Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இஸ்ரேலின் கடும் தாக்குதலால் இருளடைந்து கிடக்கும் காசா நகரில் மின்சாரம் தயாரித்து ஒளி ஏற்றி வைத்திருக்கிறான் ஒரு சிறுவன். காசாவில் நடந்து வரும் இஸ்ரேலின் தாக்குதல்களால் அங்குள்ள பலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவையும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசித் தேவைகளுக்கு மக்கள் மிகவும் அல்லல்பட்டு வருகின்றனர். அப்படி இருளில் மூழ்கி இருக்கும் காசா நகர மக்களின் வாழ்க்கையில் 15 வயதான இளம் விஞ்ஞானி ஹுசாம் அல் – அத்தார் நம்பிக்கை ஒளி ஏற்றி வைத்திருக்கிறார். அவரது கண்டுபிடிப்புகளின் விளைவால் ‘காசாவின் நியூட்டன்’ என அவரை தற்போது மக்கள் அன்புடன் அழைக்க…

  2. கையடக்கத்தொலைபேசிகளிற்கு வரும் அழைப்புகளிற்கு பதிலளித்தால் உங்கள் தொலைபேசிகள் வெடிக்கும் என வெளியாகியுள்ள வீடியோ செய்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என இலங்கையின் கணிணி அவசர தயார் நிலை குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தவிடயம் குறித்து தங்களுடன் பலர் தொடர்புகொண்டுள்ளனர் என கணிணி அவசர தயார் நிலை குழுவின் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர்சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 13 அல்லது 4 என்ற இலக்கங்களிலிருந்து அழைப்பு வந்தால் அவற்றிற்கு பதில் அளிக்கவேண்டாம். அதற்கு பதில் அளித்தால் உங்கள் கையடக்க தொலைபேசி உடனடியாக வெடித்துச்சிதறும், இது ஏற்கனவே இடம்பெற்றுள்ளது சிங…

  3. மாதுரு ஓயா தேசிய பூங்காவில் மயில் ஒன்றை வேட்டையாடி கொன்று சமைத்து உணவாக உட்கொண்ட காட்சி சமூக ஊடகங்களில் ஒன்றான யூடியூப் தளத்தில் பகிரப்பட்ட காணொளி தொடர்பில் வெளிநாட்டு பிரஜை மற்றும் நான்கு வேடுவச் சமூகத்தினர் மீது வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த காணொளி ‘கோ வித் அலி’ (Go With Ali) என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ளது. அதில் தேசிய பூங்காவிற்குள் ஒரு குழுவினர் மயில் ஒன்றை வேட்டையாடி விறகு அடுப்பில் சமைத்து உட்கொள்ளும் காட்சி காணொளியாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு பிரஜை மற்றும் நான்கு வேடுவச் சமூகத்தினர் அடங்கிய குழுவினர் தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக உட்பிரவேசித்தமை தொடர்பில் முதல்…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES 7 ஜூன் 2023 உங்கள் துணிகளை துவைப்பதற்கு நீங்கள் சோம்பலாக உணர்கிறீர்களா? ஒரு ஜீன்ஸ் பேண்டை வாரக்கணக்கில் துவைக்காமல் பயன்படுத்துகிறீர்களா? துணிகளில் அதிகமான அழுக்கோ, துர்நாற்றமோ வந்தால் மட்டும்தான் துவைப்பது குறித்து யோசிக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் ‘நோ வாஷ் இயக்கத்தில் ’ (No wash Movement) ஒருவர். இந்த கட்டுரை உங்களுக்கானது. உலகம் முழுவதும் தங்களது துணிகளை துவைக்க விரும்பாத அல்லது மிக அரிதாகவே துவைக்க விரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. துணிகளை குறைவாக துவைப்பதே நல்லது என்பதை வலியுறுத்தும் விதமாக மேற்கத்திய நாடுகளில் ‘No wash Club’ என்ற ஒன்று உருவாக்கப…

  5. குருநாகல் எரிவாயு விற்பனை நிலையத்தில் தீ விபத்து-நால்வர் உயிரிழப்பு! குருநாகல் வெஹெர பிரதேசத்தில் எரிவாயு விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1427845

  6. வைத்தியரால் நிலைகுலைந்த - மாவை,சிறிதரன் மூன்று மாதங்கள் மட்டுமே எம்.பி Vhg அக்டோபர் 06, 2024 நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சி.சிறிதரன், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையின் முதல் படியாக விளக்கம் கோரி பதில் பொதுச் செயலாளர் வைத்தியர் பா.சத்தியலிங்கத்தால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை யாழ்ப்பாண புலனாய்வு அறிந்துள்ளது. இவ்வாறான கடிதத்தை அனுப்புவதாயின் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது பொதுவான விதி, அவ் விதி இங்கு மீறப்பட்டுள்ளது. இவ்வாறான கடிதம் எழுதுவதற்கு முன்னர் கட்சி தலைவருடன் பொதுச் செயலாளர் கலந்துரையாட வில்லை. …

  7. Published By: VISHNU 21 AUG, 2025 | 03:35 AM மட்டக்களப்பில் இந்திய சினிமாவில் வரும் காட்சி போல நீதிமன்றத்துக்கு சென்று வெளியே வந்த பெண் ஒருவரை பெண் ஒருவர் உட்பட்ட ஒரு குழுவினர் இணைந்து அவரின் வாயை பொத்தி இழுத்துச் சென்று ஆட்டோவில் ஏற்றிய போது அவரை காப்பாற்ற சென்ற உறவினரை அடித்து கீழே தள்ளிவிட்டு பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை (19) காலையில் நீதிமன்றத்துக்கு முன்னால் உள்ள வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இத பற்றி தெரியவருவதாவது; 27 வயது பெண் ஒருவர் 29 வயதுடைய ஆண் ஒருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2023 பதிவு திருமணம் செய்துவிட்டு தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார் அவ்வாறே காதலன் அவரது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர். இந்த நிலையில்…

  8. வெளிநாட்டுக்குச் செல்லவிருந்த யாழ் இளைஞர் விபத்தில் மரணம்! கனடா நாட்டிற்கு செல்வதற்கு தயாராக இருந்த இளைஞன் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்., மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி – புத்தூர் வீதியில், நேற்று முன்தினம் இரவே இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த பகுதியில் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து, மதிலுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில், மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளான். மட்டுவில் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பி.பானுஜன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த இளைஞன் இன்று கனடாவுக்கு பயணம் செய்வதற்கு தயாராக இருந்தவர்…

  9. Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 01:14 PM இலங்கையில் 97 வயது மூதாட்டி ஒருவர் முதுமாணிப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற களனிப் பல்கலைக்கழகத்தின் 143ஆவது பட்டமளிப்பு விழாவில் லீலாவதி தர்மரத்ன என்ற மூதாட்டி பௌத்த கற்கைகளில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். இளந்தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக திகழும் அவர் பட்டம் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல” என தெரிவித்துள்ளார். லீலாவதி தர்மரத்ன இதற்கு முன்னர் ஆசிரியையாகவும் நோட்டரி அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். https://www.virakesari.lk/article/192017

  10. இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86 ஆவது வயதில் கடந்த 9 ஆம் திகதி காலமானார். இவர் டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் சொத்து உள்ளது. ரத்தன் டாடா எப்போதும் வளர்ப்பு நாய்களுடன் இருப்பார். வளர்ப்பு நாய்கள்தான் அவருக்கு உயிராகும். அவர் தனது வீட்டில் ஜேர்மன் வகையைச் சேர்ந்த டிட்டோ என்ற ஒரு நாயை ஆசையாக வளர்த்து வந்தார். அவர் இறப்பதற்கு முன்பு தனது வளர்ப்பு நாய்க்கு சொத்து எழுதி வைத்துவிட்டு சென்று இருக்கிறார். மேற்கத்திய நாடுகளில் நாய்களுக்கு சொத்துகளை எழுதி வைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்தியாவில் மிகவும் அபூர்வமாகத்தான் அது போன்று சொத்து எழுதி வைப்பது வ…

  11. நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு கனகராசா சரவணன்,பாறுக் ஷிஹான் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உருக்குலைந்துள்ள சடலம் ஒன்று இருப்பதாக பொதுமக்கள் புதன்கிழமை (05) மாலை தகவல் வழங்கியதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை முள்ளிமலையடி பிரதேசத்தில் இந்த சடலம் தொங்கிய நிலையில் நின்று கொண்டிருந்தது. குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு கிழமையாக துர்நாற்றம் வீசி வந்துள்ள நிலையில் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் அந்த பகுதியை சுற்றி சோதனையிட்டபோது அங்கு மரம் ஒன்றில் தொங்கி உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தனர் இதனையடுத்து குறித்த பகுதியில் யானைகள் நடமாடுவதால் அங்கு பொலிஸார் செல்…

  12. கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விமான நிறுவனத்தின் முன்பதிவு தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 101 வயது மூதாட்டி ஒருவரை குழந்தை என்று தவறாக பதிவு செய்து பயணச்சீட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 101 வயது மூதாட்டியான பாட்ரிசியா (தன் குடும்பப் பெயரை பகிர விரும்பாதவர்) விமானத்தில் பயணிக்க பயணச்சீட்டு பதிவு செய்த போது தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணச்சீட்டு விநியோக தளத்தால் பாட்ரிசியா 1922 இல் பிறந்தவர் என்பதை கணக்கிட முடியவில்லை, எனவே 2022 இல் பிறந்ததாக தளத்தில் பதிவாகிவிட்டது. சமீபத்தில் நிகழ்ந்த இந்த நகைச்சுவை…

  13. டிக்டோக் நேரலையின் போது மெக்சிகன் பிரபலம் மீது துப்பாக்கி சூடு! அழகு மற்றும் ஒப்பனை தொடர்பான காணொளிகளுக்கு பெயர் பெற்ற சமூக ஊடகத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க இளம் மெக்சிக்கன் பெண்ணொருவர் டிக்டோக் நேரடி ஒளிபரப்பின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். பாலின அடிப்படையிலான வன்முறை அதிகமாக உள்ள ஒரு நாட்டில் இந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. 23 வயதான வலேரியா மார்க்வெஸின் (Valeria Marquez) மரணம், பெண் கொலைக்கான நெறிமுறைகளின்படி விசாரிக்கப்படுவதாக மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாநில வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சபோபன் நகரில் செவ்வாய்க்கிழமை (13) மார்க்வெஸ் பணிபுரிந்த அழகு நிலையத்தில் ஒரு நபர் உள்ளே நுழைந்து அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை…

  14. கடனில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட சீனப்பெண் கடனில் இருந்து தப்பிப்பதற்காக சீனப் பெண் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்ட விபரம் சீன ஊடகங்களில் வௌியாகியுள்ளது. 59 வயது சீனப் பெண் ஜூ நாஜூவான், சீனாவின் வூஹான் நகரத்தில் வசித்து வந்தார். சொந்தக் காரணங்களுக்காக வங்கிகளிடம் இருந்து சுமார் 24.5 கோடி ரூபா கடன் பெற்றிருந்தார். உரிய காலத்தில் கடனை நாஜூவானால் கட்ட முடியாத நிலையில், அவர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என வூஹான் நகர நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் கடன் கட்டுவதில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, தன் முகத்தை மாற்றிக்கொண்டு தென்கிழக்கு சீன நகருக்குத் தப்பிச் சென்றார்…

  15. பட மூலாதாரம்,ALOK KUMAR படக்குறிப்பு, பீகாரில், கோவிந்த் குமார் என்ற ஒரு வயது குழந்தை கடித்த பாம்பு இறந்துவிட்டது கட்டுரை தகவல் சீடூ திவாரி பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பீகார் மாநிலம் பெட்டியாவில் ஒரு வயது குழந்தை பாம்பைக் கடித்ததில் பாம்பு இறந்துவிட்டது. இதுதான் தற்போது மிகப்பெரிய செய்தியாக உருவெடுத்து பரபரப்பாகப் பேசப்படுகிறது. கடிபட்ட பாம்பு, அதிக நச்சுள்ள நாகப்பாம்பு என்று குழந்தையின் குடும்பத்தினர் கூறுகின்றனர். கடந்த வியாழக்கிழமை (2025, ஜூலை 24) நடைபெற்ற இந்த 'பாம்பு கடி' சம்பவத்திற்குப் பிறகு, அனைவரின் கவனத்தையும் அந்தக் குழந்தை ஈர்த்துள்ளது. பாம்பைக் கடித்த குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளது. இந்த வித்தியாசமான சம்பவம், பீகாரின் மேற்கு சம்பாரண் மாவ…

  16. 'கற்பனையை விஞ்சிய நிஜம்': இறுதிச்சடங்கு செய்த 12 ஆண்டுக்குப் பிறகு சுமார் 50 வயதில் உயிரோடு வந்த சகோதரன் பட மூலாதாரம்,Rohini Bhosale படக்குறிப்பு,மருத்துவமனை ஊழியர்களுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் 'சிவம்' கட்டுரை தகவல் துஷார் குல்கர்னி, பிபிசி மராத்தி, பிராச்சி குல்கர்னி, பிபிசி மராத்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் "உண்மை கற்பனையை விட வியப்பானது" என்ற சொற்றொடரை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், அதை நாமே அனுபவிக்கும் வரை அது வெறும் சொல்லாகத்தான் இருக்கும். ஆனால் சிவம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நடந்த சம்பவம், அதை விட வியப்பானது. தாங்களே இறுதிச்சடங்கு செய்த அந்த சகோதரனை, சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம் என்று அவர்கள் ஒருபோதும் நின…

  17. Published By: Digital Desk 3 21 Nov, 2025 | 11:33 AM டுபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிச் சென்ற EK-434 ரக எமிரேட்ஸ் விமானம் வியாழக்கிழமை (20) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீரென நோய்வாய்ப்பட்டதை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், நோய்வாய்ப்பட்ட பயணி மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான ஏர்பஸ் A380 ரக பெரிய அகலமான இந்த விமானம் இரவு 7.15 மணியளவில் கட்டுநாயக்கவில் தரையிறங்கி, பின்னர் இரவு 9.20 மணியளவில் பிரிஸ்பேனுக்குப் புறப்பட்டது. https://www.virakesari.lk/article/230975

  18. 13 Nov, 2025 | 05:08 PM இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் தெருநாய்கள் பிரச்சினையால் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து கோரியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வந்துள்ளார். இது தொடர்பில் கணவர், 'திருமணம் முடிந்த கொஞ்சநாளில் மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் தெருவில் சுற்றி திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்தார். தன் கணவருக்கு சமைக்கிறாரோ இல்லையோ. அந்த தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார். அத…

  19. விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் குஜராத் முதல்வரின் தனிப்பட்ட வாகனங்கள் அனைத்திலும் 1206 என்ற எண்ணே இருந்தது. அதை அவர் தனது அதிர்ஷ்ட எண்ணாக நம்பினார். ஆனால் விதியும் அதே எண்ணைத் தேர்ந்தெடுத்தது. அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி காலமானார். லண்டனில் உள்ள தனது மகனை காண அகமதாபாத்தில் இருந்து விமானத்தில் சென்ற குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்ததாக மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார். இதனிடையே, விஜய் ரூபானி விமான நிலையத்திற்கு செல்லும் கடைசி நிமிடக் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, விஜய் ரூபானி மரணத்தில் எதிர்பாரா மற்றுமொரு சோகம் நிகழ்ந்திருக்கிறது. அது அவரின் இறப்புத் தேதி. விஜய் ரூபானி 1206 என்ற எண் தனது…

  20. பட மூலாதாரம்,ALOK CHAUHAN படக்குறிப்பு, பிரதீப் நேகி (இடது) மற்றும் கபில் நேகி (வலது) ஆகிய இரு சகோதர்களை சுனிதா சௌஹான் (நடுவில்) மணந்தார் கட்டுரை தகவல் சௌரப் சௌஹான் சிர்மெளரிலிருந்து பிபிசிக்காக 28 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் ஹிமாச்சல் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தின் ஷிலாயி கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற திருமணம் குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா செளஹான் என்ற பெண், பிரதீப் நேகி, கபில் நேகி ஆகிய இரண்டு சகோதரர்களை மணந்தார். பட்டியலிடப்பட்ட பழங்குடியினராகப் பதிவுசெய்யப்பட்ட ஹாடி சமூகத்தின் 'ஜோடிதாரா' என்ற பழங்கால நடைமுறையின்படி இந்த பலதார திருமணம் நடைபெற்றது. உள்ளூர் மொழியில் 'ஜோடிதாரா' அல்ல…

  21. மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகம் தெரிவிப்பு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த 20 வருட கடூழிய சிறைத்தண்டனையை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தில் வடக்குக்கு சென்று நிலைமைகளை பார்வையிடவுள்ளதாக தகவல்

    • 0 replies
    • 120 views
  22. எப்போது திருமணம் என்று அடிக்கடிக் கேட்டுக்கொண்டிருந்த முதியவரை அடித்துக் கொன்ற சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது. இந்தோனேசியா, வடக்கு சுமத்திரா பகுதியில் அசிம் இரியான்டோ என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரியொருவர் வசித்து வந்தார். இவரது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த 45 வயது சிரேகர் மீது அதிக அக்கறைக் கொண்ட இவர் சிரேகரைப் பார்க்கும் போதெல்லாம் ”எப்போது திருமணம்?” என்று கேட்டு வந்துள்ளார். இந்தக் கேள்வியால் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர் கடந்த ஜூலை 29 ஆம் திகதி முதியவரின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று மரக்கட்டையால் குறித்த முதியவரைத் தாக்கியுள்ளார். குறித்த முதியவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வைத்தி…

    • 0 replies
    • 120 views
  23. பிலிப்பைன்ஸ்: `புதைக்கப்படாத சவப்பெட்டிகள்’ – 2,000 வருடங்களாகப் பின்பற்றப்படும் விநோத வழக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு பழக்குடி இனம் இறந்தவர்களைப் புதைக்காமல் அவர்களின் உடல்வைக்கப்பட்ட சவபெட்டியை மலைமுகடுகளில் தொங்கவிடும் நடைமுறையைப் பின்பற்றிவருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் சகடா பகுதியில் ராக்பேஸ், இகோரோட் எனும் பழங்குடி மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் கடந்த 2,000 ஆண்டுகளாக இறந்தவர்களைப் புதைப்பதில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களின் இனத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு செய்யவேண்டிய சடங்குகளைச் செய்து, அவரின் உடலைச் சவப்பெ…

  24. ரஷ்யா நாட்டில் செக்ஸிற்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்த ஜனாதிபதி விளாடிமிர் புதின் திட்டமிட்டுள்ளார். இதற்கான காரணம் குறித்த பின்னணி தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ரஷ்யாவுக்கும் – உக்ரைன் நாட்டிற்கும் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இருநாட்டு எல்லையில் உள்ள ஏராளமான பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருகிறார்கள். இதனால் இந்த இரு நாடுகளிலும், மக்கள் தொகை எண்ணிக்கையில் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வலிமையான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ரஷ்யாவுக்கு இந்த மக்கள் தொகை பெருக்கம் குறைவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் ரஷ்யாவில் மக்கள் தொகை குறைந்து வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.