Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. கரும்புலிகள் ஒரு வரலாற்று அபூர்வம்! July 5, 2019 இன்று கரும்புலி நாள். எமது மக்களின் விடுதலைக்காகத் தமது உயிர்களையே ஆகுதியாக்கிய உன்னத மறவர்களை நினைவேந்தல் செய்யேண்டிய நாள். இன்றைய நாள்குறித்த சிறப்புக் கட்டுரையே இது. ஒருமுறை பொறுமையோடு இதனை நோக்குவோம்…! தத்துவங்கள் எல்லாம் தலைகீழாகி விட்டன. வீறு கொண்டெழுந்த விடுதலைப் போராட்டங்கள் பல இடையில் வெம்பிப் பழுத்தவை போலாகிவிட்டன. அமைதி என்ற மாயத்திரைக்குள் சமரசங்களும் இயலாமையும் தாண்டவமாடுகின்றன. இப்படியான இன்றைய உலகிலே பனிப்போர் கால கட்ட நெருக்கடிகளையும் தாண்டி புதிய உலக ஒழுங்கினுள்ளும் புகுந்து அதன் அழுத்தங்கட்கும் முகம் கொடுக்கத் தயாராகும் விடுதலைப்புலிகள்; இயக்கம் ” கரும்புலிகள் ” எனும் படையணியைப் போரா…

    • 2 replies
    • 906 views
  2. இலட்சிய உறுதியுடன் வாழ்ந்த லெப் .கேணல் நீலன் ஒரு கட்டுப்பாடான இயக்கத்துடன் முரண்படுவோர் எந்த நிலைக்குச் செல்வர். என்பதைக் கருணாவின் பிளவு நமக்கு வெளிப்படுத்தியது. அதன் மோசமான விளைவுகளில் ஒன்று லெப்.கேணல் நீலனின் படுகொலை. இயக்கத்தில் இணைந்து கொண்டோர் இலட்சியத்திற்கும், இயக்கத்திற்கும், அதன் தலைமைக்கும் விசுவாசமாக நடந்து கொள்வேன் என சத்தியப்பிரமாணம் செய்திருந்தனர். அதன்படி என்றுமே தலைமைக்கு விசுவாசமாக இருந்தார் நீலன். அதுவே அவரது இழப்புக்கும் காரணமாகியது. துரோகம் செய்யப் புறப்படுபவன் தனிப்பட்ட நட்பையும் பொருட்படுத்த மாட்டான் என்பதை நிரூபித்தார் கருணா ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் நீலன். விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் புலிகளின் பிரதான தளங்களுள் …

  3. கடற்கரும்புலிகள் ஜெயந்தனும், சிதம்பரமும் கடலில் 04.05.1991 அன்று! AdminMay 4, 2019 கடற்கரும்புலி சிதம்பரம நிறையப் படிக்க வேண்டும் என்று அவன் சின்னவனாக இருக்கும் போது ஆசைபடுவான். ஆனால், குடும்பத்தின் நிலை அவனது கனவுகளைச் சிதைத்தது, நான்காம் வகுப்பிற்குப் பிறகு அவன் புத்தகங்களைத் தூக்கியதில்லை. அவர்கள் குடியிருந்த வீட்டில்தான் ஏழ்மையும் குடியிருந்தது. வீட்டில் அம்மாவும் அக்காமாரும் செய்கின்ற எள்ளுப்பாகுவையும், பலகாரங்களையும் தோளில் வைத்துக்கொண்டு அவன் தெருவில் இறங்குவான். திரும்பி வந்த பிறகுதான் அவர்களின் வீட்டில் அடுப்பெரியும். வளர்ந்தபின் ‘றோலரில்’ கடலில் மீன் பிடிக்கச் செல்வான். மீன் கிடைக்காது போனால், வாட்டத்தோடு திரும்பிவருவான். முற்றத்தில் நிற்கு…

  4. எங்கள் தெருவெங்கும் அன்னை பூபதிகள்! தீபச்செல்வன்.. April 19, 2019 ஈழத்தில் அன்னையர்களின் போராட்டத்திற்கு தனித்துவமான இடமுண்டு. தாய்மை உலகில் உன்னதமான உணர்வு. மனிதர்கள் மாத்திரமின்றி அனைத்து உயிரினங்களிலும் தாய்மை மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது. விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களிலும் தாய்மையின் மகத்துவத்தை உணரலாம். ஈழத்து அன்னையர்களின் வாழ்வு துயரத்தில் தோய்ந்தது. இன்றைக்கு ஈழமெங்கும் அன்னையர்கள் தவித்து வாழும் ஒரு வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக, அவர்களின் விடுதலைக்காக, நீதிக்காக ஈழத்தில் அன்னையர்கள் தெருவில் வாழும் ஒரு போராட்டத்திற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அன்னையர்கள் கண்ணீர் சி…

  5. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சின் மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களுக்கான நாட்டுப்பற்றாளர் மதிப்பளித்தல் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள்

  6. பிரமந்தனாறு படுகொலை ஈழ மண்ணில் இடம்பெற்ற படுகொலைகளில் பிரமந்தனாறு படுகொலை வேறுவிதமானது. இப்படுகொலையை பிரித்தானிய அல்லது இஸ்ரேல்காரர்கள் நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் சந்தேகம் கொள்கின்றனர். பொதுவாக வெள்ளைக்காரர்கள் நம் மீது நடத்திய படுகொலை என்றாலும், உலகமே சேர்ந்து தான் நம்மை அழித்திருக்கிறது என்பதற்கு எஞ்சியிருக்கும் ஒரேயொரு சாட்சிதான் இந்த அய்யா

    • 0 replies
    • 798 views
  7. தமிழீழ படைத்துறைச் செயலர் கேணல் தமிழேந்தி கேணல் தமிழேந்தி அவர்கள் தமிழீழ நிதிப் பொறுப்பாளராகத் தான் எம்மில் பலருக்கு தெரியும். அதையும் தாண்டி தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய பணியும்,அவர் வாழ்ந்த எளிமையான வாழ்வையும் எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை . உண்மையில் கேணல் தமிழேந்தி அவர்களின் வாழ்க்கைச் சூழல் ஆனது இயற்கையுடன் ஒன்றித்ததாகவே இருந்தது. எப்போதும் அவருடைய தங்குமிடங்கள்( பாசறை ) இயற்கை சூழ்ந்ததாகவும் அமைதியானதாகவும் இருக்கும். சுற்றாடல்கள் எங்கும் ஆயுள் மூலிகை நிறைந்த செடிகளும் ,செங்காந்தள்( கார்த்திகைப்பூ) செடிகளும் , கொடிகளால் ஆன குடில்களும் ,வாழை, அன்னாசி,மரவள்ளி,தென்னை என பல வகை மரங்களாலும் சூழ்ந்த அழகிய இடமாகவே காணப்படும். அவரது படுக்கை அறையிலே ஒரு வேப்பமரப்பலகையின…

      • Like
    • 8 replies
    • 2.2k views
  8. நாட்டுப்பற்றாளர் /ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் 12/02/2019.நாட்டுப் பற்றாளர் சத்தியமூர்த்தி அவர்களின் இறுதி குரல். ################### ####################### ###################### ################# சிந்து சத்தியமூர்த்தி...... பத்து வருடம் கடந்து சிந்து அப்பாவைப் பற்றி புத்தகத்தில் எழுதிய பதிவு இது.... அப்பாவும் நானும்...! ஆண்டுகள் பல முடிந்திட்டாலும் எனது அப்பா உயிருடன் இருந்து என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் உணர்வு எனக்கு. ஏனெனில் இரண்டரைவயதில் எனது அப்பா எனக்கு செய்தவை செய்யநினைத்தவை செய்யவைத்து கைதட்டிமகிழ்ந்தவை எல்லாமே இன்று எனக்கு கொஞ்சமே ஞபகமாய்........…

  9. தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆளுமை...! வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது ஒரு புனிதப் பயணம்! ஈழத்து மண்ணில் பல ஆண்டுகளாகப் பாய்ந்தோடும் தமிழ் மக்களின் குருதி வெள்ளத்தை இல்லாமற் செய்ய பிரித்தானிய அமைப்பொன்றின் சமாதானத் திட்டத்தைச் சுமந்து நகர்ந்து கொண்டிருந்தது! அது! வங்கக் கடலும் வெண்புறா பறக்கும் நாட்களுக்காக ஆதரவளித்து அக்கப்பலை தொட்டு அரவணைந்தது! இந்திய உளவுப்பிரிவின் நச்சுக் கண்கள் அதன் மேல் பாய்கின்றன. பாரதக் கடற்படை அகத் கப்பலைச் சுற்றி வளைக்கிறது. ஆயுத பலத்தால் அதை பாரதக் கப்பல் தன் கடல் எல்லைக்குள் இழுத்துச் செல்கிறது. கப்பலில் பயணித்த போராளிகளை சரணடையும்படி கட்டளை பிறக்கிறது! உயிரணைந்து போனாலும் சரண…

    • 4 replies
    • 2.6k views
  10. போராட்ட வரலாற்றில் என்றும் எங்களுடன் சாள்ஸ்! 2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம். பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப்பு. தலைவரின் புருவம் உயர்கின்றது. ~இப்ப மன்னாருக்கு ஏன் போகவேண்டும்? ” நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய்?” தனது வழமையான கேள்விகளுக்கான பதில்களுடன் எமது தயார் நிலையைக் கண்ணுற்ற தலைவர் கூறுகின்றார். மன்னார் களமுனையின் பின்னணியில் எதிரியின் சிறப்பு அணிகள் நிலையெடுத்துள்ளன. பிரதான வீதிகளினூடான பயணம…

  11. தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்டபாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்காலத்தில் இருந்து செயற்பட்ட பாலா அண்ணா விடுதலை இயக்கத்தின் பிதாவாக காணப்பட்டார். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கும் விடுதலைப் போராளிகளுக்கும் உலக போராட்ட வரலாறுகளை எடுத்துக் கூறி பல்வேறு நாடுகளின் அரசியலாளர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி அதனுடாக விடுதலைக்கான உழைப்பினை மேற்கொண்டதில் தேசத்தின்குரல் முதன்மையானவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது துணை…

    • 8 replies
    • 1.9k views
  12. மட்டு அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் ஜீவன்...! ஜீவனுள்ள நினைவுகள்….. கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. – கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு தேவையான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து செல்வதே ஒரு கலை. தென் ஈழக் காடுகளிலே இந்தக் காலைதான் தேவையான அரிச்சுவடி. கத்தி வெட்டுப் போல் ஒரு நகர்வு… கை வீசும் தென்றல் போல் ஒரு நகர்வு… இப்படி புத்தியையும் பலத்தையும் எடைபோட்டு நடந்ததாலேயே அங்கு போராட்டம் தாக்குப்பிடித்த…

      • Sad
    • 3 replies
    • 1.8k views
  13. 1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 02 ஆம் நாள் முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்மேற்கு எல்லைக் கிராமமான ஒதியமலைக்குள் நுழைந்த இலங்கை இராணுவத்தினர், அக்கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் 32 பேரை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்தது. எல்லைக் கிராமங்களில் இருந்து தமிழர்களை வெளியேற்றும் நோக்குடன் நடத்தப்பட்ட இந்தப் படுகொலைக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.

    • 0 replies
    • 604 views
  14. மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக…. தங்கையர்கள் தாருஜா, போன்றோரின் ஞாபகார்த்தமாக லண்டன் ஐபிசி தமிழில் வாசிக்கப்பட்ட இக்கவிதையை மாவீரர் நாளுக்காக இங்கு பதிகிறேன் அன்னை மண்மீட்புக்காய் அணிவகுத்த தங்கையரே இன்னுயிரை ஈந்தீர் எமக்காய் உம் வாழ்வளித்தீர் பொல்லாப் பகையின் புறங்காணப் போரிட்ட மெல்லியலார் நீங்கள் விதிமாற்றப் பாடுபட்டீர் உங்கள் நினைவெம்மை ஒரு போதும் நீங்காது செங்களத்தில் ஆடிய உம் தீரம் மறக்காது நெஞ்சை நிமிர்த்தி நேர் வந்த குண்டேந்த அஞ்சாது நின்றீர் அக்காலம் போனதுவே! எம்மினத்து மாதர் இரும்பொத்த நெஞ்சினர் ஓர் இம்மியளவும் இதயம் பயமறியா வீரத்தாய்மார்கள் விடுதலையைக் காதலித்து ஆரத்தழுவிய எம் அக்காமார் …

    • 3 replies
    • 804 views
  15. இன்று மாவீரர் தினம்! November 27, 2018 இன்று மாவீரர் தினம் ஈழத்தமிழர்கள் அரசியல் உரிமைகளை பெற்று, சுதந்திர இனமாக வாழ வேண்டுமென்பதற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூரும் நாள். ஈழ விடுதலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும், அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் மொத்தமான 30,000 வரையான மாவீரர்கள் ஆகுதியாகியுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர்நீத்த முதல் மாவீரன் லெப். சங்கர் (சத்தியநாதன்) உயிர்நீத்த நவம்வர் 27ம் திகதியையே புலிகள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தினார்கள். தமது அமைப்பிலிருந்து உயிர்நீத்தவர்களின் உடல்களை எந்த சந்தர்ப்பத்திலும் எதிரியின் கைகளில் சிக்க அனுமதிக்ககூடாது, உயிர…

  16. பிரபாகரன் வழங்கிய ஆவணங்களுடன் மகனைத் தேடிய தாய்: முன்னாள் போராளிகள் ஆறுதல்! தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட முக்கிய ஆவணங்களுடன் தனது மகனது புகைப்படத்தினைத் தாயொருவர் தேடியலைந்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்த மாவீரர்களின் உருவப் படங்களை அவர்களது பெற்றோருக்கு வழங்கி கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று (சனிக்கிழமை) ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் மட்டக்களப்பு வெல்லாவெளியில் நடத்தப்பட்டது. இதனையறிந்த மாவீரரின் தாயொருவர் வீரச்சாவடைந்த தனது மகனது பிரபாகரன் வழங்கிய முக்கிய ஆவணங்களுடன் மகனின் புகைப்படத்தைக் காண குறித்த நிகழ்விற்கு ஓடிவந்தார் அந்த வயது முதிர்ந்த தாய். இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கா…

  17. வவுனியாவில், ‘தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2018 நினைவேந்தல்! அகரன்November 24, 2018 in: நிகழ்வுகள் தமிழீழ தேசிய மாவீரர் நாள் – நவம்பர் 21 தொடக்கம் 27 வரையான ‘நினைவேந்தல் வாரத்தை’ இல்லாமல் செய்து, பிறிதொரு நாளை ‘நினைவு கூருதலுக்கான பொதுநாளாக’ தேர்ந்தெடுக்கும் விசமத்தனமான பிரசாரத்தில் கயமைக்கூட்டம் ஒன்று ஈடுபட்டிருக்கும் சூழலில், ‘தமிழ் தேசிய இனத்தின் வீரஆத்மாக்களை’ நெஞ்சத்தில் இன்னும் இன்னும் உயர உயர ஏந்திப்பிடித்து விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைந்துருகி, கர்வத்தோடும் – பெருமையோடும் அஞ்சலித்து ‘வீரவணக்கம்’ செலுத்துமாறு தமிழீழ மக்களிடம் வலியுறுத்தி கூறியுள்ள வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, 2018 நவம்பர் 27 செவ்வாய் கிழமை அன்று, வழமை போன்றே இம்முற…

  18. மாவீரர்... வாரம், இன்று ஆரம்பம். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் தின அனுஷ்டிப்பு வாரம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது இன்னுயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்த முதலாவது மாவீரர் சங்கரின் நினைவாக, அவர் உயிரிழந்த கார்த்திகை 27ஆம் திகதி, விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனினால் மாவீரர் தினமாக 1987ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைக்காய் உயிர் தியாகம் செய்த விடுதலைப்புலிகளை நினைவுகூரும் அஞ்சலிகள் நடைபெற்றுவருகின்றன. மாவீரர் நாளை அனுஷ்டிக்கும் வகையில் கார்த்திகை 21ஆம் திகதி மாவீரர் வாரம் ஆரம்பம…

  19. 11.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட "தவளை பாய்ச்சல்" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று! வீரவணக்கம்

  20. பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11,12,13 ஆகிய திகதிளில் இடம்பெற்றன. பூநகரி வெற்றி நாள்! ஒபரேசன் தவளைப் பாய்ச்சல் என்ற வெற்றிகரமான இராணுவ நடவடிக்கை ஊடாக நிலத்திலும் நீரிலும் பாய்ந்து பூநகரி இராணுவத்தளத்தை அழித்து நிர்மூலமாக்கி பெரும் சாதனை படைத்த விடுதலைப் புலிகளின் பூநகரித் தள வெற்றிச் சமரின் வெற்றி நாள் இன்றாகும்...!

  21. வெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்….! லெப்கேணல் மணிவண்ணன் அடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும். நினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா என்றும் தெரியாமல் எப்படித்தான் பயணிப்பது? அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது? இப்போதுதானே அவன் போராளியாகியிருந்தான். பயிற்சிகளை இனித்தான் பெறவேண்டும். அந்தப் பயிற்சிகளைப் பெறவேண்டுமாயின் இந்தப் பயணம் முடிந்தாக வேண்டும். மணிவண்ணன் எதற்கும் அஞ்சியவனல்ல. அவனிடம் துணிவு என்பது ஏராளமாக இருந்தது.…

  22. தென்தமிழீழம் பெற்ற மாவீரன் தளபதி அன்ரனி ! வசிட்டர் வாயால் பிரமரிஷி என்பதுபோல கிட்டு வாயால் சிறந்த தளபதி அன்ரனி ! "உலகெங்கிலும் கிடைக்காத மலிவான கூலி - எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள்" என அடையாளப் படுத்தப்பட்டவர்கள் தமிழர்கள். ஆனால் திருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் இவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள். இந்த ஆரம்பம் கல்முனை - துறைநீலாவணைப் பகுதியில் இடம்பெற்றது. பெரும் பாலானோருக்குத் தெரியாது. தம்மைத் தாக்க வந்த ஆயுத தாரிகளான சிங்களவர்களை ஓட ஓட விரட்டியவர்கள் கனகசூரியம் உள்ளடங்கிய குழுவினர். அம்பாறை பட்டிப்பளையில் அரசமரக் கிளையொன்றை நாட்டிய இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ் .சேனநாயக்கா, " இந்த மரக்கன்று பெரிய விருட்சமாகும் போது…

  23. தென்தமிழீழம் தந்த இன்னுமோர் முத்து - அக்பர்! நன்றி "விடுதலைப்புலிகள்" விடுதலை வீரியம் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்டினன்ட் கேணல் அக்பர் / வழுதி.................. வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச்சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் ஐயம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடிய நிலையில் அக்பர் ஒருபோதும் இத்தனை மணிநேரம் தொடர்பில…

  24. முதல் வித்து 2ம் லெப். மாலதி 1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்;த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன. அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது ஆ16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார். வானம் கரிய இருளைச் சொரிந்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.