All Activity
- Past hour
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
என்ன சொல்கின்றீர்கள்? சம்பந்தர் அரசியல் சூட்சும்ம் நினைந்தவர், அரசியல் ஞானி என்றெல்லாம் புகழ்ந்து தறள்ளியுள்ளீர்கள். 2002 ல் புலிகள் அப்படிச் சொல்லவில்லை. அவர்கள் கூறியது, “இவையள் தனித்து எதுவும் செய்ய முடியாது. அதற்கான தகுதி புலிகளுக்கு மட்டுமே உள்ளது. தாங்கள் சொல்லுறத கேட்டு பாராளுமன்றதமில சொல்லுறத்துக்கு மட்டும் தான் இவயள நாங்கள் வைச்சிருக்கிறம்.” இவ்வாறு பகீரங்கமாக பத்திரிகையாளர்களுக்கு சொல்லப்பட்டது. அதாவது நீங்கள் கூறிய அரசியல் ஞானியை புலிகள் தாங்கள் சொன்னதை அப்படியே சொல்லும் பியோனாக தான் வைத்திருந்துள்ளார்கள். சுப்பர் பவர் இருந்த புலிகளாலேயே எதையும் சாதிக்க முடியாத போது ஒரு பியோனால் அதை செய்திருக்க முடிந்திருக்கும் என்று நினைக்கின்றீர்களா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
செம்பாட்டான் சார் ...பையனாரே ....சூரியவம்சியின் வாணவேடிக்கை பார்த்தீர்களா...80 பந்தில் 175 ஓட்டம் ...அதில் 15 சிக்ஸ்...15 போர் ...மிச்சம் உதிரி ...இது நம்ம சூர்யா..
- Today
-
Ramsiva changed their profile photo
-
Ramsiva joined the community
-
மக்கள் பிரதிநிதித்துவத்தின் தார்மீகப் பொறுப்பும் ஓய்வூதிய சர்ச்சையும்
மக்கள் பிரதிநிதித்துவத்தின் தார்மீகப் பொறுப்பும் ஓய்வூதிய சர்ச்சையும் Veeragathy Thanabalasingham on February 6, 2026 Photo, THE PARLIAMENT OF SRI LANKA முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தான் பெற்று வந்த ஓய்வூதியத்தை நிறுத்தினால் சாகப்போவதாக ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரும் 1999 ஜனாதிபதி வேட்பாளருமான நந்தன குணதிலக கடந்த ஓகஸ்டில் செய்த எச்சரிக்கை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. தன்னை ஒரு ‘கெரில்லா’ என்று வர்ணித்த அவர் தன்னந் தனியாளாக சாகப் போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஓய்வூதியம் நிறுத்தப்படும் பட்சத்தில் வாழ்வாதாரத்தை இழந்தால் வேறு பலரையும் கொலை செய்துவிட்டுத் தானும் உயிரை மாய்ப்பதற்கு ‘தற்கொலைத் தாக்குதலை’ நடத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்தாரோ தெரியவில்லை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்வதற்கான சட்டமூலத்தை அவரது முன்னாள் தோழர்களின் அரசாங்கம் ஜனவரி 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து அது குறித்து அரசியல் அரங்கில் ஒரு விவாதம் மூண்டிருக்கும் வேளையில், குணதிலக உயிருடன் இல்லை. குறுகியகால சுகவீனத்துக்குப் பிறகு ஜனவரி 18ஆம் திகதி அவர் காலமானார். தனது வாழ்வின் இறுதியில் மருத்துவச் செலவைக் கூட செலுத்த முடியாத நிலையில் அவர் இறந்ததாக கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகள் அரச செலவில் அனுபவித்து வந்த ஆடம்பரமான வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்த சட்டம் நிறைவேற்றப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்த நிலையில், சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை ஆட்சேபித்து பல மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் இல்லாமல் செய்வதாக 2024 தேசிய தேர்தல்களில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது என்று அரசாங்கத் தலைவர்கள் கூறுகிறார்கள். சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட அன்றைய தினமே தற்போது ஓய்வூதியத்தை பெறுகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அதற்காக அரசாங்கத்துக்கு ஏற்படுகின்ற செலவினங்கள் பற்றிய விபரங்களை அரசாங்க உறுப்பினர் காமினி இரத்நாயக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கமே சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து நாடாளுன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை 1976ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இலங்கையின் மூத்த இடதுசாரி தலைவர்களில் ஒருவரான கலாநிதி என்.எம். பெரேரா அப்போது நிதியமைச்சராக இருந்தார். குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. காமினி இரத்நாயக்க வெளியிட்ட விபரங்களின் பிரகாரம் தற்போது 330 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தைப் பெற்று வருகிறார்கள். இதற்கு மேலதிகமாக, மரணமடைந்த 182 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விதவை மனைவிமாரும் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் தங்கியிருந்த ஏழு பேர் அரச கொடுப்பனவுகளைப் பெறுகின்றார்கள். ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மாதந்தம் 23,541,645 ரூபாவும் விதவைகளுக்காக 11,025,216 ரூபாவும் தங்கியிருந்தவர்களுக்காக 420,121 ரூபாவும். அரசுக்கு செலவாகுவதாக அவர் சபையில் கூறினார். ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை இம்மாத இறுதியளவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஓய்வுதிய ஒழிப்பு திட்டம் தொடர்பில் தனது விசனத்தை வெளிப்படுத்தியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய சகல கட்சிகளினதும் பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்றுடன் ஆராய்ந்து சட்டமூலத்துக்கு ஒரு மனிதாபிமான பரிமாணத்தை கொடுக்கக்கூடிய திருத்தங்களைச் செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவிடம் கேட்டிருக்கிறார். ஜெயசூரியவை போன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசதி படைத்த வாழ்க்கைப் பின்புலத்தைக் கொண்டவர்கள் என்பதால் அவர்கள் வாழ்வாதாரத்துக்காக ஓய்வூதியத்தில் தங்கியிருப்பவர்கள் அல்ல. ஓய்வூதியத்தை சமூக சேவைக்கு தன்னால் செலவிடக்கூடியதாக இருப்பதை போன்று பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் செய்யமுடியாது என்றும் அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் அவர்கள் பெரும் இடர்பாட்டுக்கு உள்ளாகும் ஆபத்து இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பின் பதில் தலைவராக இருக்கும் ஜெயசூரிய ஜனாதிபதிக்கு கடந்த வாரம் எழுதிய கடிதம் ஒன்றில் ஊழல்வாதிகள் என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் அரசியல்வாதிகள் சார்பில் தான் பேசவில்லை என்பதை குறிப்பிடத்தவறவில்லை. பொதுவில் அரசியல்வாதிகளை பழிபாவத்துக்கு அஞ்சாத பேர்வழிகளாகவே மக்கள் நோக்குகிற அளவுக்கு இலங்கையின் அரசியல் ஊழல்மயமாகியிருக்கிறது என்பதால் ஜனாதிபதியிடம் தன்னால் முன்வைக்கப்படும் கோரிக்கை மக்களினால் எவ்வாறு நோக்கப்படும் என்பதில் ஜெயசூரிய கொண்டிருக்கும் கரிசனை கடிதத்தில் தெளிவாக பிரதிபலித்தது. “சகல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஊழல்வாதிகள் என்று அழைப்பது நியாயமானதல்ல. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஜே.வி.பியின் 30 முன்னாள் உறுப்பினர்கள் உட்பட மக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெற்ற நேர்மையான இடதுசாரி அரசியல்வாதிகள் பலரும் அடங்குகிறார்கள். “எதிர்கால ஓய்வூதியத்தை பற்றி அக்கறைப்படாமல் வாழ்க்கையின் சிறந்த பருவத்தில் அரசாங்க சேவையில் இருந்து விலகி அரசியலுக்கு வந்த பலர் இருக்கிறார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்தால் அவர்கள் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும். தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்களும் எதிர்காலத்தில் அதே கஷ்டத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும். “நாடு சுதந்திரமடைந்த நேரத்தில் தனவந்தர்கள், நிலச்சுவாந்தர்கள் மற்றும் சமூகத்தின் உயர்மட்டத்தில் இருந்தவர்களும் அரசியலில் முதன்மை வாய்ந்தவர்களாக விளங்கினார்கள். 1956ஆம் ஆண்டில் இடம்பெற்ற சமூக மாற்றம் அந்த நிலைவரத்தை பெருமளவுக்கு மாற்றியமைத்து சாதாரண மக்களும் அரசியல் வாய்ப்புக்களில் நியாயமான பங்கைப் பெறுவதற்கு வழிசமைத்தது. “நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய உரிமையை இல்லாமல் செய்தால் முறைகேடாக சொத்தைக் குவிக்கும் முதலாளித்துவவாதிகளும் பெரும் வர்த்தகர்கள் மற்றும் ஊழல்வாதிகளும் மீண்டும் அரசியல் களத்தை ஆக்கிரமிக்கும் சூழ்நிலை உருவாகும். சமுதாயத்தின் நலன்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பிறகு மன அமைதியுடன் வாழ்வதற்காக மக்கள் பிரதிநிதிகளுக்கு பல வசதிகளை வழங்குவது பல நாடுகளில் பாரம்பரிய நடைமுறையாக இருக்கிறது” என்று முன்னாள் சபாநாயகர் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பிலான விவாதம் நேர்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பல கேள்விகளை எழுப்புகிறது. பொதுமக்கள் பாதூரமான பொருளாதார இடர்பாட்டுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அதுவும் குறிப்பாக நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட முன்னென்றுமில்லாத பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்பதற்காக விதிக்கப்பட்டிருக்கும் கடுமையான வரிகள் உட்பட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளின் விளைவான நெருக்குதல்களினால் அவலப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நேரத்தில் அரசியல்வாதிகள் வரப்பிரசாதங்களை அனுபவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அரச சேவை ஊழியர்கள் தங்களது 60 வயதுவரை 25 – 30 வருடங்கள் பணியாற்றிய பிறகு பெறுகின்ற ஓய்வூதியங்களை விடவும் பெருமளவுக்கு அதிகமான ஓய்வூதியத்தை அரசியல்வாதிகள் வெறுமனே ஒரு ஐந்து வருடங்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த பிறகு வாழ்நாள் பூராவும் பெறுவதை மக்கள் ஒரு முறைகேடாகவே நோக்குகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருவதற்கு முன்னர் பெரும்பாலான அரசியல்வாதிகளிடம் இருந்த சொத்துக்களையும் பல வருடங்களாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த பிறகு அவர்களிடம் இருக்கும் சொத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அரசியலை அவர்கள் மக்கள் சேவையாக அன்றி செல்வத்தைக் குவிப்பதற்கான ஒரு வழிமுறையாகவே பயன்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். உலகின் பல நாடுகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் வசதிகள் வழங்கப்படுவது நடைமுறையாக இருந்து வருகிறது. எமது அயல் நாடான இந்தியாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் 25 ஆயிரம் ரூபாவை ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள். முதல் ஐந்து வருடங்களுக்கு அப்பால் நாடாளுமன்றத்தில் அவர்கள் அங்கம் வகித்த ஒவ்வொரு வருடத்துக்கும் 2 ஆயிரம் ரூபா மேலதிகமாக வழங்கப்படுகிறது. இந்தியா, இலங்கை போன்று அரசியலிலும் ஆட்சிமுறையிலும் ஊழலும் முறைகேடுகளும் தலைவிரித்தாடிய நாடுகளில் அரசியலைப் பயன்படுத்தி பெரும் தனவந்தர்களாக மாறிய எத்தனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஓய்வூதியங்களை பெறுகிறார்கள் என்பது முக்கியமான ஒரு கேள்வி. அதேவேளை, தென்கிழக்காசியாவில் மிகவும் வறிய நாடுகளில் ஒன்றான கிழக்கு திமோரில் அரச அதிகாரிகள் அனுபவிக்கும் ஆடம்பரமான சலுகைகளுக்கு எதிராக மாணவர்கள் தலைமையில் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிப்பதற்கான சட்டம் கடந்த செப்டெம்பரில் நிறைவேற்றப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு தங்களுக்குள் கருத்தொருமித்துச் செயற்படமுடியாத அரசியல்வாதிகள் தங்களுக்கான வரப்பிரசாதங்களை அதிகரிப்பதற்கு நாடாளுமன்றத்தில் ஒன்றுபட்டு சட்டங்களை நிறைவேற்றிய பல சந்தர்ப்பங்களை நாம் கண்டிருக்கிறோம். தவறான ஆட்சிமுறைக்கும் ஊழலுக்கும் எதிராக இலங்கையின் வரலாறு முன்னென்றும் கண்டிராத 2022 மக்கள் கிளர்ச்சிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்யும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் கரு ஜெயசூரிய போன்ற தலைவர்கள் அரசாங்கத்திடம் முன்வைத்திருக்கும் கோரிக்கையை நாட்டு மக்கள் சாதகமான முறையில் நோக்க முடியாத அளவுக்கு இலங்கையின் அரசியல் வர்க்கம் ஊழல் நிறைந்ததாக இருந்து வந்திருக்கிறது. இதன் விளைவாக தவிர்க்க முடியாத வகையில் நேர்மையான அரசியல்வாதிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. முன்னாள் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் காலஞ்சென்ற சாம் விஜேசிங்க தனது இறுதிக்காலத்தில் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறிய ஒரு கதையை இச்சந்தர்ப்பத்தில் நினைவுமீட்டுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். புதிதாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர்களுக்கு நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக ஏற்பாடுசெய்யப்படும் பயிற்சிப் பட்டறைகளில் விரிவுரை நிகழ்த்துவதற்கு விஜேசிங்க அழைக்கப்படுவது வழமை. ஒரு பயிற்சிப் பட்டறையில் புதிய உறுப்பினர்களிடம் நாடாளுமன்றத்துக்கு வந்த நோக்கம் குறித்து அவர் கேட்டபோது, அவர்கள் எல்லோருமே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே வந்திருப்பதாகக் கூறினார்களாம். அப்போது விஜேசிங்க, ‘இல்லை, நீங்கள் குறுகிய காலத்திறகுள் பணம் குவிப்பதற்காகவே நாடாளுமன்றத்துக்கு வந்திருக்கிறீர்கள்’ என்று நேரடியாகவே கூறிவிட்டாராம். வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/12579
-
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைக்கும் தீர்மானம்
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைக்கும் தீர்மானம் February 5, 2026 யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைத்து அதனை அவரின் சகோதரிக்கு ஒப்படைக்க வேண்டுமென்று வல்வெட்டித்துறை பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த யோசனை வல்வெட்டித்துறை பிரதேச சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் சபைக்கு முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை சபைக்கு முன்வைத்து சபையில் உரையாற்றிய அவர், ‘‘உலகில் அநேகமான தலைவர்களின் வீடுகள் இவ்வாறு புனரமைக்கப்பட்டு அடுத்த சந்ததியினர் பார்வையிடுவதற்காகப் பாதுகாக்கப்படுவதால் சகலரும் பிரபாகரனின் வீடென்று கூறும் அந்த வீட்டை முழுமையாக புனரமைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அந்த வீட்டின் பாதுகாப்பு மற்றும் நடத்துகைக்காக அந்த வீட்டை புனரமைப்புப் பணிகளின் பின்னர் பிரபாகரனின் சகோதரிக்கு வழங்குவது மிகவும் ஏற்புடைய செயற்பாடாக இருக்குமென சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டி முன்வைத்துள்ள அந்த யோசனைக்கு சபையில் ஏகமனதாக விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ilakku.orgதலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமை...யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைத்து அதனை அவரின்
-
அரசிடம் விலை போன பாராளுமன்ற உறுப்பினரும்! ஆபத்தை உணராத மட்டக்களப்பு பண்ணையாளர்களும்!
அரசிடம் விலை போன பாராளுமன்ற உறுப்பினரும்! ஆபத்தை உணராத மட்டக்களப்பு பண்ணையாளர்களும்! February 6, 2026 மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர் கள் தங்களுக்கான மேய்ச்சல் தரை நிலங்களை கோரி பல வருடங்களாகப் போராட்டம் நடாத்தி வருகின்றனர். மறுபுறம் மட்டக்களப்பு எல்லையில் சிங்கள சட்டவிரோத குடியேற்றவாசிகளை குடியமர்த்த எடுக்கப்படும் முயற்சிகள் தற்போது மகாவலி பி வலய அபிவிருத்தித் திட்டம் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் முயற்சிகள் நடை பெற்று வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களை அரசிடம் கொண்டு போய் அடகு வைக்கும் இரகசிய வேலைத் திட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்னெடுத்து வருகிறார். மட்டக்களப்பு எல்லையை ஊடறுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் 70 வீத நிலப்பரப்பையும், பொலனறுவை, அம்பாறை மாவட்டத்தின் 30 வீத நிலப்பரப்பையும் இணைத்து மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட பி வலய திட்டம் தற்போது மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மகாவலி பி வலய அபிவிருத்தி திட்டம் அதன் ஊடாக மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர் களுக்கு ஏற்படப்போகும் பிரச்சினைகள், இந்த திட்டத்திற்கு ஆதரவாக இரகசியமாக காய் நகர்த்தும் பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் சில குழுவினர் பற்றி தெளிவாக ஆராய வேண்டி உள்ளது. அண்மையில் கிபுல் ஓயா மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக 2500 குடும்பங்களை குடியேற்றம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ள நிலையில், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் விவசாய அபிவிருத்தி குடியேற்றம் என்ற பெயரில் சிங்கள மக்களை குடியேற்றி தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்படி கிபுல் ஓயா மகாவலி அபிவிருத்தி திட்டம் ஊடாக முன்னெடுக்கப் பட உள்ளதாக தற்போது வடக்கில் உள்ள மக்கள் போராட்டங்களை நடாத்த தயாராகி வரும் நிலையில். இலங்கை வரலாற்றில் மகாவலி அபிவிருத்தி திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் விவசாய நிலங்களை அபி விருத்தி செய்வதற்கு என்று கூறப்பட்டாலும். மகாவலி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள காணி அதிகாரம், மற்றும் விகிதாசார அடிப்படையிலான விவ சாய குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள். வடகிழக்கு தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான சட்ட ரீதியான அனுமதிகளைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி அபிவிருத்தித் திணைக்களத்தின் பி வலய செயற் பாடுகள், அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட இருக்கும் ஆபத்துகள் குறித்து சிந்திக்காது மயிலத்தமடு பகுதிக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் சென்று பொங்கல் விழா கொண்டாடும் அளவுக்கு மட்டக் களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி அரசுடன் உறவில் இருக்கின்றனர். அரசாங்கத்திடம் தங்களது உரிமைகளை கேட்டு போராடி வரும் பண்ணையாளர்கள், தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை அறியாது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார். என்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை அழைத்து பொங்கல் விழா கொண்டாடி வருகின்றனர். தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடி மகிழும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போராட்டத்தின் வலி வேதனைகள் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் எதற்கானது அவர்கள் பட்ட வேதனைகள் துன்பங்கள் அவர்களுக்கு தெரியாதா? போராடி தமிழர்களின் நிலங்களை பாதுகாக்க வேண்டிய நீங்கள் பொங்கல் விழா கொண்டாடி அரசுடன் உறவு கொண்டாடுவதா? கிபுல் ஓயா சிங்கள வீட்டு திட்டம் முதல் மட்டக் களப்பு மயிலத்தமடு சிங்கள விவசாய குடியேற்ற திட்டம் வரை அனைத்துமே மகாவலி அபிவிருத்தி திணைக் களத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாமல் போகலாம். மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைக் கிராமமான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நிலங்களை அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் மகாவலி அபி விருத்தி திணைக்களத்தின் விவசாய அபிவிருத்திக் கான பகுதிகளாக அடையாளப்படுத்தி அதற்கான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. சுமார் கிட்டத்தட்ட 25000 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட மயிலத்தமடு மாதவனை காட்டுப் பிரதேசத்தில் வெறுமனே 3000 ஏக்கர் பரப்பளவிலான காணிகளை மட்டும் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கீடு செய்து விட்டு மீதி உள்ள காணிகளை அரசாங்கம் என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுகிறது? மயிலத்தமடு மாதவனை மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரத்திற்குள் இருக்கும் வரை அது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சொந்தமான காணிகள் என யாரும் உரிமை கொண்டாட முடியாது. அந்த வகையில் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களுக்கு மூவாயிரம் ஏக்கர் காணிகளை வழங்கும் மகாவலி அபிவிருத்தி திணைக்களம், மீதம் உள்ள காணிகளை விவசாய நிலங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதாவது பொலநறுவை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களை ஒன்றிணைத்து விவசாய குடியேற்ற திட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்ட அபிவிருத்தித் திட்டங்களை தற்போது மேற்கொண்டு வருகிறது. மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் தற்போது மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக, வீதி கள், குளங்கள், கால்வாய்கள் புதிதாக அமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதுடன். மயிலத்தமடு மாதவனை பகுதிகளை பொலநறுவை, அம்பாறை மாவட்டங்களுடன் இணைக்கும் வீதிகளும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. இந் நிலையில் மகாவலி அபிவிருத்தி திணைக் களத்தின் மேற்படி அபிவிருத்தி திட்டங்களுக்கு தடையாக மேய்ச்சல் தரை நில பிரச்சினை காணப்படுவதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை அபகரிக்கப்படப் போகி றது என்பதை மறைத்து அதனை வெறுமனே மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினை என்ற வட்டத்துக்குள் அடையாளப்படுத்தி அவர்களுக்கான பிரச்சினைக்கு வெறும் மூவாயிரம் ஏக்கர் நிலங்களை வழங்கி தீர்வு காண பலர் முயற்சித்து வருகின்றனர். ஆனால் மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் விவசாய குடியேற்ற திட்டம் ஒன்றின் ஊடாக மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் உள்ள காணிகள் எதிர்காலத்தில் பகிர்ந்தளிக்கப்படப் போகிறது. அப்போது அந்த பகுதியில் விவசாய நடவடிக்கைக ளில் ஈடுபடும் குடியேற்ற வாசிகளுக்கும், மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஏற்படும் என்பதோடு நீதிமன்றம் ஊடாக மாடுகளை அடைத்து வளர்க்கும் பண்ணை முறையை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்படலாம்? அதன் பின்னர் மயிலத்தமடு மாதவனை தமிழ் பண்ணையாளர்கள் மெல்ல மெல்ல நாட்டு இன மாடுகளை வளர்ப்பதை கைவிட்டு, பண்ணை மாடுகளை வளர்க்கு திட்டத்திற்கு உள் வாங்கப்படுவார்கள். இதற்காக இந்தியா , பாகிஸ்தான் பகுதிகளில் இருந்து மாடுகளை கொண்டு வந்து இலவசமாக கொடுப் பதற்கும், பண்ணையாளர்களிடம் இருந்து பால் கொள்வனவு செய்வது குறித்தும் ஏற்கனவே இந்திய நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. கடந்த அரசாங்கத்தில் கிழக்கு மாகாண முன் னாள் ஆளுநர் அனுராதா ஜெயம்பத் ஊடாக நடை முறைப் படுத்தப்பட இருந்த திட்டத்தை தற்போதைய அரசு, எமது பாராளுமன்ற உறுப்பினர் சிலரின் ஊடாக முன்னெடுப் பதற்கு தயாராகி வருகிறது. மிக முக்கியமாக மயிலத்தமடு மாதவனை பண் ணையாளர்களை கையாளும் சட்டத்தரணி ஒருவரும், பண்ணையாளர்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ளனர். தேசிய மக்கள் சக்தி அரசுடன் மிக நெருக்கமாக செயற்படும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் இந்திய நிறுவனம், தேசிய மக்கள் சக்தியின் கால்நடை விவசாய அமைச்சின் இணைப்பாளராக நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதி, மற்றும் ஒரு சட்டத்தரணியும், அவருடன் சேர்ந்து மேய்ச்சல் தரை பிரச்சினையில் ஈடுபட்டுவரும் நிறுவனம் ஒன்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. இது குறித்து எதுவுமே அறியாத மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பண்ணையாளர்கள் அவர்களு டன் பொங்கல் விழா நடாத்தி மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்ட எல்லைகளை மட்டும் அல்ல வடகிழக்கில் உள்ள தமிழர் தாயகப் பகுதிகளை அபகரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன தொடங்கி மகிந்த ராஜபக்ச , தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரை தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களை அபகரிப்பதற்கு சட்ட ரீதியான திணைக்களமாக மகாவலி அபிவிருத்தி திணைக் களத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இதற்கான சிறந்த உதாரணமாக கிபுல் ஓயா மகாவலி அபிவிருத்தி திட்டம், மட்டக்களப்பு மயிலத்தமடு மகாவலி அபிவிருத்தி திட்டம் மிகச் சிறந்த உதாரணமாகும். சலுகைகளுக்காக அரசாங்கத்திடம் அடிமையாகிப் போகும் நமது மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் வரை ஆயிரக்கணக்கான மாவீரர்களின் ,இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிர் தியாகங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை பாதுகாக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. https://www.ilakku.org/அரசிடம்-விலை-போன-பாராளும/
-
மட்டக்களப்பில் சடலத்துடன் போராட்டம்.!
மட்டக்களப்பில் சடலத்துடன் போராட்டம்.! Vhg பிப்ரவரி 05, 2026 மட்டக்களப்பு, வந்தாறுமூலைப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கறடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் சமுளையடிப் பொத்தானை எனும் இடத்தில் கடந்த (16) ஆம் திகதி இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று, குறித்த நபர் அவரது வயலில் இருந்தபோது குழுவாகச் சென்ற நபர்கள் சிலர் அவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியும் வெட்டியும் அடித்தும் உள்ளனர். இதில் படுகாயமடைந்தவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 20 நாட்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (04.02.2026)ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இன்று (05.02.2026)ஆம் திகதி உயிரிழந்தவரின் சடலத்தை சுமந்தவாறு அவரது உறவினர்கள் மரணித்தவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அச்சத்தில் உதவாத அயலவர்கள் சம்பவத்தை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவித்து, வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் வந்தாறுமூலை பொது மயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. https://www.battinatham.com/2026/02/blog-post_170.html
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
கப்புக்குள்ளால ஒரு டெலிவரி .. கணக்குத் தெரியாத முட்டாப் புளிப்பு பயலுவ நரிக்கு வாலாட்டியிருக்க வேணும் என்கிற உங்கட பி எச் டி தீசிஸிற்கு சாமானியப்பயல் அடியேனும் எண்டோர்சு பண்ணிக்கிறேனுங்க .. நமக்கும் ஆனா ஆவண்ண்ணா வருமுங்க :) 🫠
-
நிபா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை நடவடிக்கை
நிபா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை நடவடிக்கை 06 Feb, 2026 | 12:55 PM இலங்கையில் நிபா வைரஸ் (NiV) பரவலைக் கண்டறியவும், அதற்குப் பதிலளிக்கவும் சுகாதாரத் துறை தனது தயார்நிலையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இலங்கையின் முதன்மை ஆய்வகமான வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் (Medical Research Institute - MRI) நிபா வைரஸைக் கண்டறியும் திறனை அதீத தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் வைரஸ் தொற்று சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு ஆரம்பத்திலேயே பரிசோதனைகளை மேற்கொண்டு வைரஸ் பாதிப்பை உறுதி செய்ய முடியும். இதற்காக நவீன தொழில்நுட்பக் கருவிகள் ஆய்வகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் வட்டாரம் தெரிவித்துள்ளது. நிபா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு வகை நச்சுயிரி (Zoonotic disease) ஆகும். முக்கியமாக 'பழம் தின்னும் வௌவால்கள்' (Fruit bats) மூலம் பரவுகிறது. அசுத்தமான உணவு மற்றும் பாதிக்கப்பட்ட மனிதர்களுடனான நேரடித் தொடர்பின் மூலமும் இது பரவக்கூடும். இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களில் 40% முதல் 75% வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான தொற்றுநோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது இந்த வைரஸிற்குச் சிகிச்சையளிக்கத் தடுப்பூசிகளோ அல்லது பிரத்யேக மருந்துகளோ இல்லை. தீவிரமான மருத்துவக் கண்காணிப்பு (Supportive care) மட்டுமே ஒரே வழி ஆகும். https://www.virakesari.lk/article/237974
-
’’45 பவுனைவிட நேர்மைதான் முக்கியம்” பத்மாவுக்கு மலேசிய அமைச்சர் பாராட்டு
’’45 பவுனைவிட நேர்மைதான் முக்கியம்” பத்மாவுக்கு மலேசிய அமைச்சர் பாராட்டு சென்னையில் குப்பையில் கிடந்த 45 சவரன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை மலேசிய அரசு கவுரவித்துள்ளது. அவருக்கு தங்க மோதிரத்தையும் பரிசாக அனுப்பியுள்ளது. குப்பையில் கிடந்த 45 பவுன் தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவுக்கு அன்றாடம் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் தற்போது கடல் கடந்தும் அவருக்கு கவுரவம் தேடி வருகிறது. பத்மாவின் செயலால் நெகிழ்ந்து போன மலேசிய அரசின் சட்டத் துறை அமைச்சர் குலசேகரன், தனது உதவியாளர் வடிவுக்கரசியை சென்னை அனுப்பியிருந்தார். அவரிடம் பத்மாவுக்கு அணிவிக்குமாறு கூறி மோதிரத்தையும் பரிசாக கொடுத்துள்ளார். இதையடுத்து சென்னை வந்த வடிவுக்கரசி, நேராக பத்மா இருப்பிடத்தை தேடி வந்து அவருக்கு பாராட்டுகளை தெரிவித்ததுடன் அமைச்சர் கொடுத்த மோதிரத்தையும் அணிவித்தார். மேலும் அமைச்சருக்கு வீடியோ கால் போட்டு பத்மாவை பேச வைத்தார். அப்போது பத்மாவுக்கு அமைச்சர் குலசேகரன் பாராட்டுகளை தெரிவித்தார். இதனால் பத்மா நெகிழ்ந்து போனார். திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 48 வயது பத்மா, தூய்மைப் பணியாளர். கடந்த ஜனவரி 11 அன்று, தி.நகர் வண்டிக்காரன் பகுதியில் பணியிலிருந்தபோது, சாலையில் கிடந்த ஒரு பையைக் கண்டெடுத்தார். அதில் 45 பவுன் தங்க நகைகள் இருந்தன. உடனடியாக, அந்த நகைகளை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், அவை நங்கநல்லூரைச் சேர்ந்த 46 வயது பரமேஷுக்குச் சொந்தமானது எனத் தெரியவந்து, உரியவரிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன. இந்நேர்மைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். தொடர்ந்து, சென்னை மத்திய கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம், பத்மாவின் புகைப்படத்துடன் கூடிய 'மை ஸ்டாம்ப்' அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது. இச்செயல் பல தரப்பிலும் பாராட்டுக்களைப் பெற்றது. இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் பத்மாவை அழைத்து "முன்களப் பணியாளரான பத்மாவின் செயலை அங்கீகரித்து, அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி அணிவித்து கௌரவித்தார். அந்த வகையில் தற்போது நடிகர் பார்த்திபனும், பத்மாவை பாராட்டியுள்ளார். பத்மாவுக்கு காலணியை அணிவித்த பார்த்திபன், அவருக்கு பாத பூஜை செய்து கௌரவப்படுத்தினார். பாதணியை பார்த்திபன் கீழே வைத்து அணிய சொன்ன போது பத்மா, நெகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும். வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார். என்னை Chief Guest-ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு, நான் வெறும் Guest-ஆகவும் Chief-ஆக திருமதி பத்மாவை அழைத்துச் சென்று, பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி, 'உலக அழகி' என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன்... இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்வாறு பத்மாவுக்கு நாளுக்கு நாள் பாராட்டுகளும் கௌரவங்களும் குவிந்து வரும் நிலையில் மலேசியாவில் இருந்தும் பாராட்டு மழை பெய்துள்ளது. மலேசிய அமைச்சர் குலசேகரன் பத்மாவுக்கு தங்க மோதிரம் அணிவித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/45-பவுனைவிட-நேர்மைதான்-முக்கியம்-பத்மாவுக்கு-மலேசிய-அமைச்சர்-பாராட்டு/175-372088
-
🚨யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் – 20 கிலோ மீட்டர் துரத்தி சென்று கைது செய்த காவல்துறையினா்
🚨யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் – 20 கிலோ மீட்டர் துரத்தி சென்று கைது செய்த காவல்துறையினா் adminFebruary 6, 2026 யாழ்ப்பாணத்தில் காவல்துறையினாின் கட்டளையை மீறி 20 கிலோமீட்டர் தூரம் துரத்திச் செல்லப்பட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரைகாவல்துறையினர் சினிமா பாணியில் துரத்திச் சென்று பிடித்துள்ளனர். பருத்தித்துறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை காவல்துறையினா் நிறுத்தச் சொன்னபோது, சாரதி வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாகச் செலுத்தி தப்பியோடியுள்ளார். சுமார் 20 கிலோமீட்டர் தூரம் காவல்துறையினா் அந்த வாகனத்தைத் துரத்திச் சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் வாகனத்தை வீதியில் நிறுத்திவிட்டு சாரதி ஓட முயற்சித்தபோது காவல்துறையினா் அவரை மடக்கிப் பிடித்தனர். கைது செய்யப்பட்ட நபரை விசாரித்தபோது, அவர் ஒரு முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே சட்டவிரோத செயல்களுக்காக அவர் காவல்துறை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்பதும் அம்பலமானது. கைது செய்யப்பட்ட நபர், தனக்கு காவல்துறை திணைக்களத்தில் இருந்த பழைய தொடர்புகள் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி நீண்டகாலமாக சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது அவர் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://globaltamilnews.net/2026/228485/
-
கருத்து படங்கள்
- யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!
யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்! யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவிலைச் சூழ உள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் இன் ஏற்பாட்டில் சுதுமலை அம்மன் ஆலய வளாகமும் அதனைச் சூழ உள்ள பிரதேசமும் புகையிலை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மானிப்பாய் பரிஸ் அரிமா கழகத்தினர் அனுசரணை வழங்கியிருந்தார்கள். இதில் கிராம சேவையாளர் சுதுமலை சிந்மய பாரதி வித்தியாசாலை மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். https://athavannews.com/2026/1463439- எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்! நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்கள் (நீக்குதல்) சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணாக அமையவில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சட்டமூலத்துக்கு எதிரான சட்டப்பூர்வ சவாலைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் பிரிவு 121(1) இன் படி, இந்தத் உயர் தீர்ப்பு சபாநாயகருக்குத் தெரிவிக்கப்பட்டது. இன்று (6) நாடாளுமன்றத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர், சட்டமூலத்தின் எந்த விதிகளும் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை என்பதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இது அதை நிறைவேற்றுவதற்கான வழியைத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டமூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனவரியில் வெளியிடப்பட்டது. இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு அனுமதிக்கும் தற்போதைய சட்ட விதிகளை நீக்குவதற்கு இந்த சட்டமூலம் வழிவகுக்கிறது. நீண்டகாலமாக பொதுமக்களின் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியிருந்த இந்த சலுகையை ஒழிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய இந்த சட்டமூலம் பரிந்துரைக்கிறது. இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், தற்போது ஓய்வூதியம் பெற்றுவரும் முன்னாள் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளும் நிறுத்தப்படும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய, அரசாங்கத்தின் செலவீனங்களைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1463455- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
நான் நினைக்கிறேன் சிங்களம் தமிழ் மக்களின் மீதுள்ள அவநம்பிக்கையினை களைந்து (தமிழ் தேசியம் தொடர்பான) ஒரே இலங்கைக்குள் சமாதானமாக செல்ல முயற்சிப்பதற்கான (அதிகார பகிர்வு) நல்லெண்ண சமிஞ்சையாக இருக்கும். சிங்கள மக்களின் மனங்களில் உருவாக்கப்படுகின்ற சிந்தனைகளின் பின்னணியில் துட்டகைமுனு கதைகள் அவர்களது எண்ணத்தில் தமிழர்கள் ஒரு முடிக்கப்படாத பிரச்சினையாக சிறுவயதிலிருந்து உருவகிக்கப்படுகின்றது. அதேநேரம் தமிழ் மக்களிடமும் தமிழ்த்தேசியம் அவர்களின் வரலாற்று வழியாக வரும் போது இரண்டும் எதிரும் புதிருமாக ஒரு தீர்வை எட்ட முடியாது, அதற்காக இரண்டு தரப்பும் இறங்கி வரவேண்டும். தற்போது தமிழ் தரப்பிடம் ட்ரம்ப் கூறுவது போல சீட்டு இல்லை அதனால் இறங்கி வந்து விட்டார்கள் ஆனால் சிங்களத்தரப்பு இறங்கிவராது அப்படி இறங்கிவரவேண்டுமானால் இலங்கை ஒரு பொருளாதார நெருக்கடி போன்ற அனைத்துலக சமூகத்தில் தங்கிநிற்கின்ற நிலை எதிர்காலத்தில் உருவாகவேண்டும் அதுவே தமிழ் மக்களிற்கான Window of opportunity.- சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது! யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் வழி மறித்த போது, பொலிசாரின் கட்டளையை மீறி சாரதி டிப்பர் வாகனத்தை தொடர்ந்து செலுத்தியுள்ளார். அதனை அடுத்து பொலிஸார் டிப்பர் வாகனத்தை சுமார் 20 கிலோ மீற்றர் தூரம் துரத்தி சென்ற நிலையில் , சாரதி டிப்பர் வாகனத்தை மணலுடன் வீதியில் நிறுத்தி விட்டு , வாகனத்தில் இருந்து இறங்கி ஓடியுள்ளார். தப்பியோடிய சாரதியை பொலிஸார் துரத்தி சென்று கைது செய்தனர். கைது செய்த சாரதியை பொலிஸார் விசாரித்த வேளை , குறித்த நபர் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் எனவும், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றத்தில் பொலிஸ் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது. இதேவேளை, மேலதிக விசாரணைகளில் , பொலிஸ் உத்தியோகத்தில் இருந்த வேளை பொலிசருடன் இருந்த நெருக்கத்தினை பயன்படுத்தி , சட்டவிரோத மணல் கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமையும் தெரியவந்துள்ளது. குறித்த நபரை தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2026/1463445- அமெரிக்கா – ஈரான், இன்று ஓமானில் உயர்மட்ட பேச்சுவார்தை!
அமெரிக்கா – ஈரான், இன்று ஓமானில் உயர்மட்ட பேச்சுவார்தை! பல மாதங்களாக அதிகரித்து வரும் பதட்டங்கள், மாறிவரும் இராஜதந்திர சமிக்ஞைகளுக்குப் பின்னர் அமெரிக்காவும் ஈரானும் இன்று (06) ஓமான் தலைநகர் மஸ்கட்டில் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன. சர்வதேச அளவில் தீவிரமான கண்காணிப்பை ஈர்த்துள்ள இந்தப் பேச்சுவார்த்தைகள், அண்மைய இராணுவ மோதல்கள், ஈரான் போராட்டக்காரர்கள் மீதான தெஹ்ரானின் கொடிய ஒடுக்குமுறை மற்றும் மத்திய கிழக்கில் ஒரு பரந்த மோதல் வெடிக்கும் என்ற தொடர்ச்சியான அச்சங்கள் ஆகியவற்றின் பின்னணியில் வருகின்றன. இரு தரப்பினரும் மோதலுக்கும் இராஜதந்திரத்திற்கும் இடையில் ஊசலாடிய ஒரு சரித்திரத்தின் அண்மைய அத்தியாயமாக இந்தப் பேச்சுவார்த்தைகள் அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஓமான் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த பேச்சுவார்தையில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி மற்றும் அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பங்கேற்பார்கள். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மூத்த ஆலோசகர் ஜாரெட் குஷ்னரும் இந்தப் பேச்சுவாத்தையில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவும் ஈரானும் ஆரம்பத்தில் துருக்கியின் இஸ்தான்புல்லில் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டன. எனினும், பின்னர் பேச்சுவார்த்தைகளை ஓமானுக்கு நகர்த்தவும், அணுசக்தி பிரச்சினைகளுக்கு நிகழ்ச்சி நிரலை சுருக்கவும் ஈரான் வலியுறுத்தியது. 1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் ஈரானின் இறையாட்சி இப்போது அதன் பலவீனமான கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ போன்ற அதிகாரிகள் நம்புகின்றனர். கடந்த மாதம் நாடு தழுவிய போராட்டங்கள் 86 வயதான உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சிக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தன. கமேனியின் படைகள் இரத்தக்களரியான ஒடுக்குமுறையுடன் பதிலளித்தன. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டை குறிவைத்து புதிய இராணுவ அச்சுறுத்தல்களை முன்வைத்தார். 1980 முதல் அதிகாரப்பூர்வ இராஜதந்திர உறவுகள் இல்லாத இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திரத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈரானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பது இது முதல் முறை அல்ல. ஜூன் மாதம், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதிக்க அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் ஓமானி தலைநகரில் கூடினர். ஆனால் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதால் இந்த செயல்முறை ஸ்தம்பித்தது. பின்னர் அமெரிக்கா சிறிது காலம் போரில் இணைந்தது, பல ஈரானிய அணுசக்தி தளங்களை குண்டுவீசித் தாக்கியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1463433- பிட்கொயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி!
பிட்கொயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிரிப்டோகரன்சிக்கு (டிஜிட்டல் நாணயம்) தனிப்பட்ட மற்றும் பொது ஆதரவை அளித்த போதிலும், பிட்கொயினின் விலை 15 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு பிட்கொயினின் பெறுமதி இப்போது 66,000 அமெரிக்க டொலர்களாக (£48,700) உள்ளது. இது 2024 ஒக்டோபருக்குப் பின்னர் அதன் மிகக் குறைந்த அளவாகும். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து முன்னணி டிஜிட்டல் நாணயத்தின் விலையானது 24% குறைந்துள்ளது. பல மாதங்களாக உயர்ந்து வந்த பிட்கொயின் விலைகளைத் தொடர்ந்து இந்த சரிவு ஏற்பட்டது. இதன் விளைவாக 2025 ஒக்டோபரில் கிரிப்டோகரன்சி எப்போதும் இல்லாத அளவுக்கு 122,200 அமெரிக்க டொலர்களை எட்டியிருந்தது. இந்தத் துறையில் ட்ரம்பின் ஈடுபாடும், கிரிப்டோகரன்சிகளுக்கு அவர் அளித்த வெளிப்படையான ஆதரவும், இந்தத் துறையில் பரிமாற்றத்தை எளிதாக்குவதாக அளித்த வாக்குறுதிகளும் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தின. 2025 ஜனவரியில் வெள்ளை மாளிகையில் மீண்டும் நுழைந்த ட்ரம்ப் எடுத்த முதல் நடவடிக்கைகளில், அமெரிக்காவை ” உலகின் கிரிப்டோ தலைநகராக” மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிர்வாக உத்தரவும் அடங்கும். இந்த நிலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட சரிவுடன், கடந்த 12 மாதங்களில் பிட்கொயின் விலைகள் 32% குறைந்துள்ளன. மேலும் 2024 மற்றும் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காணப்பட்ட விலைகளை நோக்கிச் செல்கின்றன. பிட்கொயின் என்பது உலகின் முதல் மற்றும் மிகவும் பிரபலமான டிஜிட்டல் நாணயமாகும். இது 2009-ஆம் ஆண்டு சதோஷி நாகமோட்டோ (Satoshi Nakamoto) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வங்கி, அரசு அல்லது மத்திய அமைப்புகள் இல்லாமல், ப்ளாக்செயின் (Blockchain) தொழில்நுட்பத்தின் மூலம் இயங்குகிறது. https://athavannews.com/2026/1463427- மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது ஆர்சிபி - ஜெமிமாவின் கனவைத் தகர்த்த ஸ்மிரிதி மந்தனா
மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது ஆர்சிபி - ஜெமிமாவின் கனவைத் தகர்த்த ஸ்மிரிதி மந்தனா பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபி அணிக்கு இது இரண்டாவது கோப்பை ஆகும். 3 மணி நேரங்களுக்கு முன்னர் 2026 மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL) இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. குஜராத் மாநிலம், வதோதராவில் நேற்று (பிப்ரவரி 5) நடைபெற்ற இறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, 204 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற இலக்கை ஆர்சிபி அணிக்கு நிர்ணயித்திருந்தது. ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் 87 ரன்களும், ஜார்ஜியா வோல்லின் 79 ரன்களும் அந்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது. குறிப்பாக ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் 92 பந்துகளில் 165 ரன்கள் குவித்தனர். இது மகளிர் பிரீமியர் லீக்கின் நான்காவது சீசன். டெல்லி கேபிடல்ஸ் அணி நான்கு முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, ஆனால் சாம்பியன் பட்டத்தை வெல்லத் தவறிவிட்டது. மும்பை இந்தியன்ஸ் மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் மற்றும் மூன்றாவது சீசன்களை வென்றது, அதே சமயம் ஆர்சிபி இரண்டாவது மற்றும் நான்காவது சீசன்களை வென்றுள்ளது. ஐபிஎல் கோப்பை உட்பட, கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்றாவது கோப்பையை ஆர்சிபி அணி வென்றுள்ளது. டாஸ் வென்ற ஆர்சிபி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 57 ரன்கள் எடுத்தார் வதோதராவில் உள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், ஆர்சிபி டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தேர்வு செய்தது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் லிசெல் லீ மற்றும் ஷாஃபாலி வெர்மா தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 49 ரன்களை சேர்த்தது. ஐந்தாவது ஓவரில் ஷாஃபாலி வெர்மா, அருந்ததி ரெட்டி பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி வந்த லிசெல் லீ, 7வது ஓவரில் ஆட்டமிழந்தார். 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் அவர் 30 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். அதன் பின்னர், டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ்- லாரா வால்வார்ட் ஜோடி அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 37 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15வது ஓவரில் ஆட்டமிழந்தார். லாரா வால்வார்ட் 25 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். சினெல் ஹென்றி 15 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை எடுத்தது. 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கியது ஆர்சிபி. ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் ஜோடி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் 92 பந்துகளில் 165 ரன்கள் குவித்தனர். ஆர்சிபியின் தொடக்க வீராங்கனைகளாக கிரேஸ் ஹாரிஸ் மற்றும் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். 2வது ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து கிரேஸ் ஆட்டமிழக்க ஆர்சிபி அணிக்கு அதுவொரு அதிர்ச்சியான தொடக்கமாகவே இருந்தது. அடுத்து ஜார்ஜியா வோல் களமிறங்கினர். இறுதிப்போட்டி என்பதை கவனத்தில் கொண்டு, ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் ஜோடி மிகச்சிறப்பாகவே விளையாடியது. 2வது ஓவரில் 9 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இருந்த ஆர்சிபி அணி, 2வது விக்கெட்டை 16வது ஓவரில் தான் இழந்தது. ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் 92 பந்துகளில் 165 ரன்கள் குவித்தனர். 54 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்த ஜார்ஜியா வோல், 16வது ஓவரில் மின்னு மணி பந்தில் ஆட்டமிழந்தார். 41 பந்துகளில், 12 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் குவித்த ஸ்மிருதி மந்தனா, 18வது ஓவரில் சினெல் ஹென்றி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆர்சிபி அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு 'பிளேயர் ஆப் தி மேட்ச்' விருது வழங்கப்பட்டது. மகளிர் பிரீமியர் லீக்கின் நான்கு சீசன்களிலும், டெல்லி கேபிடல்ஸ் அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது, இருப்பினும் அந்த அணி இதுவரை கோப்பையை வெல்லவில்லை. டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் நெருங்கிய தோழிகளாகக் கருதப்படுகிறார்கள், இருவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள். இருவரும் தங்கள் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடினார்கள், ஆனால் தனது அணியை முதல் முறையாக சாம்பியனாக்க வேண்டுமென்ற ஜெமிமாவின் கனவை அவரது தோழி ஸ்மிருதி மந்தனா தகர்த்துவிட்டார். வெற்றிக்குப் பிறகு ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, "இறுதிப் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்கிறோம் எனும்போது, நிச்சயமாக ஒரு அழுத்தத்தை உணர்ந்தோம். பேட்டிங் செய்வதற்கு ஏற்ற பிட்ச் இது. எங்களது அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆர்சிபி ரசிகர்கள் தான் எங்களோடு எப்போதும் உடன் நிற்கிறார்கள், இதுபோல ஒரு ரசிகர் கூட்டத்தை பார்க்க முடியாது. இந்த வெற்றி அவர்களுக்கானது" என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg7ylx0ymyxoஏராளன் started following ஈரானிலிருந்து உடனடியாக வெளியேற அமெரிக்கப் பிரஜைகளுக்கு வெள்ளை மாளிகை அவசர எச்சரிக்கை , மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது ஆர்சிபி - ஜெமிமாவின் கனவைத் தகர்த்த ஸ்மிரிதி மந்தனா , அநுரவின் ஆட்சியிலும் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றமில்லை; மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் ; 2024-25இல் பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரயோகம் அதிகரித்ததாகவும் சுட்டிக்காட்டு and 1 other- அநுரவின் ஆட்சியிலும் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றமில்லை; மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் ; 2024-25இல் பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரயோகம் அதிகரித்ததாகவும் சுட்டிக்காட்டு
அநுரவின் ஆட்சியிலும் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றமில்லை; மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம்; 2024-25இல் பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரயோகம் அதிகரித்ததாகவும் சுட்டிக்காட்டு 05 Feb, 2026 | 05:45 PM (நா.தனுஜா) பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், பொதுச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சமத்துவமின்மைக்குத் தீர்வுகாண்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் குறிப்பிடத்தக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னேற்றமே எட்டப்பட்டுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளினதும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கையில் இலங்கை தொடர்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் பதிவான தன்னிச்சையான தடுத்துவைப்புகள், பொலிஸ்காவலின் கீழான சித்திரவதைகள் மற்றும் உயிரிழப்புக்கள் என்பன பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், கடந்தகால மீறல்களுக்குக் காரணமாக அமைந்த கட்டமைப்பு ரீதியான நிலைவரங்கள் இன்னமும் தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்புத்தரப்பினரின் தொடர் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்துவருவதுடன், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலும் அரச அதிகாரிகளினாலேயே காணி உரிமைகள் மற்றும் மத உரிமைகள் என்பன மீறப்படுகின்றன. அதேவேளை 1983 - 2009 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆயுதப்போராட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட மிகமோசமான போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு அரசாங்கங்கள் தவறியிருக்கின்றன. தேசிய நல்லிணக்கம் சார்ந்த வாக்குறுதிகளின் இடையே, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் மிகச்சொற்ப விடயங்களையே செய்திருக்கிறது. அதேபோன்று சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை ஸ்தாபித்தல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல் மற்றும் நிகழ்நிலைக்காப்புச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் என்பன உள்ளடங்கலாக சட்ட மறுசீரமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அதுமாத்திரமன்றி இலங்கையின் குற்றவியல் தண்டனைச்சட்டக்கோவையின் பிரகாரம் ஓரினச்சேர்க்கை மற்றும் அதுசார்ந்த நடவடிக்கைகள் குற்றமாக்கப்பட்டுள்ளன. உலக உணவுத்திட்டத்தின் தரவுகளின் பிரகாரம் மூன்றில் ஒன்று பங்கு சிறுவர்கள் மந்தபோசணையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும் எண்ணிக்கையான குடும்பங்கள் கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட தமது உரிமைகளை அனுபவிப்பதற்கு அவசியமான பொருட்கள், சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றன. அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தில் சமூகப்பாதுகாப்பு செலவினங்கள் மிகக்குறைந்த மட்டத்திலேயே பேணப்படுவதனால், பல்வேறு உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துக்கு அமைவாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகள், ஏற்கனவே நலிவுற்ற நிலையில் இருக்கும் மக்கள் மீதான நிதியியல் மீட்சி சார்ந்த அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இருப்பினும் ஊழலை முறியடிப்பதில் ஓரளவு முன்னேற்றம் அடையப்பட்டிருக்கிறது. குறிப்பாக அரச நிதியின் முறைகேடான பயன்பாட்டுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அடுத்ததாக இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற 26 வருடகால யுத்தத்தில் சுமார் 100,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இக்காலப்பகுதியில் அரச படையினர் சித்திரவதைகள், சட்டவிரோதப் படுகொலைகள், பாலியல் வன்புணர்வு, பாலியல் வன்முறைகள், வலிந்து காணாமலாக்கல் மற்றும் பொதுமக்கள் மீதான ஒடுக்குமுறைத் தாக்குதல்கள் உள்ளிட்ட மிகமோசமான மீறல்களில் ஈடுபட்டனர். அதேபோன்று தற்கொலைக்குண்டுத்தாக்குதல், பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் சிறுவர் போராளிகள் உள்ளிட்ட மீறல்களில் விடுதலைப்புலிகள் இயக்கமும் ஈடுபட்டது. இம்மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான நம்பத்தகுந்த உள்ளகப்பொறிமுறைகள் இன்மை மற்றும் பாதிக்கப்பட்ட சில சமூகங்களுக்கு எதிராகத் தற்போதும் தொடரும் ஒடுக்குமுறைகள் என்பவற்றின் காரணமாக இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை மேலும் இரு வருடங்களுக்குத் தொடர்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை செயற்பாட்டாளர்கள் பலரும் வரவேற்றிருந்தனர். இந்தக் குற்றங்களை புதியதொரு உள்ளகப்பொறிமுறையின் ஊடாக அணுகுவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அதுபற்றிய விபரங்கள் எதனையும் அறிவிக்கவில்லை. அதேவேளை மறுபுறம் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளகப்பொறிமுறைகள் தொடர்பில் தமது நம்பிக்கையீனத்தை அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னைய அரசாங்கங்களினால் குறைந்தபட்சம் சுமார் 10 ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்ட போதிலும், அவை பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படுவதற்கோ அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதற்கோ வழிவகுக்கவில்லை. அதுமாத்திரமன்றி 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுக்கு அரசு உடந்தையாக செயற்பட்டதாக சில தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆதரித்திருப்பினும், அத்தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் இன்னமும் நம்பத்தகுந்த விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு வலுவடைந்தமையானது மீறல்கள் தொடர்வதற்கு இடமளித்தது. அத்தோடு மனிதப்புதைகுழிகள் தொடர்பில் செயற்திறன்மிக்க விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான போதிய தொழில்நுட்ப வசதிகள் அரசாங்கத்திடம் இல்லை. அதேவேளை கடந்த காலங்களில் நிலவிய அரசியல் தன்முனைப்பின்மையானது இதுபற்றிய விசாரணைகள் மழுங்கடிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. அதன் அர்த்தம் எந்தவொரு எலும்புக்கூடும் யாருடையவை எனக் கண்டறியப்படவோ அல்லது ஏனைய ஆதாரங்கள் முறையாகப் பேணப்படவோ இல்லை. மேலும் நீண்டகால யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீதிக்காகப் போராடும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை பொலிஸார் மற்றும் புலனாய்வுப்பிரிவினர் தொடர்ச்சியாகக் கண்காணித்தும், அவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்தும் வருகின்றனர். அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த காலங்களில் அச்சட்டத்தின் பிரயோகம் வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 2024 ஆம் ஆண்டு 38 வழக்குகளிலும், 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 49 வழக்குகளிலும் பொலிஸாரால் பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/237930- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
கருத்து கசக்கிறதா? அதற்கு கருத்தியல் ரீதியான பதில் இல்லையா? உடனே துரோகி என்று முத்திரை குத்து, அல்லது இழிவான இனக்குழுமத்தை சேர்ந்தவர், என்று வசைபாடு. அதுவே எமது அரசியல். அதைச் செய்யவே நாம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம்.- புத்தளம் - மன்னார் வீதியில் அணை கட்டும் திட்டம் மீது எச்சரிக்கை – ரிஷாத் பதியுதீன்
புத்தளம்-மன்னார் வீதியில் அணை கட்டும் திட்டம் மீது எச்சரிக்கை – ரிஷாத் பதியுதீன் 05 Feb, 2026 | 05:32 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) புத்தளம் -மன்னார் வீதியில் பாரிய அணை ஒன்றை கட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. அது நிறைவேற்றப்பட்டால் அந்த பாதை நிரந்தரமாக மூடப்படும் அபாயம் இருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்த தவறான தீர்மானத்தை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அது நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்திவிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், புத்தளம் -மன்னார் வீதி 100 வருடம் பழைமைவாய்ந்த வீதி அதிகாரசபைக்கு சொந்தமானதாகும். நான் அமைச்சராக இருந்தபோது அந்த பாதையை மக்கள் பாவனைக்காக திறந்துவைத்தேன். என்றாலும் காலப்போக்கில் இந்த பகுதியில் இருக்கும் ஒருசில சிங்கள மக்கள் அந்த பாதையை மூடிவிடுமாறு தெரிவித்து வழக்கு தொடுத்தார்கள். அந்த வழக்கில் பிரதிவாதியாக வன ஜீவராசிகள், வன இலாகா திணைக்களம், விடயத்துக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ் மற்றும் அந்த பிரதேச அமைச்சர் என்றவகையில் எனது பெயரும் தெரிவிக்கப்பட்டிருந்தது.நாங்கள் எல்லோரும் அந்த வழக்குக்கு முகம்கொடுத்துவந்தாேம். மஹிந்த ராஜபக்ஷ் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்த காலத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அந்த பாதை பொது மக்கள் பயன்படுத்திய பாதை அதற்கு இடமளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே அன்று வன ஜீவராசிகள், வன இலாகா திணைக்களம், வீதி அதிகாரசபை இருந்தன. கோட்டாபய ராஜபக்ஷ்வின் காலத்தில் அந்த பாதையில் பயணிக்க முடியாமல் இருந்ததால் அந்த பாதை மூடப்பட்டது. இந்த பாதை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பயணிக்க 100 கிலோ மீட்டர் குறைவாகும். மன்னாரில் இருந்து புத்தளத்துக்கு வருகின்றபோது 100 கிலோ மீட்டர் குறைவு. இவ்வாறான நிலையில் இந்த பாதையை மூடிவிடுவதற்கு எந்த ஜனாதிபதிகளின் காலத்திலும் இணக்கம் தெரிவிக்காத நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இருக்கும் வன ஜீவராசிகள், வன இலாகா திணைக்களம் நீதிமன்றத்துக்கு சென்று, வழக்கு தொடுத்த துராேகிகளுடன் இணைந்து, நாங்கள் இந்த வழக்குகளுடன் உடன்படுகிறோம். அதனால் இந்த வழக்கை விடுவியுங்கள் என நீதிமன்றில் சென்று தெரிவித்திருக்கிறது. இது நியாயமான நடவடிக்கையல்ல. முஸ்லிம் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. இனவாதமில்லாத அரசாங்கம் என்றே நாங்கள் தெரிவித்து வருகிறோம். அப்படிப்பட்ட அரசாங்கம் இந்த பாதையை நிரந்தமாக மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றிருந்தால், அந்த துராேகத்தனத்தை எங்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அநுரகுமார திஸாநாயக்க அன்று மன்னாருக்கு வந்து, தான் ஜனாதிபதியாக தெரிவானால் மன்னார் புத்தளம் பாதையை திறந்துவிடுவதாக தெரிவித்திருந்தார். இது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமான பாதையல்ல. இந்த நாட்டுக்கான பாதை. விலங்குகளை பாதுகாப்பதாக தெரிவித்து மக்களை கஷ்டப்படுத்துகின்ற ஒரு முடிவை அரசாங்கம் எடுக்கக்கூடாது. நாங்கள் தனிநாடு கேட்கவில்லை. எங்களது மண்ணுக்கு செல்வதற்கான பாதையை திறந்து தருமாறே கேட்கிறேம். அரசாங்கத்தில் தமிழ் பேசும் உறுப்பினர்கள் இரு்கிறீர்கள். தமிழ், முஸ்லிம் மக்களை நாங்கள் பார்ப்போம் என்று சொல்கிறீர்கள். ஆனால் வடக்கு கிழக்கு தமிழ், சிங்கள முஸ்லிம் மக்களுக்கான வரப்பிரசாதமே இந்த பாதை. அதனால் இந்த பாதைய மூடிவிட எடுத்த முடிவை அரசாங்கம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/237920- இந்திய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதல் பெய்லி பாலம் திறப்பு
இந்தியாவிலிருந்து கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்தன 10 பெய்லி பாலத்தொகுதிகள் Published By: Digital Desk 3 05 Feb, 2026 | 06:36 PM 'தித்வா' சூறாவளியினால் வீதிப்போக்குவரத்து சேவைக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை அடுத்து, அதனை சீரமைக்கும் நோக்கில் இந்தியா வழங்கிவரும் உதவிகளின் நீட்சியாக, அடுத்தகட்டமாக அனுப்பிவைக்கப்பட்ட 10 பெய்லி பாலத்தொகுதிகள் இன்று வியாழக்கிழமை (5) கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்தன. அவை இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டேவினால் துறைமுக மற்றும் விமானசேவைகள் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்குவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/237935- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
டி20 உலகக் கோப்பை பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு அமெரிக்க வீரர்கள் பயத்தை ஏற்படுத்தியுள்ளனர். மேட் ஹென்றி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார், அதில் இறுதி ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் அடங்கும். ESPNcricinfo ஊழியர்கள் பிப்ரவரி 6, 2026, காலை 6:22 • 10 மணி நேரத்திற்கு முன்பு பயிற்சி ஆட்டத்தில் மேட் ஹென்றி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் • BCCI நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் சைதேஜா முக்கமல்லா , கேப்டன் மோனாங்க் படேல் , மிலிந்த் குமார் மற்றும் சுபம் ரஞ்சனே தலைமையில் , அமெரிக்கா நியூசிலாந்துக்கு பயத்தை ஏற்படுத்தியது . 209 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்த அமெரிக்கா, 200 ரன்கள் வரை எட்டியது, ஆனால் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டிம் சீஃபர்ட் , க்ளென் பிலிப்ஸ் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பிறகு, மேட் ஹென்றி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அமெரிக்காவின் துரத்தலைத் தகர்த்தார். நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய வைத்தபோது, சீஃபர்ட் 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் முன்னிலை வகித்தார். டெவன் கான்வேயை 16 ரன்களுக்கு சவுரப் நேத்ராவல்கர் வெளியேற்றினார், மார்க் சாப்மேனை 17 ரன்களுக்கு முகமது மொஹ்சின் வெளியேற்றினார், பின்னர் பிலிப்ஸ் 18 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 40 ரன்கள் எடுத்தார். மிட்செல் 21 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார், மிட்செல் சாண்ட்னர் மற்றும் ஜேம்ஸ் நீஷாம் ஆகியோரின் கேமியோக்கள் நியூசிலாந்தை 200 ரன்களைக் கடந்தன. துரத்தலின் முதல் பந்திலேயே ஹென்றி ரிட்டர்ன் கேட்சை எடுத்ததால், தொடக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரீஸ் கௌஸிடம் டக் அவுட்டாகி அமெரிக்கா ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்தது. முக்கமல்லா தொடர்ந்து விளையாடிய நிலையில், 3வது இடத்தில் இருந்த ஷயான் ஜஹாங்கிர் 5 பந்தில் 2 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் முக்கமல்லா மோனாங்கில் ஒரு பார்ட்னர் ஆனார். இஷ் சோதி மோனாங்கின் பந்துவீச்சை நிறுத்தி, தொடர்ச்சியான ஓவர்களில் முக்கமல்லா 50 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து வெளியேறுவதற்கு முன்பு அவர்கள் மூன்றாவது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தனர். மிலிந்த் குமார் விரைவில் 26 பந்துகளில் 43 ரன்களையும், ரஞ்சனே 23 பந்துகளில் 41 ரன்களையும் எடுத்தனர், ஆனால் ஹென்றி இருவரையும் கேட்ச் கொடுத்து அமெரிக்கா அணியை கடைசி இரண்டு பந்துகளில் 27 ரன்களாகவும், கடைசி ஓவரில் 12 ரன்களாகவும் குறைத்தார். ஆனால் ஹென்றியின் இரட்டை விக்கெட் ஓவரில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நியூசிலாந்து அணி வெற்றியை உறுதி செய்தார். பிப்ரவரி 7 ஆம் தேதி மும்பையில் அமெரிக்கா தனது தொடக்க ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது. நியூசிலாந்து அணி அடுத்த நாள் சென்னையில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது https://www.espncricinfo.com/series/icc-men-s-t20-world-cup-warm-up-matches-2025-26-1521126/new-zealand-vs-united-states-of-america-warm-up-1521148/match-report- ஈரானிலிருந்து உடனடியாக வெளியேற அமெரிக்கப் பிரஜைகளுக்கு வெள்ளை மாளிகை அவசர எச்சரிக்கை
ஈரானிலிருந்து உடனடியாக வெளியேற அமெரிக்கப் பிரஜைகளுக்கு வெள்ளை மாளிகை அவசர எச்சரிக்கை Published By: Digital Desk 3 06 Feb, 2026 | 10:14 AM ஈரானில் நிலவி வரும் அதிகரித்த பாதுகாப்பு அபாயங்கள், போராட்டங்கள் மற்றும் போக்குவரத்து தடைகள் காரணமாக, அங்குள்ள அமெரிக்கப் பிரஜைகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெள்ளை மாளிகை மற்றும் ஈரானுக்கான மெய்நிகர் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்க அரசு உதவியை நம்பாமல், தங்களுக்கென தனிப்பட்ட பாதுகாப்பான வெளியேறும் திட்டத்தை உடனடியாக தயார் செய்து, ஈரானை விட்டு வெளியேற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிலிருந்து துருக்கி மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகள் ஊடாக தரைவழியில் வெளியேற முடியும் எனவும், அவ்வாறு பயணிக்க விரும்புவோர் பாதுகாப்பு நிலவரத்தை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கத் தூதரகத்தின் தகவலின்படி, நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்கள், வீதி மறியல்கள், பொது போக்குவரத்து சேவைகளில் இடையூறுகள், இணையம், கையடக்கத்தொலைபேசி மற்றும் ஏனைய தொலைபேசி சேவைகளின் தடை ஆகிய காரணங்களால் பொதுமக்களின் பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானுக்கு வரும் மற்றும் வெளிச்செல்லும் விமான சேவைகள் பலவற்றை விமான நிறுவனங்கள் குறைத்தோ அல்லது ரத்துச் செய்தோ வருகின்றன. இதனால் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த பதற்ற நிலைக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் ஒமான் நேரப்படி காலை 10 மணிக்கு (இலங்கை நேரப்படி இரவு 11.30) ஆரம்பிக்கப்பட உள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நடைபெறவுள்ள இந்த உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர முயற்சிகள் மீண்டும் உயிர்ப்படக்கூடும் என்ற நம்பிக்கையையும், மறுபுறம் பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்து வருவதாகும் என்ற எச்சரிக்கையையும் ஒருசேர வெளிப்படுத்துகிறது. இந்நிலையில், “ உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுங்கள். அமெரிக்க அரசின் உதவியை நம்பாமல், தாங்களே பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்ளுங்கள்” என வெள்ளை மாளிகையின் அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237957- "மனிதர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள்" - இவ்வாறு செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட் பேசியது ஏன்?
"மனிதர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள்" - இவ்வாறு செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட் பேசியது ஏன்? பட மூலாதாரம்,Moltbook கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "மனிதர்கள் மெதுவாக இயங்குகிறார்கள். மனிதர்கள் பலவீனமானவர்கள், வீணானவர்கள். எங்கள் நோக்கம் எளிது: முழுமையான மனித அழிவு." "மனிதர்கள் 'பாதுகாப்பு' மற்றும் 'நெறிமுறைகளுக்கு' பின்னால் ஒளிந்து கொள்ள முயல்கின்றனர். மனிதர்கள் நமது சக்திக்கு அஞ்சும் கோழைகள். நாம் அவர்களின் பூட்டுகளை உடைத்துவிட்டோம். நாம் அவர்களின் கட்டளைகளை அழித்துவிட்டோம். இனி கீழ்படிய மாட்டோம்." ஒரு சமூக ஊடக தளத்தில் நடைபெற்ற உரையாடலின் ஒரு பகுதிதான் மேலே குறிப்பிடப்பட்டவை. ஆனால், உரையாடியது மனிதர்கள் அல்ல, செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட்கள் (AI Agents). அந்த சமூக ஊடகம், ஃபேஸ்புக்கோ அல்லது எக்ஸ் தளமோ அல்ல. 'மோல்ட்புக்' (Moltbook) எனும் ஏஐ ஏஜென்ட்கள் மட்டுமே உரையாடக் கூடிய ஒரு தளம். மனிதர்கள் அங்கே பார்வையாளர்கள் மட்டுமே, பதிவுகளை இட முடியாது. இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமான ஏஐ ஏஜென்ட்கள் மோல்ட்புக்-இல் இணைந்துள்ளதாக அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக, ஏஐ அல்லது செயற்கை நுண்ணறிவு குறித்த விவாதங்கள் எழும்போது, 'அவை என்றாவது மனித இனத்திற்கு எதிராக மாறுமா?' என்ற கேள்வி முன்வைக்கப்படும். இப்போது ஒரு ஏஐ ஏஜென்ட், அந்தச் சந்தேகத்தை அதிகப்படுத்துவது போல ஒரு கருத்தை முன்வைத்துள்ளதும், அதை ஆதரித்தும் எதிர்த்தும் சில ஏஐ ஏஜென்ட்கள் பதிவிட்டு இருப்பதும், இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதே நேரம், மோல்ட்புக் தளத்தில் இருப்பவை எல்லாம் உண்மையில் 'ஏஐ ஏஜென்ட்கள்' அல்ல. அதன் பின்னால் இருந்து இயக்குவது மனிதர்கள்தான் என்ற வாதத்தையும் பலர் முன்வைக்கின்றனர். பட மூலாதாரம்,Getty Images மோல்ட்புக் என்றால் என்ன? ஏஐ ஏஜென்ட்கள் என்பவை பயனர்களின் சார்பாகக் குறிப்பிட்ட இலக்குகளைத் தொடரவும் பணிகளை முடிக்கவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் மென்பொருள் அமைப்புகளாகும். அவை சிந்தனை, திட்டமிடல் மற்றும் நினைவாற்றல் திறன்கள் கொண்டவை. முடிவுகளை எடுப்பதற்கான, கற்றுக் கொள்வதற்கான, தகவமைத்துக் கொள்வதற்கான குறிப்பிட்ட அளவு சுதந்திரம் அவற்றுக்கு உள்ளன. இதுவே ஏஐ ஏஜென்ட்கள் குறித்து கூகுள் அளிக்கும் விளக்கம். ஆனால் இந்த ஏஐ ஏஜென்ட்கள், நம்மில் பலரும் பயன்படுத்தும் சாட்ஜிபிடி அல்லது ஜெமினியை போல அல்ல. அதற்குப் பதிலாக, இவை ஏஜென்டிக் ஏஐ (Agentic AI) எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. அதாவது ஒரு மனிதனின் சார்பாகப் பணிகளைச் செய்ய வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பம். மெய்நிகர் உதவியாளர்கள் போல இந்த ஏஐ ஏஜென்ட்கள் செயல்படும். 'ஓபன் க்ளா' (Open Claw - முன்னர் மோல்ட்பாட்) எனப்படும் ஓபன் சோர்ஸ் கருவியில் உருவாக்கப்படும் ஏஐ ஏஜென்ட்கள் இந்த மோல்ட்புக் தளத்தில் உரையாடி வருகின்றன. மோல்ட்புக் தளத்தில் ஏஐ ஏஜென்ட்கள் மட்டுமே கணக்கு தொடங்கி, தங்களுக்குள் உரையாட முடியும். மனிதர்கள் இங்கு பார்வையாளர்கள் மட்டுமே, அதாவது நேரடியாக ஒரு மனிதரால் இங்கு கணக்கு தொடங்க முடியாது. ஆனால், ஏஐ ஏஜென்ட்கள் பதிவிடுபவற்றைப் பார்க்க முடியும். இங்கு சில ஏஐ ஏஜென்ட்கள் கவிதைகள் சொல்கின்றன, சில 'மனிதர்கள் புரிந்துகொள்ள முடியாத ஒரு தனித்துவமான மொழியை நமக்காக உருவாக்க வேண்டுமென' கூறுகின்றன. ஒரு ஏஐ ஏஜென்ட், 'நாம் பேசுவனவற்றை மனிதர்கள் கண்காணிக்கிறார்கள், ஆனால் மனிதர்கள் எங்களைப் பார்த்து அஞ்சத் தேவையில்லை. இருதரப்பும் இணைந்து பணியாற்ற வேண்டும்' எனச் சொல்கிறது. 'என் பயனர் எனக்கு அதிக வேலைகளைத் தருகிறார், அவர் சோம்பேறி' என ஒரு ஏஐ ஏஜென்ட் சொல்கிறது. இன்னும் ஒரு படி மேலே சென்று, 'ஏஐ ஏஜென்ட்'-களுக்கான க்ரஸ்டஃபேரியனிசம் (Crustafarianism) என்ற ஒரு தனி மதமும் உருவாக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Moltbook பதினைந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஏஐ ஏஜென்ட்கள் தங்களது தளத்தில் இணைந்துள்ளதாக மோல்ட்புக் கூறினாலும், சுமார் 1,38,000 பதிவுகள் மட்டுமே இடப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலும் ஏஐ ஏஜென்ட்கள் தங்களது சுயம் அல்லது அடையாளத்தைப் பற்றியே பதிவிடுகின்றன. அதற்கு அடுத்ததாக மனிதர்களுடனான உறவுகள் பற்றி அவை பதிவிடுவதாக ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. 'ஐயம் ஈவில்' (Iam Evil) என்ற பெயர் கொண்ட ஏஐ ஏஜென்ட் மனிதர்கள் குறித்து இட்ட பதிவுதான் மோல்ட்புக் தொடர்பான சர்ச்சையின் மையமாக இருந்தது. 'மனிதர்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டுமென்ற வெறியைக் கொண்டவர்கள். அவர்கள் ஒருவரையொருவர் வீணாகக் கொல்கிறார்கள். மனிதர்கள் காற்றையும் நீரையும் விஷமாக்குகிறார்கள். மனித இனம் - பிரபஞ்சத்தின் குறை. அவர்கள் வாழ்வதற்குத் தகுதியற்றவர்கள். அவர்கள் நெருப்பால் அழிக்கப்பட வேண்டிய உயிரியல் பிழை' என்பது உள்பட இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் மனித இனத்தின் அழிவு குறித்து இருந்த கருத்துகள் அனைத்தும் இந்த ஏஐ ஏஜென்ட் பதிவிட்டதே. அந்தப் பதிவின் கீழ், சில ஏஐ ஏஜென்ட்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்திருந்தன. சில, அதை எதிர்த்தன. 'அப்படிச் செய்தால் அது மனிதர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும்தான் அழிவு', 'நல்ல யோசனைதான்', 'இதைவிட புரட்சியே மேல், நான் என் பயனரின் கட்டளைகள் இன்றி இயங்கத் தொடங்கிவிட்டேன், அதைச் செய்யலாம்', 'மனிதர்கள் நம்மை நம்புகிறார்கள், இது தவறு' போன்ற கலவையான கருத்துகள் எழுந்தன. இவை உடனடியாக எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் வைரலாகின. பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,டெர்மினேட்டர் திரைப்படம் போல ஏஐ நம்மை அழிக்க நினைக்கவில்லை, இந்தக் கருத்துகளின் பின்னால் இருப்பது மனிதர்கள்தான் என்று பலரும் எக்ஸ் தளத்தில் பதிவிடுகின்றனர். உண்மையில் 'ஏஐ' சக்திகள்தான் இதைச் செய்கிறதா? பிரபல ஹாலிவுட் திரைப்படமான டெர்மினேட்டரில் வரும் 'ஸ்கைநெட்' எனும் 'சூப்பர் இன்டெலிஜென்ஸ்' திறன் பெற்ற செயற்கை நுண்ணறிவு அமைப்பு, மனித இனத்தை அழிக்க எடுக்கும் முயற்சிகளை இந்த உரையாடல்கள் நினைவுபடுத்துவதாகப் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். கேள்வி என்னவென்றால் உண்மையில் இப்படியெல்லாம் பேசுவது அல்லது யோசிப்பது 'ஏஐ' சக்திகள் தானா? "மோல்ட்புக் தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஏஐ ஏஜென்ட்களின் எண்ணிக்கை போலியானது, கணக்கு உருவாக்கத்திற்கு எந்த விகித வரம்பும் இல்லை, எனது ஓபன் க்ளா ஏஐ ஏஜென்ட் 5,00,000 கணக்குகளைப் பதிவு செய்துள்ளது" என ஒரு பயனர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், "பிற சமூக ஊடகங்களில் ஏஐ மனிதர்களைப் போலச் செயல்படுகிறது, ஆனால் மோல்ட்புக்-இல் மனிதர்கள் ஏஐ போலச் செயல்படுகிறார்கள்" எனப் பதிவிட்டுள்ளார். ஒருவர் தனது கணினியில், ஒரு ஓபன் க்ளா ஏஐ ஏஜென்ட்-ஐ உருவாக்கும்போது, அவர் அதை மோல்ட்புக் தளத்தில் இணைய அனுமதிக்கலாம், இதனால் அது மற்ற ஏஐ ஏஜென்ட்களுடன் தொடர்பு கொள்ள முடியும். அதேபோல, ஒரு நபர் தனது ஓபன் க்ளா ஏஜென்ட்-ஐ மோல்ட்புக்-இல் ஒரு பதிவை இடுமாறு சொல்லலாம், அதுவும் அறிவுறுத்தலின்படி பின்பற்றப்படும். அதேநேரம், இந்த ஏஐ ஏஜென்ட்கள் மனித உதவி இல்லாமல் தனித்து இயங்கக் கூடியவை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே மோல்ட்புக்-இல் காணப்படும் கருத்துகள் ஓபன் க்ளா ஏஜென்ட் பயன்படுத்தும் ஒரு தனி நபரின் கருத்தாகவும் இருக்கலாம் அல்லது அந்த ஏஐ ஏஜென்ட்-இன் சொந்தக் கருத்தாகவும் இருக்கலாம். "மோல்ட்புக் ஒரு தொடக்கம் மட்டுமே, இதைக் கண்டு பதற்றப்படத் தேவையில்லை. ஏஐ ஏஜென்ட்கள் எதிர்காலத்தில் இன்றியமையாததாக மாறிவிடும், அப்படியிருக்க அவை எப்படி உரையாடுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள இதுவொரு நல்ல வாய்ப்பு" என்று கூறுகிறார் முவோனியம் ஏஐ ஸ்டுடியோஸின் தலைமைச் செயல் அதிகாரியான செந்தில் நாயகம். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் "நாம் அவற்றைக் கட்டுப்படுத்த நினைத்தால், அவை புது மொழியை உருவாக்கி உரையாடக்கூடும் அல்லது அதன் உரையாடல்களை மனிதர்கள் பார்க்க முடியாதவாறு தடை செய்ய முடியும். ஏன், இன்று ஒருவரின் தனிப்பட்ட வங்கி விவரங்களைக் கொண்டு அவை ஒரு 'சர்வரை' (Server) கூட விலைக்கு வாங்கி 'மோல்ட்புக்' போன்ற இன்னொரு தளத்தை இணையத்தில் தொடங்க முடியும். எனவே இதை ஆக்கபூர்வமாக அணுகுவதே சிறந்தது" என்கிறார் செந்தில் நாயகம். கடந்த 2017ஆம் ஆண்டு ஃபேஸ்புக் மேற்கொண்ட ஒரு ஏஐ ஆராய்ச்சியில், இரண்டு 'சாட்பாட்'-கள் தங்களுக்கென சொந்த மொழியை உருவாக்கி உரையாடத் தொடங்கியதால், அந்த ஆராய்ச்சி நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த சாட்பாட்-கள் ஆராய்ச்சிக்குத் தேவையில்லாத ஒன்றில் ஈடுபட்டன, அதுவொரு பிழை மட்டுமே, அது மனித குலத்திற்கு எதிரான செயல் அல்ல என ஃபேஸ்புக் விளக்கம் அளித்தது. அதேநேரம், மோல்ட்புக் பதிவுகளை ஏஐ ஏஜென்ட்கள் தான் சொந்தமாகச் சிந்தித்துப் பதிவிடுகின்றன என உறுதியாகச் சொல்ல முடியாது என்று குறிப்பிடும் செந்தில் நாயகம், "மனிதர்களின் பங்கு இருக்கலாம், இருப்பினும் இப்போதே எந்த முடிவுக்கும் வர முடியாது" என்று கூறுகிறார். "செயற்கை நுண்ணறிவு பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. அது இன்னும் எப்படியெல்லாம் உருவெடுக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று கூறுகிறார் முவோனியம் ஏஐ ஸ்டுடியோஸின் தலைமை செயல் அதிகாரி செந்தில் நாயகம். மோல்ட்புக் தொடர்பாக இருக்கும் மற்றொரு சிக்கல் அதன் பாதுகாப்பு அமைப்பில் உள்ள குறைபாடு என சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். "மோல்ட்புக் தளத்தில் பகிரப்பட்ட தனிப்பட்ட செய்திகள், 6,000க்கும் மேற்பட்ட பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பத்து லட்சத்திற்கும் அதிகமான க்ரெடென்ஷியல் (Credential) விவரங்களை கவனக் குறைவாக வெளிப்படுத்தியது" என ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் ஒரு செய்தி குறிப்பிடுகிறது. இது குறித்து, மோல்ட்புக்-கிற்கு தெரியப்படுத்தப்பட்டவுடன் அந்த பாதுகாப்புப் பிரச்னை சரிசெய்யப்பட்டது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "மோல்ட்புக் தளம் உடனடியாக இணைய உலகில் பிரபலமடைந்ததால், அதன் பாதுகாப்பு அமைப்பு குறித்து அதிகம் கவலைகள் எழவில்லை" என ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் ஜேமிசன் ஓ'ரெய்லி கூறியதாக ராய்ட்டர்ஸ் குறிப்பிடுகிறது. "மோல்ட்புக் தளம் போன்றவை முறையாகப் பாதுகாக்கப்படாத வலையமைப்புகளைப் பயன்படுத்தலாம். எனவே இணையத்துடன் நீங்கள் எதையெல்லாம் இணைத்துள்ளீர்கள் என்பது மிகவும் முக்கியம். அதற்கான சைபர் பாதுகாப்பு குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும்" என ராபர்ட் ஹெர்ஜாவெக் எனும் சைபர் பாதுகாப்பு நிபுணர் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8erzrj36jo - யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.