All Activity
- Past hour
-
குட்டிக் கதைகள்.
epntrsoSdo 9L0f69r7m4:fm0ce065 021 3u3a4às5c311t 2l1a56t3567 · ஒரு எலியின் சுவாரஸ்யமான சம்பவம் 👌" சற்று நிதானமாக படியுங்கள் 🙏" இன்று காலை வழமை போல எனது அம்மன் கோவில் ஆலய பூஜைக்கு நான் சென்றேன் கதவை திறந்து உள்ளே போனதும் ஒரு ஆச்சரியம் என்ன என்று பார்த்தால் இரண்டு செம்புகள் தட்டில் இருந்து கீழே உருண்டு கிடந்தன அதை எடுக்க சென்றால் அதன் பின்னே இருந்து ஓர் பெரிய எலி ஓடி வந்தது நான் பயந்துவிட்டேன் காரணம் ஆலயத்தின் உள்ளே எலிகள் இல்லை சரி என்று அதை கலைத்தேன் அது அங்கும் இங்கும் ஓடி ஒளிந்து கொண்டிருந்தது அதை அடித்து கொல்ல பல அவகாசம் கிடைத்த போதும் என் மனம் அப்படியான காரியத்தை செய்யாது ஏனென்றால் அந்த ஜீவன்கள் உணவு தண்ணீர் இவற்றுக்காக மட்டும் தான் தேடி வரும் , பல இடங்களில் இதை உணவு வைத்து ஏமாற்றி கொல்கிறார்கள் பிடித்து வைத்து நீரில் அமிழ்த்தி மூச்சு திணறி சாகடிக்கிறார்கள் பாவம் அவைகள் சரி கதைக்கு வருவோம் ஒரு வழியாக தண்ணீர் வெளியேற்ற குழாய் வழியாக ஓடி சென்று விட்டது நான் வெளியே சென்று பார்த்தேன் அது ஓடி போய் அருகில் இருந்த மதில் சுவற்றில் ஏறி இருந்து பின் காலை ஊன்றி முன் கால் இரண்டையும் கூப்பி என்னை கும்பிட்ட மாதிரி செய்தது நான் அதை பெரிதாக எடுக்காமல் எனது பூஜை அலுவல்களை கவனிக்க சென்று விட்டேன் எல்லா பூஜைகளும் பண்ணி இறுதியாக சண்டிகேஸ்வரர் பூஜை பண்ண வரும் போது பார்த்தால் அந்த எலி அதே மதில் சுவற்றில் நிற்கிறது ஏனென்றால் அதை கலைத்து ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாகிவிட்டது அவ்வளவு நேரம் ஒரு எலி அதே இடத்தில் இருக்குமா?? என்று எனக்கு சந்தேகம் ??என்னை கண்டதும் முதல் செய்த போல இரு கைகளையும் கூப்பி ஏதோ செய்தது நான் என்னடா இது என்று யோசித்து கொண்டு பூஜையை முடித்தேன் பிறகு அடியவர்களிற்கு விபூதி பிரசாதம் கொடுத்து விட்டு வந்து எட்டி பார்த்தேன் ஒரு இஞ்ச் கூட நகராமல் அதே போல் இருந்து செய்தது நான் மிகவும் திகைத்து விட்டேன் என் வாழ்நாளில் இப்படி ஓர் எலியின் செய்கையை பார்க்கவில்லை என் வீட்டில் அதிகமாக பூனைகள் இருப்பதால் எலி இல்லை சரி என்று ஒரு 10 நிமிடத்தில் ஆலய ஒலிபெருக்கி பாடல்கள் நிறுத்தியதும் நான் உள்ளே பூக்கள் எடுத்தி வைக்கும் போது செம்புகள் இருந்த தட்டில் இருந்து சிறிய கீச்சொலி கேட்டது அவ்வளவு நேரம் ஆலய ஒலிபெருக்கியின் சத்தத்தில் அந்த சிறிய ஒலி எனக்கு கேட்கவில்லை என்ன சத்தம் என்று பார்த்தால் அந்த இடத்தில் எலுமிச்சை பழம் அளவில் ஓர் சிறிய ஆனால் அழகான குண்டு எலிக்குஞ்சு ஒன்று நடுங்கிக்கொண்டு இருந்தார் எனக்கு விளங்கிவிட்டது உடனே ஓடிச்சென்று வெளியே பார்த்தேன்....... அதே இடத்தில் மதில் சுவற்றில் அதே எலி என்னை கண்டதும் கைகளை குவித்தது அந்த நொடி என் இதயம் உடைந்து கண்கள் கலங்கி நின்றேன் இப்படியும் ஓர் எலியா என்று ??? சற்றும் தாமதிக்காமல் அந்த குட்டி எலியை ஓர் தடிமனான துணியால் பிடித்து ஓர் வாழைப்பழத்தையும் எடுத்து கொண்டு மதில் சுவற்றில் வைத்து விட்டு தள்ளி வந்து நின்று விட்டேன் உடனே தாய் எலி ஓடி வந்து தன் பிள்ளை முகர்ந்து பார்த்து ஏதேதோ செய்தது பழத்தை உண்ணவில்லை தன் பிள்ளையை மட்டும் கூட்டிச்சென்றது போகும் முன் என்னை ஒரு முறை நின்று திரும்பி பார்த்தது அந்த ஒரு பார்வை என்னை ஓர் மனிதன் என்ற உணர்வை உணர வைத்தது என் பெற்றோர் என்னை வளர்த்த விதத்தை நான் உணர்ந்தேன் பிள்ளையார் முதல் வைரவர் வரை எத்தனையோ தெய்வங்களுக்கு எவ்வளவோ மந்திரங்கள் சொல்லி தீபம் காட்டி செய்திருந்தாலும் இந்த எலிக்கு நான் செய்த அந்த ஒரு செயலுக்கு முன் இந்த பூஜைகள் அனைத்தும் அந்த பாசமான தாய் எலியின் கால் தூசுக்கு முன் ஒன்றுமே இல்லை என உணர்ந்தேன் அந்த ஒரு மணி நேரம் அந்த தாயின் மனது எவ்வளவு போராட்டம் கண்டிருக்கும் தன்பிள்ளைக்கு என்னநடந்திருக்குமோ என இதை எழுதும் போது கூட கண்களில் நீர் வந்தது அனைத்து உயிர்களுக்கும் பாசம் இருக்கிறது என்பதை உணர்ந்து வாழ்வோம் அன்புடன்.... #இராவண_தேசத்தின்விஷ்வாமித்ரன் #விஷ்ணுசர்மா.....
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
வைரமுத்து எழுதிய பல ஆயிரம் பாடல்களில் சில நூறு முத்துக்களாவது இல்லையா? வைரமுத்து வெளியிட்ட நூல்களில் ஒரு சிலவாவது முத்துக்கள் இல்லையா? இந்த முத்துக்கள் ஞானபீடத்துக்குரிய தகுதியை கொடுக்கவில்லையா? கவிஞர் கண்ணதாசனிற்கு எவ்வாறான அங்கீகாரங்கள், விருதுகள் கிடைத்தன என தெரியவில்லை. ஆனால், அவர் மீது வசவுகள் பாடி அவர் படைப்புக்களை நையாண்டி செய்து தமது வக்கிரங்களை கொட்டி தீர்த்த தமிழ் இலக்கிய காவலர்களின் புலம்பல்களை முன்னொரு பொழுது வாசித்துள்ளேன்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு வெளியானதும் சர்ச்சை - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 17 மார்ச் 2026, 09:58 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் பிரபல கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்ட பிறகு அவர் மீதான மீடூ' குற்றச்சாட்டுகள் மீண்டும் கவனம் பெற ஆரம்பித்துள்ளன. வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த முக்கிய நபர்களுள் ஒருவரான பாடகி சின்மயி, வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதையும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பவர்களையும் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளார். வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது குறித்து இலக்கிய உலகிலும் சர்ச்சை எழுந்துள்ளது. தனக்கு விருது வழங்கப்படுவது குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள், விமர்சனங்கள் குறித்த வைரமுத்துவின் கருத்தை அறிய அவரை பிபிசி தமிழ் தொடர்புகொள்ள முயன்றது. எனினும், அவருடைய கருத்தை அறிய முடியவில்லை. அவருடைய கருத்து பெறப்பட்டவுடன் இக்கட்டுரை புதுப்பிக்கப்படும். பாரதிய ஞானபீடம் (jnanpith) எனும் சுயாதீன அமைப்பால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்திய மொழி இலக்கியங்களில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ரூ. 11 லட்சம் பணமும், வெண்கல சரஸ்வதி சிலையும் விருது பெறும் நபருக்கு குடியரசு தலைவரின் கைகளால் வழங்கப்படும். தமிழ் மொழியில் இதுவரை 1975-ம் ஆண்டில் எழுத்தாளர் அகிலனுக்கும் 2002-ம் ஆண்டில் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் ஞானபீட விருது வழங்கப்பட்டது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் இந்த விருதை பெறுபவராக ஆகியிருக்கிறார் வைரமுத்து. வைரமுத்துவுக்கு பாராட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்டோர் வைரமுத்துவை பாராட்டி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். ஞானபீட விருது பெறுவது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய வைரமுத்து, "கால் நூற்றாண்டுக்குப் பிறகு வாராது வந்த மாமணியாக தமிழுக்கு இந்த விருது வந்திருக்கிறது. என்னை நானே வியந்துகொள்கிறேன். மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்." என தெரிவித்தார். செய்தியாளர்களிடம் கேள்வி கேட்கலாம் என தெரிவித்த வைரமுத்து, அவை ஞானபீட விருது மற்றும் தமிழ் தொடர்பானதாக இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார். அதுபோன்றே, செய்தியாளர் சந்திப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன. 1980-ல் வெளியான நிழல்கள் படத்தில் 'இது ஒரு பொன்மாலை பொழுது' என்ற பாடல் மூலம் திரையுலகில் வைரமுத்து அறிமுகமானார். கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், தண்ணீர் தேசம், மூன்றாம் உலகப்போர் உள்ளிட்ட புதினங்கள், பல கவிதை மற்றும் கட்டுரை தொகுப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். சாகித்ய அகாடமி, தேசிய விருது, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை வைரமுத்து பெற்றுள்ளார். தற்போது வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டது தொடர்பான வாழ்த்துகளுக்கு மத்தியில் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. பின்னணி பாடகி சின்மயி விமர்சனம் பட மூலாதாரம்,Chinmayi Sripada படக்குறிப்பு,சின்மயி குறிப்பாக, வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் புகாரை முன்வைத்த சின்மயி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய சின்மயி, "வைரமுத்து மீது புகார் கொடுத்ததால் நான் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலிருந்து தடை செய்யப்பட்டேன். சினிமாவில் உள்ள பலதுறை சங்கங்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்களை பெரிதாக கண்டுகொள்வதில்லை. என் மீது சமூக வலைதளங்களில் இன்னும் விமர்சனங்கள் தொடர்கின்றன. 17 பேர் வைரமுத்துவுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர். மூன்று பேர் வீடியோ முன்பாக வந்து கூறினர். எங்களின் போராட்டம் தனி, சினிமா வாழ்க்கை தனி என பார்க்கின்றனர்" என்றார். வைரமுத்துவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது ஒரு கலைஞரை அவருடைய கலை ரீதியாக மட்டும் அணுக வேண்டுமா அல்லது அவர் மீதான தனிப்பட்ட விமர்சனங்கள், சர்ச்சைகள், செயல்பாடுகளுடன் சேர்த்தே அணுக வேண்டுமா என்ற விவாதத்தையும் தூண்டியுள்ளது. இதுகுறித்து பதிலளித்த சின்மயி, "கலையையும் கலைஞரையும் பிரித்துப் பார்க்க முடியாது." என தெரிவித்தார். "என்னுடைய 32 வயதில் இந்த புகாரை கூறினேன். இப்போது எட்டு ஆண்டுகளாகிவிட்டன. 40 வயதாகிறது. என்னுடைய 30 வயதுகளை நான் எப்படி கழிக்க வேண்டுமென நினைத்தேனோ, அப்படி என்னால் கழிக்க முடியவில்லை. என்னுடைய பாடல்கள் பலவும் மிகப்பெரிய ஹிட். ஆனால், அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு எனக்கு வாய்ப்புகளே இல்லை." என்கிறார் சின்மயி. "நான் டப்பிங் பேசுகிறேன் என்றால், அந்த படத்தில் யாரும் டப்பிங் பேச மாட்டார்கள் எனும் அளவுக்கு என்னை ஒதுக்கினர்." பிரபலம் அடையவும் பணத்துக்காகவும் தான் இத்தகைய குற்றச்சாட்டுகளை சொல்வதாக இன்று வரை தன் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக சின்மயி தெரிவித்தார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க 2018-ஆம் ஆண்டில் 'மீ டூ' இயக்கம் பரவலாக கவனம் பெற்றது. அப்போது வைரமுத்து மீது சின்மயி குற்றம்சாட்டினார். வைரமுத்து மீதான சின்மயி குற்றச்சாட்டு என்ன? 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சின்மயி தனது சமூக ஊடக பதிவில், அந்த சம்பவம் 2005-2006ஆம் ஆண்டில் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இலங்கைத் தமிழர்களுக்காக 'வீழ மாட்டோம்' என்ற ஆல்பத்தில் தானும் மாணிக்க விநாயகமும் பாடியிருந்ததாகவும் இது தொடர்பான வெளியீட்டு விழா, சுவிட்சர்லாந்தில் நடந்ததாகவும் கூறிய சின்மயி, இந்த விழாவில் தாங்களும் கலந்துகொண்டு பாடியதாகக் கூறியிருந்தார். விழா முடிந்து எல்லோரும் புறப்பட்ட நிலையில், தன்னையும் தன் தாயாரையும் புறப்பட வேண்டாம் என்று கூறியதாகவும் அப்போது விழா அமைப்பாளர்களில் ஒருவர் வைரமுத்துவை அவரது அறையில் சென்று சந்திக்குமாறு கூறியதாகவும் தெரிவித்திருந்தார். எதற்காக எனக் கேட்டபோது, ஒத்துழைக்கும்படி அவர் கூறியதாகவும் இல்லாவிட்டால் இந்தத் தொழிலிலேயே இருக்க முடியாது என மிரட்டியதாகவும் சின்மயி தெரிவித்திருந்தார். ஆனால், தாங்கள் உறுதியாக நின்று, உடனடியாகத் தங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி வலியுறுத்தியதாக சின்மயி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். ஆனால், இதுகுறித்து வைரமுத்து அச்சமயத்தில் தனது எக்ஸ் பக்கத்தில், "அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்." என்று பதிவிட்டார். சின்மயி உட்பட 17 பெண்கள் வைரமுத்து மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. 2023-ஆம் ஆண்டு புவனா சேஷன் எனும் பாடகியும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். வைரமுத்து உடனான தொலைபேசி உரையாடல்கள் ஒருகட்டத்தில் அசௌகரியமாக உணர வைத்ததாக அச்சமயத்தில் அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,chinmayi/Instagram படக்குறிப்பு,சின்மயி வைரமுத்துவுக்கு எதிராக சின்மயி 2019-ம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். திரைத்துறையில் உள்ள சங்கங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக்கான உள் புகார்கள் குழு (ஐசிசி புகார் குழு) அமைக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் அமைக்கப்படவில்லை என சின்மயி கூறுகிறார். வழக்கறிஞர் கருத்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கீதா ராமசேஷன், "சினிமாவின் பல்வேறு துறைகளில் பாலியல் புகார்களை விசாரிக்க சட்டப்படி குழுக்கள் அமைக்க வேண்டும், அதை விசாரிக்க வேண்டும். சினிமா ஓர் அமைப்பாக இல்லை. அங்கு இத்தகைய குழுக்கள் அமைப்பது சவாலாக உள்ளது. கேரளாவில் நீதிபதி ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த குழு பல பரிந்துரைகளை வழங்கியது. தமிழ் சினிமாவில் அப்படி அமைக்கப்படவில்லை. இந்த மாதிரியான புகார்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை." என தெரிவித்தார். மலையாள திரை உலகில் நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், புகார்கள் போன்றவை நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் மூலம் 2024-ம் ஆண்டு பொது வெளிக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, நடிகைகள் பலரும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களால் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளானதாக அடுத்தடுத்து புகார்களை முன்வைத்தனர். மலையாள நடிகர் சங்கத்தில் சேர்வதற்கே கூட பாலியல் சமரசத்திற்கு சிலர் நிர்பந்திக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 'சட்ட ரீதியான இடைவெளிகள்' பட மூலாதாரம்,Tara Krishnaswamy/Facebook படக்குறிப்பு,தாரா கிருஷ்ணசுவாமி எழுத்தாளரும் பெண்ணியச் செயற்பாட்டாளருமான தாரா கிருஷ்ணசுவாமி கூறுகையில், "தனியார் அறக்கட்டளை வழங்கும் விருதாக இருந்தாலும் இதை வழங்குவது குடியரசு தலைவர். எனவே, அந்த வகையில் அரசுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது." என்றார். தாரா கிருஷ்ணசுவாமி, பெண் எம்எல்ஏக்கள், எம்.பிக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வலியுறுத்தும் 'பொலிட்டிக்கல் ஷக்தி' (Political Shakti) எனும் அமைப்பின் இணை நிறுவனராக உள்ளார். பெண்ணின் குற்றச்சாட்டுகளை விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதில் சட்ட ரீதியாக பல இடைவெளிகள் இருப்பதாக அவர் கூறுகிறார். "பெண்ணுக்கு எதிரான பல குற்றங்கள், குற்றமாகவே அங்கீகரிக்கப்படவில்லை. திருமண உறவில் பாலியல் துன்புறுத்தல் அதற்கு ஓர் உதாரணம். அமைப்புசாரா தொழிலில் பெண்களுக்கு நேரும் பாலியல் குற்றங்களில் தகுந்த ஆதாரங்களை சேகரிப்பது சவாலாக இருக்கிறது. இந்த இடைவெளிகளை நிரப்புவதற்கு சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்ற வெளிப்படையான விவாதமே இங்கு நடைபெறவில்லை. பாலியல் குற்றங்களை மறைக்கக் கூடிய சமூகமாக, கலாசாரமாகத்தான் இந்திய சமூகம் பெரும்பாலும் இருக்கிறது" என்றார் தாரா கிருஷ்ணசுவாமி. இலக்கிய உலகில் சர்ச்சை பாலியல் குற்றச்சாட்டுகள் மட்டுமல்லாமல், இலக்கிய உலகிலும் வைரமுத்துவுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஜெயமோகன், பவா செல்லதுரை போன்ற எழுத்தாளர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். "ஞானபீடப் பரிசு என்பதை தீர்மானிப்பதில் பரிந்துரை முதல் இறுதிவரை தமிழகக் கல்வித்துறையினர் ஒரு பங்களிப்பாற்றுகின்றனர். அவர்களில் இலக்கியமறிந்தவர்கள், அடிப்படை அறிவுத்திறன் கொண்டவர்கள் அரிதினும் அரிது. பெரும்பாலும் சாதிக்கணக்குகள், அரசியல் கணக்குகள் கொண்டவர்களே மிகுதி. ஒவ்வொரு இடத்திலும் எந்த தகுதியுமற்றவர்களை, வெற்றுச்சூழ்ச்சியாளர்களை மேலே தூக்கி வைத்திருக்கிறோம். கொண்டாடுகிறோம். அப்போது அவர்களில் ஒருவரைத்தான் அவர்கள் முன்னிறுத்துவார்கள். அது நிகழ்ந்துள்ளது. தமிழ் தனக்குரிய அவமதிப்பையே ஈட்டிக்கொண்டுள்ளது." என்று எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்துள்ளார். அதேவேளையில் வைரமுத்துக்கு ஆதரவாகவும் கருத்துகள் வந்துள்ளன. பெண்ணிய செயற்பாட்டாளர் ஓவியா தன் பேஸ்புக் பக்கத்தில், "இந்திய அளவிலான கவிஞர்களில் தமிழ்நாட்டிலிருந்து ஞானபீட விருது பெறும் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்துகள். எனக்கு பொதுவாக விருதுகள் குறித்து பெரிய பிரமிப்பு ஏதுமில்லை. நான் பெரிய இலக்கிய அறிவு பெற்றவளுமில்லை. எனவே கருத்துரைக்க வேண்டாமென்றே ஒதுங்க எண்ணினேன். ஆனால் முகநூலைத் திறந்ததும் திரண்டு வந்து நின்ற படையைப் பார்த்து அசந்து போனேன். ஏதோ புனிதர்களும் தேவதூதர்களுமான இந்த படைப்பாளிகள் உலகத்தில் ஒரேயொரு ஒற்றைக் கறுப்பு மனிதனாக வைரமுத்துவை இவர்கள் சித்தரிப்பதைப் பார்த்த பின் இதுபோன்று ஒரு ரவுடியிசக் கலாசாரத்தை ஆதரிக்க முடியாது என்று தோன்றுகிறது. ஒரு விருதை தாஜா செய்தும் பணம் கொடுத்தும் வாங்குவது எவ்வளவு கேவலமோ அதைவிட கேவலம் இது போன்று ஒருவருக்கு விருதளிக்கப்பட்ட பின் இவ்வளவு பேர் சேர்ந்து சேற்றை வாரியிறைப்பது. இன்றுவரை நேரம் ஒதுக்கி தமிழ்க் கவிதைகளில் வைரமுத்துவின் இடம் குறித்து படிக்கவில்லை. (எத்தனையோ பாடல்கள் இதயம் தொட்டதுண்டு. அதேபோல் முகம் சுளிக்க வைத்ததும் உண்டு) இப்போதைய எனது நேர நெருக்கடிகளில் உடனடியாக அதனைச் செய்யும் திட்டமுமில்லை. நிச்சயமாக தமிழ் எழுத்து வரிசை குறித்து இன்னும் தீவிர வாசிப்புக்குள் போகும் போது கண்டிப்பாகக் கவிஞர் வைரமுத்துவின் எழுத்தும் என்னுடைய கவனத்தில் இடம் பெறும்." என பதிவிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx24ermz1kyo அதற்கு கூட தமிழில் பெயர் வைக்கமாட்டீர்களா?! உலக தமிழ் இலக்கியத்திற்கான வாழும் விருது என்று எழுதினால் குடியா முழுகிவிடும்! நேரடி கூகிள் பெயர்ப்பு கீழுள்ளவாறு வருகிறது! உலக இலக்கியத்திற்கான வாழும் தமிழ் விருது .
-
-
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை - நேரலை
டொலர் வருவாய் ஈட்டும் வர்த்தகர்களுக்கு எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதி Mar 17, 2026 - 08:35 PM அமெரிக்க டொலர்களில் வருமானம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்கள், தமக்குத் தேவையான எரிபொருளைத் தாமே இறக்குமதி செய்து, அதனை சுற்றுலா மற்றும் ஏற்றுமதித் துறைகளுக்கு விற்பனை செய்வதற்குத் தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை நாளை (18) முதல் அமலுக்கு வரும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இன்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். அங்கு ஜனாதிபதி வெளியிட்ட மேலதிக தகவல்கள் வருமாறு: "எரிபொருளுக்காக வழங்கப்பட்ட இரு நீண்டகால டெண்டர்களின் கீழ் தலா 90,000 மெட்ரிக் தொன் கொண்ட இரு கப்பல்கள் உரிய காலத்திற்கு கிடைக்கவில்லை. அத்துடன் தனியார் விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து வர வேண்டிய ஒரு கப்பலும் தாமதமாகியுள்ளது. ஒரு கப்பல் தாமதமானாலும் அது முழு விநியோக வலையமைப்பையும் பாதிக்கிறது. இதனைச் சமாளிக்க இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், டீசல், கச்சா எண்ணெய் மற்றும் பெற்றோல் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள அவசர டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. அவற்றுக்கு நம்பிக்கையான விநியோகஸ்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. மேலும், டொலர்களில் வருமானம் ஈட்டும் வர்த்தகர்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று எரிவாயு விநியோகத்தைத் தடுத்ததால் நாம் மார்ச் மாதத்திற்கு மேலதிகமாக 38,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஓடர் செய்தோம். அவை அனைத்தும் தற்போது கிடைத்துள்ளன. மற்றுமொரு கப்பல் நாளை அல்லது மறுதினம் வரும் என்பதால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது." "QR முறைமையில் சிக்கல்கள் வரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்தே ஞாயிற்றுக்கிழமை அதனை ஆரம்பித்தோம். தற்போது 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவாகியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக எரிபொருள் கையிருப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. QR ஒதுக்கீடு போதாத அத்தியாவசியத் துறைகளுக்கு அதனை அதிகரித்து வழங்க அமைச்சுக்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவு விநியோகச் சங்கிலி ஆராயப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குத் தேவையான உணவுகளைக் களஞ்சியப்படுத்தும் வசதிகள் இருப்பதால் அத்தியாவசிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது." "ஒவ்வொரு அமைச்சும் தமது எரிபொருள் பயன்பாட்டை ஆகக்குறைந்தது 25% ஆல் குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சு ஏற்கனவே அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அரச சேவையின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த தற்போது பின்பற்றப்படும் வேலை நேர ஒழுங்குமுறை (இரண்டு நாட்கள் வேலை, ஒரு நாள் விடுமுறை) வெற்றிகரமாக உள்ளது." "எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க 5 கப்பல்களைக் கொள்வனவு செய்ய அவசர டெண்டர் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நிலவும் எரிபொருள் 'கார்டெல்களை' நாம் உடைத்து வருகிறோம். ஊழல் தொடர்பில் கடும் நிலைப்பாட்டை கொண்டுள்ளேன். எந்தவொரு அமைச்சராவது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொண்ட ஊழல் தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டால், அவர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்படுவார். அமைச்சர் ஜெயக்கொடி மீதான குற்றச்சாட்டு 2014 இல் அவர் ஒரு அரச அதிகாரியாக இருந்தபோது ஏற்பட்ட கொள்முதல் சிக்கலாகும். அவர் அமைச்சராக இருக்கும்போது குற்றஞ்சாட்டப்பட்டால் நாளைக்கே அவரை நீக்குவேன்." "தற்போதைய திட்டங்களின்படி மின்சாரத் தடையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இதுவரை எழவில்லை. இருப்பினும், மத்திய கிழக்கின் போர்ச் சூழல் எவ்வளவு தூரம் விரிவடையும் என்பதைப் பொறுத்தே எதிர்கால தீர்மானங்கள் அமையும்" என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmmuqti260013356pw7kqyqbo
- Today
-
நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
"எங்களுக்கு நேட்டோவின் உதவி தேவையில்லை" – டொனால்ட் ட்ரம்ப் அதிரடி Mar 17, 2026 - 10:49 PM ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடுகள் மற்றும் ஏனைய கூட்டாளிகள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாடியுள்ளார். தமது Truth Social தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், அமெரிக்கா இனி நட்பு நாடுகளின் உதவியை எதிர்பார்க்கவில்லை என்றும், உண்மையில் தங்களுக்கு அவர்களின் உதவி தேவையே இல்லை என்றும் காரசாரமாகத் தெரிவித்துள்ளார். ஈரான் உடனான போரில் நேட்டோ நாடுகள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளத் தயங்குவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். "அவர்கள் இதில் தலையிட விரும்பவில்லை என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது," என அவர் கூறியுள்ளார். "நேட்டோ நாடுகளின் உதவி எங்களுக்கு இனி 'தேவையில்லை' அல்லது நாங்கள் அதை விரும்பவில்லை – உண்மையில் எங்களுக்கு அவர்களின் உதவி எப்போதும் தேவைப்பட்டதில்லை " என ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். நேட்டோ அமைப்பிற்காக அமெரிக்கா ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டொலர்களைச் செலவழிப்பதாகவும், ஆனால் அவசரக் காலங்களில் அந்த நாடுகள் அமெரிக்காவிற்கு உதவ முன்வருவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனை ஒரு "ஒருதலைப்பட்சமான வீதி" என்று அவர் விமர்சித்துள்ளார். நேட்டோ மட்டுமன்றி ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளையும் அவர் பெயரிட்டுச் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா உலகின் மிக சக்திவாய்ந்த நாடு என்றும், தங்களுக்கு யாருடைய உதவியும் அவசியமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பெப்ரவரி இறுதியில் தொடங்கின. ஹார்முஸ் நீரிணை யை (Strait of Hormuz) மீண்டும் திறக்க மற்றும் எண்ணெய் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க நட்பு நாடுகளின் கடற்படை உதவியை ட்ரம்ப் கோரியிருந்தார். இருப்பினும், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா போன்ற முக்கிய நாடுகள் இதில் நேரடி இராணுவப் பங்களிப்பை வழங்க மறுத்துள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்த ஆக்ரோஷமான அறிக்கை வெளியாகியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmuvglr9001a356pcehqfi5h
-
அமெரிக்கா - இஸ்ரேலுடன் மோதல் ; நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள்? - இஸ்லாமிய நாடுகளிடம் ஈரான் கேள்வி
அமெரிக்கா - இஸ்ரேலுடன் மோதல் ; நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள்? - இஸ்லாமிய நாடுகளிடம் ஈரான் கேள்வி 17 Mar, 2026 | 12:28 PM அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலுக்கு மத்தியில் நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள் என ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி இஸ்லாமிய நாடுகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். உலகெங்கும் உள்ள முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிய நாடுகளின் அரசாங்கங்களுக்கும் ஆறு அம்சங்களை சுட்டிக்காட்டி, அலி லாரிஜானி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்திலேயே அவர் இக்கேள்வியை முன்வைத்துள்ளார். தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின்போது ஈரான் ஒரு வஞ்சனமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இது, நாட்டை நிலைகுலையச் செய்து, துண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட தாக்குதலாக இருக்கிறது என கடிதத்தில் அலி லாரிஜானி குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இராணுவத் தளபதிகள், ஈரான் உயர் தலைவர், பொதுமக்கள் உள்ளிட்டோர் உயிரிழந்ததாகவும் அதற்குத் தாம் பதிலடி கொடுத்ததாகவும் அதில் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானுக்கு பெரும்பாலான இஸ்லாமிய அரசாங்கங்களிடமிருந்து ஆதரவு கிடைக்கப்பெறவில்லை என்றும் அரிதான சந்தர்ப்பங்களிலேயே மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் ஆதரவுடன் சில நாடுகளே ஈரானுக்கு உதவியதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஈரானை தாக்க அனுமதித்துவிட்டு, பதிலுக்கு அமெரிக்க தளங்களை தாக்கினால் எங்களை எதிரி என்பதா? ஈரான் வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா? நாம் ஒன்றிணைந்தால் மட்டுமே பாதுகாப்பை உறுதி செய்யமுடியும். பிராந்தியத்தின் எதிர்காலத்தை நிதானமாக சிந்தித்துப் பாருங்கள் என்றும் இஸ்லாமிய நாடுகளை நோக்கி அக்கடிதத்தின் ஊடாக குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/241180
-
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை - நேரலை
மின்சார வாகனங்களை பகல் நேரத்தில் சார்ஜ் செய்யுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் Mar 17, 2026 - 08:44 PM மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில் நிலவும் அதிக மின்சாரத் தேவையைக் குறைக்கும் பொருட்டு, மின்சார வாகன உரிமையாளர்கள் தமது வாகனங்களை பகல் நேரங்களில் சார்ஜ் செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmmur4ahi0016356pbysgcvad
-
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை எவரது தலையீடுமற்ற சுயாதீன நிறுவனமாகச் செயற்படுத்துவதே எமது நோக்கமாகும் - பிரதமர்
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை எவரது தலையீடுமற்ற சுயாதீன நிறுவனமாகச் செயற்படுத்துவதே எமது நோக்கமாகும் - பிரதமர் Published By: Vishnu 17 Mar, 2026 | 08:51 PM லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட எவரது அழுத்தங்களுமின்றி, ஒரு சுதந்திரமான, சுயாதீனமான நிறுவனமாக இயங்குவதற்குத் தேவையான அனைத்துப் பின்னணிகளையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ,மார்ச் 17, பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளைத் தீர்மானிப்பது தொடர்பான இடைக்கால முன்மொழிவு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர், கௌரவ சபாநாயகர் அவர்களே, இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளின் ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளைத் தீர்மானிக்கும் முன்மொழிவானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்மொழிவாகும் என நான் கருதுகின்றேன். 2023ஆம் ஆண்டில் ஊழல் எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், அது தொடர்பான ஆணைக்குழுவொன்று இருப்பதை நாம் 2025ஆம் ஆண்டிலிருந்தே உணரத் தொடங்கினோம். அதன் பின்னர், இந்த ஆணைக்குழுவைச் செயற்படுத்துவதில் பல சவால்களை எதிர்கொண்டோம். குறிப்பாக, பணியாளர்களை இணைத்துக்கொள்வதில் காணப்பட்ட கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களினால் ஆணைக்குழுவின் தேவைக்கேற்பச் செயற்படுவதைத் தடுக்கும் ஏராளமான தடைகளும் சவால்களும் இருந்து வந்தன. குறிப்பாக, ஆணைக்குழுவின் செயற்பாடுகளின் போது, தனது பணியாளர்களுக்கான கொடுப்பனவுகளைத் தீர்மானிப்பதற்கான சுதந்திரம், செயற்பாட்டிற்குத் தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகளை வரையறுப்பதற்கான சுதந்திரம், அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான சுதந்திரம் மற்றும் அவர்களின் வருடாந்தத் திட்டங்களுக்கு அமைவான நிதி ஒதுக்கீட்டு மதிப்பீடுகளைச் சமர்ப்பித்தல் போன்ற பல நடைமுறைச் சாத்தியமான நிலைமைகளையும் நிபந்தனைகளையும் உருவாக்க வேண்டிய தேவை இருந்தது. புதிய பணிப்பாளர் நாயகம் பதவியேற்ற போது, சுமார் 4,000-இற்கும் அதிகமான கோப்புகள் விசாரணைகள் முடிந்த நிலையிலும் வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் தேங்கிக் கிடந்தன. மேலும், அங்கு வெறும் 31 சட்ட அதிகாரிகள் மாத்திரமே பணியில் இருந்தனர். இந்த முன்மொழிவு நிறைவேற்றப்படுவதன் மூலம், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைத் தெரிவு செய்யும் அதிகாரம், அவர்களுக்கான கொடுப்பனவுகளைத் தீர்மானிக்கும் சுதந்திரம், நிதி விவகாரங்களில் சுயாதீனமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை ஆகியவை ஆணைக்குழுவிற்கு வழங்கப்படுகின்றன. இதன் மூலம் புதிய அரசியல் கலாசாரத்தினுள் ஊழலற்ற, லஞ்சத்துக்கு எதிரான சுத்தமான அரச சேவையை உருவாக்குவதற்கான மிக முக்கியமானதொரு அடித்தளம் இடப்படுகின்றது, என அவர் தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்; தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில், எமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தித் துறை ஆகியன பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. தொடர்ச்சியாக மாற்றமடைந்து வரும் இவ்வாறான நிலைமைகளை எம்மால் முன்கூட்டியே கணிக்க முடியாதுள்ளது. இப்பாதிப்புகள் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கும் ஒரு தருணமாகும். இருப்பினும், அரசாங்கம் என்ற ரீதியில் இம்மாற்றங்களை இனங்கண்டு, அதன் மூலம் எமது பொருளாதாரத்திற்கு ஏற்படும் தாக்கங்களை முகாமைத்துவம் செய்வதே எமது பொறுப்பாகும். அதற்காக, நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நான்கு விசேட குழுக்களை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய,அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி மக்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான குழு. அரசத் துறையில் எரிசக்தி முகாமைத்துவத்தைப் பேணி, சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான குழு. தேசிய கொள்முதல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி, எரிசக்தியைப் பெற்றுக்கொள்வதில் தற்போதுள்ள முறைகளுக்கு மேலதிகமாகப் புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்படுவதற்கான குழு. இந்த நெருக்கடியால் ஏற்படக்கூடிய சமூகத் தாக்கங்கள், குறிப்பாகச் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு நியாயமான தீர்வுகளைக் காணுதல் மற்றும் நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான குழு ஆகிய குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை நாம் ஒரு நாடாகக் கூட்டாக எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளாகும். இதற்காக எமது அரச சேவையினரும், தனியார் துறையினரும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பேதமின்றி அரசியல் அதிகாரத் தரப்பினரும், நாட்டு மக்களும் ஒன்றிணைய வேண்டும். கடந்த காலங்களில் சவால்களை எதிர்கொண்டது போலவே, இப்போதும் நாம் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டும். சரியான தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவத்தினூடாக, தேவையான தருணத்தில் உரிய தீர்மானங்களை மேற்கொண்டு இந்த இக்கட்டான நிலைமையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு, எனப் பிரதமர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/241233
-
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை - நேரலை
எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது! – ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உறுதி Mar 17, 2026 - 08:28 PM மார்ச் மாதத்திற்குத் தேவையான 38,000 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு ஏற்கனவே நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்குள் மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு கிடைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். அங்கு ஜனாதிபதி வெளியிட்ட மேலதிக தகவல்கள் வருமாறு: "எரிபொருளுக்காக வழங்கப்பட்ட இரு நீண்டகால டெண்டர்களின் கீழ் தலா 90,000 மெட்ரிக் தொன் கொண்ட இரு கப்பல்கள் உரிய காலத்திற்கு கிடைக்கவில்லை. அத்துடன் தனியார் விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து வர வேண்டிய ஒரு கப்பலும் தாமதமாகியுள்ளது. ஒரு கப்பல் தாமதமானாலும் அது முழு விநியோக வலையமைப்பையும் பாதிக்கிறது. இதனைச் சமாளிக்க இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், டீசல், கச்சா எண்ணெய் மற்றும் பெற்றோல் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள அவசர டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. அவற்றுக்கு நம்பிக்கையான விநியோகஸ்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. மேலும், டொலர்களில் வருமானம் ஈட்டும் வர்த்தகர்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று எரிவாயு விநியோகத்தைத் தடுத்ததால் நாம் மார்ச் மாதத்திற்கு மேலதிகமாக 38,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஓடர் செய்தோம். அவை அனைத்தும் தற்போது கிடைத்துள்ளன. மற்றுமொரு கப்பல் நாளை அல்லது மறுதினம் வரும் என்பதால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது." "QR முறைமையில் சிக்கல்கள் வரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்தே ஞாயிற்றுக்கிழமை அதனை ஆரம்பித்தோம். தற்போது 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவாகியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக எரிபொருள் கையிருப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. QR ஒதுக்கீடு போதாத அத்தியாவசியத் துறைகளுக்கு அதனை அதிகரித்து வழங்க அமைச்சுக்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவு விநியோகச் சங்கிலி ஆராயப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குத் தேவையான உணவுகளைக் களஞ்சியப்படுத்தும் வசதிகள் இருப்பதால் அத்தியாவசிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது." "ஒவ்வொரு அமைச்சும் தமது எரிபொருள் பயன்பாட்டை ஆகக்குறைந்தது 25% ஆல் குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சு ஏற்கனவே அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அரச சேவையின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த தற்போது பின்பற்றப்படும் வேலை நேர ஒழுங்குமுறை (இரண்டு நாட்கள் வேலை, ஒரு நாள் விடுமுறை) வெற்றிகரமாக உள்ளது." "எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க 5 கப்பல்களைக் கொள்வனவு செய்ய அவசர டெண்டர் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நிலவும் எரிபொருள் 'கார்டெல்களை' நாம் உடைத்து வருகிறோம். ஊழல் தொடர்பில் கடும் நிலைப்பாட்டை கொண்டுள்ளேன். எந்தவொரு அமைச்சராவது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொண்ட ஊழல் தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டால், அவர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்படுவார். அமைச்சர் ஜெயக்கொடி மீதான குற்றச்சாட்டு 2014 இல் அவர் ஒரு அரச அதிகாரியாக இருந்தபோது ஏற்பட்ட கொள்முதல் சிக்கலாகும். அவர் அமைச்சராக இருக்கும்போது குற்றஞ்சாட்டப்பட்டால் நாளைக்கே அவரை நீக்குவேன்." "தற்போதைய திட்டங்களின்படி மின்சாரத் தடையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இதுவரை எழவில்லை. இருப்பினும், மத்திய கிழக்கின் போர்ச் சூழல் எவ்வளவு தூரம் விரிவடையும் என்பதைப் பொறுத்தே எதிர்கால தீர்மானங்கள் அமையும்" என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmmuqjdtk0012356pz5d76v3s
-
போர் எப்போது முடியும்? அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரானின் விருப்பம் என்ன?
போர் எப்போது முடியும்? அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரானின் விருப்பம் என்ன? பட மூலாதாரம்,Reuters/Getty Images படக்குறிப்பு,(இடமிருந்து வலம்) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கட்டுரை தகவல் ஃபிராங்க் கார்ட்னர் பிபிசி செய்தியாளர் 17 மார்ச் 2026, 03:18 GMT வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் 'எல்லோரும் விரும்புகிறார்கள்' என்று சொல்ல முடியாது, ஆனால் பெரும்பாலான மக்கள் இந்தப் போர் சீக்கிரம் முடிவடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் எந்த நிபந்தனைகளின் கீழ்? அங்குதான் நிலைப்பாடுகள் வேறுபடுகின்றன. அமெரிக்கா அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் நோக்கங்கள் சற்றே தெளிவற்றதாக உள்ளன. இரானின் அணுசக்தித் திட்டத்தை கட்டுப்படுத்துவது, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கோரிக்கைகள் அனைத்திற்கும் இரானை அடிபணிய வைப்பது அல்லது இஸ்லாமியக் குடியரசு ஆட்சியை முற்றிலும் வீழ்த்துவது ஆகியவற்றுக்கு இடையே அவர் மாறி மாறித் தள்ளாடுவதாகத் தோன்றுகிறது. இதுவரை, இரான் அடிபணியவுமில்லை, வீழ்ந்துவிடவுமில்லை. ஆனால் 16 நாட்களாகத் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதல்களால் அதன் ராணுவம் கடுமையாக பலவீனமடைந்துள்ளது. ஜெனீவாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஓமன் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே நடந்த மறைமுகப் பேச்சுவார்த்தைகள், அணுசக்தி விவகாரத்தில் முன்னேற்றம் கண்டு வந்தன. இரான் அணு ஆயுதத்தைத் தயாரிக்கவில்லை என்ற கூற்றுக்கு ஓரளவு உறுதியளிக்கும் வகையில், பெரிய அளவிலான சலுகைகளை வழங்க இரான் தயாராக இருந்ததாக ஓமனியர்கள் கூறுகின்றனர். ஆனால், தனது பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தை ரத்து செய்வது அல்லது ஏமனின் ஹூதிகள், லெபனானின் ஹெஸ்பொலா போன்ற குழுக்களுக்கான ஆதரவைக் குறைப்பது குறித்து விவாதிக்க தான் இரான் தயாராக இல்லை. அமெரிக்காவுக்கும் அதன் பல கூட்டாளிகளுக்கும், 'இந்த போர் ஆயதுல்லாகளின் ஆட்சி வீழ்ச்சியடைய வேண்டும்; அதன் இடத்தில் அமைதியான, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, அதன் மக்களுக்கோ அல்லது அண்டை நாடுகளுக்கோ இனி அச்சுறுத்தலாக இல்லாத ஓர் அரசாங்கம் விரைவாக அமைய வேண்டும்' என்பதே என்பதே ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். ஆனால் திங்கட்கிழமை (மார்ச் 16) நிலவரப்படி, அத்தகைய மாற்றத்திற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அமெரிக்காவிற்கான அடுத்த சிறந்த முடிவு என்னவென்றால், கடுமையாகச் சேதமடைந்த இஸ்லாமியக் குடியரசு தனது நடத்தையை மாற்றிக்கொண்டு, தனது குடிமக்களைத் துன்புறுத்துவதை நிறுத்தி, பிராந்தியத்தில் உள்ள அடிப்படைவாத குழுக்களுக்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டு வருவதாக இருக்கும். ஆனால், இரான் தனது புதிய அதி உயர் தலைவராக, அமெரிக்காவை அதிகம் எரிச்சலூட்டக்கூடிய ஒருவரை, மறைந்த ஆயதுல்லா அலி காமனெயியின் மகனான மொஜ்தபா காமனெயியை தேர்ந்தெடுத்த பிறகு இது நடக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஹோர்மூஸ் நீரிணையின் பகுதியளவிலான முடக்கம் மற்றும் அமெரிக்கா மீண்டும் ஒரு சிக்கலான மத்திய கிழக்கு மோதலில் சிக்கிக்கொள்கிறது என்ற உள்நாட்டு அதிருப்தி ஆகியவற்றால், இந்தப் போரை நிறுத்துமாறு அதிபர் டிரம்பிற்கு அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் இரான் ஆட்சியில் எவ்வித மாற்றமும் இன்றி, சவாலான போக்கு நீடித்தால், அது ஒரு தோல்வி என்பதைத் தவிர வேறொன்றாகச் சித்தரிப்பது டிரம்பிற்கு கடினமாக இருக்கும். இரான் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானில் ஆயிரக்கணக்கான இடங்களில் தாக்குதல்களை நடத்தியுள்ளன. போர் விரைவில் முடிவடைய வேண்டும் என்று இரான் விரும்புகிறது, ஆனால் எதையும் தியாகம் செய்து அல்ல - அதாவது அமெரிக்காவின் அனைத்து கோரிக்கைகளுக்கும் அடிபணிவதாக அது அமையக் கூடாது. இந்தப் போரில் டிரம்பை விட நீண்ட காலம் தாக்குப்பிடிப்பதற்குத் தேவையான 'ராஜிய ரீதியிலான பொறுமை' தன்னிடம் உள்ளது என்பதை அது அறிந்திருக்கிறது. புவியியல் நிலையும் அதற்குச் சாதகமாக உள்ளது. வளைகுடா நாடுகளில் இரான் மிக நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது; குறுகிய பாதையான ஹோர்மூஸ் நீரிணை வழியாக வழக்கமாக உலகின் 20% எண்ணெய் விநியோகத்தைக் கொண்டு செல்லும் கப்பல் போக்குவரத்திற்கு காலவரையின்றி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திறனும் அதற்கு உள்ளது. இஸ்ரேலுடன் இணைந்து தான் தொடங்கிய ஒரு போரின் விளைவுகளைச் சமாளிக்க பிற நாடுகள் முன்வந்து உதவ வேண்டும் என்ற அமெரிக்க அதிபரின் அழைப்பு தயக்கத்துடனேயே எதிர்கொள்ளப்படுகிறது. பிரிட்டன், ஐரோப்பா மற்றும் பிற நாடுகள், தொடக்கத்திலிருந்தே இந்தப் போரை ஆதரிக்காத நிலையில், தங்கள் கடற்படைகளை ஆபத்தில் ஆழ்த்தி, ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பளிக்கத் தயங்குகின்றன. அதிகாரப்பூர்வமாக, இரான் மீண்டும் ஒருமுறை தாக்கப்படாது என்பதற்கான உறுதியான உத்தரவாதத்துடனும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் ஏற்பட்ட பில்லியன்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள சேதங்களுக்கான இழப்பீட்டுடனும் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று இரான் கூறுகிறது. இவை இரண்டும் கிடைக்காது என்பது அதற்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இரானின் இஸ்லாமியக் குடியரசுத் தலைமையும் அதன் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையும் இந்த மோதலில் இருந்து தப்பிப் பிழைத்தாலே போதும், அதைத் தங்கள் மக்களுக்கும் உலகிற்கும் ஒரு வெற்றியாக அவர்களால் சித்தரிக்க முடியும். இஸ்ரேல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் - போர் புரியும் இந்த மூன்று நாடுகளில், இஸ்ரேலியர்கள் மட்டுமே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அவசரப்படவில்லை எனத் தோன்றுகிறது. இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைக் கையிருப்புகள், சேமிப்புக் கிடங்குகள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், ரேடார் தளங்கள் மற்றும் ஐஆர்ஜிசி தளங்கள் ஆகியவை முடிந்தவரை அழிக்கப்படுவதை அவர்கள் காண விரும்புகிறார்கள். போர் நிறுத்தப்பட்டவுடன் இவை அனைத்தையும் நிச்சயமாக மீண்டும் கட்டியெழுப்ப முடியும், எனவே அவ்வாறு செய்வதில் கடுமையான பாதிப்பு உள்ளது என்பதை இரான் புரிந்து கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் விரும்புகிறது; அதாவது இஸ்ரேலிய விமானப்படை இன்னும் சில மாதங்களில் மீண்டும் வந்து அவற்றின் மீது தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது என்பதை உணர்த்த விரும்புகிறது. இரானின் ஏவுகணைகள் மற்றும் அதன் சந்தேகத்திற்குரிய அணுசக்தித் திட்டத்தை இஸ்ரேல் தனது இருப்புக்கான அச்சுறுத்தலாகப் பார்க்கிறது. இரானிடம் குறைந்தபட்சம் இந்தப் போர் தொடங்கும் வரை, மிகவும் வளர்ச்சியடைந்த உள்நாட்டு ஏவுகணை மற்றும் டிரோன் தொழில்துறை இருந்தது (யுக்ரேனைத் தாக்கிய ஷாஹெத் டிரோன்களை அது தனது கூட்டாளியான ரஷ்யாவிற்கு வழங்கியது). இரான், யுரேனியத்தை 60% வரை செறிவூட்டி வருகிறது. இது சிவில் அணுசக்திக்குத் தேவையான அளவை விட அதிகம். இவை இரண்டையும் சேர்த்துப் பார்க்கும்போது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் இந்த இரட்டை அச்சுறுத்தல்களைத் தங்களால் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றாகக் கருதுகிறது. வளைகுடா நாடுகளின் நிலை சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் ஆகிய வளைகுடா அரபு நாடுகள் இஸ்லாமிய குடியரசுடன் இணக்கமாக இருக்க முடியும் என்று நினைத்திருந்தன. இந்தப் போரை ஆதரிக்க மறுத்துள்ள போதிலும், இரானின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் தங்களின் மீது கிட்டத்தட்ட தினசரி தாக்குதல் நடத்தப்படுவதால் அவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இந்தத் திங்கட்கிழமையின் முதல் சில மணி நேரத்தில் மட்டும், தனது எல்லைகளை நோக்கி ஏவப்பட்ட 60-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைத் தாங்கள் இடைமறித்ததாகச் சௌதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. "அவர்கள் சிவப்புக்கோட்டை தாண்டிவிட்டார்கள்" என்று ஒரு வளைகுடா அதிகாரி எங்களிடம் கூறினார். "எங்களுக்கும் இரானுக்கும் இடையே பூஜ்ஜிய அளவிலான பரஸ்பர நம்பிக்கையே உள்ளது. இதற்குப் பிறகு அவர்களுடன் எங்களுக்கு ஒரு இயல்பான உறவு இருக்காது". - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr5lgl5p10jo
-
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை - நேரலை
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை - நேரலை Published By: Vishnu 17 Mar, 2026 | 07:40 PM நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விசேட உரையாற்றுகிறார். நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை முன்வைத்து ஜனாதிபதியின் உரை அமைகின்றது. சமீபத்திய தேசிய மற்றும் சர்வதேச சூழ்நிலைகளை முன்னிட்டு இந்த உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், ஜனாதிபதி வரவிருக்கும் வெள்ளிக்கிழமை (20) பாராளுமன்றத்திலும் உரையாற்ற திட்டமிட்டுள்ளார் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/241230
-
தூத்துக்குடியில் 'பிளஸ் 2 மாணவி கொலை' - 6 நாட்களாக போராட்டம் தொடர்வது ஏன்?
தூத்துக்குடியில் 'பிளஸ் 2 மாணவி கொலை' - 6 நாட்களாக போராட்டம் தொடர்வது ஏன்? கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் செய்தியாளர், பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் "பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் மூன்றாவது இடம் பிடித்தாள். பிளஸ் 2 முடித்துவிட்டு பி.எஸ்சி நர்சிங் படிப்பதுதான் அவளுடைய கனவாக இருந்தது. அதற்குள் இப்படியொரு கொடூரத்தை யார் செய்தார்கள் எனத் தெரியவில்லை" எனக் கூறி அழுகிறார், கொல்லப்பட்ட மாணவியின் சகோதரி. 'மாணவி கொல்லப்பட்டு ஆறு நாட்கள் கடந்த பின்னரும் குற்றத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்படாததால், சடலத்தைப் பெற மாட்டோம்' எனக் கூறி கிராம மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை, சாட்சிகளிடம் விசாரணை என விசாரணை துரிதமாக நடைபெற்று வருவதாக, நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் பெற்றோர் கடந்த 10-ஆம் தேதி இரவு காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளிக்கச் சென்றனர். 'இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்ற தங்கள் மகள் வீடு திரும்பவில்லை' என அங்கிருந்த காவலர்களிடம் கூறியுள்ளனர். "சம்பவம் நடந்த நாளில் வீட்டில் இருந்து ஆறு மணிக்கு மகள் கிளம்பிச் சென்றார். ஆறே முக்கால் வரை வராதால் மனைவியும் இன்னொரு மகளும் தேடிச் சென்றுள்ளனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை" என, மாணவியின் தந்தை கூறியுள்ளார். "ஏழு மணியளவில் வீட்டுக்கு வந்தேன். மகள் காணாமல் போனதை அறிந்து ஊரில் உள்ள சுமார் நாற்பது பேரைக் கூட்டிக் கொண்டு போய் தேடினோம்." என்கிறார். 'அலைக்கழித்த போலீஸ்' இதன்பிறகும் மாணவியைக் கண்டறிய முடியாததால், இரவு 10.30 மணியளவில் காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளிக்கச் சென்றுள்ளனர். "காலை பத்து மணிக்கு வருமாறு காவலர்கள் கூறினர். மறுநாள் போனபோது, 18 வயதுக்குக் கீழ் உள்ள மாணவி என்பதால் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறினர்," என மாணவியின் தந்தை செய்தியாளர்களிடம் கூறினார். அங்கும் மாணவியின் பெற்றோருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. "வழக்கை 'அந்த காவல்நிலைய அதிகாரிகள் விசாரிக்க மாட்டார்களா' என திட்டிவிட்டி அலட்சியமாக பதில் அளித்தனர்" என்கிறார் மாணவியின் தந்தை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், மேலும் சிலருடன் சேர்ந்து மாணவியை தீவிரமாக தேடி வந்துள்ளனர். மார்ச் 11-ஆம் தேதியன்று மதியம் சுமார் 3 மணியளவில் அதே காட்டுப்பகுதியில் மாணவியை சடலமாக கண்டறிந்துள்ளனர். இதன்பிறகே சம்பவ இடத்துக்கு காவல்துறை வந்துள்ளது என்கின்றனர் குடும்பத்தினர். 'அந்த நபர் யார் எனத் தெரிந்தால் போதும்' - மாணவியின் சகோதரி "வீட்டில் கழிப்பறை வசதியில்லை. அருகில் சித்தப்பா வீட்டில் கழிவறை இருந்தாலும் அதை நாங்கள் பயன்படுத்துவதில்லை. அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு செல்வது வழக்கம்," எனக் கூறுகிறார் மாணவியின் சகோதரி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இப்படியொரு கொடூர சம்பவத்துக்குக் காரணமான நபர் யார் எனத் தெரியவில்லை. காவல்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. அந்த நபர் யார் என்று மட்டும் எங்களுக்குத் தெரிந்தால் போதும்." என்கிறார். மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுப்பகுதி ஒன்று உள்ளது. மறுப்பு அறிக்கை வெளியிட்ட காவல்துறை இந்தநிலையில், 'பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாணவி கொல்லப்பட்டிருக்கலாம்' என்ற ரீதியில் தகவல் பரவியதால், மாணவி வசித்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் தகவலை மறுத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'உடற்கூராய்வு அறிக்கை, தடயவியல் நிபுணர்களின் விசாரணை அறிக்கைக்குப் பின்னரே பாலியல் குற்றம் நிகழ்ந்துள்ளதா என்பது தெரியவரும்' எனத் தெரிவித்துள்ளது. கனிமொழியை முற்றுகையிட்ட மக்கள் மாணவிக்கு உடற்கூராய்வு நடத்தப்பட்ட பின்னரும் அதன் முடிவுகள் வெளியாகவில்லை. 'குற்றத்தில் ஈடுபட்ட நபரைக் கைது செய்யும் வரை மாணவியின் சடலத்தை வாங்கப் போவதில்லை' எனக் கூறி கிராம மக்கள் ஆறு நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். மாணவி மரணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், "குற்றத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பதைக் கண்டறிவதில் காவல்துறை உறுதியாக உள்ளது. குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்" எனக் கூறினார். மாணவி இறந்து மூன்று நாட்கள் கழித்து மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுவதற்காக கனிமொழி எம்.பி வந்திருந்தார். 'பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?' எனக் கேள்வி எழுப்பிய மக்கள், அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காவல்துறையின் விசாரணையில் குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால் காவல் உதவி கண்காணிப்பாளர் அஸ்வினி தலைமையில் இரண்டு டி.எஸ்.பிக்கள் அடங்கிய 10 தனிப்படை போலீசார் மாணவி இறந்த கிராமத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் 2 மாணவி வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பட மூலாதாரம்,TN Police '5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை' நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் திங்கள்கிழமையன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக அரசுத் தரப்பில் சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. மாணவி கொலை தொடர்பாக ஐந்து பேரிடம் டிஎன்ஏ சோதனை நடத்துவதற்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். சம்பவம் நடந்த நேரத்தில் அந்த இடத்தில் பதிவான செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு காவல்துறை விசாரித்து வருவதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். "சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை" எனக் கூறிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், "அருகில் உள்ள 24 கண்காணிப்பு கேமராக்களில் இருந்த பதிவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 212 பேர் வரை சாட்சிகளாக விசாரிக்கப்பட்டுள்ளனர்," எனக் குறிப்பிட்டார். மாணவி காணாமல் போய்விட்டதாக அளிக்கப்பட்ட புகாரை அலட்சியமாக கையாண்டதற்காக குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் பிரவீனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். "இதுபோதுமான தண்டனை அல்ல" எனக் கூறிய நீதிபதிகள், "புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர். வழக்கின் விசாரணை சரியான முறையில் நடந்து வருவதாகக் கூறிய நீதிபதிகள், 'குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் எனக் கூறி போராட்டம் நடத்துவது, அமைப்புகள் சார்பில் அழுத்தம் கொடுப்பது விசாரணையை பாதிக்கும்" எனக் கூறினர். "வழக்கின் விசாரணை தொடர்பாக அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு, ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். 'மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்' "கிராமத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதக் கூடிய மாணவர்கள் உள்பட சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சம்பவத்தால் கிராமத்து மக்களும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்" எனக் கூறுகிறார் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன். "சம்பவம் நடந்த கிராமத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மாணவியின் உறவினர்களையும் காவல்துறை விசாரித்துள்ளது. குற்றவாளியை தங்கள் கண்முன்னால் நிறுத்த வேண்டும் என்பது தான் கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது'' என்கிறார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பூமயில். "காவல்துறை புகாரைப் பெற்ற உடனே விசாரிப்பதற்கு வந்திருந்தால் மாணவியைக் காப்பாற்றியிருக்கவே வாய்ப்புகள் அதிகம்" எனக் கூறும் பூமயில்,"கிராம மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அரசு போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2lr55d2l4wo
-
இணையவழி மோசடி கும்பல் மீது சுற்றிவளைப்பு: பல சீனர்கள் உள்ளிட்ட 134 வெளிநாட்டவர்கள் கைது
இணையவழி மோசடி கும்பல் மீது சுற்றிவளைப்பு: பல சீனர்கள் உள்ளிட்ட 134 வெளிநாட்டவர்கள் கைது Published By: Digital Desk 3 17 Mar, 2026 | 05:06 PM ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில், இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது, இரு பகுதிகளிலும் அமைந்திருந்த ஐந்து தங்குமிட விடுதிகளில் ஒருங்கிணைந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இவ்விடுதிகளில் தங்கியிருந்து இணையவழி மோசடி செயல்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டோரில் 126 பேர் சீன நாட்டவர்கள் எனவும் 4 பேர் மியான்மர் நாட்டவர்கள் எனவும் 4 பேர் தாய்வான் நாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல மடிக்கணினிகள், கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/241211
-
யாழ். மத்திய அணி வீரர் நிதர்சன் 9ஆம் இலக்கத்தில் இரட்டைச் சதம் குவித்து வரலாறு படைத்தார்
யாழ். மத்திய அணி வீரர் நிதர்சன் 9ஆம் இலக்கத்தில் இரட்டைச் சதம் குவித்து வரலாறு படைத்தார் Published By: Vishnu 17 Mar, 2026 | 08:37 PM (நெவில் அன்தனி) இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்பட்டுவரும் இரண்டாம் பிரிவு பி அடுக்கு கிரிக்கெட் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர் ஜேசுதாசன் நிதர்சன் இரட்டைச் சதம் குவித்து சாதனை படைத்தார். நீர்கொழும்பு புனித பேதுருவானவர் கல்லூரி அணிக்கு எதிராக யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தனது அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தபோது 9ஆம் இலக்க வீரராக களம் புகுந்த நிதர்சன், எதிரணி பந்துவீச்சாளர்களை சிதறடித்து இரட்டைச் சதம் குவித்தார். இதன் மூலம் இரண்டாம் பிரிவுக்கான பி அடுக்கு பாடசாலை கிரிக்கெட் போட்டி ஒன்றில் 9ஆம் இலக்கத்தில் இரட்டைச் சதம் குவித்த முதலாவது வீரர் என்ற அரிய சாதனையை நிலைநாட்டினார். அத்துடன் இந்த சாதனையை நிலைநாட்டிய முதலாவது வட மாகாண வீரர் என்ற பெருமையையும் நிதர்சன் பெற்றுக்கொண்டார். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 369 ஓட்டங்களைக் குவித்தது. போட்டியின் ஒரு கட்டத்தில் யாழ். மத்திய கல்லூரி அணி 8 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்று திக்குமுக்காடிக்கொண்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் 9ஆம் இலக்க வீரராக களம் நுழைந்த நிதர்சன், அசாத்திய திறமையுடன் துடுப்பெடுத்தாடி நீர்கொழும்பு புனித பேதுருவானவர் அணியின் பந்துவீச்சாளர்களை விளாசி அடித்து இரட்டைச் சதம் குவித்தார். ஜேசுதாசன் நிதர்சன் 119 பந்துகளை எதிர்கொண்டு 23 பவுண்டறிகள், 12 சிக்ஸ்களுடன் 200 ஓட்டங்களைக் குவித்து அசத்தினார். அத்துடன் 9ஆவது விக்கெட்டில் பத்மகுமாரன் நவிந்தனுடன் பெறுமதிமிக்க 196 ஓட்டங்களை நிதர்சன் பகிர்ந்தமை விசேட அம்சமாகும். நவிந்தன் 48 ஓட்டங்களைப் பெற்றார். ஜேசதாசன் நிதர்சன் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். மாங்குளம் மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற நிதர்சன், யாழ். இந்து கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் லண்டன் கிளையினரின் புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் யாழ். மத்திய கல்லூரியில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இணைந்து கல்வி பயின்று வருகின்றார். அப் போட்டியில் நீர்கொழும்பு புனித பேதுருவானவர் அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 78 ஓட்டங்களையும் பலோ ஒன்னில் இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 126 ஓட்டங்களையும் பெற்றது. எண்ணிக்கை சுருக்கம் யாழ். மத்திய கல்லூரி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 369 (ஜேசுதாசன் நிதர்சன் 200, பத்மகுமாரன் நவிந்தன் 48, கபிலன் அமலன் 27, யசிறு ஜனஞ்சய 87 - 5 விக்., அப்துல் ரஹுமான் 169 - 4 விக்.) நீர்கொழும்பு புனித பேதுருவானவர் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 78 (சுபசன் டிலூக்க 33, முரளி திசோன் 17 - 3 விக்., அன்ரன்ரேஷான் அபிஷேக் 43 - 3 விக்., வெலன்டைன் ஹெரிஸ் 7 - 2 விக்.) புனித பேதுருவானவர் (பலோ ஒன்) 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 126 (ரேஷான் லீமா 53, அப்துல் ரஹுமான் 21, முரளி திசோன் 67 - 8 விக்., ஜெயசீலன் ஜெனோஷன் 17 - 2 விக்.) https://www.virakesari.lk/article/241232
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
'இரான் ஆட்சியின் தலைவரை' கொன்றதாக கூறும் இஸ்ரேல் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,அலி லரிஜானி 17 மார்ச் 2026, 10:28 GMT புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் இரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லரிஜானி இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். லரிஜானி கொல்லப்பட்டாரா அல்லது காயமடைந்தாரா என்பதை இரான் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இதுகுறித்த புதிய தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டுப்படுத்திய நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரானின் துணை ராணுவப் படையான பசிஜ் பிரிவின் தளபதியை தனது விமானப்படை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பசிஜ் பிரிவின் தளபதி திங்கட்கிழமை அன்று டெலகிராமில் வெளியிட்ட பதிவில், பசிஜ் பிரிவின் தளபதி கொலாம்ரெசா சொலெய்மானியை இலக்கு வைத்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய ஆயுதக் குழுவை இவர் தலைமை தாங்கியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக இரானிய ஊடகங்களில் எந்தச் செய்தியும் வெளிவரவில்லை. மூத்த ராணுவ அதிகாரி லரிஜானியிடமிருந்து விரைவில் செய்தி ஒன்று வரும் என இரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தஸ்னிம் மற்றும் மெஹ்ர் என்கிற இரண்டு இரானிய ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அலி லரிஜானி "இரானில் உள்ள பயங்கரவாத மற்றும் ஒடுக்குமுறை அரசின் தலைமையை தொடர்ந்து இலக்கு வைக்குமாறு இஸ்ரேலிய ராணுவத்திற்கு பிரதமரும் நானும் அறிவுறுத்தியுள்ளோம்'' என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். லரிஜானி மற்றும் சொலெய்மானி கொல்லப்பட்டதாக பரவும் செய்திக்கு இரான் தற்போது வரை விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. இஸ்ரேல் மீது கூடுதல் ஏவுகணைகளை இரான் செலுத்தியுள்ளதாகக் கூறும் இஸ்ரேல் ராணுவம், அதன் பாதுகாப்பு அமைப்பு அவற்றை இடைமறித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இதற்கிடையே "ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை" நோக்கி இரானிலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவிக்கிறது. அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, கடந்த மாத இறுதியில் கொல்லப்பட்டார். ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட பிறகு, இரான் ஆட்சியின் தலைவராக அலி லரிஜானி செயல்பட்டார் என இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. இஸ்ரேலும் அண்டை நாடுகளுக்கும் எதிரான மோதலை அவர் வழிநடத்தினார் என்றும் இஸ்ரேல் கூறுகிறது. யார் இந்த அலி லரிஜானி? இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செல்வாக்கு மிக்க செயலாளர்தான் அலி லரிஜானி 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் அதிபர் மசூத் பெசெஷ்கியனால் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராகவும், அதி உயர் தலைவராக இருந்த ஆயதுல்லா அலி காமனெயியின் கவுன்சில் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார். மறைந்த அதி உயர் தலைவருக்கு ஆலோசகராகவும் இவர் இருந்தார் என இரானிய ஊடகங்களில் இவரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. மே 2008 முதல் மே 2020 வரை 12 ஆண்டுகள் இரானிய நாடாளுமன்றத்தின் அவைத் தலைவராகவும் இருந்துள்ளார். அவைத் தலைவராக ஆவதற்கு முன்பு 2005 முதல் 2007 வரை இரானின் முதன்மை அணுசக்தி பேச்சுவார்த்தையாளராக அவர் இருந்துள்ளார். இவரின் சகோதரர் சாதெக் லரிஜானி இஸ்லாமியக் குடியரசில் மற்றுமொரு செல்வாக்கு மிக்க நபராக உள்ளார். லரிஜானியின் 'செய்தியை' வெளியிட்ட இரானிய ஊடகங்கள் இரானிய செய்தி ஊடகங்கள் மற்றும் அலி லரிஜானியின் டெலகிராம் மற்றும் எக்ஸ் கணக்குகளில், அவர் கைப்பட எழுதியதாக கூறப்படும் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் எந்த தேதியும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அந்நாட்டின் அரசு ஊடகங்கள் அவை இன்று வெளியானது எனத் தெரிவிக்கின்றன. அந்தச் செய்தி இரான் இஸ்லாமியக் குடியரசின் கடற்படை வீரர்களை புகழ்கிறது. முன்னதாக இரான் கடற்படையின் ஐஆர்ஐஎஸ் டேனா போர்க்கப்பலில் கொல்லப்பட்டவர்களின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளது. "இரானியர்களுக்கு அரசை நீக்குவதற்கான வாய்ப்பு" - நெதன்யாகு இரானிய அரசை நீக்குவதற்கான வாய்ப்பை இரானிய மக்களுக்கு வழங்கும் நம்பிக்கையில், அதனை இஸ்ரேல் பலவீனப்படுத்தி வருவதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இரானிய அரசின் முக்கிய நபரான அலி லரிஜானி கொல்லப்பட்டதாகக் கூறி அவர் வெளியிட்ட காணொளியில் இந்தச் செய்தியை தெரிவித்திருந்தார். "அது ஒரே நேரத்தில் நடக்காது, அது எளிதாகவும் நடக்காது. ஆனால் நாம் நிலைத்திருந்தால், அவர்களின் விதியை அவர்கள் தங்களின் சொந்த கரங்களில் எடுப்பதற்கான வாய்ப்பை நாம் வழங்குவோம்," என தனது உரையில் அவர் கூறியிருந்தார். முன்னதாக, லரிஜானி மற்றும் சொலெய்மானி இல்லாமல் "இரானியர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்" என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் தெரிவித்திருந்தார். இந்தச் செய்திகளை இரான் தற்போது வரை உறுதி செய்யவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgj2y41kq9o
-
ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
எல்லாவற்றையும் ஐரோப்பிய, வட அமெரிக்க தரத்திற்கே இலங்கையில் கொண்டு வரக் கூடிய இயலுமை இருக்குமாக இருந்தால், நாங்களெல்லாம் ஏன் இங்கே இருக்கிறோம்? வாகன ஓட்டிகள் திருந்த வேண்டும், அப்படித் திருந்தும் வரை சைக்கிளோடுவோர் உயிரைப் பணயம் வைத்துப் பயணிக்க வேண்டும்!
-
ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
அப்படியானால் திருந்த வேண்டியது வண்டி ஓட்டிகளா சைக்கிள் ஓட்டிகளா? ஐரோப்பிய நாடுகளில் ஓடாத வாகனங்களா இலங்கையில்,????
-
போரில் டிரம்புக்கு துணை நிற்க அமெரிக்க கூட்டாளிகள் ஏன் முன்வரவில்லை?
போரில் டிரம்புக்கு துணை நிற்க அமெரிக்க கூட்டாளிகள் ஏன் முன்வரவில்லை? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பால் ஆடம்ஸ் பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் தமது இரு பதவிக்காலத்திலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளிகளை விமர்சிப்பதற்கோ ஏன் தாக்குவதற்கோ கூட தயங்கியதில்லை. ஆனால், ஹோர்மூஸ் நீரிணையைப் பாதுகாப்பதில் தோல்வியடைவது "நேட்டோவின் எதிர்காலத்திற்கு மிகவும் மோசமானதாக இருக்கும்" என்ற அவரது சமீபத்திய கருத்து, அந்த கூட்டணியின் நோக்கம் குறித்து அவர் கொண்டுள்ள புரிதல் ஏற்கெனவே பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. "நேட்டோ ஒரு... தற்காப்புக் கூட்டணியாக உருவாக்கப்பட்டது," என்று பிரிட்டன் ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி ஜெனரல் சர் நிக் கார்ட்டர் திங்களன்று பிபிசியிடம் தெரிவித்தார். "ஒரு கூட்டாளி நாடு தனது விருப்பப்படி ஒரு போருக்குச் சென்றுவிட்டு, மற்ற அனைவரும் அதைப் பின்தொடர வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் வகையில் இந்தக் கூட்டணி வடிவமைக்கப்படவில்லை," என்று அவர் கூறினார். "நாம் சேர விரும்பிய நேட்டோ இதுதானா என்பதில் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை". இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நேட்டோ உறுப்பினரான ஒரு நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட கிரீன்லாந்து பகுதிக்கு உரிமை கோரிய ஓர் அதிபரிடமிருந்து வந்துள்ள இந்த சமீபத்திய கருத்துக்களில் ஒரு சிறிய முரண் இருக்கிறது. பட மூலாதாரம்,Getty Images டிரம்புக்கு நேரடி மறுப்பு சில பதில்கள் மிகவும் நேரடியாக இருந்ததற்கு இது ஒருவேளை காரணமாக இருக்கலாம். ஜெர்மனியில், அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர், இரான் உடனான போருக்கும் "நேட்டோவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார். அதே நேரத்தில் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், ஐரோப்பாவின் கடற்படைகள் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தை ஏளனம் செய்வது போலத் தெரிந்தது. "வலிமைமிக்க அமெரிக்கக் கடற்படையால் செய்ய முடியாத எதை ஒரு சில ஐரோப்பியப் போர்க்கப்பல்களிடமிருந்து டிரம்ப் எதிர்பார்க்கிறார்?" என்று அவர் கேட்டார். "இது எங்களது போர் அல்ல. இதை நாங்கள் தொடங்கவில்லை". ஆனால், இவை எதுவும் வளைகுடா நெருக்கடிக்கு ஒரு தீர்வு காண வேண்டிய அவசரமான மற்றும் வளர்ந்து வரும் தேவையை மறைக்கக்கூடாது. இந்தியா மற்றும் சீனா போன்ற நட்பு நாடுகளுக்கு செல்லும் ஒரு சில கப்பல்களைத் தவிர, ஹோர்மூஸ் நீரிணையை இரான் திறம்பட தடுத்து நிறுத்தியுள்ளது. இது மேற்கத்திய நாடுகளின் அரசுகளை ஒரு தீர்வைத் தேட வைத்துள்ளது. இது டிரம்ப் போருக்குச் செல்ல எடுத்த முடிவால் தூண்டப்பட்ட நெருக்கடியாக இருக்கலாம், ஆனால் உலகப் பொருளாதாரத்தின் மீதான பாதிப்புகள் மோசமடைவதற்கு முன்பு இதை விரைவாகச் சரிசெய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் இதற்கு விரைவான தீர்வு இல்லை என்பது ஏற்கனவே தெளிவாகிவிட்டது. திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் வளைகுடா கூட்டாளிகளுடன் ஒரு "நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டத்தை" உருவாக்குவதற்கான உரையாடல்கள் நடந்து வருகின்றன என்றும், ஆனால் நாம் இன்னும் "முடிவெடுக்கும் கட்டத்தை எட்டவில்லை" என்றும் கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, நேட்டோ கூட்டாளிகளுடனான அமெரிக்காவின் உறவுகள் அதிகம் விரிசலடைந்துள்ளன. தானியங்கி கண்ணி வெடி கண்டுபிடிக்கும் அமைப்புகள் ஏற்கனவே அந்தப் பகுதியில் இருப்பதாக பிரதமர் கியர் ஸ்டார்மர் குறிப்பிட்டார். கண்ணிவெடி எதிர்ப்பு நடவடிக்கைக் கப்பலான ஹெச்எம்எஸ் மிடில்டன் பெரிய அளவிலான பராமரிப்புக்காக பிரிட்டன் திரும்பிய நிலையில், பல தசாப்தங்களில் முதல் முறையாக அந்தப் பகுதியில் பிரிட்டிஷ் கண்ணிவெடி அகற்றும் கப்பல் எதுவும் இல்லை. அதற்கு பதிலாக, ராயல் நேவி (பிரிட்டன் கடற்படை) புதிதாக உருவாக்கப்பட்ட டிரோன்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இவை ஊழியர்களை ஆபத்தில் சிக்க வைக்காமல் கண்ணிவெடிகளை கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் கிட்டத்தட்ட அனைத்து கடற்படைகளின் முக்கியப் பணியாக இருந்த கண்ணிவெடிகளை அகற்றுவது, நீண்ட காலத்திற்கு முன்பே முன்னுரிமைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. ராயல் நேவி முன்னாள் கமாண்டர் டாம் ஷார்ப், சமீபத்திய பிரிட்டிஷ் தொழில்நுட்பங்கள் இன்னும் போர்க்களத்தில் சோதிக்கப்படவில்லை என்றார். "அது வேலை செய்கிறதா இல்லையா என்பது அடுத்த சில வாரங்களில் நமக்குத் தெரிந்துவிடும்," என்று அவர் பிபிசியிடம் கூறினார். மேற்கத்திய நாடுகள் கடைசியாக ஒரு பெரிய கடல்வழி கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டது 1991-இல் என்று ஜெனரல் கார்ட்டர் கூறினார். முதல் வளைகுடா போரின்போது இராக் குவைத் கடற்கரை அருகே கண்ணிவெடிகளை வைத்திருந்தது. "அந்த கண்ணிவெடிகளை அகற்ற எங்களுக்கு ஐம்பத்தொரு நாட்கள் ஆனது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "எந்தவொரு கடற்படையும் இதற்குத் தேவையான அளவில் முதலீடு செய்யவில்லை, குறிப்பாக அமெரிக்கர்கள் இதில் மிகவும் பின்தங்கியுள்ளனர்". அமெரிக்கக் கடற்படையின் சொந்த அவெஞ்சர்-கிளாஸ் சிறப்பு கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் அனைத்தும் சேவையிலிருந்து விலக்கப்படுகின்றன. இவற்றுக்குப் பதிலாக, பல்வேறு ஆளில்லா அமைப்புகளைப் பயன்படுத்தும் இண்டிபெண்டன்ஸ்-கிளாஸ் கப்பல்களை பயன்படுத்தப்படுகின்றன பட மூலாதாரம்,Getty Images இரானுக்கு உள்ள வேறு வழிகள் ஆனால் இது கண்ணிவெடிகளை அகற்றுவது பற்றியது மட்டுமல்ல. இரான் புரட்சிகர காவல் படை ஆயுதம் ஏந்திய வேகப்படகுகள், கடற்படை "தற்கொலை" டிரோன்கள் மற்றும் கடற்கரை ஏவுகணைகள் மூலம் கப்பல் போக்குவரத்தைத் தடுக்கும் திறன் கொண்டது. இரான் செய்தி நிறுவனமான 'ஃபார்ஸ்' வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள், நிலத்தடி சுரங்கங்களில் அதிக எண்ணிக்கையிலான படகுகள் மற்றும் டிரோன்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதைக் காட்டின. இது இரான் நீண்டகாலமாக இத்தகைய ஒரு தருணத்திற்காகத் தயாராகி வருவதைப் காட்டுகிறது. ஹோர்மூஸ் நீரிணை திறப்பது சிறிய வேலை என கூறும் டிரம்ப், அதை செய்வதற்கு இரான் கடற்கரைகளில் தாக்குதல் நடத்த வேண்டியிருக்கும் என கூறினார். "கடற்கரையில் இருக்கும் சில மோசமான நபர்களைத் தட்டி வைப்பவர்களை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்," என்று அவர் கூறினார். அமெரிக்கா ஏற்கனவே இரான் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை இலக்கு வைத்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் கூட்டாளிகள் பலர் இதைப் பின்பற்றுவதற்கு குறிப்பாக இது தரைப்படையை ஈடுபடுத்துவதை உள்ளடக்கியதாக இருந்தால் தயாராக இருப்பார்களா என்பது கடினம். இவ்வளவு சாத்தியமான ஆபத்துகள் நிறைந்த சூழலில், நாடுகள் இதில் ஈடுபடத் தயங்குவதில் ஆச்சரியமில்லை. அதற்குப் பதிலாக பிரிட்டன் அரசு கூறுவது போல, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதற்கான உறுதியான வழியாக 'பதற்றத்தைக் குறைப்பதை' அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் இன்னும் சில வாரங்களுக்கு இந்த நடவடிக்கை நீடிக்கக்கூடும் என்று கூறி வருவதால், அது உடனடியாக நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. திட்டம் இல்லை இதற்கிடையில், இந்த முக்கியமான நீர்வழிப்பாதை வழியாக வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க கூட்டாளிகளைச் சம்மதிக்க வைக்க முடியுமா? "ஹோர்மூஸ் நீரிணையைப் பாதுகாப்பதில் ஜெர்மனி தனது ராணுவத்துடன் பங்கேற்காது," என்று பிஸ்டோரியஸ் திங்களன்று கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் கூறுகையில், மத்திய கிழக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை நடவடிக்கைகளை விரிவுபடுத்த "தெளிவான விருப்பம்" உள்ளது என்று கூறினார். ஆனால் செங்கடலில் தற்போதுள்ள கடற்படைப் பணியை விரிவுபடுத்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் மறுத்துவிட்டனர். "இது ஐரோப்பாவின் போர் அல்ல," என்று அவர் மேலும் கூறினார். ஏமனில் இரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க 2024-இல் 'ஆப்பரேஷன் அஸ்பைடெஸ்' தொடங்கப்பட்டது. ஆனால் இது வெறும் மூன்று போர்க்கப்பல்களை மட்டுமே கொண்ட மிகச்சிறிய முயற்சியாகும். பட மூலாதாரம்,Getty Images ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வேடேபுல், புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்கு முன், "இரான் மீதான தங்கள் ராணுவ இலக்குகளை எப்போது அடைவோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்" என்பதை இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். முக்கிய ஐரோப்பிய கூட்டாளிகளில், பிரான்ஸ் அதிபர் மக்ரோங் இதில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும், கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் ஒரு கூட்டணியை அமைக்க முயற்சிப்பதாக அவர் ஒரு வாரத்திற்கு முன்பு கூறினார். ஆனால் மோதலின் "மிகவும் தீவிரமான கட்டம்" முடிந்த பின்னரே இது சாத்தியமாகும் என்று அவர் கூறினார். சில நாட்களுக்குப் பிறகு பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் கேத்தரின் வௌட்ரின், ஹோர்மூஸ் நீரிணைக்கு கப்பல்களை அனுப்பும் உடனடித் திட்டங்கள் எதுவும் இல்லை என்றார். ஒரு பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது ஆப்ரேஷன் அஸ்பைடெஸை விட மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்று ஷார்ப் கூறினார். ஏனெனில் அச்சுறுத்தல்கள் வான்வழி, மேற்பரப்பு மற்றும் நீருக்கடியில் என மூன்று திசைகளிலிருந்தும் வருகின்றன. "ஹூத்திகளைப் போல வான்வழி அச்சுறுத்தல் மட்டுமே இங்கில்லை. இரான் விஷயத்தில் மூன்று அச்சுறுத்தல்களும் உள்ளன, அவை ஏவப்படுவதற்கு முன்பே நீங்கள் அவற்றைச் சுட வேண்டும். அது எப்போதும் சாத்தியமில்லை," என்று அவர் கூறினார். தற்போது, டிரம்ப்பின் சற்றே அதிர்ச்சியடைந்த கூட்டாளிகள் "இரானில் ஈடுபாடு" என்று பெயரிடப்பட்ட கதவுக்கு வெளியே தயக்கத்துடன் நின்று ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஒரு தீர்வாகாது என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர். இந்தத் தீர்வு "முடிந்தவரை பல கூட்டாளிகளை" உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கூறினார். ஆனால் ஆபத்தான பணியில் ஈடுபடுவதற்கு முன்பு பிரிட்டன் ராணுவ வீரர்களுக்கு முக்கியமான உறுதிமொழிகள் தேவைப்படுகின்றன. "குறைந்தபட்சம், ஒரு சட்டபூர்வமான அடிப்படையிலும், சரியான முறையில் சிந்தித்து வகுக்கப்பட்ட திட்டத்துடன்தான் செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அவர்களுக்கு உரிமை உள்ளது ". தற்போதைய நிலையில், அத்தகைய ஒரு திட்டம் நடைமுறையில் இல்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czx49znzgrdo
-
ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
அது அந்தக் காலம் கந்தப்பு. அப்ப நீங்கள் சைக்கிளோடிய வீதியில் எத்தனை கார்கள், பஸ்கள், ரிப்பர்களைக் கண்டீர்கள் என்று நினைவிருக்கிறதா? 2012 இலங்கை போன போது நானும் சைக்கிள் தான் ஓடினேன், வவுனியாவில். 2016 இலும் - கொஞ்சம் ஆபத்தாகத் தெரிந்தாலும் - சைக்கிள் ஓடினேன். இந்த ஆண்டு போகிறேன், ஆனால் "சைக்கிள் ஓட முயற்சிக்காதே" என்று தான் ஆலோசனைகள் வருகின்றன! அந்தளவுக்கு வீதிகள் வாகனங்களுக்காக செம்மை செய்யப் பட்டு, ஓரங்கள் (shoulders) குறுகி சைக்கிள் ஓடுவதை ஏதோ ஆபத்தான செயல் போல மாற்றி வைத்திருக்கின்றன. குறைந்த பட்சம் வவுனியாவில் இது தான் நிலை.
-
அரசியல் தூஷணம் - நிலாந்தன்
தமிழ் தேசிய முகமூடி அணிந்த றௌடிகளின் சேட்டைகளுக்கெல்லாம் "தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவப் போட்டி" என்ற ஒரே காரணத்தோடு வருவது நிலாந்தனுக்கே ஒரு கலர் கண்ணாடியினூடாகத் தான் எதையும் பார்க்க முடிகிறது எனக் காட்டுகிறது. அம்பிகா சற்குணநாதனை இதே போன்ற தூசணங்களால் திட்டி ஒதுங்க வைத்த போது, சுமந்திரனை அவுசில் வைத்துத் தூசணங்களால் திட்டிய போது, சும்மா ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு இப்ப வந்து வேசம் போடும் நிலாந்தன் போன்றோர் தான் ஈழத்தமிழர்களின் "சிந்தனைத் தலைவர்கள் - thought leaders" 😎 என்றால், நமக்கு விடிவேயில்லை என்று தான் அர்த்தம்!
-
15ஆவது இந்துக்களின் சமர்: யாழ். இந்துவின் கடந்த வருட வெற்றிக்கு பதிலடி கொடுக்குமா இந்து கொழும்பு?
இந்துக்களின் அங்குரார்ப்பண ஒருநாள் போட்டியில் யாழ். இந்துவின் வெற்றிக்கு வித்திட்ட பவணன் Published By: Vishnu 17 Mar, 2026 | 08:35 PM (நெவில் அன்தனி) யாழ். இந்து கல்லூரிக்கும் இந்து கல்லூரி கொழும்புவுக்கும் இடையில் பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற அங்குரார்ப்பண இந்துக்களின் சமர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்து கல்லூரி 87 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இப் போட்டியில் ஜெகதீசன் பவணன் குவித்த அரைச் தசம் யாழ். இந்துவின் வெற்றிக்கு வித்திட்ட அதேவேளை, விக்கெட் காப்பாளருக்கு பிடிகொடுத்து ஆட்டம் இழந்த அவர் மத்தியஸ்தரின் தீர்ப்புக்கு காத்திராமல் களம் விட்டகன்றதன் மூலம் அனைவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார். போட்டியின் 44ஆவது ஓவரில் இந்து கொழும்பு அணித் தலைவர் ராமநாதன் தேஷ்கர் வீசிய பந்து பவணனின் துடுப்பை உராய்ந்தவாறு விக்கெட்காப்பாளர் சுரேஷ் குமார் மிதுஷிகனின் கையுறைகளுக்குள் தஞ்சம் புகுந்தது. பிடியை எடுத்த சூட்டோடு மிதுஷிகன் கேள்வி எழுப்பினார். மத்தியஸ்தர் சந்தேகத்தைத் தீர்த்துக்கொண்டு தீர்ப்பு வழங்கும் முன்னரே ஒய்வறையை நோக்கி பவணன் நடக்கத் தொடங்கிவிட்டார்.Travel Guides & Travelogues இதன் மூலம் சிறந்த வீரருக்கே உரிய நற்பண்பை அவர் வெளிப்படுத்தியதுடன் அனைவரின் பாராட்டையும் சம்பாதித்துக் கொண்டார். இத்தகைய நற்பண்புகளை பாடசாலை கிரிக்கெட்டில் காண்பது மிகவும் அபூர்வமாகும்.Education இதேவேளை, இந்தப் போட்டியில் இந்து கொழும்பு கல்லூரி வீரர் தவக்குமார் சந்தோஷ், தனது இரண்டாவது பந்தை எதிர்கொள்வதற்கு வேண்டுமென்றே நேரத்தை விரயம் செய்ததால் 'டைம்ட் அவுட்' முறையில் ஆட்டம் இழந்தார். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட யாழ். இந்து கல்லூரி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 220 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரர் ஜெகதீசன் பவணன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 105 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகளுடன் 81 ஓட்டங்களைப் பெற்று 7ஆவதாக ஆட்டம் இழந்தார். இதனிடையே பவணன் தனது சக வீரர்கள் மூவருடன் அரைச் சத இணைப்பாட்டங்களில் பங்களிப்பு செய்து அணியைப் பலப்படுத்தினார். 2ஆவது விக்கெட்டில் ரவிந்திரன் ஆதித்தியனுடன் 55 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் சிவலோஜன் சிவகஜீசனுடன் 56 ஓட்டங்களையும் 6ஆவது விக்கெட்டில் தினேஷ்ராமன் பிரீத்திகனுடன் 52 ஓட்டங்களையும் பவணன் பகிர்ந்தார். சிவலோஜன் சிவகஜீசன் 24 ஓட்டங்களையும் ரவிந்திரன் ஆதித்தியன் 23 ஓட்டங்களையும் தினேஷ்ராமன் பிரீத்திகன் 20 ஓட்டங்களையும் சுதர்சன் அபிவர்ணன் ஆட்டம் இழக்காமல் 18 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அணித் தலைவர் ராமநாதன் தேஷ்கர் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் விஷ்வநாதன் யுவராஜ் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் திவாகரன் யாதவ் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்து கல்லூரி கொழும்பு 37 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.Travel Guides & Travelogues வேலாந்துரை அபினேஷ், சுரேஷ் குமார் மிதுஷிகன் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்திராவிட்டால் இந்து கொழும்பு இதனைவிட மோசமான தோல்வியைத் தழுவியிருக்கும். வேலாந்துரை அபினேஷ் 41 ஓட்டங்களையும் சுரேஷ் சர்விஷ் 17 ஓட்டங்களையும் சுரேஷ் குமார் மிதுஷிகன் 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கனகராஜ் நித்தீஸ் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சிவலோகேசன் சிவகஜீசன் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஜெகதீசன் பவணன். https://www.virakesari.lk/article/241231
-
எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க இந்த 6 நாடுகள் எடுத்துள்ள வெவ்வேறு நடவடிக்கைகள் என்ன?
எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க இந்த 6 நாடுகள் எடுத்துள்ள வெவ்வேறு நடவடிக்கைகள் என்ன? 17 மார்ச் 2026, 10:29 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் உலக நாடுகள், குறிப்பாக ஆசிய நாடுகள் கடுமையாக எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றன. இந்தச் சூழலை சமாளிக்க சிறப்பு விடுமுறை தொடங்கி மின்வெட்டு வரை பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில், எரிபொருளை சேமிக்கும் முயற்சிகளில் ஒன்றாக புதன்கிழமையை விடுமுறை நாளாக அரசு அறிவித்துள்ளது. தாய்லாந்தில் ஏ.சி. பயன்பாட்டை குறைக்க மக்கள் கோட் - சூட்க்கு பதிலாக குறுகிய கை டி - ஷர்ட் அணியுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மியான்மரில் தனியார் வாகனங்கள் அவற்றின் பதிவு எண் அடிப்படையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படுகின்றன. வங்கதேசத்தில், பல்கலைக்கழகங்களில் ரமலான் விடுமுறை முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் திட்டமிட்ட மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பிலிப்பின்ஸில், சில அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது ஒரு நாள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. வியட்நாமில், எரிபொருளை சேமிக்க மக்கள் அதிக நேரம் வீட்டிலேயே இருக்குமாறு அரசு வலியுறுத்துகிறது. பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8759vj7en3o
-
மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு : அலட்சியம் காட்டுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை ; வைத்தியர் வி.முரளிஸ்வரன்
மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு : அலட்சியம் காட்டுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை ; வைத்தியர் வி.முரளிஸ்வரன் 17 Mar, 2026 | 12:05 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் உங்கள் வீடுகளையும் சூழலையும் சுத்தமாக வைத்திருக்கவும் அதேவேளை டெங்கு நுளம்பு உருவாக்கூடியவாறு துப்பரவு இன்றி உள்ள வெற்று காணிகளின் உரிமையாளர்கள் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். அதை மீறி அலட்சியம் செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.முரளிஸ்வரன் தெரிவித்தார். மட்டு சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மை காலமாக டெங்கு நுளம்பு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் செங்கலடி, மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசங்களில் டெங்கு நுளம்பு நோய் தாக்கத்தால் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே டெங்கு நோய் தாக்கத்தில் இருந்து சுற்றாடலை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்கும் அதே நேரத்தில் உங்கள் அயலில் காணப்படுகின்ற டெங்கு நுளம்பு காணக்கூடிய வெற்று காணிகளை அடையாளம் கண்டு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கவும். ஏற்கனவே டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய வெற்று காணிகள் இருக்கும் இடங்களை சுகாதார வைத்திய அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மாநகர சபை உதவியுடன் அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சில காணிகள் மாநகர சபையினால் சுவீகரிக்க பட்டுள்ளது. வெற்று காணிகளை வைத்திருக்கும் சிலர் அதனை துப்பரவு செய்யாது டெங்கு நுளம்பு உருவாக கூடிய நிலையில் வைத்திருக்கும் சமூக உணர்வு இல்லாத காரணத்தால் துப்பரவாக வைத்திருக்கும் அப்பாவி பொதுமக்கள் இந்த டெங்கினால் பாதிக்கப்படுகின்றன அதேவேளை சுகாதார அதிகாரிகள் பொது சுகாதார உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல் வழங்கியும் சிலர் அடாவடியாக தமது காணிகளை துப்பரவு செய்யாமலும் சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு எந்தவித அக்கறையும் இல்லாது அலட்சியமான போக்கில் இருக்கின்றனர். எனவே வெற்று காணி வைத்திருப்பவர்கள் சமூக அக்கறையுடன் செயற்படவும். டெங்கு பரவக்கூடிய வெற்றிக் காணிகளை காணி சுகாதார வைத்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி செயற்படாமல் விட்டால் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்து ஆலையங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் எங்களது டெங்கு ஒழிப்பு தொடர்பான அறிவுறுத்தல்களை ஆலயங்களில் உள்ள ஒலி பெருக்கி ஊடாக காலை, மதியம், இரவு ஆகிய நேரங்களில் அறிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதேவேளை பெரும்பாலான ஆலையங்கள் இந்த டெங்கு நோய் தொடர்பான அறிவுறுத்தல்கள் செய்வதில்லை, ஆகவே எங்கள் சமய நிறுவனங்கள் சமயத்தை மட்டும் வளர்ப்பதை குறிக்கோளாக கொண்டிராது சமூக நலனோடு செயல்பட வேண்டும். அண்மையில் செங்கலடி பிரதேசத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் ஒரு பிரபல ஆலையத்தை தொடர்பு கொண்டு ஆலைய சூழலை துப்பரவாக வைத்திருக்குமாறும் எங்களது டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு அறிவுறுத்தலை வழங்குமாறு கேட்டபோது அவர்களது ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அந்த ஆலய மதகுரு உட்பட ஆலய சூழல் டெங்கு நோய் பரவும் சூற்றாடல் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை வந்தது. எனவே எல்லா ஆலையங்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் சமூக உணர்வோடு இந்த டெங்கு நுளம்பு அழிப்பதற்கு உங்கள் ஆளணிகள் மற்றும் ஆலையங்களில் இருக்கும் அந்த ஒலிபெருக்கி வசதிகளையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அண்மை காலமாக தற்கொலை அதிகரித்து காணப்படும் சூழ்நிலையில் பாடசாலை ஆசிரியர்களுக்கு உளவியல் ஆற்றுப்படுத்தல் பயிற்சி நெறிகள் அளித்து வருகிறோம். இருந்தபோதும் சில பாடசாலைகளின் அதிபர்கள் இது சம்பந்தமான எந்தவிதமான அக்கறையும் இல்லாத உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அந்த பாட வேளைகளை வழங்காது தொடர்ந்து மாணவர்களை ஒரு அழுத்தமான சூழ்நிலைக்குள் கொண்டு செல்வதாக முறைப்பாடுகள் கிடைக்கிறது. எனவே கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட அந்த உளவள ஆசிரியர்களுக்கு நாங்கள் பயிற்சி வழங்கியுள்ளோம். எனவே மாணவர்களின் உளநலத்தை பேணுவதற்காக வாரத்தில் ஒரு நாளாவது ஒரு பாட வேளையை வழங்கி மாணவர்களுக்கு கற்பிக்க இடம் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். அதேவேளை தற்கொலையை தடுப்பதற்கான நுண் கடன் வழங்கும் வங்கிகளை அனுகியுள்ளோம், வங்கிகள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு பொதுமக்களுக்கு நிதி நிலைமைகள் தொடர்பாக சரியான விதத்தில் வழிகாட்ட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/241177
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
கெதியாகச் செய்யுங்கோ, கட்டாயம் சமூக வலைத்தளத்தில் எரிப்பதை வீடியோவும் போடுங்கோ! ட்ரம்ப் ரீமின் கவனத்திற்குக் கொண்டு வந்தால் "இலங்கையில் கிறிஸ்தவர்களுக்கு அச்சுறுத்தல்" என்று விசேட விசாவும் கொடுத்து, உங்களைத் தட்டி வைக்கும் படி அனுரவுக்கு அழுத்தமும் கொடுப்பார்கள்😇!
-
இலங்கையை வந்தடைந்தது எரிபொருள் கப்பல்!
இலங்கைக்கு வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்! Mar 17, 2026 - 04:53 PM மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையினால் ஓடர் செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஹொங்கொங் நாட்டுக்குச் சொந்தமான 'சீஃபிரண்டியர்' எனும் எரிபொருள் கப்பலே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இக்கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று காலை முத்துராஜவெல (கெரவலப்பிட்டிய) எரிபொருள் களஞ்சியகத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதன் மற்றுமொரு தொகுதி இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் டொல்பின் இறங்குதுறை ஊடாக கொலன்னாவை களஞ்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது. இந்தக் கப்பலில் 17,000 மெட்ரிக் தொன் 90 ஒக்டேன் பெற்றோல், 18,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 2,800 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல் ஆகிய எரிபொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmuiwcmr000w356px10448qj