All Activity
- Today
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
உண்மை. தான். சினிமா. தடை செய்யப்படவேண்டும். விளையாட்டுகள். ஊக்கிவிக்கப்பட வேண்டும் சினிமா. மக்களுக்கு. என்னத்தை. கற்றுக்கொடுக்கிறது. ? இதனால்நடிகைகள். நடிகர்கள். தாயரிப்பளார்கள். தான். பணக்கார ர் ஆகிறார்கள். ஒரு. படத்துக்கு. 200. 300 கோடி. சம்பளம். வேண்டும். விஷய். சொந்தப் பெண்டாட்டுக்கு 25. கோடி மட்டும் தரலாம். என்று. பேரம். பேசியுள்ளார்.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
அதே தலைவர் புரட்சி மூலம் அடைந்த்த விடுதலையை கொண்டா 2 கிழமைக்கு முன் அழைத்து, தெருவுக்கு இறங்கிய 30 மில்லியன் மக்களை (கிட்டதட்ட 1/3 ஈரான்) மேற்கு ஊககுழல்கள் உயிர் அச்சுறுத்தி அவர்களை தெருவுக்கு கொண்டுவந்ததாக பைத்தியக் கதை விட்டன. இப்பொது கொண்டாடும் சனத் கூட்டம் எவ்வளவு. எதுவாயினும், ஈரானில் சுதந்திரம் இல்லை என்ற மேற்கின் பூச்சாண்டி கதைகளே மேற்கு ஊதுகுழல்களே கிழித்து குப்பையில் போவது தெரியாமல் செய்கின்றன. சமய தத்துவ தலைமை கோரமாக எதிரியால் கொல்லப்பட்டதை கொண்டாட அனுமதிக்கும் ஒரு அரசு, மேற்றுகின் போர்வை சனநாயகம் / தாராளமயம் எப்போதோ மேற்காலேயே எரிக்கப்பவிட்டது. இரான் போல இனப்பரம்பல் மேற்றகில் இருக்கும் என்றால் , இந்த போர்வ்வை சனநாயகம் கூட இருக்ககாது
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஈரானின் அரசியலுக்கு அப்பால்…. ஈரான்…. ரஷ்யாவையும், சீனாவையும் நம்பி…. அமெரிக்காவையும், இஸ்ரேலையும் கண் மூடித்தனமாக எதிர்க்க வெளிக்கிட்டு, இன்று தனது நாட்டின் தலைவரையே இழந்து நிற்கிறது. அந்த இரு நண்பர்களும்…. ஈரானை உசுப்பேத்தி விட்டுட்டு, கழன்று விட்டார்கள்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
மனதை தளர விடாதீர்கள்… ஈரானை அமெரிக்க பிடித்தவுடன் நிச்சயம் பெற்றோல் விலை குறையும். பிற்குறிப்பு: தீபாவளிக்கு தீர்வு வரும் என்ற…. சம்பந்தன் ஐயாவின் கோட்பாட்டின் படி வாசித்து ஆறுதல் அடையவும். 😂
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
விஜயின் ரசிகர்கள் பலரின் பேச்சுக்களில் இன்னும் முதிர்ச்சி தெரியவில்லை. ஒருவர், இருவர் என்றால் கடந்து போய் விடலாம். ஆனால் 90 வீதமானவர்களுக்கு எங்கு என்ன பேச வேண்டும் என்ற விவஸ்தையே கிடையாது. இது தமிழ் சமூகத்திற்கு ஆபத்தான அறிகுறி. அதில் பலருக்கு தமிழ் நாட்டில் எத்தனை தொகுதிகள் உள்ளன என்று கூட இன்னும்தெரியவில்லை. பகிடி என்னவென்றால்… அவர்களுக்கு சட்டமன்ற தேர்தலுக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் உள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அய்யனே ...இப்போ இங்கு நடு இரவு 1.15 ...விடிய 4.30 க்கு முதல் மச்சும் ...விடிய 8.30 2வது மச்சும் பார்க்கவேண்டும் ...கீழே தனிய இருந்து கம்பியூட்டரில் விளையாட மனுசி விடாதாம் ...3 மணீ நேர நித்திரை கொண்டுவிட்டு வருவோம் ...அதுவரை உங்களுக்கு அன்பு வணக்கம்
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
உலகப். பணக்காரன். பிட்கோஸ். ஒரு. போட்டியில்். சொல்லி. உள்ளார். ஒரு. காலத்தில். பேப்பர். வேண்ட. விரும்பியபோது. அவரிடம். பணமில்லை. ஒரு. கருப்ப. இனச்சிருவன். இலவசமாக்கொடுத்தான். இரண்டு. தடவைகள். பணக்காரன். ஆகிய பின்னர். அந்தப்பையனை. தேடிக் கண்டு. பிடித்து. என்னைத். தெரிகிறதா. என்று. கேட்டார் அவன். சொன்னான். ஆம். நீங்கள். உலகப். பணக்காரன். பிட்கோஸ். என்று. பல. வருடங்களுக்கு. முன்னர். நான். பேப்பர். வாங்க. பணமில்லாதபோது. இலவசமாக. இரண்டு தடவைகள். பேப்பர். இலவசமாகத். தந்தாய். இப்ப. உனக்கு. என்ன. வேண்டும். என்று. கேட்டதுக்கு. அவன். அந்த சிறுவன். சொன்னன். அதை. நீங்கள். ஈடு. செய்ய. முடியாது. காரணம். நான் ஏழையாக. இருந்த. போது. தந்தேன். நீங்கள். இன்று. உலகப் பணக்காரனாக இருக்கும்போது. தருவதாகச். சொல்லுகிறீர்கள். என்று. இதன். பின்னர். பிட்கோஸ். சொன்னார். உதவி செய்ய. பணக்காரனாக. இருக்க வேண்டியது. இல்லை. ஏழையாலும். செய்ய. முடியும். எனது. கேள்வி. இன்றைய நிலையில். அல்லது இதுவரையில். உங்கள். கனவுகன்னி. என்ன. சேவைகள். செய்து உள்ளார். ? ஏன். செய்யவில்லை. ?மக்கள் சேவை. செய்ய. முதல்வராக. வேண்டுமா. ?
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
என்னை கூப்பிட்டீர்களா சார்? நன்றி. கோஷன். அமெரிக்காவின். 51. ஆவது. மாநிலத்தில். அந்த. நல்ல. மனிதன். இருப்பதாக. சொல்வது. சரியா. ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியாவின் பந்து வீச்சுதான் மே.இய விட சிறந்தது. துடுப்பாட்டத்தில் இரு அணிகளும் அடிகாரர்கள். இதுவரை மே.இ 66 ஆறுகளும் இந்தியா 63 ஆறுகளும் அடித்திருக்கிறார்கள். பந்து வீச்சு தான் இந்தியாவை வெல்ல வைக்க வேண்டும்.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
அதுவும் முஸிலீம்களின் ரமழான் மாதத்தில் விழுந்திருக்கு ...😍🤩🤪
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இதில பகிடி என்னவென்றால் ஈரானிய மக்கள் கமெனி கொல்லப்பட்டதை கொலுவிருத்துறாங்கள் (celebrate)..ஆனால் எங்கட நாட்டு முஸ்லீம்கள் அத நினைச்சு வருந்துறாங்கள் .. போதாக்குறைக்கு புலிகளையும் இழுக்கிறாங்கள்... மதமென்டால் தலைகீழா படுத்துக்கிடந்து முட்டுக்குடுப்பாங்கள் எது எப்பிடியோ ... இஸ்லாமிய பயங்கரவாதம் இன்னும் கொஞ்ச நாளில் நல்லாத் தணியும் ... யூத மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் 😮💨😌
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
வெற்றி வெற்றி .... இஸ்லாமிய உச்ச பயங்கரவாதி கமேனி .... கொல்லப்பட்டான் ... 🤣🤣🤣 ஒரே மகிழ்ச்சியாக உள்ளது ... உலகை பயங்கரவாதத்திடமிருந்து காத்த அமெரிக்க இஸ்ரேலிய வான்படையினருக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉 இந்த காத்தான்குடி புத்தளத்தானுகளை இப்ப Facebook இல பாக்கோனும்.... சுடுதண்ணி குடிச்ச %@#% மாதிரி ஓடுப்பட்டு திரிகிறானுகள்... மதமென்டால் எல்லாத்தையும் போட்டுட்டு முன்னுக்கு வாறவனுகள், இண்டைக்கு ஒழிச்சிட்டாங்கள்...🤣🤣
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான் Mar 1, 2026 - 09:03 AM ஹோர்முஸ் நீரிணை ஊடாக எந்தவொரு கப்பலுக்கும் பயணிக்க அனுமதி இல்லை என ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஈரானிய தஸ்னிம் செய்தி நிறுவனம் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக ஈரானிய ஆயுதப்படைகள் பழிவாங்கும் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஈரானியத் தாக்குதல்களால் இதுவரை 14 அமெரிக்கத் தளங்கள் சேதமடைந்துள்ளதாக அந்தச் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுகின்றது. இந்தச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக மத்திய கிழக்கிற்குப் பயணிக்கும் அனைத்து விமான நிறுவனங்களும் தமது விமான சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. அத்துடன், மத்திய கிழக்கு நாடுகளும் தமது வான்பரப்புகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன. தற்போதைய பதற்றமான நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் எடுத்துள்ள தீர்மானம் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைப் பாதிக்கும் ஒரு விடயமாக மாறியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்
-
துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!
துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு! Mar 1, 2026 - 09:23 AM வீட்டிற்குள் புகுந்து நபர் ஒருவரைச் சுட முற்பட்ட இனந்தெரியாத துப்பாக்கிதாரி மீது, அந்த வீட்டின் உரிமையாளர் நாற்காலி மற்றும் வெட்டுக் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்தவர் அலவ்வ பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவிக்கையில், களுத்துறை ரஜவத்த பகுதியைச் சேர்ந்த "பெத்தா" என்பவர் தன்னிடம் பெற்ற 30,000 ரூபாய் கடனைத் திருப்பித் தருவதற்காக தனது வீட்டிற்கு வந்ததாகவும், அப்போது அவருடன் வந்த இனந்தெரியாத நபர் தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டதாகவும் குறிப்பிட்டார். அச்சமயத்தில் தனது வீட்டில் இருந்த நாற்காலி மற்றும் வாளால் அவரைத் தாக்கி விரட்டியடித்ததாக முறைப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான அந்த நபரை பொலிஸார் கைது செய்த நிலையில் அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களையும் கைப்பற்றியுள்ளனர். குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!
-
-
கச்சதீவு இலங்கைக்கானது என்பதில் மாற்றமில்லை: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திட்டவட்டம்
கச்சதீவு இலங்கைக்கானது என்பதில் மாற்றமில்லை: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திட்டவட்டம் Published By: Digital Desk 1 01 Mar, 2026 | 08:31 AM (கச்சத்தீவிலிருந்து இராஜதுரை ஹஷான்) சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இந்தியாவில் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டால் கச்சத்தீவு பிரதான பேசுபொருளாகும். கச்சத்தீவு இலங்கைக்குரியது என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாதென கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். புனித கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவில் நேற்று சனிக்கிழமை கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவின் ஒரு அடையாளமாக கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயம் காணப்படுகிறது. இலங்கை மற்றும் இந்திய மக்களின் புனித தலமாகவும் கச்சத்தீவு காணப்படுகிறது. இந்தியாவில் ஏதேனும் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டால் அங்கு கச்சத்தீவு ஒரு பிரதான பேசுபொருளாக காணப்படும். இந்திய அரசியல்வாதிகளில் ஒருசிலர் தமது வாக்கு வங்கிக்காக கச்சத்தீவு பற்றி பேசுவார்கள். அதனூடாகவேனும் தமது வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள். சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இந்த தீவை கைப்பற்ற போவதாக இந்திய அரசாங்கம் இதுவரை காலமும் எவ்வித உத்தியோகப்பூர்வ அறிவிப்பையும் விடுக்கவில்லை. கச்சத்தீவு இலங்கைக்கு உரித்தானது என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது. கச்சத்தீவின் அடையாளத்தை இரு நாடுகளும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார். https://www.virakesari.lk/article/239849
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
யார் இந்த அயதுல்லா அலி கமேனி? Mar 1, 2026 - 07:50 AM 1939 ஆம் ஆண்டு வடகிழக்கு நகரமான மஷ்ஹாத்தில் ஒரு மத அறிஞரின் மகனாக அலி கமேனி பிறந்தார். 1962 இல் ஷா மொஹமட் ரேசா பஹ்லவிக்கு எதிராக அயதுல்லா கொமேனியின் மத எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்தார். 1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, அலி கமேனி துணை பாதுகாப்பு அமைச்சரானார் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையை ஒழுங்கமைக்க உதவினார். 1989 ஜூன் மாதம் கொமேனியின் மறைவுக்குப் பிறகு, நிபுணர்கள் பேரவை அலி கமேனியை புதிய அதி உயர் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. அரசியலமைப்பு விதிகளின்படி ஷியா மத குருமார்களிடையே தேவையான தகுதியான 'மர்ஜா-ஏ தக்லித்' அல்லது 'கிராண்ட் அயதுல்லா' நிலையை அவர் அடைந்திருக்கவில்லை என்றாலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சூழலைச் சரிசெய்யும் வகையில், அதி உயர் தலைவர் இஸ்லாமிய புலமையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு திருத்தப்பட்டது. இதன் மூலம் அலி கமேனி அயதுல்லாவாக மாறவும், அதி உயர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவும் வழிவகை செய்யப்பட்டது. அவர் ஈரானின் அரசியல் மற்றும் அதன் ஆயுதப்படைகளின் மீது ஒரு வலுவான பிடியைப் பேணி வந்தார். மேலும் ஆளும் முறைக்கு எதிரான சவால்களை சில நேரங்களில் வன்முறை மூலம் கடுமையாக ஒடுக்கினார். அயதுல்லா கமேனி, அமெரிக்காவுடனான தற்போதைய மோதல் உட்பட வெளிவிவகாரங்களில் தொடர்ந்து கடும்போக்கு நிலைப்பாடுகளை கையாண்டார். அவர் மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்காவுடனான உறவுகள் குறித்து சந்தேகம் கொண்டவராகவே இருந்தார். மேலும் இஸ்ரேல் அரசு அழிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்திருந்தார். ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என பகிரங்கமாக அறிவித்தார். இறுதியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு இராணுவ நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டார். ஆறு குழந்தைகளைக் கொண்ட கமேனியின் ஆட்சியின் போது, ஈரானில் ஏழு ஜனாதிபதிகள் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. யார் இந்த அயதுல்லா அலி கமேனி?
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரானிய மக்களுக்கு ட்ரம்பின் வேண்டுகோள். ஈரானிய ஆயுதப்படையினர் சரணடைய வலியுறுத்தல்.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார் - நெதன்யாகு Mar 1, 2026 - 12:58 AM ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் தெஹ்ரான் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து வௌியிட்டுள்ளார். இந்த சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார் என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிடுகிறார். எனினும், அவர் எதனைக் குறிப்பிடுகிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இன்றைய தினம் உயர்மட்டத் தலைவரிடமிருந்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து இதுவரை எந்த உறுதிப்படுத்தலும் இல்லை. ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தேவையான காலம் வரை தொடரும் என்று குறிப்பிட்ட இஸ்ரேலியப் பிரதமர், இஸ்ரேலின் முன்னணி கட்டளைப்பிரிவு வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இஸ்ரேலிய குடிமக்களைக் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஈரான் மக்களுக்கு உரையாற்றிய நெதன்யாகு, இந்தத் தாக்குதல்கள் அவர்கள் தாம் அனுபவித்து வரும் கொடுங்கோன்மையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள உதவும் என்று கூறினார். ஈரான் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அவர்களுக்கு ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பாக இது அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பெருந்திரளாகத் வீதிகளில் இறங்கி இந்தப் பணியை முடித்துவிடுங்கள் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அத்துடன் நீங்கள் ஒன்றிணைவதற்கு இதுவே சரியான நேரம் என்றும், ஒரு வரலாற்றுப் பணிக்காக ஒன்றுபடுங்கள் என்றும் அவர் தமது உரையில் மேலும் தெரிவித்தார். எவ்வாறாயினும் தலைவர் உயிருடன் இருப்பதாக ஈரான் வௌிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார் - நெதன்யாகு ஈரான் அதி உயர் தலைவரின் மகள், மருமகன் கொலை! Mar 1, 2026 - 06:24 AM இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, ஈரானில் நடத்திய தாக்குதலில் ஈரானின் அதி உச்ச தலைவரின் மகள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஊடகம் ஒன்று இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போரில் காமேனியும் கொல்லப்பட்டதாக ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் உரிமை கோரியதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஈரானிய அதிகாரிகள் இத்தகைய தகவல்களை உளவியல் போர் எனக் கூறி மறுப்பு வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஈரான் அதி உயர் தலைவரின் மகள், மருமகன் கொலை!
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
வெற்றியுடனும் ஏமாற்றத்துடனும் பாகிஸ்தான் நாடு திரும்புகிறது, கடைசிவரை போராடி தோற்றது இலங்கை; அரை இறுதியில் நியூஸிலாந்து Published By: Vishnu 28 Feb, 2026 | 11:42 PM (பல்லேகலை அரங்கலிருந்து நெவில் அன்தனி) கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை இரவு பரபரப்பைவும் விறுவிறுப்பையும் ஏற்படுத்திய ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 2க்கான கடைசி போட்டியில் இலங்கையை 5 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றிகொண்டது. ஆனால், பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பை தவறவிட்டு ஏமாற்றத்துடன் நாடு திரும்புகிறது. பாகிஸ்தான் அரை இறுதிக்கு தகுதிபெறுவதற்கு 64 ஓட்டங்களால் வெற்றி பெறவேண்டியிருந்தது. ஆனால், பவன் ரத்நாயக்க, தசுன் ஷானக்க ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இலங்கையின் மொத்த எண்ணிகையை 148 ஓட்டங்களாக உயர்த்தியபோது பாகிஸ்தானின் அரை இறுதி கனவு கலைந்துபோனது. இதனை அடுத்து குழு 2 இலிருந்து இரண்டாவது அணியாக நியூஸிலாந்து அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. இக் குழுவிலிருந்து ஏற்கனவே இங்கிலாந்து முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதி பெற்றிருந்தது. குழு 1இல் தென் ஆபிரிக்கா ஏற்கனவே அரை இறுதிக்கு தெரிவாகியுள்ள நிலையில் இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 01) நடைபெறவுள்ள சுப்பர் 8இல் வெற்றிபெறும் அணி அரை இறுதியில் விளையாட கடைசி அணியாக தகுதிபெறும். பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 213 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. போட்டியின் கடைசிக் கட்டத்தில் அணித் தலைவர் தசுன் ஷானக்க அதிரடியாக துடுப்பெடுத்தாடி வெற்றியை அண்மிக்கச் செய்தார். கடைசி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 28 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஷஹீன் ஷா அப்றிடி வீசிய கடைசி ஓவரின் முதல் 4 பந்து களை 4, 6, 6, 6ஆக விசுக்கிய தசுன் ஷானக்க 22 ஓட்டங்களைக் குவித்தார். 5ஆவது பந்து டொட் போலானது. கடைசிப் பந்து வைட் போன்று தென்பட்டபோதிலும் மத்தியஸ்தர் அசையவில்லை. இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. பெத்தும் நிஸ்ஸன்க (3) இரண்டாவது ஓவரில் ஆட்டம் இழந்ததுடன் மொத்த எண்ணிக்கை 33 ஓட்டங்களாக இருந்தபோது கமில் மிஷார (26) களம் விட்டு வெளியேறினார். சரித் அசலன்கவும் பவன் ரத்நாயக்கவும் 3ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர். ஆனால் அதன் பின்னர் சரித் அசலன்க (25), கமிந்து மெண்டிஸ் (3), ஜனித் லியனகே (5) ஆகிய மூவரும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். இந் நிலையில் பவன் ரத்நாயக்க, அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகமூட்டினர். பவன் ரத்நாயக்க திறமையாகத் துடுப்பெடுத்தாடி 37 பந்துகளில் 4 பவண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 58 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் தனித்து போராடிய தசுன் ஷானக்க அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 31 பந்துகளில் 2 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் அடங்கலாக 76 ஓட்டங்ககளுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். தசுன் ஷானக்க பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் துனித் வெல்லாலகேவுடன் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தார். இதில் துனித் வெல்லாலகே ஆட்டம் இழக்காமல் 2 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் அப்ரார் அஹ்மத் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 212 ஓட்டங்களைக் குவித்தது. ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் இலங்கைக்கு எதிராக அணி ஒன்றினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். பங்களாதேஷின் சட்டாக்ரோமில் 2014இல் இங்கிலாந்து பெற்ற 4 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்களே இலங்கைக்கு எதிராக ரி20 உலகக் கிண்ணத்தில் பெறப்பட்ட முந்தைய அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது ஆரம்ப வீரர் சாஹிப்ஸதா பர்ஹான் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்து பாகிஸ்தானுக்கு கணிசமான ஓட்டங்களைக் குவிக்க உதவினார். ஆரம்ப வீரர்களான சாஹிப்ஸதா பர்ஹான், பக்கார் ஸமான் ஆகிய இருவரும் இலங்கையின் சகல பந்துவீச்சாளர்களையும் விளாசி அடித்து ஓட்டங்களை மிக இலகுவாக குவித்தனர். அவர்கள் இருவரும் 95 பந்துகளில் சாதனைமிகு 176 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். இந்த வருட உலகக் கிண்ணத்தில் இது சகல விக்கெட்களுக்குமான அதிசிறந்த இணைப்பாட்டமாகும். இதற்கு முன்னர் சென்னையில் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான குழுநிலை போட்டியில் நியூஸிலாந்தின் டிம் சீஃபேர்ட், ஃபின் அலன் ஆகியோர் பிரிக்கப்படாத ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 175 ஓட்டங்களே முந்தைய அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது. பக்கார் ஸமான் 42 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 84 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானின் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்தன. விக்கெட் இழப்பின்றி 176 ஓட்டங்களைப் பெற்ற பலமான நிலையில் இருந்த பாகிஸ்தான் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 8 விக்கெட்களை இழந்தது. இதனிடையே திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த சாஹிப்ஸதா பர்ஹான் கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். 60 ஓட்டங்களை எதிர்கொண்ட சாஹிப்ஸதா பர்ஹான் 9 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் சரியாக 100 ஓட்டங்களைக் குவித்தார். இந்த வருட உலகக் கிண்ணத்தில் அவர் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும். நமிபியாவுக்கு எதிராக எஸ்எஸ்சி மைதானத்தில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் சாஹிப்ஸதா பர்ஹான் ஆட்டம் இழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 33 ஓட்டங்களுக்க 3 விக்கெட்களையும் தசுன் ஷானக்க 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: சாஹிப்ஸதா பர்ஹான். https://www.virakesari.lk/article/239838
-
நிலக்கரிக் கொள்வனவுக்கு மீண்டும் விலைமனு கோரல்!
நிலக்கரிக் கொள்வனவுக்கு மீண்டும் விலைமனு கோரல்! Published By: Digital Desk 1 01 Mar, 2026 | 07:39 AM (நமது நிருபர்) நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்திற்காக 3 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரியை அவசரமாகக் கொள்வனவு செய்ய லங்கா நிலக்கரி நிறுவனம் விலைமனுக் கோரியுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், 2026 மார்ச் - ஏப்ரல் காலப்பகுதிக்காக அவசர நிலக்கரி கொள்வனவுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தரமற்ற நிலக்கரி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், லங்கா நிலக்கரி நிறுவனம் இவ்வாறு அவசர நிலக்கரி கொள்வனவுக்கான அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது. லங்கா நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இந்த அறிவிப்பு கடந்த 25ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, 2026 மார்ச் - ஏப்ரல் காலப்பகுதிக்காக நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்திற்கு 3 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நிலக்கரிக் கொள்வனவுக்கு மீண்டும் விலைமனு கோரல்!
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
'இரான் அதிஉயர் தலைவர் காமனெயி கொல்லப்பட்டார்' - உறுதிப்படுத்திய அரசு ஊடகம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானின் அதிஉயர் அயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதாக இரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 1 மார்ச் 2026, 01:08 GMT புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) இரானின் அதிஉயர் அயதுல்லா அலி காமனெயி இறந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது அயதுல்லா அலி காமனெயி மரணத்தை இரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது. காமனெயி மரணத்திற்கு இரான் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என, அரசு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் கண்ணீருடன் தெரிவித்தார். இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையுடன், இரானில் உள்ள பல அரசு ஊடகங்கள் அயதுல்லா காமனெயி மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளன. அதன் அறிக்கையில் 86 வயது அயதுல்லா எப்படி இறந்தார் என்பது குறித்தோ அல்லது அடுத்த தலைவர் யார் என்பது குறித்த தகவல்களோ இல்லை. தற்போது இரானின் அரசு தொலைக்காட்சி சேனலான IRINN, காமனெயி புகைப்படங்களுடன் பின்னணியில் குரான் ஓதப்படுகிறது. முன்னதாக, அத்தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் காமனெயி மரணத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை குற்றம் சாட்டிய இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரபூர்வ அறிக்கையை வாசித்தார். காமனெயியின் "தியாகம்" "அடக்குமுறையாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு எழுச்சியின்" தொடக்கமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சனிக்கிழமை, அமெரிக்காவும் இஸ்ரேலும் பல இரானிய நகரங்களைத் தாக்கின, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, அமெரிக்க அதிபர் தன்னுடைய ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில் காமனெயி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அலி காமனெயி மரணம் குறித்த செய்தி தவறானது என்றும், அது அமெரிக்க உளவியல் போரின் விளைவு என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக, இரானின் செய்தி நிறுவனமான ஃபார்ஸ் கூறுகிறது. புரட்சிகர காவல்படைக்கு நெருக்கமானதாகக் கருதப்படும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், டிரம்பின் தகவலை மறுத்து, "டிரம்ப் தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட செய்திகளைப் பரப்புவதில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளார். இதுபோன்ற நடத்தைக்கான முந்தைய எடுத்துக்காட்டுகளில் ஒன்று, மஷாத் நகரத்தின் வீழ்ச்சி குறித்த அவரது கூற்று ஆகும், இது பின்னர் ஆதாரமற்றது மற்றும் வெறும் பரபரப்பான ஊடக பிரசாரம் என்று நிரூபிக்கப்பட்டது." என தெரிவித்துள்ளது. "வரலாற்றில் மிக மோசமான மனிதர்களில் ஒருவரான காமனெயி இப்போது இறந்துவிட்டார்" என்று டிரம்ப் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டிரம்ப் கூறியது என்ன? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,காமனெயி மரணம் இரான் மக்களுக்கு நீதி என்று டிரம்ப் கூறியுள்ளார். டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான காமனெயி இப்போது இறந்துவிட்டார். இது இரான் மக்களுக்கு மட்டுமல்ல, காமனெயி மற்றும் அவரது ரத்தவெறி பிடித்த கும்பலால் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் சிறந்த அமெரிக்கர்கள் மற்றும் மக்களுக்குமான நீதி." என பதிவிட்டுள்ளார். "அவரால் எங்கள் உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளிலிருந்து தப்ப முடியவில்லை, மேலும் இஸ்ரேலுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், அவரோ அல்லது அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ எதுவும் செய்ய முடியாது." "இரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கு இதுவரை கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது. அவர்களது ஐ.ஆர்.ஜி.சி (புரட்சிகர காவல் படை), ராணுவ அதிகாரிகள் மற்றும் பிற பாதுகாப்பு மற்றும் காவல்துறையினர் பலரும் இனி சண்டையிட விரும்பவில்லை என்றும், எங்களிடம் பாதுகாப்பு கேட்கிறார்கள் என்றும் நாங்கள் கேள்விப்படுகிறோம். நேற்று இரவு நான் சொன்னது போல், 'அவர்களுக்கு இப்போது பாதுகாப்பு கிடைக்கலாம், ஆனால் பின்னர் அவர்களுக்கு மரணம் மட்டுமே கிடைக்கும்.'" "ஐ.ஆர்.ஜி.சி மற்றும் காவல்துறை இரானின் தேசபக்தர்களுடன் அமைதியாக ஒன்றிணைந்து, ஒரு பிரிவாக, நாட்டை அதற்கு தகுதியான மகத்துவத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன். இந்த செயல்முறை விரைவில் தொடங்க வேண்டும், ஏனென்றால் காமனெயி இறந்தது மட்டுமல்லாமல், நாடு பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட ஒரே நாளில் அழிக்கப்பட்டுள்ளது." "இருப்பினும், மத்திய கிழக்கு மற்றும் உண்மையில் உலகம் முழுவதும் அமைதிக்கான நமது இலக்கை அடைய, வாரம் முழுவதும் அல்லது தேவைப்படும் வரை கடுமையான மற்றும் துல்லியமான குண்டுவெடிப்பு தொடரும்." இதற்கிடையில், காமனெயி மரணம் குறித்த கூற்றுகளைத் தொடர்ந்து, இரானிய நகரமான கராஜில் கொண்டாட்டங்கள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பகிரப்பட்டு பிபிசி பாரசீக மொழி சேவையால் சரிபார்க்கப்பட்ட ஒரு காணொளியில், இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி மரணம் குறித்த செய்திகளுக்குப் பிறகு, கராஜில் சில இரானியர்கள் கொண்டாடுவதைக் காண முடிகிறது. இருப்பினும், டொனால்ட் டிரம்ப் பதிவிடுவதற்கு முன்பே இது நிகழ்ந்தது. பட மூலாதாரம்,Reuters 'இரானிய அதிகாரிகள் 40 பேர் உயிரிழப்பு' பிபிசி கூட்டு ஊடக நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் பேசிய உளவு மற்றும் ராணுவ வட்டாரங்கள், தாக்குதல்களில் இரானிய அதிகாரிகள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளன. இந்த அதிகாரிகள் ஒரே இடத்தில் இருந்தார்களா அல்லது பல்வேறு இடங்களில் இருந்தார்களா என்பது தெரியவில்லை. இறந்தவர்களுள் இரானின் அதிஉயர் தலைவர் காமனெயி, இஸ்லாமிய புரட்சிகர காவல் படை மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரும் அடங்குவர் என அவர்கள் தெரிவித்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு 'இரான் அதிஉயர் தலைவர் காமனெயி கொல்லப்பட்டார்' - உறுதிப்படுத்திய அரசு ஊடகம்
-
தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து இன்று விடைபெறுகிறார் சனத்!
பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகுவது குறித்து சனத்தின் பதில்! Mar 1, 2026 - 12:33 AM இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இன்று (28) நடைபெற்ற போட்டியின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகவுள்ளாரா என்பது குறித்து சனத் ஜயசூரிய கருத்து வெளியிட்டுள்ளார். இன்று நடைபெற்ற போட்டியின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், தான் முன்னரே பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாகவும், தனது ஒப்பந்தக் காலம் எதிர்வரும் ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும், இது குறித்து இதுவரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும், இது தொடர்பாக கிரிக்கெட் நிறுவனத்துடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த சனத் ஜயசூரிய, இந்த பதவியை வேறு யாருக்காவது வழங்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அதனால்தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து தொடரின் போது, இதில் தொடர விருப்பமில்லை என்று கூறினேன். அந்த முடிவை எடுத்த பின்னரே நான் அதனைத் தெரிவித்தேன். உலகக்கிண்ணத் தொடரை ஒரு பயிற்சியாளராகச் சிறந்த முறையில் நிறைவு செய்ய முடியும் என்று நினைத்தேன். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அதனைச் செய்ய முடியவில்லை. அது குறித்து கவலையடைகிறேன். ஆனாலும், அணி இருந்த நிலையிலிருந்து ஒன்றரை வருடங்களுக்குள் தரவரிசையில் 4ஆம் இடத்திற்கு கொண்டு வர என்னால் முடிந்தது. டெஸ்ட் அணியை 6ஆம் இடத்திற்கு கொண்டு வந்தேன். இதனை நான் தனியாகச் செய்யவில்லை, எனது உதவிப் பணியாளர்கள் ஆரம்பத்திலிருந்தே எனக்கு பெரும் ஆதரவை வழங்கினார்கள். நான் செய்த விடயங்கள் குறித்து மகிழ்ச்சியடைய முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் உலகக்கிண்ணத் தொடர் நிறைவடைந்த விதம் குறித்து என்னால் மகிழ்ச்சியடைய முடியாது. அது குறித்து மிகவும் கவலையாக உள்ளது. பார்க்கலாம், எனது ஒப்பந்தம் ஜூன் மாதம் வரை உள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இன்னும் உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. எனவே அவர்களுடன் பேசி அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்தார். பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகுவது குறித்து சனத்தின் பதில்!
-
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி!
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி! Published By: Digital Desk 1 01 Mar, 2026 | 07:48 AM (நா.தனுஜா) டித்வா சூறாவளியை அடுத்து ஏற்பட்ட பேரனர்த்தத்தினால் நாடு முகங்கொடுத்திருக்கும் மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு மேலும் ஒரு மில்லியன் யூரோ (சுமார் 370 மில்லியன் ரூபா) நிதியுதவியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதிலும், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிவாரண வழங்கல் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதிலும் தாம் கொண்டிருக்கும் கடப்பாட்டை இந்த மேலதிக நிதியுதவி மூலம் மீளுறுதிப்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்நிதியுதவியானது மனிதாபிமான உதவி வழங்கல் அமைப்புக்கள் ஊடாக மக்களைச் சென்றடையும் எனவும், இந்நிதி அடிப்படை சேவை வழங்கல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உடனடி மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கென ஐரோப்பிய ஒன்றியம் தமது சக முகவரமைப்புக்கள் ஊடாக 2.35 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி!
-
மத்திய கிழக்கு போர் சூழல்: நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் உறுதி
மத்திய கிழக்கு போர் சூழல்: நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் உறுதி Published By: Vishnu 28 Feb, 2026 | 07:48 PM மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.இலங்கை விளையாட்டு நிலவும் சர்வதேச சூழ்நிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு திரளுகின்ற நிலை காணப்படுகின்றது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் விநியோகத்தில் எவ்வித சிக்கலும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார். அவரது விளக்கத்தின் படி, 37 நாட்களுக்கு தேவையான பெற்றோல், 35 நாட்களுக்கு தேவையான டீசல், 47 நாட்களுக்கு தேவையான விமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “மக்கள் அச்சமடைவதற்கு எவ்வித காரணமும் இல்லை. கையிருப்பிலுள்ள முழுமையான அளவுகளை நாங்கள் கணித்துள்ளோம். மேலதிக கப்பல்கள் வராதிருந்தாலும் கூட, குறிப்பிட்ட காலப்பகுதிக்கு இடையூறு இல்லாமல் விநியோகிக்க முடியும்,” என அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கான பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதி பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். கப்பல் கட்டணம் மற்றும் தூரம் அதிகமாக இருப்பதால், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்கள் பெரும்பாலும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன எனவும் அவர் விளக்கமளித்தார். மசகு எண்ணெய் (Crude Oil) இறக்குமதியில் மட்டுமே சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாயினும், அதற்கான கையிருப்பும் சுமார் ஒரு மாதத்திற்கு போதுமானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தால் அதிகளவில் எரிபொருள் சேமிப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கு போர் சூழல்: நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் உறுதி
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது 01 Mar, 2026 | 07:39 AM ஆயத்துல்லா அலி காமேனி உயிரிழந்துள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அமெரிக்கா– இஸ்ரேல் இணைந்து நடத்திய மிகப்பெரிய தாக்குதலுக்கு பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்த இராணுவ நடவடிக்கை வாரம் முழுவதும் கடும் குண்டுவீச்சுகளுடன் தொடரும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த நடவடிக்கை தெஹ்ரான் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்ட நிலையில், ஈரானில் 40 நாட்கள் பொது துக்கம் அனுஷ்டிக்கப்படுவதுடன் 7 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்களில் ஒன்றாக தெற்கு ஈரான் பகுதியில் உள்ள ஒரு ஆரம்பப் பாடசாலை குறிவைக்கப்பட்டதாகவும், அதில் பல மாணவர்கள் உயிரிழந்ததாகவும் ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு பதிலடியாக, ஈரான் அமெரிக்க இராணுவத் தளங்கள், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பல்வேறு இலக்குகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் நெரிசலான நகரப்பகுதிகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியதுடன், விமானப் போக்குவரத்து மற்றும் எண்ணெய் கப்பல் அனுப்புகைகளிலும் கடுமையான இடையூறுகளை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, அமெரிக்க இராணுவம் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, இதுவரை எந்த அமெரிக்க இராணுவ வீரர்களும் போர்சார்ந்த உயிரிழப்புக்கு உள்ளாகவில்லை என கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் இந்த தாக்குதல்களை “மத்திய கிழக்கின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம்” என விவரித்ததுடன், உலகத் தலைவர்கள் பிராந்தியத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்யத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது. மத்திய கிழக்கு முழுவதும் பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சமூகம் தணிக்கை முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது