All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
- மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு
https://www.facebook.com/share/1CFM3Zj8aW/?mibextid=wwXIfr- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மழை தொடர்ந்து பெய்வதால் விளையாட்டு நடக்குமே தெரியாது......................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாங்களும் பாட்டு போடுவோமே 😄- மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு
https://x.com/sanvimal5/status/2025198071131361668?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஓம்…புரிகிறது. எனது கரிசனை இரெண்டு: இது உங்கள் மேற்பார்வை வேலைச் சுமையை கூட்டும். நீங்கள் இழுத்து போட்டு செய்வீர்கள், ஆனால் உங்களில் அதிகம் சுமை ஏற்ற கூடாது. ஒரு கட்டத்தை செய்கிறோம் என் காசை வாங்கி கொஞ்சத்தை செய்து போட்டு, அதில் கொஞ்சத்தை தூத்தரித்து போட்டு அப்படியே விட்டால். நாம் எடுத்த காரியம் பாதியில் நிக்கும். கொடையாளிக்கும் ஒரு மனநிறைவு கிடைக்காது. ஆனால் பயனாளர் தெரிவில் நம்பிக்கையாக சொன்னபடி கட்டம் கட்டமாக செய்யகூடியவர்களை தேர்ந்து எடுத்து செய்யலாம். ஆனால் இது உங்கள் சுமையை மேலும் கூட்டும். ஒப்பந்தகாரரின் பேராசை மற்றும் இழுத்தடிப்பு: இது போன்ற சிக்கல்கள் நான் முன்பும் தனியாக சில நல்லதை செய்ய வெளிக்கிட்ட போது ஏற்பட்ட கெட்ட அனுபவங்கள்தான். அந்த செய்தி திரியில் நான் சொன்ன கருத்து, கேலி என்பதை விட, சுய அனுபவத்தால் வந்த பட்டறிவு என்பதே சரி. பிகு கட்டிட வேலை செய்வோர் எங்கும் இப்படித்தான் போலும். இலண்டனிலும் உயிரை வாங்கி விடுவார்கள்.புலவர் started following மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு- மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு
- துரியோதனப் பார்வை
அதுவென்றால் உண்மைதான் . ..... இந்த விளையாட்டுப் போட்டியில் கூட என்னை விட கீழானவரை நான் காணவில்லை . ......எல்லோரும் எனக்கு மேலேயே நிக்கிறார்கள் ..........! 🙃- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓவர்கள் குறைக்கப் படுமாம் ஒரு மனித்தியாலம் பிந்துமாம் விளையாட்டு தொடங்க.................................- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஒவ்வொரு கட்டமாக பணி நிறைவடைய நிறைவடைய தானே பணம் வழங்கலாம் அண்ணா. பிரதேச செயலகம் பொறுப்பு எடுத்து செய்யும் எனில் வழங்கலாம் என எண்ணுகிறேன். வட்டு தெற்கு பரராஜசிங்கம் ஐயாவிற்கும் அவ்வாறு தானே செய்தோம். ஒப்பந்தகாறர்கள் பேராசையில் இருக்கிறார்கள். சீலனும் காசை கழித்த கோபமோ என்னமோ பொன்னாலை மிகுதி வேலை இழுத்தடிக்கிறார்! (ஏரம்பு ஐயாவை 3 பைக்கற் சீமந்தும் இறுகாமல் இருக்க பிரட்டி வைக்கச் சொன்னேன்) உறவுகளே வேறு ஏதும் வழி இருந்தால் சொல்லுங்கோ.- Today
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பார்வையாளர்களைக் குளிர்விக்க- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மழை மழை.............முக்கியமான விளையாட்டில் மழை.......................- மட்டக்களப்பில் துயரத்தை ஏற்படுத்திய இளம் மருத்துவர் மரணம்.!
ஆழ்ந்த அனுதாபங்கள்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
விளையாட்டு தாமதம் ஆகும் இன்று............சிலது ஓவர்கள் குறைக்கப் படும்........................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் சிந்தாபாத்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தான் அணி 5 சுழல் பந்து வீரர்களுடன் விளையாட வந்து இருக்கினம்....................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய போட்டி மழையினால் அடிக்கடி தடைபெறும்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தான் நாணயத்தில் வென்று மட்டைய தெரிவு செய்து இருக்கினம்........................- அறிஞர் நாகரத்தினம் புஸ்பநாதன் அவர்கள் எழுதிய ஆன்மீகத் தேடல்- பாகம்- நூல் வெளியீட்டு விழா.
வாழ்த்துகள். திரு புஷ்பா அவர்கள் தாயகபற்றாளர். ஊர்பற்றாளர். பிறந்த ஊரான குப்பிழான் மண்ணுக்கு உதவி புரிவதற்காக 9 பேருடன் சேர்ந்து குப்பிழான் விக்னேஸ்வரா மன்றம் பிரித்தானியா அமைப்பினை உருவாக்கினார்.- துரியோதனப் பார்வை
துரியோதனப் பார்வை மக்களில் பலவகை உண்டு. ஆனால் எல்லாவற்றையும் கருப்பு வெளுப்பில் 'உண்டு - இல்லை' என்ற அளவில் பிரிக்கும் போது பல வகைகளில் மனிதர்களையும் இரு எதிர் எதிர் வகைகளாகப் பிரிக்கும் நிலை தோன்றுகிறது. அப்படி உள்ளவற்றில் ஒரு எதிர்-எதிர் இருமையைப் பற்றியக கதை இது. *** துரோணருக்கு அருச்சுனன் மேல் தனிப்பட்டப் பாசம் இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் சிறிது காலமாக தருமனின் மேலும் அதிகப் பாசம் காட்டுவது போல் இருக்கிறது. பாண்டு மகன்களில் மேல் அழுக்காறு கொண்ட துரியோதனனுக்கு இது மேலும் எரிச்சலைத் தந்தது. நேராகச் சென்று பிதாமகர் பீஷ்மரிடம் 'ஐயா. ஆசிரியர் எங்கள் எல்லோரையும் ஒரே மாதிரி நடத்துவதில்லை. அவருக்கு பாண்டவர்கள் என்றால் ஒரு தனிப்பாசம் இருக்கிறது. அதுவும் தருமன் என்றால் தலையில் வைத்து ஆடுகிறார்' என்று முறையிட்டான். பீஷ்மருக்கு நடப்பது என்ன என்பது ஓரளவிற்குத் தெரியும். ஆனாலும் அதனைத் தானே துரியனுக்குச் சொல்வதை விட ஆசிரியர் சொன்னால் நன்று என்றெண்ணி அவனை ஆசிரியர் அழைத்துச் சென்றார். ஆசிரியரும் 'பரத குலத் தோன்றலே. இருவரும் எனக்கு ஒரே மாதிரி தான். ஆனால் அவர்கள் பார்வையில் தான் பிசகு இருக்கிறது. அதனால் என்னில் குறை காண்கிறார்கள்' என்றார். வீடுமரும் 'ஐயா. நீங்களே அதனை துரியனுக்குப் புரிய வைக்கவேண்டும்' என்று வேண்டிக் கொண்டார். ஆசிரியரும் தருமனையும் துரியனையும் அழைத்து ஒவ்வொருவரிடமும் ஒரு காரியத்தைச் சொல்லி அனுப்பிவைத்தார். தருமனிடம் 'உன்னை விட கீழானவரைக் கண்டு அழைத்து வா' என்றார். துரியனிடம் 'உன்னைவிட மேலானவரைக் கண்டு அழைத்து வா' என்றார். சிறிது நேரம் சென்று இருவரும் தனித் தனியே வந்தனர். என்ன என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னது. தருமன்: ஐயா. நான் எல்லா இடத்திலும் தேடிவிட்டேன். எல்லோருமே என்னைவிட மேலானவர்களாகத் தான் இருக்கிறார்கள். அதனால் என்னால் அழைத்து வர முடியவில்லை. துரோணர்: உன்னை ஒப்பு நோக்கும் போது சிறு குறைகளும் உள்ளவர் யாருமே இல்லையா? தருமன்: ஐயா. சிறு குறைகளுடன் சிலர் இருந்தார்கள். ஆனால் அவர்களின் நிறைகளை ஒப்பு நோக்கும் போது அவர்களின் குறைகள் பொருட்படுத்த முடியாத வண்ணம் இருக்கிறது. துரோணர்: அப்படியென்றால் ஒருவர் கூடவா உன்னை விட கீழானவர் இல்லை? தருமன்: இல்லை ஐயா. துரோணர்: துரியா. நீ ஏன் யாரையும் அழைத்துவரவில்லை? துரியன்: ஐயா. என்னை விட மேலானவர் யாரையும் நான் காணமுடியவில்லை. அதனால் அழைத்து வரவில்லை. துரோணர்: உன்னைவிட நல்ல குணங்கள் உடையவர் எவருமே இல்லையா? துரியன்: இருக்கிறார்கள் ஐயா. ஆனால் யாருமே குறையில்லாதவர்களாக இல்லை. அவர்களின் குறைகளைப் பார்க்கும் போது அவர்களின் குணங்கள் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. துரோணர்: பார்த்தாயா துரியா?! நீ எல்லாவற்றிலும் தீயதைப் பார்க்கிறாய்; அதனைப் பற்றியே பேசுகிறாய். அவன் எல்லாவற்றிலும் நல்லதைப் பார்க்கிறான். அதனைப் பற்றியே பேசுகிறான். வருங்காலம் உன்னைப் போல் எல்லாவற்றிலும் தீயதையே கண்டு அதனையே பேசி வருபவர்களை 'துரியோதனப் பார்வை' கொண்டவர்கள் என்று அழைக்கும். அது மாறவேண்டும் என்றால் நீ மாறவேண்டும். *** துரியோதனனின் கதை எல்லோருக்கும் தெரியும். அவன் மாறவில்லை. 'துரியோதனப் பார்வை' கொண்டவர்களும் நிறைய இருக்கிறார்கள். *** இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 24 மே 2007 அன்று இடப்பட்டது. https://koodal1.blogspot.com/2008/04/blog-post.html- மின்சாரக் கட்டண யோசனை: பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் ஆணைக்குழு
மின்சாரக் கட்டண யோசனை: பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் ஆணைக்குழு Feb 21, 2026 - 12:52 PM 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 18 ஆம் திகதி வரை வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. நாட்டின் 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் ஏனைய விடயங்களையும் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தீர்மானத்தை ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ளது. 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்காக, அதாவது ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு 13.56 சதவீத மின்சாரக் கட்டண அதிகரிப்பை எதிர்பார்த்து, கடந்த 13 ஆம் திகதி இலங்கை மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்காக இலங்கை மின்சார சபையினால் 11.57 சதவீத மின்சாரக் கட்டண அதிகரிப்பு முன்மொழியப்பட்ட போதிலும், அதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmlvzraz5000f356pa6dhqryy- இன்று உலக தாய்மொழி தினம்
மொழிக்காய் உயிர் தந்தவர்களின் மண் இது... உலக தாய்மொழி தினம் இன்று... Courtesy: தீபச்செல்வன் ஈழ மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள், ஈழத் தமிழ் இனத்திற்காகவும் இனத்தின் மொழி உரிமைக்காகவும்தான் தம்மை ஆகுதியாக்கிப் போராடினார்கள். அப்படிப் பார்த்தால் உலகில் மொழிக்காக ஆயுதம் தரித்துத் தம்முயிர் தந்தவர்களாக எங்கள் மாவீர்ர்கள் புனிதம் பெறுகிறார்கள். உலகில் தாய்மொழிக்காக தமது உயிரை தியாகம் செய்த மண்ணில் இன்று தாய்மொழி பற்றிய விழிப்புணர்வும் பார்வையும் எப்படி இருக்கிறது என்பதை நாம் அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது. நாம் வாழ்கின்ற இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரம் மற்றும் ஊடகச் சூழல் மொழியில் பெரும் தாக்கம் செலுத்துகிறது. நவீனத் தொடர்பாடல் சூழலில் தாய்மொழியை காக்கவும் கைவிடவுமான ஒரு சூழல் நிலவுகிறது. இதில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதைக் குறித்து சிந்திப்பது அவசியமானது. மாசி 21, உலக தாய் மொழி தினம் தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது ஒவ்வொரு மனிதரதும் பிறப்புரிமை. அதனை மனிதர்கள் தம் தாய் வழி சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளுகின்றனர். மொழியற்று பிறக்கும் ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து மொழியை பெறுகிறது. தாய் மொழியின் ஊடாக தன்னுடைய பண்பாட்டை, வரலாற்றை, வாழ்வை கற்றுக்கொள்வது எளியது என்பதால் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி மிக முக்கியமாகிறது. தாய்மொழியை எவரும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த நாள் வருடம் தோறும் உலக மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. தாய்மொழியை மறந்துபோனவர்கள் பலருண்டு. தம் தாய் மொழியை இழந்தவர்கள் பலருண்டு. அன்றைய ஈழத் தீவில் தமிழ் மக்கள் தீவு முழுவதும் பரவியிருந்தனர். பிற்காலத்தில் சிங்கள ஆதிக்கம் பெற்றபோது தென்பகுதியில் காலி, நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்த தமிழர்கள் எல்லாம் சிங்களத்தை பேசி, பின்னர் அந்த மொழியில் முழுமையாக தங்கி தம் தாய் மொழியை இழந்து பின்னர், தமது இன அடையாளத்தையே தொலைத்து இன்று சிங்களவர்களாக வாழ்கின்றனர். ஈழத் தீவுக்குள் நிகழ்ந்த இந்த அனுபவமே தாய் மொழி குறித்து ஓரினம் எப்படி விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகிறது. அந்நிய மொழியால் நேர்ந்த வீழ்ச்சி நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பல மொழிகள் இன்று இல்லை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஏழாயிரம் மொழிகள் இருந்த இடத்தில் இப்போது மூவாயிரம் மொழிகளே உள்ளதாக கூறுகின்றனர். பல ஆயிரக்கணக்கான மொழிகள் இன்னும் வரிவடிவம் பெறாமல் பேச்சு மொழியாகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் பல மொழிகள் அழிந்துவிடும் என்று மொழியியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். தாய் மொழியை போற்றிய நாடுகளே பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. தாய் மொழியை புறக்கணித்து அந்நிய மொழிகளை பயன்படுத்திய நாடுகள் வீழ்ச்சியையே சந்தித்துள்ளன. உலகிற்கு நாகரிகத்தை கற்றுக்கொடுத்த, வளமான இலக்கிய பாரம்பரியத்தை கொண்ட ஆறு மொழிகளில் தமிழும் முக்கிய இடம்பெறுகிறது. சமஸ்கிருதம், கிரேக்கம், ஹீப்ரு, லத்தீன், சீனம் ஆகிய மொழிகளுடன் தமிழ் மொழியும் மூத்த மொழிகளாக முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழ் ஹீப்ரு மொழியைக் காட்டிலும் முந்தியது. கிறிஸ்துவுக்கு முந்தைய வரலாற்றை கொண்டு. செழுமையான இலக்கியங்கள், தொல்லியல் சான்றுகள், நேர்த்தி மிக்க இலக்கண நூல்கள் என தமிழ் கொண்டுள்ள தனித்துவம் சிறப்பு மிக்கது. தனிச் சிங்களச் சட்டம் ஈழத் தீவைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் தமது மொழியாற்றலால் உலக அளவில் கவனத்தை பெற்றிருந்தனர். இத் தீவின் தீர்மானிக்கும் சக்திகளாக ஈழத் தமிழர்கள் இருந்தனர். தமிழ் மக்களின் தாய் மொழி குறித்த அறிவும் ஆங்கிலப் புலமையும் பிரித்தானிய அரசில் இத் தீவின் முதல் பிரதிநிதிகளாக ஈழத் தமிழர்களை ஆக்கியது. பிந்தைய காலத்தில், சிங்கள அரசு உருவாக்கத்தின் பின்னர், ஈழத் தமிழ் மக்களின் தாய் மொழி திட்டமிட்ட ரீதியாக ஒடுக்கப்பட்டது. 1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ் மொழிக்குரிய சம இடம் மறுக்கப்பட்டது. பின்னர் அரசால், அரச படைகளால் தமிழை ஒழித்துக் கட்டும் வேலைகள் மும்மரமாக இடம்பெற்றன. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தமிழ் மொழி உரிமைக்கானது. தமிழ் மொழி அரசுக்கானது. அதனால்தான் தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை தோற்றுவித்தார். ஒரு இனம் தனது தாய் மொழியை இழந்து வாழ முடியாது. தாய் மொழி இல்லையேல் அந்த இனம் அழிந்துவிடும். அது தனது பண்பாட்டை, வரலாற்றை இழந்துவிடும். தன் தாய் நாட்டை, தாய் நிலத்தை இழந்துவிடும். இதற்காகவே ஈழத் தமிழர்கள் இத்தனை ஆண்டு காலமாய் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் தியாகங்களைப் புரிந்து போராடி வருகிறார்கள். தமிழீழத்தில் தாய்மொழி தமிழீழ அரசானது தமிழ் மொழியில் அழகியதொரு தேசத்தைப் படைத்தது. அரச கட்டமைப்புக்கள் மற்றும் போரியல் கட்டமைப்புக்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல் துவக்கம், நடைமுறையில் தூய தமிழ் மொழியிலான வாழ்வொன்றை சாத்தியப்படுத்தினர். மாந்தர்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல், பொருட்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல் என விடுதலைப் புலிகளின் மொழித்துறை நிர்வாக கட்டமைப்புக்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் இன்றளவும் உலகால் வியப்புடன் நோக்கப்படுகின்றன. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்களும் ஒட்டுமொத்த நிலமும் தமிழால் அமைந்திருந்தது. ஈழத் தமிழினம் மொழி மறுப்பாலும் மொழியழிப்பாலுமே ஆயுதம் ஏந்தியது. உலகின் செழுமையான மொழி தமிழ். அந்த செழுமையுடன் இன்றளவும் வாழ்வையும் பேசும் மொழியையும் கொண்டவர்கள் ஈழத் தமிழ் மக்கள். அதனை அழித்தொழிக்க வேண்டும் என்பதில் அன்றிலிருந்து இன்றளவும் குறியாக இருக்கிறது சிங்கள அரசு. மொழியையும் இனத்தையும் அழிக்க வரலாறு முழுதும் இனப்படுகொலைகளை செய்த பின்னரும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை செய்த பின்னரும் சிங்கள அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது? அழிக்கப்படும் தமிழ் இன்றும் இலங்கை அரசின் அலுவலகங்களில், அரசு வடக்கு கிழக்கில் நடும் பெயர்பலகைகளில் எங்கள் தாய் மொழி கொலை செய்யப்படுகிறது. காவல் நிலையங்களில் சிங்களத்தில்தான் முறைப்பாடு பதிவு செய்யப்படுகிறது. வடக்கு கிழக்கிற்கு வரும் பல சுற்று நிரூபங்கள் சிங்களத்தில்தான் உள்ளன. தென் பகுதியில் பிரதான அலுவலகங்களுக்குச் சென்று தமிழிலில் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. வடக்கு கிழக்கில் மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் தமிழ் தெரியாத வைத்தியர்களிடம் எங்கள் மக்கள் நோயை சொல்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தாய் மொழி தினத்தை ஈழத் தமிழர்கள் கொண்டாட வேண்டும். மொழி, இனம், பண்பாடு குறித்த புரிதலை இந்த நாளில் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நாளில் ஏற்படுத்தும் விழிப்புணர்வு எல்லா நாட்களிலும் பயனாக விளைய வேண்டும். அத்துடன் உலகில் தாய் மொழி அழிக்கப்படும் அனைத்து இனங்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம். தாய் மொழியை திட்டமிட்டு அழிக்க ஒடுக்கப்படும் அத்தனை இனங்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம். இனம், மொழி, பண்பாடு, வரலாறு என ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த வாழ்வை அழிப்பது மிகவும் கொடியது. கடந்த நூறு ஆண்டுகளாக நாங்கள் இத் தீவில் அனுபவித்து வரும் கொடிய சரித்திரம் இதுவே. தாய் மொழியை பேண, தமிழ் மரபை பேண, தமிழ் இனத்தின் இருப்பை பேண எல்லோரும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. மொழி அழிந்தால், இனம் அழியும் என்பதால், விழிப்போடு இருப்போம். https://ibctamil.com/article/international-mother-language-day-february-21-1771651608- அமெரிக்க கடலோர காவல்படையின் கப்பலான “DECISIVE” இலங்கை கடற்படையில் இணைகிறது - வரலாற்றுப் பயணம் ஆரம்பம்
அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வரலாற்று பயணம்! 14,775 கடல் மைல்களை கடக்கும் P628 இலங்கை கடற்படை வரலாற்றில் மேலும் ஒரு முக்கியமான அத்தியாயமாக, நன்கொடையாக வழங்கப்பட்ட P628 எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட USCGC Decisive இன்று அமெரிக்காவின் பால்டிமோர் கடற்படை தளத்திலிருந்து இலங்கை நோக்கி புறப்பட்டது. 14,775 கடல் மைல்கள் தொலைவை உட்படுத்திய இந்தப் பயணம், இலங்கை கடற்படைக் கப்பல் ஒன்றினால் மேற்கொள்ளப்படும் மிக நீண்ட ஒற்றை கடற்பயணமாகப் பதிவாக உள்ளது. வரலாற்றுச் சாதனை மேலும், இலங்கை கடற்படை கப்பல் ஒன்று முதன்முறையாக பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் வரலாற்றுச் சாதனையாகவும் இது அமையும் என கூறப்படுகிறது. இந்த சாதனை, இலங்கை கடற்படையின் மேம்பட்ட வழிசெலுத்தல் திறனை மட்டுமல்லாது, இத்தகைய சிக்கலான கடல் நடவடிக்கைகளை சாத்தியமாக்கும் சர்வதேச ஒத்துழைப்பின் வலிமையையும் எடுத்துக்காட்டுகிறது. கேப்டன் கயன் விக்ரமசூரியாவின் தலைமையில், 14 அதிகாரிகள் மற்றும் 72 கடற்படையினரை உள்ளடக்கிய மொத்தம் 86 பேரைக் கொண்ட திறமையான குழு இந்தக் கப்பலில் பணியாற்றுகிறது. தூதரக உறவுகள் பாதுகாப்பான கடற்பயணத்தையும், பாதையில் உள்ள நாடுகளுடன் தூதரக உறவுகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, முக்கிய துறைமுகங்களில் கப்பலை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 77 நாட்கள் கடற்பயணத்தை நிறைவு செய்த பின், இந்த வரலாற்றுப் பயணத்தின் இறுதி கட்டமாக 2026 மே 8 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை P628 அடைய உள்ளது. https://ibctamil.com/article/us-donated-cutter-begins-sl-voyage-1771661060- இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனை : 62 கோடி ரூபா தனி ஒரு நபருக்கு
இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனை : 62 கோடி ரூபா தனி ஒரு நபருக்கு இலங்கை லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத் தொகை ஒன்று நேற்று(19.02.2026) வெல்லப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய லொத்தர் சபையின் கப்ருக லொத்தர் சீட்டிழுப்பில் 62 கோடி ரூபாய் பரிசுத் தொகை நேற்று வெல்லப்பட்டுள்ளது. 62 கோடி... இது இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனையாகும். இந்த சீட்டிழுப்பில் 62 கோடியே 98 இலட்சத்து 55 ஆயிரத்து 919 ரூபாய் வெல்லப்பட்டுள்ளது. வரலாற்றில் ஒரு தனிநபர் வென்ற மிகப்பெரிய பரிசுத் தொகை இதுவென தெரிவிக்கப்படுகின்றது. https://tamilwin.com/article/new-record-in-sri-lankan-lottery-history-62-crore-1771527359- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா சின்ன அணிகளுடன் விளையாடும் போது வும்ராவுக்கு ஓய்வு........... வும்ரா எல்லா விளையாட்டும் விளையாடி இருந்தால் கூடுதல் விக்கேட் எடுத்து இருப்பார்................... - மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.