Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Today
  2. உறைப்பா ரண்டு பானிப்பூரியச் சாப்பிட்டுப் போக வேண்டியதுதான்.
  3. நாங்க தாங்காத சுமையா… பைனலில் வெண்டா போகும் இடமெல்லாம் பானிபூரி வாயனுகள் கெட்ட ஆட்டம் போடுவானுகளே😂
  4. பலத்த இராஜதந்திர சுழிஓட்டங்களுக்கு பின் ஈரானின் 2ம் கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்கு நகர்கிறது. இலங்கையின் நேவி கப்பலகளில் இரானிய மாலுமிகள் ஏற்றப்பட, கேப்டனும் ஓட்டிகளும் இலங்கை நேவியுடன் சேர்ந்து கப்பலை திருகோணமலைக்கு நகர்துகிறார்கள்.
  5. விளையாட்டுத்தானே. தாங்கித்தான் ஆகனும். தாங்கனும். ஆகனும்.😉
  6. அடேய்…புரூக்ஸ்….அநியாயப்படுவான்… எனக்கு இனி புள்ளியே வராது என்றதை விட… இந்தியா பைனலுக்கு போனதை என்னால் தாங்கி கொள்ள முடியாமல் இருக்கு😂.
  7. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 123 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 123 / பின் இணைப்பு - "புத்தரின் பண்புநலனுக்கும் அல்லது நடத்தைக்கும் இலங்கை நாளேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் " 'Ashoka in Ancient India by Nayanjot Lahiri' என்ற நூலின், பக்கம் 44 முதல் 45 வரை, பின்வருமாறு குறிக்கப் பட்டுள்ளது: "புத்தர் நடந்து சென்றதாகக் கூறப்படும் ஒரு கல் அங்கு இருந்தது. அந்தக் கல்லில் அவரின் இரு பாதங்களின் தடங்கள் இருந்ததாகவும், அது ஒரு புனித இடமாக கருதப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த இடத்தை மன்னர் சுற்றிலும் வேலியிட்டுப் பாதுகாத்திருந்தார்" என சீன பயணியாய் இருந்த சுவான்சாங் (யுவான் சுவாங் / Xuanzang) கூறிய விவரங்களை, நவீன தொல்லியலாளர்கள் பொதுவாக ஒப்புக் கொள்வதுடன் அவர் அளவீட்டு திறனுடன் மிகச் சரியாக விவரித்திருப்பதாக பாராட்டுகிறார்கள். உதாரணமாக, அந்த பாதத் தடங்களின் அளவை அவர், நீளம் 18 அங்குலம், அகலம் 6 அங்குலம் என குறிப்பிட்டுள்ளார். இது கூட ஒரு மனிதனுக்கு ஒப்பீட்டளவில் பெரியது என்று எண்ணுகிறேன். பாகிஸ்தானின் ஸ்வாட்டில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்தில் உள்ள புத்தரின் பாதச்சுவடு, ஐந்தாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் முறையே புனித யாத்திரை மேற்கொண்டு, வடக்கு ஸ்வாட்டில் புத்தரின் பாதச்சுவடை வணங்கிய சீன துறவிகள் ஃபாக்ஸியன் மற்றும் சுவான்சாங்கின் பயண பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. [Then there was a stone on which the Buddha had apparently walked, marked by the impression of both his feet, a sacred feature which the king had surrounded within an enclosure. Modern archaeologists read the Chinese traveller’s description of these details with approval, Xuanzang having shown the sorts of precise measuring skills that are staple of the discipline of archaeology: he mentions the dimensions of the sacred foot prints (18 inches long and 6 inches broad” Unquote. Even this is a comparatively big for a human being. A Buddha's footprint at the Archaeological Museum, Swat, in Pakistan, is thought to be the one mentioned in the travel records of the Chinese monks Faxien and Xuanzang, who made their pilgrimages in the fifth and the seventh centuries respectively, and worshipped a Buddha's footprint at the northern Swat.] தென்னிந்தியாவிற்கு, குறிப்பாக தமிழ் நாடுகளுக்கு, பொது ஊழி (Common Era) அல்லது பொதுக் காலம் அல்லது பொது ஆண்டு தொடங்குவதற்கு முன்பே, சமண மதமும் பௌத்தமும் வந்தன. கி.மு. முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு சமண மதம் தமிழ் நாடுகளுக்கு வந்தது, சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு புத்த மதம் தமிழ் நாடுகளுக்கு வந்தது. மன்னர்களும் பணக்காரர்களும் சமண துறவிகளுக்கு பாறை மேற்பரப்புகளை படுப்பதற்கு ஏற்றவாறு தயார் செய்து வந்தனர் என வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. மகாவம்சம், 10-97 இல் சமணர்கள் நிகந்தர்கள் [Niganthas] என்று குறிப்பிடப்படுகிறார்கள். உதாரணமாக, 10-94 :சண்டாள கிராமத்துக்கு வட கிழக்கில் சண்டாளர்களுக்காகத் தனியே தாழ்ந்தவர்களுக்கான ஒரு கல்லறை ஏற்படுத்தினான் . 95 இதற்கு வடக்கே, இதற்கும் பாசான மலைக்கு மிடையே வேடுவர்களுக்கான குடிசைகள் வரிசையாகக் கட்டப்பட்டன. 96 அதற்கும் வடக்கே காமனி வாபி வரை பல துறவிகளுக்கான ஒரு மடம் அமைக்கப்பட்டது. 97 அகற்குக் கிழக்கே அரசன் நிகந்த ஜோதியர் களுக்காக ஒரு வீட்டைக் கட்டினன். 98 அப்பிரதேசத்திலேயே கிரி என்னும் பெயருடைய நிகந்தரும், பல்வேறு மதப்பிரிவுகளைச் சேர்ந்த துறவிகளும் இருந்தனர். 99 அங்கு அரசன் நிகந்த கும்பந்தருக்காக ஒரு பிரார்த்தனை மண்டபத்தைக் கட்டினன். அது அவர் பெயரால் அழைக்கப்பட்டது. காமனிவாபி - இப்போது கரம்பவக்குளம் எனப்படுகிறது. நிகந்தஜோதியர்-சைனத் துறவிகள் - திகம்பரர்கள். திவாகர முனிவரால் பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டு, சைனர்களை (அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது. நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த துறவிகளின் (சைனர்) ஒரு பிரிவின் பெயர் தான் ஜோதியா ஆகும். அனுராதபுரத்தில் உள்ள நிகசுசனாவின் கிழக்கே பாண்டுகபாயா ஒரு வீட்டை, நிகந்தஜோதியருக்கு கட்டினார். மற்றும் தீபவம்சம், 7-34. நிறைய அரசரும் பிராமணர்களும் [Khattiyas and Brahmans / குறிப்பாக இந்திய வரலாறு மற்றும் மரபுகளின் சூழலில், "கட்டியா" என்பது போர்வீரன் அல்லது ஆளும் வர்க்கத்தின் உறுப்பினரைக் குறிக்கிறது.] புத்தரின் சீடராக வேண்டுமென்று விருப்பம் தெரிவித்தனர். இதனால் புத்த மதத்திற்கு பெரும் மதிப்பும் பெருமையும் வந்தது. 35. ஆனால் பிற மதத்தோரும் தவறான வழிகாட்டிகளும் [பிரிவினைவாதிகளும் மதவெறியர்களும்] தங்கள் ஆதாயம் மற்றும் மரியாதை இரண்டையும் இழந்தார்கள். உதாரணமாக பண்டரங்கர், ஜடிலர், நிகண்டர், அசேலகர் [Paṇḍaraṅgas and Jaṭilas, Nigaṇṭhas, Acelakas] ஆகியோர் ஆகும். இங்கு Paṇḍaraṅgas என்பது பிராமண துறவிகளின் ஒரு பிரிவு; அவர்கள் புத்தர் காலத்திலும் அசோகரின் காலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஒருவேளை அவர்கள் தங்கள் உடல்களை சாம்பலால் மூடியிருக்கலாம். அதே போல, Jaṭilas பிராமண துறவிகளின் ஒரு வகை, அவர்களின் பின்னப்பட்ட முடி காரணமாக அவ்வாறு அழைக்கப் பட்டு இருக்கலாம். Nigaṇṭhas நிகண்ட (நிिगण्ठ) அல்லது நியாண்ட அல்லது நிர்க்ரந்த என்பது ஒரு சமணத் துறவி அல்லது துறவியைக் (அதாவது, மகாவீரரைப் பின்பற்றுபவர்) குறிக்கிறது. Acelakas நிர்வாண துறவி; அதாவது. ஆடையற்ற துறவி ஆகும். 36. அவர்கள் ஏழு வருடங்கள் புத்த விகாரைகளில் தங்கினர். எனவே, அந்த காலத்தில் புத்த சமயத்தில் முக்கியமான நிகழ்வான உபோஸதம் [Uposatha ceremonies / பாரம்பரியமாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களிலும், சில சமயங்களில் கால் நிலவு நாட்களிலும் நடைபெறும் ஒரு புத்த மத சடங்கு, இது ஆன்மீக பிரதிபலிப்பு மற்றும் நெறிமுறை நடத்தையை வலியுறுத்துகிறது / a Buddhist ceremony of observance, traditionally held on new and full moon days, and sometimes on quarter moon days, that emphasizes spiritual reflection and ethical conduct] சரியாக நடக்கவில்லை. அதாவது, அது முழுமையடையாத சபைகளால் நடத்தப்பட்டன. எனவே, துறவிகள், புத்திசாலிகள் மற்றும் அடக்கமான ஆண்கள் உபோசத விழாக்களில் தோன்றவில்லை. சைனர்கள் [Jains] தமிழில் சமணர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். Part: 123 / APPENDIX – "Conflict between buddha's characters and the events mentioned in Ceylon chronicles" From the pages 44 to 45 of the Reference 'Ashoka in Ancient India by Nayanjot Lahiri' says: Quote “Then there was a stone on which the Buddha had apparently walked, marked by the impression of both his feet, a sacred feature which the king had surrounded within an enclosure. Modern archaeologists read the Chinese traveller’s description of these details with approval, Xuanzang having shown the sorts of precise measuring skills that are staple of the discipline of archaeology: he mentions the dimensions of the sacred foot prints (18 inches long and 6 inches broad” Unquote. Even this is a comparatively big for a human being. Jainism and Buddhism came to southern India, especially to Tamil countries, before the dawn of the Common Era. Jainism came to Tamil countries about three hundred year B.C., and Buddhism came to Tamil countries about one hundred years after. Kings and rich people used to prepare rock surfaces for Jain monks. Jains are referred as Niganthas in the Mahavamsa, 10-97, [North of this cemetery, between (it and) the Pasana-mountain, 95 the line of huts for the huntsmen were built thenceforth. Northward from thence, as far as the Gamani-tank, 96 a hermitage was made for many ascetics; eastward of that same 97 cemetery the ruler built a house for the nigantha [Name of a sect of ascetics (the Jains) who went about naked] Jotiya [Jotiya - A Nigantha, for whom Pandukabhaya built a house to the east of the Nicasusana at Anuradhapura]. and the Dipavamsa, 7-35. [ 34. Many Khattiyas and Brahmans declared their intention of becoming lay disciples, and great gain and honour accrued to the faith of Buddha; – 35. the schismatics and heretics lost both gain and honour. Paṇḍaraṅgas and Jaṭilas, Nigaṇṭhas, Acelakas, and others – 36. resided (in the Buddhist Vihāras) during seven years; the Uposatha ceremonies were performed by incomplete congregations; saintly, clever, and modest men did not appear at the Uposatha ceremonies.] Jains are referred to as Samannar in Tamil. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 124 தொடரும் / Will follow துளி/DROP: 2074 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 123 https://www.facebook.com/groups/978753388866632/posts/34137711259210751/?
  8. உலகக் கிண்ணம் ஒருவாறு முடிவுக்கு வருகிறது. சிறப்பாகச் செய்தீர்கள் கிருபன்.
  9. திருமணத்துக்கு அப்பாலன உறவு வைத்துள்ள எந்த பெரியாரிஸ்ட் தமிழ் நாட்டு தலைவரினதும் மனைவி, துணைவி எவரும் கோர்ட் படி ஏறவில்லை. ஆனால் தமிழ் தேசியம்(மும்) பேசும் சீமானுக்கும், விஜைக்கும்தான் இப்படி சீர்கேடு நடந்துள்ளது. ஆகவே இங்கே விஜை பெரியாரை விட, சீமானை வழிஒற்றி நட்ச்க்கிறார் என்பதே சரி 😂. கொம்பிளைண்டே விஜிதான் கோவிலில் மலை மாற்றிய முதல் மனைவி என்பதுதான். அந்த திருமண நிகர் உறவில் இருந்தபடி, இரெண்டாவதாக கயல் அண்ணியோடும் திருமணபந்ததை ஏற்படுத்தி கொண்டார் என்பதே விஜி அண்ணியின் முறைப்பாடு.
  10. "மூன்று கவிதைகள் / 28" 'மின்னலாய் ஒரு பின்னல்' [சாந்தம், புயல், வசந்தம் & கானம்] சாந்தம் பூத்த மனது இன்று புயல் மோதித் தடுமாறி வசந்தம் என எண்ணி கானம் இசைத்துக் கரைந்து போனது கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ................................................... ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது! திண்ணிய நெஞ்சில் தன்னம்பிக்கை நிலைக்க மண்ணில் புகழும் மங்காது நிலைபெற நண்ணிய வாழ்வு பொன்னாய் மிளிர்கிறது! தெளிவான பாதை எனக்குக் காட்டிட துளிதுளி இன்பம் மனதில் பூக்க ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்பாணம் ............................................................ 'இன்பமான இரவிதுவே இனிமைப் பொங்கும் நல்லுறவே' இன்பமான இரவிதுவே இனிமைப் பொங்கும் அன்புப் பூக்கள் மணம்வீசும் நல்லுறவே! தெள்ளிய நிலவின் ஒளியில் நனைவோம் உள்ளம் மகிழ்ந்து உவகை கொள்வோம் கள்ளமில்லா வெள்ளை உள்ளம் கொண்டவளே மெல்லிசை பாடி மெய்மறந்து ஆடுவோம்! துள்ளிடும் இன்பம் சொல்லில் அடங்காது அள்ளிடும் காதல் என்றும் குறையாது தெளிவான பாதையில் இருவரும் இணைந்து ஒளிமயமான வாழ்வை இனிதே நிறைவேற்றுவோம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 2073 ["மூன்று கவிதைகள் / 28" https://www.facebook.com/groups/978753388866632/posts/34137375435911000/?
  11. இரண்டு அரை இறுதியும் அதிரடி. நேற்று நிசியின் போட்டி ஒரு சர வெடி என்றால் இன்று இங்கிலாந்து செய்தது புயலடி. சழைக்காமல் கடைசி வரையும் நின்றான் பெத்தல். அருமையான ஆட்டம். வடிவா கணிச்சு ஒவ்வொரு பந்துப் பரிமாற்றத்திலும் ஓட்ட விகிதத்த கட்டுக்குள்ளேயே வைத்திருந்தான். ஆனால் விக்கட்டுகளை இழந்ததால், உதவி இல்லாமல் போய்விட்டது. ஜாக்ஸின் விக்கட் இழப்புடன் போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பியது. அக்ஸர்தான் நாயகன். ஜாக்ஸின் பிடியை எல்லைக் கோட்டில் வைத்துப் பிடித்து, தான் விழ முதல், சிவத்தின் கையில் எறிந்தான். அது எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.
  12. இன்று நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணி, சஞ்சு சாம்சனின் மின்னல்வேக 89 (42 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷிவம் டுபேயின் வேகமான 43 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், இஷன் கிஷனின் அதிரடியான 39 (18 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஹர்திக் பாண்டியாவின் விரைவுச் சூடான 27 (12 பந்துகள்) ஓட்டங்களுடனும், திலக் வர்மாவின் அதிவேகமான 21 (07 பந்துகள்) ஓட்டங்களோடும் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஜொஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 61 ஓட்டங்களைக் கொடுத்திருந்தார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே எல்லைக்கோட்டுக்கு வெளியே பந்துகளைச் சிதறடித்து பின்தொடர ஆரம்பித்ததனால் விக்கெட்டுகளை இழக்கவேண்டி ஏற்பட்டது. எனினும் ஜேக்கப் பெத்தெல்லின் அபாரமான மரண அடியுடன் எடுத்த செஞ்சுரியான 105 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், வில் ஜக்ஸின் வேகமான 35 (20 பந்துகள்) ஓட்டங்களோடும் வெற்றி இலக்கை அண்மித்தபோதும் இறுதி ஓவரில் ஜேக்கப் பெத்தல் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்த பின்னர் ஜொஃப்ரா ஆர்ச்சர் 3 சிக்ஸர்களை அடித்தும் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ஓட்டங்களையே எடுத்தது. வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 64 ஓட்டங்களை இறைத்திருந்தார்! முடிவு: இந்திய அணி 7 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அத்தோடு இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியையும் பெற்றது. யாழ் களப் போட்டியாளர்களில் 21 பேர் இந்திய அணி ஏதாவது ஒரு அரையிறுதிப் போட்டி வெல்லும் எனக் கணித்திருந்தமையால், தலா மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றது! இருவர் இந்திய அணி வெல்லும் எனக் கணிக்காததால் அவர்களுக்கு புள்ளிகள் இல்லை. இரண்டாவது அரையிறுதிப் போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  13. பெத்தல் இந்தியாவை பேர்த்துட்டான் ...இந்திய தப்பினது தம்பிரான் புண்ணியம் சஞ் சுவுக்கு...சுக்கிரதசை ஆரம்பம்
  14. நியூஸிலாந்து கப் தூக்கினால் ஒருத்தருக்கும் புள்ளி இல்லை😂
  15. சின்னச் சின்ன நிகழ்வுகள்தான் போட்டியின் திசையை மாற்றியது. அக்ஸரின் இரண்டு பிடிகள். பாண்டியாவின் கடைசிப் பந்துப் பரிமாற்றம். பாண்டியாவின் எறி. பெத்தலை ஓட்டமிழக்க வைத்தது. இங்கிலாந்து தவற விட்ட சாஞ்சுவின் பிடி.
  16. திருமண விழாவிற்கு சோடியாக வந்த விஜய், திரிஷா. காணொளி: 👉 https://www.facebook.com/reel/1406221364085514 👈 சோடிப் பொருத்தம் எப்படி உள்ளது... ப்ரோ. 😂
  17. சுரேஷ் சலே வழங்கிய ஆயுதங்கள் குறித்து விசாரணை செய்க - சாணக்கியன் எம்.பி வலியுறுத்தல்! 05 Mar, 2026 | 05:19 PM ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கிழக்கு மாகாணத்தில் புலனாய்வு பிரிவு ஊடாக சேவையாற்றிய போது இஸ்லாமிக் சென்டர் அமைப்புக்கு வழங்கிய ஆயுதங்கள் மற்றும் பிற்பட்ட காலங்களில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அரச புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தற்போது கைது செய்யப்பட்டுள்ள பின்னணியில் முன்வைக்கப்படும் இந்த கேள்விகளுக்கு பதிலை ஆராய்வது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். இலங்கை இராணுவத்தால் தேடப்பட்ட கோபி, அப்பன் மற்றும் தேவிகன் ஆகியோர் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் அரசியல்வாதி ஒருவரின் காட்டிக்கொடுப்பினால் 2000 இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு வவுனியா நெடுங்கேணி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. இதில் காட்டிக்கொடுக்கப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. கிளிநொச்சி பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களும் இவ்விடயத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆகவே இது தொடர்பான புகைப்படத்தை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். ஜனாதிபதித்தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை வெற்றிபெற வைக்கவே புலிகள் மீள் உருவாக்கம் செய்யப்படுகின்றனர் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயன்ற இந்த மூவரும் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது தப்பியோட முயற்சித்த நிலையில் மூவரும் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. எனவே இந்த சம்பவத்தையும் மீண்டும் விசாரணை செய்தால் தற்போதைய விசாரணைகளுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். அரச புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தில் புலனாய்வு பிரிவு ஊடாக சேவையாற்றிய போது இஸ்லாமிக் சென்டர் அமைப்புக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற்பட்ட காலங்களில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விபரங்களை நான் தனிப்பட்ட முறையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்கிறேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஆயுதங்கள் தற்போது கிடைக்கப்பெறுகின்றன. இவர்கள் வைத்த ஆயுதங்களை இவர்களே தற்போது மீள வழங்குகிறார்கள். இந்த பிரச்சினைகள் தொடர்பில் ஆராய வேண்டும். அது தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு சாதகமாக அமையும் என்றார். இதற்கு எழுந்து பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, முன்வைக்கப்பட்ட விடயங்களில் ஒருபகுதி பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடையது. ஆகவே விரிவான பதிலை நாளை (இன்று வெள்ளிக்கிழமை ) முன்வைக்கிறேன் என்றார். சுரேஷ் சலே வழங்கிய ஆயுதங்கள் குறித்து விசாரணை செய்க - சாணக்கியன் எம்.பி வலியுறுத்தல்!
  18. பெத்தல். அருமையான ஆட்டம். இந்தியாவுக்குப் பீதியக் குடுத்துவிட்டான். மிக இலகுவாக சுழல் பந்தாளர்களை எதிர் கொண்டார்.
  19. இந்தியா வெற்றி. இறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு ஆதரவு
  20. ஆறே பந்துகள். 30 ஓட்டங்கள். பாண்டியாவின் அந்தப் பரிமாற்றம். Excellent.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.