அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
கேமராவில் எடுத்த புகைபடங்களை மொத்தமாக ரீசைஸ் செய்ய Digital கேமராவில் எடுத்த புகைப்படங்கள் அளவில்(Size) பெரிதாக இருக்கும்.அது போன்ற புகைப்படங்களை அதன் Quality மாறாது சிறிய அளவாக மாற்ற(Resize) இந்த மென்பொருள் உதவுகிறது.ஏற்கனவே சிறிய அளவாக மாற்றும்(Resize)Riot என்ற மென்பொருள் பற்றி பதிவிட்டுள்ளேன்.ஆனால் அந்த மென்பொருளில் ஒவ்வொரு படமாக தான் மாற்ற இயலும்.இந்த மென்பொருளில் மொத்தமாக பல படங்களை நிமிடங்களில் சிறிய அளவாக மாற்றலாம். உங்கள் படங்கள் இருக்கும் போல்டரை தேர்வு செய்து Add என்ற பட்டனை கிளிக் செய்து வலப்புறம் கொண்டு செல்க.பல படங்கள் இருக்கும் போல்டர்கள் கூட தேர்வு செய்து கொள்ளலாம்.பின் உங்களுக்கு தேவையான பட பார்மட்(format- .jpg,.png,.gif) தேர்வு செய்து Convert என்பத…
-
- 0 replies
- 540 views
-
-
சன்ஷேடில் இருப்பது மழைநீரை வடிகட்டும் ஃபில்ட்டர். தண்ணீருக்காக மக்கள் ஆலாய் பறக்கிறார்கள். ஆனால், இயற்கை கொடையாய் கொடுக்கும் மழை நீரைச் சேமித்து 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார் ‘மழைநீர்’ வரதராஜன். இந்தக் காலத்துக்கு மிகமிக அவசியமான நபர். திருவாரூரைச் சேர்ந்தவர். பொதுப்பணித் துறையின் நீரியல் கோட்டத்திலும் நிலநீர் கோட்டத்திலும் 30 ஆண்டுகள் பொறியாளராக இருந்தவர். அதனால், மழைநீரின் அருமை புரிந்தவர். இவர் அமைத்துக் கொடுத்திருக்கும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் 2500-க்கும் அதிகமான இடங்களில் பயன்பாட்டில் உள்ளன. அதுபற்றி நம்மிடம் பேசுகிறார் வரதராஜன்.. தண்ணீர் தரத்தில் 120-வது இடம் …
-
- 0 replies
- 400 views
-
-
தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி சுந்தர் வேதாந்தம் தொடர்பு செயலிகள் (Communication Processors) மற்றும் திசைவி (Router) சாதனங்களின் வளர்ச்சி என்பது ஒரு விரிவுரை வழங்கவோ அல்லது ஒரு வெண்பலகை விவாதம் நடத்தவோ ஏற்ற சுவையான தலைப்பு. அதற்கு பதிலாக ஒரு சொல்வனம் கட்டுரை தொடர் வடிவில் அதனை இங்கே அலசிப்பார்ப்போம். பக்கத்து படத்திலிருக்கும் ஒரு வயது கூட ஆகாத புத்தம் புதிய தொடர்பு செயலியைப்பற்றி எழுதுவதற்கு முன்னேற்பாடாக அதன் கொள்ளு, எள்ளு தாத்தா பாட்டிகளை எல்லாம் தாண்டிப்போய் ஒரு இருபத்தி ஐந்து தலைமுறைகளுக்கு முன்னால் வந்த சிலிக்கன் சில்லுகளைப்பற்றி முதலில் ஒரு மலரும் நினைவுகள் நடத்த வேண்டும். அது ஒரு நல்ல அஸ்திவாரம் அமைத்துக்கொடுத்து புதிய செயலிகளை புரிந்து கொ…
-
- 5 replies
- 5.4k views
-
-
இந்தியாவின் தேயிலை உற்பத்தி 2013-14-ம் நிதி ஆண்டில் 8 சதவீதம் அதிகரித்து 122.44 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் தேயிலை விளைச்சல் அதிகரித்ததே உற்பத்தி உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். 2012-13-ம் நிதி ஆண்டில் தேயிலை உற்பத்தி 113.50 கோடி கிலோவாக இருந்தது என்று தேயிலை வாரியம் வெளியிட்ட குறிப்பு தெரிவிக்கிறது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் மட்டும் தேயிலை உற்பத்தி 6.52 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்விரு மாநிலங்களில் உற்பத்தியான தேயிலை அளவு 98 கோடி கிலோவாகும். முந்தைய ஆண்டு இவ்விரு மாநிலங்களின் உற்பத்தி 92 கோடி கிலோவாக இருந்தது. இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பங்களிப்பு 80 சதவீத அளவுக்கு உள்ளது. http…
-
- 1 reply
- 569 views
-
-
புகைப்படக்கருவியிலிருந்து நேரடியாக இணையத்திற்க்கு படங்களை அனுப்புவது பற்றி அறிய தர முடியுமா.சிம் காட் போடக்குடிய கமராக்கள் உள்ளன. அவை பற்றிய தகவல்களும் தேவை நன்றி.
-
- 2 replies
- 769 views
- 1 follower
-
-
இலங்கையின் புகையிலை விவசாயிகளுக்கான நிலையான விவசாய செயற்திட்டமொன்றை 2013 ஆம் ஆண்டில் சிலோன் டொபாக்கோ கம்பனி பிஎல்சி அறிமுகம் செய்திருந்தது. இந்த திட்டத்தின் ஊடாக, விவசாயிகள் மத்தியில் சிறந்த விளைச்சல் நிர்வாக நுட்பங்கள், தேசிய உணவு உற்பத்தியில் அவர்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் தமது சொந்த போஷாக்கு தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள மரக்கறி செய்கைகளை முன்னெடுக்க ஊக்குவிப்பது போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது. சிலோன் டொபாக்கோ கம்பனியின் சமூக பொறுப்புணர்வு செயற்திட்டமான நிலையான விவசாய அபிவிருத்தி திட்டத்தின் அங்கமாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. SADP Ultra திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தமது மேலதிக விளைச்சல்களை விற்பனை செய்து, த…
-
- 0 replies
- 2.3k views
-
-
அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல தேடல் இயந்திரமான கூகுள் சர்வதேச தரப்படுத்தலில் முதற்தர நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மில்வர்ட் பிரவுன் என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட் ஆய்வுகளின் பிரகாரம் பெறுமதியின் அடிப்படையில் கூகுள் முதலிடத்தை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் நூறு நிறுவனங்களின் விபரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் 158.84 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக பெறுமதியை கூகுள் கொண்டுள்ளதுடன் 147.88 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியை கொண்டு அப்பிள் நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. ஐபிஎம் நிறுவனம் 107.54 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியையும் மைக்ரசொப்ட் நிறுவனம் 90.19 அமெரிக்க டொலர் பெறுமதியையும் கொண்டு மூன்றாம் நான்காம் இடங்களை…
-
- 0 replies
- 470 views
-
-
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான யானைக் குட்டியின் உடல் இதுதான். அகழ்வாராய்ச்சியில் அபூர்வமான பொருட்கள் கிடைப்பது ஆச்சரியமான விஷயம் இல்லை. அந்தக் குட்டியானையின் உடல் இப்போது லண்டனிலுள்ள இயற்கை உயிரின அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.ஆனால் எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் 42,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மேமோத் எனப்படும் மாமத யானை அல்லது கம்பளி யானை என்று அழைக்கப்படும் உயிரினத்தின் முழுமையான உடல் ஒன்று கிடைத்துள்ளது அதிசயம் மட்டுமல்லாமல் ஆச்சரியமானதும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சைபீரியாவில் பனிப்பகுதிகளில் அலைந்து திரியும் மான்களை மேய்க்கும் ஒருவரால் இந்த யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது 50 கிலோ எடையும் 130 செ மீ உயரமும் இருக்கிறது. …
-
- 0 replies
- 586 views
-
-
தென் துருவக் கண்டத்தில் பனி உருகி ஆறுகள் பெருக்கெடுக்கெடுப்பதென்பது அதிகரித்துவருகிறது. புவியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா கண்டத்தின் பனிப் படலம் மொத்தத்தையும் மதிப்பீடு செய்துள்ள புதிய ஆய்வு ஒன்று, தற்போது ஒவ்வொரு ஆண்டும் 160 பில்லியனன் டன்கள் எடையளவுக்கு இக்கண்டம் பனிக்கட்டியை இழந்துவருகிறது என்று தெரிவித்துள்ளது. அதனால் கடல் மட்டம் உயருவதற்கும் கரையோர சமூகங்கள் பாதிக்கப்படுவதற்குமான ஆபத்து அதிகரித்துவருவதாக ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. பனிப் படலத்தின் மாறும் வடிவத்தை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ராடார் கருவியின் உதவியுடன் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் கிரியோசாட் செயற்கைக்கோள் இந்த ஆய்வை மேற்கொண்டது.நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட …
-
- 0 replies
- 591 views
-
-
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற பழக் கண்காட்சியில் நீலகிரிக்கே உரித்தான மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்கள், திசு வாழை ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் பார்த்து வியப்படைந்தனர். குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 56-வது பழக் கண்காட்சி சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அரசு தோட்டக்கலைத் துறை மற்றும் தனியார் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பழக் கண்காட்சியில் நீலகிரிக்கே உரித்தான மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. குன்னூரைச் சேர்ந்த கோபி என்பவர் நீலகிரியில் விளையும் அரிய வகைப் பழங்களை காட்சிக்கு வைத்திருந்தார். நோய்களுக்கு நிவாரணி நான்கு அடி உயரம் மட்டுமே வளரும் மலை வாழை, காட்டு வேடன், வெள்ளரி, பன்னீர் கொ…
-
- 0 replies
- 492 views
-
-
ஆர்ஜென்டீனாவில் மிகப் பெரிய டைனோசர்களின் எலும்புக்குகூட்டுத் தொகுதி நேற்று சனிக்கிழமை (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் எச்சங்களில், இதுவே உலகில் வாழ்ந்த டைனோசர்களில் மிகவும் பெரிய டைனோசர்களின் எலும்புக்ககூட்டுத் தொகுதி என தெரிவிக்கப்படுகின்றது. இந்த டைனோசர் இனத்தில் உள்ளவை ஒவ்வொன்றும் சுமார் 77 டன்கள் எடை கொண்டதாக இருந்திருக்கும் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது. குறித்த டைனோசர்கள் ஒவ்வொன்றும் 130 அடி (40 மீற்றர்) நீளமும் 65 அடி அகலமும் உடையது என கணிப்பட்டுள்ளது. 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாவர உன்னி டைனோசர்களாக இவை இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.9 இந்த மிகப்பெரிய டைனோசர் எச்சங்களை கண்டுபிடித்தமை பற்றி, ஆர்ஜன்டீனாவி…
-
- 0 replies
- 694 views
-
-
கொடிகட்டிப் பறந்த சோனி நிறுவனம் பெரும் நஷ்டத்தில்! கடந்த ஆண்டு 1.3 பில்லியன் டாலர்கள் நஷ்டம் [Wednesday, 2014-05-14 21:57:16] உலகளவில் ஒரு காலத்தில் மின்னணு வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த ஜப்பானிய நிறுவனமான சோனி, கடந்த ஆண்டு 1.3 பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணியின் போது, கணினி அதாவது பர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பிலிருந்து வெளிவருவது என்று எடுக்கப்பட்ட முடிவே இந்த அளவுக்கு பெரும் நஷ்டத்துக்கு காரணம் என, விளையாட்டுக்கு பயன்படும் ப்ளேஸ்டேஷன்களைத் தயாரிக்கும் சோனி கூறுகிறது. நடந்து செல்லும்போதோ அல்லது பயணத்தின் போதோ இசையைக் கேட்டவாறு செல்லவதற்கு வசதியாக, சோனி நிறுவனம் அறிமுகப்படுத்திய வாக்மேன்,…
-
- 4 replies
- 728 views
-
-
காரணமே இல்லாமல் காடுகளை அழித்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், காரணத்துடன் ஒரு காட்டையே வளர்த்துக் கொண்டிருக்கிறார் மரியசெல்வம். புதுக்கோட்டை - ஆலங்குடி சாலையில் இவர் உருவாக்கி இருக்கும் காட்டுக்கு பெயர் ‘சுகவனம்’. இந்த சுகவனத்தில் உள்ள அரிய வகை மூலிகைகள் மற்றும் மரங்களைப் பார்த்து பலரும் வியக்கின்றனர். அரிய வகை மரங்களைப் பார்வையிடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இங்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி உருவானது இந்த சுகவனம்? மக்கள் விவசாய பண்ணையின் நிறுவனர் - செயலாளரான மரியசெல்வம் விவரிக்கிறார்... உணவு உற்பத்திக்கான செயல் திட்ட (Action For Food Production) அமைப்பிலிருந்து எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நீர் வடிபகுதி திட்ட…
-
- 0 replies
- 469 views
-
-
மொபைல் கேமராவிற்கு, 15 ஆண்டுகளுக்கு முன்பே, சாப்ட்வேர் கண்டு பிடித்து, நோக்கியா நிறுவனத்திற்கு தந்த தமிழன், சங்கர் நாராயணன்: அமெரிக்காவில் உள்ள, சிலிக்கான் வேலி என்ற பகுதி தான், உலக கம்ப்யூட்டர் தொழில்நுட்ப புரட்சியின் நடுமையம் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியர் களின் கனவு பிரதேசம். இது போன்ற பகுதியை, தங்கள் நாட்டிலும் அமைக்க பல நாடுகள் முயன்றன. ஆனால், இதுவரை யாராலும் நிறைவேற்ற முடியவில்லை.சிலிக்கான் வேலியின் பார்வை தான், அதன் வெற்றிக்கு முக்கிய காரணம். ஏனெனில், எந்த தொழில் என்றாலும், அதை ஏன் நாமே சொந்த மாக செய்யக் கூடாது என்பது தான், அங்கு நிகழ்ந்த மாற்றத்தின் முதல் படி.இந்த மாற்றம், நம் நாட்டில் நடக்க, முதலில் நம் கல்விமுறையும், சிந்தனை போக்கும் மாற வேண்டும். 'படித்து விட்…
-
- 0 replies
- 634 views
-
-
சூரிய மண்டல எல்லைக்கு அப்பால் ஒரு “பழுப்புக் குள்ளன்” இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழுப்புக் குள்ளன் எங்கே உள்ளது என்பதைக் காட்டும் படம். சூரிய மண்டலத்தின் எல்லைக்கு அப்பால் மேலும் ஒரு “பழுப்புக் குள்ளன்” (Brown Dwarf) இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதென்ன பழுப்புக் குள்ளன்? நிச்சயம் அது மனிதன் இல்லை. அது ஒரு நட்சத்திரமா? இல்லை. அது ஒரு கிரகமா? அதுவும் இல்லை. அப்படியானால் அது தான் என்ன? நிலவற்ற நாளில் இரவில் வானைப் பார்த்தால் எண்ணற்ற நட்சத்திரங்கள் தெரிகின்றன. பல நூறு கோடி கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து நமது சூரியனைப் பார்த்தால் சூரியனும் ஒளிப்புள்ளியாக அதாவது நட்சத்திரமாகத்தான் தெரியும். சூரியன் மற்ற நட்சத்திரங்களைப் போல ஒரு ந்ட்சத்திரமே. …
-
- 1 reply
- 714 views
-
-
1,000 வருடங்களுக்கு முன்னர் உங்களது மூதாதையர்கள் எங்கிருந்தார்கள் என அறிந்துகொள்வது இலகுவானதொரு விடயமல்ல. ஆனால் உங்களை உங்கள் மூதாதையர்களின் இடத்திற்கு வழிகாட்டும் சாதனம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்காக அதி தொழில்நுட்பத்திலமைந்த புவியியல் குடித்தொகை அமைப்பு (ஜோகிரபிக் பொபியூலேஷன் ஸ்ரக்சர்) எனும் ஜீ.பி.எஸ் எனப்படும் இணையத்த டூல் ஒன்றினை விஞ்ஞானிகள் மேம்படுத்தியுள்ளனர். இச்சாதனத்தின் மூலம் உங்களது மரபணு எங்கே எந்த கிராமத்தில் உருவானது என கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் உங்களது மூதாதையர்களின் இடத்தினை கண்டுபிடிக்க முடியும். இதற்கு முன்னர் எந்த இடத்தில் உங்களது மரபணு உருவானது என 700 கிலோ மீற்றர்களுக்கு உட்பட்ட பிரதேசத்திலே கண்டுபிடிக்க முடியுமாக இருந்…
-
- 1 reply
- 604 views
-
-
ந.கீர்த்தனா தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா? முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம். தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது. யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்ட…
-
- 1 reply
- 831 views
-
-
360 பாகையில், போட்டோ எடுக்கலாம். இதோ கேமரா வந்தாச்சு. இன்றைக்கு டென்னாலஜியானது மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டே வருகிறது எனலாம், அதன்படி தற்போதைய புதிய வரவு ஒரு கேமராங்க. இந்த கேமராவின் ஸ்பெஷல் என்னவென்றால் அதாவது இந்த கேமரா 360 டிகிரி சுழன்று படம் எடுக்கும். ஏற்கனவே மொபைல்களில் தான் ஆப்ஷன் Panaroma மோட் இருக்கே இதுல என்ன ஸ்பெஷல்னு நீங்க கேக்கலாம். இதுல ஸ்பெஷல் இருக்குங்க மொபைலில் உள்ள Panaroma மோடில் நீங்கள் உங்க மொபைலை 360 டிகிரிக்கு சுழற்ற வேண்டும் ஆனால் இதில் அப்படி செயய்த் தேவையில்லை. இது ஆட்டோமேட்டிக் மோடில் செயல்படும் மற்றும் இது செக்யூரிட்டி கேமராவாகவும் இதனை பயன்படுத்தலாம். விரைவில் இந்த கேமரா அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தப்பட் உள்ளது இதோ அ…
-
- 0 replies
- 787 views
-
-
மூப்படைவதால் உடலில் ஏற்படும் தாக்கங்களை எதிர்காலத்திலே ஒரு நாள் நம்மால் கட்டுப்படுத்திட முடியும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மூப்பான சுண்டெலிகளுக்கு இளம் சுண்டெலிகளின் ரத்தத்தை செலுத்தி ஆய்வுகளை நடத்திய நிலையில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். தொடர்புடைய விடயங்கள் உடல்நலம் அவ்வாறாக ரத்தம் செலுத்தப்பட்ட வயோதிக சுண்டெலிகளின் மூளைத் திறனும் செயற்பாடுகளும் மேம்பட்டதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இயற்கையான ரசாயனங்களின் பலனால் மூப்படைந்தவர்களின் மூளையிலும் புதிய உயிர்க்கலங்கள் உற்பத்தியாகலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சுண்டெலிகளில் செய்யப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி மனிதர்களிடத்திலும் இனி மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆய்வை வழிநடத்திய மருத்துவர் டோனி வி…
-
- 4 replies
- 878 views
-
-
சென்னை: சென்னையில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையில், நகர் முழுவதும் 1,000 கி.மீ., துார சாலைகளில், 50 ஆயிரம் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. போதுமான நீர்நிலைகள் இல்லாத நிலையில், ஆறுகளும் கடுமையாக மாசடைந்துள்ளதால் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் உள்ளது. 20 மீ., இடைவெளியில்... நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கவும், சாலைகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சென்னை நகர சாலைகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில், 5,000…
-
- 4 replies
- 822 views
-
-
பாரம்பரிய நெல் வகையை பயிரிட்டு, ஏக்கருக்கு, 30 மூட்டை மகசூலை பெற்று சாதித்த, 33 வயது பட்டதாரி, கருணாகரன்: நான், விருதுநகர் மாவட்டம், வத்றாப்கொடிக்குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவன். விவசாயத்தில் எனக்கு, 'ரோல் மாடல்' எங்கம்மா பங்கஜவள்ளி தான். பள்ளியில் படிக்கும் போதே, தோட்டம், வயல் வேலைகளில் ரொம்ப விருப்பம். அதனால், பி.ஏ., வரலாறு முடித்ததும், முழு நேர விவசாயி ஆனேன். நம் முன்னோர், 10 ஆயிரத்திற்கும் மேம்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட்டு வந்தனர். ஆனால், நவீன வேளாண்மை என்ற பெயரில், இன்று அனைத்தும் அழிந்து விட்டன. இதற்கு காரணம், அதிக மகசூலும், லாபமும் இல்லை என்ற, 'சால்ஜாப்பு' தான். ஆனால், இவற்றில் உண்மை இல்லை. முறையாக விவசாயம் செய்தால், அனைவரும் நல்ல லாபம் ஈட்டலாம். சவாலுக்காக …
-
- 1 reply
- 2.6k views
-
-
சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் தள்ளுவண்டி ஜூஸ் கடை புதுச்சேரியில் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் தள்ளுவண்டி ஜூஸ் கடை அனைவரையும் கவருகிறது. விழுப்புரம் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ், புதுச்சேரி கருவடிகுப்பம் முத்தமிழ் வீதியில் வசிக்கிறார். கருவடிக்குப்பம் கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக சூரிய ஒளி மின்சக்தியால் இயங்கும் சோலார் தள்ளுவண்டி ஜூஸ் மற்றும் குளிர்பானக் கடையை அமைத்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் கூறியதாவது: ஜூஸ் போடுவதற்கு தேவையான மின்சாரத்தை சோலார் மூலம் எடுக்க இயலும், தனியார் நிறுவனம் அமைத்து தந்துள்ளது. 3 சோலார் பேனல்கள் தள்ளுவண்டி மேலே பொருத்தப்பட்டுள்ளது. தள்ளுவண்டியில் குளிர்சாதன பெட்டி, மின்விளக்கு, மின்சாரத்தை சேமிக்கும் பேட்ட…
-
- 1 reply
- 686 views
-
-
முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீனாவைச் சேர்ந்த தனியார் கம்பனியொன்று தினசரி 10முழுமையான வீடுகளை உருவாக்கி வருகிறது. அந்தக் கம்பனியானது 10 மீற்றர் நீளமும் 6.6மீற்றர் அகலமும் உடைய முப்பரிமாண அச்சிடும் கருவியைப் பயன்படுத்தி சீமெந்து மற்றும் நிர்மாண கலவையை படலம் படலாக விசிறி இணைப்புக்களைக் கொண்டதாக சுவர்களை உருவாக்குகிறது. மேற்படி வீடுகளை உருவாக்குவதற்கு குறைந்த அளவான நிர்மாணப் பணியாளர்களே தேவைப்படுகின்றனர். ஒவ்வொரு வீடும் 5000 டொலருக்கும் குறைவான செலவில் உருவாக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களால் வழங்கப்படும் இலத்திரனியல் ரீதியாக எந்த வீட்டு வடிவமைப்புக்கும் ஏற்ப தாம் வீடுகளை அச்சிட்டு வழங்குவதாக தெரிவித்த வின்சன் கம்பனியின் தலைமை நிறைவேற்றதிகா…
-
- 0 replies
- 483 views
-
-
அகர் மரம் வளர்ப்பு. "செலவில்லாமல் வருமானம் பெறலாம்!' உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள, அகர் மரம் வளர்ப்பு குறித்து கூறும் தர்மேந்திரா: என் சொந்த ஊர், கர்நாடகாவின் சிக்மகளூர். பரம்பரையாக, விவசாயம் தான் பார்த்து வருகிறோம். இதனால், எனக்கு சிறு வயதிலிருந்தே விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம். அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று, விவசாயம் சார்ந்த புதிய உத்திகளையும், தொழில்நுட்பங்களையும், புது ரகச் செடிகளையும் இந்தியாவிற்குக் கொண்டு வந்து பயிரிடுவேன். அப்படி ஒருமுறை இந்தோனேசியாவிற்குச் சென்ற போது, அங்குள்ள விவசாயிகள் பெரும்பாலானோர், அகர் மரத்தைப் பயிரிட்டு, அதிக லாபம் அடைந்து வருவதை அறிந்தேன். அதை பயிரிட எனக்கும் ஆர்வம் ஏற்பட்டு, முதலில், குறைந்த செடிகளை மட்டும் வாங்கி வந்து, எங்கள…
-
- 2 replies
- 38.8k views
-
-
நீர்நிலைகளில் மிதவை தாவரமாக வளரும் பெரணி வகையைச் சேர்ந்தது, "அசோலா'. இலைகளில் ஒட்டி வளரும். "அனபீனா' என்ற நீலபச்சை பாசி உதவியுடன், காற்று மண்டலத்தில் உள்ள தழைச்சத்தை உட்கிரகித்து, வளரும் தன்மையுடையது. நெற்பயிருக்கு சிறந்த உரமாகும். கால்நடைகள், கோழிகளுக்கு சிறந்த புரதச்சத்தாக இருப்பதால், தீவனச்செலவை கணிசமான அளவு குறைக்கும். இதில் 25 - 27 சதவீத புரதச்சத்து, 15 சதவீத நார்ச்சத்து, 3 சதவீத கொழுப்புச்சத்து, 45- 50 சதவீத மாவுச்சத்து மற்றும் தாதுஉப்புகள் உள்ளன. தாவர இலைகளில் காணப்படும் "டானின்' என்ற நச்சு, அசோலாவில் மிககுறைவாக இருப்பதால், மரபுசாரா தீவனப்பயிராக விளங்குகிறது. ஒரு எக்டேர் நிலப்பரப்பில் எளியமுறையில், ஓராண்டில் 70 - 80 டன் உலர்தீவனத்தை உற்பத்தி செய்யலாம…
-
- 1 reply
- 1.7k views
-