துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
அனந்தியின் உதவித் திட்டங்கள்: காணாமல் போனோர் – சரணடைந்தோர் நலன் பேணல். (Disappeared – contaminator care.) முன்னாள் போரளிகளின் நலன் பேணல் (care of the former Poralikal). பெண்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்கள் (Livelihood support programs for women) நலிவுற்ற குடும்பங்களின் நலன் பேணல் ( Care of indigent families). மேற்குறிப்பிட்ட திட்டங்களை நடைமுறைபடுத்த உங்கள் உதவியை வேண்டி நிற்கிறோம்!! ==================================================================
-
- 6 replies
- 1.3k views
-
-
மூளைப்புற்றுநோயால் கண்பார்வையை இழந்து தவிக்கும் முன்னாள் போராளி. மட்டக்களப்பு மயிலம்பாவெளி , தன்னாமுனையைச் சேர்ந்த சுந்தரதாஸ் ஒரு முன்னாள் போராளி. இவர் 3பிள்ளைகள் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். இவருக்கு மூளைப்புற்றுநோய் கண்டறியப்படாமல் நீண்ட நாட்கள் நோயோடு போராடினார். நோய் கண்டுபிடிக்கப்பட்ட போது நோயின் தாக்கம் அதிகமாகியிருந்தது. இந்நிலையில் மருத்துவம் பெற்றார். மின்சாரம் பாய்ச்சல் சிகிச்சை செய்யப்பட்டது. அத்தோடு இவரது கண்கள் இரண்டும் பார்வையை இழந்துவிட்டது. நிரந்தர நோயாளியாகிவிட்ட கணவர் 3பிள்ளைகளோடும் குடும்ப வாழ்வாதாரத்தை இவரது மனைவியே சுமக்கிறார். வருமானம் எதுவுமற்ற நிலமையில் இக்குடும்பம் மிகவும் துன்பப்படுகிறது. இவர்கள் சிறு கடையொன்று போட்டு வியாபாரம் செய்…
-
- 1 reply
- 905 views
-
-
ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சி வெற்றியை நோக்கிச் செல்கிறது வறுமையாலும் கல்வி நிலமையாலும் பின்தங்கி யாராலும் கவனிக்கப்படாதிருந்த மட்டக்களப்பு கரடியன்குளம் (குசேலன்மலை) கிராமம் இவ்வருடம் வெள்ள அனர்த்தத்தின் போது எமது அமைப்பால் இனங்காணப்பட்டது. அவசர உதவியாக இக்கிராமத்து மக்களுக்கான வெள்ள நிவாரணத்தை இவ்வருடம் தைமாதம் வழங்கியிருந்தோம். இக்கிராமத்தின் புவியியல் அமைவு வாழ்வாதார உயர்வுக்கான வழிமுறைகள் கல்வித் தகைமை போன்றவற்றை ஆராய்ந்து அவர்களை உயர்த்தும் நோக்கில் நேசக்கரம் களக்குழுவினர் நீண்ட நாட்கள் இந்தக் கிராமத்தின் குழந்தைகளோடும் குடும்பங்களோடும் கூடியிருந்து அவர்களது தேவைகள் பிரச்சனைகள் போன்றவற்றை ஆராய்ந்து அறிக்கையினை சமர்ப்பித்திருந்தனர். இக்கிராமத்தின் தேவைகள…
-
- 1 reply
- 676 views
-
-
அமரர் தில்லையம்பலம் பாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவும் அன்னதான நிகழ்வும். யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் பாலசிங்கம் அவர்கள் 05-09-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னாரின் 31ம் நாள் நினைவுநாளை முன்னிட்டு அன்னாரின் புதல்வி திருமதி பாலகௌரி சிவலிங்கம் (டென்மார்க்) குடும்பத்தினர் அன்னதானம் வழங்க முன்வந்து நேசக்கரம் அமைப்பிடம் ஆயிரம் டெனிஸ்குறோணர்களை வழங்கியிருந்தார்கள். அமரர் தில்லையம்பலம் பாலசிங்கம் அவர்களின் 31ம் நினைவுநாளன்று மட்டக்களப்பில் நேசக்கரம் அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்வில் 120இற்கும் மேற்பட்ட சிறுவ…
-
- 1 reply
- 560 views
-
-
ஆனந்தகுமாரசாமி முகாம் மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 08.07.2011 ஆம் திகதி செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி புனர்வாழ்வு முகாமில் கல்வி கற்கும் மாணவர்களில் 244 மாணவ மாணவியர்களுக்கான கற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தரம் 5இல் கற்கும் 120 மாணவ மாணவியருக்கும் , தரம் 11இல் கற்கும் 82 மாணவர்களுக்கும் , தரம் 12,13இல் கற்கும் 42மாணவர்களுக்கும் அப்பியாசக்கொப்பிகள் , பேனாக்கள் , கொம்பாஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. 1. தரம் 5இல் கற்கும் மாணவர்களுக்கு:- (அ) அப்பியாசக் கொப்பிகள் (ஒருவருக்கு) - 3 (ஆ) பேனாக்கள்(ஒருவருக்கு) – 3 2.தரம் 11இல் கற்கும் மாணவர்களுக்கு:- (அ) அப்பியாசக் கொப்பிகள்(ஒருவருக்கு) – 5 (ஆ) கொம்பாஸ் பெட்டி (ஒருவருக்கு) – 1 (இ…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழீழ தோழர்களுக்கும், நண்பர்களுக்கும், உடமைகளையும், உறவுகளையும், உரிமைகளையும் இழந்து, உயிரும் வெற்று உடலுமாக மட்டும் வாழ்க்கை நடத்திக்கொண்டு, வானம் வெளுக்காதா, கிழக்கு விடியாதா, வயிற்றுக்கு ஒரு பிடி அவல் கிடையாதா என்று நாளும் பொழுதும் ஏங்கியவண்ணம், வாழ்கை என்ற சிறைக்குள் அடைபட்டு வாடியிருக்கும் எம் பாசங்களுக்கு உதவ என்று ஆரம்பிக்கபட்டிருக்கும் “ போரினால் காயப்பட்டவர்களுக்கும், விதவையானவர்களுக்கும், அனாதைகளுக்குமான புதிய சந்தர்ப்பங்கள்” (NOWWOW -New opportunities for Widowed, Wounded, and Orphans of War - http://nowwow-us.org/) ஆன நமது புதிய அறக்கடளையிருந்து நான் சுபா சுந்தலிங்கம் மீண்டும் உங்களை வந்து சந்திப்பதில் மகிழச்சி அடைகிறேன். நான் உங்களுடன் இணந்து ஆரம்…
-
- 8 replies
- 3.4k views
-
-
திருகோணமலை சிங்களக் கல்வி வலயம் - பற்றாக்குறை வளத்துடன் தமிழ்ப் பாடசாலைகள் [ சனிக்கிழமை, 12 சனவரி 2013, 08:52 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] திருகோணமலை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட இரண்டாவது கல்வி வலயம் திருகோணமலை வடக்கு கல்வி வலயம் என்ற பெயரில் அமைந்துள்ளது. திருகோணமலைக்கு வடக்கே உள்ள சிங்களக்கிராமங்களான மொரவேவா, கோமரங்கடவல, மயிலவேவா, பதவிசிறிபுர, போன்ற சிங்கள கிhரமங்களை உள்ளடக்கியதாக சிங்கள வலயம் அமைந்துள்ளது. பன்குளம், நொச்சிக்குளம், ஒளவைநகர், முதலிக்குளம் ஆகிய தமிழ்க்கிராமங்களும் இக்கல்வி வலயத்தினுள் வருகின்றன. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இரண்டாவது சிங்களக் கல்வி வலயம் இதுவாகும். முதலாவது சிங்களக்கல்வி வலயம் கந்தளாயில் அமைந்துள்ளது. த…
-
- 0 replies
- 508 views
-
-
கிளிநொச்சி செல்வாநகர் குடியிருப்பில் வாழ்கின்ற 10குடும்பங்களுக்கான உதவிகள் 14.09.10 அன்று வழங்கப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தங்களாலும் போரினாலும் பாதிக்கப்பட்ட மேற்படி குடும்பங்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்புக்கான உதவிகளும் பிள்ளைகளின் கல்விக்கான உதவிகளும் வழங்கப்பட்டது. இக்குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் அங்கவீனர்களாகவும் போரில் பிள்ளைகளை கணவர்களை இழந்தவர்களாகவும் மற்றும் தடுப்புமுகாமிலிருந்து வெளிவந்தவர்களாகவும் இருக்கின்றனர். இன்னும் தங்கள் உடல்களில் சன்னங்கள் எறிகணைத்துண்டுகளையும் சுமந்து கொண்டிருக்கும் இவர்களை நம்பிக்கைகொடுத்துப் புதுப்பிக்கும் உதவியாக இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கூரைகள் அற்ற வீடுகளில் தறப்பாள்களோடு வாழ்கின்ற இம்மக்கள் தங்களுக்கான தெ…
-
- 3 replies
- 1.3k views
-
-
2014ஜனவரியிலிருந்து மே மாதம் வரையிலான முகவர் வியாபார கணக்கறிக்கை. BY ADMIN IN கணக்கறிக்கை எமது முகவர் வியாபாரத்தின் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.எமது முதலீட்டாளர்களில் ஒருவரான சபேசன் அவர்களின் இலாபமானது அவரால் எமக்கு தரப்பட்ட வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்படுகிறது. மற்றும் தேன்சிட்டு உளவள அமைப்பின் கல்விச் செயற்பாட்டிற்கு கனடாவைச் சேர்ந்த றவி ,சுரேஷ் நண்பர்களின் உதவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதர முதலீட்டாளர்களின் இலாபத்தின் மூலம் கடந்த 5மாதங்களில் எமது வியாபாரத்தின் இலாபத்திலிருந்து போரால் பாதிக்கப்பட்ட 2குடும்பங்களுக்கு சுயதொழில் முயற்சிக்கு உதவியுள்ளோம். கடந்த 5மாதங்களில் மொத்தம் தொழிலாளர் கொடுப்பனவு வாகனம் யாவும் கொடுத்து எமக்கு கிடைத்த மொத்த இல…
-
- 0 replies
- 511 views
-
-
டிசம்பர் 2010 கணக்கறிக்கையும் பயன்பெற்றோரின் விபரங்களும். கீழுள்ள இணைப்பில் இணைத்துள்ளோம். 01.12.10 – 31.12.10 வரையான கணக்கறிக்கை.
-
- 0 replies
- 922 views
-
-
க.பொ.த உயர்தரக் கல்வியை தொடரக் கஷ்டப்படும் 350 வறிய ஆனால் திறமையான மாணவர்களுக்கு மாதாந்தம் கல்வி கற்பதற்காக 1500 ரூபா வீதம் வழங்கப்பட்டது. நாமும் கேட்டுக் கொண்டதற்கு அமைய இப்பெரிய முயற்சியை மேற்கொண்ட வலன்ரீனா மனித நேய அமைப்பு மிகவும் பாராட்டுக்குரியது.
-
- 0 replies
- 748 views
-
-
சின்னச் சின்ன உதவிகள் தேவை (பணம் அல்ல) நீங்களும் வருவியளோ ? நேசக்கரம் , மற்றும் கைவினைப்படைப்பாளிகள் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பு அல்லாத உதவிகள் செய்வதற்கான ஆர்வமுள்ளவர்கள் தேவைப்படுகின்றனர். வாரத்தில் 2மணித்தியாலம் ஒதுக்கி இந்தப் பணியில் உதவிட உறவுகளை வரவேற்கிறோம். தேவைப்படும் உதவிகள் :- 1) செய்திகள் தொகுப்பு. 2) கணக்கறிக்கை தயாரித்தல். 3) மாதாந்த தொகுப்பறிக்கை தயாரித்தல். 4) தமிழில் எழுதப்படும் செய்திகள் அறிக்கைகளை ஆங்கிலம் , டொச் மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்தல். 5) ஊடகங்களில் வெளிவரும் பாதிக்கப்பட்டோரின் விபரங்களை தொகுத்தல். 6) நீங்கள் அறியும் பெண்கள் மீதான வன்முறைகள் தகவல்களை தொகுத்தல். 7) புதிய திட்டமிடல்கள் செயற்பாடுகளுக்கு உங்கள் தரப்பு ஆலோசனைகள் திட…
-
- 1 reply
- 867 views
-
-
நேசக்கரம் அமைப்பினூடாக தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளிற்கு உதவிய மற்றும் உதவிக்கொண்டிருக்கும் உலகெங்கும் வாழும் அனைத்து அன்பான உள்ளங்களிற்கும் முதல் வணக்கங்களையும் நன்றிகளையும் நேசக்கரம் தெரிவித்துக்கொள்வதோடு, எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்ளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சிறுதுளி பெரு வெள்ளம் என்பதற்கமைய உலகெங்கும்சிறுகச் சிறுகச் சேகரித்த உதவிகளை நேசக்கரம் அமைப்பு ஒருக்கிணைத்து எமது மக்களிற்காக பெருமளவில் கொண்டு சென்று சேர்த்துள்ளது. நேசக்கரத்தின் அடிப்படைத்திட்டங்களான :- 1)பெற்றோரை இழந்த அடிப்படைக் கல்வி வசதிகளற்ற குழந்தைகளின் கல்வி வசதிகள் மற்றும் சத்துணவு திட்ட அடிப்படையில் இந்த ஆண்டு பயனடைந்த மொத்தம் 1970 மாணவர்கள். 2)வசதியற்ற உயர்கல்வி மற்றும…
-
- 0 replies
- 782 views
-
-
2011 – 2014 வரையான கடன் உதவித்திட்டத்தின் தொகுப்பறிக்கை. சிறு சிறு துளியாக பாதிக்கப்பட்டவர்களின் துணையாக எழுந்த நேசக்கரமானது 2011 யூலைமாதம்; கடன் வழங்கும் திட்டமொன்றை ஆரம்பித்திருந்தது. இதுவொரு பரீட்சார்த்த முயற்சியாக செயற்படுத்த திட்டமிட்டோம். புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்படும் நிதியை மீள செலுத்தக் கூடியவர்களிடமிருந்து மீளப்பெறுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது. இதன் பிரகாரம் வழங்கும் உதவிகளை கடன் அடிப்படையில் வழங்கி மீளப்பெறும் நிதியை சுழற்சி முறையில் அடுத்தடுத்தவர்களுக்கு பயன்படுத்தலாம் எனவும் திட்டமிடப்பட்டது. கட்டம் 1. திருமுறிகண்டியில் மீள்குடியேறிய குடும்பங்களில் 4குடும்பங்களை தெரிவு செய்து தலா ஒரு குடும்பத்திற்கு 30ஆயிரம் ரூபா அடிப்படையில் 120000ரூபா(ஒருலட்சத்த…
-
- 2 replies
- 627 views
-
-
சீமெந்துக்கற்கள் வியாபாரம் நீங்களும் இணையலாம் போரால் பாதிப்புற்ற கிழக்குமாகாணத்தின் பல கிராமங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளைக் கட்டுவதற்கான சீமெந்துக்கற்கள் , மரங்கள் இதர பொருட்கள் யாவும் முஸ்லீம் மற்றும் பெரும்பான்மையினத்தினரின் உற்பத்திகளிலிருந்தே எம்மவர்கள் அதிக விலைகொடுத்து வாங்கும் நிலமையிருக்கிறது. இவ்விடங்களை நோக்கி அவர்களது தொழில்சாலைகளும் வந்து கொண்டிருக்கிறது. நாமே வீடு கட்டுவதற்குத் தேவையான கற்கள் மரங்கள் போன்றவற்றை எம்மவர்களுக்கு விநியோகிக்க முடியும். அதற்கான முதலீடு எம்மிடம் இருப்பின் எம்மவர்களுக்கு நாங்களே குறைந்த விலையில் வழங்கலாம். இவற்றைக் கருத்தில் கொண்டு சீமெந்துக்கற்தொழிச்சாலை ஒன்றைக் கிழக்கு மாகாணத்தில் நிறுவ உத்தேசித்…
-
- 8 replies
- 2.3k views
-
-
நோர்வே தமிழரின் நிதியுதவியில் மட்டக்களப்பு வாகனேரியில் புதிய மருத்துவமனை! மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவநிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. நோர்வே தமிழரான ‘ஏஞ்சல்’ மண்டபசேவை நிறுவனத்தின் உரிமையாளர் திரு.சுதர்சன் பத்மநாதன் அவர்களின் நிதியுதவியுடன் தமிழ் நோர்வே வள ஒன்றியம் (TNRA), மற்றும் தாயகத்திலுள்ள அஹிம்சா சமூக நிறுவனத்தின் கூட்டு அனுசரணையுடன் இந்த மருத்துவநிலையக் கட்டடம் நிறுவப்பட்டுள்ளது. புதன்கிழமை 20.03.19 இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjørn Gaustedsæter அவர்களினால் வைபவ ரீதியாகத் …
-
- 2 replies
- 835 views
-
-
விவசாயம் செய்ய உதவி கோரும் போரால் பாதிக்கப்பட்ட தர்சினி போரால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கித்துள் பகுதியைச் சேர்ந்த தர்சினி போரில் தனது கணவனை இழந்துள்ளார். தர்சினி கழுத்தில் புற்றுநோய்க்கு ஆளாகி சத்திரசிகிச்சை செய்து மீண்டுள்ளார். இவரது குடும்ப முன்னேற்றம் கருதிய கருணையுள்ளங்கள் உதவுமாறு வேண்டுகிறோம். 2பெண் பிள்ளைகளுடன் மிகவும் வறுமையில் வாடுகின்றார்கள்.அடிப்படை பொருளாதார வசதிகளை இழந்துள்ள இக்குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த தர்சினி அவர்கள் தோட்டம் செய்வாற்கான உதவியினைக் கோரியுள்ளார். கிணறு அமைத்து தோட்டத்துக்கான வசதிகளை அமைக்க இலங்கைரூபா 51ஆயிரம் ரூபா (320€)தேவைப்படுகிறது. தர்சினி எமக்கு எழுதிய கடிதத்தை இணைக்கிறோம். உதவ விரும்புவோர் நேரடியாகவோ அல்லது நேசக…
-
- 1 reply
- 781 views
-
-
17.09.10 அன்று கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் 13பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான முதற்கட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. சுதாகரன் கோபிகா , விஜயகுமார் மதுசா ,வைகுந்தவாசம் வாசுகி, தேவசிகாமணி வக்சாயினி, மகாதேவன் மோகனன், சுப்பிரமணியம் சுகந்தினி, பிரான்சிஸ் றைசன், அழகுதேவன் தமிழ்ச்செல்வி, ஜெகராசா குணாளன் ஜெகராசா கலைமகள், வில்வராசா குகேந்தினி, செல்வகுமார் சங்கீதா, மகாதேவன் துசாந்தி ஆகிய 13 மாணவர்களுக்கு ஆளுக்கு தலா இலங்கை ரூபா 1500ரூபா (ஆயிரத்து ஐந்நூறுரூபா) பணமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது மாணவர்களின் மாதாந்த கல்விக்கான உதவியாக வழங்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கான பண உதவியை நேசக்கரம் தொடர்பாளர்களில் ஒருவரான தீபச்செல்வன் அவர்கள் மாணவர்கள் பெற்…
-
- 0 replies
- 989 views
-
-
மார்ச் 2011 கணக்கறிக்கை மார்ச் 2011 கணக்கறிக்கை கீழ் உள்ள இணைப்பில் அழுத்திப் பாருங்கள். மார்ச் 2011 கணக்கறிக்கை உதவிய அனைவருக்கும் நன்றிகள். (ஒவ்வொரு மாதமும் 5ம் திகதிக்கிடையில் மாதாந்த கணக்கறிக்கை இணைக்கப்படும்)
-
- 0 replies
- 1.1k views
-
-
மண்முனை , போரதீவு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 100புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கற்றல் செயற்பாட்டுக்கான மாதிரி வினாத்தாள்கள் பால்மா போன்றவை 31.07.2011 அன்று வழங்கப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் முன்மாதிரி பரீட்சையில் 100புள்ளிகளுக்கு குறைவாக புள்ளிகள் பெற்றுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை நடாத்தி பரீட்சையில் தேற்ற வைக்கும் முயற்சியில் ஊதியமற்று கற்பிக்கும் ஆசிரியர்களின் வேண்டுகைக்கு இணங்க நேசக்கரம் 60000ரூபா(அறுபதாயிரம் ரூபா) பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது. மேலதிகமாக பல மாணவர்கள் உதவிகளை எதிர்பார்க்கின்றனர் எம்மால் முழுமையான உதவிகளை வழங்க முடியாத நிலமையில் இச்சிறு உதவியைக் கொண்டு சேர்த்திருக்கிறோம். உதவிகள் கிடைக்கப்பெறும் பட…
-
- 1 reply
- 1.3k views
-
-
உயிர் கொல்லும் புற்றுநோயிலிருந்து வாழத் துடிக்கும் 22 வயது இளைஞனின் கதை. 13.06.1991 உலகின் மகிழ்ச்சிகளை அனுபவிக்கப் பிறந்த அவனது பிறப்பு மர்மமானது. ஓவ்வொரு பிள்ளையும் விரும்பும் அம்மாவின் மடிவாசம் அப்பாவின் தோழ்வாசம் எதையும் அவன் அனுபவிக்காதவன். பெற்றவர்களை அவன் காணவேயில்லை. உறவென்று சொல்லி உரிமை கொண்டாட யாருமில்லாத சிசுவாகவே தனித்துப் போனான். அவனை வளர்த்தவர்களும் பாலக வயதிலேயே ஏனோ கைவிட்டு விட்டார்கள். யாரில்லாது போனாலென்ன 'புனிதபூமி' இருக்கிறது என அவனை புனிதபூமியே தத்தெடுத்துக் கொண்டது. புனிதபூமியின் குழந்தையாகி மீண்டது அவனது மகிழ்ச்சிக்காலம். உறவில்லை உறவினர்கள் இல்லையென்று அழுத பிஞ்சு மனசில் ஆயிரக்கணக்கான உறவுகளின் அணைப்பையும் ஆற்றுதலையும் புனிதபூமி கொடு…
-
- 1 reply
- 657 views
-
-
நேற்று தாயகத்திலிருந்து (மட்டக்கிளப்பு) வைபரில் ஒரு படம் வந்தது படத்தில் ஒரு தாய் ஒரு மகள் இவர் யெயந்தன் படையணியின் தளபதிகளில் ஒருவரின் மனைவி மற்றும் பிள்ளை அண்ணை என்று எழுதியிருந்தது தொலைபேசி எடுத்தேன் அந்த பிள்ளைக்கு பாடசாலைக்கு போக ஒரு சைக்கிள் கேட்கினமண்ணை என்றார் சரி சைக்கிள் என்னவிலை? என்பதற்கு 12 500 ரூபாக்கள் என்றார் உங்களிடம் 12 500 ரூபா இருந்தால் வாங்கிக்கொடுக்கமுடியுமா இந்த மாசம் ஏலாது வாற மாசம் அனுப்புகின்றேன் என்றேன் சரியண்ணை வாங்கிக்கொடுத்துவிட்டு தொடர்பு கொள்கின்றேன் என்றார் என்னை அவர்களுடன் கதைக்கும்படி தொலைபேசி இலக்கம் அனுப்பியிருந்தார் அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்கின்றேன் …
-
- 12 replies
- 2.2k views
-
-
தலைவர் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அன்புடையீர் வணக்கம். மலசலகூடம் அமைப்பதற்கு உதவி புரிந்தமைக்கான நன்றி மடல். கிருஸ்னராஜா சந்திராதேவி என்ற மாவீரர் குடும்பத்திற்கு மலசலகூடம் அமைப்பதற்காக ரூபா 45000.00 (ரூபா நாற்பத்து ஐந்தாயிரம்) நிதியுதவி வழங்கியமைக்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் சார்பில் - நிதியுதவி வழங்கிய மனிதநேயமுள்ள திரு.சிவராஜா- மார்கண்டு அவர்களுக்கும் சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பிலும் பயனாளி குடும்பத்தின் சார்பிலும் நன்றியையும் மகிழ்ச்சியையும் கூறுகின்றோம். போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் நலன் கருதி தங்களினால் முன்னெடுக்கப்படும் புனித கங்கரியங்களுக்கும் மனித நேய தொ…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரிட்டன் தொண்டு நிறுவனத்தால் 543 பேருக்கு சைக்கிள் அன்பளிப்பு லண்டன் – இலங்கை மீள்குடியேற்றம் மற்றும் மறுமலர்ச்சி நிதியத்தின் ஏற்பாட்டில் லண்டனைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தால் யாழ்ப்பாணத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு 543 சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக 143 சைக்கிள்கள் இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்பட்டன. “பிரிட்டன் மக்களால் பாவிக்காது கைவிடப்பட்ட சைக்கிள்கள் சேகரிக்கப்படுகின்றன. அவை பிரிட்டன் சிறைகளில் இருக்கும் தொழில்திறன் கொண்ட கைதிகளிடம் வழங்கப்பட்டு சீரமைக்கப்படுகின்றன. அந்தச் சைக்கிள்களே யாழ்ப்பாணத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுக…
-
- 0 replies
- 397 views
-
-
வாழ்வாதாரத்தை உயர்த்த தொழில் கொடுங்கள் புலம்பெயர் உறவுகளே…! திருமுறிகண்டிப் பகுதியில் குடியேறியுள்ள குடும்பங்களில் இருந்து 7குடும்பங்கள் தங்கள் தொழில் வாய்ப்பு வேண்டிய உதவிகளை வேண்டியுள்ளனர். இக்குடும்பங்கள் போரில் உறவுகளை இழந்தும் பிள்ளைகளை இழந்தும் காணப்படுகிறார்கள். இவர்களில் கணவன்மார் தடுப்புமுகாமில் உள்ள குடும்பத்துப் பெண்களும் உள்ளடங்குகின்றனர். இக்குடும்பங்கள் மலையகப்பகுதிகளிலிருந்து வன்னியில் வந்து குடியேறியவர்கள். ஆயினும் இவர்களது சந்ததி வன்னி திருமுறிகண்ணியிலேயே நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் விவசாயத்தையும் கால்நடைகளையும் நம்பியே வாழ்ந்தவர்கள். தொடர் இடப்பெயர்வு யுத்தசூழல் இவர்களது வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிட்டது. இன்று யுத்தம் ம…
-
- 8 replies
- 1.4k views
-