செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7112 topics in this forum
-
டிக்டோக் நேரலையின் போது மெக்சிகன் பிரபலம் மீது துப்பாக்கி சூடு! அழகு மற்றும் ஒப்பனை தொடர்பான காணொளிகளுக்கு பெயர் பெற்ற சமூக ஊடகத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க இளம் மெக்சிக்கன் பெண்ணொருவர் டிக்டோக் நேரடி ஒளிபரப்பின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். பாலின அடிப்படையிலான வன்முறை அதிகமாக உள்ள ஒரு நாட்டில் இந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. 23 வயதான வலேரியா மார்க்வெஸின் (Valeria Marquez) மரணம், பெண் கொலைக்கான நெறிமுறைகளின்படி விசாரிக்கப்படுவதாக மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாநில வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சபோபன் நகரில் செவ்வாய்க்கிழமை (13) மார்க்வெஸ் பணிபுரிந்த அழகு நிலையத்தில் ஒரு நபர் உள்ளே நுழைந்து அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை…
-
- 0 replies
- 128 views
-
-
ஒரு உப்புப் பாக்கெட் 60 ரூபாயாக விலை நிர்ணயம் செய்ய 76 ஆண்டுகள் ஆனது என்றும், எனினும், 60 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக மாற வெறும் ஏழு மாதங்கள் மட்டுமே ஆனது என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகிறார். மற்ற அரசாங்கங்கள் எவ்வளவுதான் லஞ்சம் கொடுக்க முயன்றாலும், ஒரு பாக்கெட் உப்பு அல்லது ஒரு கிலோ அரிசிக்கு ஒருபோதும் லஞ்சம் கொடுத்ததில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்; தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு திறமையின்மைக்கும் முந்தைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மோசடி மற்றும் ஊழல் இல்லாதது என்று கூறும் அரசாங்கம், உண்மையில் அ…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து! எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று நானுஓயாவில் விபத்திற்குள்ளானது. கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கனரக வாகனத்தில் 2 தாங்கிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தினையடுத்து வீதியில் வழிந்தோடிய எரிபொருளை பொதுமக்கள் வாளிகள் மற்றும் போத்தல்களில் எடுத்துச்செல்வதைக் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431854
-
- 0 replies
- 117 views
-
-
தாயொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு நடந்த கதி! தனது 7 வயது பிள்ளையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்க நிதி உதவி கோரிய 30 வயது தாயிடமிருந்து பாலியல் இலஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு அரச அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. தீர்ப்பை வழங்கிய நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெண்டிகே, குற்றவாளியின் வாக்களிக்கும் உரிமை உட்பட அவரது சிவில் உரிமைகளை இரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் ரூ. 20,000 அபராதம் விதித்தார். ஒரு அரசு அதிகாரியாக, குற்றவாளி தனது பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டிய கடமை இருப்பதாகவும், பாதிக்கப்படக்கூடிய பெண்ணிடமிருந்து பாலியல் இலஞ்சம் கேட்பது முற்றிலும் ஏற்ற…
-
- 1 reply
- 1.6k views
- 1 follower
-
-
உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை பெற்றோரே சாகும் வரை பட்டினி போட்டுள்ளனர். இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து குழந்தைகள் உரிமை ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.ஆன்மிக தலைவரின் அறிவுரைப்படி இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் (35) மற்றும் வர்ஷா ஜெயின் (32) தம்பதி ஐ.டி. ஊழியர்கள். இவர்களுடைய 3 வயது பெண் குழந்தை வியானா மூளை கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆன்மிக தலைவரும் சமண துறவியுமான ராஜேஷ் முனி மகராஜின் ஆலோசனையின் பேரில் ‘சந்தாரா’ வழக்கப்படி குழந்தைக்கு உணவு வழங்காமல் பட்டினி போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தக் குழந்தை கடந்த மார்ச் 21-ம் திகதி உயிரிழ…
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
உலக சாதனை படைத்த மாலைதீவு ஜனாதிபதி! மாலைதீவுகளின் ஜனாதிபதி முகமது முயிஸு( Mohamed Muizzu) 15 மணிநேரம் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி உலக சாதனை படைத்துள்ளார். இதனை அவரது அவரின் அலுவலகம் நேற்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு தொடர்சியாக 14 மணிநேரம் 54 நிமிடங்கள் இடம்பெற்றதாகவும், நடுநடுவே தொழுகைக்காக சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவமானது ஓர் ஜனாதிபதி நிகழ்த்திய உலகச் சாதனையாகப் பார்க்கப்படுகின்றது. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, 14 மணிநேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி உலக சாதனை படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க…
-
-
- 2 replies
- 365 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 03 MAY, 2025 | 02:02 PM அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பாப்பரசர் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தோலிக்கர்களின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நித்திய இளைப்பாற்றி அடைந்தார். மறைந்த பாப்பரசருக்கு இலட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்திய நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி இத்தாலியின் உரோமில் பாப்பரசரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த பாப்பரசர் யார் என்பது தொடர்பில் எதிர்வரும் 7 ஆம் திகதி இரகசிய ஆலோசனைக் கூட்டமும் வாக்கெடுப்பும் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம…
-
-
- 2 replies
- 272 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஹஃப்சா கலீல் பதவி, பிபிசி நியூஸ் 2 மே 2025, 05:19 GMT ஜப்பானின் மிகவும் பரபரப்பான புல்லட் ரயில் பாதைகளில் ஒன்றின் மின் கம்பியில் பாம்பு சிக்கிக் கொண்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் புல்லட் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. டோக்கியோ மற்றும் ஒசாகா இடையே இயங்கும் டோகைடோ ஷின்கான்சென் ரயில் சேவை, புதன்கிழமையன்று உள்ளூர் நேரப்படி மாலை 5:45 மணிக்கு நிறுத்தப்பட்டது. பிறகு மீண்டும், மாலை 7 மணிக்கு புல்லட் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் இப்போது கோல்டன் வீக் எனப்படும் பரபரப்பான விடுமுறைக் காலம். இந்த ஒரு வாரத்தில் நான்கு தேசிய விடுமுறைகள் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் ரயில…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
உலகின் மிகவும் வயதான நபராக மாறிய இங்கிலாந்து பெண்! உலகின் மிகவும் வயதான நபர் ஒன்ற பெருமைய இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 115 வயது மற்றும் 252 நாட்களில் பெற்றுள்ளார். அதன்படி, சர்ரேயின் லைட்வாட்டரில் உள்ள ஒரு பராமரிப்பு இல்லத்தில் வசிக்கும் எதெல் கேட்டர்ஹாம் (Ethel Caterham), புதன்கிழமை (01) 116 ஆவது வயதில் உயிரிழந்த பிரேசிலிய கன்னியாஸ்திரியான இனா கனபரோ லூகாஸின் மரணத்தைத் தொடர்ந்து இந்த மைல்கல்லை எட்டினார். இந்தப் புதிய சாதனையை கின்னஸ் உலக சாதனைகள் மற்றும் உலகின் வயதான மக்களின் தரவுத்தளமான லாங்கிவிகுவெஸ்ட் (LongeviQuest) உறுதிப்படுத்தியுள்ளன. எதெல் கேட்டர்ஹாம் 1909 ஆகஸ்ட் 21 அன்று ஹாம்ப்ஷயரில் உள்ள ஒரு கிராமத்தில் எட்டு குழந்தைகளில் இரண்டாவது இளையவராகப் பிறந்தார்.…
-
- 2 replies
- 232 views
-
-
29 APR, 2025 | 12:53 PM மகன் வாங்கிய சீன வெடியை கடித்து பார்த்த பெண் பல் வைத்தியர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பாணந்துறை, வேகட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, படுகாயமடைந்த பெண் பல் வைத்தியரின் மகன் கடை ஒன்றிலிருந்து சீன வெடிகளை வாங்கி வீட்டில் உள்ள மேசையின் மேல் வைத்துள்ளார். இது தொடர்பில் அறிந்திருக்காத பெண் பல் வைத்தியர் மேசையின் மேல் இருந்த சீன வெடியை எடுத்து கடித்து பார்த்த போது அது திடீரென வெடித்துள்ளது. இதனையடுத்து படுகாயமடைந்த பெண் பல் வைத்தியர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெண் பல் வைத்தியரின் வாய் பகுதியில் பலத்…
-
-
- 9 replies
- 575 views
- 2 followers
-
-
பட மூலாதாரம்,FACEBOOK/KANGALA WILDLIFE RESCUE படக்குறிப்பு,வலேரி, நாய் கட்டுரை தகவல் எழுதியவர், பிராண்டன் ட்ரெனன் பதவி, பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆஸ்திரேலியா நாட்டின் காட்டுப் பகுதிகளில், சுமார் 500 நாட்களைக் கழித்தபின் 'மினியேச்சர் டாஷண்ட்' என்ற வகையை சேர்ந்த ஒரு நாய் உயிரோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதியில் உள்ள கங்காரு தீவில் 'வலேரி' என்ற பெயர் கொண்ட அந்த நாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல நாட்கள் 'இரவும் பகலும்' செலவழித்ததாக கங்காலா வனவிலங்கு மீட்புக் குழு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அவர்கள் செய்த ஒரு கேம்ப்பிங்க் (camping) பயணத்தின்போது வலேரி நாய் தங்களிடமிருந்து ொலைந்து போனதாக அதன் உரிமையாளர்கள் …
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என அறிவித்து பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்த சந்தேகநபர்கள் தலை மற்றும் முகங்களை மறைக்கும் வகையில் தலைக்கவசங்களை அணிந்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்லும் போதே தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்றாலும், அது சாரதி மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவரின் பாதுகாப்பிற்காக மட்டுமே. எனவே, மோட்டார் சைக்கிளில் பயணிக…
-
-
- 4 replies
- 350 views
- 1 follower
-
-
16 APR, 2025 | 04:12 PM சித்திரைப் புத்தாண்டு சம்பிரதாயங்களுக்கு அமைவாக இடம்பெறும் தலையில் எண்ணெய் பூசும் பாரம்பரிய நிகழ்வு இன்றைய தினத்தில் (16) இடம்பெற்றது. அந்த வகையில் புதுவருடத்தில் சிறந்த ஆரோக்கியமும் ஆசீர்வாதமும் கிடைக்கும் எனும் ஐதீகத்தின்படி இடம்பெறும் இந்நிகழ்வு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையிலும் சுப நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது. தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் உள்ள மிருங்களுக்கு தலையில் புத்தாண்டு எண்ணெய் பூசும் சடங்கு இன்று புதன்கிழமை (16) காலை நடத்தப்பட்டது. இதன்போது, தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் உள்ள 153 வயதான ஆமைக்கு முதலில் தலையில் எண்ணெய் பூசப்பட்டது. இலங்கையில் உள்ள அதிக வயதான ஆமை இதுவாகும். இந்த ஆமையின் மொத்த எடை 400 கிலோவுக்கும் அதிகம் என தெரிவி…
-
-
- 21 replies
- 1.2k views
- 1 follower
-
-
புதிய மனிதனாக மாறிய இளைஞன் adminApril 24, 2025 யாழ்ப்பாணத்தில் ஆதரவற்ற நிலையில் , வீதிகளில் வாழ்ந்து வந்த இளைஞனை நல்லைக்கந்தன் தண்ணீர் பந்தல் உதவும் கரங்கள் அமைப்பினர் இளைஞனை தூய்மையாக்கி , புத்தாடைகள் வாங்கி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் , இளைஞர்களின் செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர். https://globaltamilnews.net/2025/214644/
-
- 1 reply
- 201 views
-
-
தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM. உலகின் முதல் தங்க ATM இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த ATM நிறுவனமானது ஷாங்காய் வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை, நாணயத்தை விற்று பணமாக்க பலரும் விரும்புகின்றனர். ஆனால், நஷ்டமின்றி தங்கத்துக்கு ஈடான முழுப்பணமும் எங்கும் கிடைக்காது என்பதால். தங்கத்தை விற்க பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இதனைத் தவிர்க்கும் வகையில் சீனாவின் ஷாங்காய் நகரில், ‘சைனா கோல்ட்’ என்ற நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தங்க ATM சீன மக்களிடம் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த இயந்திரத்தில், நகையை வைத்தால், அதை எடை போட்டு, எவ்வளவு என்பதை திரையில் காட்டும். அதை ஏற்று ஒப்புதல் அளித்தால், தங்கம் …
-
- 0 replies
- 155 views
-
-
மனிதர்கள் இதுவரை கண்டிராத புதிய நிறம் கண்டுபிடிப்பு! மனிதர்கள் இதுவரை கண்டிராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அறிவியல் உலகில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்ககழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் குறித்த சாதனையை படைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ‘குறித்த நிறத்தினை வெறும் கண்களால் பார்க்க முடியாது எனவும், கண்களில் லேசர் ஒளியை துல்லியமாக செலுத்தி கண்களுக்கு பின் உள்ள ‘கோன்’ எனும் நிறம் உணரும் செல்களை தூண்டுவதன் மூலம் இந்த நிறத்தினைப் பார்க்க முடியும் எனவும் …
-
- 0 replies
- 212 views
-
-
பட மூலாதாரம்,BHAGYASHREE RAUT கட்டுரை தகவல் எழுதியவர், பாக்யஶ்ரீ ராவத் பதவி, பிபிசி செய்தியாளர் 14 ஏப்ரல் 2025, 03:06 GMT 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செம்மரம் ஒன்றுக்காக ரூ. 1 கோடியை மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மத்திய ரயில்வே செலுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு, ரயில்வே ரூ. 1 கோடியை செலுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விவசாயி, இந்த பணத்தில் இருந்து பாதியை அதாவது ரூ. 50 லட்சத்தை எடுத்துக் கொள்ளவும் ஏப்ரல் 9-ஆம் தேதி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. செம்மரம் ஒன்றுக்காக விவசாயி ஒருவர் இழப்பீடு பெற்றது எப்படி? நடந்தது என்ன? இங்கே பார்க்கலாம்! உண்மையில் நடந்தது என்ன? மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்…
-
- 1 reply
- 162 views
- 1 follower
-
-
எக்குவடோரில் சேவல் சண்டையில் துப்பாக்கி பிரயோகம்; 12 பேர் உயிரிழப்பு! தென் அமெரிக்க நாடான எக்குவடோரில் சேவல் சண்டை அரங்கில் துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேரை கைது செய்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். எக்குவாடோரின் லா வலென்சியா கிராமப்புற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலின் ஒரு நாளைக்கு பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை வடமேற்கு மனாபி மாகாணத்தில் விசேட பொலிஸ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி தாரிகள் பயன்படுத்திய போலி பொலிஸ், இராணுவ சீருடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான காட்சிகள், துப்பாக்கி ஏந்தியவர…
-
- 0 replies
- 150 views
-
-
கிளிநொச்சியில் தந்தை செலுத்திய டிப்பர் வாகன சில்லில் சிக்கி குழந்தை உயிரிழப்பு! கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையொன்று டிப்பர் வாகனத்தின் முன் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளது. தந்தை செலுத்திய டிப்பர் வாகனத்தின் முன் சில்லில் சிக்கி இவ்வாறு குழந்தை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1428817
-
- 0 replies
- 202 views
-
-
கொழும்பு ஒருகொடவத்தை பகுதியில் மகனால் தாக்கப்பட்டு தந்தை உயிரிழப்பு! மகன் இரும்புக் கம்பியால் தாக்கியதில் தந்தையொருவர் உயிரிழந்த சம்பவம் கொழும்பு கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் நேற்றிரவு (18) இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர், 54 வயதுடைய அவிசாவளை வீதி, ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், மகன் இரும்புக் கம்பியால் தந்தையின் தலையில் தாக்கியுள்ளார் எனவும், இதனால் பலத்த காயமடைந்த தந்தை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த தந்தையின் உடல் கொழும்பு தேசிய …
-
- 0 replies
- 166 views
-
-
டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம் கொடுத்து அதிர்ச்சியில் ஆழ்த்திய சிங்கப்பூர் ஊழியர்! ஊழியர் ஒருவர் டிஷ்யூ பேப்பரில் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து சிங்கப்பூர் நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஆஞ்சிலா யோஹ் என்ற பெண் தொழிலதிபர் இச்சம்பவத்தை தனது ‘லிங்ட்இன்’(LINKEDIN) பக்கத்தில் பதிவிட்டு, ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை பொறுத்தவரை, அவர்களுக்கான மரியாதையும், வேலைவாய்ப்பும், அதற்கான சம்பளமும் மிக அத்தியாவசியமாக இருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக, ஊழியர்கள் தங்களது பணியை இராஜினாமா செய்வது வழக்கமானதொன்று. வைரலாகி வரும் அந்த ராஜினாமா கடிதத்தில், “நான் தேவைப்படும்போது பயன்படுத்தப்படும் கழிப்பற…
-
-
- 2 replies
- 327 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், அல்பேஷ் கர்கரே பதவி, பிபிசி மராத்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் மும்பை காவலர் ஒருவரின் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மகன், ஒரு சிக்கலான குற்றத்தை எவ்வாறு தீர்த்தார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், மும்பையின் நெரிசலான தாதர் ரயில் நிலையத்தில் ஒரு சூட் கேஸில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர், காது கேளாதவர்களாகவும், வாய் பேச முடியாதவர்களாகவும் இருந்தனர். இதனால், மும்பை காவல்துறை இந்த வழக்கை தீர்ப்பதிலும், விசாரணையிலும் பல சிரமங்களை எதிர்கொண்டனர். இறுதியாக, ஒரு மும்பையை சேர்ந்த காவலர் ஒருவரின் மகன் இந்த வழக்கின் மர்மத்தைத் தீர்த்தார். இந்த வழக்கு மும்பையில் உள்ள பைதுனி காவல் …
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
13 APR, 2025 | 10:38 AM யாழ். ஆலடி உடுவில் மானிப்பாய் பகுதியில் பிறந்து இருபத்தியொரு நாட்களேயான பெண் சிசுவொன்று எறும்புக் கடிக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது. மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி பெண் சிசு பிறந்துள்ளது. குறித்த சிசுவிற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் எறும்பு கடித்த நிலையில் அதனை பெற்றோர் கவனிக்காமல் விட்டதன் காரணமாக சனிக்கிழமை (12) அதிகாலை பால் குடித்த சிசு மயக்கமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனையில், எறும்பு கடித்ததன் காரணமாக கிருமி தொற்று ஏற்பட்டு உடற்கூறுகளின் செல்கள் செயலிழந்தமையால் மரணம் சம்பவித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. https:/…
-
- 1 reply
- 202 views
- 1 follower
-
-
உக்ரேனுக்கு நன்கொடை அளித்த குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்த பெண் விடுதலை. உக்ரேன் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை அளித்தமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பெண் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க-ரஷ்ய கைதிகள் பரிமாற்றத்தில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பெண் கடந்த வருடம் கைது செய்யப்பட்டுள்ளார். யுக்ரேனுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடை வழங்கியமைக்காக இவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை அபுதாபியில் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. இதன்போது குறித்த பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெ…
-
- 0 replies
- 94 views
-
-
10 APR, 2025 | 12:49 PM புத்தளம், கொட்டுக்கச்சி பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆதரவற்ற நிலையில் காணப்பட்ட யானை குட்டி ஒன்று பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மூன்று மாதம் மதிக்கத்தக்க யானை குட்டி ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இந்த யானை குட்டி தற்போது புத்தளம் கால்நடை வைத்தியர்களின் பராமரிப்பில் இருப்பதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/211693
-
- 0 replies
- 197 views
- 1 follower
-