செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
பாகிஸ்தானில் தொடரும் அவலம்; கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, மதம் மாற்றி திருமணம் செய்த 44 வயது நபர் பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக இளம்பெண்களை கடத்தி சென்று, இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்து பின்னர் கட்டாய திருமணம் செய்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலம் ஆக கூறப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் வசித்து வருபவர் அலி அசார் (வயது 44). இவர் அர்ஜூ ராஜா என்ற 13 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி சென்று, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, ஆவணங்களிலும் மாற்றம் செய்து திருமணம் செய்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு பிறந்த சிறுமியின் பள்ளி ஆவண பதிவிலும், சர்ச்சில் உள்ள ரெஜி…
-
- 0 replies
- 316 views
-
-
சிக்கிமில் 82 வயது மூதாட்டி ‘பாராகிளைடரில்’ பறந்து சாகசம் சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ராங்கா என்று சிறு நகரத்துக்கு அருகில் பாராகிளைடிங் முனை அமைந்திருக்கிறது. அங்கிருந்து, 82 வயது துக்மித் லேப்ச்சா என்ற அந்த மூதாட்டி பாராகிளைடரில் பறந்தார். வானில் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் 6 நிமிடங்கள் பறந்த அவரை, கீழிருந்து அவரது குடும்ப உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மற்றும் சிக்கிம் பாராகிளைடிங் சங்கத்தினர் ஆரவார ஒலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். சிக்கிம் மாநிலத்தில் பாராகிளைடரில் பறந்த மிக அதிக வயதுள்ளவர் லேப்ச்சாதான் என்று அம்மாநில பாராகிளைடிங் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்குமுன், ஒரு 68 வயது ஆண் அந்த சாதனைக்குச் சொந்தக்…
-
- 0 replies
- 397 views
-
-
அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய பேராசிரியரை, ஒசாமா பின்லேடன் போல் உள்ளதாக கூறி, மர்ம கும்பல் தாக்கியது. அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச வெளியுறவு துறை பேராசிரியராக இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர் பிரப்ஜோத்சிங் பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு ஹர்லோம் அருகே அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்தது. நீ ஒசாமா பின்லேடன் போல் இருக்கிறாய்? நீ தீவிரவாதியா என கேட்டு, அவரை சரமாரியாக அடித்து உதைத்தது. இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. பற்கள் உடைந்தன. படுகாயமடைந்த பிரப்ஜோத்சிங் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, அவரது நண்பரும், பிஎச்டி ஆய…
-
- 0 replies
- 251 views
-
-
டோக்கியோ: தான் வளர்த்து வரும் 120 பூனைகளுக்கு உணவளிப்ப்பதற்காக, கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான பணம் மற்றும் நகைகளைத் திருடிய நபர் ஒருவரை ஜப்பான் போலீசார் கைது செய்துள்ளனர். ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள இசுமி நகரைச் சேர்ந்தவர் 48 வயது மமோரு டெமிஸ் என்ற நபர். வருமானத்திற்கென வேலை எதையும் செய்யாத இந்நபர், வீட்டில், தெருவிலும் என மொத்தமாக கிட்டத்தட்ட 120 பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்துள்ளார். பூனைகளை தனது நண்பர்களைப் போல் பாவித்து வளர்த்த டெமிஸ், அவற்றிற்கு உணவிடுவதற்காக இதுவரை 32 இடங்களில் கொள்ளையடித்துள்ளாராம். இதுவரை அவர் கொள்ளையிட்ட பொருட்களின் மதிப்பு, 185 ஆயிரம் அமெரிக்க டாலர் ஆகும். அதாவது, இந்திய மதிப்பில் ரூ ஒரு கோடியே 14 லட…
-
- 0 replies
- 477 views
-
-
ஆசிரியர் அறைந்ததால்... செவிப்பறை பாதிப்பு – யாழ் வைத்தியசாலையில், மாணவன்! ஆசிரியர் அறைந்ததால் செவிப்பறை பாதிப்படைந்து தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள பிரபல கல்லூரி ஆசிரியரே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு அறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவரது செவிப்பறை சவ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1283212
-
- 0 replies
- 228 views
-
-
மேட்டூர் : கிராமத்தில் உள்ள பக்தர்கள் பலர் உடல்நலக் குறைவால் பாதிப்பதற்கு கோவிலை சுற்றி உலவும் பேய்களே காரணம் என குறி சொன்னதால், நேற்று பக்தர்கள் கோவிலில் இருந்து பேயை விரட்டி அம்மனுக்கு பூஜைகள் செய்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா, சாம்பள்ளி கோயில்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. கிராம மக்கள் நான்கு மாதத்திற்கு முன் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தினர். கும்பாபிஷேகம் நடத்திய பின், விழா குழுவினர் பலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதற்கு என்ன காரணம் என கிராம மக்கள் சிலர் ஒரு சாமியாரிடம் குறி கேட்டுள்ளனர். கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திய போதிலும், கெட்ட ஆவி ஒன்று கோவிலை சுற்றி உலவுவதால் அம்மனால் பக்தர்களுக்கும், கிராமத்திற்கும்…
-
- 0 replies
- 493 views
-
-
பசுக்களுக்கு ஆதார் அட்டை மத்திய அரசு முடிவு - புகைப்படம், ரேகை ஸ்கேனிங் எல்லாம் உண்டாம்...! டெல்லி: முதல்கட்டமாக 50 கோடி செலவில் 4 கோடி பசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு, அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைகளும், அதனால் உயிரிழப்புகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருமளவு ஏற்பட்டது. பசு கடத்தல் காரர்கள், இறைச்சிக்காக கொண்டு செல்கின்றனர் என பசுவின் உரிமையாளர்கள் …
-
- 0 replies
- 220 views
-
-
சாதனை களத்தில் அரங்கேறிய காதல் தென் ஆப்பிரிக்க, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய போட்டியின் போது ஒரு காதல் ஜோடியின் செயல்பாடு அனைவரிம் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இமாலய ஓட்டங்களை நொறுக்கி ஒரு புறம் சாதனைகளை குவித்துக் கொண்டிருக்க போட்டியை பார்க்க தனது தோழியுடன் வந்த ரசிகர் திடீரென்று தனது தோழியை பார்த்து என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்டார். இந்த சம்பவத்தை ஓட்டங்கள் குறிக்கும் பலகையில் அப்படியே ஒளிபரப்பப்பட்ட அனைவரும் திகைத்து ஒருகணம் அதிசயித்து நிற்க அவரின் தோழி அந்த காதலை ஏற்றுக் கொண்டு அவரை கட்டிபிடித்துக் கொண்டார். தென் ஆப்பிரிக்க அணி இமாலய ஓட்டங்களை நொறுக்கி ஒரு புறம் சாதனைகளை குவித்துக் கொண்டிருக்க மறுபுறம் இந்த அழகான காதல் வ…
-
- 0 replies
- 474 views
-
-
400 மொழிகள் பேசும் 10 வயது தமிழ் சிறுவன் அக்ரம்
-
- 0 replies
- 843 views
-
-
40 வயதான அமெரிக்க தாய் (Kateri Schwandt) ஒருவர் இரண்டு தசாப்தங்களாக 13 ஆண் பிள்ளைகளை தொடர்ச்சியாகப் பெற்று சாதனை படைத்துள்ளாராம். பிள்ளைகளின் விரபம் வருமாறு.. Tyler, 22, followed by Zach, 19, Drew, 18, Brandon, 16, Tommy, 13, Vinnie, 12, Calvin, 10, Gabe, 8, Wesley, 6, Charlie, 5, Luke, 3, and 21-month-old Tucker. இது காணாதென்று.. 14 வது பற்றி முடியாதுன்னு சொல்ல முடியாதுன்னு இந்தப் பசங்களின் அப்பா சொல்லுரார் என்றால் பாருங்களன். இவா தான் அந்த சாதனை தாய். 13வது வரவு. நன்றி: http://www.bbc.co.uk/news/world-us-canada-32742438?post_id=10152826440157944_10152830319807944#_=_
-
- 0 replies
- 725 views
-
-
Basil Rajapaksa insulted Thondaman - CWC MP [TamilNet, Friday, 03 August 2007, 14:39 GMT] A leading Ceylon Workers Congress (CWC) member and CWC parliamentarian Muttu Sivalingam Friday told media at Kotagala in the up-country that their party would sit as an independent group in the opposition seats of the Sri Lankan parliament following their resignation of ministerial portfolios Thursday. The CWC decision to withdraw its support was made following the disagreement on 'Mahinda Chintanaya'. Mr. Muttu Sivalingam accused Mr. Basil Rajapaksa, the brother and political advisor of SL President Mahinda Rajapaksa for verbally abusing the CWC leader Arumugam Thondaman for…
-
- 0 replies
- 941 views
-
-
தமிழக மீனவர்களுக்கு எதிராக தமிழீழ மீனவர்களை பயன்படுத்தும் சிங்கள பேரினவாதம் தமிழக மீனவர்கள் இலங்கைப் பிரதேசத்திற்குள் அத்துமீறி மீன் பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டே சிங்கள பேரினவாதம் 500 மேற்பட்ட தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றது. தமிழக மீனவர்களுக்கு இதுவரை எதுவித நீதியும் வழங்கப்படவில்லை. மறுபுறம் தமிழீழ மீனவர்களை தமிழக மீனவர்களுக்கு எதிராக களம் இறக்குகின்றது சிங்கள பேரினவாதம். தமிழீழ மீனவர்களுக்கு தமிழக மீனவர்களால் ஏற்படக்கூடிய ஒரு எல்லைதாண்டிய மீன்பிடி என்பதை விட சிங்கள பேரினவாதம் தமிழீழ மீனவர்களுக்கு போட்டிருக்கும் தடைகள் ஏராளம். தமிழீழ மக்களின் பகுதிகளில் மீன் பிடிக்க தமிழர்களுக்கு தடைவிதித்து, சிங்கள மீனவர்களை மீன் பிடிக்க மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கின…
-
- 0 replies
- 385 views
-
-
வெலிஓயா – நிக்கவெவ தெற்கு பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவிலிலிருந்த, பிள்ளையார் சிலையொன்று, காணாமல் போயுள்ளதென, வெலிஓயா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்திலுள்ள பெரும்பான்மையின மக்களால், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட, மிகவும் பெறுமதியான பிள்ளையார் சிலையே காணாமல் போயுள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது. வெலிஓயா பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் நெல் அருவடையின் பின்னர், பெறப்படும் முதலாது அரிசியை குறித்த பிள்ளையார் சிலைக்கே படைத்து பூஜை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போன பிள்ளையார் சிலையை கண்டுபிடிப்பதற்கான, விசாரணைகளை வெலிஓயா பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்…
-
- 0 replies
- 296 views
-
-
விந்தணுவால் மட்டும் மாதம் 5 லட்சம் லாபம்… எருமை மாடுனு யாரையும் திட்டாதீங்க! Kumaresan MNov 12, 2024 16:33PM ராஜஸ்தானில் எருமை மாடு ஒன்றை 23 கோடிக்கு ஏலம் கேட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் ஆண்டுதோறும் சர்வதேச புஷ்கர் கண்காட்சி நடைபெறும். இதுவே இந்தியாவின் பெரிய கால்நடை கண்காட்சி ஆகும். இந்த கண்காட்சியில் கோடிக்கணக்கில் குதிரைகள் ஏலம் போகும். குதிரைகளை விட இந்த கண்காட்சியில் இருந்த அன்மோல் என்கிற முரா ரக எருமை மாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஹரியானா மாநிலம் சிர்ஷா பகுதியை சேர்ந்த ஜகத் சிங் என்பவருக்கு இந்த எருமை சொந்தமானது. சுமார் 13 அடி நீளம், 6 அடி அகலம் 1500 கிலோ எடை கொண்ட அன்மோல் எருமை கண்காட்சியில் ஹ…
-
- 0 replies
- 375 views
-
-
இணையத்தளம் ஒன்றிற்கு தகவல்களை வழங்கும் ஒற்றர்கள் சிலர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குள் இருக்கின்றனர். இவர்களில் ஒருவரேனும் சிக்கினால் அவர்களுக்கு அரச காலத்து தண்டனை வழங்கப்படும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஜநாயக்க தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தள்ளது. பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரன் கொலை தொடர்பான மேலதிக அறிக்கையை நீதிமன்றத்திற்கு வழங்குவதற்கு முன்னர் அதிலுள்ள தகவல்கள் குறித்த இணையத்தளத்தில் பிரசுரமாகியிருந்தன. இதுவே பிரதிப் பணிப்பாளர் சமீபத்தில் ஆத்திரமடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்யும் அறிக்கையில்இ பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரன் மீதுஇ துமிந்த சில்வா தற்ப…
-
- 0 replies
- 410 views
-
-
இங்கிலாந்து சிறுவனின் உயிரைக் காக்கும் வயாகரா! வியாழக்கிழமை, மார்ச் 13, 2008 லண்டன்: வாலிப, வயோதிகர்களுக்கு 'தெம்பைக்' கொடுக்கப் பயன்படும் வயகாரா, 2 வயது சிறுவனின் உயிரைக் காத்து வருகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் ஆலிவர் ஷெர்வுட். இவனுக்கு அரிய நுரையீரல் ரத்த அழுத்த நோய் உள்ளது. இதற்காக இவனுக்கு டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து என்ன தெரியுமா?. வயாகரா! தினசரி நான்கு டோஸ் வயகாரா சாப்பிட்டு வருகிறான் ஷெர்வுட். இதனால் அவனது உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து தற்காலிகமாக தடுக்கப்பட்டிருக்கிறது. ஷெர்வுட்டுக்கு வந்துள்ள நோயால் அதீத ரத்த அழுத்தம் ஏற்படும். சாதாரண மார்புத் தொற்று ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும். ஆனால் வயாகரா சாப்பிடுவதன் மூலம்…
-
- 0 replies
- 921 views
-
-
இலங்கை-இந்திய இராஜதந்திர உறவுகளைச் சீர்குலைப்பதற்கு வைகோ மற்றும் சீமான் குழுவினர் சதி செய்கின்றனர். இதன் வெளிப்பாடே தமிழகத்தில் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டமாகும் என்று சிறு ஏற்றுமதிப் பயிர் ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். இத்தகைய போராட்டங்களைப் பெரிதாக்கி இந்தியாவுடன் பகையை ஏற்படுத்திக் கொள்வது தேவையற்ற விடயமாகும். ஏனெனில் உள்நாட்டிலும் வெளிநாட்டுத் தூதரகங்கள் முன்பாகப் படுத்துப் புரண்டெல்லாம் போராட்டங்கள் செய்கின்றனர். இதற்காக அமெரிக்கா, இலங்கையிடம் கோபித்துக் கொண்டால் அதில் அர்த்தம் இல்லை. எனவே அர்த்தமற்ற விடயங்களுக்கு விளம்பரங்கள் வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சிறு ஏற்றுமதிப் பயிர் ஊக்குவிப்பு அமைச்சில் நேற்று …
-
- 0 replies
- 490 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஹஃப்சா கலீல் பதவி, பிபிசி நியூஸ் 2 மே 2025, 05:19 GMT ஜப்பானின் மிகவும் பரபரப்பான புல்லட் ரயில் பாதைகளில் ஒன்றின் மின் கம்பியில் பாம்பு சிக்கிக் கொண்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் புல்லட் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. டோக்கியோ மற்றும் ஒசாகா இடையே இயங்கும் டோகைடோ ஷின்கான்சென் ரயில் சேவை, புதன்கிழமையன்று உள்ளூர் நேரப்படி மாலை 5:45 மணிக்கு நிறுத்தப்பட்டது. பிறகு மீண்டும், மாலை 7 மணிக்கு புல்லட் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் இப்போது கோல்டன் வீக் எனப்படும் பரபரப்பான விடுமுறைக் காலம். இந்த ஒரு வாரத்தில் நான்கு தேசிய விடுமுறைகள் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் ரயில…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
பாலை கல்லாக மாற்றும் காணொளி.. [Wednesday, 2012-08-29 10:23:59]
-
- 0 replies
- 362 views
-
-
ஜெர்மனி நாட்டின் லிண்ட்லர் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில், வாடிக்கையாளர்களை 5 முதல் 6 அடி வரை இடைவெளி விட்டு நிற்க சொல்லும் ரோபோ, அனைவரையும் கவர்ந்துள்ளது. பெப்பர்ஸ் (Peppers) என்றழைக்கப்படும் இந்த ரோபோ, சென்சார்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இடையே உள்ள தூரத்தை கணக்கிட்டு, அவர்கள் நெருங்கி வரும் வேளையில், கனிவான குரலில் தள்ளி நிற்க சொல்லி, சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்துகிறது. கொரோனாவால், மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கு, பெப்பர்ஸ் ரோபோவின் குரல், புத்துணர்ச்சி ஊட்டுவதாக தெரிவிக்கின்றனர். https://www.polimernews.com/dnews/105566/வாடிக்கையாளர்கள்-நெருங்கிநின்றால்-எச்சரிக்கும்-ரோபோ
-
- 0 replies
- 355 views
-
-
உடனடி விவாகரத்து பெறுவதற்கு பெண் முயற்சித்ததால் 7 மணித்தியாலங்கள் தாமதமடைந்த விமானப் பயணம் புறப்படுவதற்குத் தயாராகவிருந்த விமானமொன்றில் இருந்த பெண் ஒருவர், தனது கணவரிடமிருந்து உடனடியாக விவாகரத்து பெறுவதற்கு முற்பட்டதால் அவ்விமானப் பயணம் 7 மணித்தியாலங்கள் தாமதமடைந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. மொஸ்கோவிலிருந்து விளாடிவொஸ்டொக் நகரை நோக்கி புறப்படவிருந்த விமானமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. “ரோஸியா எயார்” நிறுவனத்துக்குச் சொந்தமான பாரிய பயணிகள் விமானமொன்றில் நூற்றுக்கணக்கான பயணிகள் இருந்தனர். அவர்களில் ஒருவ…
-
- 0 replies
- 158 views
-
-
'மனதை தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்...!'- டிரம்ப்புக்கு கிரீன் டீ அனுப்பிய கொல்கத்தா நிறுவனம்! நியூயார்க்: உடலையும், மனதையும் தூய்மைப்படுத்துவதற்காக டொனால்ட் டிரம்ப்புக்கு, கொல்கத்தா தேயிலை தயாரிப்பு நிறுவனம் ஒன்று கிரீன் டீ அனுப்பியுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் பிரபல ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது, மக்களிடம் வெறுப்பை தூண்டும் விதமாக பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.…
-
- 0 replies
- 244 views
-
-
உலகின் சந்தோஷமான நாடு நார்வே உலகிலேயே நார்வே தான் சந்தோஷமான நாடு ஆகும். பிற நாடுகளை ஒப்பிடுகையில் இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டு உள்ளது. பொருளாதாரத்தில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது நார்வே. 2வது சந்தோஷமான நாடு டென்மார்க் உலகின் சந்தோஷமான டாப் 20 நாடுகள் பட்டியலில் 4வது ஆண்டாக இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு டென்மார்க். 3வது இடத்தில் ஸ்வீடன் கடந்த 2009ம் ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் 7வது இடத்தில் இருந்த ஸ்வீடன் இந்த ஆண்டு 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு 4வது இடம் உலகின் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. உலக அளவில் ஆஸ்திரேலியா கல்வியில் 2வது இடத்திலும், தனிநபர் சுதந்திரத்தில் 3வது இடத்தில…
-
- 0 replies
- 868 views
-
-
சவுதி அரேபியாவில் வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதால், இந்த ஆண்டு, ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பக்ரீதையொட்டி, சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, உலகம் முழுவதும் இருந்து ஏராளமான முஸ்லிம் யாத்திரிகர்கள், புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு, 32 லட்சம் பேர், பக்ரீத் பண்டிகையின் போது, மெக்காவில் கூடினர். தற்போது, அரேபியாவில், நுரையீரலை பாதிக்கும் வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை, 50 பேர் இந்த காய்ச்சலால், உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சவுதி அரசு, நோயாளிகள் பலரை "ஹஜ் பயணத்துக்கு வரவேண்டாம்' என தடுத்து விட்டது. இதன் காரணமாக, கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு, ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை, 20 சதவீதம் குறைந்…
-
- 0 replies
- 368 views
-
-
தரமான கல்வி தேடி இந்தியாவுக்கு ஏராளமான ஆப்பிரிக்கர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் சமீபகாலமாக நம் நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டில் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி பாகுபாடு பிரச்சனைகள் நடப்பது போன்று இந்தியாவிலும் வெளிநாட்டினர்களுக்கு எதிரான இனவெறி பிரச்சனைகள் நடந்தேறி வருகின்றன. ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் தரமான கல்விக்காக டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் மீது டெல்லிவாசிகள் இனவெறி பாகுபாட்டை நடத்துகிறார்கள். இந்தியா முழுவதும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஆப்பிரிக்க மாணவர்கள் தங்கி படிக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் இந்திய பட்டப்படிப்புகளுக்க…
-
- 0 replies
- 253 views
-