செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
அப்பாவின் உயிரை காத்த ஐந்து வயது சிறுவன். மேற்கு பிரான்சில், மாரடைப்பினால் மயங்கிவிழுந்த தனது தந்தையை காப்பாற்றுவதற்காக, ஐந்து வயது சிறுவன் ஒருவன், இரவு நேரத்தில், மழையில் நனைந்துகொண்டே நீண்டதூரம் சைக்கிளில் சென்றுள்ளான். அப்பாவின் உயிரை காத்த ஐந்து வயது சிறுவன் கெவின் என்ற அந்த சிறுவன், பல கிலோமீட்டர் தள்ளியுள்ள சான் பியே கோ என்ற சிறிய கிராமத்தில் வேலை செய்யும் அவனது தாயாரை அழைக்க முயன்றுள்ளான். வாகன ஓட்டுனர் ஒருவர், அந்த சிறுவனைக் கண்டு, அவசர உதவிச் சேவையை அழைத்துள்ளார். அவர்கள் அந்த சிறுவனின் வீட்டை தேடிப்பிடித்து, மாரடைப்பால் மயக்கமுற்ற அவனது தந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த சிறுவனின் முயற்சியால் அவனது தந்தை உயிர் பிழைத…
-
- 2 replies
- 629 views
-
-
ஒபாமாவின் வளர்ப்பு நாயை கடத்த முயன்றவர் கைது! வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வளர்ப்பு நாயை கடத்த, காரில் ஆயுதங்களுடன் வந்த நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஒபாமா, போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட 2 உயர் ரக நாய்க் குட்டிகளை வளர்த்து வருகிறார். அவற்றுக்கு ‘போ’ மற்றும் ‘சன்னி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த நாய்க்குட்டிகளில் ஒன்றை கடத்த இளைஞர் ஒருவர் ரகசியமாகத் திட்டமிட்டார். ஒபாமாவின் மனைவி மிச்செல், அந்த நாய்க் குட்டிகளை வெளியே ’வாக்கிங்’ அழைத்து வருவதையும் அவர் கண்காணித்து வந்தார். இந்நிலையில், அந்த இளைஞர் காருடன் நின்று கொண்டிருந்தபோது சந்தேகமடைந்த போலீஸார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் ஸ்…
-
- 3 replies
- 380 views
- 1 follower
-
-
மும்பை, மராட்டிய மாநிலம் பேண்ட்ஸ்டாண்ட் என்ற பகுதியில் உள்ள கடற்கரையில் செல்பி எடுக்க ஆசைப்பட்டு கடலில் விழுந்த கல்லூரி மாணவியை காப்பாற்ற முயன்ற வாலிபரையும் அலை இழுத்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலம் பேண்ட்ஸ்டாண்ட் என்ற பகுதியில் கல்லூரி மாணவிகள் 3 பேர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது பாறையின் மீது ஏறி செல்பி எடுக்க பின்னால் சென்ற கோவந்தி என்ற மாணவி கால் தவறி கடலில் விழுந்தார். இதனை கண்டு மாணவியை காப்பாற்ற ரமேஷ் என்பவர் கடலில் குதித்துள்ளார்.அவரையும் கடல் அலை இழுத்து சென்றது, கடலில் விழுந்த இருவரையும் தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். http://www.dailythanthi.com/News/India/2016/01/09162713/Mumbai…
-
- 0 replies
- 159 views
-
-
குரங்கு தானே எடுத்த ‘செல்பி’க்கு பதிப்புரிமை வழங்க முடியாது: ‘பீட்டா’ தொடர்ந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு ஒரு குரங்கு தானே எடுத்துக் கொண்ட புகழ்பெற்ற புகைப்படத் துக்காக (செல்பி) அந்த குரங்குக்கு பதிப்புரிமை வழங்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள வனப்பகுதியில் ஆய்வாளர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் அங்கு வசிக்கும் நருடோ என்ற ஆண் குரங்கு பற்றிய விவரங்களையும் அவர்கள் சேகரித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு நருடோ மிகவும் பரிச்சயமாக விளங்கியது. இந்நிலையில், 2011-ல் ஆய்வுக்காக வந்திருந்த வனவிலங் குகள் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனத்தின் புகைப்படக் கல…
-
- 2 replies
- 984 views
-
-
மெக்சிகோ நகரை சேர்ந்தவர் லிஸ்பெத் ஜெரோனிமா புயுண்டெஸ் முன்குயா (வயது 18 ) இவர் அகோல்மேன் பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். வீட்டில் தனது 4 மாத பெண் குழந்தையை கட்டிலில் தூங்க வைத்து விட்டு பூட்டி விட்டு ஒடுமா நகராட்சியில் நடைபெற்ற ஒரு டான்ஸ் பார்ட்டியில் கலந்து கொள்ள சென்று இருந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது. இது குறித்து பக்கத்து வீட்டு பெண்மணி லிஸ்பெத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளார். லிஸ்பெத் வேகமாக ஓடி வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார் தனது குழந்தையை சுற்றி எலிகள் மொய்த்து கொண்டு இருந்தது. உடனடியாக குழந்தையை தூக்கினார். குழந்தையின் முகம்,கால் விரல்கள் முழுவதும் ரத்தமாக இருந்தது. எலிகள் குழந்தையின…
-
- 0 replies
- 201 views
-
-
இந்திய அறிவியல் மாநாட்டில், இந்துக் கடவுளான சிவன் உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல்வாதி என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று தெரிவு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். அந்த மாநாட்டில், ”கடவுள் சிவன்: உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல்வாதி" என்ற தலைப்பில் கட்டுரை அனுப்பப்பட்டுள்ளது. மத்தியபிரதேச தனியார் பல்கலைக் கழக ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மனும் தாவரவியல் துறை ஆராய்ச்சியாளருமான அகிலேஷ் கே.பாண்டே இந்த கட்டுரையை அனுப்பியுள்ளார். மேலும் அந்த கட்டுரை சொற்பொழிவுக்கு தெரிவு செய்யப்பட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது. …
-
- 0 replies
- 455 views
-
-
கிரிக்கெட் போட்டியின்போது ஆபாச படம் பார்த்த நிருபர் கைது! January 7, 2016 10:30 am ஸ்போர்ட்ஸ் நிருபர் ஒருவர் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் தனது லேப்டாப்பில் ஆபாச படம் பார்த்து சிக்கியுள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அப்போது ஸ்போர்ட்ஸ் நிருபர் ஒருவர் ஆண் மற்றும் பெண் செய்தியாளர்கள் மத்தியில் அமர்ந்து போட்டியை பார்த்துள்ளார். போட்டி நடந்து கொண்டிருக்கையில் அவர் தனது லேப்டாப்பில் ஆபாச படம் பார்த்துள்ளார். இதை கண்டுபிடித்த கிரிக்கெட் மைதான அதிகாரி ஒரு…
-
- 0 replies
- 346 views
-
-
சன்ட்விச் தேடிய பெண்ணிடம் ஆணுறுப்பை காட்டிய கெய்ல் பசியோடு சான்ட்விச் தேடிய பெண்ணை பார்த்து "இதைத்தான் தேடுகிறாயா" என கேட்டபடி தனது இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து ஆணுறுப்பை காண்பித்துள்ளார் மேற்கிந்தியத் தீவகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது. இதன் போது மேற்கிந்தியத்தீவுகள் வீரர்களுக்கு உதவி செய்வதற்காக அவுஸ்திரேலியப் பெண்மணி ஒருவரும் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார். இந்நிலையில் சம்பவதினத்தன்று மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர்களின் உடைமாற்றும் அறைக்குள் அந்தப் …
-
- 4 replies
- 379 views
-
-
2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் கிடைக்கும் பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. இதைப்போன்ற சிறப்பு இன்னும் 823 ஆண்டுகளுக்கு பிறகுதான் மீண்டும் வரும் என்ற நிலையில் அந்த சிறப்புகள் என்னவென்று அறிந்து கொள்வோமா..? மொத்தம் 29 நாட்களே கொண்ட இந்த மாதத்தில் மட்டும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள், ஐந்து திங்கட்கிழமைகள், நான்கு செவ்வாய்க்கிழமைகள், நான்கு புதன்கிழமைகள், நான்கு வியாழக்கிழமைகள், நான்கு வெள்ளிக்கிழமைகள், நான்கு சனிக்கிழமைகள் ஆகியவை இடம்பெறுகின்றன. அடுத்து இதேபோன்றதொரு லீப் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இதைப்போன்ற கிழமைகளின் எண்ணிக்கை அமைய இன்னும் 823 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.p…
-
- 0 replies
- 243 views
-
-
100 டொலர் நாணயத்தாள்களை சாரதிகளுக்கு வழங்கி இன்ப அதிர்ச்சியளித்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் போக்குவரத்து பொலிஸார் வாகனங்களை நிறுத்தினால் பொதுவாக சாரதிகளுக்கு கலக்கம் ஏற்படும். அப்பொலிஸ் உத்தியோகத்தர்கள் குற்றச்சாட்டுப் பத்திரம் எதையும் வழங்குவதற்கு பதிலாக சாரதிகளுக்கு பணத்தை அன்பளிப்பாக வழங்கினால் எப்படியிருக்கும்? இவ்வாறானதொரு இன்ப அதிர்ச்சி, அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத் திலுள்ள வீதியொன்றில் அண்மையில் பயணம் செய்த சாரதிகளுக்கு கிடைத்தது. அதுவும் 100 அமெரிக்க டொலர்கள் (சுமார் 14,000 ரூபா) பெறுமதியான நாணயத்தாளை சாரதிகளுக்கு போக்குவரத்து பொலிஸார் வழங்கினர். …
-
- 0 replies
- 300 views
-
-
ஸ்டேடியத்தில் உட்கார்ந்து முழு தர்பூசணியை அப்படியே சாப்பிடும் 10 வயது பையன்..! சிட்னி: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் முழு தர்பூசணியையும் அப்படியே சாப்பிடும் 10 வயது சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கிரிக்கெட் மைதானம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை பிக் பாஷ் டி20 லீக் போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர் அணிகளான மெல்போர்ன் ஸ்டார்ஸ்- மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தை சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டு களித்தனர். இந்தப் போட்டி வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. அப்போது கேமராவில் ஒரு சிறுவன் தர்பூசணி சாப்பிடுவதும் பதிவானது. இதைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு விட்டார்கள். தொல…
-
- 1 reply
- 545 views
-
-
மனைவிக்கு தெரியாமல் பணம் சேமித்தால் என்ன நடக்கும்? புத்தாண்டில் நடந்த ருசிகர சம்பவம்! மனைவிக்கு தெரியாமல் கணவர் லட்சக்கணக்கான பணத்தை பழைய பையில் போட்டு சேமித்து வந்துள்ளார். அந்த பையை மனைவி, குப்பை லாரியில் வீசியதால், கணவன் மயக்க நிலைக்கே சென்று விட்டார். கடைசியில் காவல்துறை மூலம் குப்பைகளை எரித்து மறுசுழற்சி செய்யும் மையத்திற்கு சென்று பணம் கண்டெடுக்கப்பட்டது. இந்த ருசிகர சம்பவம் ஜெர்மனி நாட்டில் அரங்கேறியுள்ளது. பவேரியா மாகாணத்தில் உள்ள நூரம்பர்க் என்ற நகரில் 55 வயதுடைய ஒருவர், தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். புத்தாண்டு தினத்தில் வீட்டிற்கு உயர்ந்த பொருள் ஒன்றை வாங்குவதற்காக அவர் லட்சக்கணக்கான பணத்தை சேமித்து வந்துள்ளார். மனைவிக்கு தெரிந்தால…
-
- 6 replies
- 420 views
-
-
முகப்புத்தகத்தில் ஏற்பட்ட காதலால் இளைஞன் ஒருவரை நம்பி தனது 15 பவுண் நகைகளை வவுனியாவைச் சேர்ந்த 28 வயது யுவதியொருவர் இழந்த சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்றுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த மேற்படி யுவதிக்கு இளைஞர் ஒருவர் முகப்பபுத்தகத்தில் நண்பராகியுள்ளார். தான் கனடாவில் இருப்பதாகக் கூறி அந்தப் பெண்ணுடன் கதைத்து பெண்ணைக் காதலிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தான் இலங்கைக்கு வருவதாகவும் யுவதியைச் சந்திக்க வேண்டும் எனவும் இளைஞன் கூறியுள்ளார். இதனை நம்பிய யுவதி இளைஞன் கூறியபடி, யாழ்ப்பாணம், தட்டாதெருச் சந்தியில் அமைந்துள்ள ஆலயத்துக்கு அருகில் சென்றுள்ளார். அங்கு வருகை தந்த இளைஞன், தனக்கு புதையல் ஒன்று க…
-
- 2 replies
- 308 views
-
-
வெவ்வேறு வருடத்தில் பிறந்த அதிசய இரட்டையர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இரட்டைக் குழந்தைகள் வெவ் வேறு வருடங்களில் பிறந்துள்ளனர். கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான மேர்பேல் வலேன்சியா எனும் பெண்ணுக்கு கடந்த வாரம் இரட்டைக் குழந்தை பிறந்தன. இதில் பெண் குழந்தை கடந்த வருடத்தின் இறுதித் தருணத்தில், அதாவது 2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி இரவு 11.59 மணிக்குப் பிறந்துள்ளது. இதேவேளை, மற்றைய குழந்தையான ஆண் குழந்தை இவ் வருடம் 2016 ஜனவரி மாதம் முதலாம் திகதி 00.02 மணிக்குப் பிறந்துள்ளது. 3 நிமிட இடைவெளியில் இரு குழந்தைகளும் பிறந்…
-
- 0 replies
- 438 views
-
-
இத்தனை கோடியா.... ஜாக்பாட் பரிசை இழந்த தம்பதி... நடந்தது என்ன? லட்சாதிபதியாகும் அரிய வாய்ப்பை தங்களது கவனக்குறைவால் தம்பதியர் தவறவிட்ட சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. இங்கிலாந்தின் லீசெஸ்டர் பகுதியில் வசித்து வரும் டேவிட் மற்றும் எட்வினா நைலான் தம்பதியர், லோட்டோ எனப்படும் எண்கள் தெரிவு செய்யும் போட்டியில் தொடர்ந்து கலந்துகொண்டு, அதிர்ஷ்ட எண்களை தெரிவு செய்தும் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 பவுண்டுக்கான லோட்டோ டிக்கெட் ஒன்றை வாங்க முயன்றுள்ளனர். அப்போது தமது கணக்கில் போதிய பணம் இல்லை என அந்த கைப்பேசி லோட்டோ செயலி தெரிவிக்கவும், அதை நிவர்த்தி செய்த பின்னர் டிக்கெட்டை வாங்கி 6 அதிர்ஷ்ட எண்களை தெரிவு செய்து ச…
-
- 2 replies
- 476 views
-
-
டிக்கோயாவில் புத்தாண்டில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு டிக்கோயா பெரிய கெந்தகலையில் நான்கு கால்களுடன் கோழிக் குஞ்சு ஒன்று புதுவருட தினத்தில் பிறந்துள்ளது. இந்த நான்கு கால்களில் இரண்டு கால் சிறிதாக காணப்படுவதுடன் ஏனைய இரண்டு கால்கள் நடப்பதற்கு பயன்படும் வகையில் காணப்படுகின்றன. - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=14012#sthash.HMeIEqwn.dpuf
-
- 0 replies
- 260 views
-
-
சவுதி அரேபிய காதலருக்கும் ரஷ்ய பெண்ணுக்கும் இந்து முறைப்படி திருமணம்! காதல்... மதம், இனம் , மொழி,கடந்தது என்பதை நிரூபிக்கும்விதத்தில் குஜராத்தில் சவுதி அரேபிய ஆணுக்கும், ரஷ்ய பெண்ணுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர் கிஷான் தோலியா. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பங்கேற்க கிஷான் தோலியாவின் அரேபிய நண்பர் ஹமீத் அல் ஹமாத் தனது ரஷ்யத் தோழியான ஜுலியானாவுடன் சூரத் வந்திருந்தார். ஹமித் சாப்ட்வேர் இன்ஜினியராக சீனாவில் பணியாற்றுகிறார். ஜுலியானா ஜவுளி வர்த்தகத்தில் ஈடுபடுபவர். இருவரும் சீனாவில்தான் வசித்து வருகின்றனர். சூரத்தில் இந்து கலாச்காரப்படி கிஷான் தோலியாவி…
-
- 2 replies
- 497 views
-
-
எலிக்கு வந்த ஆசை இந்தியாவில் மும்பை விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் எலி ஒன்றும் லண்டனை சுற்றிப்பார்க்க பயணித்தையறிந்த விமானி விமானத்தை மீண்டும் மும்பை விமான நிலையத்திலே தறையிறக்கினார். நேற்று வழக்கம்போல அகமதாபாத்தில் இருந்து மும்பை வந்து அங்கிருந்து காலை 7 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு சென்ற குறித்த விமானத்தில் சுமார் 240 பயணிகள் பயணம் செய்தனர். குறித்த விமானம், ஈரான் நாட்டின் தெஹ்ரான் வான் பிரதேசத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானி அறையைச் சுற்றி ஒரு எலி ஓடிக்கொண்டிருந்ததை அவாபணித்த சிப்பந்தி உடனே விமானிக்கு தகவல் கொடுத்தார். இதையறிந்து பதற்றம் அடைந்த விமானி, உடனடியாக மு…
-
- 0 replies
- 266 views
-
-
டெல்லியில் முதல்முறையாக 'மகளிர் மட்டும்' மதுக்கடை திறப்பு: இது தேவையா? புதுடெல்லி: நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கான மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஏற்கனவே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருகிறது. இதேபோல், காற்று மாசு, போக்குவரத்து நெரிசல் போன்று பல்வேறு இயற்கைக்கு எதிரான விஷயங்களிலும் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஸ்டார் சிட்டி மாலில், பெண்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கடையின் விற்பனையாளர், உதவியாளர் உள்பட அனைத்திற்கும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு அனைத்து வகையான மது வகைகள் பெண்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப…
-
- 3 replies
- 464 views
-
-
பிச்சைக்காரர்களில் 75 ஆயிரம் பேர் பிளஸ் 2 பாஸ்; 3 ஆயிரம் பேர் பட்டதாரிகள்! இந்தியாவில் மொத்தம் 3.72 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதில் 21 சதவீதம் பேர் குறைந்த பட்சம் 12-ம் வகுப்பு பாசாகியுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட 75 ஆயிரம் பேர் 12-ம் வகுப்பு பாஸ் செய்து விட்டு, பிச்சைக்காரர்களாக மாறி பணம் சம்பாதிக்கின்றனராம். இது மட்டுமல்ல, இதில் 3 ஆயிரம் பேர் டிப்ளமோ அல்லது ஏதாவது டிகிரி, போஸ்ட் கிராஜுவேட் பட்டம் பெற்றவர்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. பட்டம் பெற்ற பிறகு, நல்ல வேலை கிடைக்காத காரணத்தினால் பல பட்டதாரிகள் பிச்சை எடுப்பதில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலை தேர்வு செய்தது குறித்து தினேஷ் என்…
-
- 0 replies
- 383 views
-
-
உள்ளாடை மன்னன் சிக்கினார் 16 வருடங்களாக பெண்களின் உள்ளாடைகளை மிகவும் சூட்சுமமாக திருடிவந்த நபரை சுவிஸ் நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். சுவிஸில் பெண்கள் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து உள்ளாடைகளை சூட்சுமமாக திருடுவதில் வல்லவனாக வலம் வந்த 45 வயதுடைய நபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் 1999 ஆம் ஆண்டு முதல் குறித்த செயற்ப்பாட்டில் ஈடுபட்டுவந்துள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இவர் வீடுகள் புகுந்து 100 க்கும் மேற்பட்ட பெண்களை துன்புறுத்தி, உள்ளாடைகளை திருடிச் சென்றதாகவும் மேலும், குறித்த நபர் 20 வயது முதல் 30 வயதிற்கிடைப்பட்ட கவர்ச்சியான பெண்களையே குறிவைத்து இச் செயலில் ஈடுபட்டதாகவும், மேலும் ப…
-
- 0 replies
- 403 views
-
-
மன்னரின் நாயை கிண்டல் செய்து பேஸ்புக்கில் பதிவிட்டவருக்கு 37 வருட சிறை தாய்லாந்து மன்னரின் நாயை இணையத்தளத்தில் விமர்சித்ததற்காக அந்நாட்டு பிரஜை ஒருவர் 37 வருட சிறை தண்டனையை அனுபவிக்க இருக்கின்றார். மன்னரின் நாய் குறித்து கிண்டல் செய்யும் விதமாக சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்ட அந்நாட்டு தொழிலாளி ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்படவுள்ளது. அவரின் இந்த பதிவிற்காக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் எவ்வாறான பதிவு ஒன்றை மேற்கொண்டிருந்தார் என்பது குறித்த தகவலை வெளியிட அந்நாட்டு இராணும் மறுத்துள்ளது. தாய்லாந்து நாட்டின் மன்னராக தற்போது பூமிபால் அதுல்யாதெச் என்பவர் இருந்து வருகிறார். அங்கு மன்னர் …
-
- 5 replies
- 467 views
-
-
கருத்தடை உறை இயந்திரத்தில் சிக்கி பரிதாபகரமாக பலியான திருடன் வளர்முக நாடுகளில் பொது இடங்களில் பாதுகாப்பான பாலியல் உறவை ஊக்குவிக்கும் வகையில் கருத்தடை உறைகளை தன்னியக்க ரீதியில் பெற வசதி செய்து தரும் கருத்தடை உறை இயந்திரங்கள் ஸ்தாபிக்கப்படுவது வழமையாகும். வீதியோர தன்னியக்க தொலைபேசி கட்டமைப்புகள் போன்று செயற்படும் இந்த கருத்தடை உறை இயந்திரங்களில் பணத்தைச் செலுத்தி கருத்தடை உறைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்நிலையில் மேற்படி கருத்தடை உறை இயந்திரத்தை வீட்டில் தயாரிக்கப்பட்ட குண்டொன்றைப் பயன்படுத்தி வெடிக்க வைத்து அதற்குள் இருக்கும் பணத்தைக் களவாட முயன்ற நபரொருவர் (29 வயது) அந்த வெடிப்பில் சிக்கி பரிதாபகரமாக மரணமடைந்த சம்பவம் ஜேர்மனிய நகரா…
-
- 0 replies
- 457 views
-
-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட லட்டு தயாரித்த ஆந்திராவைச் சேர்ந்த ஸ்வீட் நிறுவனத்துக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட இனிப்பு சுவை உணவை தயாரித்ததற்காக அந்நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கின்னஸ் விருது பெற்றுள்ளது. ஆந்திராவின் தாபேஸ்வரம் நகரில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேய ஸ்வீட்ஸ் நிறுவனம் கடந்த விநாயகர் சதுர்த்தியையொட்டி 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒரு லட்டை தயாரித்தது. இந்நிலையில், அதிக எடை கொண்ட லட்டை தயாரித்ததற்காக அந்நிறுவனத்துக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருது சான்றிதழில், ''2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி எஸ்.வெங்கடேஸ்வர ராவ் என்பவருக்கு சொந்தமான ஆந்திராவின் தாபேஸ்…
-
- 1 reply
- 336 views
-
-
Merry Easter' கிறிஸ்மஸ் தினத்தில் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்த ஸ்டீவ் ஹார்வி மிஸ் யூனிவர்ஸ் (பிரபஞ்ச அழகுராணி) போட்டியில் முதலிடம் பெற்ற அழகுராணியை தவறாக அறிவித்ததன் மூலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அமெரிக்க நடிகர் ஸ்டீவ் ஹார்வி, கிறிஸ்மஸ் தினத்தில் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார். லாஸ் வேகாஸ் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி போட்டியில் முதலிடம் பெற்ற பிலிப்பைன்ஸ் அழகுராணி பியா அலோன்ஸோவுக்குப் பதிலாக, கொலம்பிய அழகுராணி அரியட்னா முதலிடம் பெற்றதாக தொகுப்பாளரான நடிகர் ஸ்டீவ் ஹார்வி அறிவித்தார். இதனால், கொலம்பிய அழகுராணியான அரியட்னாவுக்கு மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி கிரீடம், பட்டி (சாஷ்) ஆகியன…
-
- 1 reply
- 385 views
-