Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. இரானுக்கான ராணுவ திட்டங்கள் பற்றி டிரம்புக்கு விளக்கம் – என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் டேனியல் கேய், பிபிசி கிளேர் கீனன், பிபிசி 42 நிமிடங்களுக்கு முன்னர் இரானில் பயன்படுத்துவதற்கான பரந்த அளவிலான உளவு மற்றும் ராணுவ முறைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்புத் துறையின் அதிகாரிகள் இருவர் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தனர். நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்கள், அமெரிக்காவின் சாத்தியமான தலையீட்டிற்கான ஒரு வழியாகத் தொடர்கின்றன. அதே நேரத்தில், சைபர் நடவடிக்கைகள் மற்றும் உளவியல் ரீதியான பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முன்வைத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இரானில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களில், கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இதற்கிடையில், இரானுடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டுள்ள நாடுகளின் பொருட்கள் மீது 25% வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் திங்களன்று அறிவித்தார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த இரான் தயாராக இருப்பதாகவும், அதே சமயம் "போருக்கும் தயாராக" இருப்பதாகவும் இரானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,Getty Images 'மிகவும் வலிமையான வழிகள்' இரான் குறித்து விவாதிக்க டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு குழு செவ்வாய்க்கிழமையன்று வெள்ளை மாளிகையில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கூட்டத்தில் அதிபர் டிரம்ப் கொள்வாரா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. மேலும் இரானில் அதிகமான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் தலையீடு செய்ய "மிகவும் வலிமையான வழிகள்'' குறித்து தனது ராணுவம் பரிசீலித்து வருவதாக டிரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தார். இரான் தலைவர்கள் "பேச்சுவார்த்தை" நடத்த தன்னை அழைத்ததாகக் குறிப்பிட்ட டிரம்ப், ஆனால் "ஒரு சந்திப்பு நடைபெறும் முன்பே அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்" என்றும் கூறினார். பட மூலாதாரம்,Getty Images திட்டம் என்ன? இரானிய நாணயத்தின் வீழ்ச்சி மற்றும் பொருளாதார நிர்வாக சீர்கேடு ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள விரக்தி, தற்போது இரானின் அதிஉயர் தலைவர் காமனெயியின் ஆட்சிக்கு எதிரான ஒரு நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. திங்களன்று, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், இரானிய அதிகாரி ஒருவர் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப்பைத் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்தார். அதிபர் டிரம்ப் தேவை என்று கருதினால், "ராணுவ நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்க மாட்டார்" என்று அவர் எச்சரித்தார். சிபிஎஸ் நிறுவனத்துடன் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு நபர்கள் பேசுகையில், இரானில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை என்பது பெரும்பாலும் விமானப் படைத் தாக்குதல்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும், அதே சமயம் இரானின் கட்டளை அமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை சீர்குலைப்பதற்கான வழிகளையும் இத்தாக்குதல் குறித்து திட்டமிடுபவர்கள் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தனர். இரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படியோ அல்லது அமெரிக்க அரசாங்கத்தின் உதவி இல்லாமல் வெளியேறும் திட்டத்தை வைத்திருக்கும்படியோ அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இரானில் நடைபெற்ற அரசு ஆதரவுப் பேரணிகளைப் பாராட்டிய காமனெயி, அமெரிக்கா "ஏமாற்று வேலை" செய்வதாகவும், "துரோகமிழைக்கும் கூலிப்படையினரை" நம்பியிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், "இரானிய தேசம் ஒரு வலிமையான தேசம், அது விழிப்புணர்வுடன் உள்ளது, தனது எதிரிகளை அறியும், மேலும் ஒவ்வொரு களத்திலும் அது இருக்கும்" என்றார். அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கான அழைப்புகளைத் தொடர்ந்து, பல நகரங்களில் பெருந்திரளான மக்கள் திரண்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன. நாட்டிற்குள் இருப்பவர்களை இத்தகைய ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தும், அதே சமயம் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்தும் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை பிபிசி பாரசீக சேவை கண்டது. பட மூலாதாரம்,Getty Images 25% வரி திங்கள்கிழமை அன்று, டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், இரானுடன் "வணிகம் செய்யும்" நாடுகளின் பொருட்கள் மீது 25% வரி விதிக்கப்படும் என்று பதிவிட்டார். இது குறித்து கூடுதல் விளக்கம் அளிக்காத அவர், "இந்த உத்தரவு இறுதியானது மற்றும் முடிவானது" என்று கூறினார். ஏற்கனவே அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளின் கீழ் இருக்கும் இரான், தற்போது நாணய வீழ்ச்சியையும் கடுமையான பணவீக்கத்தையும் எதிர்கொள்கிறது. இதனால் உணவுப் பொருட்களின் விலை 70% வரை உயர்ந்துள்ளது. இரானின் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கு உணவுப் பொருட்கள் ஆகும். டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரிக் கட்டுப்பாடுகள், உணவுத் தட்டுப்பாட்டையும் செலவுகளையும் மேலும் மோசமாக்கக்கூடும். புதிய வரிகள் குறித்து வெள்ளை மாளிகை கூடுதல் தகவல்களைப் பகிரவில்லை. சீனா இரானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து இராக், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன. அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க இரான் அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த புதிய நகர்வு இரான் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இதற்கிடையில், அமெரிக்காவில் வாழும் இரானின் கடைசி மன்னரின் மகனான ரெஸா பஹ்லவி, போராட்டக்காரர்களின் உயிரிழப்புகளைக் குறைக்க அதிபர் டிரம்ப் "விரைவாக" தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சிபிஎஸ் நியூஸிற்கு அளித்த பேட்டியில், தற்போதைய இரானிய அரசு "மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறி உலகை ஏமாற்ற முயல்கிறது" என்று பஹ்லவி கூறினார். அதிபர் டிரம்ப்பை "தான் சொல்வதைச் செய்பவர், செய்வதைச் சொல்பவர்" என்றும், "தற்போதைய சூழலின் விபரீதத்தை நன்கு அறிந்தவர்" என்றும் அவர் விவரித்தார். மேலும், "அதிபர் மிக விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்றும் பஹ்லவி கூறினார். நார்வேயைத் தளமாகக் கொண்ட 'இரான் மனித உரிமைகள்' (IHRNGO) அமைப்பின் தகவல்படி, இரானில் 18 வயதிற்குட்பட்ட 9 பேர் உட்பட குறைந்தது 648 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கலாம் என்று இரானுக்குள் உள்ள வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளன. பிபிசி மற்றும் பிற சர்வதேச செய்தி நிறுவனங்களால் இரானுக்குள் இருந்து செய்தி சேகரிக்க முடியாத நிலை உள்ளது. அங்கு இணைய சேவை முடக்கப்பட்டிருப்பதால், தகவல்களைப் பெறுவதும் அவற்றை உறுதிப்படுத்துவதும் கடினமாகியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cedwg0z67d4o
  3. 2) முன்னோடிக்கான இரண்டாவது நன்கொடை ரூபா 10,493.65 சதம் 13/01/2026 கிடைக்கப்பெற்றது. இன்றைய 13/01/2026 வங்கி மீதி ரூபா 111,573.67 சதம் ஆகும். இரண்டாவது நன்கொடையை அனுப்பி வைத்த உறவிற்கு மிக்க நன்றி. உங்கள் ஒவ்வொருவரின் கூட்டு முயற்சியால் முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 வெற்றி பெறட்டும்.
  4. சத்தியாகிரகப் போராட்டத்தை முடித்துக்கொண்டார் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச! கல்வியமைச்சர் ஹரணி அமரசூரிய பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த சத்தியாகிரப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில், புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சுக்கு முன்னால் முன்னெடுத்திருந்த தனது சத்தியாகிரகப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார். புதிய கல்விச் சீர்திருத்தங்களை அவசரமாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்வி அமைச்சுக்கு முன்பாக அவர் இந்த சத்தியாகிரகத்தை ஆரம்பித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் வாசலுக்கு முன்பாக கூடாரம் ஒன்றை அமைப்பதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்டிருந்தனர். இதன்போது, கூடாரத்தை அகற்றுமாறு பொலிசார் அறிவுறுத்தியிருந்த நிலையில் குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்தது. இதேவேளை புதிய கல்வி சீர்திருத்தத்தை ஒத்திவைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தையடுத்து, தனது போராட்டத்தைக் கைவிடுவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளமை குறிப்பிப்பிடதக்கது. https://athavannews.com/2026/1459826
  5. Today
  6. றோ ஏஜெண்டுகள் நல்ல விசுவாசமாய் வேலை பார்க்கறீனம் போல.
  7. கிந்தியா என்று எழுத்து பிழை என்று முதலில் நினைத்துவிட்டேன் 😂 காரணம் பின்பு இரண்டாம் தடவை இலங்கை தமிழர்கள் இந்தியாவின் என்று வந்தது பின்பு கிந்தியா என்று எழுத்து பிழை கிழவி 🤣 ஈழ தமிழர்களில் கிழவிகளே இல்லை தலைக்கு டை அடிச்ச அல்லது புர்க்காவால் மூடிய மார்க்கண்டேயரின் தங்கைகள் மட்டுமே உள்ளனர்.
  8. கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 3 ✈️ பாகம் 03 – விமான நிலைய சாகசம் அன்று காலையிலே வீடு உற்சாகத்தில் மூழ்கி இருந்தது. நிலன், தன் சிறிய தோள் பையை இறுகப் பிடித்துக் கொண்டு, அங்கும் இங்கும் ஓடி துள்ளிக் கொண்டு இருந்தான். திரேன், பெரியவன் என்பதால், தன் பாஸ்போர்ட் [Passport] மற்றும் போர்டிங் பாஸ் (Boarding Pass) இரண்டையும் அடிக்கடி மீண்டும் மீண்டும் சரிபார்த்துக் கொண்டு இருந்தான். எதையும் புரியாத வயது கொண்ட ஒரு வயது ஆரின் — சுற்றியுள்ள உற்சாகத்தை உணர்ந்து மகிழ்ச்சியாக “கூ கூ” என ஒலித்தான். “நாம் உண்மையிலேயே இன்று விமானத்தில் போகிறோமா, தாத்தா?” என்று நிலன் கண்கள் அகலமாக, எதிர்பார்ப்புடன் மின்னின. தாத்தா புன்னகையுடன், "ஆமாம், சின்ன பைலட் [விமானி]," தாத்தா புன்னகையுடன் கூறினார். "இன்று, நாம் மேகங்களுக்கு மேலே பறந்து உலகை உயரத்திலிருந்து பார்க்கப் போகிறோம்." என்றார். விமான நிலையத்திற்குச் செல்லும் பயணம் சிரிப்பாலும், அரட்டையடிப்பதாலும் நிறைந்திருந்தது. தாத்தா விமான நிலையம் போகிற வழியில், வெவ்வேறு வாகனங்களைச் சுட்டிக்காட்டினார் - ஒரு பெரிய சிவப்பு பேருந்து, ஒரு கருப்பு டாக்ஸி [taxi], மற்றும் ஒரு பளபளப்பான டெலிவரி வேன் [delivery van] . “ஒவ்வொரு வாகனத்துக்கும் அவை அவற்றுக்காக ஒரு பிரத்தியேக வேலையுண்டு?” என்று அவர் கூறினார். “ஒரு நாள், ஒருவேளை நீங்கள் உங்கள் சொந்த விமானத்தை ஓட்டுவீர்கள்!” என்றார். விமான நிலையத்தை அடைந்ததும், அதன் பிரம்மாண்டமான அளவு குழந்தைகளை மூச்சுத் திணறச் செய்தது. விமான நிலைய முனையம் [terminal] பளபளப்பான தரைகள் மற்றும் கண்ணாடிச் சுவர்களால் மின்னியது, அதனூடாக உள்ளே பாய்ந்த சூரிய ஒளி அங்கு பிரதிபலித்தது. மக்கள் சூட்கேஸ்களை [suitcases] இழுத்துக் கொண்டும், தொலைபேசிகளில் பேசிக் கொண்டும் அல்லது சிலர் குழந்தைகளுடன் நெரிசலில் ஸ்ட்ரோலர்களை [strollers] உருட்டிக் கொண்டும் வேகமாக கடந்து சென்று கொண்டு இருந்தனர். “அட! இது கட்டிடத்துக்குள்ளே ஒரு நகரம் மாதிரி இருக்கே!” என்று திரேன் அதிசயித்தான். தாத்தா அவர்களை பாதுகாப்புப் பாதை வழியாக அழைத்துச் சென்று, ஒவ்வொரு அடியையும் பொறுமையாக விளக்கினார். “காலணியை கழற்றுங்க, பெல்ட்டை [belt] கழற்றுங்க, உங்கள் ஒவ்வொருவரின் தோள் பையையும் [backpacks] அந்த மெஷினில் வையுங்கள் … பீப் சத்தம் [beep] வந்தாலும் கவலைப்படாதீங்க — இதெல்லாம் சாகசத்தின் ஒரு பாகம் தான்!” என்று சிரித்தபடி சொன்னார். கன்வேயர் பெல்ட்கள் [conveyor belts] ஸ்கேனர்கள் [scanners] வழியாக தங்கள் தங்கள் பொருட்களை எடுத்துச் செல்வதை நிலன் வியப்புடன் பார்த்து மூச்சே விட்டான். பாதுகாப்பைக் [security] கடந்ததும், சாகசம் உண்மையிலேயே தொடங்கியது. அவர்கள் புறப்படும் லவுஞ்சிற்குள் [departure lounge] நுழைந்தனர், அங்கு காணப்பட்ட பெரிய ஜன்னல்கள் வழியாக, ஓடு பாதையில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்களின் பரந்த காட்சியைப் பார்த்தனர். நிலன் தனது மூக்கை கண்ணாடியில் அழுத்தி - அங்கே ஒரு பெரிய விமானத்தின் இயந்திரங்கள் சத்தமாக ஒலித்துக் கொண்டு, ஓடுபாதையில் நகரத் தொடங்கி, புறப்படத் தயாராகிக் கொண்டிருப்பதைப் பார்த்தான் - இயந்திரங்களின் சத்தம், தரையின் அதிர்வு, ஒளிரும் விளக்குகள் நிலனுக்கு மேலும் ஆர்வத்தை தூண்டியது. "தாத்தா! நாம அதுக்குள்ள போகலாமா?" என்று ஆவலாகக் கேட்டான். தாத்தா சிரித்தார். “சீக்கிரம், என் சின்னஞ்சிறு சாகசக்காரர்களே. சீக்கிரம் நாம் போகிறோம்.” என்றார் காத்திருக்கும் நேரத்தை வேடிக்கையாக்க, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தையும் வண்ண பென்சில்களையும் கொடுத்தார். “நீங்கள் காணும் விமானங்களை வரையுங்கள்,” என்று அவர் பரிந்துரைத்தார். வானவில் இறக்கைகள் கொண்ட ஒரு விமானத்தை நிலன் ஆவலுடன் வரைந்தான், அதே நேரத்தில் திரேன், இரவு வானில் பறக்கும் ஒரு விமானத்தை, அது வெளிவிடும் புகை அல்லது நீராவிக்குப் பதிலாக, மின்னும் நட்சத்திரங்களை வெளியே தள்ளி விட்டுக் கொண்டு போவது போல - ஒரு மாயாஜால விமானம் அல்லது ஒரு நட்சத்திரம் போல - கற்பனை செய்து வரைந்தான். குட்டி ஆரின் கூட கைகளைக் காற்றில் ஆட்டி ஆட்டி, விமானம் பறக்கிற மாதிரி நடித்தான். அவசர அறிவிப்பு ஒலித்தது — அவர்களின் விமானம் தயாராகி விட்டது என்று! எனவே அவர்கள் ஜெட் பாலத்தின் [Jet bridge or jetway or passenger boarding bridge (PBB)] ஊடாக விமானத்துக்குச் சென்றார்கள். நிலன் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி அடைந்து அதனுள்ளாக ஓடிப் போனான். விமானத்தின் அறை [கேபின்] விசாலமாக இருந்தது, வரிசையாக இருக்கைகள் அழகாக இருந்தன. பொதிகள் வைக்க தலைக்கு மேல் மூடக்கூடிய பெட்டிகள் [மேல்நிலை பெட்டிகள் / overhead compartments] இருந்தன. மற்றும் குழந்தைகளைப் அன்பாகப் பார்த்து பழகும் நட்பு விமானப் பணிப்பெண்கள் ["Airhostess"] அங்கு இருந்தனர். தாத்தா அவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் இருக்கைகளில் பாதுகாப்பாக இருக்கைப் பட்டை [seat belt] போட்டு அமர உதவினார். விமானம் நகரத் தொடங்கியதும், நிலன் தனது கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு, அவனின் கண்கள் வியப்புடன் விரிந்தன. தரை வேகமாகவும் வேகமாகவும் கடந்து செல்வது போல் அவனுக்குத் தோன்றியது, திடீரென்று, மெல்ல உயர்ந்து, அது காற்றில் பறந்தது. "நாங்கள் பறக்கிறோம்! நாங்கள் பறக்கிறோம்!" என்று அவன் சிரித்துக் கொண்டே, கீழே உள்ள சிறிய கார்களையும் கட்டிடங்களையும் சுட்டிக்காட்டினான். அவை மங்கியபடி, சிறிதாகத் தெரிந்தன. விமானத்தில் பயணம் செய்த அனுபவம் மூன்று பேரனுக்கும் மாயாஜாலம் போல் இருந்தது. தாத்தா அவர்களுக்கு சீட் பெல்ட்களை எப்படி கட்டுவது, ஜன்னலுக்கு வெளியே எப்படி பாதுகாப்பாகப் பார்ப்பது போன்றவற்றைக் கூறி, ஆனால், சிறிய தட்டு மேசைகளை [மேசைத் தாம்பாளம் / little tray tables] அவர்களே சரிபார்த்து பொருத்த அனுமதித்தார். குழந்தைகள் சிற்றுண்டிகளால் மகிழ்ச்சியடைந்தனர் - ஒரு சிறிய பொட்டலம் பிஸ்கட் மற்றும் ஜூஸ் - மேகங்கள் சோம்பேறித்தனமாக ஜன்னலைக் கடந்து சென்றன, சில பஞ்சுபோன்ற யானைகள் மற்றும் பெரிய அரண்மனைகள் போல இருந்தன. விமானப் பயணத்தின் நடுவில், தாத்தா தான் கொண்டுவந்த ஒரு சிறிய போட்டி விளையாட்டு ஒன்றை வெளியே எடுத்தார் - 'வானத்தில் புதையல் வேட்டை'. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சரிபார்ப்புப் பட்டியல் இருந்தது: ஒரு டிராகன் போன்ற வடிவிலான மேகத்தைக் கண்டுபிடி, தூரத்தில் ஒரு விமானத்தைக் கண்டுபிடி, அல்லது கீழே நிலத்தில் வளைந்து செல்லும் ஒரு சிறிய நதியைக் கண்டுபிடி என பல கேள்விகள் அங்கு இருந்தன. நிலன் ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு முறையும் அவனது கண்கள் பெருமையில் பூரித்தன. திரேன், வழமைபோல் ஆர்வத்துடன், கவனத்துடன் போட்டியிட்டான். ஆரின் கூட எதோ ஒரு புரிதலுடன் எதையெதையோ "சுட்டிக் காட்டி, என்னென்னெவோ சத்தம் போட்டான். விமானம் துபாயை நோக்கி தரை இறங்கும் போது, குழந்தைகள் தங்கள் முகங்களை மீண்டும் ஜன்னல்களில் அழுத்திக் கொண்டனர். அவர்களுக்குக் கீழே நகரம் ஒரு மின்னும் புதையல் பெட்டியைப் போல விரிந்தது: மின்னும் வானளாவிய கட்டிடங்கள், வளைந்து செல்லும் நீர்வழிகள், மற்றும் அடிவானம் வரை நீண்டு கிடக்கும் சிறிய சிறிய மணல் மேடுகள். நிலன் மூச்சுத் திணறினான். "இது மாயாஜாலம் போன்றது!" என்று நிலன் பெரு மூச்சு விட்டான். விமானம் இறுதியாக தரையிறங்கியதும், விமான நிலையத்தின் பரபரப்போடு சாகசம் தொடர்ந்தது: நீண்ட தாழ்வாரங்கள் [long corridors] வழியாக நடந்து, சாமான்களை [luggage] சேகரித்து மற்றும் ஆங்கிலம் மற்றும் அரபியில் வேடிக்கையான பலகைகளையும் கண்டனர். தாத்தா அவர்களின் கைகளை இறுக்கமாகப் பிடித்து, கூட்டத்தின் வழியாக அவர்களை கவனமாக பாதுகாப்பாக வழிநடத்தினார். அப்பொழுது சுவாரஸ்யமான காட்சிகளைச் சுட்டிக்காட்டிட தவறவில்லை - நகரும் நடைபாதை [moving walkway, also known as a travelator], வண்ணமயமான நினைவுப் பொருட்களின் காட்சி, மற்றும் சிறிய மீன்கள் நீந்தும் நீரூற்று [fountain] போன்றவை. அவர்கள் வெளியே வந்த நேரத்தில், சூடான துபாய் சூரியன் அவர்களை ஒரு பழைய நண்பரைப் போல வரவேற்றது. குழந்தைகள் புதிய நகரத்தை சுவாசித்தனர், வரவிருக்கும் ஆச்சரியங்களை எதிர்பார்த்து உற்சாகமாக இருந்தனர். அவர்களின் கண்கள் ஆச்சரியத்தால் பிரகாசிப்பதைக் கண்டு தாத்தா சிரித்தார். "துபாய்க்கு வருக, என் சிறிய ஆய்வாளர்களே," என்று அவர் செல்லமாக அவர்களின் முதுகில் தட்டிக் கொடுத்து கூறினார். "ஆனால் இது வெறும் ஆரம்பம் தான்." என்றார் 🌍✈️ நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 04 தொடரும் துளி/DROP: 1991 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 3 https://www.facebook.com/groups/978753388866632/posts/33261397920175427/?
  9. இங்கு விவாதங்கள் எல்லாமே எந்த கோணத்தில் நடத்தப்படுகின்றதென்றால், நமது பக்கதிலே எல்லோருமே சுத்தமான சூசைப்பிள்ளைகள், அடுத்தவர்கள் எல்லோருமே முழுமையான குற்றவாளிகள். சாகும் மட்டும் இந்த கோணத்தில் விவாதிப்பதால் ஐந்து சதத்துக்கும் பிரயோசனம் இல்லை. அந்த இடத்திலே நின்று புலம்பிக்கொண்டிருக்க வேண்டியது தான். அடுத்தவனை குற்றம் சாட்டி விவாதிப்பதில் எடுத்துக்கொள்ளும் நேரத்தில் பத்து வீதததையேனும் நம்மை நாமே சுயவிமர்சனம் செய்து கொள்ள எடுத்து கொண்டிருந்தாலே நாம் எதிர் கொள்ளும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம். கண்ணதாசன் வரிகளில் கூறினால்… மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து உங்கள் முதுகைப் பாருங்கள்…! முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்….!
  10. காணொளி: 👉 https://www.facebook.com/reel/860162666636509 👈 தண்ணீர் குடித்து... உண்ணாவிரதம். 😂 🤣
  11. சென்ற முறை... "மலிபன் பிஸ்கற்" சாப்பிட்டு உண்ணாவிரதம் இருந்த போது... கோத்த பாயா... தவண்டு வந்து, ஆறுதல் சொல்லிய காட்சி. 😂
  12. கண்கள் செருகிக் கொண்டு வருகின்றது. ஆள்… தப்புவது கடினம். தேசியக் கொடியை... அரைக் கம்பத்தில் பறக்க விடுங்கப்பா.
  13. இரவு, பகல் போராட்டம் என கூறி... நள்ளிரவில் வீட்டிற்கு சென்று திரும்பிய விமல் வீரவன்ச. 😂
  14. 6 ஆண்டுகளில் 390 கோடி ரூபாய் இழப்பு : மத்தள விமான நிலையத்தை மீட்க புதிய திட்டம் 13 January 2026 இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையம் கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 39.3 பில்லியன் ரூபாய் நிகர இழப்பைச் சந்தித்துள்ளதாக அண்மைய கணக்காய்வு அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க, விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் மற்றும் அரச பங்களிப்புடன் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் புதிய தீர்மானத்தை எடுத்துள்ளது. "வெள்ளை யானை" என விமர்சிக்கப்படும் மத்தள விமான நிலையம், 2024 ஆம் நிதியாண்டில் மட்டும் 3.36 பில்லியன் ரூபாய் இயக்க இழப்பைப் பதிவு செய்துள்ளது. இங்கு வருமானத்தை விட செலவு 15 மடங்கு அதிகமாக உள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2024 இல் விமான நிலையத்தின் வருமானம் வெறும் 242.2 மில்லியன் ரூபாயாகும். ஆனால், அதன் இயக்கச் செலவு 3.6 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 10 இலட்சம் பயணிகளைக் கையாளத் திட்டமிடப்பட்ட போதிலும், கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் 321,577 பயணிகள் மட்டுமே இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். கட்டுமானத்திற்காகப் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களுக்காக ஆண்டுதோறும் சுமார் 2.05 பில்லியன் ரூபாய் வட்டிச் செலவு கணக்கிடப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் இந்திய - ரஷ்ய கூட்டு நிறுவனம் ஒன்றிடம் விமான நிலையத்தை ஒப்படைக்க எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் இரத்து செய்துள்ளது. அதற்குப் பதிலாக, புதிய விருப்பக் கோரல் மூலம் தனியார் பங்களிப்புடன் வணிக நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய பிரிவுகள் அரசாங்கத்தின் கீழேயே இருக்கும். அதேவேளை, சரக்கு கையாளுதல், விமானப் பராமரிப்பு மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகள் தனியார் முதலீடுகளுக்குத் திறந்துவிடப்படவுள்ளன. தற்போதைய 2025/2026 குளிர்கால பருவத்தில் ரஷ்யாவின் ரெட் விங்ஸ், பெலாரஸின் பெலாவியா மற்றும் உக்ரைனின் ஸ்கை அப் போன்ற விமான நிறுவனங்கள் மத்தளத்திற்குச் சேவைகளை ஆரம்பித்துள்ளன. இது விமான நிலையத்திற்குச் சற்று புத்துயிர் அளித்திருந்தாலும், பாரிய கடன் சுமைகளை ஈடுகட்ட இந்த வருமானம் போதுமானதாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/440408/loss-of-rs-390-crore-in-6-years-new-plan-to-revive-mattala-airport
  15. அக்கரைப்பற்று வைத்தியசாலையின் வைத்தியர்கள் வேலைநிறுத்தம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்வாக மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலுள்ள 02 பொது வைத்தியசாலைகள், ஒரு போதனா வைத்தியசாலை, 17 ஆதார வைத்தியசாலைகள், 52 பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் 113 ஆரம்ப சுகாதார மத்திய நிலையங்களில் இந்த வேலைநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் சேர்ந்த வைத்தியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான வைத்தியர் ஜனித் பேதுருஆரச்சி தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmkc6hsg303ulo29ncanq1074
  16. பாலியல் காட்சிகள் மூலம் பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது திருமணமான பெண்கள் மற்றும் அவர்களது காதலர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் பாலியல் உறவுகளை வீடியோவாக பதிவு செய்து, வீடியோக்களை இணையதளங்களில் பகிர்வதாக மிரட்டி பணம் பறிப்பது தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். காலி தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரி கே.கே.ஆர். அல்விஸ் கூறுகையில், குற்றவாளிகள் ரகசியமாக வீடியோக்களை பதிவு செய்ய மேம்பட்ட தொழில்நுட்ப கேமராக்களைப் பயன்படுத்துகின்றனர். “இந்த கேமராக்கள் சட்டை காலர்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன, பாக்கெட்டில் பேனா அல்லது லாட்ஜ்களில் படுக்கைகளுக்குள் உள்ளன. தனிநபர்கள் தங்கள் எஜமானிகள் மற்றும் இளம் காதலர்களுடனான பாலியல் உறவுகள் ரகசியமாக பதிவு செய்யப்பட்டு வலைத்தளங்களில் வெளியிடப்படுகின்றன. பெரும்பாலும், தாங்கள் காதலிக்கும் பெண்களை லாட்ஜ்களுக்கு அழைத்துச் சென்று, அந்த இளம் பெண்ணின் நிர்வாணக் காட்சிகளை வீடியோவாகப் பதிவு செய்து, அவர்களை மிரட்டி பணம் பறிக்கப் பயன்படுத்துகின்றனர்.” “சமீபத்தில், வெளிநாட்டில் பணிபுரியும் 45 வயதுடைய ஒரு பெண், ஒரு பேக்கரியில் பணிபுரியும் ஒரு ஊழியரை காதலித்தார். அவர் அவர்களின் பாலியல் உறவுகளை ரகசியமாக வீடியோவாக பதிவு செய்திருந்தார். அந்த காட்சிகளை இணையதளங்களில் பகிர்வதாக மிரட்டி இப்போது தன்னிடம் பணம் பறிப்பதாக அவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.” "இதேபோன்ற ஒரு சம்பவத்தில், நோய்வாய்ப்பட்ட குழந்தையை மந்திரங்கள் மூலம் குணப்படுத்துவதற்காக வீட்டில் தங்கியிருந்த ஒரு பேய் விரட்டுபவர், அந்தப் பெண்ணை அவள் கிரகத்தின் தீய செல்வாக்கின் கீழ் இருப்பதாகவும், அதை அகற்ற சடங்குகளைச் செய்வதாகவும் கூறி, தன்னுடன் உடலுறவு கொள்ளும்படி கவர்ந்தார். அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். புலன்களை ரகசியமாக வீடியோ பதிவு செய்த பேய் விரட்டுபவர் இப்போது மிரட்டி பணம் பறிக்கின்றார். இது தொடர்பிலான முறைப்பாடும் கிடைத்துள்ளது," என்று காவல்துறை அதிகாரி கூறினார். இளம் பெண்கள் தங்கள் காதலர்களுடன் பழகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், திருமணமான பெண்கள் தங்கள் கள்ளக்காதலர்களுடன் ரகசிய உறவு வைத்திருப்பதால் அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்து குறித்தும் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/பாலியல்-காட்சிகள்-மூலம்-பணம்-பறிக்கும்-கும்பல்-அதிகரித்து-வருகிறது/175-370959
  17. யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள். யாழ்ப்பாணத்தில் இந்த ஆண்டு 500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு , நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக யாழ். மாவட்ட செயலர் ம பிரதீபன் தெரிவித்துள்ளார். இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் நடைபெறாது. குறித்த கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 500 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளது என்றார். வீட்டுத்திட்ட பயனாளிகள் பட்டியல்களை சுற்றுநிருபத்திற்கு அமைய தெரிவு செய்யுங்கள் எனவும், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாத நபர்கள் மற்றும் கொடுப்பனவு தேவைப்படுபவர்கள் தொடர்பிலான விபரங்களை கையளியுங்கள் என பிரதேச செயலர்களிடம் கோரினார். இக் கலந்துரையாடலில் மேலதிக செயலர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். https://athavannews.com/2026/1459705
  18. 10 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்கிறார் டொனால்ட் ட்ரம்ப்: சர்வதேச அரசியலில் புதிய திருப்பம். வாஷிங்டனுக்கான அவுஸ்திரேலிய தூதர் கெவின் ரூட் (Kevin Rudd) தனது பதவியிலிருந்து விலகிய சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்குத் தனது முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். ஏறக்குறைய 10 ஆண்டுகளில் சீனாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதால், சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தற்போதைய ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், குறிப்பாகச் சமீபத்திய மாதங்களில், சீனா அமெரிக்காவின் நேரடி கவனத்திலிருந்து விலகியிருந்ததாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் சீனாவுடனான மோதல்கள் அல்லது பேச்சுவார்த்தைகள் முன்னுரிமை பெறாத சூழலில், இந்தத் திடீர் பயண அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. கெவின் ரூட் போன்ற அனுபவம் வாய்ந்த தூதர்கள் வாஷிங்டனை விட்டு வெளியேறும் வேளையில், இந்த மாற்றம் ஆசிய-பசிபிக் பிராந்திய அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் சீனாவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்த ட்ரம்ப், தற்போது இந்தப் பயணத்தின் மூலம் எத்தகைய உறவை முன்னெடுக்கப் போகிறார் என்பது உலக நாடுகளின் கேள்வியாக உள்ளது. https://athavannews.com/2026/1459694
  19. ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி – தெஹ்ரானுக்கான ட்ரம்பின் புதிய அழுத்தம்! ஈரானுடன் வணிக உறவுகளைக் கொண்ட நாடுகளின் பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (12) தெரிவித்தார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலான இந்த உத்தரவு ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடன் செய்யப்படும் எந்தவொரு மற்றும் அனைத்து வணிகத்திற்கும் 25% வரியை செலுத்தும் என்று ட்ரம்ப் சமூக ஊடகத்தளமான ட்ரூத் சோஷியலில் கூறினார். எந்த நாடுகளின் இறக்குமதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட வரிகள் பற்றிய கூடுதல் தகவல்களை வெள்ளை மாளிகை பகிர்ந்து கொள்ளவில்லை. ஈரானில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் மூன்றாவது வாரத்தில் நுழையும் போது, இந்த நடவடிக்கை தெஹ்ரானுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கக்கூடும். சீனா ஈரானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளி, அதைத் தொடர்ந்து ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி மற்றும் இந்தியா உள்ளன. தெஹ்ரான் போராட்டக்காரர்களைக் கொன்றால் இராணுவ ரீதியாக தலையிடுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்கள் உள்ளிட்ட இராணுவ விருப்பங்கள் இன்னும் பேசுபொருளாக இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் திங்களன்று தெரிவித்தார். ஈரானிய நாணயமான ரியாலின் மதிப்பு சரிந்து வருவதால் ஏற்பட்ட கோபம் டிசம்பர் மாத இறுதியில் போராட்டங்களைத் தூண்டியது. இது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு சட்டபூர்வமான நெருக்கடியாக வளர்ந்துள்ளது. வன்முறையின் விளைாவக ஈரானில் கிட்டத்தட்ட 500 போராட்டக்காரர்கள் மற்றும் 48 பாதுகாப்புப் பணியாளர்களின் இறப்புகளை சரிபார்த்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது. அதேநேரம், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாகவும் அது கூறுகின்றது. ஈரானின் அணுசக்தித் திட்டம் மீதான சர்வதேசத் தடைகள் நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இது அரசாங்கத்தின் தவறான மேலாண்மை மற்றும் ஊழலால் பலவீனமடைந்துள்ளது. டிசம்பர் 28 அன்று, திறந்த சந்தையில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரியாலின் மதிப்பு மீண்டும் கடுமையாக வீழ்ச்சியடைந்ததைக் கண்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்த கடைக்காரர்கள் தெஹ்ரானின் வீதிகளில் இறங்கினர். பணவீக்கம் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. அதே நேரத்தில் பணவீக்கம் 40% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக சமையல் எண்ணெய் மற்றும் இறைச்சி போன்ற அன்றாடப் பொருட்களுக்கான கூர்மையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1459678
  20. கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். சீனா அல்லது ரஷ்யாவால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நட்பு நாடுகளின் எச்சரிக்கைகளை புறக்கணித்த அவர், கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை இரட்டிப்பாக்கி, ஆர்க்டிக் பிரதேசத்தை கையகப்படுத்துவது நேட்டோவை வருத்தப்படுத்தினாலும் தனக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார். வொஷிங்டனுக்குத் திரும்பும் போது எயார்போர்ஸ் வன் (Air Force One) கப்பலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது செய்தியாளர்கள், கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதால் நேட்டோ கூட்டணி உடையுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், நேட்டோவை இந்த விடயம் பாதிக்கும் என்பதையும் ஒப்புக்கொண்டார். இருப்பினும் நேட்டோ ஏனையவர்களை விட அமெரிக்காவிற்கு அதிகம் தேவை என்றும் கூறியுள்ளார். ‘நாம் கிரீன்லாந்தை எடுத்துக் கொள்ளாவிட்டால், ரஷ்யா அல்லது சீனா எடுக்கும். நான் அதை நடக்க விடப் போவதில்லை… எப்படியிருந்தாலும், நமக்கு கிரீன்லாந்து கிடைக்கும்,’ என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். https://athavannews.com/2026/1459615
  21. சமஷ்டி தீர்வு என்பது நாட்டைப் பிளவுபடுத்துவது அல்ல எனும் நிலைப்பாட்டை வெளிப்படுத்துங்கள் - நோர்வே உயர்மட்டப் பிரதிநிதியிடம் கஜேந்திரகுமார் தரப்பு வலியுறுத்தல் 13 Jan, 2026 | 08:58 AM (நா.தனுஜா) தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய அழுத்தங்களை நோர்வே பிரயோகிக்கவேண்டும் எனவும், குறைந்தபட்சம் சமஷ்டி தீர்வு என்பது நாட்டைப் பிளவுபடுத்துவது அல்ல என்ற நிலைப்பாட்டையேனும் நோர்வே வெளிப்படுத்தவேண்டும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் உயர்மட்டப் பிரதிநிதியிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் வலியுறுத்தியுள்ளனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் இம்மாதத் தொடக்கம் முதல் ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டு, அங்கு பலதரப்பட்ட சந்திப்புக்களை நடாத்தி வருகின்றனர். அதன்படி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தலைமையில் அதன் செயலாளர் செ.கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கைபரப்புச் செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் நோர்வே வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரியை சந்தித்து, உள்நாட்டில் தமிழர்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் மற்றும் தீர்வு எதிர்பார்க்கை குறித்து விரிவாக விளக்கமளித்தனர். இதன்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சி மற்றும் தமது சமஷ்டி தீர்வுக்கான கோரிக்கை என்பன தொடர்பில் நோர்வே வெளிவிவகார அமைச்சின் அதிகாரியிடம் விரிவாக விளக்கமளித்தனர். அதனை செவிமடுத்த அதிகாரி, தீர்வு விடயத்தில் தாம் நடுநிலையான போக்கையே கடைப்பிடிப்பதாகப் பதிலளித்தார். அதனை நிராகரித்த கஜேந்திரகுமார் தரப்பு, இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் நோர்வே உள்ளிட்ட உலகநாடுகள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் சமஷ்டி தீர்வுக்கு இணங்காமல், தனிநாட்டையே கோருகின்றனர் என்ற அடிப்படையில் அல்லவா பின்னர் யுத்தத்தை ஆதரித்தீர்கள் எனக் கேள்வி எழுப்பியதுடன், குறைந்தபட்சம் சமஷ்டி தீர்வு என்பது நாட்டைப் பிளவுபடுத்துவது அல்ல என்ற நிலைப்பாட்டையேனும் நோர்வே வெளிப்படுத்தவேண்டும் என வலியுறுத்தினர். அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கான புதிய சட்ட வரைவு, வட, கிழக்கு மாகாணங்களில் தொடரும் பௌத்த மற்றும் இராணுவமயமாக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்னமும் உறுதிப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் நோர்வே அதிகாரிக்கு அவர்கள் விளக்கமளித்தனர். அதனையடுத்து டென்மார்க் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரியுடன் நடைபெற்ற சந்திப்பிலும் இவ்விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. இது இவ்வாறிருக்க, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீண்டும் நாடு திரும்பியுள்ள போதிலும், கட்சியின் ஏனைய பிரதிநிதிகள் எதிர்வரும் தினங்களில் பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்ஸர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இவ்வாறான உயர்மட்ட மற்றும் மக்கள் சந்திப்புக்களை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235883
  22. சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார் ! 13 Jan, 2026 | 08:47 AM இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் இன்று செவ்வாய்க்கிழமை (13) அதிகாலை காலமானார். சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் தனது 81 ஆவது வயதில் காலமாகியுள்ளார். இவர் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, வெளியிட்ட அறிக்கைகளுக்காக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டவர் ஆவார். ஊடகத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட இவர், பல முக்கிய செய்திகளை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார். இக்பால் அத்தாஸின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் தெஹிவளை பெரிய பள்ளிவாசல் மயானத்தில் நடைபெறவுள்ளது. அன்னாரது பூதவுடல் இலக்கம் 11 C/1, சிறிவர்தன வீதி, ஹில் வீதி, தெஹிவளை என்ற முகவரியில் அமைந்துள்ள இல்லத்தில் இன்று காலை 9.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235881
  23. எல்லை தாண்டி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது Jan 13, 2026 - 07:28 AM ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும் (TN 10 MM 513), அதிலிருந்த பத்து மீனவர்களையும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் இன்று (13) அதிகாலை கைது செய்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்கள், படகுடன் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைதான மீனவர்கள் மற்றும் படகு ஆகியன நீரியல் வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmkbxzxho03u0o29npg42tay5
  24. பாதுகாப்பு அமைச்சின் தடை பட்டியலில் 16 அமைப்புக்கள், 206 தனிநபர்கள் - பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருப்பதே காரணமாம் 12 Jan, 2026 | 07:22 PM (நா.தனுஜா) தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு உள்ளடங்கலாக தடைசெய்யப்பட்ட 16 அமைப்புக்கள் மற்றும் 206 தனிநபர்களின் பெயர் விபரங்களைக் குறிப்பிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தாவினால் புதுப்பிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புகளைப் பேணிவரும் மற்றும் அவற்றைத் தூண்டும் வகையில் இயங்கிவரும் அமைப்புக்களைத் தடைசெய்து இலங்கை அரசாங்கங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டுவருகின்றன. அவ்வாறு தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பெயர்கள் தொடர்ந்து உள்ளடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அரசாங்கத்தினால் கடந்த 6 ஆம் திகதி வெளியிடப்பட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தலில் தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, உலகத் தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் நிவாரண நிதியம், தலைமையகக் குழு, கனேடிய தமிழர் Nதுசிய அவை, தமிழ் இளைஞர் அமைப்பு மற்றும் சேவ் த பேர்ள்ஸ் ஆகிய தமிழ் இயக்கங்கள் மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பெயர்களும் தேசிய தௌஹித் ஜமாத், ஜமாதே மிலாதே இப்ராஹிம், விலயாத் அஸ் செயிலானி, டருள் ஆதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சுப்பர் முஸ்லிம் ஆகிய இஸ்லாமிய அமைப்புக்களின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளன. அதேபோன்று ஜேசுராசா அமலதாஸ், விஸ்வநாதன் ருத்ரகுமரன், அப்பாத்துரை செந்தில் விநாயகம், சந்திரா வரதகுமார், வீரசிங்கம் நாகேஸ்வரன், நடராஜா சத்தியசீலன், அமிர்தலிங்கம் திலீபன், விநாயகமூர்த்தி மோகனசுந்தரம், மொஹமது இப்திகார் மொஹமது இன்சாப், அப்துல் காதர் மொஹமட் ஷாஸ்னி, மொஹமது பாருக் முஹம்மது ஹிலாம், முகமது இப்ராகிம் சாதிக் அப்துல்லா, மொஹம்மது சரிபு ஆதம் லெப்பே, அப்துல் லதீப் மொஹமட் சாபி ஆகியோர் உள்ளடங்கலாக 206 தனிநபர்களின் பெயர்களும் அவ்வர்த்தமானி அறிவித்தலில் உள்வாங்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம் இவ்வமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் சார்ந்த செயற்பாடுகள், நிதியங்கள் மற்றும் சொத்துக்கள் என்பன நாட்டுக்குள் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235867
  25. இலங்கைக்காக சீன வெளிவிவகார அமைச்சர் வழங்கிய உறுதி Jan 12, 2026 - 11:55 PM நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள வீதிகள், புகையிரத பாதைகள் மற்றும் பாலங்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தினால் சீன அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட விசேட கோரிக்கை தொடர்பில் தான் தனிப்பட்ட ரீதியில் தலையிடுவதாக சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) உறுதியளித்துள்ளார். இலங்கை விரைவில் வழமைக்குத் திரும்புவதற்குச் சரியான பாதையில் பயணிப்பதாகத் தான் நம்புவதாகவும், அதற்காக சீன அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் வாங் யீ மீண்டும் உறுதிப்படுத்தினார். இன்று காலை (12) சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இலங்கைக்கு மேற்கொண்ட குறுகிய கால விஜயத்தின் போது அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்தார். டித்வா புயலுக்குப் பின்னர் சீனா இலங்கைக்கு வழங்கிய அவசர அனர்த்த நிவாரணங்களுக்காக, சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இரு அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில் வர்த்தகம் மற்றும் முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, டித்வா புயலுக்குப் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்முறை குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkbhudif03txo29ntqq22m1o
  26. தென் ஆபிரிக்காவுடனான 19 இன் கீழ் உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் 12 ஓட்டங்களால் இலங்கை வெற்றி 12 Jan, 2026 | 09:34 PM (நெவில் அன்தனி) நமிபியாவிலும் ஸிம்பாப்வேயிலும் தைப் பொங்கல் தினத்தன்று ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 12 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டது. நமிபியாவின் விண்ட்ஹோக், யுனைட்டட் கிரிக்கெட் கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரர்களான திமன்த மஹாவித்தான, விரான் சமுதித்த ஆகிய இருவரும் 121 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அதன் பின்னர் சீரான இடைவெளியில் இலங்கை இளையோர் அணி 4 விக்கெட்களை இழந்தது. (49 - 4 விக்.) இந் நிலையில் கவிஜ கமகே, சாமிக்க ஹீனட்டிகல ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 200 ஓட்டங்களாக உயர்த்தினர். திமன்த மஹாவித்தான 87 ஓட்டங்களையும் விரான் சமுதித்த 45 ஓட்டங்களையும் உப அணித் தலைவர் கவிஜ கமகே 48 ஓட்டங்களையும் சாமிக்க ஹீனட்டிகல 14 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் 10 ஓட்டங்களை எட்டவில்லை. 226 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட தென் ஆபிரிக்காவின் வெற்றி இலக்கு மழை காரணமாக டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 34 ஓவர்களில் 176 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது. தென் ஆபிரிக்கா 33.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. பந்துவீச்சில் குகதாஸ் மாதுளன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சாமிக்க ஹீனட்டிகல 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விரான் சமுதித்த 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மலின்த சில்வா 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கொழும்பு வெஸ்லி கல்லூரி வீரர் ஸ்ரீராம் ஜீவகன் 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். துடுப்பாட்டத்தில் 11 வீரர்களும் பந்துவீச்சில் 11 வீரர்களும் பயன்படுத்தப்பட்ட இந்தப் போட்டியில் விக்னேஸ்வரன் ஆகாஷ் விளையாடவில்லை. இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பயிற்சிப் போட்டி இதே மைதானத்தில் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. அப் போட்டியில் ஆகாஷுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் ஆகிய அணிகளுடன் ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை அணி தனது முதல் சுற்று போட்டிளை நமிபியாவில் விiளாடவுள்ளது. ஜப்பனை 17ஆம் திகதியும் அயர்லாந்தை 19ஆம் திகதியும் அவுஸ்திரேலியாவை 23ஆம் திகதியும் எதிர்த்தாடவுள்ள இலங்கை சுப்ப 6 சுற்றில் விளையாட தகுதிபெறும் என நம்பப்படுகிறது. இலங்கை இளையோர் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக திரித்துவ கல்லூரியின் வேகப்பந்துவீச்சாளர் செத்மிக்க செனவிரட்ன கருதப்படுகின்றார். ஐசிசியினால் பெயரிடப்பட்டுள்ள கவனிக்கத்த வீரர்களில் செத்மிக்க செனவிரட்னவும் ஒருவராவார். பத்து இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள செத்மிக்க 16 விக்கெட்களைக் கைபற்றியுள்ளார். 19 வயதின்கீழ் இலங்கை குழாம் விமத் தின்சார (அணித் தலைவர் - றோயல் கல்லூரி), கவிஜ கமகே (உதவித் தலைவர் - கிங்ஸ்வூட் கல்லூரி), திமன்த மஹாவித்தான, ஆதம் ஹில்மி, செத்மிக்க செனவிரட்ன (மூவரும் திரித்துவ கல்லூரி), விரான் சமுதித்த, சமரிந்து நெத்சார (இருவரும் மாத்தறை சென். செர்வேஷியஸ் கல்லூரி), துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல (இருவரும் மஹாநாம கல்லூரி), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி), ரசித் நிம்சார (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை), விக்னேஸ்வரன் ஆகாஷ், சேனுஜ வேக்குனாகொட (இருவரும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி), ஸ்ரீராம் ஜீவகன் (வெஸ்லி கல்லூரி), மலின்த சில்வா (மொறட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரி) https://www.virakesari.lk/article/235873

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.