்பவர்கள் தாக்கல் செய்யும் அகதி விண்ணப்பங்கள், அகதி விசாரணைக்குழுவு்கு அனுப்பப்படமாட்டாது. குடிவரவு முறையில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதே அரசின் இலக்காக இருப்பதாக அமைச்சர் லீனா டியாப் கூறினார். 2024 இல் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கான இலக்கு 4,85,000 ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 3,93,500 பேர் அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். ஒன்லைன் கடவுச்சீட்டு புதுப்பிப்பு திட்டம் (2024 டிசம்பரிலிருந்து) மற்றும் டிஜிட்டல் விசா முயற்சி (2025 நவம்பர் 27 முதல் மொராக்கோ பயணிகளுக்கு) ஆகிய இரண்டு புதிய டிஜிட்டல் திட்டங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். “எங்கள் குடிவரவு அமைப்பு பழமையானது. அதை நவீனமயமாக்குவது ஒரு பெரிய சவால். ஆனால் அந்தப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன,” என லீனா டியாப் மேலும் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/237860
  19. ஈரான் - அமெரிக்கா இடையே நாளை அணுசக்தி பேச்சு ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான தீர்க்கமான அணுசக்தி பேச்சுவார்த்தை ஒன்று நாளை (06) ஓமானில் நடைபெறவுள்ளது. கட்டார், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட விசேட கட்டமைப்பின் கீழ் இப்பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் பல வருடங்களாக நிலவி வரும் இராஜதந்திர நெருக்கடிக்குத் தீர்வு காண்பதே இதன் நோக்கம் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஜி தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுரேனியம் செறிவூட்டலை மட்டுப்படுத்தல்,பெலஸ்டிக் ஏவுகணைக் கட்டுப்பாடு மற்றும் பிராந்தியத்தில் உள்ள ஈரானிய சார்பு ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதம் வழங்குவதை மட்டுப்படுத்தல் என்பன குறித்து இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளது. நியாயமான மற்றும் நீதியான முறையில் இப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு தாம் வெளியுறவு அமைச்சருக்கு அறிவுறுத்தியதாக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. https://adaderanatamil.lk/news/cml8w6kqi04tko29ng4xxssxk
  20. இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி! செய்திகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள 'AI Impact' உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலன்னே உறுதிப்படுத்தியுள்ளார். https://adaderanatamil.lk/news/cml92e02104tuo29n0fquk4up
  21. கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் குளவி கூடு கலைந்து மாணவர்கள் குளவி கொட்டுக்குள்ளாகியத்தில் 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2000 மாணவர்கள் வரை கல்வி கற்கும் பாடசாலை காணப்பட்ட பெரிய குளவி கூடு ஒன்று கலைந்துள்ளது. வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான பயிற்சிகளுக்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் ஏனைய மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர். பின்னர் மாணவர்கள் அனைவரும் கிளிநொச்சி ரோட்ரிக்கோ மைதானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்கள் நோயாளர் காவு வண்டியில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குளவி கூட்டின் ஆபத்து குறித்தும் அதை அகற்ற வேண்டும் என்று இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாடசாலை நிர்வாக சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/கிளிநொச்சியில்-குளவி-கொட்டு-39-மாணவர்கள்-பாதிப்பு/175-372041
  22. ஜப்பானில் கடும் பனிப்பொழிவு ; சுமார் 35 பேர் பலி ; 400 பேர் காயம் ; 126 பேர் ஆபத்தான நிலையில்! 04 Feb, 2026 | 05:14 PM ஜப்பானில் பல வாரங்களாக நிலவிவரும் கடும் பனிப்பொழிவினால் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பனிப்பொழிவு நிலைமை இவ்வார இறுதியில் மேலும் மோசமாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பனிப்பொழிவினால் ஏற்படும் விபத்துக்கள் உள்ளிட்ட காரணங்களால் சுமார் 400 பேர் காயமடைந்துள்ளதாகவும் 126 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது. அத்துடன் ஜப்பானின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பனிப்பொழிவினால் ஏராளமான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இன்று புதன்கிழமை (4) நிலவரப்படி, 15 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில பகுதிகளில் பனிப்பொழிவு 2 மீட்டர் உயரத்தை எட்டியுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/237831
  23. யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்! 05 Feb, 2026 | 10:55 AM தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை (04) மாலை அனுஸ்டிக்கப்பட்டது. 04.02.1957 அன்று இலங்கையின் ஒன்பதாவது சுதந்திர தின நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர். திருமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது இளைஞரான தியாகி நடராஜன், சிங்கள அரச படைகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் தேசியக் கொடியுடன் மண்ணில் வீழ்ந்து மாய்ந்த நிகழ்வு அன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தையே உலுக்கியது. அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி நடராஜன் படுகொலை செய்யப்பட்டபோது தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனுக்கு அகவை 3. 1957, பெப்ரவரி 4,ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக ஒன்பதாவது ஆண்டில் முதல் தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுடன் சிங்கள அரச படைகளின் துப்பாக்கி சூட்டில் பலியான திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜனின் 69,வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தாயக நினைவேந்தல் பணிமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தாயக நினைவேந்தல் குழுவினர் மற்றும் தமிழ்த் தேசிய பற்றாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தியாகி நடராஜன் அவர்களின் உருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செய்து மாலை அணிவித்து கருத்துரைகள் வழங்கியிருந்தனர். https://www.virakesari.lk/article/237865
  24. தலைமுறை தலைமுறையாக ஒரே விடயத்தை செய்ய சொன்னால் போரடிக்காதா? பிறக்கிற பிள்ளை பிறக்க போற பிள்ளை எல்லாத்துக்கும் நீ இப்படி தான் யோசிக்கவேண்டும் இதை தான் செய்ய வேண்டும் என thinking framework போடுவது காலப்போக்கில் அவர்களுக்கு போரடிக்கவே செய்யும்.
  25. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED PAK PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCOT WI WI 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND USA IND 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZ NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG NEP ENG 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL IRE SL 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT ITA SCOT 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA ZIM ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN SA SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NED 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ UAE NZ 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK USA PAK 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG SA SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS IRE AUS 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG WI ENG 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL OMA SL 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA NEP NEP 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND NAM IND 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS ZIM AUS 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN UAE CAN 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED USA NED 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE OMA IRE 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து SCOT ENG ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ SA SA 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP WI WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM USA NAM 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG UAE AFG 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG ITA ENG 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS SL AUS 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN NZ NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE ZIM IRE 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT NEP SCOT 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA UAE SA 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM PAK PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND NED IND 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA WI WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL ZIM SL 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG CAN AFG 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK USA Select USA Select NED Select NED Select NAM Select NAM Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! USA முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SL Select SL SL IRE Select IRE Select ZIM Select ZIM Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG WI Select WI WI SCOT Select SCOT Select NEP Select NEP Select ITA Select ITA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக WI 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ITA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ SA Select SA SA AFG Select AFG Select CAN Select CAN Select UAE Select UAE Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UAE சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 NZ PAK NZ 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 ENG SL ENG 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 IND SA IND 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 AUS WI AUS 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 ENG PAK PAK 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 NZ SL NZ 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 WI SA SA 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 IND AUS IND 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 ENG NZ ENG 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 PAK SL PAK 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 AUS SA SA 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 IND WI IND சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND AUS Select AUS Select WI Select WI Select SA Select SA SA 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! WI சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG Select NZ Select NZ NZ PAK Select PAK PAK SL Select SL Select 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SL அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), PAK IND IND 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, NZ SA SA இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி IND SA IND உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) OMAN 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Abishek sharma 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Varun Chakaravarthy 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) ISHAN KISHAN 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Arshdeep Singh 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Quinton De Kock 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND
  26. # Question Team1 Team 2 Prediction முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40)வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED PAK பாகிஸ்தான் 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCOT WI மேற்கிந்திய தீவுகள் 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND USA இந்தியா 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZ நியூசிலாந்து 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG NEP இங்கிலாந்து 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL IRE இலங்கை 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT ITA ஸ்கொட்லாந்து 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA ZIM சிம்பாவே 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN SA தென் ஆபிரிக்கா 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED நெதர்லாந்து 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ UAE நியூசிலாந்து 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK USA பாகிஸ்தான் 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG SA தென் ஆபிரிக்கா 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS IRE அவுஸ்திரேலியா 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG WI இங்கிலாந்து 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL OMA இலங்கை 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA NEP நேபாளம் 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND NAM இந்தியா 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS ZIM அவுஸ்திரேலியா 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN UAE ஐக்கிய அரபு இராச்சியம் 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED USA நெதர்லாந்து 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE OMA அயர்லாந்து 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து SCOT ENG இங்கிலாந்து 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ SA நியூசிலாந்து 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP WI மேற்கிந்திய தீவுகள் 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM USA நமீபியா 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK இந்தியா 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG UAE ஆப்கானிஸ்தான் 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG ITA இங்கிலாந்து 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS SL அவுஸ்திரேலியா 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN NZ நியூசிலாந்து 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE ZIM அயர்லாந்து 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT NEP ஸ்கொட்லாந்து 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA UAE தென் ஆபிரிக்கா 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM PAK பாகிஸ்தான் 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND NED இந்தியா 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA WI மேற்கிந்திய தீவுகள் 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL ZIM இலங்கை 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG CAN ஆப்கானிஸ்தான் 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA அவுஸ்திரேலியா முதல் சுற்றுகுழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) இந்தியா பாகிஸ்தான் IND Select IND IND PAK Select PAK PAK USA Select USA Select NED Select NED Select NAM Select NAM Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) இந்தியா பாகிஸ்தான் குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NAM முதல் சுற்றுகுழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SL Select SL SL IRE Select IRE Select ZIM Select ZIM Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) அவுஸ்திரேலியா இலங்கை குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG WI Select WI WI SCOT Select SCOT Select NEP Select NEP Select ITA Select ITA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகள் குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக WI 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ITA முதல் சுற்றுகுழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ SA Select SA SA AFG Select AFG Select CAN Select CAN Select UAE Select UAE Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) நியூசிலாந்து தென் ஆபிரிக்கா குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN சுப்பர் 8சுற்றுப்போட்டிகேள்விகள்53) முதல் 64)வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 NZ PAK NZ 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 ENG SL ENG 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 IND SA IND 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 AUS WI AUS 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 ENG PAK ENG 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 NZ SL NZ 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 WI SA SA 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 IND AUS IND 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 ENG NZ ENG 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 PAK SL SL 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 AUS SA AUS 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 IND WI IND சுப்பர் 8 குழு1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND AUS Select AUS AUS WI Select WI Select SA Select SA Select 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) இந்தியா அவுஸ்திரேலியா சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! WI சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG NZ Select NZ NZ PAK Select PAK Select SL Select SL Select 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) இங்கிலாந்து நியூசிலாந்து சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), ENG AUS AUS 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, NZ IND IND இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். AUS IND 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS IND IND உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) இந்தியா 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) இத்தாலி 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) சூரியகுமார் யாதவ் 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) இந்தியா 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வருண் சக்கரவர்த்தி 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) இந்தியா 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) அபிஷேக் சர்மா 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) இந்தியா 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வருண் சக்கரவர்த்தி 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) இந்தியா 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) அபிஷேக் சர்மா 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) இந்தியா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.