Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நிலவின் மேற்பரப்பில் விழுந்து கிடக்கும் விக்ரம் லேண்டருக்கு புதிய ஆபத்து காத்திருக்கிறது. செப்டம்பர் 21 முதல் நிலவில் கடும் குளிர் இரவு வர உள்ளது. இதில் விக்ரம் லேண்டர் சிக்கினால் மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை.எனவே அதற்குள் லேண்டருடன் தகவல் தொடர்பு ஏற்ப்டுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கடுமையாக போராடி வருகின்றனர். லேண்டர் தொடர்பான முழு விவரங்களை இச்செய்தி குறிப்பில் காண்போம். *நிலவின் தென் துருவத்தில் சாய்ந்த நிலையில் விழுந்து கிடைக்கும் விக்ரம் லேண்டரை தட்டி எழுப்ப அத்தனை முயற்சிகளையும் முடிக்கிவிட்டுள்ளது இஸ்ரோ. *லேண்டரை படமெடுத்து அனுப்பிய சந்திராயன் 2 விண்கலம் மூலமே அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. *பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந…

    • 3 replies
    • 451 views
  2. நிலவின் தென் துருவத்தில் சுமார் 100 பில்லியன் ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் படாத அநேக பள்ளங்களும், குகைகளும் உள்ளதாகவும், அவற்றை ஆராய்ந்தால் சூரிய குடும்பத்தின் தோற்றம் குறித்து பல்வேறு அரிய தகவல்கள் கிடைக்கும் என்றும் இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. மேலும், அங்குள்ள பள்ளங்களில் உறைநிலையில் 80 மில்லியன் டன் அளவுக்கு தண்ணீர் இருப்பதுடன், அதிக ஆற்றல் வாய்ந்த ஹீலியம், ஹைட்ரஜன், மீத்தேன் உள்ளிட்ட மூலக்கூறுகள் இருக்கின்றன. இப்போது பூமியில் தண்ணீருக்கு அடுத்தபடியாக எரிபொருள் தேவைதான் உலக நாடுகளுக்கு முக்கிய தேவையாக இருக்கிறது. எனவே, கதிர்வீச்சு அபாயமில்லாத அதிக ஆற்றல் கொண்ட ஹீலியம் மூலக்கூறுகளை பூமிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் சம…

  3. சந்திரயான்- 2 லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட சந்திரயான்-2 லாண்டர் பகுதி நிலவின் மேற்பரப்பில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான்- 2 லாண்டரின் தற்போதைய நிலை தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இஸ்ரோவின் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் லாண்டர் பகுதியை நிலவைச் சுற்றிவரும் சந்திரயான்-2 வின் ஆப்பிட்டர் கருவி மூலம் எடுக்கப்பட்ட படம் தமக்கு கிடைத்துள்ளதாகவும், இந்நிலையில் லாண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இஸ்ரோ சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யவதற்காக ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22ஆம் த…

    • 5 replies
    • 1.2k views
  4. 3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான நம் முன்னோர் இவர் தான் ! அதிசய கண்டுபிடிப்பு.! குரங்கிலிருந்து மில்லியன்கணக்கான ஆண்டுகளாக பரிமாண வளர்ச்சி பெற்று மனிதன் தற்போதுள்ள தோற்றத்தை அடைந்தான் என்பதைப்பற்றியது அல்ல இது. 3.5 மில்லியன் ஆண்டுகள் எனினும் சமீபத்தில் எத்தியோப்பியாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்ட 3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான மண்டையோடு ஒன்று, நம் முன்னோர்கள் உண்மையில் எப்படி தோற்றமளித்தனர் என்ற உண்மையை வெளிக்கொண்டுவந்துள்ளது. க்ளேவ்லேண்ட் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்ட்ரி க்ளேவ்லேண்ட் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்ட்ரி-ஐ சேர்ந்த மானுடவியல் தொல்லியலாளரும், இந்த ஆராய்ச்சியை வழிநடத்திய ஆய்வாளருமான யோகன்ஸ் ஹெய்லே சிலாஸீ கூறுகையில், இது ஒரு …

    • 4 replies
    • 1.1k views
  5. கடந்த ஜூலை 23 ஆம் தேதி, ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டது. சந்திராயன் 2 விண்கலம், சனிக்கிழமை அதிகாலை 1:55 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள முதல் விண்கலம் சந்திராயன் 2 ஆகத்தான் இருக்கும். சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க தயாராக உள்ளது. சனிக்கிழமை அதிகாலை 1:30 மணி முதல் 2:30 மணிக்குள் அது நிலவைத் தொட ஆயத்தமுடன் உள்ளது. விக்ரம் லேண்டர், நிலவில் இறங்கியவுடன், ரோவர் பிரக்யான், நிலவின் மேற்பரப்பில் அதிகாலை 5:30 முதல் 6:30 மணிக்குள் வெளியேவரும் என்று இஸ்ரோ சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரோவர் பிரக்யான், நிலவில் பல்வேறு ஆராய்ச்…

  6. சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் ‘விக்ரம்’ வெற்றிகரமாக பிரிந்துள்ளது: இஸ்ரோ சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் ‘விக்ரம்’ வெற்றிகரமாக பிரிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் திகதி, ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான்-2 விண்கலமானது, கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதியன்று பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்க ஆரம்பித்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம், கடந்த ஒகஸ்ட் 20ஆ…

  7. மனித வடிவிலான ரோபோ சர்வதேச விண்வெளி நிலையத்தினை சென்றடைந்தது ரஷ்யாவின் மனித வடிவிலான ரோபோ சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா இதனைத் தெரிவித்துள்ளது. கஜகஸ்தானின் பாய்கோர் மாகாணத்திலுள்ள, ரஷ்யாவின் ரொக்கெட் ஏவுதளத்தில் இருந்து, சோயுஸ் எம் எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டது. இதனுடன் இணைத்து ‘ஃபெடோர்’ என்ற மனித உருவ ரோபோவும் அனுப்பப்பட்டது. குறித்த ரோபோ, சர்வதேச விண்வெளி மையத்திலுள்ள விண்வெளி வீரர்களுக்கு, அவசர காலங்களில் உதவி செய்வதற்காக, 10 நாட்கள் பயிற்சி பெற்றுக்கொள்ளவுள்ளது. 1.8 மீட்டர் உயரமும், 160 கிலோ எடையும் கொண்ட குறித்த ரோபோ, ஸ்கைபோட் எஃப் 850 என்ற அடையாள எண்ணுடன் அனுப்பப்பட்டுள்ளது…

  8. செவ்வாய்க்கிரகத்துக்குச் செல்லும் ரோவரில் உங்களின் பெயரையும் எடுத்துச் செல்ல தயாராக இருக்கிறது நாசா. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, வருகிற 2020-ம் ஆண்டு செவ்வாய்க்கிரகத்துக்கு தனது மற்றொரு ரோவரை அனுப்பவிருக்கிறது. அதில் அந்நிறுவனம் ஒரு புதுமையான முயற்சியாக பூமியிலிருந்து லட்சக்கணக்கான மக்களின் பெயர்களைக் கொண்ட மைக்ரோசிப்பையும் அந்த ரோவருடன் அனுப்பவிருக்கிறது. அதற்கான அழைப்பை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது நாசா. NASA ✔@NASA When our #Mars2020 rover lands on the Red Planet in 2021, it will carry a microchip etched with the names of millions of people from planet Earth. Is yours on it? Don't mis…

    • 0 replies
    • 449 views
  9. கடலுக்கடியில் காணப்படும் பவளப்பாறைகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். சுற்றுச்சூழல் மாசு, சூழலியல் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடலுக்கு அடியில் காணப்படும் சில வகையான பவளப்பாறைகள் அழிவை சந்தித்து வருகின்றன. இதனை பாதுகாக்கவும், பவளப்பாறைகளை செயற்கை முறையில் வளர்த்து அதன் இனப்பெருக்கத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலும், அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கடல்சார் ஆய்வகம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டனர். இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு, லண்டன் அருங்காட்சியகம் ஒன்றின் உதவியுடன் புளோரிடா மாநிலத்தில் உள்ள தம்பா பகுதியில் கடல்சார் ஆய்வகம் ஒன்றை உருவாக்கினர். இந்த ஆய்வகத்தில், கடலுக்கு அடியில் இருப்பது போன்ற சூழலியலை உருவாக்கும் வகையி…

    • 0 replies
    • 618 views
  10. 'டிஜிட்டல் போட்டோகிரபி' (Digital Photography) நவீனத்தின் உச்சம் தொட்டுக்கொண்டிருக்கிறது. நாளொரு தொழில்நுட்பம், பொழுதொரு புதிய கருவி என வேகமெடுத்துப் பறக்கும் இந்தத் தொழிலில் கலைக்கான நிதானமும், வெள்ளந்தியான அழகியலும் கொஞ்சம் குரல் ஒடுங்கித்தான் போகின்றன. இந்த நிலையில், நின்று நிதானித்து, டிஜிட்டல் கேமிராவில் எடுக்கும் புகைப்படங்களை, ஒரு மிகப்பழைய எளிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கருவிகள் ஏதுமில்லாமல், வெறும் கையால் அஞ்சலட்டை உள்ளிட்டவற்றில் பிரிண்ட் போடும் முறையை பரவலாக்கி வருகிறார் வினோத் பாலுச்சாமி என்ற புகைப்படக் கலைஞர். சைனோடைப் பிரிண்டிங் எனப்படும் இந்த முறை மிகப் பழைய முறை என்று கூறும் வினோத் இதற்கு எந்தக் கருவியும் தேவையில்லை. ஓரிரண்டு இரசாயனங்கள் இருந…

    • 0 replies
    • 743 views
  11. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த வெர்ஷன் ஏற்கெனவே ரெடியாகிவிட்டது. செல்லமாக ஆண்ட்ராய்டு Q என அழைக்கப்பட்டுவந்த ஆண்ட்ராய்டின் பத்தாவது வெர்ஷனான இதன் பீட்டாவை பலரும் தற்போதே பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அதிகாரபூர்வமாக இதற்கு ஒரு பெயர் கொடுக்கப்படாமல் இருந்தது. இப்போது அந்தப் பெயர் என்னவென்பதை அறிவித்திருக்கிறது கூகுள். மார்ஷ்மெல்லோ, ஐஸ்க்ரீம் சான்விட்ச், ஓரியோ, பை என ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கு உணவுப்பொருள்களின் பெயர்கள் வைக்கப்படுவது வழக்கம். இம்முறை Q-வில் தொடங்கும் ஒரு உணவுப்பொருளின் பெயரே வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறை இந்த வழக்கத்தைக் கைவிட்டிருக்கிறது கூகுள். பத்தாவது ஆண்ட்ராய்டு வெர்ஷனான இதற்கு 'ஆண்ட்ராய்டு 10' என்றே பெய…

    • 0 replies
    • 467 views
  12. உலக ‘ரோபோ’ மாநாட்டில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வைத்தியர் ரோபோ பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சீனாவில் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும், சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் உலக ‘ரோபோ’ மாநாடு நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உலக ‘ரோபோ’ மாநாடு தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் ஆரம்பித்தது. “ஒரு புதிய திறந்த சகாப்தத்திற்கான நுண்ணறிவு சூழல் அமைப்பு” என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த மாநாடு இம்மாதம் 25ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உளவு, மருத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட 20 தொழிற்துறைகளை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன. …

    • 0 replies
    • 584 views
  13. கல்வி பற்றிய எந்தவொரு விவாதத்திலும் தவறாமல் பின்லாந்து நாட்டின் பெயர் இடம் பெற்றுவிடும். தமிழக அரசுப் பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் அங்கு கல்விச் சுற்றுலா செல்வது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. உண்மையில், பின்லாந்து நாட்டின் கல்விச் சூழல் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது; அதேபோன்ற நிலையை இந்தியாவில் பின்பற்ற முடியாதா... என்று கல்வியாளர் ஆயிஷா இரா.நடராசனிடம் கேட்டோம். ``ஐ.நா சபை ஒவ்வோர் ஆண்டும் கல்வி குறித்து தரப் பட்டியலை வெளியிடுகிறது. அந்தப் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக நான்கு நாடுகளின் பெயர் கட்டாயம் வந்துவிடுகின்றன. அவற்றில் பின்லாந்து மற்றும் டென்மார்க் கட்டாயம் இடம்பெற்றுவிடுகிறது. இந்தளவு தொடர்ச்சியாகச் சாதிக்கும் அளவுக்கு அப்படி என்னதான் பின்லாந்தில் கற்றுக்கொ…

    • 0 replies
    • 467 views
  14. இயங்கும் பாகங்கள் இல்லாத மிக நுண்ணிய உள்நோக்கி உருவாக்கம்! லென்ஸ் மற்றும் இயங்கும் பாகங்கள் இல்லாத, மிக நுண்ணிய உள்நோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியைச் சேர்ந்த டிரெஸ்டன் தொழில்நுட்பப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளினால் இந்த மிக நுண்ணிய உள்நோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள், ‘புதிய தொழில்நுட்பத்துடன் இதுவரை இல்லாத அளவுக்கு மனித தலைமுடியைப் போன்று மிகவும் மெல்லிய உள்நோக்கியை உருவக்கியுள்ளோம். லென்ஸ், மின்னணு மற்றும் பொறியியல் பாகங்கள் ஏதுமில்லாத அந்த உள்நோக்கி, ஃபைபர் இழையால் ஆனது. ஒரு ஊசிமுனை தடிமனே இருக்கும் இந்த உள்நோக்கி, மருத்துவத் துறையின் பல்வேறு ஆய்வுகளுக்காக மனித உடலில் எளிதாக செலுத்திப் பயன்படுத்த முடியு…

  15. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சென்றது சந்திரயான்-2 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜுலை 22ஆம் திகதி சந்திராயன் – 2 விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது. 3,485 கிலோ எடையுள்ள குறித்த விண்கலத்தில், நிலவில் இறங்கவும், சுற்றி வரவும், ஆய்வு செய்யவும் அதிநவீன கருவிகள் உள்ளன. இதுவரை, பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த அந்த விண்கலம், ஆறு முறை உயர்த்தப்பட்டு, இன்று(புதன்கிழமை) அதிகாலை, 2.21 மணியளவில், நிலவின் சுற்று வட்டப்பாதையில் சென்றது. இஸ்ரோ விஞ்ஞானிகள், பெங்களூரில் உள்ள தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இதனை கண்காணித்து வருகிறனர். திட்டமிட்ட படி, சந்திராயன்- 2 விண்கலம், செப்டம்பர் 7ஆம் திகதி நிலவில் இறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ள…

  16. பூமியின் மறுபக்கம் வரை துளையிட்டு, அதற்குள் குதித்தால் என்னவாகும்.? கோட்பாட்டு இயற்பியலின் வேடிக்கையான பகுதியாக இருப்பினும் சரி, தத்துவார்த்த இயற்பியலின் சிறப்பான பகுதியாக இருப்பினும் சரி - அபத்தமான கேள்விகளைக் கேட்டு அதற்கான சரியான பதில்களைக் கணக்கிடுவது என்பது, எப்போதுமே நிகழும் சிறப்பானதொரு விடயமாகும். உதாரணத்திற்கு - நம்மில் பெரும்பாலானோர்கள் சிறுவயதில் கேட்க விரும்பிய அல்லது யாரிடமாவது கேட்ட ஒரு கேள்வியை எடுத்துக்கொள்வோம் - பூமிக்கு நடுவில் ஒரு ஆழமான ஓட்டையொன்றை போட்டால், பூமியின் மறுப்பக்கத்திற்கு ஈஸியாக போகலாம். அப்படித்தானே.? இதற்கான விடை என்ன.? இத்தகைய ஒரு காரியத்தை யார் செய்ய விரும்புவார்கள்.? வெளிப்படையாக சொல்லப்போனால் - அநேகமாக யாரும்…

  17. ஜப்பானின் என்.இ.சி நிறுவனம் தயாரித்துள்ள பறக்கும் கார்கள் வரும் 2030 ஆம் ஆண்டில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் பெறுகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் பொருட்டு ஜப்பானின் பிரபல நிறுவனமான என்.இ.சி ஆட்டோமொபைல் நிறுவனம் பறக்கும் காரை தயாரித்து அதனை வெள்ளோட்டம் விட்டு பார்த்தது.நான்கு புரப்பல்லர்களுடன் கட்டியமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம் நான்கு பேர் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நின்ற நிலையிலும் ஓடுதளத்திலும் இந்த வாகனத்தை இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு அளவிலான சோதனை ஓட்டங்களை முடித்த பின்னர் வரும் 2030 ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என என்.இ.…

    • 1 reply
    • 475 views
  18. மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை கடக்கவுள்ளதாக அறிவிப்பு! மிகப்பெரிய விண்கல் ஒன்று அடுத்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. விண்வெளியில் பில்லியன் கணக்கில் விண்கற்கள் உள்ளன. அவை புவியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு விழும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அளவில் சிறியதாக இருக்கும் பட்சத்தில் பிரச்சினையில்லை. எனினும், மிகப்பெரிய விண்கற்கள் பூமியை கடக்கும் பட்சத்தில் விளைவுகள் மோசமாக இருக்கும். அந்த வகையில், ஆயிரத்து 870 அடி விட்டத்தைக் கொண்ட 2006 கியூகியூ33 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் எதிர்வரும் 10ஆம் பூமியை மிகவும் அருகில் கடந்து செல்லவுள்ளது. தற்போது பூமியில் இருந்து சுமார் 7 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில் குறித்த விண்க…

  19. Started by nunavilan,

    5ஜி போர் உலகம் முழுவதும் தகவல் தொடர்பு துறையில் பாரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற- தகவல் தொடர்பின் 5ஆவது தலைமுறை (5G) அடுத்த வருட நடுப்பகுதியில், பல நாடுகளிலும் ஒரே முறையில் நடைமுறைக்கு வரும் வகையில், அதற்கான தொழில்நுட்ப உட்கட்டமைப்பை ஏற்படுத்தும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழர் பிரதேசத்திலும் கூட இதற்கான ஏற்பாடுகளால் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டு வருவதை காணக் கூடியதாக இருக்கிறது. 5ஆவது தலைமுறை காந்த அலைகள், மானிட வாழ்வுக்கும் ஏனைய விலங்குகள், பறவைகள் வாழ்விற்கும் உகந்தது தானா? இதனால் புற்று நோய் வருவதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா? என பல்வேறு கேள்விகளும் உள்ளன. இது பலரையும் பெரும் சிந்தனைக்கு உள்ளாக்கி இருக்…

    • 1 reply
    • 524 views
  20. நிலவில் கால்பதித்து 50 ஆண்டு நிறைவு! நிலவில் மனிதர்கள் கால்பதித்து இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. வரலாற்று சிறப்புமிக்க சம்பவங்கள் மற்றும் தலைவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறும் கூகுள், இன்று (ஜூலை 19), நிலவில் மனிதர்கள் கால்பதித்த 50 ஆம் ஆண்டை நினைவு கூறும் விதமாக அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. பண்டைய கால மனிதர்கள் போற்றி, வியந்து பாராட்டி வந்த நிலவின்மீது மனிதர்களும் கால் பதிக்க முடியும் என்று நிரூபித்த நாள் இன்று. 1969 ஆம் ஆண்டு இதே நாளில் தான், அப்போலோ 11 விண்கலம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘நாசாவால்’ விண்ணில் ஏவப்பட்டு தரையிறங்கியது. நிலவில் முதன்முதலில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்கை நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருட…

    • 6 replies
    • 1.6k views
  21. அப்போது மயில்சாமி.. இப்போது சிவன்.. இந்தியாவை தலை நிமிர வைத்த 2 தமிழர்கள்.. இஸ்ரோவின் விழுதுகள்! இஸ்ரோவின் தொடர் விண்வெளி சாதனைகளுக்கு பின் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கே சிவன் என்ற இரண்டு தமிழர்களின் அளப்பரிய பங்கு அதிகம் இருக்கிறது. இஸ்ரோவின் சந்திரயான் 2 தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 48 நாட்களில் சந்திரயான் 2 சரியாக நிலவின் தென் பகுதியை அடையும். தற்போது வெற்றிகரமாக பூமியின் குறைந்த 170 கிமீ வட்டப்பாதையை சந்திரயான் அடைந்து உள்ளது. இனி பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றும் சந்திரயான் பின் நிலவை நோக்கி நகர தொடங்கும்.இரண்டு பேர்: இஸ்ரோவின் தொடர் விண்வெளி சாதனைகளுக்கு பின் இரண்டு தமிழர்கள்தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…

  22. சந்திரயான்-2 விண்கலம் : விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி! தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதை அடுத்து சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. குறித்த விண்கலம் இன்று (திங்கட்கிழமை) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நண்பகல் 2.43 மணிக்கு செலுத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கான 20 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மாலை 6.43 மணிக்கு ஆரம்பமாகியதுடன் சந்திரயான் 2 விண்கலத்தை தாங்கிய ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ரொக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “சந்திரயான்-2 விண்கலத்த…

  23. நாசா (தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம்) சந்திரனில் நீண்ட காலம் தங்குவதற்கு தயாராகி வருகிறது. உலகில் அமெரிக்காதான் நிலவில் முதலில் கால் வைத்து, கொடி நட்டது. 1969 ஜூலை 20ல் மனிதன் நிலவில் இறங்கியதில் இருந்து இந்த உறவு மிகவும் நெருக்கமாக உள்ளது. ஆனால் பல பல அரசியல் காரணங்களால், 1972ல் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நிறுத்தியது நாசா. இந்த நிலையில் 2024-ல் நிலவிற்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், “நாங்கள் சந்திரனுக்குப் போகிறோம் – இந்த முறை தங்குவதற்கு” என நாசா தங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும்இ ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் பணிபுரியும் நாசா ஸ்பேஸ் …

  24. படத்தின் காப்புரிமை Nasa) 1969 ஜூலை 20 ஆம் தேதி மனிதன் நிலவில் கால்வைத்த மாபெரும் அறிவியல் தொழில்நுட்ப சாதனை நிகழ்ந்த நாள். ஆனால் அது நம்முடைய தினசரி வாழ்வைப் பாதித்த முக்கியமான மைல்கல்லாகவும் உள்ளது. இன்றைய பண மதிப்பில் 200 பில்லியன் டாலர்கள் செலவில் முன்னெடுக்கப்பட்ட அப்போலோ செயல்திட்டம், நீங்கள் ஒருபோதும் அறிந்திராத துறைகளில் ஆச்சரியம் ஏற்படுத்தும் முன்னேற்றங்களையும் தொடங்கி வைத்தது. அவற்றில் சிலவற்றை இங்கு நாம் காண்போம். படத்…

    • 1 reply
    • 418 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.