செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
மகிந்தவின் அலுவலகத்திற்குள் அமானுஷ சக்திகள்: ராஜபக்ஷர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராபக்சவின் நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் கடந்த சில வாரங்களாக கண் திருஸ்ட்டி, தோசங்கள் ஏற்பட்டுள்ளதாக கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்பட்டுள்ள தோசங்களை கழிக்கும் பூஜைகள், பிரித் பரிகாரங்கள் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அதற்கமைய, அடுத்த மாதம் 3ஆம் திகதி இரவு பூஜை வழிப்பாடுகளை மேற்கொண்டு மறுநாள் காலை தானத்துடன் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. கட்சியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு இது நடத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டாலும், கட்சி அலுவலகத்தில் தற்போது எழுந்துள்ள தேவைய…
-
- 0 replies
- 176 views
-
-
இலங்கை தொடர்பான ‘அமெரிக்காவின் சதி’யை வெளிப்படுத்தியதன் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது உரையாற்றிய விமல் வீரவன்ச, பிரித்தானியாவின் மறைந்த இளவரசி டயானாவின் மரணம் போன்று விபத்தின் ஊடாக தனது மரணம் நிகழக்கூடிய சாத்தியம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த சிஐஏவைச் சுட்டிக்காட்டி, மூளைச்சாவு அடைந்தவர் எந்த விலையிலும் நிரூபிக்கப்படாத வகையில் இந்த விபத்து நடத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவிற்கு எதிரான தனது நிலைப்பாடு மற்றும் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பான தனது புதிதாக வெளியிடப்பட்ட பு…
-
- 3 replies
- 176 views
- 1 follower
-
-
குளியலறையில் வழுக்கி விழுந்த நபரின் தொண்டைக்குள் சிக்கிய பல் துலக்கும் பிரஷின் முன் பகுதி - என்ன ஆனார்? படக்குறிப்பு,பிரேமலால் மற்றும் அவரின் எக்ஸ்ரே படம் கட்டுரை தகவல் தாரகா சம்மனா பிபிசி சிங்கள சேவை 9 மணி நேரங்களுக்கு முன்னர் பல் துலக்குவது எளிதான ஒன்றாக இருந்தாலும் அதுவே ஆபத்தானதாக மாறியது என சொன்னால் நம்ப முடிகிறதா? அப்படியான ஒன்றை தான் இலங்கையில் உள்ள பிரேமலால் எதிர்கொண்டார். சவாலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொண்டையில் சிக்கிய பிரஷின் முன்பாகத்தை (bristle) மருத்துவர்கள் அகற்றி பிரேமலால் உயிரை காப்பாற்றினர். சிகிச்சை முடிந்த பிறகு ஓய்வில் இருந்த பிரேமலாலுடன் பிபிசி சிங்கள சேவை உரையாடியது. "ஜனவரி 23-ஆம் தேதி காலை குளியலறை சென்று பல் துலக்கிய போது எதிர்பாராதவிதமாக வழு…
-
- 1 reply
- 176 views
- 1 follower
-
-
மனைவியை கொலை செய்த கணவன் கைது. வாத்துவை, வேரகம பகுதியில் கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்டவர் வாத்துவ, வேரகம பகுதியைச் சேர்ந்த இஷாரா நிஷாதினி சல்காது என்ற 29 வயதுடைய பெண் ஆவார். உயிரிழந்த பெண்ணுக்கு 6 மாதம் , 3 வயது மற்றும் 6 வயதுடைய மூன்று குழந்தைகள் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்தக் கொலை தொடர்பாக அவரது 37 வயது கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்தையும் பொலிசார் மீட்டுள்ளனர். வாக்குவாதத்தைத் தொடர்ந்து சந்தேக நபர் இந்தக் கொலையைச் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1420321
-
- 1 reply
- 176 views
-
-
300 நோயாளிகள் மீது பாலியல் வன்கொடுமை: பிரான்ஸ் மருத்துவர் வாக்குமூலம்! சிகிச்சைக்காக வந்த 300 பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில், முன்னாள் பிரான்ஸ் அறுவைசிகிச்சை மருத்துவர் ஜோல் லே மீது வழக்குத் தொடரப்பட்ட விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் குறித்த மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்த 300 பேரில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளதுடன் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களும் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தான் மிகவும், அருவறுக்கத்தக்க செயல்களை செய்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகத் தான் மிக மோசமான குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்கள் அடைந்த காயங்க…
-
- 0 replies
- 175 views
-
-
எருதாக மாறி நிலத்தை உழுத முதியவரின் விவசாய கடனை அடைத்த அமைச்சர் லத்தூர்: மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதி லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர் செய்வதற்கு தேவையான எருதுகள் அல்லது டிராக்டரை வாங்க அவருக்கு வசதி இல்லை. அவற்றுக்கு ஒரு நாளைக்கு ரூ.2,500 வாடகை கேட்பதால், தானே எருதாக மாறி அம்பதாஸ் பவாரும் அவரது மனைவி முக்தாபாயும் பல ஆண்டுகளாக நிலத்தை ஒரு மரக்கலப்பை மூலம் உழுது விவசாயம் செய்து வருகின்றனர். விவசாய கடனை கூட அடைக்க முடியாமல் மிகவும் வறுமையில் வாடி வருகின்றனர். இந்த வீடியோ கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதை பார்த்த நெட்டிசன்கள் மிகவும் பரிதாபப்பட்டு…
-
- 0 replies
- 174 views
-
-
ஏற்றுமதித் தொழிற்துறையைச் சுற்றியுள்ள சவால்கள் தொடர்பாக அநுரகுமார திசாநாயக்க தலைமையில் முக்கிய கலந்துரையாடல் அரசாங்கம் கவிழும் என்ற பிரச்சாரம் நகைச்சுவைத் தனமாகும் – அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவிப்பு வடக்கில் இராணுவத்திடமிருந்த காணிகள் விடுவிக்கப்படும் சில சந்தர்ப்பங்களில், தென்பகுதி அரசியல்வாதிகள் சிலர் அதற்கு எதிராகக் இன்றும் கருத்துத் தெரிவிப்பதாக வட மாகாண கருத்து தற்போதைய அரசின் மீதான நம்பிக்கை சீர்குலைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்
-
- 0 replies
- 174 views
-
-
13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தாரா ட்ரம்ப்?! - எப்ஸ்டீன் ஆவணங்களில் வெளியான புதிய திடுக்கிடும் தகவல்கள்! 03 Feb, 2026 | 11:42 AM சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் நியூஜெர்சியில் 13 வயது சிறுமியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன. அமெரிக்காவின் பிரபல தொழிலதிபராக வலம் வந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein), சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாகவும் பெண்கள், சிறுமியரை விநியோகித்து, மறைமுகமாக வியாபாரத் தொடர்பு பேணிவந்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 2019ஆம் ஆண்…
-
-
- 1 reply
- 174 views
- 1 follower
-
-
தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM. உலகின் முதல் தங்க ATM இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த ATM நிறுவனமானது ஷாங்காய் வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை, நாணயத்தை விற்று பணமாக்க பலரும் விரும்புகின்றனர். ஆனால், நஷ்டமின்றி தங்கத்துக்கு ஈடான முழுப்பணமும் எங்கும் கிடைக்காது என்பதால். தங்கத்தை விற்க பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இதனைத் தவிர்க்கும் வகையில் சீனாவின் ஷாங்காய் நகரில், ‘சைனா கோல்ட்’ என்ற நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தங்க ATM சீன மக்களிடம் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த இயந்திரத்தில், நகையை வைத்தால், அதை எடை போட்டு, எவ்வளவு என்பதை திரையில் காட்டும். அதை ஏற்று ஒப்புதல் அளித்தால், தங்கம் …
-
- 0 replies
- 173 views
-
-
2025; தீர்க்கத்தரிசிகளின் ஒரே மாதிரியான திகிலூட்டும் கணிப்புகள். உலகின் புகழ்பெற்ற தீர்க்கத்தரிசிகளான பாபா வங்கா மற்றும் மைக்கேல் டி நோஸ்திரதாம் ஆகியோர் 2025 ஆம் ஆண்டிற்கான பெரும்பாலும் ஒரே மாதிரியான கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். துல்லியமான கணிப்புகளுக்கு பெயர் பெற்ற இந்த புகழ்பெற்ற தீர்க்கதரிசிகள், மனிதர்களுடன் அன்னிய தொடர்பு, விளாடிமிர் புட்டின் மீதான கொலை முயற்சி, பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட வியக்கத்தக்க வகையில் ஒரே மாதிரியான தீர்க்கதரிசனங்களைச 2025 ஆம் ஆண்டுக்கு கணித்துள்ளனர். இவர்கள் 470 வருட இடைவெளியில் பிறந்திருந்தாலும், நவீன வரலாற்றில் இதுவரை நடக்காத சில பெரிய நிகழ்வுகளை இருவரும் கணித்துள்ளனர். பாபா வங்கா (Baba Vanga) பாபா வங்…
-
- 0 replies
- 173 views
-
-
உலக சாதனை படைத்த பூசணிக்காய் படகு! (வீடியோ) அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தைச் சேர்ந்த கேரி கிறிஸ்டென்சன் என்பவர் இராட்சத பூசனிக்காய் படகில் பயணம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். 46 வயதான அவர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தனது தோட்டத்தில் இராட்சத பூசணிக்காய்களை வளர்த்து வருகிறார். அதன்படி இந்த ஆண்டு சுமார் 500 கிலோ எடை கொண்ட பூசணிக்காய் ஒன்றை வளர்த்த அவர் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் குறித்த பூசனியை படகாக மாற்றியுள்ளார். அதன் பின்னர் குறித்த படகினைப் பயன்படுத்தி கொலம்பியா ஆற்றில் சுமார் 73 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளார். அதன்படி போன்வில்லே நகரில் இருந்து வான்கூவர் வரை 73 கிலோ மீற்றர் தூரத்துக்கு அவர் அந்த படகில் பயணித்துள்ளார். 26 மணி நேர…
-
-
- 1 reply
- 173 views
- 1 follower
-
-
இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுவன் ஒருவனுக்கு இடது கண்ணுக்கு பதில் வலது கண்ணில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 7 வயது சிறுவனின் இடது கண்ணில் தொடர்ந்து நீர் வந்து கொண்டே இருந்ததால், அவனது பெற்றோர் அவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனின் கண்ணை சோதனை செய்த வைத்தியர் அவனது கண்ணுக்குள் மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றிவிடலாம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் சிறுவனின் கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக தவறுதலாக வலது கண்ணில் அறுவை சி…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
ஆபாச காணொளிகளை பதிவு செய்த தம்பதி கைது Published By: Digital Desk 3 09 Nov, 2025 | 03:51 PM ஆபாச காணொளிகளை பதிவு செய்து பிரித்தானிய இணையத்தளம் ஒன்றில் பதிவேற்றிய திருமணமான தம்பதி நுகேகொடை சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவர் தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் பட்டம் பெற்றவர் எனவும், மனைவி தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் உளவியல் டிப்ளோமா பட்டம் பெற்றவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வெள்ளிக்கிழமை (08) ராஜகிரியவில் உள்ள வீடொன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த தம்பதி மூன்று மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் வசித்து வந்துள்ளதோடு, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கீழ் தளங்களில்…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
பந்தயத்தின்போது தீப்பற்றிய கார் : ஜப்பானில் சம்பவம் By DIGITAL DESK 3 11 NOV, 2022 | 01:46 PM ஜப்பானில் நடைபெற்ற காரோட்டப் பந்தயத்தின் போது காரொன்று தீப்பற்றி அழிந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. ஹையுண்டாய் (Hyundai) அணியின் கார் ஒன்றே இவ்வாறு தீப்பற்றியது. அக்காரின் சாரதிகளான ஸ்பெய்னைச் சேர்ந்த டெனி சோர்டோ மற்றும் கென்டிடோ கரேரா ஆகியோர் போட்டியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. மரங்கள் அடர்ந்த வீதியொன்றின் ஊடாக இக்கார் சென்றுகொண்டிருந்தபோது அது திடீரென தீப்பற்றியது. காரின் சாரதி டெனி சோர்டோ இதுதொடர்பாக கூறுகையில், காரின் ஆசனங்களுக்கு இடையிலிருந்து பெற்றோல் வாசனையும் தீயும் வருவதை த…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
நாய் கூண்டில் நாய்களுடன் 6 பிள்ளைகளை அடைத்து வைத்திருந்த பெற்றோர்! நாய்கள் அடைக்கப்பட்டிருந்த கூண்டில் 6 பிள்ளைகளை அடைத்து வைத்து பெற்றோர் சித்திரவதை செய்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில், தாம் பெற்ற பிள்ளைகளையே சித்திரவதை செய்த குற்றத்திற்காக டிராவிஸ் டாஸ் (31) மற்றும் அவர் மனைவி அமண்டா ஸ்டாம்பர் (33) ஆகிய இருவரை பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர். 2 வயது முதல் 11 வயது வரையுள்ள 6 குழந்தைகளுக்கு பெற்றோரான குறித்த இருவரும் தமது பிள்ளைகளை நீண்ட நாட்களாகத் தாக்கி வந்துள்ளதோடு அவர்களுக்கு உணவளிக்காமல் நாய் கூண்டுகளில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து வந்துள…
-
- 0 replies
- 173 views
-
-
பட மூலாதாரம்,FACEBOOK/KANGALA WILDLIFE RESCUE படக்குறிப்பு,வலேரி, நாய் கட்டுரை தகவல் எழுதியவர், பிராண்டன் ட்ரெனன் பதவி, பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆஸ்திரேலியா நாட்டின் காட்டுப் பகுதிகளில், சுமார் 500 நாட்களைக் கழித்தபின் 'மினியேச்சர் டாஷண்ட்' என்ற வகையை சேர்ந்த ஒரு நாய் உயிரோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதியில் உள்ள கங்காரு தீவில் 'வலேரி' என்ற பெயர் கொண்ட அந்த நாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல நாட்கள் 'இரவும் பகலும்' செலவழித்ததாக கங்காலா வனவிலங்கு மீட்புக் குழு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அவர்கள் செய்த ஒரு கேம்ப்பிங்க் (camping) பயணத்தின்போது வலேரி நாய் தங்களிடமிருந்து ொலைந்து போனதாக அதன் உரிமையாளர்கள் …
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
வரலாறு காணாத வறட்சி – 700 உயிரினங்களை கொன்று மக்களுக்கு வழங்க திட்டம். தென் ஆப்பிரிக்காவின் பல பிரதேசங்களில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. அந்த நாடுகளின் தரவுப்படி கடந்த 40 ஆண்டுகளில் இது மாதிரியான வறட்சியை எதிர்கொண்டது இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 83 யானைகள் உள்ளடங்கலாக சுமார் 700 வன உயிரினங்களை கொல்ல உள்ளதாக நமீபியா அறிவித்தது. இந்நிலையில், நமீபியாவை தொடர்ந்து ஜிம்பாப்வேயிலும் யானைகளை கொன்று மக்களுக்கு உணவாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வறட்சி வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 50 …
-
- 0 replies
- 173 views
-
-
இலங்கை மத்திய வங்கி கடந்த ஆண்டு சேதமடைந்த அல்லது சிதைக்கப்பட்ட 238.5 மில்லியன் நாணயத்தாள்களை அழித்துள்ளது. மத்திய வங்கியின் கூற்றுப்படி, 2022 இல் அழிக்கப்பட்ட நோட்டுகளின் பெறுமதி ரூ. 207.3 பில்லியன். நாட்டில் சுத்தமான மற்றும் தரமான நோட்டுகளின் புழக்கத்தை உறுதி செய்வதற்காக மத்திய வங்கி அவ்வப்போது சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களை அழித்து வருகிறது. மத்திய வங்கி 2021 இல் 108.2 மில்லியன் ரூபா மதிப்புள்ள நாணயத்தாள்களை அழித்ததுடன் அதன் பெறுமதி 44.3 பில்லியன் ரூபாவாகும், 2020 ஆம் ஆண்டில் 127.3 மில்லியன் மதிப்பிழந்த நாணயத் தாள்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி 62.2 பில்லியன் ரூபாவாகும். மேலும், 2019 ஆம் ஆண்டில், 139.8 பில்லியன் ரூபா பெறுமதியான 235 மில்லியன் நா…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிப்பு முல்லைத்தீவு பொலிஸ் பிரிவின் குருந்தூர் மலை பகுதியில் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த நேரம் கைதுசெய்யப்பட்ட விவசாயிகள் இருவரும் விடுதலை வடக்கு வைத்தியசாலைகளில் மோசடிகள் மற்றும் ஊழல்களுக்கான விமர்சனங்கள் எழுந்துள்ள போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை எந்தவொரு கணக்காய்வு நடவடிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டு
-
- 0 replies
- 172 views
-
-
ஆளில்லா விமானத்தால் இருளில் தவித்த ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்கள் By T. SARANYA 30 SEP, 2022 | 10:20 PM உணவு விநியோகம் செய்யும் ஆளில்லா விமானம் மின் வலையமைப்பில் மோதியதால் ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்கள் தங்கள் வீடுகளில் மின்சார தடையால் தவித்துள்ளார்கள். நேற்று வியாழக்கிழமை பிரவுன்ஸ் ப்ளைன்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் தெற்கு பிரிஸ்பேனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் இவ்வாறு மின்சார தடையால் பாதிக்கப்பட்டார்கள். குறித்த சம்பவம் முதல் முறை இடம்பெற்றுள்ளதாக மின் வலையமைப்பிற்கு பொறுப்பான குயின்ஸ்லாந்து எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மின் வலையமப்பு நிறுவனம் 2,000 பேருக்கு 45 நிமிடங்களில் மின் தடையை…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
மனிதனை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை! இந்தியா முழுவதும் தெருநாய் பிரச்சனை ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்து இருக்கும் நிலையில் இது தொடர்பாக உத்தரபிரதேச அரசு ஒரு வினோதமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு தெருநாய் காரணமே இல்லாமல் இரு முறை மனிதர்களைக் கடித்தால் அந்த நாய்க்கு ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில காலமாகவே இந்தியாவில் தெருநாய் பிரச்சனை மிக மோசமான ஒன்றாக மாறியிருக்கிறது. தெருநாய் பிரச்சனையைக் கையாள உச்ச நீதிமன்றமும் கடந்த மாதம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தது. மேலும், இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது…
-
- 1 reply
- 172 views
-
-
ஆபாச வெப்கேம் பெண்ணின் படத்தை வைத்து 'போலி காதல்' - கோடிக்கணக்கில் மோசடி பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு முன்னாள் ஆபாச நட்சத்திரத்தின் புகைப்படங்களை பயன்படுத்தி மக்களிடமிருந்து லட்சக்கணக்கான டாலர்கள் ஏமாற்றி பறிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு அதிகம் பேர் இந்த காதல் மோசடியில் சிக்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வனேசாவுடன் தங்களுக்கு உறவு இருப்பதாக கருதும் வெவ்வேறு ஆண்களிடமிருந்து வனேசா ஒவ்வொரு நாளும் செய்திகளைப் பெறுகிறார். இந்த ஆண்களில் சிலர் வனேசா தங்கள் மனைவி என்று பெருமைப்படுகிறார்கள். அந்த செய்திகளை அனுப்பும் பல ஆண்கள் கோபமா…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
யாழில். ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் உயிரிழப்பு! வீதியோரமாக இருந்த ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சரசாலை பகுதியை சேர்ந்த வைத்திலிங்கம் சிவராஜன் என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் கடந்த 16ஆம் திகதி வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில், தனிப்பட்ட தேவைக்காக வெளியில் சென்ற சமயம், கொடிகாமம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த சீமெந்தினால் ஆனா உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் முதியவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்திருந்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்ப…
-
- 0 replies
- 172 views
-
-
அமெரிக்காவில் கொந்தளிக்கும் எரிமலையின் விளிம்பிற்குச் சென்ற குழந்தை - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு புவியியலாளர் கால்டெராவின் விளிம்பில் வெப் கேமராவை சரிபார்க்கிறார் கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்செஸ்கா ஜில்லட் பதவி, பிபிசி செய்தி அமெரிக்காவின் ஹவாய் தேசியப் பூங்காவில் ஒரு குழந்தை மிகச் சரியான தருணத்தில், ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பியதைத் தொடர்ந்து பூங்கா நிர்வாகம் புதிய எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது. "அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள ஹவாய் தேசியப் பூங்காவில் ஒரு குழந்தை தனது குடும்பத்தினரை விட்டு தள்ளிச் சென்று கண்ணிமைக்கும் நொடியில் கிலாவியா எரிமலையின் 400 அடி…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
ஈபேயில் விற்பனைக்கு விடப்பட்ட நவாஸ் ஷெரீப்: ஆரம்ப விலை 62 இலட்சம் ரூபா inShare பிரபல வணிக இணையத்தளத்தில் ( eBay) பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை விற்பனைக்கு விடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவாஸ் ஷெரீப் தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக லண்டனில் தங்கியுள்ள நிலையில், அவரை விற்பனைக்கு விடுவதாக அந்த இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டிருந்ததுடன் அவரது ஆரம்ப விற்பனை விலை 62 இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விற்பனைப் பொருள் குறித்த விளக்கத்தில் நவாஸ் ஷெரீப் கடுமையாக விமர்சிக்கப்பட்…
-
- 0 replies
- 171 views
-