துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
யாழ்ப்பாணத்தில் உயிர் வாழப் போராடும் ஓர் சிறுமியின் உயிர் காக்க,கருணையோடு உதவிட முன் வாருங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு! Father - Yoga Mother - Jeyagowri Bank Account number- 8108042022(Commercial Bank) Mobile Number - 0094779672133 யாழ்ப்பாணம் வல்லிபுரம் புலோலி பகுதியினைச் சேர்ந்த,செல்வி.யுலக்சனா யோகா என்னும் பெயருடைய சிறுமி கடந்த 6 வருட காலமாக தொண்டைப்பகுதியில் புற்றுநோய் இருப்பதை உறுதிப்படுத்திய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் அவருக்கு இரண்டுதடவைகள் சத்திர சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோய்க் கட்டிகளை அகற்றினர். அதன் பின்னர் தொண்டைப்பகுதியில் துவாரம் இட்டு அதனாலேயே சிறுமி சுவாசிப்பதற்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டிருந்தனர்.இந்நிலையில் தொடர்ந்து க…
-
- 9 replies
- 1.4k views
-
-
போரால் பாதிக்கப்பட்டு, பெற்றோர்களை இழந்த வறுமையுடைய மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கனடா மொன்றியலில் வசிக்கும் புலம்பெயர் தாயக உறவுகளான ஜெயம் மற்றும் ஜெனா ஆகியோர் துவிச்சக்கர வண்டிகளையும் நிதியுதவிகளையும் வழங்கியுள்ளனர். இந்த உதவிகளை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக கடந்த 13ம் நாள் வழங்கி வைத்துள்ளனர். கிளிநொச்சி அறிவகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பளையை சேர்ந்த மாணவர்களான சா.கௌசிகா, ச.மயூரி ச.நிலாவிழி, கு.கஸ்தூரி ஆகியோருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. ஏற்கனவே ஜெயம் மற்றும் ஜெனா ஆகியோரின் நிதியுதவியில் பளையை சேர்ந்த க.நிசாந்தன் என்ற மாணவனுக்கு துவிச்சக்கர வண்டியும் மற்றும் நிதியுதவியும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பா.உ…
-
- 0 replies
- 415 views
-
-
யுத்தத்தால் நலிவுற்ற தமிழ்ச் சமூகத்தை மீள நிலைநிறுத்தும் வகையில் 'வாழ்வோம் வளம்பெறுவோம்' செயற்றிட்டத்தின் கீழ் முல்லைத்தீவு, தேவிபுரம் மற்றும் கைவேலி பகுதிகளைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு தலா 250 வாழைக்குட்டிகள் புதன்கிழமை (11) வழங்கப்பட்டன. புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் ஒருவரின் நிதியுதவியில் வழங்கப்பட்ட இந்த வாழைக் குட்டிகளுடன் நீர் இறைப்பதற்கான பைப்புகளும் வழங்கப்பட்டன. வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த வாழைக்குட்டிகளை பயனாளிகளிடம் கையளித்தார். http://www.tamilmirror.lk/141482#sthash.CRX8AFvM.dpuf
-
- 0 replies
- 586 views
-
-
தமிழர் பிரச்சினைக்கு பிராந்திய சுயாட்சி வழங்கிய பின்னரே மத்திய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெறுப்பேற்பது தொடர்பில் பரிசிலிக்க முடியும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கடந்த புதன் கிழமை திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மூதூர், ஈச்சிலம்பற்று, வட்டவான் கிராமத்தில் வெள்ளப் பேரிடரினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்த தமிழ் மக்களுக்கு ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் தனித்துவமான இனம் என்றும் அவர்களுக்கென்று தனித்துவமான கலை கலாகாரப் பண்பாடும் பாரம்பரியமும் உண்டு என்று தெரிவித்த சம்பவம் எமக்கென தனித்துவ அரசியல் உண்டென்றும் கூறினார். இந்த அடிப்படையில் …
-
- 0 replies
- 474 views
-
-
எமக்காக வாழ்வை தியாகம் செய்தவர்களைப் பேணி காப்பாற்ற வேண்டியது எமது சமூகத்தின் கடமையாகும். ஆனால் அதனை எவ்வளவு பெயர் மனதில் முன்னிறுத்தி செயற்படுகின்றார்களென்பது கேள்விக்குறியே. மல்லாவி பாண்டியன்குளம் பகுதியில் முள்ளந்தண்டு செயலிழந்த நிலையில் நீண்ட காலமாக படுத்தபடுக்கையாக இருந்திருந்த 35 வயதேயான முன்னாள் போராளியொருவர் அண்மையில் இயற்கை எய்திருந்தார். படுக்கை புண் முள்ளந்தண்டை தாக்கியதினால் மரணம் சம்பவித்துள்ளது. எனினும் இயற்கை எய்திய முன்னாள் போராளியான அவ்விளைஞரது புகழுடலை மயானத்திற்கு எடுத்துச் செல்லக்கூட வசதியற்றதாககே அவரது குடும்ப நிலை இருந்துள்ளது.இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் சிலர் ஜெர்மனின் உதவும் இதயங்கள் அமைப்பினருக்கு அறிவித்துள்ளனர். விரைந்து தொழிற்பட்ட அவ்வமைப்ப…
-
- 2 replies
- 1k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் அவர்களின் சொந்த நிதியில் இருந்து முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. சாவக்காடு பிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்ட அடிப்படை வசதிகள் குறைந்த முன்பள்ளிகளுக்கு விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் முன்பள்ளிகளின் குறைகளை கேட்டறிந்ததுடன் மாணவர்களுக்கும், முன்பள்ளிகளுக்கும் கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். இதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட குமுதினி முன்பள்ளி, மகாத்மா முன்பள்ளி, சாவக்காட்டு முன்பள்ளி ஆகியவற்றிற்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்ததுடன், அங்கு கல்வி கற்கும் 12௦ மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார். …
-
- 0 replies
- 473 views
-
-
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதியுதவியுடன் வன்னியில் ஆடைத்தொழில்சாலை பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் வருடம் தோறும் எமது தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் திட்டத்தின்கீழ் இவ்வருடம் ஒன்றியம் வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார உதவித்திட்டத்திற்காக ஓர் மாதிரி ஆடைத்தொழில்சாலை ஒன்றினை தேசிய அரச சார்பு நிறுவனமான« சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனம் »த்துடன்இணைந்து அவர்களின் மேற்பார்வையுடன் அதனை செயற்படுத்துவதற்கு நிதியுதவி அளித்துள்ளோம். இத்திட்டத்தின் மூலம் முதலில் 5 குடும்பங்களுக்கு அவர்களின் குடும்பத்தலைவிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதுடன் 6மாதத்தில் அதன் எண்ணிக்கையினை 10…
-
- 34 replies
- 5.1k views
-
-
நோர்வே மாணவர்களின் கைகொடுப்பில் சாதிக்கும் சந்ததி செயற்திட்டத்தின் எட்டாம் கட்டம் விசுவமடு பாரதி வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. 130 மாணவர்களை உள்ளடக்கிய இக்கட்டத்தில் 119 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு 11 மாணவர்களுக்கு மிதி வண்டிகளும் வழங்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் மேலும் அறியவருகையில், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் முன்னெடுப்பில் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சாதிக்கும் சந்ததி செயற்திட்டத்தின் எட்டாம் கட்டமானது 2015-02-05 அன்று காலை 9 மணியளவில் றெட்பானா பாரதி வித்தியாலயத்தில் நடைபெற்றிருந்தது. இதுவரை நடைபெற்ற ஏழு கட்டங்கள் ஊடாகவும் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்த அல்லது காணாமல் ஆக்கப்பட்ட …
-
- 4 replies
- 615 views
-
-
புங்குடுதீவு நோர்வே மக்கள் ஒன்றியம் கிளிநொச்சி விவேகானந்த நகர் மாணவர்களுக்கு உதவி! POSTED IN NEWS புலம்பெயர் உறவுகளின் அமைப்பான நோர்வே புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் எமது வேண்டுகோளுக்கிணங்க கிளிநொச்சி விவேகானந்த நகர் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கியுள்ளது. கடந்த 26ஆம் திகதி விவேகானந்தநகர் பொதுநோக்கு மண்டபத்தில் கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் தயாபரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அக்கராயன் பிரதேச அமைப்பாளர் கரன், அக்கராயன் பிரதேச கட்சிக் கிளையின் செயலாளர் கதிர்மகன், வன்னேரிப் பிரதேச கட்சி செயற்பாட்டாளர் மகேஸ், விவேகானந்தநகர் கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். இ…
-
- 1 reply
- 546 views
-
-
அமரர் ஐயம்பிள்ளை சுவாமிநாதன் நினைவாக பள்ளி செல்லும் மாணவர்களுக்கு உதவி கிளிநொச்சி உழவர் ஒன்றியம் விளையாட்டுக்கழக்தின் ஆதரவில் அமரர் ஐயம்பிள்ளை சுவாமிநாதன் (அப்பையா) 4ம் ஆண்டு நினைவாக லண்டனினல் வசிக்கும் அவரது மகன் கிளிபேட் குலநாயகத்தின் நிதிப்பங்களிப்புடன் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு கடந்த 24ம் நாள் சிவநகர் அ.த.க.பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் இராசரட்ணம் தலைமையில் நடைபெற்றது. என்னுடன் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் நாவை.குகராசா மற்றும் அமரர் ஐயம்பிள்ளை சுவாமிநாதன்(அப்பையா) ஆகியோரின் குடும்பத்தினர், ஓய்வுநிலை அதிபர் நாகலிங்கம், கிளிநொச்சி கிருஸ்ணபுரம் இராமகிருஸ்ண வித்தியாலயம் பரந்தன் அ.த.க.பாடசாலை அதிபர், உழவர் ஒன…
-
- 0 replies
- 443 views
-
-
இத்தாலி பலர்மோ தமிழ் தேசிய மாணவர் கூட்டமைப்பு திருவையாறு மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் உதவி என் ஒழுங்குபடுத்தலின் கீழ் நடை பெற்ற நிகழ்வில், இத்தாலி பலர்மோ தமிழ்த் தேசிய மாணவர் கூட்டமைப்பு கிளிநொச்சி திருவையாறு மாணவர்களின் ஒரு பகுதியினருக்கு நேற்று அப்பியாசக் கொப்பிகளை வழங்கியுள்ளனர். கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான குமாரசிங்கம், சுவிஸ்கரன், ஓய்வுநிலை அதிபரும் சமுக அபிமானியமான ராஜேந்திரம், திருவையாறு கிராம அபிவிருத்தி சங்கப் பிரதிநிதிகள், வடமாராட்சி கிழக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர் சூரியகாந், எனது செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட தமிழ…
-
- 0 replies
- 519 views
-
-
இலண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தினரால் விதைதானியங்கள் அன்பளிப்பு பளை மாசார் பகுதி மக்களுக்கு விதை தானியங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு மாசர் கிராம அபிவிருத்தச்சங்கத்தலைவர் செல்வரத்தினம் தலைமையில் இடம்பெற்றது. புலம் பெயர்ந்து வாழுகின்ற எம் தமிழ் உறவுகளின் மகத்தான உதவிகள் வாயிலாகத்தான் எங்களால் இயன்ற வரை எம்மக்களுக்கான தேவைகளை ஓரளவேனும் பூர்த்தி செய்து வந்திருக்கிறோம். கொட்டும் பனிக்குள்ளும் தங்களை வருத்தி உழைத்து அதில் கிடைக்கப்படும் நிதியைக் கொண்டு எம் உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். கடந்த காலங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எம்மக்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்துவதிலும் சரி எம்மாணவர்களுக்கு கற்றலுக்கான உதவிகளை வழங்குவதிலும் சரி தாயகத்தின் புலம் பெயர்ந்…
-
- 1 reply
- 532 views
-
-
France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதி உதவியுடன் இயங்கும் முன்பள்ளிகளின் விபரங்களும் கோரிக்கைகளும் - 2014/2015
-
- 1 reply
- 527 views
-
-
வன்னிப் போரின் போது பல்வேறு வகையிலும் பாதிப்புக்குள்ளான பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கேதீஸ்வரனும் ஒருவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாரான இவர் போரின் போது இரு கைகளையும் ஒரு கண் பார்வையையும் இழந்தவராவர். வாழ்வாதாரம் எதுவுமற்ற நிலையில் இவருக்கு ஜெர்மன் உதவும் இதயங்கள் அமைப்பினூடாக பெருமனத்துடன் உதவுவதற்கு முன்வந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மாறன் குடும்பத்தவரும் உதயகுமார் குடும்பத்தினரும் வழங்கிய ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியை வலி வடக்குப் பிரதேச சபையின் உப தலைவரும் வலி வடக்கு மீள் குடியேற்ற அமைப்பான தலைவருமான திரு.ச.சஜீவன் வழங்குகின்றார்.
-
- 2 replies
- 529 views
-
-
கனடாவில் வசிக்கும் உறவின் உதவியால் அனலைதீவு பிராந்திய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு…. POSTED IN NEWS அனலைதீவு பிரதேச வைத்தியசாலையில முதல் முதலாக அமைக்கப்பட்ட வெளிநோயாளர்கள் பிரிவிற்கான புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று சிறப்பாக இடம் பெற்றுள்ளது. அனலைதீவு கலாச்சார ஒன்றியம் கனடா மற்றும் அனலைதீவு பிரந்திய வைத்தியசாலை புனரமைப்பு உபகுழு இவ்விரண்டு அபிவிருத்திக்குழுவினால் இரண்டு கோடி ரூபாய் செலவில் இந்த வைத்தியசாலை இரண்டு வருடங்கள் வேலைத்திட்டத்தில் நிர்மானிக்கப்பட்டு இன்று மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டு சுகாதார திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு முதலமைச்சர் கருத்து தெரிவிக்கும்போது இந்த நாட்டில் மாற…
-
- 5 replies
- 1k views
-
-
பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு அமைய சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கும்பொருட்டு கிளிநொச்சி இராமநாதபுரம், சம்புக்குளம் கிராமத்தில் இராமஜெயம் என்பவரின் முகாமைத்துவத்தின் கீழ் கனடா மறுவாழ்வு அமைப்பு அப்பளத் தொழிற்சாலையொன்றை ஆரம்பித்துள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வுகள் கடந்த 16ம் நாள் இராமஜெயம் தலைமையில் நடைபெற்றது. இதில் கரைச்சி பிரதேச உறுப்பினர்களான சுவிஸ்கரன் பொன்னம்பலநாதன், சம்புக்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தவச்செல்வம், செயலாளர் குமார், சம்புக்குளம் அம்மன் கோவில் போசகர் சதாசிவம் மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். கனடா மறு வாழ்வு அமைப்பின் இத்தகைய சுயதொழில் முயற்சிக்கான ஊக்குவிப்பு மூலம் சம்புக்குளம் பிரதேசத்தில் கணிசமானவர்களுக்கு வேலைவா…
-
- 1 reply
- 495 views
-
-
சேயோனின் முதலாவது பிறந்தநாளில் 750 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கல் நிகழ்வு சித்தாண்டி 1,2,3,4 பிரதேச குடும்பநல உத்தியோகத்தர் ஆலோசனைக்கும் திட்டமிடலுக்கும் அமைய ‘நேசக்கரம் தேன்சிட்டு’ உளவள அமைப்பின் ஏற்பாட்டில் குடும்பலநல உத்தியோகத்தரால் இனங்காணப்பட்ட 720 குழந்தைகளுக்கு 01.01.2015 அன்று சத்துணவு வழங்கப்பட்டது. கனடாவில் வாழ்ந்து வரும் கிருபாகரன் , றோகினி தம்பதிகளின் செல்வக்குழந்தை சேயோன் 24.12.2014 அன்று தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். சேயோனின் முதலாவது பிறந்தநாளினை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் சத்துணவு வழங்குவதற்கான உதவி கிடைக்கப் பெற்றோம். 01.01.2015 அன்று முதல் முயற்சியாக நடைபெற்ற சத்துணவு வழங்கல் திட்டத்திற்கு ஆதரவு தந்த குழந்தை சேயோனின் குடும்பத…
-
- 0 replies
- 513 views
-
-
ஆனந்தபுரம் கிராமத்திற்கான தென்னங்கன்றுகள் வழங்கல் நிகழ்வு. மட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமத்தின் குடியேறியுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் மீள வாழ்வுக்கான பணிகளை நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான தேன்சிட்டு அமைப்பானது முன்னெடுத்து வருகிறது. ஆனந்தபுரம் கிராமத்தில் குடியேறிய குடும்பங்களுக்கான பயன்தரு மரங்கள் நாட்டுவதற்கான உதவியை வேண்டியிருந்தோம். எமது வேண்டுதலையேற்று தங்கள் உதவியை வழங்க முன்வந்த உறவுகளான எமது திரு.திருமதி தெய்வேந்திரன் வதனி (வட்வெட்டித்துறை) கதிரவேற்பிள்ளை சீதாலக்ஸ்மி குடும்பத்தினரின் ஆதரவில் 41குடும்பங்களுக்கும் 410 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. அமரர்கள் நடராசா சறோயினிதேவி தம்பதிகளின் நினைவுநாளை முன்னிட்டு 14குடும்பங்களுக்கான தென்னைமரக்கன்றுகள் வழங்குவதற்கான …
-
- 2 replies
- 722 views
-
-
France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் அரச சார்பற்ற நிறுவனமான சர்வோதயம் ஊடாக 2014 இல் மட்டும் ..
-
- 0 replies
- 508 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமான கிரிமிச்சையோடை கிராம மக்களுக்கு லண்டன் செல்வ விநாயகர் ஆலய நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக ஞாயிற்றுக்கிழமை மாலை உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இவ் உதவிப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக வழங்கப்பட்ட உதவிப்; பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாக சென்று வழங்கி வைத்தனர். இதன்போது பேரவை பிரதி நிதிகள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப் உணவுப் பொதியில் அரிசி சீனி தேயிலை கோதுமை மா பருப்…
-
- 0 replies
- 435 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க கனடா வாழவைப்போம் அமைப்பு கனடாவில் வாழும் புலம் பெயர் தமிழ் உறவுகளின் கருணை உள்ளங்களுடன் இணைத்து மாற்றுவலுவுள்ள போரினால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவி வருகின்றது. கனடாவாழவைப்போம் அமைப்பின் உதவியின் மூலம் ஏராளமான உறவுகள் வாழ்வின் ஆதாரத்தை பெற்றுக் கொண்டுள்ளன. இந்த உதவிகளின் தொடர்ச்சியாக 2015ம் ஆண்டின் கிளிநொச்சியில் முதல் உதவி வழங்கலாக கனடாவாழ் புலம் பெயர் உறவுகளான பாகிதா சங்கரலிங்கம் பொ.குணதாசன் பயஸ் மரியதாஸன்(ம.ஜெபக்சன் ம.றொசான்) ஆகிய கருணையுள்ளங்களின் மூலம் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்று குடும்பமாக இருப்பவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி கருதி கற்றல் உபகரணங்…
-
- 0 replies
- 440 views
-
-
-
இலங்கைத்தீவிலே குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களிலே பல நெடுங் காலமாக தமிழர்கள் மீது நன்கு திட்டமிட்டு அரச படைகளாளும், ஏனைய சமூகத்தினராலும் நாங்கள் அடக்கப்பட்டு எமது சகோதரர்களையும், சகோதரிகளையும் இழந்தவர்களாக இந்த நாட்டிலே வாழமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் எமது உறவுகளுக்காக கனடாவில் இருக்கும் வாழவைப்போம் அமைப்பு வாழ்வாதார உதவித்திட்டங்களை எமது பகுதிகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கூறினார். நேற்று நாவிதன்வெளி பிரதேசத்தில் நடைபெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்விலும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்விலும், மாணவர்களுக்கான கொப்பிகள் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார். கனடாவில் இருக்கும் வாழவைப்போம் அமைப்பானது வாழ்வாதார உதவிகளுக்க…
-
- 0 replies
- 700 views
-
-
Friday, December 26, 20140 comments (பத்ரா) வெள்ள நிவாரண நடவடிக்கைகளை கிழக்கு மாகாணசiபையும் மேற் கொள்ளவேண்டும் என வழியுருத்தி கிழக்கு மாகாணசபையின் எதிர்க் கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி அவர்கள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் பிரதம செயலாளர் உற்பட அணைத்து மாகாண சபை அமைச்சர்களுக்கும் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார் அக்கடிதம் பின்வருமாறு அமைகிறது. கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக கிழக்கு மாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் பல கிராமங்கள் வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளன. வீடுகள் வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளதினால் மக்கள் பாடசாலைகள், கோவில்கள் போன்ற பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். திருக்கோணமலை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளிலு…
-
- 0 replies
- 460 views
-
-
France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் + பாராளுமன்ற உறுப்பினர் யோகேசுவரன் = அவசர வெள்ள நிவாரண உதவி (மட்டக்கிளப்பு) 24ந்திகதி மட்டக்கிளப்பிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் திரு. S. YEHESWARAN அவர்கள் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சின் தலைவருக்கு நேரடியாக தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு மட்டக்கிளப்பின் தற்போதைய வெள்ள நிலையை எடுத்துக்கூறி அவசர நிதியுதவியைக்கேட்டார். புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சினால் வேறு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் போதும் .... உடனடியாக நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து வெள்ளத்தால் ஏற்பட்ட அவசரநிலை என்பதாலும் கோரிக்கையை வைத்தவர் அந்த மக்களால் தெரிவு செய்ப்பட்டவர் தாயக மக்களுடன் அல்லும் பகலும் …
-
- 3 replies
- 906 views
-