All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣.............. நாளைக்கு விளையாடுகின்ற இரண்டு அணிகளில் ஒன்று வெல்வதை விட, இதில் விளையாடாத ஆப்கான் வென்றால், அது மாயஜாலம், அப்படியே நான் உங்கள் இருவருக்கும் சீடனாக வந்து விடுவேன்................. ஆகக் குறைந்தது கொழும்பில் முழுநாளும் அடைமழை பெய்ய வைத்தாலும் மிக்க சந்தோசமே...............😜.
-
மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
எனது பேரனின் சில செய்கைகள் அல்லது பேச்சுக்கள் எனக்கு அதிசயமாக ஆச்சரியமாக இருக்கும். ஒரு நாள் வெளியே தோட்டத்தில் நின்று விட்டு வெயில் அதிகமாக இருந்ததால் வீட்டில் வரவேற்பு அறையில் இருந்தேன். அவன் தொலைக்காட்சியில் கார்ட்டூன் காணொளி ஒன்றை பார்த்துக் கொண்டு இருந்தான். நான் சோர்ந்து போய் இருந்தது அவனுக்கு தெரிந்து இருக்கவேண்டும். என்னைப் பார்த்து தாத்தா களைக்குதா? ஏதாவது வருத்தமா?? நித்திரை கொள்ளபோகிறீர்களா??? என்று இந்த மூன்றையும் ஒரே வசனத்தில் கேட்டான். நான் அதிர்ந்து போனேன். ஏனெனில் அவனுக்கு அப்போது இரண்டு வயது தான். அவனுக்கு பிறந்த நாள் வந்தது. பல கடைகளுக்கும் சென்று பார்த்தபோதும் அத்தனை பொருட்களும் அவனது அறையில் கண்டவையாகவே இருந்ததால் ஒன்றையும் வாங்கவில்லை. பிறந்த நாள் அன்று உனது உண்டியலை கொண்டு வா என்று பத்து ஈரோ தாள்களில் பத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக உண்டியலுக்குள் போட சொல்லி கொடுத்துக்கொண்டே இருந்தேன். ஐந்தாவது தாளை உண்டியலுக்குள் போட்டவன் என்னை பார்த்து கேட்ட கேள்வி எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. உங்களுக்கு வேற காசு பொக்கற்றில் இருக்கா தாத்தா என்று கேட்டான். ஓம் இருக்கு என்றதும் அப்படியானால் மிச்சத்தையும் போடுவோம் என்றான். இதை சொல்லும் போது அவனுக்கு மூன்று வயது தான். எனது கடைக்கு பக்கத்தில் எனது கார் நிற்பாட்டும் இடம் நிலத்தில் கீழே உள்ளது. அதற்கு செல்லும் கதவு திறந்து மேலே சென்று தான் உள்ளே போகணும். ஒரு நாள் அவனுடன் காரை எடுக்க சென்ற போது அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் கதவு மேலே செல்வதற்கு முன் தலையை குனிந்து செல்ல முயன்றேன். எனது கையை பிடித்து பின்னுக்கு இழுத்தபடி சொன்னான் நீங்க தலையை குனியக்கூடாது தாத்தா என்று. எனக்கு தூக்கி வாரி போட்டது. இதை சொல்லும் போது அவனுக்கு மூன்றரை வயது தான். ஒரு நாள் மத்தியானம் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் கண் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தேன். தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த எனது மனைவி பேரனிடம் தாத்தாவை எழுப்பி விடு எனக்கு அவரது உதவி தேவை என்று சொல்வது எனக்கு கேட்டது. அதற்கு அவன் சொன்ன பதில் என்னை கண் கலங்க வைத்தது. தாத்தா கனக்க நல்லது செய்து விட்டார். இனி அவரை தொந்தரவு செய்யாதீர்கள். அதைவிட முக்கியமானது இனி ஏதாவது தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் என்றான். இந்த கடைசி வரிகளை என் பிள்ளைகள் கூட இதுவரை சொன்னதில்லை. மனைவி பேரனிடம் வந்து உதவி செய்ய சொல்லி கேட்ட அத்தனை உதவிகளையும் அவனே செய்தும் கொடுத்து விட்டு வந்தான். இதை சொல்லும் போது அவனுக்கு நான்கு வயது தான். எனக்கு இவை மிகவும் அதிசயமாக இருக்கிறது. எனது அம்மாவுக்கு ஐந்து பெண்பிள்ளைகளின் பின்னர் தான் நான் பிறந்தேன். அதனால் என்மீது அதீத பாசம் உண்டு அவருக்கு. எனது மனைவி சொல்வார். எனது தாயார் இறந்த அடுத்த கிழமை எனது மகள் தனது வயிற்றில் ஒரு அசைவு இருப்பதை உணர்ந்ததாக சொன்னாளாம். (எனக்கு மறு பிறப்பு மற்றும் அடுத்த பிறவியில் நம்பிக்கை இல்லை.)
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை நியுசிலாந்து போட்டியில் என்ன நடக்கும் என கேட்டதற்கு பையன் குறி சொல்பவர் போல சூசகமாக மாஜாலாம் நடக்கும் என குறி சொல்கிறாரே?🤣
- Today
-
மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
🤣........... இரண்டு மாதங்களே இப்படி என்றல் இரண்டரை வருடங்கள் என்றால் எப்படியிருக்கும் என்கின்றீர்கள்.................... 87ம் ஆண்டில் ஏ லெவல் எடுத்து பல்கலை அனுமதி கிடைத்தது. இலங்கை அரசு ஜேவிபி பிரச்சனையை தற்காலிகமாக இல்லாமல் ஆக்கி தெற்குப் பல்கலைகளை மீண்டும் திறக்கும் போது 90ம் ஆண்டு ஆகிவிட்டது......... அவ்வளவு நாட்களும் ஊரிலேயே இருந்தேன். நண்பர்கள் கனடா, லண்டன், ஜேர்மனி, கப்பல் என்று போய்க் கொண்டேயிருந்தார்கள். கடைசி ஆளாக ஓரிருவர் நின்று கொண்டிருந்தோம். வழியே இல்லை என்று தான் நினைத்தேன். இலங்கை இராணுவம், இந்திய இராணுவம், மீண்டும் இலங்கை இராணுவம், இயக்கங்கள் என்று வாழ்க்கை ஓட்டமும் நடையுமாக போய்க் கொண்டிருந்தது. மினி சினிமாவில் நிறையப் படங்கள் பார்த்தேன். அதற்காகவே ஒரு மினி சினிமாவில் வேலை செய்தேன்................😜. ஊரில் உள்ள சில வாசிகசாலைகளின் சாவிகள் கூட என்னிடம் இருந்தன..................🤣. 90ம் ஆண்டுக்கு பின் நடந்தது அதை விட விசித்திரம். முன்னைய நாட்களில் எங்கள் ஊரவர்கள் கடல் கடந்து கோடியாக்கரைக்கு போய் படம் பார்ப்பார்கள் என்று சொல்லுவார்கள். என் அம்மா கூட அவரின் சிறு வயதில் தானே படம் பார்க்க கோடியாக்கரைக்கு வள்ளத்தில் போனதாகச் சொல்லியிருக்கின்றார்...............🫢. பல்கலைக்கு போய் சில நாட்களிலேயே இந்தியாவில் இருந்து ஒரு கடிதம்.......... இந்தியாவில் இருந்து நமக்கு யாரடா கடிதம் போடுகின்றது என்று பார்த்தால்................ படம் பார்க்க இந்தியா போகின்ற கோஷ்டி குடும்பமாக ஊரையே காலி செய்து விட்டு, தமிழ்நாட்டுக்கு போய்ச் சேர்ந்து விட்டார்கள்....................... அதை ஒரு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்கள். செய்தியை புறாவின் காலில் கட்டி அனுப்பாமல் விட்டார்களே..............🤣. ஆனாலும் களத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் நடப்பது போலவே, என்னுடைய தெரிவுகள் அப்பப்ப சரியாக வேலை செய்தன.............. அம்மா செய்த புண்ணியங்கள் போல................ இங்கு அமெரிக்காவில் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். வயதானவர். இந்தியர். நான் கோவிலுக்கு போவதில்லை என்பதையும், என் மனைவி எப்போதும் கோவிலுக்கு போவதையும் அவதானித்து இருந்தார். ஏன் போவதில்லை என்று கேட்டார். பெரிதாக நம்பிக்கை இல்லை என்றேன். நீ அங்கே கும்பிட வேண்டாம், ஆனால் நன்றி சொல்ல வேண்டும், யாருக்காவது நீ நன்றி சொல்ல வேண்டும்.................. இப்படி ஒரு வாழ்க்கை எத்தனையோ கோடி மக்களுக்கு இந்த உலகில் கிடைப்பதில்லை என்றார்................... போகும் போதெல்லாம் 'மிக்க நன்றி கடவுளே.............' என்று சொல்லுகின்றேன்.............
-
மூன்று கவிதைகள் / 26"
மூன்று கவிதைகள் / 26" புகைப்படக் கவிதை' பனி பொழியும் மாலை வேளையிலே பணி முடித்து எட்டிப் பார்க்கிறேன்! பகலோன் கதிரும் ஓய்ந்து விட்டது பஞ்சுபஞ்சாய் வான் கொட்டித் தீர்க்குது!! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ........................................................... "மின்னலாய் ஒரு பின்னல்" [வண்ணம், புன்னகை, கன்னம் & கண்ணீர்] வண்ணம் கொண்ட அழகு ஆடையிலே புன்னகை பொழியும் அணங்கே! கன்னம் சிவந்தது யாராலோ? கண்ணீர் ததும்பும் ஆனந்தம் இதுவோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................ 'நீயின்றி நானில்லை கண்ணே' நீயின்றி நானில்லை கண்ணே- உன் நிழலின்றி வாழ்வு ஏது மண்ணில்? மூச்சின்றி பிழைப்பில்லை பெண்ணே - என் கிழத்தியின்றி இயக்கம் எங்கே என்னில்? உயிரின்றி உடலில்லை நுண்ணிடையே - தேன் மொழியின்றி இன்பம் யாது உலகில்? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் துளி/DROP: 2055 ["மூன்று கவிதைகள் / 26" https://www.facebook.com/groups/978753388866632/posts/33980369108278301/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 114 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 114 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது மகா பரிநிர்வாணமும்" மேலே கூறிய சில உண்மைகளை கீழே கொஞ்சம் விபரமாகத் மீண்டும் தருகிறேன் மேலும் இலங்கை நாளாகமம்களில் மட்டுமே, புத்தர் இலங்கையை ஆசீர்வதிக்கவும் எதிர்காலத்தில் பௌத்தத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மூன்று முறை விஜயம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், நவீன வரலாற்றாசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் (உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில்) பொதுவாக இந்த வருகைகளை சிங்கள பௌத்த இராச்சியத்திற்கு மத மற்றும் கலாச்சார சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குவதற்காக வரலாற்றாசிரியர்களால் உருவாக்கப்பட்ட குறியீட்டு அல்லது புராண அலங்காரங்களாகக் மட்டுமே [symbolic or legendary embellishments] கருதுகின்றனர். அது மட்டும் அல்ல, இந்த வருகைகளை உண்மையான வரலாற்று நிகழ்வுகளாக எந்த உறுதியான வரலாற்று அல்லது தொல்பொருள் சான்றுகளும் எள்ளளவும் ஆதரிக்கவும் இல்லை இலங்கையின் வரலாற்றில், குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டின் இன மோதலின் போது, மதம் பெரும்பாலும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது என்பது யாவரும் அறிந்ததே. மேலும் இன மோதலின் மூல காரணங்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன - பாகுபாடு, மொழிக் கொள்கை, அரசியல் ஓரங்கட்டல் மற்றும் அரசு ஆதரவுடன் வன்முறை [discrimination, language policy, political marginalization, and state-sponsored violence] ஆகும். மேலும் மத மற்றும் வரலாற்று விவரிப்புகள் [Religious and historical narratives] உண்மையில் தீவிரவாதக் குழுக்களும் அரசியல் தலைவர்களும் தங்கள் செயல்களை நியாயப்படுத்தவும் சிங்கள-பௌத்த தேசியவாதத்தைத் தூண்டவும் தவறாகப் பயன்படுத்தின என்பதே உண்மையாகும். இதனால், கிமு 544 தேதிக்கும் வன்முறைச் செயல்களுக்கும் இடையிலான நேரடி தொடர்பு ஒரு அடையாளமாக இருந்து இருக்கலாம் என்று எண்ணுகிறேன். மதிப்பிற்குரிய ஆனால் சில சமயங்களில் தேசியவாத தொல்பொருள் ஆராய்ச்சியாளரான எஸ். பரணவிதானா, மற்றும் நன்கு அறியப்பட்ட வரலாற்றாசிரியரான ஜி.சி. மெண்டிஸ், [Paranavitana and G.C. Mendis] இருவரும் தங்கள் படைப்புகளில் புத்தரின் மகாபரிநிர்வாணத்திற்கான பாரம்பரிய கி.மு 544 தேதியை ஆதரித்தனர். இந்த தேதி இலங்கையில் பின்பற்றப்படும் பண்டைய பௌத்த சகாப்த முறையிலிருந்து வருகிறது, ஆனால் நவீன சர்வதேச புலமை [but modern international scholarship generally places the Buddha’s passing around 400–480 B.C.] பொதுவாக புத்தரின் மறைவை கி.மு 400–480 இல் வைக்கிறது. இன்னும் விபரமாக அலசுவோமானால், இந்த தேதிகள், புத்தரின் மகாபரிநிர்வாணத்திலிருந்து அசோக மன்னனின் முடிசூட்டு விழா வரையிலான காலத்தை மையமாகக் கொண்டுள்ளது. மகாபரிநிர்வாணத்திலிருந்து அசோக மன்னனின் பட்டாபிஷேகம் வரை இருநூற்று பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன என்று இலங்கை நாளாகமம் கூறுகிறது. மன்னர்கள் அசோகர், பிந்துசாரர் (அசோகரின் தந்தை) மற்றும் சந்திரகுப்தர் (பிந்துசாரரின் தந்தை) [The kings Asoka, Bindusara (Asoka’s father) and Chandragupta (Bindusara’s father) ] ஆகியோர் இந்திய வரலாற்று ஆளுமைகள் தனித்துவமாக காணப்படுகிறது. முன்னைய காலத்தில், மகா அலெக்சாண்டர் [Alexander] இந்தியா மீது படையெடுத்தார், அது நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்று நிகழ்வு ஆகும். இதன் படி, சந்திரகுப்தர் மகா அலெக்சாண்டரின் மரணத்துடன் ஒத்திசைக்கப்படலாம் [Chandragupta could be synchronized with the death of Alexander the Great]. அதாவது, ஒரேகாலத்தில் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. மகா அலெக்சாண்டர் [Alexander the Great] கி.மு. 323 ஆம் ஆண்டு இறந்தார். இந்த செய்தி மன்னர் சந்திரகுப்தருக்கு நந்த வம்சத்தைத் தாக்க ஒரு உந்துதலை அளித்திருக்கும் [would have given an impetus to the King Chandragupta to attack the Nanda dynasty] எனக் கருதலாம். உதாரணமாக, தாக்குதலுக்குத் தயாராக சந்திரகுப்தர் சுமார் இரண்டு ஆண்டுகள் செலவிட்டிருந்தால், கி.மு 321 ஆம் ஆண்டில் அரியணை ஏறியிருக்கலாம். மேலும் இந்த ஆண்டு வில்ஹெம் லுட்விக் கெய்கர் அல்லது வில்லெம் கெய்கரின் [Wilhelm Geiger] மகாவம்சத்தின் மொழிபெயர்ப்பில் அறிமுகப் பக்கம் XLVI இல் கொடுக்கப்பட்டுள்ளது. அசோகர், பிந்துசாரர் (அசோகரின் தந்தை) மற்றும் சந்திரகுப்தர் (அசோகரின் தாத்தா) [kings Asoka, Bindusara (Asoka’s father) and Chandragupta (Asoka’s grandfather)] ஆகிய மன்னர்களின் ஆட்சிக்காலம் மகாவாசம், இந்திய மற்றும் பர்மிய [Mahavasa, Indian and Burmese] ஆதாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக, மகாவம்சத்தில், மரியாதைக்குரிய இந்த ஒவ்வொரு மன்னர்களின் முடிசூட்டு விழாவிற்கு பிறகு, ஒவ்வொருவரும் 24, 28 & 37 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். எனவே இவற்றை அடிப்படையாகக் கொண்டு, மேலும் கி.மு 321 இல் சந்திரகுப்தரின் முடிசூட்டு விழாவின் அடிப்படையில், அசோகரின் முடிசூட்டு விழா கி.மு 321-24-28 = கி.மு 269 இல் நடந்திருக்க வேண்டும் எனலாம். [இங்கே 24 [சந்திரகுப்தர் (அசோகரின் தாத்தா)] & 28 [பிந்துசாரர் (அசோகரின் தந்தை)]]. Part: 114 / APPENDIX – "The Buddha and his Mahaparinirvana" This pivots on the time elapsed from the Buddha’s Mahaparinirvana to the consecration of the King Asoka. The Ceylon Chronicles state that two hundred and eighteen years passed since the Mahaparinirvana to the consecration of the King Asoka. The kings Asoka, Bindusara (Asoka’s father) and Chandragupta (Bindusara’s father) are Indian historical personalities. That Alexander the Great invaded India and it is a well-documented historical event. Chandragupta could be synchronized with the death of Alexander the Great. Alexander the Great died on the year 323 B. C. and this news would have given an impetus to the King Chandragupta to attack the Nanda dynasty. If he had spent about two years preparing for the attack, then Chandragupta could have ascended the throne in the year 321 B. C. This is the year given in Wilhelm Geiger’s translation of the Mahavamsa in the introductory page XLVI. The length of the reigns of the kings Asoka, Bindusara (Asoka’s father) and Chandragupta (Asoka’s grandfather), are mentioned in Mahavasa, Indian and Burmese sources. For example in Mahavamsa it is stated as 24, 28 & 37 years after the coronation of the respected kings. Based on these as well as Based on the coronation of Chandragupta on the year 321 B.C, Asoka’s coronation should have taken place on, 321-24-28 = 269 B.C. [here 24 [Chandragupta (Asoka’s grandfather)] & 28 [Bindusara (Asoka’s father)]]. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 115 தொடரும் / Will follow துளி/DROP: 2056 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 114 https://www.facebook.com/groups/978753388866632/posts/33981025171546028/?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வந்தாலே வரவில் வைப்போம்… விட்டுப்போனா செலவில் வைப்போம்… அதான் வரணுமே😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அரையிறுதி மட்டும் பொம்மைகளைப் போடுவது கஷ்டம்! நாளைக்கு ஒன்றைப் போடுகின்றேன்☺️
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣............... சாமியே எழும்பி தலை தெறிக்க ஓடினாலும் பூசாரி விடப் போவதில்லை போல................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இப்ப ஒரு நாளுக்கு ஒரு போட்டி நாளை இலங்கை வென்றால் பாக்கிஸ்தானையும் வெல்ல பாப்பினம் தோத்தால் அம்மட்டும் தான்..................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣.................. எனக்கு சம்பவங்கள் நடக்கும் விதத்தை அங்கே கோஷானின் கதையின் கீழே எழுதுவது தான் பொருத்தமாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால்: '............ முன்னோடு நூலும் இல்லை பின்னோடு வாலும் இல்லை காற்றோடு போகும் காற்றாடி................'
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நக்கல் ஹா ஹா😁😄................. ஆரம்ப சுற்றுப் போட்டி நடந்த போது பொழுது போனது தெரியல
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் நினைக்கிறேன் தாவூத் இப்ராஹீம்தான் வீரபையன் என்ற பெயரில் எழுதுகிறார் என 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை நாளை மாஜிக் காட்டக் கூடும் பாப்போம் நடக்குதான்னு ஹா ஹா..................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளைக்கி @வாதவூரான் வாதவூரனும்…. மச்சான் யூகே விசா ஓகே ஆயிட்டடா எண்டு கிளம்பும் நாள் 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
👍.............நன்றி இது நான் நேற்று எழுதி நான் எனது கணிப்பு பிழைக்கல ................ஆனால் இங்லாந் கப்டன் விளையாட்டை தன் வசப் படுத்துவார் என்று நினைக்கல............அவர் வந்த கையோட வான வேடிக்கை காட்டினார்...............நல்ல கப்டன் நல்ல விளையாட்டு.............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@புலவர் புலவர் அண்ணா இனி எங்களுக்கு புள்ளி கிடைக்க வாய்பில்லை ஆரம்ப சுற்றுப் போட்டியில் கணிப்புகள் கிட்ட தட்ட சரியா வந்தது சூப்பர்8க்கு பிறக்கு எல்லாம் தலைகீழா போச்சு எங்கட பஞ்சு பஞ்சு டையிலாக்குத் தான் ஞாபகத்துக்கு வருது உப்பு விக்க போனால் மழை பெய்யுது மா விக்க போனால் காற்று வீசுது ஹா ஹா......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் அணியினர் யாழ்களத்தில் உங்கள் பதிவினை உற்று கவனிக்கிறார்கள் என நினைக்கிறேன், நாணய சுழற்சியில் வென்று நீங்கள் கூறிய மாதிரியே பந்து வீச்சினை தெரிவு செய்துள்ளனர், அதே போல நீங்கள் கூறிய ஓட்ட இலக்கினையும் எடுத்துள்ளனர், இதனை விட வேறு என்ன ஆதாரம் வேணும்? அப்படியே இன்றைய போட்டி நிலமையினை சொல்லிவிடுங்கள், பார்ப்பதற்கு இலகுவாக இருக்கும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
விளையாடிட்டு இருக்கும் போது நான் கணிச்சது............... இதே பிரேமதாசா மைதானம் என்றால் என்னால் முன் கூட்டியே கணிக்க முடியும்...................ஏன் என்றால் இந்த உலக கோப்பையில் ரன்ஸ் அடிக்க சிரமம் ஆன மைதானம் இதுவே தான்😄😁.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலில் ஓட்டத்தினை கணிக்க முடியாது என சொன்ன உங்களுக்கு எப்படி பின்னர் சரியாக ஓட்டத்தினை கணிக்க முடிந்தது, இதெல்லாம் ஜக்கமாவின் அருள்தான்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியாவை பாருங்கோ -3.800 நிக்கினம் இனி வரும் இரண்டு விளையாட்டை கண்டிப்பாய் வெல்லனும் அதோட அமோக வெற்றியாய் இருக்கனும் இல்லையேன் இவை வெளிய.....................
-
சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் வடக்கிற்கு விஜயம்
சும்மா பகிடி விடாதையுங்கோ.😂...அங்க ஹெலிகப்பட்டர் இறக்க ஏழுமே? எங்கன்ட சனம் கஸ்டப்பட்டு ஹெலிபாட் செய்தால் இவையள் வந்து இறங்கி படம் போடுவியினம்
-
சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் வடக்கிற்கு விஜயம்
அந்த இடத்தை வேதநாயகனும் ...இளங்குமரனும் காட்ட மாட்டினம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நகை அடைவு வச்செல்லே போட்டனான்...ஆராவது..ஜக்கம்மவிடம் சொல்லிவிடுங்கோ
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வெஸ்சின்டீஸ் அணி புள்ளி அடிப்படையில் நல்ல நிலையில் நிக்கினம் இந்தியா வெஸ்சின்டீஸ் அணிய பெரிய புள்ளி வித்தியாசத்தில் வெல்லனும் ஆனால் வாய்ப்பு மிக குறைவு..............தென் ஆபிரிக்கா வெஸ்சின்டிஸ் அணியிடம் தோத்து சிம்பாவேய வென்றால் கூட இந்தியா வெளிய😁............................