Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்காவில் ஐ-போன் கொடுக்காததால் பெற்ற தாயை 2 முறை விஷம் வைத்து கொல்ல முயன்ற 12 வயது சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த 12 வயது சிறுமி கடந்த மார்ச் 2ம் தேதி பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ரசாயனத்தை காலை உணவில் கலந்து தாய்க்கு கொடுத்துள்ளார். ஆனால் இதை எதார்த்தமாக கண்டுபிடித்த தாய், பாத்திரத்தை சரியாக கழுவாமல் விட்டதுதான் இதற்கு காரணம் என்று நினைத்துள்ளார். எனவே, இதை அவர் கண்டுகொள்ளவில்லை. இதனை தொடர்ந்து, 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் குடிநீரில் விஷம் கலந்த அந்த சிறுமி மீண்டும் தனது தாயை கொல்ல முயன்ற போதுதான் சொந்த மகளே தன்னை கொலை செய்ய முயன்றது அவருக்கு தெரியவந்தது. இதற்கு ஐ-போனை கொடுக்காதது தான் காரணம் என்பதையும் அறிந்த அவர் இதுகுறித்து காவல் துறையில்…

  2. நண்பன்’ பட க்ளைமாக்ஸில் அனுயா ஒரு இக்கட்டான சூழலில் பிரசவ வலியில் துடிக்க, மருத்துவரான இலியானா கணினி இணைய இணைப்பின் மூலம் ‘லைவ்’ ஆக வழிமுறைகள் சொல்ல, அதைப் பின்பற்றி அனுயாவுக்கு விஜய் பிரசவம் பார்க்க... வெற்றிகரமாகப் பிறக்கும் குழந்தை! சினிமாவில் நாம் கைதட்டி ரசித்த காட்சி, நிஜத்தில் அமெரிக்காவில் நடந்துள்ளது. நியூஜெர்ஸியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ரிவேரா, அந்த மாதத்திற்கான பரிசோதனைக்காக தான் வழக்கமாகச் செல்லும் மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால் அந்நேரம் ரிவேராவின் டாக்டர் மேனா டெவல்லா வேறொரு மருத்துவமனையில் இருக்க, எதிர்பாராத விதமாக ரிவேராவுக்கு பனிக்குடம் உடைந்தது. வலியில் துடிக்க ஆரம்பித்தார். மருத்துவமனையில் புதிதாகப் பணிக்குச் சேர்ந்திருந்த மெடிக்கல…

    • 1 reply
    • 316 views
  3. எகிப்து தலைநகர் கெய்ரோவை சேர்ந்த பெண் சிசா அபு தாவோக் (64). கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டார். அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார். கணவர் மரணம் அடைந்து விட்டதால் அவரது வாழ்க்கை கேள்விக்குறியானது. அவரது குல வழக்கப்படி கணவனை இழந்த பெண் வேலைக்கு செல்லக்கூடாது. அடுத்தவரை நம்பி அதாவது பிச்சை எடுத்து வாழ வேண்டிய நிலை இருந்தது. அதற்கு சிசா அபுவின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. தனது சொந்த உழைப்பில் வாழ வேண்டும் என விரும்பினார். இந்த நிலையில் அவருக்கு ‘ஹுடா’ என்ற பெண் குழந்தை பிறந்தது. தனது மகளை கவுரமாகவும் அருமை பெருமையாகவும் வளர்க்க விரும்பினார். பெண்ணான தான் வேலைக்கு செல்ல விரும்பினார். ஆனால் ஆண்களின் கழுகு பார்வையில் இருந்து தப்ப ஒரு தீ…

    • 2 replies
    • 508 views
  4. 65 ஆண்டுகளின் பின் வெளியாகிய இரகசியம் திரைப்படங்களில் நடிப்பதற்காக பெண்களை பரீட்சார்த்த நடிப்புகளில் ஈடுபடுத்தும்போது இயக்குநர் ஒருவர் நடந்துகொண்டுள்ள விதம் குறித்த சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் 65 ஆண்டுகளின் பின்னர் வெளியாகியுள்ளன. 1950 ஆம் ஆண்டுகளில் லைஃப் சஞ்சிகையின் ஜேம்ஸ் பர்க் என்ற புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட படங்களே தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளன. டிலாகி (1949), துலாரி (1949), டில் தியா டார்ட் லியா (1966) போன்ற பிரபல ஹிந்தித் திரைப்படங்களை இயக்கிய ஏ.ஆர். காதர் என்பவரே சர்ச்சையில் சிக்கியுள்ளார். பரீட்சார்த்த நடிப்புக்காக வரும் பெண்களை ஒவ்வொரு கோணத்தில் நிற்கச் சொல்லியும் மேலாடைகளை அகற்றியும் அவர் பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி…

  5. பாங்காக்: பெண்கள் மார்புப் பகுதி இறக்கமாக தெரியும் படி செல்ஃபி எடுக்கக் கூடாது என தாய்லாந்து அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. ஆறாம் விரலாய் மாறிப் போன செல்போனில் கேமரா கிடைத்த பிறகு, தன்னைத் தானே போட்டோ எடுத்துக் கொள்ளும் செல்ஃபிக்கு மோகம் மக்களிடையே அதிகரித்துக் காணப்படுகிறது. அவ்வாறு விதவிதமாய் தன்னைத் தானே எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலமாக தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால், இவ்வாறு எடுக்கப் படும் செல்ஃப்பிக்களில் சிலர் ஆபாசமாக எடுக்கின்றனர். அவை சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பப் படும் போது, அவற்றை சிலர் மேலு…

  6. தாய்லாந்தின் லம்பு மாகாணத்தை சேர்ந்த புத்த துறவி நாங் புவா இவர் அந்த பகுதியில் மிக சக்தி வாய்ந்த துறவியாக கருதப்படுகிறார். இவர் தனது கைகளால் தொடும் பொருட்கள் அனைத்து சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன என நம்பப்படுகிறது அவைகள் அதிக விலைக்கும் விற்கப்படுகிறது. இவர் தொடும் பொருட்களில் இவரின் சக்தி ஊடுருவதாக அந்த பகுதி மக்கள் நம்புகிறார்கள். அதனால் அவரை பின்பற்றுபவர்கள் தாயதுக்கள் அல்லது துணி துண்டுகளை அவரின் கைபட்டு எடுத்து செல்கிறார்கள். இந்த நிலையில் நாங் புவா சில நாட்களுக்கு முன் கொதிக்கும் எண்ணெயில் உட்கார்த்து தியானம் செய்த காட்சி வீடியோவாக எடுக்கபட்டு யூடியூப்பில் பகிரபட்டது. அது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன. எரியும் தீயில் ஒரு பெரிய பாத்திரம் வைத்து …

  7. மைசூரில் யானைகள் சண்டையை தடுக்க முயன்ற பாகனும், அவர் வளர்த்த யானையும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மைசூர் தசரா விழாவில் பங்கேற்கும் யானைகள் சாம்ராஜ்நகரில் உள்ள முகாமில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு, கஜோந்திரா, ஸ்ரீராமா என்ற இரு யானைகளும் உள்ளன. நேற்று இந்த இரு யானைகளும் திடீரென்று சண்டையிட்டுக் கொண்டன. இரண்டும் ஒன்றையொன்று தந்தத்தால் குத்திக் கொண்டன. சண்டையை பார்த்த ஸ்ரீராமா யானையின் பாகன் கணபதி, சண்டையை விலக்கிவிடும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால், கடும் ஆத்திரமடைந்த கஜேந்திரா யானை, பாகன் கணபதியை தந்தத்தால் ஆவேசத்துடன் குத்தியது. இதில், சம்பவ இடத்திலேயே பாகன் கணபதி பலியானார். தொடர்ந்து ஆத்திரம் தணியான கஜேந்திரா யானை, ஸ்ரீராமா யானையை மேலும் த…

  8. அருவியில் குளிக்கச் சென்ற தொழில் அதிபர்களின் நகைகளை குரங்கு ஒன்று, காவிரி ஆற்றில் வீசி போக்கு காடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர்கள் நடராஜன் (80), அவரது நண்பர் ஆனந்தன் (44). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காரில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். காரை பேருந்து நிலையம் பகுதியில் நிறுத்தி விட்டு, அருவில் குளிப்பதற்காக இருவரும் சென்றனர். பிரதான அருவி பகுதிக்கு சென்ற அவர்கள், தாங்கள் அணிந்திருந்த விலை உயர்ந்த வைர மற்றும் தங்க நகைகளை கழற்றி ஒரு பையில் போட்டுள்ளனர். அதன் பின்னர், அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் நகைப்பையையும் அருகில் ஒரு மறைவிடத்தில் வைத்துவிட்டு இருவரும் அருவியில் உற்சாகமாக குளித்து உள்ளன…

    • 1 reply
    • 386 views
  9. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடந்த ஒரு வாரமாக காணவில்லை என உள்நாட்டு ஊடகங்கள் புலம்பி தவிக்கின்றன. அதேவேளையில், சுவிட்சர்லாந்து பத்திரிகைகளோ.., தனது காதலியின் மூலம் தன்னுடைய அடுத்த வாரிசாக உருவாகியுள்ள ரகசிய குழந்தையை புதின் கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருக்கிறார் என யூகச் செய்திகள் வெளியிட்டுள்ளன. முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேய்வா(31) என்ற ரஷ்ய நாட்டு அழகு மங்கையுடன் புதின் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் இருவருக்கும் இடையில் காதல் உறவு வலுப்பெற்று வருவதாகவும் பல ஆண்டுகளாக உறுதிப்படுத்த முடியாத செய்திகள் உலவி வருகின்றன. இந்நிலையில், இத்தாலிய நாட்டு எல்லையில் உள்ள சாண்ட்டா அன்னா டி சார்ஜெனோ என்ற மருத்துவமனையில் புதினுக்கும் அலினா …

    • 4 replies
    • 698 views
  10. யுஎஸ்.சில் ரென்னிசி என்ற இடத்தில் பணிப்பெண் ஒருவருக்கு பெருந்தன்மையான அன்பளிப்பு தொகையும் விலைமதிப்பற்ற ஒரு குறிப்பும் ஒரு, பெரிய மற்றும் துக்கத்தினால் ஒடுங்கிப்போன ஒரு வாடிக்கை யாளரிடமிருந்து கிடைத்துள்ளது. இதனை பெற்ற பெண் கண்ணீர் சிந்தினார். கிளெய்ரி ஹட்சன் என்ற 25-வயது பெண் ஸ்பிரிங் ஹில் என்ற இடத்தில் உள்ள மக்ஸ் கிரப் சாக் ( Mac’s Grub Shak என்ற உணவகத்தில் பணியாற்றி கொண்டிருந்த சமயத்தில் அங்கு வந்த தம்பதியர் ஒருவர் பியர், ஒரு பேர்கர் மற்றும் ஹொட் டோக்ஸ் என்பனவற்றை ஆர்டர் செய்தனர். இவற்றிற்கான கட்டணம் டொலர்கள் 28.12 வந்துள்ளது. தம்பதியர் கட்டணத்துடன் மேலதிகமாக 36-டொலர்களையும் அதாவது 130-சதவிகிதம் ரிப்சையும் விட்டுச்சென்றது மட்டுமன்றி பணத்தை விட மிக முக்கியமான ஒரு …

    • 1 reply
    • 381 views
  11. டெல்லியில், கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந் தேதி தனது நண்பருடன் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது. அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதிலும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த 6 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் சிறுவன் என்பதால் பின்னர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். ஒரு குற்றவாளி சிறையில் தற்கொலை செய்து கொண்டார். பஸ்சின் டிரைவர் முகேஷ் சிங் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இங்கிலாந்தைச் சேர்ந்…

  12. இன்று அதிகாலை 3மணியளவில் கோத்தபாயவும் அவருடைய சகாக்கள் பதினைந்து பேரும் காலியில் இருந்து மாலைதீவை நோக்கி அதிவேகபடகில் தப்ப ஆயத்தமான நிலையில் இலங்கை பொலிசாரின் அதிரடி நடவடிக்கையால் இம் முயற்சி முறியடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது.. காலிக்கடற்கரையோரம் சந்தேகத்திற்கு இடமான முறையில் அதிவேக படகு ஒன்று நடமாடியதை அவதானித்த பொலிசார் அந்த படகை அண்மித்த சமயம் படகு வேகமாக கடலுக்குள் சென்றுள்ளது. இதை பொலிசார் கடற்படைக்கு தெரியப்படுத்தியதையடுத்து கடற்படையின் உதவியால் அந்தப்படகினை இடைமறித்து சோதனையிட்டவேளை அதற்குள் உணவுப்பொதிகள் ,மதுபானங்கள் மற்றும் உடைகள் இருந்ததாகவும் அந் நபரின் தொலைபேசியை எடுத்து பார்த்தபோது கோத்தபாயவுடன் நிமிடங்களுக்கு முன்னர் தொடர்பில் இருந்துள…

    • 3 replies
    • 681 views
  13. கருணா மீது தாக்குதல்….?? March 12, 201511:49 am கருணா என்கின்ற முரளிதரன் மீது நான்கு பேர் கொண்ட குழு தாக்குதலை நடத்தியுள்ளது. இவர் கொள்ளுப்பிட்டி க்கு அண்மையில் உள்ள இரவு விடுதிக்கு சென்றதாகவும் இவரை பின் தொடர்ந்தவர்கள் திடீரென்று இவரை தள்ளி விழுத்தி இவரின் தலையிலும் முகத்திலும் தாக்கி விட்டு இரண்டு மோட்டார் சயிக்கில்களில் தப்பி சென்றுள்ளதாக தெரிய வருகின்றது. இவரின் பாதுகாப்பு பொலிசார் இவரின் பிரத்தியோக வாகனத்திலேயே இருந்ததாகவும், கத்திய சத்தத்தினை கேட்டு இறங்கி ஓடி வருவதுக்குள் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி சென்றுவிட்டனர். இப்படி ஒரு செய்தி முகநூலில் பரவுவதுடன் இதனை உறுதிப்படுத்த முடியாதுள்ளது. http://www.jvpnews.com/srilanka/100817.html

  14. திருட்டி வி.சி.டி. புழக்கத்தை ஒழிக்க தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ‘சண்முகா’ திரையரங்க நிர்வாகம் புதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அதன்படி ஒரு முறை ரூ.1000 கொடுத்து டிக்கெட் வாங்கினால், அந்த ஒரு வருடம் முழுவதும் அத்தியேட்டரில் ரிலீஸாகும் ஒவ்வொரு படங்களையும் ஒரு முறை பார்க்கலாம்.பார்க்க விரும்பவில்லை என்றால் அந்த டிக்கெட்டை வேறொருவருக்குக் கொடுத்து அந்தப் படத்தை ஒருமுறை பார்க்க சொல்லலாம். இந்தப் புதிய திட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.இதன்மூலம் இதுவரை 2000 த்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.மேலும் 10,000 வரை டிக்கெட்டுகள் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் தொகையிலிருந்து புதிய படங்களை வாங்கி திரையிடவும்,இந்த முன்பதி…

  15. சில தினங்களுக்கு முன் ஆற்றில் முழ்கிய காரிலிருந்து கைக்குழந்தை மீட்கப்பட்ட சம்பவத்தில் நீரில் மூழ்கி இறந்து போன தாயின் குரலைக் கேட்டதால் போலீசார் பீதியடைந்துள்ளனர். அமெரிக்காவின் உத்தா கவுண்டியில் உள்ள ஸ்பிரிங்வில்லி அருகே கடந்த வெள்ளி இரவு சுமார் 10.30 மணியளவில் திடீரென அலறல் சத்தம் கேட்டது. அதைக் கேட்டு ஒருவர் சத்தம் வந்த திசையில் சென்று பார்த்தார். எதுவும் தென்படாத நிலையில் தனது வீட்டிற்கு வந்து விட்டார். மறு நாள் மதியம் அதே பகுதியில் உள்ள ஒரு மீனவர் தான் வழக்கமாக மீன் பிடிக்கும் உத்தா ஆற்றில் கார் ஒன்று பாதி மூழ்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூழ்கியிருந்த காரை மீட்புப் படையினரைக…

  16. மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் கிட்டதட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்துடன் அடகுக் கடைக்காரர் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. வல்லாளப்பட்டியைச் சேர்ந்தவர் ராமர் என்பவர். தன்னுடைய குடும்பத்துடன் கிடாரிப்பட்டியில் வசித்து வந்தார். அங்கு "ஐயப்பா அண்ட் கோ" என்ற பெயரிலான அடகுக் கடை ஒன்றினை நடத்தி வந்துள்ளார். மேலும், கிட்டதட்ட 40 ஆண்டுகளாக கிடாரிப்பட்டியின் ஊர்க்கணக்குகளையும் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரிடம் ஊர்மக்கள் கொடுத்து வைத்திருந்த 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்துடனும், ஊர்க்கணக்கு பணத்துடனும் தலைமறைவாகியுள்ளார். இவரால் அடகு பிடிக்கப்பட்ட நகைகள் மட்டும் 2 கிலோ இருக்கும் என்று ஊர் மக்கள் தெரிவ…

  17. ஸ்லிமான்: வீடு வாங்கினால் மணப்பெண் இலவசம் என்ற இந்தோனேசிய விளம்பரம் ஒன்று சமூக வலைத் தளங்களில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அந்த விளம்பரத்தில் இரண்டு படுக்கை அறை, இரு குளியல் அறை, வாகன நிறுத்துமிடம் என்று சாதாரண வீடு விற்பனைக்கான விளம்பரம் போல தொடங்கும் அந்த இணையதள விளம்பரத்தின் கடைசி வரிகளில் "ஒரு அரிய வாய்ப்பு" இந்த வீட்டை வாங்குபவர் அதன் உரிமையாளரிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. அத்துடன் வீட்டின் உரிமையாளரான 40 வயது நிரம்பிய வீனா லியாவின் நிழற்படமும் வெளியாகி இருந்தது. இந்த தகவல் அறிந்த இந்தோனேசிய நாட்டின் அனைத்து ஊடகங்களும், அந்தப் பெண்ணின் வீட்டை நோக்கி படை எடுத்தன. அந்நாட்டு போலீசாரும் இது மோசடி விளம்பரமாக கருதி …

  18. அமெ­ரிக்­காவில் 37 வயது தாயும், 20 வயது மகளும் ஒரே தினத்தில் சில நிமிட இடை­வெ­ளியில் குழந்­தை­களை பிர­ச­வித்த சம்­பவம் ஒன்று இடம்பெற்­றுள்­ளது. புளோ­ரிடா மாநி­லத்தைச் சேர்ந்த அஞ்ஜெலா பட்ரம் என்ற தாயும் தெர­னிஷா பில்லப்ஸ் என்ற மக­ளுமே இவ்­வாறு ஒரே தினத்தில் குழந்­தை­களை பிர­ச­வித்­துள்­ளனர். தம்பா பொது மருத்­து­வ­ம­னையில் அஞ்­ஜெலா பெண் குழந்­தையை பிர­ச­வித்து 34 நிமி­டங்­களில் தெர­னிஷா ஆண் குழந்­தையை பிர­ச­வித்­துள்ளார். அஞ்­ஜெ­லாவின் குழந்­தைக்கு ராய எனவும் தெர­னி­ஷாவின் குழந்­தைக்கு ஜெரி மிசோட் எனவும் பெயர்கள் சூட்­டப்­பட்­டுள்­ளன. தமது பிர­ச­வங்கள் குறைந்த நாட்கள் வித்­தி­யா­சத்தில் இடம்பெற­வுள்­ளதை முன்கூட்­டியே அறிந்­தி­ருந்த போதும், ஒரே தினத்தில் சில நிமிட வித்­த…

    • 5 replies
    • 444 views
  19. 2,500 ஆண்டுகள் பழமையான மனித மூளை ஒன்று இங்கிலாந்தில், கடந்த 2008-ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. இதனை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தலை வெட்டப்பட்ட நிலையில் சேற்றுக்குள் புதைந்தவாறு கண்டெடுக்கப்பட்ட, ஒரு மனித மண்டை ஓட்டுக்குள் மூளை சேதம் அடையாமல் கிடைத்தது. அவரது மூளை சிதையாமல் இருக்கக் காரணம் என்ன வென்றும், அதற்கு சேறு காரணமாக இருக்கலாமா என்ற கோணத்திலும் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதனை ஆராய்ச்சி செய்து வரும் 34 பேர் கொண்ட விஞ்ஞானிகள், இது சுமாராக 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவரின் மூளையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். அந்த மனிதர் கொல்லப்பட்ட போது, அவருக்கு 26 முதல் 45 வயது இருக்கலாம் என்று பற்களை கொண்டு கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த ம…

  20. ஓபிஎஸ் நீங்க "கவர்".. நத்தம் "மிட் ஆன்".. வளர்மதி நீங்க "சில்லி".. ! சென்னை: எப்படிப் பார்த்தாலும், என்ன செய்தாலும் அதில் ஒரு பக்தி, பவ்யம், ஒரு பயம்.. இதெல்லாம் இல்லாமல் அமைச்சர்களைக் கற்பனை செய்து பார்க்க முடியாது போல. வாட்ஸ் ஆப்பில் வந்த ஒரு படத்தைப் பார்த்தால் இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி.. உச்சி மண்டை கிடுகிடுக்க டிவி பெட்டிகளில் போட்டிகளைப் பார்த்து வேட்டி நுனியைத் திருகியபடி ரசிகர் கூட்டம் டென்ஷனில். இப்படிப்பட்ட ரசிகர் கூட்டத்தை டென்ஷனிலிருந்து திசை திருப்பி, விக்கல் வரும் அளவுக்கு கிச்சுக்கிச்சுக் காட்டும் வகையில் உள்ளது இந்தப் படம். ஓபிஎஸ் நீங்க அம்மா கிரிக்கெட் ஆட வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த கற்பனை…

  21. ஆற்றில் குளித்ததை படம் எடுத்த வாலிபரை, மாணவிகள் அடித்து துவைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவை சேர்ந்த மாணவிகள் சிலர் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டினத்துக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அங்குள்ள காவிரி ஆற்றில் அவர்கள் குளித்தனர். இதனை ஒரு வாலிபர் மரத்தில் மறைந்து இருந்து தனது செல்போனில ஆபாச கோணத்தில் படம் எடுத்துள்ளார். மேலும், ஆற்றில் குளித்துவிட்டு ஒரு மாணவி மரத்தின் மறைவிடத்தில் உடை மாற்றி இருக்கிறார். அதையும் அந்த வாலிபர் படம் பிடித்து உள்ளார். அப்போது, இதை அந்த மாணவி எதேச்சையாக பார்த்திருக்கிறார். உடனே அந்த மாணவி கூச்சல் போட்டுள்ளார். அதிர்ச்சியில் அந்த மாணவி போட்ட கூச்சலை, அந்த கிராம மக்களும் மற்ற மாணவிகளும் கேட்…

  22. மன்னன் இராணவன் தனது புஷ்பக விமானத்தை நிறுத்தி ஓய்வெடுத்ததாக கூறப்படும் இடம் ஒன்று, இலங்கையின் மத்திய மலைநாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராமாயணத்தில் இராவணன் மன்னனுக்கு புஷ்பக விமானம் ஒன்று இருந்தாக கூறப்பட்டுள்ளது. சீதையை மறைத்து வைத்த இடம் எனக் கூறப்படும் நுவரெலியாவில் உள்ள சீதா எலிய பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளது. சீதா எலிய கோயில் தற்போது இந்துக்கள் வழிப்பட்டு வருகின்றனர். சீதையை கடத்தி வர பயன்படுத்திய புஷ்பக விமானம், மன்னன் இராவணன் நிறுத்தி ஓய்வெடுத்ததாக கூறப்படும் இடம் ஒன்றில் தோட்டத் தொழிலாளர்கள் பூஜை வழிப்பாடு செய்து வருகின்றனர். மஸ்கெலியா, மவுசாகலை நீர்தேக்கம் மற்றும் கெனியோன் நீர் மின் நிலையத்திற்கு மேல் ஐந்து கன்னிமார் மலைக்கு அருகில் மவுசாக…

  23. Started by nunavilan,

    விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பூக்கடை வைத்து நடத்தி வரும் துரைப்பாண்டி, அங்குள்ளவர்களுக்கு ஆச்சர்ய மனிதர். தினம் வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டி விட்டு செல்லும் போது மறக்காமல் கடைக்கு வெளியே 4 மாலைகளை கட்டி தொங்க விட்டுச் செல்கிறார். மறு நாள் காலை கடையை திறக்க வரும்போது கட்டி தொங்கப்படவிட்ட மாலையில் சில காணாமல் போயிருந்ததை கண் டால் நிம்மதி பெருமூச்சு விட்டு பிறகு வழக்கம் போல் பூ வியாபாரத்தை ஆரம்பித்து விடுகிறார். இது கடந்த 15 வருடங்களாக நடந்து வரும் சங்கதி. இரவு நேரங்களில் அப்பகுதிகளில் ஏதேனும் மரணங்கள் நிகழ்ந்தால், அந்நேரத்தில் இறந்தவர் உடலுக்கு மரியாதை செலுத்த மாலைகள் கிடைப்பது பெரும் சிரமம். மாலைகளுக்காக இறந்தவரின் உறவினர்கள் நடு இரவில் அலைந்து திரிவதை தவிர…

  24. ச்சீ.. நாங்கெல்லாம் குளிக்கவே மாட்டோம்.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பெண்கள் பிரித்தானியாவை சேர்ந்த பெரும்பாலான பெண்கள் தினந்தோறும் குளிப்பதில்லை என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் Flint + Flint என்ற நிறுவனம் குளிப்பது பற்றி சமீபத்தில் சுமார் 2, 000 பெண்களிடம் ஆய்வு ஒன்று நடத்தியுள்ளது. இதில் பெரும்பாலான பெண்கள் அலுவலக வேலை களைப்பால் மாலை வேளைகளில் குளிப்பதில்லை என தெரியவந்துள்ளது. அதிலும் மூன்றில் ஒரு நபர் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, முகம், தலைமுடி, உடல் ஆகியவற்றை தண்ணீரால் சுத்தப்படுத்தாமல் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 60 சதவிகித பெண்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன் முகத்தில் உள்ள ‘மேக்-அப்’பை கூட தண்ண…

    • 9 replies
    • 1.2k views
  25. தாய்லாந்தில் பெண்ணின் மார்பகங்களை புத்த துறவி ஒருவர் தழுவி ஆசீர்வதித்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. புத்த மதத்தில் உள்ள துறவிகள் கடுமையான விதிகளையும், கொள்ளைகளையும் காலங்காலமாய் கடைபிடித்து வருகின்றனர். அவர்களின் கொள்ளைகள் படி எந்த பெண்ணையும் துறவி தொடுவது அறமில்லை என கூறப்படுகிறது. ஆனால் தாய்லாந்தில் உள்ள புத்த துறவி மேலாடையின்றி பெண் ஒருவரை நிற்க வைத்து அவரது மார்பகங்களை தன் கைகளால் தழுவியுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் பரவியதையடுத்து, இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=127758&category=Puthinam&language=tamil

    • 11 replies
    • 3.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.