செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
இன்று நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார். ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக் கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத் தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால் வருவது கர்ணம் தானே. - போதையனார் இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன. போதையனார் தியரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் (Square root) இல்லாமலேயே, நம்மால் இக்கணிதமுறையை பயன்படுத்த முடியும். -Sasi Dharan
-
- 4 replies
- 2.9k views
-
-
இராமயணத்தின்படி இராமரின் மனைவி சீதையை இராவணன் இலங்காபுரியில் சிறை வைத்த நந்தவனம்தான் அசோக வனம். இன்று இந்த இடம் சீத்தா எலிய என்கிற பெயரால் அறியப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் இருந்து பண்டாரவளை செல்கின்ற வீதியில் சீத்தா எலிய பிரதேசம் அமைந்து உள்ளது. இலங்கையில் சீதைக்கு அமையப் பெற்று உள்ள ஒரே ஒரு கோவில் இது ஆகும். உலகத்திலேயே சீதைக்கு என்று அமையப் பெற்று உள்ள ஒரே ஒரு கோவிலும் இதுதான் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இக்கோவிலை கட்டியவர் யாழ்ப்பாண தமிழன் ஒருவர் ஆவார். கு. ச. அருணாசலம் என்பவர். இவரின் சொந்த இடம் வல்வெட்டித்துறை. இவர் சீதா எலிய பிரதேசத்தில் ஓவசியராக கடமை ஆற்றியவர். ஆலயத்துக்கு வடக்கே அனுமாரின் முக வடிவத்தில் ஒரு மலை காணப்படுகின்றது. சீதா பிராட்ட…
-
- 3 replies
- 1k views
-
-
திருமண மண்டபத்தில் இருந்து நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளையை மணக்க மறுத்து, தர்ம அடி கொடுத்து மணப்பெண் விரட்டியடித்த சம்பவம், வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கோணம்பேட்டையை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் பிரீத்தி. இவருக்கும், பெங்களூரு விஜினாபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும், வாணியம்பாடியில், நேற்று முன்தினம் (26ம் தேதி) காலை திருமணம் நடப்பதாக இருந்தது. அதிகாலை, 4 .30 மணிக்கு மணப்பெண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய மணமகன் சதீஷையும், அவரது உறவினர்களையும் பெண் வீட்டார் தேடினர். சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களை திருமண மண்டபத்தில் காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், சதீஷை பல இடங்களில் தேடியும் கிடை…
-
- 2 replies
- 778 views
-
-
i வெள்ளையனுக்காய் குண்டு போட்ட யாழ்ப்பாணம்! இன்றுவரை புலம்பெயர் தமிழர்களை பற்றி கேவலமாகவும், இளக்காரமாகவும் பல நகைச்சுவைகளை சொல்லிவரும் நம்மவர்களுக்கு இது சமர்ப்பணம். நான் அவுஸ்திரேலிய வந்து அதிகமாக சென்ற இடம் அநேகமாக இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிகழ்வுகளுக்குதான். ஒரு காரணம் எனக்கும் வேறு பொழுதுபோக்கு இல்லை ரெண்டாவது இலங்கையில் நம் பழைய மாணவர் சங்கம் இளையவர்களை எந்தளவுக்கு அணைத்துக்கொண்டது என்பதில் இருந்த சந்தேகமும்தான். ஒரு மாதத்தின் முன்பு ஆண்டு நிறைவுக் கூட்டத்துக்கு சென்ற போது வழக்கம் போல வீர முழக்கம் கேட்டது ஏற்கனவே கேட்டவைதானே என்று நான் அசட்டையாக இருந்தாலும் அன்று கேட்ட ஒரு விடயம் என்னை முழுக்க முழுக்க ஆச்சரியக் கடலில் தள்ளியது. இங்கிலாந்தின் …
-
- 0 replies
- 584 views
-
-
-
ஓஸ்லோ: பூமியைத் தாக்கிய சூரியப் புயல் நார்வே, ஸ்காட்லாந்து, வடக்கு இங்கிலாந்து, கனடா மற்றும் ரஷ்யாவின் சைபீரிய பனிப் பிரதேசத்தில் மிக அழகிய ஒளி வெள்ளத்தை ஏற்படுத்தியது. சூரியனில் நிகழும் அணு இணைவு, அதி பயங்கர வெப்பம் காரணமாக மின் காந்த கதிர் வீச்சு (electro magnetic waves) ஏற்படுகிறது. சதா காலமும் உருவாகி வரும் இந்த மின் காந்த வீச்சுக்கள் சில நேரங்களில் மாபெரும் வெடிப்புடன் பல பில்லியன் கி.மீ. தூரம் பயணிப்பது வழக்கம். சூரியனின் மையமான கரோனாவில் இருந்து பீறிட்டுக் கிளம்பும் இந்த சூரியப் புயல் (solar storm) அண்ட வெளியில் நாம் நினைத்தும் பார்க்க முடியாத தூரத்தை படு வேகத்தில் எட்டும். பூமியில் பருவ காலங்கள் இருப்பது மாதிரி சூரியனிலும் பருவ காலம் உள்ளது. 11 ஆண…
-
- 0 replies
- 535 views
-
-
'இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும், தாய்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, எங்களைவிட இன்னும் வேகமாகப் போராடும்!' என்று ஈழ மண்ணின் குரல் ஒன்று தமிழகத்தில் ஒரு பேரலையை உருவாக்கியுள்ளது. இத்தனைக்கும் அவர் ஆயுதம் ஏந்தி, தேச விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலி அல்ல. எழுத்துக்களால் ஏவுகணைகளை வடிக்கும் ஒரு பேனாப் போராளி. அதுவும், அறுபதுகளையும் தாண்டிய ஒரு பெண் படைப்பாளி. தமிழ்க் கவி என்ற பெயருடன் தமிழர்களுக்கெல்லாம் அறிமுகமான அவர் ஒன்றும் சிங்கள அடக்குமுறைக்கும், ஆயுதங்களுக்கும் பயந்து, அகதியாகத் தமிழகம் நோக்கிக் கடல் கடந்தவரல்ல. தமிழீழ விடுதலைப்…
-
- 0 replies
- 455 views
-
-
நீச்ச்சலுடையில் இளம்பெண்களுக்கு பாதுகாவலர் பயிற்சி. சீனாவில் எதிர்ப்பு வலுக்கிறது. சீனாவில் உள்ள தியாஞ்சியோ சிறப்பு பாதுகாப்பு அமைப்பு என்ற ஒரு தனியார் நிறுவனம் பெண் பாதுகாவலர்களை நியமித்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழகத்தில் பயின்ற பட்டதாரி மாணவிகள். இங்கு பணிபுரியும் பெண்களுக்கு பலவிதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. http://www.youtube.com/watch?v=30yiG9fkR8A&feature=player_embedded தற்போது, இந்த பெண்களுக்கு நீச்சல் உடையில் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கிளுகிளுப்பான நீச்சல் உடையில் அவர்கள் எடுக்கும் பயிற்சி போட்டோக்கள் இண்டர்நெட்டில் உலா வருகின்றன. இது சீனாவில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத…
-
- 0 replies
- 463 views
-
-
சூரியனில் இருந்து வரும் அதிசக்தி வாய்ந்த காந்தப் புயல் பூமியை தாக்கும் என நாசாவிண் வெளி ஆய்வுமையம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சூரியனில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து இந்த சூரியப் புயல் நொடிக்கு 2000 கிலோமீற்றர் வேகத்தில் பூமியைநோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூரியப் புயல் நேற்றுமுதல் இன்று வரையான காலப்பகுதியில் மூன்று வித்தியாசமான நேரங்களில் பூமியைத் தாக்கும் என நாசா எச்சரித்துள்ளது. சூரியப்புயலின் தாக்கம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் என்றும் உயர்ரக அலைவரிசை வானொலியைப் பயன்படுத்தும் விமானங்களில் தொடர்பு துண்டிக்கப்படும் என்றும், விண்வெளியில் ஆராச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் மையங்களிலிருந்து பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட…
-
- 4 replies
- 1.2k views
-
-
அது என்ன ‘ஒப்பரேஷன் ட்ரஸ்ட்”? ஒப்பரேஷன் ட்ரஸ்ட்” என்ற இந்த இராணுவ நடவடிக்கை பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றால், உலக இராணுவ விவகாரங்கள் பற்றிய அறிவு உங்களுக்கு போதாது என்றுதான் கூறவேண்டும். ஒரு நாட்டின் உளவுப் பிரிவு சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட மிக முக்கியமானதும், மிகவும் பிரபல்யமானதுமான ஒரு நடவடிக்கைதான் இந்த Operation Trust என்ற இராணுவ நடவடிக்கை. ஒரு தேசத்தின் ஆட்சிக்கு எதிராகப் புலம்பெயர்ந்த அந்த தேசத்து மக்கள் சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட ஒரு புரட்சியை மிகவும் வெற்றிகரமாக அடக்கி ஒடுக்கிய ஒரு இராணுவ நடவடிக்கைதான் Operation Trust. இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது உலக மட்டத்தில் ஒரு காலத்தில் மிகவும் பிரபல்யமான ஒரு உளவு அமைப்பாக வலம் வந்த கே.ஜீ.ப…
-
- 0 replies
- 409 views
-
-
சுக்கிரனும், சந்திரனும் அருகருகே காட்சியளிக்கும் அரிய நிகழ்வு இன்று வானில் நிகழவுள்ளது. இதுகுறித்து டில்லியில் உள்ள நேரு கோளரங்க இயக்குனர் அரவிந்த் பரஞ்பி தகவல் வெளியிடுகையில், "சுக்கிரன் கோளமும், சந்திரனும் இன்று அருகருகே காட்சியளிக்கும்" என்று கூறியுள்ளார். ஸ்பேஸ் அமைப்பின் இயக்குனர் தேவ்கான் குறிப்பிடுகையில், "சூரியன் மறைந்த பிறகு சந்திரன் பிறை வடிவத்தில் தெரிந்தாலும், பூமியின் நிழல் பிரதிபலிப்பு காரணமாக, நிலவின் பிறைவடிவத்தின் மற்றொரு பாதியும் இன்று ஒளிரும் படியாக காட்சியளிக்கும். சுக்கிரனும், சந்திரனும் அருகே வருவதால் இரண்டையும் சாதாரண கண்ணால் பார்க்க முடியும்' என்று கூறியுள்ளார். http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 555 views
-
-
ஆப்கானிஸ்தானின் வட பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலையில் தாயொருவர், ஆறு குழந்தைகளை ஒரே தடவையில் பிரசவித்துள்ளார். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை சுமப்பது தொடர்பாக குறித்த பெண் தெளிவுபடுத்தப்படவில்லை என்பதுடன், முறையான சிகிச்சைகளையும் பெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்ட அதேநாளில் மூன்று பெண் குழந்தைகளயும், மூன்று ஆண் குழந்தைகளையும் குறித்த பெண் பிரசவித்துள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். சீரான சிகிச்சைகளைப் பெறாமல் ஆறு குழந்தைகள் பிரசவித்துள்ளமை மிகவும் அரிதாகவே நிகழ்வதாக வைத்தியர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.உலகில் அதிகூடிய தாய் மற்றும் குழந்தை இறப்பு வீதம் காணப்படும் நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 606 views
-
-
இலங்கையில் நீதியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை! ஊடகம், சிவில் சமூகம், சிறுபான்மையினரிடம் தொடரும் அடக்குமுறை என மனித கண்காணிப்பகத்தின் 2012ம் ஆண்டுக்குரிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை எகிப்திய தலைநகர் கெய்றோவில் 2012 ஆண்டுக்குரிய அறிக்கையினை மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. சர்வதேச நாடுகளில் உள்ள மனித உரிமை நிலைவரம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ள மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆண்டறிக்கையில் இலங்கை தொடர்பில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை தருகின்றோம் : கடந்த வருடத்தில் இலங்கை அரசு, நாட்டின் 26 ஆண்டுகால உள்நாட்டு சண்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதை துரிதப்படுத்துவதற்கும் பொறுப்பேற்பதற்கும் த…
-
- 0 replies
- 463 views
-
-
மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் இடம் பெற்றிருக்கின்றன. கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்களுடைய எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசிய அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த தமிழ் எழுத்துக்களையும், எண்களையும் படத்தின் மூலம் காணலாம். www.tamilkathir.com
-
- 0 replies
- 721 views
-
-
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு போராளி என்று சொல்லி 2009ம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் லண்டன் வந்த சங்கீதன் என்பவர் தாம் தான் தலைமைச் செயலகம் எனக் கூறி பல குழப்பங்களைத் தோற்றுவித்து இருந்தார் என்பது யாவரும் அறிந்த விடையம். மாவீரர் தின நிகழ்வுகளில் பிழவு விளையாட்டுப் போட்டிகளில் பிழவு என பல பிழவுகளை இவர் ஏற்படுத்தி இருந்தார். சங்கீதன் என்னும் பெயரை இவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்துள்ளார் என்பதும் சங்கீதன் என்பது இவர் பெயர் அல்ல என்பதும் தற்போது ஆதாரபூர்வமாக நிரூபனமாகியுள்ளது. சங்கீதன் என்னும் புலனாய்வுப் போராளி 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி முள்ளிவாய்க்காலில் வீரமரணம் அடைந்துள்ளார். லெப்டினன் கேணல் தரத்தில் இருந்த சங்கீதன் இறந்த பின்னர் அவர் பெயரை எடுத…
-
- 0 replies
- 665 views
-
-
யேர்மனியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சிலர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக உயர்வு இணையம் அறிகிறது. மாவீரர்நாள் காலப்பகுதியில் பல குழப்பங்களை யேர்மனியில் ஏற்படுத்தி வந்து பின் போட்டி மாவீரர்நாளை நடத்தி மூக்குடைபட்டு குறுகிய சிலர் மட்டும் கலந்து கொண்டு அவர்களால் நடத்தப்பட்ட போட்டி மாவீரர்நாள் வெற்றியளிக்காததால் மனமுடைந்து விரக்த்தியில் போட்டி நிகழ்வுகளிலிருந்து ஒதுங்கும் நிலைக்கு வந்துள்ள பலரையும் உச்சாகப்படுத்தும் நிமித்தம் பிரித்தானியாவில் தலைமைச்செயலகம் என்று சொல்லி தமிழர்களுக்குள் பிழவுகளை ஏற்படுத்தி வரும் சங்கீதன் என்ற நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக யேர்மனிக்கு வந்துள்ளதாக உயர்வு இணையத்திற்கு நம்பகமான வட்டாரத்தில் இருந்து செய்தி கிடைத்துள்ளது. …
-
- 2 replies
- 697 views
-
-
டெல்லி: கையால் உணவு ஊட்டுவது தவறு என்று கூறி நார்வேயில் வசிக்கும் இந்திய தம்பதிகளின் 2 குழந்தைகளை அந்நாட்டு அதிகாரிகள் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் அனுருப். அவரது மனைவி சகாரிகா பட்டாச்சாரியா. அவர்களுக்கு 3 வயதில் மகனும், 1 வயதில் மகளும் உள்ளனர். அனுருப் தனது குடும்பத்துடன் நார்வேயில் வசித்து வருகிறார். அனுருப் தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு நம் நாட்டு வழக்கப்படி கையால் உணவு ஊட்டியுள்ளனர். இதைப் பார்த்த நார்வே நாட்டு குழந்தைகள் பாதுகாப்பு சேவைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கடுப்பாகி விட்டனர். ஏனென்றால் அந்த நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு கையால் உணவு ஊட்டுவது …
-
- 13 replies
- 1.5k views
-
-
'டிரகுலா' குரங்கினம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது பூமியில் இருந்து முற்றாக அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட 'மிலர்ஸ் கிரிஸ்லெட் லெங்குர்' (Miller's Grizzled Langur) என்ற குரங்கினமானது போர்னியோ தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை சைமன் ப்ரேசர் என்ற கனடா நாட்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அக்குரங்குகளின் புகைப்படங்களையும் தமது கண்டுபிடிப்புக்கான ஆதாரமாக வெளியிட்டுள்ளனர். இக் குரங்குகளின் முகத்தோற்றமானது 'டிரகுலாவை' ஒத்திருப்பதால் இவை 'டிரகுலா' குரங்குகள் என அழைக்கப்படுகின்றன. இத்தகவலானது விலங்கியல் ஆய்வாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துமென இவற்றைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். போர்னியோ (Borneo) உலகி…
-
- 0 replies
- 807 views
-
-
ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! லண்டன்: ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ தேவாலயத்தை சுற்றிப்பார்த்த சீன சுற்றுலாப் பயணிகள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவில் தேவாலயக் கண்ணாடியில் மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் ஆவி உருவம் தெரிவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த சிலர் ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கிளாஸ்கோவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் தேவாலயத்தை வீடியோ எடுத்தனர். பின்னர் வீடியோவைப் போட்டுப் பார்த்தபோது அதில் தேவாலயக் கண்ணாடி ஒன்றில் மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் ஆவி உருவம் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர். உடனே அந்த வீடியோவை ஆவிகள் குறித்து ஆய்வு செய்யும் எழுத்தா…
-
- 4 replies
- 2.9k views
-
-
STAR VIJAY http://www.youtube.c...d&v=DMFeg8FIRaQ http://www.youtube.com/watch?v=jyxhc87-DdQ&feature=player_embedded
-
- 1 reply
- 5.4k views
-
-
சிறிலங்கா அரச தரப்புடன் சுமார் ஒரு வருட காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாத்திவந்த மூடுமந்திரப் பேச்சுவார்த்தையின் இலக்கு தற்போது புரிய ஆரம்பித்துள்ளது. தரவே மாட்டேன் என்ற அடம்பிடித்தலுடன் மகிந்த ராஜதானிகளது இறுக்கத்தைக் கலைத்து, அவற்றைப் பெற்றுவிட்டோம் என்ற இறுமாப்புடன் தமிழீழத்திற்கு மாற்றீடாக மாகாணசபையை ஏற்றுக்கொள்ளும் திட்டத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நகர்வதாகவே புலப்படுகின்றது. அதாவது, கடந்த மூப்பது வருடங்களுக்கும் மேலாகத் தமிழ் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட பரிபூரண சிங்கள மேலாதிக்கம் கொண்ட மாகாணசபையினை ஏற்றுக்கொள்வதனூடாக தமிழீழ மக்களது தமிழீழ இலட்சியத்தையும், அதற்கான விடுதலைப் புலிகளது அர்ப்பணிப்புக்களையும், உயிர்த் தியாகங்களையும் அதனுள் புதைத்துவ…
-
- 1 reply
- 614 views
-
-
புற்று நோயால் பாதிக்கப்பட்ட நாக பாம்புக்கு அறுவைச் சிகிச்சை January 18, 2012 கோவை மாநகராட்சி உயிரியல் பூங்கா நேரு விளையாட்டு அரங்கம் அருகில் அமைத்துள்ளது, இங்கு மான், மயில், குரங்கு பாம்பு மற்றும் பல்வேறுவிதமான உயிரினங்கள் கூண்டுக்ளில் அடைக்கப்பட்டுள்ளது.இதில் நாகபாம்பு, கண்ணாடி விரியன், கொம்பேறி மூக்கன், மலைப்பாம்புகள் என பல்வேறு வகையான பாம்புகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஐந்து வயது உடைய ஓரு நாக பாம்புக்கு கடந்த ஒரு வருடமாக வயிற்றில் ஒரு “கட்டி” ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த “கட்டி” வளர்ந்து கொண்டே வந்தது, இதனால் அந்த நாக பாம்புக்கு உணவு உண்பதிலும், சுவாசிப்பதிலும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதை கவனித்த உயிரியல் பூங்கா அதிகாரிகள் கால்நடை மருத்துவர்களிடம் க…
-
- 3 replies
- 644 views
-
-
சிவ மேனகை பெற்றோலியத்தை சீராக பெறுவதற்கு இந்து சமுத்திரத்தை கடைய போகும் சீனாவும் அமெரிக்காவும் ,,,,,,,,,,,,,,,,, அமிர்தத்தை பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை மத்தாகவும் வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தார்கள் . ,வலிதாங்க முடியாமல் பாம்பு விசத்தை கக்கியது ,அமிர்தத்துக்கு பதிலாக வந்த விசத்தை சிவபெருமான் உட்கொண்டு உலக மக்களை காப்பாற்றினார் ,,இது புராணம் கூறும் வரலாறு இன்றைய புது யுகம் எமக்கு சொல்லபோவது என்னவென்றால் இலங்கையை மத்தாகவும் இந்தியாவை கயிறாகவும் கொண்டு சீனாவும் அமெரிக்காவும் இந்து சமுத்திரத்தை குண்டுகளால் குடைய போகின்றார்கள் பொற்றோல் வருகின்றதா எரியும் நச்சு வாயு வருகின்றதா என்பதை பொற…
-
- 2 replies
- 960 views
-
-
ஒரே வீட்டில் வாழும் பெண்ணும் அவளின் இரு காதலர்களும் அமெரிக்காவில் வசித்துவரும் ஒரு இளம் பெண் ஆண் ஒருவருடன் வாழ்ந்து வந்தாள். சிறிது காலத்தின் பின்னர் அவளுக்கு பிள்ளை வேண்டும் என்கிற ஆசை வந்துவிட அதை அவள் தனது காதலனிடம் கூறியிருக்கிறால். ஆனால் காதலனுக்கோ பிள்ளை தமக்குத் தேவையில்லை என்கிற அபிப்பிராயமே இருந்துவந்துள்ளது. ஆனால் தனது காதலியை திருப்திப்படுத்த காதலனோ அவளுக்கு ஒரு யோசனை சொன்னான், அதாவது" நீ வேண்டுமென்றால் இன்னொருவனுடன் சேர்ந்து பிள்ளையைப் பெற்றுக்கொள் எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை" என்று கூற அவளும் இன்னொரு காதலனைத் தேடிக் கண்டுபிடித்து அவன் மூலம் ஒரு பிள்ளையையும் பெற்றுக்கொண்டாள். இப்போது பிள்ளைக்கு 5 வயது. பெண், அவளின் இரு காதலர்கள், அவளின் மகன் என நான்குபேர…
-
- 19 replies
- 3.2k views
-
-