அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
கடல் அலையில் மின்சாரம் மின்சாரம் இல்லையென்றால் மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்தோ டீசல் ஜெனரட்டேர் கொண்டு உற்பத்திசெய்தோதான் பயன்படுத்துகிறோம். பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்பது குறள் மொழி. மின்சாரம் இல்லையென்றால் இவ்வுலகமே இல்லை எனலாம் இப்போது. வார்தா புயலின் தாக்கத்துக்குப் பிறகு சென்னை வாசிகள் மின்சாரத்தின் முக்கியத்துவத்தை உண்மையாக உணர்ந்திருப்பார்கள். என்னதான் மெழுவர்த்தி, எண்ணெய் விளக்குகள் கொண்டு ஒருமாதிரியாகச் சாமளித்தாலும் மின்சார விளக்குகள் தரும் தெளிவு கிடைக்காது. அது மட்டுமல்ல குளிர்பதனப் பெட்டி, மிக்சி, கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், செல்பேசி, கணினி என அன்றாடத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும…
-
- 0 replies
- 319 views
-
-
ஆளில்லா விமானம் மூலம் முதல் டெலிவரியை செய்தது அமேசான் ஐக்கிய ராஜ்ஜியத்தில், ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம், சில்லரை வணிகத்தில் மிகப்பெரிய நிறுவனமான அமேசான், பொருள் ஒன்றை முதன் முதலாக வழங்கியுள்ளது. ஆளில்லா விமானம் மூலம் முதல் டெலிவரியை செய்தது அமேசான் அமேசான் தளத்தில் பொருளை ஆர்டர் செய்து 13 நிமிடங்களில் கேம்பிரிட்ஜில் உள்ள முகவரிக்கு அந்த பொருள் வாடிக்கையாளரிடம் பத்திரமாக ட்ரோன் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. சுமார் 400 அடி உயரம் வரை மின் ஆற்றலில் பறக்கக்கூடிய ட்ரோன் ஒன்று எவ்வாறு இந்த பொருளை உரியவரிடம் கொண்டு சேர்த்தது என்பதை ஒரு வீடியோ காட்டுகிறது. அமேசான் வி…
-
- 0 replies
- 403 views
-
-
இதில் பராசர முனிவர் கூறியுள்ள அளவுகள் அரைக் கட்டைவிரல் அளவு கோமயம், ஒரு பலம் கோமூத்திரம், ஏப்பலம் பால், மூன்று பலம் தயிர், ஒரு பலம் நெய், ஓரு பலம் தர்ப்பைஜலம் என்ற அளவுகளில் சேர்க்கப்பட வேண்டும். மேற்கூறிய பொருட்களை எந்த மாடுகளில் இருந்து பெறப்பட வேண்டும் என்றும் தயாரிக்கும் போது கூறப்பட வேண்டிய மந்திரங்களை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்றும் எந்த நாளில் உபயோகித்தால் பலன்கள் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது மந்திரங்கள் கற்றுக்கொள்ளத் தேவையான வசதிகள் இல்லாவிட்டாலும் அவர் கூறியுள்ள அளவுகளில் பஞ்சகவ்யம் தயாரித்து உபயோகித்ததில் பயிர்கள் மட்டுமின்றி கால்நடைகள், மனிதர்கள் என அனைத்து உயிரினங்களிலும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரித்து மிகுந்த பலன்களைத் தருகிறது. …
-
- 0 replies
- 874 views
-
-
அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது தெரியாத ஓர் அதிவேக பயணத்தினை நாம் செய்து கொண்டிருக்கின்றோம். இதில் கொஞ்சம் பிசகினாலும் அதோ கதிதான். மணிக்கு சுமார் 1040 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்திலேயே நாம் வசிக்கும் புவி இடை விடா பயணம் ஒன்றினைச் செய்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் இவை நன்றாக தெரிந்தும் கூட இன்றுவரை பூலோக வாசிகள் பலரையும் ஆட்டிப்படைக்கும் ஓர் கேள்விதான் பூமியைத் தாண்டி வேற்றுக்கிரகங்கள் உள்ளதா? அப்படியே இருந்தால் அவற்றில் உயிரினங்கள் வசிக்கின்றதா? என்பதே. இந்த கேள்விகளுக்கு நிச்சயமாக நாம் தனித்து தான் வாழ்கின்றோம் என்ற ஓர் பதிலோடு, வேற்றுக்கிரக வாசிகள் இருக்கின்றார்கள் என்றும் இரு வகை பதில்கள் கொடுக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றது. அதேபோன்று ஆய…
-
- 0 replies
- 487 views
-
-
டைனசோர் இனத்தை அழித்த விண்கல் பற்றிய துப்பு கிடைத்தது - விஞ்ஞானிகள் டைனசோர்களை அழித்த விண்கல் பற்றிய துப்பு கிடைத்தது ( ஓவியப்படம்) அறுபத்தி ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், பூமியில் மோதி, டைனசோர்களை அழித்துவிட்ட விண்கல் பற்றிய தடயங்களை தாங்கள் கண்டறிய உதவும் துப்புக்களை வைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். இப்போது மெக்ஸிகோ வளைகுடாவாக இருக்கிற இடத்திலுள்ள ராட்சத பாறையால் ஏற்பட்ட பள்ளத்தை சர்வதேச குழு ஒன்று துளையிட்டு ஆய்வு நடத்தியுள்ளது. பூமியை தாக்கிய விண்கல்லில் இருந்து வந்திருக்க்க்கூடும் என்று இந்த ஆய்வு குழுவினர் நம்புகின்ற அதிக அளவிலான நிக்கல் வழமைக்கு அதிகமாக அங்கு இருப்பதை அவர்கள் கண்டறிந்திருக்கின்றனர். அந்த பொருளே…
-
- 0 replies
- 261 views
-
-
புரட்சிக்கு முந்தைய கியூபாவின் வேளாண்மை என்பது நிலவுடைமையின் எச்சங்களுடனும் முதலாளித்துவ நடைமுறைகளுடனும் இணைந்ததாக இருந்தது. 1959 புரட்சிக்குப் பின்னரும்கூட கியூபா ரசாயன உரங்களையே பெரிதும் நம்பி வேளாண்மையை மேற்கொண்டுவந்தது. ஆனால், நம்மைப் போல் கண்மூடித்தனமாக அந்தத் தவறைத் தொடர்ந்து செய்ய விரும்பவில்லை. ரசாயன வேளாண்மையின் மோசமான பின்விளைவுகளை விரைவிலேயே புரிந்துகொண்டு, தேவையான மாற்றங்களை மேற்கொள்ள முன்வந்தது ஃபிடல் காஸ்ட்ரோ அரசு. இயற்கை வேளாண்மைப் பாதையில் அடியெடுத்து வைத்து, இன்று வெற்றிகரமாக அப்பாதையில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. நெருக்கடி தந்த தீர்வு கியூபாவின் உணவுத் தேவையைச் சோவியத் ஒன்றியம் அறுபது சதவீதம் பூர்த்தி செய்துவந்ததுடன், பெரும் பொரு…
-
- 3 replies
- 708 views
-
-
இரு மடங்கு வேகம், நான்கு மடங்கு தூரம் : ப்ளூடூத் 5 அறிமுகம் உலகெங்கும் அதிகளவு பயன்படுத்தப்படும் வயர்லெஸ் தொழில்நுட்பமாக விளங்கி வரும் ப்ளூடூத் தொழில்நுட்பம் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. வாஷிங்டன்: உலகில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வயர்லெஸ் தொழில்நுட்பமான ப்ளூடூத் 4.2 சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ப்ளூடூத் தொழில்நுட்பத்தின் புதிய அப்கிரேடு சில காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. பயனர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக ப்ளூடூத் 5 அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. …
-
- 0 replies
- 540 views
-
-
பூச்சி இனத்தைச் சேர்ந்த தேனீக்கள் பொதுவாக தரையில் உள்ள மரங்களில் மட்டுமே வாழக்கூடியன. இவை பூக்களில் இருந்து குடிக்கும் தேனை சேகரிக்கும் ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன. இவ்வாறான தேனீக்கள் நீர்க்கீழ் சூழலிலும் காணப்படுகின்றமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது நீரிற்கு கீழாக இருக்கும் புற்தாவரங்களில் இவ் வகை தேனீக்கள் வாழ்கின்றன. மேலும் தரையில் வாழும் தேனீக்களைப் போன்றே நீரின் கீழ் வாழும் தேனீக்களும் தேனை உற்பத்தி செய்து சேகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு முதல் மெக்சிக்கோவில் உள்ள National Autonomous பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கடல்படுக்கையில் காணப்படும் தாவரங்கள் தொடர்பான ஆராய்ச்சி ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன்போத…
-
- 1 reply
- 351 views
-
-
வந்துவிட்டது வாட்ஸ்அப்பின் வீடியோ கால்! எப்படி இருக்கிறது?#WhatsappVideoCall வாட்ஸ்அப் தனது புதிய வீடியோ காலிங் சேவையை சில நாட்களுக்கு முன்பு பீட்டா பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியது. சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இன்று அனைத்து பயனாளர்களுக்கும் மொத்தம் 180 நாடுகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் மற்றும் விண்டோஸ் ஆகிய மூன்று இயங்குதளங்களிலும் இந்த வீடியோ கால் வசதி இயங்கும். உங்கள் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்துவிட்டால் போதும். இந்த வசதியை நீங்கள் பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு 4.1 வெர்ஷன் முதலே இது இயங்கும். வழக்கம்போலவே நீங்கள் பேச விரும்பும் நபரை, கான்டேக்ட் லிஸ்டில் தேர்வு செய்து, கால் செய்யலாம். அப்போது வாய்ஸ…
-
- 3 replies
- 904 views
-
-
அப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மார்ட் முகம் பார்க்கும் கண்ணாடி ஸ்மார்ட்போனை ஆக்கிரமித்து வந்த அப்பிள் தற்போது ஸ்மார்ட் கண்ணாடிகள் எனும் தொழிநுட்ப கண்ணாடியை களமிறக்கியுள்ளது. அப்படி என்ன தொழில்நுட்பம் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளில் இருக்கின்றது? தற்போது தொழில்நுட்ப யுகத்தை ஆளும் அண்ட்ரொய்ட் தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்ணாடியை நம் முகம் பார்க்க பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஸ்மார்ட் கண்ணாடி நேரம், வானிலை போன்ற அனைத்து நிகழ்வுகளையும் அறியும் வகையில் மினி கணணியாக செயல்படுகிறது. இதில் ‘இன்டர்ஃபேஸ்’ எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதனை ரபேல் டைமெக் என்பவர் உருவாக்கியுள்ளார். நம் கணணியில் இருப்பது போலவே ஐகான்கள் கண்ணா…
-
- 0 replies
- 655 views
-
-
கன்னியாகுமரியில் கால்நடை பசுந்தீவனப் புரட்சி: நீலப்பச்சை பாசி தயாரிக்க 2 லட்சம் பேருக்கு பயிற்சி கன்னியாகுமரியில் இயற்கைவள அபிவிருத்தி திட்ட மையத்தில், அசோலா நீலப்பச்சை பாசி தயார் செய்வது குறித்து பயிற்சியளிக்கும் எஸ்.பிரேமலதா (இடது ஓரம்). கால்நடைகளுக்கு பசுந்தீவனமாக பயன்படும் அசோலா நீலப்பச்சை பாசியை உற்பத்தி செய்வது குறித்து, 2 லட்சத்துக்கும் மேற்பட் டோருக்குப் பயிற்சி அளித்து, ஓசையின்றி தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது கன்னியாகுமரியைச் சேர்ந்த இயற்கை வள அபிவிருத்தி மையம். கால்நடைகளுக்கான பசுந் தீவனங்களுக்குப் பெரும் தட்டுப் பாடு நிலவுவதால், கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர் களும், அவற்றை வளர்க்க முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சி…
-
- 0 replies
- 405 views
-
-
விஎல்சி 3.0-வில் என்ன அறிமுகமாகப்போகிறது தெரியுமா? #VLC3.0 விஎல்சி வீடியோ ப்ளேயரை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எந்த ஒரு கணினியிலும் அதன் இயங்குதளத்தில் தரப்பட்டிருக்கும் வீடியோ ப்ளேயரை தாண்டி இடம் பிடிப்பது விஎல்சி ப்ளேயராகத் தான் இருக்கும். பெரும்பாலான பயன்பாட்டாளர்களுக்கு பிடித்த இந்த ப்ளேயர் தனது புதிய வெர்ஷனான 3.0-வை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடவுள்ளது. இந்த விஎல்சி வீடியோ ப்ளேயரில் புதிய அப்டேட் என்னவென்றால் இது முதல் முறையாக ஒரு விடியோ ப்ளேயர் ஆப்பில் 360 டிகிரி வீடியோ சேவை வழங்கப்படவுள்ளது. இதன் முன்னோட்ட வெர்ஷன் ஒரு சில விண்டோஸ் மற்றும் மேக் தளங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் வெளியாக உள்ள இந்த வெ…
-
- 0 replies
- 399 views
-
-
ஐபோன் 8 ஸ்மார்ட்போனில் 3D கேமரா சமீபத்தில் நடந்த 2.0 பர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழாவில், '2.0 படமெடுக்கும் போதே 3டி கேமரா கொண்டு கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறோம்' என்றார் இயக்குநர் ஷங்கர். ஆனால் இனிவரும் காலங்களில் 3டி படங்களை செல்போனிலேயே எளிதாக படம் பிடிக்கலாம். அதற்கான முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம். செல்போனில் 3டி! திரையில் 3டி பார்த்து மகிழ்ந்தது போய் நாமே 3டி புகைப்படங்களும் வீடியோக்களுக்கும் எடுக்கலாம் என்ற எண்ணத்தில் தோன்றியவைதான் டூயல் கேமிராக்கள்.ஹெச்.டி.சி 1 போன்ற போன்களில் உள்ள டூயல் கேமராக்கள் எடுக்கும் புகைப்படங்கள் சற்றேறக்குறைய 3டி என்றாலும் முழுமையான் 3டி அல்ல! ஆப்பிள்-எல்.ஜி கூட்டணி? தற்போ…
-
- 0 replies
- 479 views
-
-
பிரிட்டனிலுள்ள நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை, இரண்டாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டளவில் மூட நினைப்பதாக பிரிட்டிஷ் அரசு கூறியுள்ளது. ஆகவே இங்கு மின்சாரத்துக்கு என்ன செய்வது? காற்றாலைகளே அதற்கு ஒரு தீர்வு. இங்கிலாந்தின் வடக்கு கடற்பரப்பில் நிர்மாணிக்கப்படும் மிகப்பெரிய காற்றாலை மின் உற்பத்திப் பண்ணைக்கு பிபிசி விஜயம் செய்தது. http://www.bbc.com/tamil/38095789
-
- 1 reply
- 495 views
-
-
செல்ஃபி ஸ்டிக் எல்லாம் பழசாம் பாஸ். AirSelfie தெரியுமா? ஸ்மார்ட் போன்களில் எவ்வளவோ அம்சங்கள் இருந்தாலும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தெரிந்த அம்சமும், மிகவும் விரும்பும் அம்சமும் Selfie தான். தன்னை தானே படம் எடுத்து கொள்வது என்று ஆரம்பித்து, நண்பர்களை தன்னுடன் இணைத்து எடுத்துக்கொள்ளும் க்ரூப் செல்ஃபி என்று வளர்ந்து... Selfie நம் சமூக வலைதளங்களில் காட்டிய வீச்சு மிகவும் வேகமானது. ஆரம்ப காலங்களில் Selfie எடுப்பதற்கு கையை ஒட்டடை அடிக்கும் கம்பு போல் தூக்கிக் கொண்டு திரிந்தோம், பின்பு Selfie Stick வந்து நம் கை வலியை சற்று குறைத்தது. ஆனால் அதிலும் ஒரே மாதிரியான ஆங்கிளில் படம் எடுக்க முடியும். அதுவும் க்ரூப் செல்ஃபி எடுக்க வேண்டும் எ…
-
- 0 replies
- 358 views
-
-
வீட்டுத்தோட்டம் நம்பி சாப்பிடலாம் ‘நன்னியோடு’ காய்கறிகள்... செயற்கை உரம், பிளாஸ்டிக் பைககளுக்குத் தடை... வீட்டுக்கு வீடு காய்கறி சாகுபடி கட்டாயம்... ஆயிரமும் ஐநூறும் செல்லாது என்று மோடி அறிவித்த மறுநாள் காலை திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெடுமண்காடு செல்லும் பேருந்து ஏறியிருந்தோம். ஏ.டி.எம்-மை நம்பியிருந்ததால் கைவசம் ரூ.60 மட்டுமே இருந்தது. பேருந்து கட்டணத்துக்கு மட்டுமே அது போதுமானது. கொலைப் பசி. இருவர் சாப்பிட வேண்டும். ஒரு நிறுத்தத்தில் கூடையோடு பேருந்தில் ஏறியவர், ‘‘இடியாப்பம், சுண்டல், ஆர்கானிக் அவியல் சாரே...” என்று கூவினார். மடிக் கணினி பையைக் கவிழ்த்துப்போட்டதில் கொஞ்சம் சில்லறைகள் தேறின. “நான்கு இடியாப்பம் 10 ரூவா, அவியல் 5 ரூவா... பிர…
-
- 9 replies
- 1.1k views
-
-
பேட்டரி பிரச்னை-இந்த முறை சிக்கியிருப்பது ஆப்பிள் திடீரென்று ஸ்விட்ச் ஆஃப் ஆகும் ஐஃபோன் 6s ஃபோன்களின் பேட்டரியை ஆப்பிள் நிறுவனம், இலவசமாக மாற்றித்தர உள்ளது. 2015ல் தயாரிக்கப்பட்ட சில ஐஃபோன் 6s மொபைல்களுக்கு இந்த சலுகை என்று கூறப்படுகிறது. ஐஃபோன் 6s ஃபோன்களில் சிலவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதே திடீரென்று ஸ்விட்ச் ஆஃப் ஆகி விடுகிறதாம். பிறகு சார்ஜ் செய்யப்படும் போது தான் பயன்படுத்த முடிகிறதாம். இந்த பிரச்னை சில 6s வகை ஃபோன்களில் இருக்கலாம் என்று ஒப்புக்கொண்ட ஆப்பிள் நிறுவனம், அந்த ஃபோன்களின் பேட்டரியை இலவசமாக மாற்றித்தர அழைப்பு விடுத்துள்ளது. இந்த விஷயம் பற்றி ஆப்பிள் நிறுவனம்,'2015ன் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் …
-
- 0 replies
- 321 views
-
-
குறைந்த தண்ணீர் தேவையைக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு சாகுபடிக்கு ஊக்குவிப்பு தேவைப்படுகிறது. மற்றொருபுறம் மரவள்ளிக் கிழங்கு மாவில் கலப்படத்தைத் தவிர்ப்பதும் அவசியமாகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் செ. நல்லசாமி இது தொடர்பாகக் கூறியதாவது: தமிழ்நாடு மழை மறைவு மாநிலம். சராசரியாக 920 மில்லிமீட்டருக்கும் குறைவான மழையே கிடைக்கிறது. நீர்வளத்துக்கு அண்டை மாநில ஆறுகளையே பெரிதும் நம்பியிருக்கிறோம். நீர்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில் பயிர் முறையை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி நல்லதொரு வாய்ப்பு. ஒரு ஏக்கர் கரும்புப் பயிருக்குத் தேவையான நீரைக்கொண்டு நான்கு ஏக்கரில் மரவள்ளிக் க…
-
- 1 reply
- 871 views
-
-
குப்பைமேடு பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள மூலிகைச் செடிகள். உத்திரமேரூர் பேரூராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் குப்பை மேடாக இருந்த பகுதி தற்போது வள மீட்பு பூங்காவாக உருமாறியுள்ளது. குப்பைகளை உரமாக மாற்றி விற்பனை செய்வதுடன், பல்வேறு மலர், காய்கறி மற்றும் மூலிகைச் செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. உத்திரமேரூர் பேரூராட்சியில் 27 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சிக்குச் சுற்றுலா மற்றும் பணி நிமித்தமாக தினசரி 3 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இந்த பேரூராட்சியில் நாள் ஒன்றுக்கு 6 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இந்த குப்பைகள் உத்திரமேரூர் அருகே உள்ள ஓர் இடத்தில் கொட்டப்படுவதால் அப்பகுதியை குப்பைமேடு என்கின்றனர…
-
- 0 replies
- 273 views
-
-
அடுத்த பசுமைப்புரட்சியை அடையாளம் கண்டிருப்பதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு பொருளாதார ரீதியில் வளரும் நாடுகளின் உணவு உற்பத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவல்லதொரு புரட்சிகரமான ஆய்வு முடிவுகளை தாம் அடையாளம் கண்டறிந்திருப்பதாக ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். விளைபயிர்களே உலக மக்களுக்கான உணவளிக்கின்றன. ஆனால் அதில் மிகப்பெரிய நெருக்கடி ஒன்று நெருங்கி வருகிறது. ஏற்கனவே வளர்ந்து வரும் நாடுகளில் பல லட்சம்பேர் பசியோடு வாழும் சூழலில் தொடர்ந்து வேகமாக அதிகரிக்கும் பல கோடி மக்களுக்கு எப்படி போதுமான உணவளிப்பது என்பது மிகப்பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. இதற்கான தீர்வாக சூரிய ஒளி மூலம் தாவரங்கள் சர்க்கரையை தயாரிக்கும் photosynt…
-
- 0 replies
- 318 views
-
-
நரம்பு மண்டல ரகசியங்கள் - தெரிந்துகொள்வோம் மனிதனின் நரம்பு மண்டலமே உடல் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அடிப்படையாக உள்ளது. மூச்சு விடுவது முதல் தசைகளின் அசைவுகளை கட்டுப்படுத்துவது, சூடு, குளிர் உணர்வது வரை அனைத்துக்கும் நரம்பு மண்டலமே காரணமாகின்றது. நரம்பு மண்டலம் கீழ்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது... தன்னிச்சையாக இயங்கும் நரம்பு பிரிவு: இருதயம், ரத்த அழுத்தம், செரிமானம், உடல் சூட்டினை சீராய் வைத்தல் இவற்றிற்குப் பொறுப்பாகின்றது. மோட்டார் நரம்பு பிரிவு: அசைவுகளையும், செயல்களையும் மூளையிலிருந்து தண்டுவடம் மூலமும் உடல் தசைகளுக்கு கொண்டு சென்று இயங்க வைக்கின்றது. சென்சரி (உணர்ச்சி) நரம்பு பிரிவு: தோல்,…
-
- 2 replies
- 2.3k views
-
-
எதிர்வரும் 14ம் திகதி சாதாரணமான பௌர்ணமி நிலவை விட 30 மடங்கு வெளிச்சத்தில் தோன்றும் நிலவை காணமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்பர் மூன் எனப்படும் இந்த பெரிய நிலவை 70 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் காண முடியும் இந்த சுப்பர் மூன் எனப்படுவது நிலாவானது பூமிக்கு மிக அருகில் காட்சியளிப்பதாகும். அந்த நேரத்தில் நிலவானது மிகவும் பிரகாசமாகவும், மிகப்பெரியதாகவும் தோற்றமளிக்கும். இந்த சுப்பர் மூன் 1948 ஆம் ஆண்டு தோன்றியதன் பின்னர் தற்போது காட்சியளிக்க உள்ளது. இந்த சுப்பர் மூன் வானில் எந்த அளவு தெளிவாகவும், பெரிதாகவும் இருக்கும் என்பதை நாசா தற்போது படமாக வெளியிட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/6378
-
- 5 replies
- 466 views
-
-
படமும் பார்க்கலாம்..பாடமும் படிக்கலாம்! #YouTubeKids உலகம் முழுக்க, வீடியோக்களுக்கு பெரும் வரவேற்பு பெற்ற தளமான யூ-டியூப் நிறுவனம் குழந்தைகளுக்கான யூ-டியூப் கிட்ஸ் (YouTube Kids) சேவையை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அந்த சேவையை சமீபத்தில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியுள்ளது யூ-டியூப் நிறுவனம். வழக்கமான யூ-டியூப்பே மிகப்பெரிய தகவல் களஞ்சியமாக விளங்கினாலும், அதில் சில நேரம் குழந்தைகள் வழிதவறி செல்லவும் வாய்ப்புண்டு. அதனை மனதில் வைத்து இந்த சேவையை உருவாக்கியுள்ளது அந்நிறுவனம். பள்ளியில் பாடம் மட்டுமே படிக்கும் உங்கள் சுட்டீஸ்களுக்கு, அனிமேஷன் படமும் பார்க்க உதவுகிறது இந்த Youtube kids. ஆப்பை முழுக்க முழுக்க குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தும…
-
- 0 replies
- 497 views
-
-
சாம்சங்கின் 'bendable phones'..!? சாம்சங் வெகு நாட்களாகவே புதிய வகை 'பெண்டபல் ஃபோன்களை' உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சில இணைய தளங்களில், பெண்டபல் ஸ்கிரீனுடைய சாம்சங் ஃபோன்களின் டிசைன் என்று சில படங்கள் வெளியாகியுள்ளது. இது சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், அந்நிறுவனத்தின் ஃபோனின் டிசைன் தான் இது என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுவரை ஸ்க்ரீனை மடிக்கும் படியான வடிவுள்ள ஃபோன்கள் வராத நிலையில், இந்த ஃபோன்கள் வந்தால், மொபைல் தொழில்நுட்பத்தின் அடுத்த நிலை என்று கூறப்படுகிறது. இந்த ஃபோன்கள் 2017ல் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில், சாம்சங் நிறு…
-
- 0 replies
- 337 views
-
-
திருப்பூர்:எலி, அணில்களிடம் இருந்து, தேங்காய்களை காப்பாற்ற, தென்னை மரங்களுக்கு அலுமினியத்தில் வளையம் அணிவித்து, புதிய வழிமுறையை விவசாயி, அறிமுகப்படுத்தி உள்ளார்.திருப்பூர், கோவை மாவட்டங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தென்னை மரத்தில் உள்ள குரும்பைகளை எலிகள் மற்றும் அணில்கள் கடித்து, சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், தேங்காய், காய் பிடிக்காது. இதற்கு தீர்வு காணும் பொருட்டு, திருப்பூர், மாணிக்காபுரத்தை சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணியம் என்பவர், தென்னை மரங்களில், இரண்டு அடி உயரத்துக்கு, அலுமினியத்தால் செய்யப்பட்ட வளையத்தை, மரத்தை சுற்றிலும், பட்டையாக மாட்டினார். இதனால், மரத்தில் போதிய பிடிப்பு கிடைக்காமல், வழுக்கு வதால், மர எலி, அணில் உள்ளிட்டவை மேலே ஏற முடியாது. அ…
-
- 1 reply
- 1.2k views
-