செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7152 topics in this forum
-
அர்ச்சுனா mp யின் காணிகளால் அவதியுறும் மக்கள் ! நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவின் காணிகளால் தமக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவரது பிறந்த ஊரான பெரியவிளான் மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், பெரியவிளானில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவின் காணியானது பலவருடங்களாக துப்பரவு செய்யப்படாமல் பற்றை காடாக உள்ளது. அங்கு ஒரு பாழடைந்த கிணறும் உள்ளது. அந்த பற்றை காணிக்குள் விஷம் கொண்ட பாம்புகள் மற்றும் வேறு விஷ ஜந்துக்கள் என்பன காணப்படுகின்றன. குறித்த காணியில் உள்ள பாம்புகள் வெளியேறி வீடுகள், வீதிகள், அருகில் உள்ள கடைகளுக்குள் வருவதால் மக்கள் மிகவும் அச்சத்தின் மத்தியில் இருக்கின்றனர். வீதியில் சிறியவர்களோ, பெரியவர்களோ …
-
- 0 replies
- 116 views
-
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! கண் கலங்க வைத்த தம்பதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை இடம்பெற்ற சம்பவம் அங்கிருந்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்ற தனது கணவன், 5 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்பும் நிலையில் அவரை வரவேற்பதற்காக அவரது மனைவி மலர்க்கொத்துடன் விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார். இதன் போது விமான நிலையத்தை வந்தடைந்த தனது கணவரை கண்டதும் ஓடிச் சென்று அவரைக் கட்டிப்பிடிக்க முயன்றார். ஆனால், எதிர்பாராத விதமாக கணவர் அவரைத் தள்ளிவிட்டு, தன்னிடம் வரவேண்டாம் எனவும் தள்ளி நிற்குமாறு என்று சத்தமிட்டுள்ளார். பயணிகள் குழப்பம் தனது மனைவியை மதிக்காமல் கணவன் …
-
-
- 2 replies
- 227 views
- 1 follower
-
-
இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனை : 62 கோடி ரூபா தனி ஒரு நபருக்கு இலங்கை லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத் தொகை ஒன்று நேற்று(19.02.2026) வெல்லப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய லொத்தர் சபையின் கப்ருக லொத்தர் சீட்டிழுப்பில் 62 கோடி ரூபாய் பரிசுத் தொகை நேற்று வெல்லப்பட்டுள்ளது. 62 கோடி... இது இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனையாகும். இந்த சீட்டிழுப்பில் 62 கோடியே 98 இலட்சத்து 55 ஆயிரத்து 919 ரூபாய் வெல்லப்பட்டுள்ளது. வரலாற்றில் ஒரு தனிநபர் வென்ற மிகப்பெரிய பரிசுத் தொகை இதுவென தெரிவிக்கப்படுகின்றது. https://tamilwin.com/article/new-record-in-sri-lankan-lottery-history-62-crore-1771527359
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் கைது. பல்வேறு காரணங்களால் உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களிடமிருந்த சுமார் 75 கிலோ கிராம் இறைச்சி பொது சுகாதார பரிசோதகர்களால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறந்த இக்கோழிகளை விலங்கு உணவிற்காகக் கொண்டு செல்வதாகக் கூறி, அவற்றை மனித நுகர்விற்காக (உணவுக்காக) விற்பனை செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகக் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை ஆனமடுவ நீதிமன்றத்தி…
-
- 0 replies
- 117 views
-
-
ஆணுறைகள் தீர்ந்ததால் குளிர்கால ஒலிம்பிக் வீரர்கள் நெருக்கடியில் 14 February 2026 இத்தாலியில் நடைபெற்று வரும் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி சில நாட்களிலேயே, வீரர்களின் குடியிருப்பில் வழங்கப்பட்ட இலவச ஆணுறைகள் தீர்ந்துப்போனதால் எதிர்பாராத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போட்டிகள் ஆரம்பமான மூன்று நாட்களிலேயே ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பட்ட 10,000 பொதிகள் முழுமையாகத் தீர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தமக்குத் தேவையான விநியோகம் இல்லை என வீரர்கள் முறைப்பாடு அளிக்கத் தொடங்கியுள்ளனர். "மூன்றே நாட்களில் இருப்பு முடிந்துவிட்டது. மேலதிக கையிருப்புகள் வரும் என உறுதியளித்துள்ளனர், ஆனால் அது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது" என பெயர் குறிப்பிட விரும்பாத வீரர் ஒரு…
-
- 1 reply
- 131 views
-
-
கொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை ; சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சை காணொளி! 13 Feb, 2026 | 12:17 PM கொழும்பு - பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை இருப்பதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவி வருகின்றன. குறித்த உணவகத்தில் வியாழக்கிழமை (12) காலை சாப்பிட்ட நபர் ஒருவர், தனது சாப்பாட்டில் சிறிய பாம்பின் தலை போன்ற பகுதி இருந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சை காணொளியை குறித்த உணவகத்தின் நிர்வாகம் கடுமையாக மறுப்பு தெரிவித்து, தமது உணவகத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை. காணொளி வெளியான ச…
-
- 0 replies
- 82 views
- 1 follower
-
-
நோய் வாய்ப்பட்ட பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுப்பு சுவிட்சர்லாந்தில் நோய்வாய்ப்பட்ட தனது பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுத்த பெண்ணொருவர் மீது, விலங்கு வதை சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் இப்பெண் வளர்த்து வந்த பூனைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பூனையை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். பூனையைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர், அதற்குத் தற்காலிக சிகிச்சையளித்ததுடன், பூனையால் சிறுநீர் கழிக்க முடியாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். பூனையின் உயிரைக் காப்பாற்ற அவசர அறுவை சிகிச்சை ஒன்று அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எனினும், அந்தப் பெண் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொ…
-
- 0 replies
- 79 views
-
-
யாழில் துப்பாக்கியுடன் சந்தைப்பகுதியில் நடமாடிய நபரால் பரபரப்பு! யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மருதனார்மடம் சந்தைக்கு தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, பை ஒன்றுடன் ஒருவர் வந்துள்ளார். வந்தவர் அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் பச்சை மிளகாயை கொள்வனவு செய்து கொண்டு , ” சந்தைக்குள் வட்டிக்கு பணம் வழங்குபவர்கள் யார் ? ” என வினாவியுள்ளார். அதற்கு வியாபாரி தனக்கு தெரியாது என கூறியதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார். குறித்த நபர் கையில் கொண்டுவந்திருந்த பையினுள் ரி 56 ரக துப்பாக்கி காணப்பட்டதாகவும் , அவரது இடுப்பு பகுதிய…
-
- 1 reply
- 114 views
- 1 follower
-
-
பேருவளையில் கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்த வைத்தியர் கைது. பேருவளையில் இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளரைப் போன்று வேடமணிந்த புலனாய்வு அதிகாரி ஒருவர் கருக்கலைப்புக்காக நேரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, களுத்துறை நீதவான் நீதிமன்றில் தேடுதல் அனுமதியைப் பெற்றுக்கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று நேற்று குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது, மாறுவேடத்தில் சென்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒ…
-
- 0 replies
- 72 views
-
-
கையடக்கத் தொலைபேசியால் வீடொன்றின் அறை தீக்கிரை Published By: Digital Desk 3 08 Feb, 2026 | 04:44 PM தம்புள்ளை பகுதியில் கையடக்கத் தொலைபேசியை மின்னேற்றிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீடொன்றின் அறை தீப்பிடித்து எரிந்ததில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாது, இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவி ஒருவர், தனது அறையில் கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து விட்டு மாணவியும் அவரது தாயாரும் அயல் வீடு ஒன்றுக்குச் சென்றுள்ளனர். இரவு சுமார் 10 மணியளவில் வீடு திரும்பிய போது, வீடு தீப்பற்றி எரிவதை அவர்கள் அவதானித்துள்ளனர். உடனடியாக பொது மக்கள், தம்புள்ளை மாநகர சபையின் தீ அணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் இண…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
பொவந்தலாவ பொலிஸ் நிலையத்தில், இரு பொலிஸார் இடையில் கத்திக்குத்து. பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அதிகரித்ததன் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் , மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்தியுள்ளதாகவும், காயங்களுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற…
-
- 0 replies
- 96 views
-
-
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது! யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் வழி மறித்த போது, பொலிசாரின் கட்டளையை மீறி சாரதி டிப்பர் வாகனத்தை தொடர்ந்து செலுத்தியுள்ளார். அதனை அடுத்து பொலிஸார் டிப்பர் வாகனத்தை சுமார் 20 கிலோ மீற்றர் தூரம் துரத்தி சென்ற நிலையில் , சாரதி டிப்பர் வாகனத்தை மணலுடன் வீதியில் நிறுத்தி விட்டு , வாகனத்தில் இருந்து இறங்கி ஓடியுள்ளார். தப்பியோடிய சாரதியை பொலிஸார் துரத்தி சென்று கைது செய்தனர். கைது செய்த சாரதியை பொலிஸார் விசாரித்த வேளை , குறித்த நபர் முன்னாள் பொல…
-
- 0 replies
- 84 views
-
-
இலங்கை, வியட்நாம் பெண்களை "இறக்குமதி" செய்ய வேண்டும் : தென்கொரிய ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு! Published By: Digital Desk 3 05 Feb, 2026 | 03:34 PM தென்கொரியாவில் நிலவி வரும் சனத்தொகை வீழ்ச்சியை ஈடுகட்ட, இலங்கை மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து இளம் பெண்களை "இறக்குமதி" செய்ய வேண்டும் என ஜின்டோ கவுண்டி ஆளுநர் கிம் ஹீ-சூ தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென் ஜொல்லா மாகாணத்தில் உள்ள ஹேனம் கலை மற்றும் கலாச்சார மையத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற ஆளுநர் கிம் ஹீ-சூ, கிராமப்புறங்களில் மக்கள் தொகை குறைந்து வருவதைக் குறித்து உரையாற்றியுள்ளார். அப்போது அவர், "சனத்தொகை நெருக்கடிக்கு நாம் முறையான தீர்வை காண வேண்டும். நிலைம…
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
குளியலறையில் வழுக்கி விழுந்த நபரின் தொண்டைக்குள் சிக்கிய பல் துலக்கும் பிரஷின் முன் பகுதி - என்ன ஆனார்? படக்குறிப்பு,பிரேமலால் மற்றும் அவரின் எக்ஸ்ரே படம் கட்டுரை தகவல் தாரகா சம்மனா பிபிசி சிங்கள சேவை 9 மணி நேரங்களுக்கு முன்னர் பல் துலக்குவது எளிதான ஒன்றாக இருந்தாலும் அதுவே ஆபத்தானதாக மாறியது என சொன்னால் நம்ப முடிகிறதா? அப்படியான ஒன்றை தான் இலங்கையில் உள்ள பிரேமலால் எதிர்கொண்டார். சவாலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொண்டையில் சிக்கிய பிரஷின் முன்பாகத்தை (bristle) மருத்துவர்கள் அகற்றி பிரேமலால் உயிரை காப்பாற்றினர். சிகிச்சை முடிந்த பிறகு ஓய்வில் இருந்த பிரேமலாலுடன் பிபிசி சிங்கள சேவை உரையாடியது. "ஜனவரி 23-ஆம் தேதி காலை குளியலறை சென்று பல் துலக்கிய போது எதிர்பாராதவிதமாக வழு…
-
- 1 reply
- 176 views
- 1 follower
-
-
04 Feb, 2026 | 04:47 PM பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியொன்றில் நாய்கள் கூட்டமாக சிறுத்தைக் குட்டியொன்றைத் துரத்திய வேளையில், அந்த சிறுத்தைக் குட்டி பயத்தில் அருகில் இருந்த மரத்தில் ஏறிய காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (3) சிறுத்தையின் செயலை நேரில் பார்த்த தோட்டத் தொழிலாளி தெரிவிக்கையில், சிறுத்தையொன்றும் அதன் குட்டியும் அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை பிடிப்பதற்காக, தேயிலைத் தோட்டத்துக்குள் நுழைந்தன. அப்போது அந்த சிறுத்தை, நாய் ஒன்றை வேட்டையாட முயன்றுள்ளது. அவ்வேளை அருகிலுள்ள பல நாய்கள் ஒன்றுகூடி சிறுத்தையையும் அதன் குட்டியையும் துரத்தியுள்ளன. துரத்தி வரும் நாய்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள் சிறுத்…
-
- 0 replies
- 109 views
-
-
41வது திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கைப் பெண் சபீனா யூசப்! 22 Jan, 2026 | 11:10 AM அமெரிக்காவில் நடைபெறவுள்ள 41வது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சபீனா யூசப் (Sabina Yusuf) என்ற பெண் பங்குபற்றவுள்ளார். இப்போட்டியில் பங்குபற்றுவதற்காக சபீனா யூசப் என்ற பெண் நேற்று புதன்கிழமை (21) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா நோக்கி பயணமானார். 41வது திருமதி உலக அழகிப் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் ஜனவரி 22 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் உலகில் உள்ள 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்கவுள்ளனர். சபீனா யூசப் என்ற பெண் “திருமதி இலங்கை உலக அழகி 2025” பட்டத்தை முடிசூட்டி…
-
-
- 5 replies
- 482 views
- 1 follower
-
-
13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தாரா ட்ரம்ப்?! - எப்ஸ்டீன் ஆவணங்களில் வெளியான புதிய திடுக்கிடும் தகவல்கள்! 03 Feb, 2026 | 11:42 AM சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் நியூஜெர்சியில் 13 வயது சிறுமியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன. அமெரிக்காவின் பிரபல தொழிலதிபராக வலம் வந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein), சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாகவும் பெண்கள், சிறுமியரை விநியோகித்து, மறைமுகமாக வியாபாரத் தொடர்பு பேணிவந்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 2019ஆம் ஆண்…
-
-
- 1 reply
- 174 views
- 1 follower
-
-
சீனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை விதிப்பு! மியன்மாரில் ஆள்கடத்தலில் ஈடுபட்ட 11 பேருக்கு சீன அரசாங்கம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. மியான்மரின் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களைக் கடத்திச் சென்று, அவர்களை அடிமைகளாக வைத்து இணைய மோசடிகளில் ஈடுபடுத்தி வந்த பிரபல குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களுக்குச் சீன அரசாங்கம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள கோகாங் பிராந்தியத்தில் குறித்த மோசடி மையங்கள் இயங்கி வந்தன. இந்தக் குடும்பம் அந்தப் பகுதியில் மிகச் செல்வாக்குமிக்க ஒரு மாஃபியா கும்பலாகச் செயல்பட்டு வந்தது. இவர்கள் சீன குடிமக்களைக் குறிவைத்து தொலைபேசி மற்றும் இணையம் ஊடாகப் பல கோடி ரூபாய் மோசடிகளைச் செய்துள்ளதாகக் …
-
- 3 replies
- 274 views
- 1 follower
-
-
மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலை மாணவ தலைவருக்கும், பாடசாலையில் கற்பிக்கும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் உறவின் வீடியோ காட்சிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர் நலகா கலுவேவா அப் பாடசாலையின் அதிபருக்கு பணித்துள்ளார். சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ காட்சிகள் குறித்து கல்வி அமைச்சு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது என்றும் செயலாளர் கூறினார். சம்பவம் தொடர்பாக அதிபர் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நலகா கலுவேவா கூறினார். அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை பெண் ஆசிரியர்கள…
-
-
- 28 replies
- 1.7k views
-
-
'காதலரின் மனைவிக்கு எச்.ஐ.வி ரத்தத்தை செலுத்திய பெண்' - உண்மையில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,UGC கட்டுரை தகவல் துளசி பிரசாத் ரெட்டி பிபிசிக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் சங்கடம் ஏற்படுத்தலாம்) ஆந்திராவில், தான் காதலித்த நபர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த ஒரு பெண், அந்த நபரின் மனைவிக்கு ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஒரு மருத்துவர். அவரது கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் கர்நூல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஜனவரி 9-ம் தேதி நடந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கர்நூல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்து…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது. பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் உத்தியோகத்தரிடமிருந்து 4 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பகஸ்துவ பிரதேசத்தில் வைத்து அம்பகஸ்துவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் சிக்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் அம்பகஸ்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2026/1461687
-
- 0 replies
- 88 views
-
-
லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்! இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன் குழந்தையுடன் தன் தாய் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவருக்கு மயக்க மருந்து கலந்த லட்டு கொடுத்து நபர் ஒருவர் அவரது குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டதாக பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்திலுள்ள அலிஹார் என்னுமிடத்திலிருந்து தன் 10 மாதக் குழந்தையுடன் தன் தாய் வீடான ஜார்க்கண்டுக்கு புறப்பட்டுள்ளார் . இதனிடையே ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் அவருக்கு லட்டு ஒன்றைக் கொடுத்துள்ளார். இது தன் தாய் தன் கைப்பட செய்தது என்று கூறிய அந்த நபர், உதவியாக அவரது குழந்தையையும் தன் கையில் வாங்கிவைத்துக்கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் சுயநினைவிழந்துவிட்ட பெண், பின்னர் நினைவு திரும்பும்போது அந்…
-
- 0 replies
- 104 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமானது. அதன் போது கண்டியை சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர் , புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பதிவுகளை மேற்கொண்டு , விடுதியில் தங்கியிருந்து , மருத்துவபீட விரிவுரை மண்டபத்திற்கு விரிவுரைகளுக்கு கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கற்கை செயற்பாட்டின் போது மாணவர்களை குழுக்களாக பிரித்துள்ளனர். அதன் போ…
-
-
- 19 replies
- 1.3k views
- 1 follower
-
-
யாழில். முதியவர் படுகொலை – இருவருக்கு மரண தண்டனை. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் கோடாரி மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ் . மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் ,இன்றைய தினம் வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது. தீர்ப்புக்காக வழக்கு மன்றில் நீதிபதி டி.எஸ் சூசைதாஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிரிகளான இருவரையும் மன்று நியாமான சந்தேகங்களுக்கு அப்பால் குற்ற…
-
- 0 replies
- 152 views
-
-
"குற்றமற்றவள் என நிரூபி" என மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்! Jan 18, 2026 - 10:21 AM "நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு" எனக் கூறி, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரைத் தீக்குளிக்கச் செய்த கணவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு, முனைக்காடு பகுதியில் நேற்று சனிக்கிழமை (17) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். முனைக்காடு நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தி. அனுஷ்வரன் (36) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த பிரகலாதேவி (31) என்பவரைத் திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறார். சம்பவ தினத்தன்று காலை 8.30 மணியளவில் கணவன் - மனைவிக்கு இடையே பண விவ…
-
- 0 replies
- 111 views
- 1 follower
-