செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
கனடாவில் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய படகு ஒன்று நீருக்கு மேலே வந்துள்ளது. கடந்த 1918 ஆம் ஆண்டு அந்தப் படகு ஹார்ஸ் ஷூ அருவிக்கு அருகே தரைதட்டிய பின் நீருக்குள் மூழ்கியது. சுமார் 164 அடி நீளம் கொண்ட அந்தப் படகு கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக நீருக்கு வெளியே வந்தது. பின்னர் ஆற்றின் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட அந்தப் படகு தற்போது அந்த நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் நீரால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறது. தற்போது அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் படகு மேலும் இழுத்துச் செல்லப்பட்டு அருவியிலிருந்து கீழே தள்ளப்படும் என நயாகரா நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்தப் படகினைக் காண ஏரா…
-
- 0 replies
- 252 views
-
-
ஹாலோவின் திருவிழாவையொட்டி இங்கிலாந்து நாட்டிலுள்ள எஸ்செக்ஸ் பகுதியில் விதவிதமான பூசணிக்காய்கள் தயார் நிலையில் உள்ளன. கெட்ட ஆவிகளை விரட்டியடிக்கும் திருவிழாவாக கருதப்படும் ஹாலோவின் எனும் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது பல்வேறு வகையான மாறுவேட போட்டிகளில் கலந்துகொள்வது, மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது உள்ளிட்ட நிகழ்வுகளில் மக்கள் ஈடுபடுவர். இவ்விழாவிற்காக பல்வேறு அளவுகளில் பூசணிக்காய்கள் தற்போது தயார் ஆகிவருகின்றன. கடந்த ஆண்டு ஹாலோவினின்போது சாம்பல் நிற கிரவுன் பிரின்ஸ் பூசணிக்காய் ட்ரெண்டிங்காக இருந்தது. இந்த ஆண்டு வண்ணம் தீட்டப்பட்ட பூசணிக்காய் ட்ரெண்டிங்காக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. …
-
- 5 replies
- 718 views
-
-
ஜேர்மனியில் இறுதிச்சடங்கொன்றில் போதையூட்டும் கேக் பரிமாறப்பட்டதால் பரபரப்பு! ஜேர்மனியில் இடம்பெற்ற இறுதிச்சடங்கொன்றின் போது அதில் பங்கேற்றவர்களுக்கு தவறுதலாக “ஹாஷ் கேக்” எனப்படும் போதையூட்டும் கேக் பரிமாறப்பட்டதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜேர்மனியில் விதாகென் என்ற இடத்திலுள்ள உணவகம் ஒன்றினால் விநியோகிக்கப்பட்ட குறித்த போதையூட்டும் கேக்கை உட்கொண்ட 13 பேருக்கு குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டது. குறித்த உணவகத்தில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவரின் மகளிடம் கேக் செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டதாகவும், 18 வயதான இளம் பெண் வேறொரு நிகழ்வுக்காக செய்து வைத்திருந்த ஒரு “ஹாஷ் கேக்கை”, அவரது தாயார் தவறுதலாக பரிமாறியமை பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ள…
-
- 0 replies
- 290 views
-
-
உலகிலேயே மிகவும் வயதான மூதாட்டியாக அறியப்பட்ட ரஷ்யாவை சேர்ந்த 123 வயது மூதாட்டி உயிரிழந்தார். அஸ்ட்ரகான் பகுதியை சேர்ந்த தன்சில்யா பிசம்பெயேவா என்ற மூதாட்டி தான் உலகிலேயே மிகவும் அதிக வயதானவர் என்று நம்பப்படுகிறது. 1896 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் அவர் பிறந்ததாக கருதப்படுகிறது. அந்த மூதாட்டிக்கு 10 பேரக்குழந்தைகள், 13 கொள்ளுப்பேரக்குழந்தைகள், 2 எள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். தனது 123 வது வயதில் அமைதியான முறையில் அவரது உயிர் பிரிந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது உடல் குடும்பத்தினருக்கான கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டதாகவும், கிராம மக்கள் அனைவரும் இறுதிச்சடங்கில் பங்கேற்றதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. https://www.polimernews.com/…
-
- 1 reply
- 363 views
-
-
சவுதியில் வெள்ளப்பெருக்கு – 7 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்! மத்தியக் கிழக்கு நாடான, சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். சவுதி அரேபியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக சவுதி அரேபியாவின் ஹாபர் அல் பாஸ்டின் பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக அங்குள்ள வீதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன்போது ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர். 1,176 மக்கள் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 40 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் உள்ளுார் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட…
-
- 0 replies
- 257 views
-
-
தற்கால மனிதனின் தோற்றத்தின் தடயங்களை வடக்கு பொட்ஸ்வானா பிராந்தியத்தின் சம்பசி நதியின் தெற்காக கண்டுபிடித்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தற்போது உப்பு நிலையாக இருக்கும் இந்தப் பகுதி 200,00 ஆண்டுகளுக்கு முன் தற்கால மனிதர்களான ஹோமோ சேப்பியன்களின் இருப்பிடமாக இருந்துள்ளது. இந்த தற்கால மனிதர்கள் சுமார் 70,000 ஆண்டுகள் இந்தப் பகுதியில் வசித்திருப்பதாக சயன்டிபிக் ஜெர்னல் நேச்சர் சஞ்சிகையில் வெளியாகிய ஆய்வு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 130,000 ஆண்டுகளுக்கு முன்னர் பிராந்தியத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் அந்தக் குழுவை முதலில் வட கிழக்காகவும் பின்னர் தென்மேற்காகவும் புலம்பெயரச் செய்தது. “சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கால மனித…
-
- 0 replies
- 374 views
-
-
100 வயதிலும் யோகா செய்து வரும் நானம்மாள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரை சேர்ந்தவர். தனது சிறுவயதிலிருந்து யோகா செய்து வரும் இவருக்கு 50 விதமான ஆசனங்கள் தெரியும். கடந்த 2018ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. யோகா குறித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக பல இடங்களுக்கு பயணிக்கும் இவரை, கோவை நகர மக்கள் 'யோகா பாட்டி' என்று அழைக்கின்றனர். https://www.bbc.com/tamil/arts-and-culture-48716596 கோயம்புத்தூரின் கணபதி பகுதியில் வசிக்கும் நானம்மாள், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ஆம் ஆண்டில் வேளாண்மைக் குடியில் பிறந்தவர். தனது தாத்தா மன்னார்சாமியிடமிருந்து யோகாசனப் பயிற்சியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த நானம்மாள், அந்தப் பயிற்சியை 90 ஆண்டுகளுக்கு…
-
- 4 replies
- 1.3k views
-
-
போர்த்துகல் நாட்டில் முகம் இல்லாமல் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. போர்த்துகல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கும் செதுபால் நகரில் உள்ள மருத்துவமனையில் பெண் ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு கடந்த 7 ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்த வைத்தியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த குழந்தை முகம் இல்லாமல் பிறந்திருந்தது. அதாவது, கண், மூக்கு, வாய் என்று முகத்தில் உள்ள உறுப்புகள் எதுவுமே அந்த குழந்தைக்கு இல்லை. மேலும், குழந்தையின் மண்டையோட்டின் ஒரு பகுதியே சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்தது. குழந்தை சில மணி நேரங்களுக்கு மட்டுமே உயிருடன் இருக்கும் என அதன் பெற்றோர் நினைத்தனர். ஆனால் 2 வாரங்களுக்க…
-
- 0 replies
- 303 views
-
-
பெர்காம்பூர்: `‘பேய் இருப்பதை நிரூபித்தால் 50,000 சன்மானம் வழங்கப்படும்’’ என்று ஒடிசா மாநிலத்தில் கலெக்டர் ஒருவர் அறிவித்துள்ளார். ஒடிசா மாநில மக்களிடையே பேய், பிசாசு, மாந்திரீகம் ஆகியவை குறித்த மூடநம்பிக்கை அதிகமாக காணப்படுகிறது. அண்மையில் அங்குள்ள கோபாபூர் கிராமத்தில் மாந்திரீக நம்பிக்கையை அவமதித்த ஆறு பேரின் பல்லை பிடுங்கி, மலத்தை உண்ண வைத்து கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதேபோல ெஜகன்னாத் பிரதா பகுதியிலும் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக மொத்தம் 45 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மக்களிடையே நிலவும் பேய், பிசாசு குறித்த மூட நம்பிக்கையை ஒழித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, கஞ்ஜம் மாவட்ட ஆட்சியர் விஜய் அனிருத், ‘‘பேய் இருப்பதை நிரூபித்தால் 50,0…
-
- 1 reply
- 332 views
-
-
கோகுலம் விருந்தினர் மாளிகையில் நன்கொடையைச் செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொள்ளலாம். அங்கு அவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வி.ஐ.பி. பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படும். திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய தினமும் லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். ஆனால், எல்லோரும் 40 அடி தள்ளி நின்றுதான் சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆனால், இப்போது 10,000 ரூபாய் பணம் கட்டினால் திருப்பதி வேங்கடேசப் பெருமாளை அருகில் நின்று தரிசிக்கலாம். தீபாவளி இனிப்பாக இனிக்கும் இந்தச் செய்தியை விரிவாகப் பார்ப்போம். Tirupati திருமலை திருப்பதி வேங்கடசப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு, சர்வ தரிசனம், நேர ஒதுக்கீட…
-
- 0 replies
- 292 views
-
-
பிட் அடிப்பதை தடுக்கலாம்யா... அதுக்காக இப்படியா? இதெல்லாம் ரொம்ப ஓவரப்பு.. கர்நாடகாவில் ஒரு கூத்து.! பெங்களூரு: கர்நாடகாவில் மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக கல்லூரி நிர்வாகம் செயல்படுத்திய அடேங்கப்பா யுக்திதான் சமூக வலைதளங்களில் வைரல். கர்நாடகாவின் ஹவேரி மாவட்டம் தனியார் கல்லூரியில் வேதியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு அண்மையில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு முடிந்த உடன் கல்லூரியைச் சேர்ந்த சதீஷ் ஹெரூர் என்ற மாணவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு படத்தை எங்கள் கல்லூரியின் மிட்-டேர்ம் தேர்வு இப்படித்தான் நடைபெற்றது என்ற வாசகத்துடன் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில் மாணவர், மாணவியர் அனைவர் தல…
-
- 9 replies
- 1.3k views
-
-
124 வயதில் தனியே விமானத்தில் நீண்ட நேரம் பயணம் செய்த முதியவர் – வியப்பில் விமான நிறுவனம்! பல மணித்தியாலங்கள் ஒரே இருக்கையில் விமானப் பயணம் மேற்கொள்வது சாதாரண மனிதர்களுக்கும் சற்று கடினமான விடயம்தான். அத்துடன், விமான நிலையங்களில் கால் கடுக்க நிற்பதும் பலருக்கு கடுமையான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகின்றது. சில சமயங்களில் பெரிய விமான நிலையங்களில் எங்கு செல்வது என்பது கூட குழப்பமான விடயம்தான். இளைஞர்களுக்கே சிரமமாக தோன்றும் 16 மணிநேர விமானப் பயணத்தை எந்த உதவியும் இன்றி தனியே சென்றுள்ளார் 124 வயது சுவாமி சிவானந்த பாபா. எத்திஹாட் எயாவேஸ் (Etihad Airways) விமானத்தில் கொல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு அபுதாபி வழியாக அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். முதியவரின் உடல் …
-
- 0 replies
- 258 views
-
-
இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படைகள் பயன்படுத்திய பதுங்கு குழி ஒன்று தற்போது சொகுசு ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க்கின் செயின்ட் பாலி மாவட்டத்தில் உள்ள ஹோச்பங்கர் என்ற இடத்தை பதுங்கு குழிகளாக நாஜி படையினர் பயன்படுத்தி வந்தனர். கடந்த 1942ம் ஆண்டு 300 நாட்களில் கட்டப்பட்ட இந்த பிரமாண்டமான பதுங்கு குழி நாஜிக்கள் தோற்கடிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு பின்னரே கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தப் பதுங்கு குழி தொலைக்காட்சி நிலையம், பிற வணிக வளாகமாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் என் ஹெச் ஹோட்டல் என்ற குழுமம் இந்த இடத்தை வாங்கி அங்கு மிகவும் ஆடம்பரமான ஹோட்டலைக் கட்டி வருகிறது. 136 அறைகள் கொண்ட இந்த ஹோட்டலில் தங்குவ…
-
- 0 replies
- 574 views
-
-
ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா! 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பினால், இன்று காலை முதலே பிரியாணி கடையில் கூட்டம் முண்டியக்க ஆரம்பித்துவிட்டது. 2 வாரத்துக்கு முன்பு வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் பரவியது. அதில், திண்டுக்கல் முஜீப் பிரியாணி கடையில், அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசா கொடுத்து பிரியாணியை வாங்கிச் செல்லுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது இதை யாருமே பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. விளையாட்டுக்கு சொல்கிறார்கள் என்றுதான் நினைத்தார்கள். ஏனென்றால் 5 பைசா புழக்கத்திலேயே இல்லை.. அதை இப்ப இருக்கும் தலைமுறையினர் பார்த்ததுகூட இல்லை. 5 பைசாக்கு…
-
- 4 replies
- 792 views
-
-
யாழில் 15 வயது பாடசாலை மாணவியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது வலிகாமத்தை சேர்ந்த 15வயது பாடசாலை மாணவிக்கும், 19வயது முஸ்லிம் இளைஞனிற்குமிடையில் காதல் ஏற்பட்டு, பெண்ணின் உறவினர் வீடொன்றில் அவர்கள் தங்கியிருந்துள்ளனர்.இவ்விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.குறித்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மாணவியையும் இளைஞனையும் யாழ்ப்பாணம் நகரிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவியை மருத்துவ சோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸார் சேர்த்துள்ளனர்.இந்நிலையில் இளைஞனும் அவருக்கு தங்குமிடம் வழங்கி உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் யாழ்ப்பாணம…
-
- 5 replies
- 812 views
-
-
அர்ஜெண்டினா எல்லைப்பகுதியில் 55 கலைஞர்களை கொண்டு பென்சிலால் வரையப்பட்ட சுவரோவியம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அர்ஜெண்டினா - பராகுவே எல்லைப் பகுதியில் 16 அடி உயரத்தில் இரண்டரை மைல் தூரம் கொண்ட சுவர் 2014ம் ஆண்டு கட்டப்பட்டது. இருநாட்டு எல்லையில் உள்ள இந்த சுவர் பெரிதாக பேசப்பட்டு வந்தாலும் லத்தின் அமெரிக்க நாடுகளிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாக உணர்ந்த கட்டிட வல்லுநர்கள் புது யுக்தியை கையாண்டனர். அதன்படி, சுவரின் ஒரு புறம் எல்லைப்பகுதியின் தற்போது வரையிலான வரலாற்று நிகழ்வுகள் பல வண்ணங்களில் ஓவிய வல்லுநர்களை கொண்டு வரையப்பட்டது. அதே வரலாற்று நிகழ்வுகள் சுவரின் மற்றொரு புறத்தில், பென்சில் கொண்டு தீட்டப்பட்டது. இறுதியாக பென்சில் கொண்டு வரையப்பட…
-
- 0 replies
- 317 views
-
-
விருது வென்ற புகைப்படம் லண்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி முதலிய நாடுகளில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. ‘தி மொமண்ட்’ (தருணம்) என பெயரிடப்பட்டுள்ளது இந்த புகைப்படம் லண்டனின் இயற்கை வரலாற்று (Natural History Museum) அருங்காட்சியகம் ஆண்டுதோறும் சிறந்த வைல்ட்லைப் போட்டோகிராபர் விருதினை வழங்கி வருகிறது. 2019 ஆண்டிற்கான வைல்ட்லைப் போட்டோகிராபர் விருது அக்டோபர் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் சிறந்த வைல்ட்லைப் போட்டோகிராபர் விருது சீனாவை சேர்ந்த புகைப்படகாரர் யோங்க்யூங் பவோவிற்கு வழங்கப்பட்டது. திபெத்திய நரியும் மர்மொட்டும் இருக்கும் புகைப்படம் தான் சிறந்த புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சீனாவின் க்விங்ஹாயை சேர்ந்த யோங்க்யூங் இந்த புக…
-
- 2 replies
- 785 views
-
-
பிரான்ஸ் நாட்டில் இரட்டை சகோதரிகள் 2 பேர் தங்களது நூறாவது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியிலுள்ள ஃபே - டி- ப்ரெடக்னே நகரில் கடந்த 1919ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி இருவரும் பிறந்தனர். அவர்களின் பெயர், மேரி லீமேரி, ஜெனிவிவிபோலிகான்ட் ஆகும். அவர்களின் நூறாவது பிறந்த தினம் உறவினர்கள், நண்பர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு, சகோதரிகள் 2 பேரும் கேக்குகளை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். மதுபழக்கம் இல்லாதது, குடும்ப உறுப்பினர்களுடன் குறிப்பிட்ட நேரத்தை செலவிடுவது ஆகியவையே தங்களது நீண்ட நாள் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு காரணமென்று சகோதரிகள் 2 பேரும் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 323 views
-
-
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டி நகரில் நடைபெற்ற அதிவேக சோலார் கார் பந்தயத்தில் 24 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான அடிலெய்டில் ஆண்டிற்கு இருமுறை நடத்தப்படும் அதிவேக சோலார் கார் பந்தயம் முதன் முதலாக 1987ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆயிரம் வாட் மின்திறனுடன் இயங்கும் அதிவேக திறன் கொண்ட கார்கள் 50 மணி நேரத்திற்குள் டார்வினிலிருந்து அடிலெய்டை அடைய வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான கார் பந்தயத்தில் டார்வினில் இருந்து புறப்பட்ட முன்னணி அணியான டச் சோலார் ரேசிங் அணி முதல் நாள் போட்டியில் சக அணிகளுக்கு மிகுந்த நெருக்கடியை தந்தது மட்டுமில்லாமல் முன்னிலை பெற்றது. அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட …
-
- 1 reply
- 381 views
-
-
உலகமுடியும் நாளை எதிர்பார்த்து பண்ணையொன்றில் 9 வருடங்களாக மறைந்து வாழ்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேரை நெதர்லாந்தில் காவல்துறையினர் மீட்டுள்ளனர். நெதர்லாந்தில் டிரென்தே என்ற மாகாணத்தில் உள்ள பண்ணையில் பல வருடங்களாக மறைந்து வாழ்ந்த ஆறு பேரையே காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். வீடொன்றில் ஆறு பேரை நாங்கள் கண்டுபிடித்தோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 55 வயதான தந்தையையும் ஐந்து பிள்ளைகளையுமே கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் ஒருவர் அருகிலுள்ள மதுபானநிலையத்திற்கு சென்று மதுபானத்தினை கொள்வனவு செய்யமுயன்றவேளையே இவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. நபர் ஒருவர் என்னிடம் வந்து ஐந்து பியர்களை வேண்டி குடி…
-
- 2 replies
- 319 views
-
-
இந்தியாவில் 1934-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதே 1934-ம் ஆண்டில்தான் சுவிட்சர்லாந்திலும் வங்கித்துறை சட்டம் நடைமுறைக்கு வந்தது. கடந்த பத்தாண்டுகளாக சுவிஸ் வங்கி குறித்த செய்திகள் எல்லா ஊடகங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்திய பண முதலைகளின் பெரும்பாலான கறுப்புப் பணம் சுவிஸ் வங்கியில் போடப்பட்டு பாதுகாக்கப்படுவதாகவும் தகவல்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. அப்படி பதுக்கியவர்களின் பெயர்கள்கூட அவ்வப்போது வெளியிடப்படுவதுண்டு. ``இந்தியாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையே வங்கித்துறையில் யதேச்சையாக ஒரு வரலாற்று ஒற்றுமை நடந்துள்ளது. ஆம், இந்தியாவில் 1934-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதே 1934-ம் …
-
- 2 replies
- 462 views
-
-
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை! உகாண்டாவில் ‘கில் த கேஸ்’ என்ற பெயரில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள உகாண்டாவின் நீதி நெறி மற்றும் ஒருமைப்பாட்டுத்துறை அமைச்சர் சைமன் லோகோடோ, ‘தற்போதைய தண்டனைச் சட்டம் சில குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டது. இது ஓரினச் சேர்க்கையை குற்றப்படுத்துவதாக மட்டுமே அமைந்துள்ளது. ஓரினச் சேர்க்கையை ஊக்குவித்தல், அவர்களை பணிக்கு எடுத்தல் ஆகிய செயலில் ஈடுபடுவோரும் குற்றவாளிகளாகக் கருதப்படுவர். ஓரினச் சேர்க்கை போன்ற கடும் செயலில் ஈட…
-
- 1 reply
- 582 views
-
-
அமெரிக்காவில் அணில் ஒன்று நூற்றுக்கணக்கான வால்நட் கொட்டைகளை காருக்குள் ஒளித்து வைத்திருந்த சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது. பென்சில்வேனியா மகாணத்தில் உள்ள பீட்ஸ்பர்க் நகரில் ஒரு தம்பதியினர் தங்கள் காரை வீட்டின் பின்புறம் உள்ள வால்நட் மரத்தின் கீழ் நிறுத்தியிருந்தனர். சிலநாட்கள் கழித்து மனைவிக்கு போன் செய்த கணவர் காரை எடுத்துக் கொண்டு நூலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். சிறிது தூரம் ஓடிய கார் திடீரென நின்று போனது. காருக்குள் விசித்திரமான சப்தம் கேட்பதையும், புகை வருவதையும் உணர்ந்த அந்த பெண், காரின் என்ஜின் பகுதியில் கூடுகட்டியிருந்த அணில் அதனுள் நூற்றுக்கணக்கான வால்நட் கொட்டைகளை மறைத்து வைத்திருந்ததைப் பார்த்தார். பின்னர் காரை பழுது நீக்கும் இடத்திற்கு இருவர…
-
- 2 replies
- 452 views
-
-
அயர்லாந்தில் தனது இறுதிச் சடங்கில் அனைவரும் சிரிக்க வேண்டும் என்று கூறி உயிரிழந்த முன்னாள் ராணு வீரரின் வினோதமான ஆசையை அவரது உறவினர்கள் நிறைவேற்றினர். டப்ளின் நகரைச் சேர்ந்தவர் ஷே ப்ராட்லி. முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த 8ம் தேதி காலமானார். தான் இறப்பதற்கு முன்பாக விநோதமான ஆசையை தனது உறவினர்களிடம் தெரிவித்தார். அதன்படி பிராட்லியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற உறவினர்கள் அனைவரும் சிரித்தபடி இருந்தனர்.\ தொடர்ந்து ப்ராட்லி ஏற்கனவே பதிவு செய்திருந்த அவருடைய பேச்சு சவப்பெட்டியில் இருந்து ஒலித்தது. அதில் தனது கல்லறை இருட்டாக இருப்பதாகவும், தான் இறந்ததை தன்னால் நம்பமுடியவில்லை என்றும் அனைவருக்கும் நன்றி கூறியப…
-
- 0 replies
- 278 views
-
-
நித்தியானந்தா மீது முன்னாள் வெளிநாட்டு பெண் பக்தை, புதிய குற்றச்சாட்டு....! நித்யானந்தா ஆபாசத் தகவல்களை அனுப்பியதாக, கனடாவை சேர்ந்த பெண் குற்றம்சாட்டியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த, கனடா நாட்டை சேர்ந்த சாரா ஸ்டீபனி என்ற பெண், இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக Facebook மெசஞ்சரில் நித்யானந்தா அனுப்பிய தகவல்களையும், அவர் வெளியிட்டுள்ளார். சாரா வெளியிட்டுள்ள ஆதாரங்களில், அந்த சிஷ்யைக்கு முத்தம் கொடுப்பது, காதலை கூறுவது என தகவல்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதில், தான் சிவன் என குறிப்பிட்டுள்ள நித்யானந்தா, தனக்கு பார்வதியாக வர விருப்பமா?, என அந்த சிஷ்யையிடம் கே…
-
- 3 replies
- 823 views
-