Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. Today
  3. ஏ.ஆர்.ரஹ்மான் கருத்தால் சர்ச்சை – தமிழ் சினிமா கலைஞர்கள் என்ன சொல்கிறார்கள்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் மீனாட்சிசுந்தரம் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் பிபிசிக்கு அளித்த பேட்டியில், அவர் மனம் திறந்து சொன்ன வார்த்தைகள், குறிப்பிட்ட சில விஷயங்கள் சில நாட்களாக விவாதப் பொருளாகி இருக்கின்றன. ''பாலிவுட்டில் தமிழ் சமூகத்திற்கு எதிராக இன்றும் நிறைய பாகுபாடு நிலவுவதை நான் பார்க்கிறேன். 90களில் அது எப்படி இருந்தது? நீங்கள் எப்போதாவது அதை எதிர்கொண்டீர்களா?'' என நேர்காணல் எடுத்த ஹரூண் ரஷீத் கேட்டார். அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், ''நான் எதிர்கொள்ளாமல் இருந்திருக்கலாம். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிய வரவில்லை. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் இருக்கலாம். ஒருவேளை அதிகார மாற்றம் நடந்திருக்கலாம். முடிவெடுக்கும் அதிகாரம் படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது இருக்கிறது. இது ஒருவேளை வகுப்புவாத விஷயமாகவும் இருந்திருக்கலாம். என் கண் முன்பாக நடக்கவில்லை. ஆனால் இது நடந்தது'' என்றார். மேலும் 'சாவா' படம் பற்றி பேசுகையில், "அது பிளவுபடுத்தும் படம்தான். அதன் மூலம் அப்படம் பணம் ஈட்டியதாக நினைக்கிறேன். ஆனால், அதன் மையக்கருத்து வீரத்தைப் பற்றியது என நினைக்கிறேன்" என்றார். முழு பேட்டி பல விஷயங்களை விரிவாகச் சொல்லியிருந்தாலும், இப்படிப்பட்ட அவரின் சில கருத்துகள் சர்ச்சைகளைக் கிளப்பின. ஏ.ஆர். ரஹ்மானின் கூற்றுக்கு பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பலரும் எதிர்வினையாற்றினர். ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து தான் கூறிய கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ மூலமாக விளக்கம் அளித்தார். தான் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை என்றும், இந்தியா எப்போதுமே தனது வீடு, ஆசிரியர் மற்றும் மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் கோபம் தனது தந்தையின் பேட்டி, அவர் மீதான விமர்சனங்கள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் மகளும், இசையமைப்பாளர், பாடகியுமான கதீஜா, "தான் உணர்ந்த ஒரு விஷயத்தை அவர் பேசி இருக்கிறார். அது அவரது உரிமை. உங்களுக்கு வேறு கருத்து இருக்கலாம், ஆனால், அவர் பேசவே கூடாது என அவரது உரிமையை மறுக்கக் கூடாது. உலகளவில் மதிக்கப்படும் ஒரு கலைஞனை அவமானம் என சொல்வது, நம்பிக்கை மீது கேள்வி எழுப்புவது எல்லாம் விமர்சனம் அல்ல. இதெல்லாம் வெறுப்பு பேச்சு" என சமூக ஊடகங்களில் கூறியுள்ளார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சாவா படம் பற்றி பேசுகையில், "அது பிளவுபடுத்தும் படம்தான். அதன்மூலம் அப்படம் பணம் ஈட்டியதாக நான் நினைக்கிறேன்" என்றார் ஏ.ஆர்.ரஹ்மான் 'அமீர் கான், ஷாருக்கான், இப்போது ஏ.ஆர்.ரஹ்மான்' இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் 14 ஆண்டுகளுக்கு மேல் உதவியாளராக பணியாற்றியவரும், தற்போது இசையமைப்பாளராக இருப்பவருமான தாஜ்நுார் பிபிசி தமிழிடம், ''முந்தைய காலங்களில் இப்படிப்பட்ட அழுத்தம் இல்லை. இப்போது இருப்பதாக தோன்றுகிறது. உண்மையை சொன்னால் அவர் மட்டுமல்ல, அப்படிப்பட்ட பாகுபாட்டை பலரும் அனுபவிக்கிறார்கள்.'' என்றார் ''இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது கொடுத்தவருக்கே இப்படிப்பட்ட நிலை என்று சொல்லும் அளவுக்கு எதிர்தரப்பின் தாக்கம் அதிகரித்திருக்கிறது" என்றார். மேலும், "பாலிவுட்டில் அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான் இல்லையா? 'அவர்கள் கொடிகட்டி பறக்கவில்லையா' என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கும் பிரச்னைகள் இருக்கின்றன. அது பல நேரங்களில் வெளிப்பட்டு இருக்கிறது. இத்தனை நாட்கள் ஏ.ஆர்.ரஹ்மான் எதையும் வெளியில் சொல்லவில்லை. ஒரு கட்டத்தில் சொல்லியிருக்கிறார்'' என்கிறார் தாஜ்நுார். பட மூலாதாரம்,Getty Images 'இசைக் கச்சேரிகளில் கவனம் செலுத்துகிறார்' இசையமைப்பாளரும், பாஜக நிர்வாகியுமான தீனா பிபிசி தமிழிடம், ''சினிமாவில் மாற்றங்கள் வரும். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வந்த மாற்றம் ஒரு காலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜாவுக்கும் வந்தது. புதியவர்கள் வரவால் மாற்றங்கள் நிகழ்ந்தன. அதற்காக யாருடைய திறமையையும் குறை சொல்ல முடியாது. இன்றைக்கு இசையமைப்பாளர்கள் சினிமா தவிர பல விஷயங்களில் புகழ், பணத்தை சம்பாதிக்கிறார்கள். சமீபகாலமாக ஏ.ஆர்.ரஹ்மான் கவனம் உலகம் முழுக்க இசை நிகழ்ச்சி நடத்துவதில் இருக்கிறது. அதனால் பட வாய்ப்புகள் குறைந்திருக்கலாம்.'' என்றார் ''மும்பையில் இன்னும் ஷாருக்கான், அமீர்கான் முன்னணியில் இருக்கிறார்களே? ஏ.ஆர்.ரஹ்மானை மட்டும் எப்படி புறக்கணிக்க முடியும்? அவர் மீது இந்திய மக்களுக்கு தனி மரியாதை, மதிப்பு உண்டு. அவரின் வெளிநாட்டு பயணம், நேரமின்மை காரணமாக சில விஷயங்கள் நடந்திருக்கலாம்.'' "அவர் இசைக்கு எப்போதும் 'மவுசு' உண்டு. அவர் இசை மக்கள் மனதில் இருக்கும்" என்கிறார் தினா. ''ஒவ்வொரு காலகட்டத்திலும் புதியவர்கள் வருவார்கள். இவ்வளவு ஏன், ஏ.ஆர்.ரஹ்மானே ராமாயணம் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அது, அவருக்கும் பெருமை. அவருக்கு வேலை குறையவில்லை. அடுத்த பெரிய வேலை வந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்'' என்கிறார் தீனா பட மூலாதாரம்,x படக்குறிப்பு,"ஏ.ஆர்.ரஹ்மான் கவனம் உலகம் முழுக்க இசை நிகழ்ச்சி நடத்துவதில் இருக்கிறது. அதனால் பட வாய்ப்புகள் குறைந்திருக்கலாம்" என்கிறார் தீனா 'களங்கம் தரும்' பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பிபிசி தமிழிடம் கூறுகையில் , 'பொதுவாக, 'கலை மக்களுக்காகவே' என்றும் 'கலை கலைக்காகவே' என்றும் இருவேறு தரப்பு உண்டு. முதலாளியம் வல்லாண்மை செய்யத் தொடங்கிய நொடியில் இருந்து இவை இரண்டையும் கடந்து 'கலை லாபத்திற்காகவே' என்ற நிலை உருவாகி ஆதிக்கம் செய்து வருவதைப் பார்க்கிறோம்.'' என்றார் ''இப்படியான சூழலில், தனது கலையை ஒரு கலைஞன் லாபமாக்க வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்படுகிறான். காலப்போக்கில் கலை என்பது பண்டம் என்ற நிலை மாறி கலைஞனே பண்டமாக உருவெடுக்கும் சூழ்நிலை வந்தது.'' என்றார் ''பெருங்கலைஞர்களுக்கு உலகமெங்கும் நடக்கும் ஒன்றுதான் இது. ஒரு கலைஞன் விலக்கப்படுவது அவனது கீழ்மையினால் என்றால் அது அறம் சார்ந்தது. ஆனால், பல்வேறு நுண்மையான நச்சுக் காரணங்களால் ஒரு கலைஞன் புறக்கணிக்கப்படுவது அல்லது ஒதுக்கப்படுவது கலைக்கு மட்டுமல்ல தேசத்திற்கே களங்கம் தரும்.'' என்கிறார் கார்த்திக் நேத்தா. '10 ஆண்டுகளாக இந்திய சினிமா மாறுகிறது' இயக்குனர் அமீரிடம் பிபிசி தமிழிடம் பேசியபோது, ''ஏ.ஆர்.ரஹ்மான் ஏன் பேசினார் என்று கேட்பதை விட, எதற்காக பேசினார் என்பதை நாம் யோசிக்க வேண்டும். ஆஸ்கர் விருதை இந்தியாவுக்கு வாங்கிக் கொடுத்தவர் இப்படி பேச காரணம் என்ன?'' என கேள்வி எழுப்பினர். ''இப்போது பாலிவுட்டில், மற்ற மொழிகளில் வேறு வகை படங்கள் அதிகம் வருகின்றன. 'பத்மாவத்' வருகிறது, 'காஷ்மீர் ஃபைல்ஸ்' வருகிறது. 'கேரளா ஸ்டோரி' வருகிறது. நம்பிநாராயணன் கதை வருகிறது. கேரளா ஸ்டோரி பற்றி, கர்நாடக தேர்தலில் பேசுகிறார்கள். சினிமா வேறு மாதிரி ஆகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பல மாற்றங்கள் நடக்கின்றன. இவ்வளவு ஏன், ரஹ்மானே சாவா படத்துக்கு இசையமைக்கிறார். பின்னர், பல விஷயங்களை உணர்ந்துகொள்கிறார்.'' என்கிறார் அமீர். ''அந்த பேட்டியில் அவர் பயன்படுத்திய வார்த்தைகளை உன்னிப்பாக கேளுங்கள். இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காத பண்பாளர் இப்படி பேச வேண்டிய தேவை என்ன? அதைப் புரிந்துகொள்ளுங்கள்." என்று கூறினார் அமீர். பட மூலாதாரம்,Getty Images 'கலை மீது பூசப்படும் சாயம் நாட்டுக்கே கேடு' பிபிசி தமிழிடம் பேசிய நடிகரும், இயக்குனரும் திமுகவை சேர்ந்தவருமான போஸ் வெங்கட், "கலைத்துறையில் சாதி, மதம், அரசியல், அதிகாரம் நுழைவது என்பது பஞ்சுகூடத்தில் தீ வைப்பது போல. ஒரு கலைஞனின் பேச்சும், படைப்பும் சுயநலமற்றது, அது அடர்ந்த காட்டில் மெல்லிய தென்றல் போன்றது. அதை, அதன் போக்கில் விடுவது சமூகத்திற்கு நல்லது . அதன் மீது பூசப்படும் சாயம் கலைக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே கேடு'' என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c89qq2gg1dzo
  4. என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முடியாது – எஸ்.சிறிதரன் 23 Jan, 2026 | 04:16 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்று ஒருசிலர் கருதுகிறார்கள்.எமது கட்சியிலும் ஒருசிலர் அவ்வாறே நினைக்கிறார்கள். என்மீது பழிசுமத்தி என்னை வெளியேற்றி பதவியை பெற்றுக்கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். அது வெறும் பகல் கனவு மாத்திரமே, எனது மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள். எனது மக்களுக்கான பணியை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளேன்.ஜனாதிபதியாகும் கனவு காணும் தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்துக்கு ஆடையணிந்துக் கொண்டு வருவாராயின் குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடாத காரணத்தால் தான் என்மீது எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று (நேற்று முன்தினம்) எனது பெயரை குறிப்பிட்டு பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு எனக்கு உள்ளது. தயாசிறி ஜயசேகர 2026.01.08 ஆம் திகதியன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரான எஸ்.சிறிதரனை அரசாங்கம் பயன்படுத்துகிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான ' தமிழ் சிலோன்' என்ற வலைத்தளத்தில் இந்த செய்தி முழுமையாக வெளியாகியிருந்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களுக்கு வசிப்பதற்கு இடமில்லை ஆனால் சிறிதரன் 1200 ஏக்கர் காணியை தன்வசப்படுத்தியுள்ளார். அதேபோல் சுமார் 7 கோடி ரூபா நிதியை சிறிதரனும் அவரது மகனும் வைப்பிலிட்டுள்ளார்கள் என்று தயாசிறி ஜயசேகர சபையில் குறிப்பிட்டிருந்தார். பூநகரி மின்னுற்பத்தி திட்டத்திலும் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தயாசிறி குறிப்பிட்டுள்ளார். எனது 16 ஆண்டுகால பாராளுமன்ற பயணத்தில் நீதியாகவும்இ நீதியாகவும் செயற்பட்டுள்ளேன்.அரசியலமைப்பு பேரவையில் நீதியாகவும், சுயாதீனமாகவும் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையில் தீர்மானங்களை எடுத்துள்ளேன். எவரும் என்னை நிர்பந்திக்கவில்லை. அரசாங்கத்துக்கு வால் பிடித்து அவர்களுக்கு சார்பாக செயற்பட வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை. பல கட்சிகளுக்கு தாவிச் செல்லும் தயாசிறி சிரேஷ்ட அரசியல்வாதியாவார். அவர் நேற்று (நேற்று முன்தினம்) பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட விடயங்கள் முற்றிலும் தவறானது. எந்த வங்கியில், யாரால், எப்போது நிதி வைப்பிலிடப்பட்டது என்பதை தயாசிறி குறிப்பிட வேண்டும். தயாசிறி ஜயசேகர சிங்கள பௌத்த அரசியல்வாதி மற்றும் நியாயமானவர் என்றால் அடுத்த பாராளுமன்ற அமர்வில் என்மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும்.உண்மையில் அவர் ஆடையுடன் தான் பாராளுமன்றத்துக்கு வருகிறார் என்றால் குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று உயரிய சபையில் வலியுறுத்துகிறேன். இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 2025.07.25 ஆம் திகதியன்று 'சிவில் புத்தி பெரமுன' என்ற அமைப்பின் உறுப்பினரான சஞ்சய் மாவத என்பவர் நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளித்தார் ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த முறைப்பாடு தொடர்பில் என்ன முறைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. ஏன் அறிக்கை வெளியிடவில்லை. அதேபோல் 2025.12.31 ஆம் திகதியன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் இவ்விடயம் தொடர்பில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. ஏன் இதுவரையில் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. பூநகரி மின்திட்டம் தொடர்பில் அப்பிரதேசத்தின் அரசாங்க அதிபர், அரச அதிகாரிகளை ஏன் இதுவரையில் விசாரிக்கவில்லை. தயாசிறி ஜயசேகரவிடம் தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள். தன்னை சிரேஷ்ட அரசியல்வாதியாக காட்டிக் கொள்ளும் தயாசிறி ஜயசேகர ஏன் பொய்யுரைக்க வேண்டும். தயாசிறி ஜயசேகர அண்மையில் என்னுடன் உரையாடும் போது ' எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளேன்.வடக்கு மக்கள் எனக்கு ஆதரவளிப்பார்களா' என்று கேட்டார். ' உங்களின் முகம் தமிழர்களுக்கு பரீட்சயமானது அல்ல ஆகவே முதலில் வடக்கு மாகாணம் உட்பட தமிழ் மக்களுடன் பழகுங்கள்' என்று அவருக்கு பதிலளித்தேன். பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நியாயமற்ற நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கையொப்பமிடுமாறு குறிப்பிட்டார்கள். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன் . எனது கட்சியும் அவ்வாறே குறிப்பிட்டது. எதிர்க்கட்சியில் இருந்துக் கொண்டு ஏதும் பேசலாம்,சேறுபூசலாம் என்பது நியாயமற்றது. கிபுல் ஓயா திட்டம், திருகோணமலை புத்தர் சிலை விவகாரம், தையிட்டி விவகாரம் பற்றி சஜித் பிரேமதாச, தயாசிறி ஜயசேகர ஏன் பேசவில்லை. சிறிதரன் தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து விட்டார் என்று கத்துகிறார்கள். வடக்கு மற்றும் கிழக்கில் 2 இலட்சம் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது, காணிகள் விடுவிக்கப்படவில்லை. இராணுவத்தினர் சலூன், முன்பிள்ளை பள்ளி நடத்துகிறார்கள். திறந்தவெளி சிறைச்சாலையாக யாழ்ப்பாணம் இருக்கிறது. வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி தான் இடம்பெறுகிறது. தயாசிறி, சஜித் ஆகியோர் ஏன் இதுபற்றி பேசுவதில்லை. இராணுவ அதிகாரி நியமனத்துக்கு சிறிதரன் ஆதரவளித்து விட்டார் என்று குறிப்பிடுகிறார்கள். 2024.01.21 ஆம் திகதியன்று நடத்தப்பட்ட தேர்தலில் .இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். இதனைத் தொடர்ந்து கனடாவில் உள்ள டி.பி.எஸ். ஜெயராஜ்' சிறிதரன் ஒரு பிரிவினைவாதி அவர் சமஸ்டி கோருகிறார்' என்று எழுதியுள்ளார். சிங்கள மக்களிடம் நான் பிரிவினைவாதி என்று குறிப்பிடுகிறார்கள். தமிழர்களிடம் நான் இராணுவ அதிகாரி நியமனத்துக்கு ஆதரவளித்ததாக குறிப்பிடுகிறார். நான் யாருக்குரியவன் என்பதை முதலில் குறிப்பிடுங்கள். நான் சிங்கள மக்களுக்கும் எதிரி, தமிழ் மக்களுக்கும் எதிரி என்கிறார்கள். இதன் பின்னணியின் நிகழ்ச்சி நிரல் என்ன,? தயாசிறி ஜயசேக,சாமர சம்பத் கூறுவதென்ன,2011. பங்குனி மாதம் அநுராதபுரம் உடுக்குளம் பகுதியில் கோட்டபய ராஜபக்ஷ தனது இராணுவ குழுவை வைத்து என்மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்டார். நான் மயிரிழையில் தப்பினேன். 2013 ஆம் ஆண்டு எனது அலுவலகத்தில் கைக்குண்டு வைக்கப்பட்டு எமது உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு 13 மாதங்கள் சிறைப்படுத்தப்பட்டார்கள். அதே காலப்பகுதில் எமது அலுவலகத்தில் சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சரவணபவன் ஆகியோர் .இருக்கும் போது 500 பேர் சிங்க கொடியுடன் வந்து அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். தயாசிறி ஜயசேகர இதுபற்றி ஏன் பேசவில்லை.சாமர சம்பத்,அம்பிகா சற்குணநாதன் ஆகியோர் அப்போது ஏன் பேசவில்லை. ஏன் என்னை தற்போது இலக்காக கொண்டு என் மீது பாய்கிறார்கள். என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்று ஒருசிலர் கருதுகிறார்கள்.எமது கட்சியிலும் ஒருசிலர் அவ்வாறே நினைக்கிறார்கள். என்மீது பழிசுமத்தி என்னை வெளியேற்றி பதவியை பெற்றுக்கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். அது வெறும் பகல் கனவு மாத்திரமே, எனது மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள். எனது மக்களுக்கான பணியை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளேன். என்மீதான குற்றச்சாட்டுக்களை ஏன் முறையாக விசாரிக்கவில்லை. அரசாங்கத்தின் பலம் என்ன? அரசாங்கமும் எனக்கு எதிராக செயற்படுகிறது. எதிர்க்கட்சியினரும்,எம்மவர்களும் என்னை பழிவாங்க பார்க்கிறார்கள். எனக்கு நீதி வேண்டும். நீதியை நிலைநாட்டுங்கள். முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரித்து உண்மையை வெளிப்படுத்துங்கள். என்று வலியுறுத்துகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/236821
  5. டாவோசில் வைத்து கனேடியன் கட்டதுரை குடுத்த குடுவையில் கிறீன்லாந்தும் வேண்டாம், ஐஸ்லாந்தும் வேண்டாம் என யார் ஓடினார்? அவரேதான்😂
  6. அண்ணை, இதில கைப்புள்ள யாருன்னு சொல்லவே இல்லையே?! 'அமெரிக்க படை இரானை நோக்கி நகர்கிறது' - டிரம்ப் பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty அமெரிக்கா இரானை உன்னிப்பாக கவனித்து வருவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் பெரிய படையொன்று இரானை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இரானை நோக்கி பெரிய படையொன்று நகர்ந்துவருகிறது. ஆனால், எதுவும் தற்போது நடைபெறும் என தோன்றவில்லை. ஆனாலும், நாங்கள் இரானை உன்னிப்பாக கவனித்துவருகிறோம்.” என்றார். இரானில் 837 பேரின் மரண தண்டனையை தாங்கள் நிறுத்தியதாக கூறியுள்ள டிரம்ப், அவர்களுள் பெரும்பாலானோர் இளம்வயதினர் என்றார். அவர் கூறுகையில், “நீங்கள் அவர்களை தூக்கிலிட்டால், உங்களுக்கு எதிராக இதுவரையிலான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நடவடிக்கையை ஒப்பிடும்போது அணுசக்தி திட்டம் தொடர்பாக நாங்கள் எடுத்த நடவடிக்கை மிகச் சிறியதாக இருக்கும்.” என்றார். “அதை ரத்து செய்துவிட்டதாக அவர்கள் (இரான்) தெரிவித்துள்ளனர், ஒத்திவைத்துள்ளதாக அல்ல. அதுவொரு நல்ல அறிகுறி.” மேலும், “இரானை நோக்கி மிகப்பெரிய படை நகர்ந்து வருகிறது. அதை நாங்கள் பயன்படுத்தாமல் இருக்கலாம், பொறுத்திருந்து பார்க்கலாம்.” என்றார். இரானில் அதிகரித்துவரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார சரிவு ஆகியவற்றுக்கு எதிராக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். போராட்டங்களில் ஈடுபட்ட பலரும் இரானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கடந்த வார, இந்த போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை அளிக்க இரான் திட்டமிட்டிருந்ததாக பல செய்திகள் வெளியாகின. அதன்பின், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த மரண தண்டனையை தான் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார். https://www.bbc.com/tamil/live/c5y34pvmg43t?post=asset%3A1ff5bd8d-a995-4834-a281-c9c77f6c8139#asset:1ff5bd8d-a995-4834-a281-c9c77f6c8139
  7. மாங்குளம் பேருந்து நிலையத்தை முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வர ஏதுவான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துக - அதிகாரிகளுக்குப் ஆளுநர் பணிப்புரை! Published By: Vishnu 23 Jan, 2026 | 07:04 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய மையப் புள்ளியாகத் திகழும் மாங்குளம் பேருந்து நிலையத்தை, முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு ஏதுவான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். மாங்குளம் பேருந்து நிலைய அபிவிருத்தி தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையால், தயாரிக்கப்பட்ட திட்டவரைவு பற்றி ஆராயும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (23) மாலை நடைபெற்றது. மாங்குளம் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் என்பன உரிய வகையில் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன. இதனை மாற்றியமைத்து, அப்பகுதியை முழு அளவில் இயக்குவதற்கான திட்ட வரைபு நகர அபிவிருத்தி அதிகார சபையால் தயாரிக்கப்பட்டு, இக்கலந்துரையாடலில் சமர்ப்பிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பின்வரும் விடயங்கள் ஆராயப்பட்டன. பேருந்து நிலையத்துக்கான போக்குவரத்துப் பாதைகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கான இணைப்பு வீதிகள் அமைத்தல். மாங்குளத்தை மையப்படுத்தி, முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூர் பேருந்து சேவைகளை எதிர்காலத்தில் வினைத்திறனாக ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துதல். பேருந்து நிலையத்துக்காகத் திட்டமிடப்படும் வீதி, மாங்குளம் ரயில் நிலையத்திற்குரிய காணி எல்லைக்குள் வருவதால், ரயில்வே திணைக்களத்தின் அனுமதியை விரைவாகப் பெற்றுப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இத்திட்ட முன்மொழிவை முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெறுமாறும் ஆளுநர் இதன்போது பணிப்புரை வழங்கினார். இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர், புதுக்குடியிருப்புப் பிரதேச சபைத் தவிசாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர், ரயில்வே திணைக்களப் பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்டப் பொறியியலாளர், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/236840
  8. சோழ மன்னனை சிறைபிடித்த கோப்பெருஞ்சிங்கன்: மூன்றாம் வீர வல்லாளரும் காடவராயர்களும் யார்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 23 ஜனவரி 2026, 01:31 GMT 14ஆம் நூற்றாண்டில் டெல்லியிலிருந்து நிகழ்த்தப்பட்ட படையெடுப்பை ஹொய்சாள மன்னரான மூன்றாம் வல்லாளர் எப்படி எதிர்கொண்டார்? சோழ மன்னனை வெற்றிகொண்ட காடவ மன்னர்கள் என்ன செய்தனர்? 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தென்னிந்தியாவின் மீது டெல்லியிலிருந்து முகமதியப் படையெடுப்பு நடந்தபோது அதனை ஹொய்சாள மன்னரான மூன்றாம் வல்லாளர் இருவிதங்களில் எதிர்கொண்டார். இந்தக் காலகட்டத்தில் என்ன நடந்தது? காடவராயர்கள் என்ன செய்தனர்? பாண்டிய நாட்டில் வாரிசுரிமைப் போர் தென்னிந்தியாவின் மீது நடந்த மிக முக்கியமான முகமதியப் படையெடுப்பு அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் காஃபூரால் நடத்தப்பட்டது. அந்தத் தருணத்தில், அதாவது 13ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் துவாரசமுத்திரத்தையும் திருவண்ணாமலையையும் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்தான் மூன்றாம் வீர வல்லாளர். மூன்றாம் வீர வல்லாளர் துவாரசமுத்திரத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில், பாண்டிய நாடு மிகப் பெரிய வாரிசுரிமைப் போரில் சிக்கியிருந்தது. பாண்டிய நாட்டின் மன்னனாக இருந்த குலசேகர பாண்டியனுக்கு சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் என இரு மகன்கள் இருந்தன. சுந்தர பாண்டியன், பட்டத்து அரசியான கோப்பெருந்தேவியின் மகனாகப் பிறந்தவர். வீர பாண்டியன் மற்றொரு மனைவியின் மகன். ஆனால், வீர பாண்டியனையே பட்டத்து இளவரசனாக அறிவித்தார் குலசேகர பாண்டியன். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர பாண்டியன் குலசேகர பாண்டியனைக் கொன்றார். பிறகு சுந்தர பாண்டியனும் வீரபாண்டியனும் வாரிசுரிமை மோதலில் ஈடுபட ஆரம்பித்தனர். பாண்டிய நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இவர்கள் ஆதிக்கம் செலுத்திவந்தனர். அந்தத் தருணத்தில் மூன்றாம் வீர வல்லாளர் துவாரசமுத்திரத்தை மையமாகக் கொண்டு ஆட்சி செய்துவந்தார். பாண்டிய நாட்டில் வாரிசுரிமைப் போர் நடந்துகொண்டிருந்ததால், தெற்கில் உள்ள பிரதேசங்களைப் பிடிக்கும் நோக்கத்தோடு தெற்கு நோக்கிப் புறப்பட்டார் அவர். அவருடைய படை சென்ற வழிகளில் இருந்த ஊர்கள் அனைத்தும் சூறையாடப்பட்டதாக, பேராசிரியர் அ. சிங்காரவேல் எழுதிய 'தமிழகத்தில் விஜயநகர ஆட்சி' என்ற நூல் குறிப்பிடுகிறது. இந்தக் காலகட்டத்தில் டெல்லி அலாவுதீன் கில்ஜியின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவருடைய தளபதியான மாலிக் காஃபூர் கி.பி. 1310ல் தென்னகத்தின் மீது படையெடுத்தார். வீர வல்லாளர் மதுரையை நோக்கிச் சென்ற காலகட்டத்தில் மாலிக் காஃபூரின் படைகள் துவாரசமுத்திரத்தை நெருங்கின. இதைக் கேள்விப்பட்ட மூன்றாம் வல்லாளர் தனது தலைநகரத்தை நோக்கித் திரும்பினார். அதற்குள் துவாரசமுத்திரத்தில் முகமதியரின் படைகள் மிகப் பெரிய அளவில் குவிக்கப்பட்டிருந்தன. பட மூலாதாரம்,Rhythm book distributers படக்குறிப்பு,கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் 'தென் இந்திய வரலாறு' நூல் முகமதியப் படைகளை எதிர்த்துப் போரிடலாம் என அவர்களுடைய தளபதிகள் கூறிய நிலையிலும், வீர வல்லாளர் அதனை விரும்பவில்லை. இதனால், டெல்லி சுல்தானின் மேலாதிக்கத்தை மூன்றாம் வல்லாளர் ஏற்க வேண்டியதாயிற்று என கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் 'தென் இந்திய வரலாறு' நூல் கூறுகிறது. இந்த நிலையில், வீரபாண்டியனுக்கு சேர மன்னனான ரவிவர்மன் உதவிசெய்ததால், சுந்தரபாண்டியன், துவாரசமுத்திரத்தில் தங்கியிருந்த மாலிக் காஃபூரிடம் உதவி கோரியதாக இந்த நூல் கூறுகிறது. மாலிக் காஃபூர் மதுரையை நோக்கி படையெடுத்துச் சென்றபோது மூன்றாம் வல்லாளனும் அவர்களுடன் சென்றார். இந்தப் படை மதுரையைத் தாக்கி அழித்து, ராமேஸ்வரம் வரை சென்றது. இதற்குப் பிறகு, சுந்தரபாண்டியனின் மாமனால் பின்னடைவைச் சந்தித்த மாலிக்காஃபூர் டெல்லிக்கே திரும்பிவிட்டார். அப்படிச் செல்லும்போது மூன்றாம் வல்லாளரின் மகனை உடன் அழைத்துச் சென்ற மாலிக்காஃபூர் சுல்தானிடம், வல்லாளர் செய்த உதவியைப் பற்றிய கூறியதாகவும் தென் இந்திய வரலாறு நூல் கூறுகிறது. திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்ட தலைநகரம் படக்குறிப்பு,திருவண்ணாமலை இதற்குப் பிறகு டெல்லியில் தொடர்ந்து ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து முகமது பின் துக்ளக் சுல்தானாக முடிசூட்டிக் கொண்டார். மதுரை சுல்தானின் பிரதிநிதிகளின் ஆட்சியில் இருந்தது. இந்தக் காலகட்டத்தில் வடக்கிலிருந்து வரும் முகமதியப் படைகளின் தொந்தரவில்லாமல் ஆட்சி செய்ய விரும்பிய மூன்றாம் வல்லாளர் தனது தலைநகரத்தை துவார சமுத்திரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு மாற்றிக்கொண்டார். முகமதியப் படைகளால் தன் தலைநகரத்தை மாற்ற வேண்டிய கோபத்தில் இருந்த மூன்றாம் வல்லாளர், மதுரை மீது படையெடுத்து அங்கு ஆட்சியில் இருந்த முகமதியப் படைகளைத் தோற்கடிக்க நினைத்தார். அதன்படி அவரது படை மதுரையை நோக்கிப் புறப்பட்டது. இந்தப் படை காவிரிக் கரையில் கண்ணூர்க் குப்பம் என்ற இடத்தில் இருந்த கோட்டையை முற்றுகையிட்டது. இந்தத் தருணத்தில் மூன்றாம் வல்லாளர் மோசமான முடிவெடுத்ததாலேயே தோல்வியைச் சந்திக்க நேர்ந்ததாகச் சொல்கிறது தென் இந்திய வரலாறு நூல். அதாவது, கண்ணூர் குப்பம் கோட்டைக்குள் இருந்த முகமதியர்கள், சரணடவைதற்கு முன்பாக மதுரை சுல்தானின் யோசனையைப் பெற அனுமதிக்க வேண்டுமெனக் கோரியதால், அதற்கு அனுமதித்தார் மூன்றாம் வல்லாளர். இதற்குப் பிறகு, மதுரையின் சுல்தானாக இருந்த கியாசுதீன், 4,000 வீரர்களுடன் காவிரிக் கரையை வந்தடைந்தார். இந்தப் போரின் துவக்கத்தில் மூன்றாம் வல்லாளருக்கு வெற்றி கிடைத்தாலும், மதுரை சுல்தானின் படைகள் இறுதியில் அவரைத் தோற்கடித்தன. இந்தப் போரில் மிக மோசமான முறையில் மூன்றாம் வல்லாளர் கொல்லப்பட்டார். அவரது உடல் மதுரைக் கோட்டையில் தொங்கவிடப்பட்டதாகவும் 1342ல் இதனைப் பார்த்ததாக இபின் பதூதா குறிப்பிடுவதாகவும் தென் இந்திய வரலாறு கூறுகிறது. இந்த மூன்றாம் வல்லாளர் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பல திருப்பணிகளைச் செய்திருப்பது குறித்த கல்வெட்டுகள் கிடைக்கின்றன. காடவராய மன்னர்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் காடவராய மன்னர்களைப் பொறுத்தவரை, இந்த மூன்றாம் வல்லாளரின் காலத்திற்கு முற்பட்டவர்களாகவே பதிவாகியிருக்கிறார்கள். 12ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சோழ மன்னருக்குக் கீழே ஆணையர்களாக இருந்து, விரைவிலேயே சிற்றறசர்களாக வலிமையடைந்தனர். குறிப்பாக சோழப் பேரரசு வீழ்ச்சியடைய ஆரம்பித்த காலத்தில், கி.பி. 1229லிருந்து கி.பி. 1278வரை அவர்கள் வலிமை வாய்ந்த மன்னர்களாக இருந்திருப்பதாக சி.எஸ். ஸ்ரீநிவாஸாச்சாரி எழுதிய History Of Gingee And Its Rulers நூல் குறிப்பிடுகிறது. தமிழகப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த பாண்டியர்கள், ஹொய்சாளர்கள், காகதீயர்களுக்கு இடையில் நடந்த போரில் தொடர்ந்து பங்கேற்றதன் மூலம், வலிமைபெற்று வந்தனர். கி.பி. 1242லிருந்து கி.பி. 1278வரை ஆட்சிசெய்த கோப்பெருஞ்சிங்கன், இவர்களில் புகழ் வாய்ந்த மன்னனாக இருந்தார். இவர் பாண்டிய மன்னனான முதலாம் சுந்தர பாண்டியனுக்கு நெருக்கமானவராகவும் இருந்தார். முந்தைய தென்னாற்காடு மாவட்ட பரப்பில் வலிமை வாய்ந்த மன்னர்களாக இருந்த காடவராயர்களின் தலைநகரமாக கூடல் (கடலூர்) இருந்ததாகவும் பிறகு சேந்தமங்கலத்திற்கு மாற்றப்பட்டது என்றும் ஸ்ரீநிவாஸாச்சாரி கூறுகிறார். இந்த கோப்பெருஞ்சிங்கன்தான் மூன்றாம் ராஜராஜனை சிறைப்படுத்தி வைத்தார். கி.பி.1243ல் சோழர்களிடமிருந்து சுயாதீனம் பெற்ற மன்னராக ஆட்சி செய்ய ஆரம்பித்த அவர் தனக்கு 'மகாராஜ சிம்மன்' என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார். ஒரு கட்டத்தில் சோழமன்னனான மூன்றாம் ராஜராஜனை கோப்பெருஞ்சிங்கன் சிறைப்பிடித்தார். பட மூலாதாரம்,Juggernaut படக்குறிப்பு,அனிருத் கனிசெட்டி எழுதிய Lords of the Earth and Sea நூல் கோப்பெருஞ்சிங்கன் மன்னராக இருந்த காலகட்டத்தில், ஹொய்சாள நாட்டை இரண்டாம் நரசிம்மன், சோமேஸ்வரன், மூன்றாம் நரசிம்மன் ஆகியோரே ஆட்சி செய்துவந்தனர். மூன்றாம் ராஜராஜன் சிறைபிடிக்கப்பட்ட பிறகு என்ன நடந்தது என்பதை அனிருத் கனிசெட்டி எழுதிய Lords of the Earth and Sea நூல் விவரிக்கிறது. "மூன்றாம் ராஜராஜன் சிறைபிடிக்கப்பட்டபோது ஹொய்சாள மன்னராக இருந்த சோமேஸ்வரன், அவரை விடுவிக்க காடவராயர்கள் மீது படையெடுத்தார். காடவராய அரசின் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் இருந்த கிராமங்கள் சூறையாடப்பட்டன. சேந்தமங்கலத்தை நெருங்கியபோது, அதற்குச் செல்லும் தண்ணீர் தடுக்கப்பட்டது. இதற்குப் பிறகு இறங்கிவந்த கோப்பெருஞ்சிங்கன், மூன்றாம் ராஜராஜனை விடுவிக்க ஒப்புக்கொண்டார். இந்த நிகழ்வு நடந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு கோப்பெருஞ்சிங்கன் காலமானார்" என்கிறார் அனிருத். ஒரு சில வரலாற்றாய்வாளர்கள் இரண்டு கோப்பெருஞ்சிங்கர்கள் இருந்ததாகக் கருதுகின்றனர். முதலாவது கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1185லிருந்து கி.பி. 1243 வரை ஆட்சி செய்ததாகவும் அடுத்த கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1243லிருந்து கி.பி. 1248 வரை ஆட்சி செய்ததாகவும் அவர்கள் கருதுகின்றனர். ஆனால், அது சரியான கருத்து அல்ல என ஆர். சத்தியநாதய்யர் தனது 'The Kadavaraya Problem' கட்டுரையில் குறிப்பிடுகிறார். மூன்றாம் வீர வல்லாளரும் மகாராஜ சிம்மன் என அழைக்கப்பட்ட கோப்பெருஞ்சிங்கனும் வெவ்வேறு காலத்திலேயே ஆட்சியில் இருந்தனர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgjjkm922ro
  9. எலுவங்குளம் - புத்தளம் வீதியைத் திறக்கக் கோரி கையெழுத்து வேட்டை Jan 23, 2026 - 07:32 PM மன்னாரிலிருந்து முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எலுவங்குளம் ஊடாக புத்தளத்திற்குச் செல்லும் பிரதான வீதியைத் திறக்கக் கோரி, ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று (23) காலை மன்னார் பேருந்து நிலையத்தில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் - எலுவங்குளம் ஊடாக புத்தளத்திற்கான பிரதான வீதியைத் திறப்பதற்கான ஏற்பாட்டுக் குழுவினால் இந்த நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த வீதியைத் திறந்து மக்களின் பாவனைக்கு விடுவிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தக் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதில் கலந்துகொண்டு கையெழுத்திட்ட மதத் தலைவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், "இவ்வீதி திறக்கப்படுவதன் மூலம் மன்னார் மாவட்ட மக்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த வட பகுதி மக்களும் நன்மையடைவார்கள்" என்று தெரிவித்தனர். மேலும், மன்னார் மாவட்ட மீனவர்கள் மட்டுமன்றி அனைத்துத் தரப்பினரும் தென்பகுதிக்கான போக்குவரத்தை இலகுவாக மேற்கொள்ளவும், தமது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் இது வழிவகுக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். மன்னார் மாவட்ட மக்களிடம் சேகரிக்கப்படும் இந்தக் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், மீனவ அமைப்புகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு கையெழுத்திட்டு தமது ஆதரவை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmkqyact304bqo29njn0qgd08
  10. இதில பெயர் இல்லாதபடியால தமிழனாக இருக்க வாய்ப்பில்லை.
  11. இவர் தமிழர் என்பதால் ஒதுக்க பட்டதாக யாரும் சொல்லவில்லை. ஆனால்… ஹிந்தி எதிர்ப்பை மையமாக வைத்து, பராசக்தி ரீல் ஓட்டி விட்டு, அடுத்த வாரமே மோடியோடு பொங்கல் வைத்து… நான் தீ பரவட்டும் என சொல்லவில்லை… ஹிந்தீ பரவட்டும் என்றே சொன்னேன்… என்ற ரேஞ்சில் கோமாளித்தனம் பண்ணும் பச்சோந்திகள் நிறைந்த சினிமா உலகில்…. ஒரு ராஜசபா சீட்டுக்காக, பத்மபூசணுக்காக பிஜேபிக்கு தப்புதாளம் போடும் இசைமேதை வாழும் தமிழ்நாட்டில்…. கிடைத்த பல மேடைகளில் ஹிந்தி மேலாண்மையை தட்டி கேட்ட ரஹ்மான்….தமிழரின் மகுடத்தில் பதித்த வைரமே. இஸ்லாமிய ஒவ்வாமையை திரிதோறும் வெளிக்காட்டும் உறவுகள் என்ன நினைத்தாலும், இதுவே உண்மை. எனக்கு தமிழரை விட தன்னை தமிழன் என அடையாளபடுத்தும் இஸ்லாமியர்களை மிகவும் பிடிக்கும்.
  12. 19 வயதின் கீழ் ஆண்க உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவிடம் இலங்கை பெருந்தோல்வி Published By: Digital Desk 3 23 Jan, 2026 | 05:19 PM (நெவில் அன்தனி) விண்ட்ஹோக் நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவுபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் 58 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை, 9 விக்கெட்களால் பெருந்தோல்வி அடைந்தது. எவ்வாறாயினும், இக் குழுவில் ஜப்பானையும் அயர்லாந்தையும் ஏற்கனவே வெற்றிகொண்டதன் மூலம் சுப்பர் சிக்சஸ் (Super Sixes) சுற்றில் விளையாட இலங்கை தகுதிபெற்றுக்கொண்டிருந்தது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 58 ஓட்டங்களுக்கு சுருண்டது. துடுப்பாட்டத்தில் சாமிக்க ஹீனட்டிகல (14), கவிஜ கமகே (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் வில் பைரோம் 14 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் கேசி பார்ட்டன் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சார்ள்ஸ் லெக்மண்ட் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 59 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஸ்டீவன் ஹொக் 28 ஓட்டங்களுடனும் இலங்கை வம்சாவளி நிட்டேஷ் செமுவல் 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். ஜப்பானுக்கு எதிராக சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணப் போட்டியில் வரலாற்றுச் சாதனைகளை நிலைநாட்டிய இலங்கை, 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 38 வருட வரலாற்றில் 100 ஓட்டங்களுக்குள் சுருண்டது இதுவே முதல் தடவையாகும். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பாமேரா ஓவல் மைதானத்தில் 1988இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை பெற்ற 101 ஓட்டங்களே அதன் முந்தைய மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாக இருந்தது. ஆட்டநாயகன்: வில் பைரோம் https://www.virakesari.lk/article/236836
  13. குழந்தைகளுக்கு சர்க்கரை கொடுப்பதில் உள்ள ஆபத்து - வயதுக்கேற்ற உணவு முறையின் அவசியம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வயதாகும்போது நாம் வெவ்வேறு ஊட்டச்சத்துக்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கட்டுரை தகவல் ஜெசிகா பிராட்லி பிபிசி ஃபியூச்சர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு பங்கீட்டு முறையை அறிமுகப்படுத்தியது, இது குடும்பங்களுக்கு வாராந்திர கொடுப்பனவை அனுமதித்தது. மக்கள் தங்கள் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய அனுமதிக்கும், அதே நேரத்தில் உணவு நாடு முழுவதும் சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதுதான் இதன் நோக்கம். சர்க்கரை என்பது பங்கீடு செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. தனிநபர்களுக்கு வாரத்திற்கு சுமார் 8 அவுன்ஸ் (227 கிராம்) இனிப்பு பொருட்கள் அனுமதிக்கப்பட்டன. அவர்களை வருத்தப்படுத்தும் வகையில், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதுவும் ஒதுக்கப்படவில்லை. 1953-ல் சர்க்கரை பங்கீடு முடிந்தபோது, பெரியவர்களின் சராசரி சர்க்கரை உட்கொள்ளல் இருமடங்கானது. இதனை அந்த நேரத்தில் மக்கள் அறிந்திருக்கவில்லை, ஆனால் இது எதிர்கால விஞ்ஞானிகளுக்கு ஆரம்பகால சர்க்கரை நுகர்வு நமது ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் விளைவுகளைத் துல்லியமாகக் கண்டறிய ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியது. 2025-ஆம் ஆண்டு ஆய்வறிக்கை ஒன்றில், உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் குழு, சர்க்கரை பங்கீடு முழுவீச்சில் இருந்த 1951 மற்றும் 1956-க்கு இடையில் இங்கிலாந்தில் பிறந்த 63,000 பேரின் மருத்துவப் பதிவுகளை ஆய்வு செய்தது. கருப்பையிலும், வாழ்வின் முதல் 1,000 நாட்களிலும் குறைந்த சர்க்கரைக்கு ஆளான குழந்தைகளுக்கு, பிற்கால வாழ்க்கையில் இருதய நோய் வருவதற்கான வாய்ப்பு 20% குறைவு என்பதையும்; இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 25% குறைவு என்பதையும்; பங்கீடு நடைமுறை முடிந்த பிறகு இனிப்புகளைச் சாப்பிட அனுமதிக்கப்பட்ட குழந்தைகளை விட பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 31% குறைவு என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர். சர்க்கரை உட்கொள்ளலுக்கும் ஆரோக்கியத்திற்கும் இடையிலான இந்த வலுவான உறவு நாம் பிறந்த பிறகும் தொடர்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எளிமையாகச் சொன்னால், நாம் எந்த வயதினராக இருந்தாலும் அதிக இனிப்புச் சுவை கொண்ட தின்பண்டங்களை உண்பது நமக்குத் தீங்கானது. ஆனால் வேறு சில உணவுகளைப் பொறுத்தவரை, ஊட்டச்சத்து நன்மைகள் நீங்கள் வாழ்க்கையின் எந்தக் கட்டத்தில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. உதாரணமாக, சிறு குழந்தைகளுக்கும் கைக்குழந்தைகளுக்கும் பால் மற்றும் முழு பாலில் உள்ள கொழுப்புகள் அதிகம் தேவைப்படுகின்றன, ஆனால் அத்தகைய உணவு 20 மற்றும் 30 வயதுடையவர்களுக்கு ஆரோக்கியமானதாகக் கருதப்படாது. இங்கிலாந்தின் லண்டன் இம்பீரியல் காலேஜின் ஊட்டச்சத்து விஞ்ஞானி ஃபெடெரிகா அமதியின் கூற்றுப்படி, குழந்தைகளுக்கு அதிக ஆற்றல் தேவை என்பதால் அவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் தேவை என்பதாகும். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது 'சாதி மாறி திருமணம் செய்ததால் புறக்கணிப்பு': திருவள்ளூர் காதல் தம்பதி கூறுவது என்ன? 'இந்தியாவின் வைரமாக போற்றப்பட்ட ஏ.ஆர் ரஹ்மான் இன்று துரோகி என முத்திரை குத்தப்படுகிறார்' – ஒரு பார்வை எல்ஐசி அலுவலகத்தில் 'தீ வைத்து கொல்லப்பட்ட' மேலாளர் - கடைசி ஃபோன் கால் மூலம் சிக்கிய ஊழியர் சோழ மன்னனை சிறைபிடித்த கோப்பெருஞ்சிங்கன்: மூன்றாம் வீர வல்லாளரும் காடவராயர்களும் யார்? End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம்,Serenity Strull/BBC படக்குறிப்பு,வளரும் குழந்தையாக நமக்குத் தேவையான உணவுகள் பிற்கால வாழ்க்கையில் எப்போதும் நமக்குத் தேவையானவையாக இருப்பதில்லை. "குழந்தைப் பருவத்தில், உணவு என்பது உடலையும் மூளையையும் உருவாக்குவதாகும்," என்கிறார் அமதி. ஆரோக்கியமான கலோரிகள் தவிர, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, மூளை வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சியை ஆதரிக்க இரும்புச்சத்து, அயோடின் மற்றும் பரந்த அளவிலான வைட்டமின்களும் தேவைப்படுகின்றன. இதன் பொருள் ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் விதைகள் உள்ளிட்ட நல்ல தரமான கொழுப்புகள் மற்றும் மிகக் குறைந்த அளவில் அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பதாகும். "கருத்தரித்தல் முதல் முதல் 1,000 நாட்கள் மற்றும் பள்ளி ஆண்டுகள் வரை, குழந்தைகள் வேகமாக வளர்கிறார்கள் மற்றும் அவர்களின் எதிர்கால எலும்பு நிறையில் பெரும்பாலானவற்றை உருவாக்குகிறார்கள்," என்கிறார் அமதி. "அதனால்தான் இந்த நிலையில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை முன்னுரிமை ஊட்டச்சத்துக்களாக உள்ளன; சாதாரண எலும்பு வளர்ச்சிக்கும், ஆரோக்கியமான உச்ச எலும்பு நிறையை அடைவதற்கும் அவை அவசியம், இது பிற்கால வாழ்க்கையில் எலும்புப்புரை மற்றும் எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்கிறது." நடைமுறையில், பால், தயிர், சீஸ், கால்சியம் நிறைந்த டோஃபு அல்லது பலப்படுத்தப்பட்ட தாவர பானங்கள் போன்ற வழக்கமான கால்சியம் ஆதாரங்கள் மற்றும் சூரிய ஒளி மற்றும் மீன் மற்றும் முட்டை போன்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி ஆகியவை இதில் அடங்கும் என்று அமதி கூறுகிறார். குழந்தைப் பருவத்தில் சரியான உணவுகளை உண்பது பிற்கால வாழ்க்கையில் ஆரோக்கியத்திற்குப் பயனளிக்கும் என்பதற்கு நல்ல சான்றுகள் உள்ளன. 2023-ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றில், ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளின் உணவுகளை ஆய்வு செய்து, அதை அவர்களின் குழந்தைப் பருவம் மற்றும் இளம் பருவ ஆரோக்கியத்துடன் ஒப்பிட்டனர். ஏழு வயதில் இங்கிலாந்தின் ஈட்வெல் வழிகாட்டியில் (Eatwell Guide) இருந்து மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட உணவுப் பரிந்துரைகளைப் பின்பற்றிய குழந்தைகளுக்கு, எந்தத் தேவைகளையும் பூர்த்தி செய்யாதவர்களுடன் ஒப்பிடும்போது, 24 வயதில் இதய நோய் அபாயக் குறிகாட்டிகள் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர். பதின்ம வயது மற்றும் 20-கள் குழந்தைப் பருவம் ஒரு முக்கியமான காலம் என்றாலும், நமது பதின்ம வயது மற்றும் 20-களில் நாம் உண்ணும் உணவுகள் எதிர்கால ஆரோக்கியத்திற்கான அடித்தளத்தை அமைக்கலாம். அமதியின் கூற்றுப்படி, இந்த வாழ்க்கைக் கட்டத்தில்தான் நாம் எலும்பு மற்றும் தசை கட்டமைப்பை முடிக்கிறோம், மேலும் படிப்பதற்கும், வேலை செய்வதற்கும் மற்றும் சமூகமயமாக்குவதற்கும் மணிநேரங்களைச் செலவிடத் தொடங்குகிறோம் - இவை அனைத்தும் ஊட்டச்சத்து தேவைகளை அதிகரிக்கின்றன. "இளமைப் பருவம் மற்றும் முதிர்ந்த வயதின் ஆரம்பம் ஊட்டச்சத்திற்கான மற்றொரு பெரிய வாய்ப்பாகும்," என்கிறார் அமதி. "20-களில், வளர்ச்சி குறைகிறது, ஆனால் பிற்கால வாழ்க்கையில் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பழக்கங்களை ஏற்படுத்துவதற்கு இது இன்னும் ஒரு முக்கியமான தசாப்தமாகும். அறிகுறிகள் மிகவும் தாமதமாகத் தோன்றினாலும் கூட இந்த வயதினரிடமே இருதய நோய்க்கான அடித்தளம் போடப்படுவதைக் காண்கிறோம்,." நமது பதின்ம வயதில், பிற்கால முதிர்ந்த வயதை விட உடலுக்குப் பல ஊட்டச்சத்துக்கள் அதிகம் தேவைப்படுகின்றன. இதில் கால்சியம், வைட்டமின் டி மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அடங்கும் - இது குறிப்பாக மாதவிடாய் சுழற்சி கொண்டவர்களுக்கு முக்கியமானது. புரதம் மற்றும் பி வைட்டமின்களும் முக்கியமானவை என்று அமதி கூறுகிறார். அப்படியானால் இந்த உணவு முறை எப்படி இருக்கும்? அமதியின் கூற்றுப்படி, பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்கள் பெரும்பாலும் தாவர அடிப்படையிலான உணவைப் பின்பற்ற வேண்டும் மற்றும் அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எனவே நிறைய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பீன்ஸ், கொட்டைகள், பருப்பு மற்றும் விதைகளை உண்ணவேண்டும். ஒவ்வொரு வேளை உணவிலும் போதுமான அளவு புரதத்தைக் கொண்டிருப்பதும் முக்கியம், அது தாவர அடிப்படையிலானதாகவும் இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். இத்தகைய உணவைப் பின்பற்றுவது உடலுக்குப் பயனளிப்பதோடு மட்டுமல்லாமல், மனநலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. "இளமைப் பருவத்தில் உணவு முறைகள் மனநல அபாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சான்றுகள் அதிகரித்து வருகின்றன - அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகம் சேர்த்துக்கொள்வது மற்றும் முழு தாவர உணவுகள் குறைவாக உள்ள உணவுகளை உண்பது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அதிக விகிதங்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் மெடிட்டரேனியன் பாணி முறைகள் பாதுகாப்பதாகத் தோன்றுகின்றன," என்று அமதி கூறுகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பருவமடையும் போது மாதவிடாய் தொடங்குபவர்கள் ஊட்டச்சத்துக்களின் சரியான சமநிலையைப் பெறுவது மிகவும் முக்கியமானது. மெடிட்டரேனியன் உணவு முறையில் காய்கறிகள், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் அதிகமாகவும், மீன், பால் மற்றும் கோழி இறைச்சி குறைந்த அளவிலும் இருக்கும். மெடிட்டரேனியன் உணவு முறை ஒரு குடும்பத்தைத் தொடங்க விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் பயனளிக்கலாம், இது பெரும்பாலும் ஒரு நபரின் 20, 30 மற்றும் 40-களில் நிகழ்கிறது. மெடிட்டரேனியன் உணவு கருவுறுதலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன, அதே நேரத்தில் நிறைவுற்ற கொழுப்பு, இறைச்சி மற்றும் வெள்ளை கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருக்கும் மேற்கத்திய உணவுகள் பெண் மற்றும் ஆண் மலட்டுத்தன்மையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரை, ஃபோலேட் நிறைந்த உணவுகள் கருவுறுதல் சிகிச்சைக்கு உதவக்கூடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஃபோலேட் அதிகம் உள்ள உணவுகளில் அடர் பச்சை இலைக் காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள், ப்ரோக்கோலி மற்றும் கொண்டைக்கடலை ஆகியவை அடங்கும். மத்திய வயது இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் மனித ஊட்டச்சத்து பேராசிரியரான எலிசபெத் வில்லியம்ஸின் கூற்றுப்படி, மத்திய வயதில், பிற்கால ஆரோக்கியத்திற்கு ஏற்ப நமது உணவை மேம்படுத்துவது பற்றி நாம் சிந்திக்கத் தொடங்க வேண்டும். மாதவிடாய் நிற்கும் காலத்தை நெருங்கும் பெண்களுக்கு இது மிகவும் பொருத்தமானது, "அப்போது எலும்பு அடர்த்தி இழப்பு, சார்கோபீனியா (வயது தொடர்பான தசை இழப்பு) மற்றும் எலும்புப்புரை ஆகியவை வேகமாக நடக்கும்," என்கிறார் வில்லியம்ஸ். எலும்புப்புரை தவிர, மாதவிடாய் நிற்றல் உடல் பருமன், இதய நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கான அதிகரித்த ஆபத்துடன் தொடர்புடையது. இனப்பெருக்க வயதுடைய பெண்களில், ஈஸ்ட்ரோஜன் மத்திய நரம்பு மண்டலத்தில் செயல்பட்டு பசியைக் குறைக்கிறது. இது இன்சுலின் உணர்திறன் மற்றும் தசைகளின் குளுக்கோஸ் உட்கொள்ளலையும் அதிகரிக்கிறது. இருப்பினும் மாதவிடாய் நிற்றலில், உடலில் ஈஸ்ட்ரோஜன் குறைவாகவே சுழல்கிறது. இதன் விளைவாக, எடை - மற்றும் உள்ளுறுப்பு கொழுப்பு (visceral fat) - அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும், ஒரு நல்ல உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் இந்த அபாயத்தைக் கணிசமாக ஈடு செய்ய முடியும். உதாரணமாக, ஒரு சமீபத்திய மக்கள் தொகை ஆய்வில், குறைந்தது 39 வயதுடைய 1,00,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க ஆண்கள் மற்றும் பெண்களின் உணவு முறைகள் மற்றும் ஆரோக்கியத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். பட மூலாதாரம்,Serenity Strull/ BBC படக்குறிப்பு,மாதவிடாய் நிற்றலை நெருங்கும் பெண்கள் வரும் ஆண்டுகளில் தங்கள் உணவில் மாற்றங்களைச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், நிறைவுறாக் கொழுப்புகள், கொட்டைகள், பருப்பு வகைகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்ட ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான முதுமையுடன் வலுவாகத் தொடர்புடையது என்று அவர்கள் கண்டறிந்தனர் (ஆரோக்கியமான முதுமையை அவர்கள் நாள்பட்ட நோய் ஏதுமின்றி குறைந்தது 70 வயது வரை வாழ்வது மற்றும் நல்ல அறிவாற்றல், உடல் செயல்பாடு மற்றும் மனநலம் என்று வரையறுக்கிறார்கள்). "பெண்கள் தங்கள் 40 மற்றும் 50-களில் செல்லும்போது, இரண்டு பெரிய ஊட்டச்சத்து முன்னுரிமைகள் உருவாகின்றன: இதய ஆரோக்கியம் மற்றும் எலும்பு மற்றும் தசை ஆரோக்கியம்," என்கிறார் அமதி. "மாதவிடாய் மாற்றமானது இருதய நோய் அபாயத்தில் கூர்மையான உயர்வுடன் தொடர்புடையது, ஏனெனில் ஈஸ்ட்ரோஜன் இழப்பு இரத்த லிப்பிடுகள், இரத்த நாளங்கள் மற்றும் உடல் கொழுப்பு விநியோகத்தைப் பாதிக்கிறது." ஒமேகா 3 கொழுப்புகள் - குறிப்பாக மேக்கரல் மற்றும் சால்மன் போன்ற எண்ணெய் மிகுதியாக உள்ள மீன்வகைகளில் காணப்படுபவை - உதவுகின்றன, ஏனெனில் அவை இதய நோய்க்கான ஆபத்துக் காரணிகளைக் குறைக்கின்றன மற்றும் அழற்சி எதிர்ப்பு பலன்களை கொண்டுள்ளன என்று அமதி கூறுகிறார். இதற்கிடையில், தசை நிறை இழப்பின் விளைவுகளை எதிர்கொள்ள புரத உட்கொள்ளலைச் சற்றே அதிகரிக்கவும், சிறந்த இதய வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கும் - மற்றும் குடல் ஆரோக்கியம் மற்றும் மனநலத்திற்கும் - மெடிட்டரேனியன் பாணி உணவைப் பின்பற்றுமாறு அமதி பரிந்துரைக்கிறார். இறுதியில், இதயம், எலும்பு மற்றும் மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கும் போதுமான புரதம், கால்சியம், வைட்டமின் D மற்றும் ஒமேகா-3 களைக் கொண்ட மாறுபட்ட, தாவரங்கள் நிறைந்த, மெடிட்டரேனியன் பாணி உணவை இலக்காகக் கொள்வதும் என்றும் அதே வேளையில், அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைப்பதும் முக்கியம் என்று அவர் கூறுகிறார். வாழ்க்கையின் பிற்பகுதி வயதாகும்போது, நமது உடல் அமைப்பு மாறுகிறது மற்றும் நமது ஆற்றல் தேவைகள் குறைகின்றன, எனவே நாம் குறைந்த கலோரிகளை உட்கொள்ள வேண்டும். இருப்பினும் எலும்பு மற்றும் தசை வலிமையைப் பராமரிக்க போதுமான ஊட்டச்சத்துக்களைப் பெறுவதை நாம் இன்னும் உறுதி செய்ய வேண்டும். வில்லியம்ஸின் கூற்றுப்படி, முதுமையில் நாம் கவனம் செலுத்த வேண்டிய இரண்டு முக்கிய ஊட்டச்சத்துக்கள் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகும். போதுமான கால்சியம் அல்லது வைட்டமின் டி பெறாத முதியவர்களுக்கு எலும்புப்புரை மற்றும் பலவீனமான எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயம் அதிகம். கால்சியம் பால் மற்றும் பலப்படுத்தப்பட்ட மாற்று பானங்கள், கடினமான சீஸ், தயிர், சார்டின் மீன், டோஃபு மற்றும் கீரை ஆகியவற்றில் காணப்படுகிறது. வைட்டமின் டி நிறைந்த உணவுகளில் எண்ணெய் மீன், முட்டை மஞ்சள் கரு மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுகள் அடங்கும். முதுமையில் போதுமான தரமான புரதத்தை உண்பதும் மிகவும் முக்கியம் என்று இங்கிலாந்தின் போர்ன்மவுத் பல்கலைக்கழகத்தின் முதுமை மற்றும் டிமென்ஷியா ஆராய்ச்சி மையத்தின் இணைத் தலைவரும் உணவியல் நிபுணருமான ஜேன் மர்பி கூறுகிறார். "வயதாகும்போது, நமது வடிவம் மற்றும் செயல்பாடுகள் மோசமடைகின்றன, நாம் தசை நிறை மற்றும் வலிமையை இழக்கிறோம், மேலும் சார்கோபீனியாவைத் தடுக்க புரதம் தேவைப்படுகிறது," என்று அவர் கூறுகிறார். ஆனால் நமது உடல் அதைச் சரியாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய, கார்போஹைட்ரேட்டுகள், தரமான கொழுப்புகள் (ஆலிவ் எண்ணெய், வெண்ணெய் பழம், கொட்டைகள் மற்றும் எண்ணெய் மீன் உள்ளிட்ட நிறைவுறாக் கொழுப்புகள் போன்றவை) மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய சீரான உணவு முறையின் ஒரு பகுதியாகப் புரதம் இருக்க வேண்டும் என்று மர்பி கூறுகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வயதாகும்போது நமது குடல் பாக்டீரியாவில் ஏற்படும் மாற்றங்களும் கணக்கில் கொள்ளப்பட்டு உணவு முறையில் மாற்றம் செய்யப்படவேண்டும் நமக்கு வயதாகும்போது, நமது நுண்ணுயிரி மண்டலமும் மாறுகிறது, ஃபெர்மிகேட்ஸ் மற்றும் பிஃபிடோபாக்டீரியம் போன்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் இழப்பு ஏற்படுவதுடன், க்ளோஸ்ட்ரிடியம் போன்ற தீங்கு விளைவிக்கக்கூடிய இனங்களின் அதிகரிப்பும் ஏற்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வு அல்சைமர், பக்கவாதம் மற்றும் இதய நோய் போன்ற பல ஆரோக்கிய நிலைகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஒவ்வொரு நோயுடனும் தொடர்புடைய குடல் நுண்ணுயிரி மண்டலத்தை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், 100 வயது கடந்தவர்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று லண்டன் கிங்ஸ் காலேஜின் முதியோர் மருத்துவ விரிவுரையாளர் மேரி நி லோக்லைன் கூறுகிறார். " 100 வயது வரை வாழ்பவர்கள், முதுமையின் பொதுவான பாதிப்புகளைத் தவிர்ப்பதாகத் தெரிகிறது," என்கிறார் நி லோக்லைன். "அவர்கள் மற்ற முதியவர்களின் குடல் அமைப்பிலிருந்து வேறுபட்ட மாறுபட்ட நுண்ணுயிரி மண்டலத்தைக் கொண்டுள்ளனர்." பொதுவாக, ஆரோக்கியமான அல்லது ஆரோக்கியமற்ற குடல் பாக்டீரியா என்பதற்கு ஒரு வரையறை இல்லை, ஏனெனில் இது ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒன்றாகச் செயல்படும் நுண்ணுயிரிகளின் சமநிலையைப் பற்றியது. இருப்பினும், ஃபேக்கலிபாக்டீரியம் ப்ராஸ்னிட்ஸி போன்ற சில குறிப்பிட்ட பாக்டீரியா இனங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆரோக்கியமாக வயதாகி வருபவர்கள் எஃப் ப்ராஸ்னிட்ஸியைக் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது என்று நி லோக்லைன் கூறுகிறார், ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இது பாதுகாப்பு மற்றும் நேர்மறையான குணங்களைக் கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியிருந்தாலும், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. உங்கள் குடலில் எஃப் ப்ராஸ்னிட்ஸி வாழ்வதை ஊக்குவிக்க நீங்கள் விரும்பினால், நார்ச்சத்து மற்றும் பாலிஃபீனால்கள் (பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகம் உள்ளவை) நிறைந்த உணவே சிறந்த வழியாகும். ஆரோக்கியமான குடலைக் கொண்டிருப்பது முதுமையுடன் தொடர்புடைய சில ஊட்டச்சத்து குறைபாடுகளை நிர்வகிக்கவும் உதவும், ஏனெனில் இளைஞர்களை விட முதியவர்கள் உணவில் இருந்து வைட்டமின்களை உள்வாங்கிக்கொள்வதில் குறைவான திறன் கொண்டவர்கள். ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்கள் அந்த நபரின் தேவைகளுக்கு போதுமான பி12-ஐ உற்பத்தி செய்யக்கூடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன, அதே நேரத்தில் சில குடல் பாக்டீரியாக்கள் ஃபோலிக் அமிலத்தையும் உற்பத்தி செய்யக்கூடும். ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரி மண்டலம் முதுமையில் தசை இழப்பு மற்றும் சார்கோபீனியா அபாயத்தைத் தடுக்கவும் உதவும். இறுதியாக, சில ஊட்டச்சத்து குறைநிரப்பிகள் பிற்கால வாழ்க்கையில் பயனுள்ளதாக இருக்கலாம். ப்ரீபயாடிக் குறைநிரப்பிகள் (நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் இயற்கை கலவைகள்) முதியவர்களில் 12 வார காலப்பகுதியில் அறிவாற்றலை மேம்படுத்தும் என்று நி லோக்லைனின் ஆராய்ச்சி காட்டுகிறது. நி லோக்லைனின் ப்ரீபயாடிக்குகளில் இன்யூலின் என்ற ஒரு வகை நார்ச்சத்து மற்றும் தாவரங்களில் காணப்படும் சர்க்கரைகளான ஃபிரக்டோ-ஒலிகோசாக்கரைடுகள் உள்ளன. முதியவர்கள் - குறிப்பாக முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள் வைட்டமின் டி குறைநிரப்பிகள் மூலம் பயனடையலாம் என்று பிற ஆராய்ச்சிகள் கூறுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3dmmk0dzreo
  14. ஜப்பானில் உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இடைநிறுத்தம்! Published By: Digital Desk 3 23 Jan, 2026 | 10:16 AM ஜப்பானில் உள்ள உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான காஷிவாஸாகி-கரிவா (Kashiwazaki-Kariwa) நிலையத்தில், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட புகுஷிமா அணு உலை விபத்திற்குப் பின்னர், ஜப்பானின் அனைத்து அணு உலைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டன. இந்நிலையில், நிகாட்டா மாகாணத்தில் உள்ள இந்த அணுமின் நிலையத்தின் 6-வது அணு உலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் புதன்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டன. எனினும், உலை செயல்பாட்டுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே, அணுக்கருப் பிளவைக் கட்டுப்படுத்தும் 'கட்டுப்பாட்டு தண்டுகள்' தொடர்பான எச்சரிக்கை மணி ஒலித்ததால், பாதுகாப்பு கருதி இயக்கம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டது. அணு உலை தற்போது ஆபத்தான நிலையில் இல்லை எனவும், கதிர்வீச்சு கசிவு ஏதும் ஏற்படவில்லை எனவும் அதன் செயல்பாட்டாளரான டெப்கோ (Tepco) நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட வேண்டிய இப்பணி, தொழில்நுட்பக் கோளாறு ஒன்றின் காரணமாக புதன்கிழமைக்கு மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. புகுஷிமா விபத்தை ஏற்படுத்திய அதே 'டெப்கோ' நிறுவனம் இதனை இயக்குவதால், அப்பகுதி மக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இந்த மறுதொடக்கத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2050 ஆம் ஆண்டிற்குள் 'கார்பன் உமிழ்வு இல்லாத' நாடாக மாற இலக்கு நிர்ணயித்துள்ள ஜப்பான், தனது மின் தேவையை பூர்த்தி செய்ய மீண்டும் அணுசக்தியை நாட ஆரம்பித்துள்ளது. இதுவரை ஜப்பானில் உள்ள 33 அணு உலைகளில் 15 உலைகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. https://www.virakesari.lk/article/236760
  15. சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளம் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Jan 23, 2026 - 03:32 PM சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளம், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் அனர்த்தத்தால் பேரழிவிற்கு உள்ளான நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. அதன்படி, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் மாவட்ட அதிகாரி ஜி. வை. பி. பெரேரா, 40,870,686 ரூபாய்க்கான காசோலையை நேற்று (22) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://adaderanatamil.lk/news/cmkqpoqqb04b8o29nltt1vlqa
  16. கிழக்கு முனைய மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் ஆரம்பம் Jan 23, 2026 - 02:46 PM கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் இன்று (23) ஆரம்பிக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகளின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், உலகின் 3 பிரதான கப்பல் நிறுவனங்களைச் சேர்ந்த 3 கப்பல்கள் கப்பல் தளத்திற்கு வருகை தந்தன. 12 கென்ட்ரி கிரேன்கள் மற்றும் 40 தானியங்கி முற்ற கிரேன்களைக் கொண்ட இந்தக் கப்பல் தளத்தின் ஊடாக, ஒரு பிராந்திய கப்பல் போக்குவரத்து மையமாக கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் மேலும் வலுவடையும். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் முதன்முறையாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. 75 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் கிழக்கு முனையத்தின் மொத்த நீளம் 1320 மீற்றர்களாகும். அதில் 1090 மீற்றர் பகுதியும் ஏனைய நிர்மாணப் பணிகளில் 82% ஆனவையும் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டில் கிழக்கு முனையத்தின் ஊடாக ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான கொள்கலன்கள் கையாளப்பட்டுள்ளதுடன், முழுமையான நிர்மாணப் பணிகள் முடிவடைந்த பின்னர் 1.5 மில்லியன் கொள்கலன்களைக் கையாள முடியும். கொழும்பு துறைமுகத்தின் செயற்பாட்டுத் திறனை அதிகரிக்கும் நோக்கில் துறைமுக அதிகார சபையின் கண்காணிப்பு மற்றும் முதலீட்டின் கீழ் இந்த கிழக்கு முனையம் நிர்மாணிக்கப்படுகிறது. கிழக்கு முனையம் மற்றும் அதானி நிறுவனம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய நிலைமையின் அடிப்படையில் உருவான எதிர்ப்புகளுக்குப் பின்னரே இது இடம்பெறுகின்றமை ஒரு விசேட அம்சமாகும். https://adaderanatamil.lk/news/cmkqo1tdn04b7o29n7ve7zaf3
  17. முழு நாடுமே ஒன்றாக நடவடிக்கையின் கீழ் 70000க்கும் மேற்பட்டோர் கைது Jan 23, 2026 - 02:37 PM 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்படும் நாளாந்த சோதனை நடவடிக்கைகளுக்கு அமைவாக நேற்று (23) பொலிஸாரால் 819 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுத்தல், போதைப்பொருளுக்கான தேவையைக் குறைத்தல், தேடுதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தல், போதைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்கு உட்படுத்தல், போதைப்பொருள் பாவனையைத் தடுத்தல், அதற்கான விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்தல் மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் ஆகிய பன்முக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளப்பட்ட 304 சோதனைகளில், 367 கிராம் ஹெரோயின், 2 கிலோ 97 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 32 கிலோ 804 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தொகுதிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நேற்று (22) வரை ''முழு நாடுமே ஒன்றாக' நாளாந்த நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 77,105 என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பாக 68 பேருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 1,582 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெற்றுக்கொள்ளவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 77,824 என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், இக்காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 320 கிலோ 741 கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், 1,280 கிலோ 956 கிராம் ஐஸ், 6 கிலோ 816 கிராம் கொக்கெய்ன், 2,341 கிலோ 723 கிராம் கஞ்சா, 5,568,583 கஞ்சா செடிகள், 155 கிலோ 487 கிராம் குஷ், 44 கிலோ 47 கிராம் ஹாஷிஷ் மற்றும் 132,561 போதை மாத்திரைகள் உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmkqnqkmv04b6o29n0z5owr3u
  18. மின்சார சபையின் தன்னிச்சையான தீர்மானங்களால் சூரிய சக்தி மின் உற்பத்தித் துறை முடங்கும் அபாயம்: 2,000 கோடி ரூபாய் இழப்பு என எச்சரிக்கை Published By: Digital Desk 3 23 Jan, 2026 | 04:15 PM இலங்கை மின்சார சபையினால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டு வரும் மின் உற்பத்தி மட்டுப்படுத்தல் மற்றும் கொள்கை மாற்றங்கள் காரணமாக, நாட்டின் உள்ளூர் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சுமார் 2,000 கோடி ரூபாய் நிதி இழப்பை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்ட சூரிய சக்தி மின் உற்பத்தியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஒன்பது மாதங்களாக, அதாவது 2025 பெப்ரவரி மாதம் முதல், வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் எந்தவித முன்னறிவிப்புமின்றி பெரிய அளவிலான சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களின் மின் விநியோகத்தை மின்சார சபை கட்டுப்படுத்தி வருகின்றது. இதனை ஒரு அவசர நிலை என்று மின்சார சபை கூறினாலும், நீண்டகாலமாகத் தொடரும் இந்த நடைமுறை மின் கொள்வனவு ஒப்பந்தங்களை (PPA) மீறும் செயல் எனவும், இதனால் உற்பத்தியாளர்களின் மாத வருமானம் 15 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் பிரபாத் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மின் உற்பத்தி குறைக்கப்படும் நேரங்களில் அந்த மின்சாரத்தைச் சேமித்து வைத்து, இரவு நேர உச்ச மின் தேவையின் போது பயன்படுத்துவதற்கான மின்கல சேமிப்பு முறைமைக்கு (BESS) அமைச்சரவை மற்றும் நிதி அமைச்சு ஆகியன அனுமதி வழங்கியுள்ள போதிலும், மின்சார சபை அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றே தாமதம் செய்வதாக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கான செயலாக்க வழிகாட்டுதல்களை வெளியிடுவதில் காட்டப்படும் இழுத்தடிப்பு காரணமாக, உள்நாட்டு சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பாரியளவிலான டாலர்களைச் செலவழித்து டீசல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. மேலும், 2025 ஆம் ஆண்டிற்கான உத்தேச தேசிய மின்சாரக் கொள்கையானது சிறு மற்றும் நடுத்தர அளவிலான உள்ளூர் முதலீட்டாளர்களை இத்துறையிலிருந்து முற்றாக வெளியேற்றும் வகையில் அமைந்துள்ளதாகச் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள உள்ளீட்டு கட்டண (FIT) முறையை ஒழித்து போட்டி ஏல முறையைக் கொண்டு வருவது மற்றும் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படும் போது அதற்கான நட்டஈடு வழங்கப்பட மாட்டாது என்ற புதிய நிபந்தனைகள் முதலீட்டாளர்களுக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன. அரசாங்கத்தின் கொள்கை பிரகடனங்களுக்கு முரணாக மின்சார சபை எடுத்து வரும் இத்தகைய முடிவுகளால், இத்துறையில் முதலீடு செய்துள்ள பல தொழில்முனைவோர் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் உள்ளனர். இது எதிர்காலத்தில் நாட்டின் வங்கி முறைமையில் செயலிழந்த கடன் நெருக்கடியை (NPL) உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மின்கல சேமிப்பு முறைமைக்கான ஒப்பந்தத் திருத்தங்களை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும், ஒப்பந்தங்களை மீறி மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான உற்பத்தித் தடையை நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் 2030 புதுப்பிக்கத்தக்க மின்சக்தி இலக்கை அடைவதற்குத் தனியார் துறையின் பங்களிப்பு அவசியம் என்பதால், அரசாங்கமும் மின்சக்தி அமைச்சும் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/236817
  19. Rebuilding Sri Lanka நிதியத்திற்கு கிடைத்துள்ள நன்கொடை விபரம் Jan 23, 2026 - 01:34 PM அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' புயலைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 'Rebuilding Sri Lanka' நிதியத்தின் தற்போதைய நிலை குறித்து நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும விளக்கமளித்துள்ளார். அதன்படி, 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்காக இலங்கையின் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிரஜைகளினால் இதுவரை வழங்கப்பட்டுள்ள நன்கொடைத் தொகை 8.5 பில்லியன் ரூபாவையும் கடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதேபோல், வெளிநாடுகளிலிருந்து கிடைத்துள்ள நிதியுதவியும் தற்போது அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அவ்வாறு கிடைத்த வெளிநாட்டு நிதியின் அளவு தற்போது 9.49 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் கடந்துள்ளதாகத் தெரிவித்தார். நிதி உதவி வழங்கிய நாடுகளுள் அமெரிக்காவிடமிருந்து அதிகளவிலான நிதி கிடைத்துள்ளதாகவும், அந்தத் தொகை ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனைத் தவிர, முறையே அவுஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பூட்டான், இத்தாலி மற்றும் கொரியா ஆகிய நாடுகள் அதிக நிதி உதவி வழங்கிய முதல் 10 நாடுகளாக உள்ளதாக ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். மேலும், இந்நாடுகளைத் தவிர பல வெளிநாடுகள் இலங்கைக்கு உதவி வழங்கியுள்ளதாகவும், அதன்படி அனர்த்தத்திற்குப் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக மொத்தம் 47 வெளிநாடுகள் உதவி வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, பணமாகப் பெறப்பட்ட உதவிகளுக்கு மேலதிகமாக, இலங்கைச் சுங்கத்திற்குப் பெருமளவிலான பொருட்களும் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதுவரை சுங்கத்திற்கு கிடைத்துள்ள பொருட்களின் மொத்த மதிப்பு 2.3 பில்லியன் ரூபாவையும் தாண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmkqlgyt404b1o29ngyj4bx1o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.