மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதல் ஒரு பார்வை 10.06.1997 அன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த ‘ஜெயசிக்குறு’ நடவடிக்கைப் படைகளின் விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 25ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்…. கரும்புலி கப்டன் சாதுரியன் நடராசா அரசரட்ணம் மட்டக்களப்பு கரும்புலி மேஜர் யாழினி சிவசுப்ரமணியம் ராகினி யாழ்ப்பாணம் கரும்புலி மேஜர் நிதன் (பர்வதன்) மாணிக்கம் அருள்ராசா மட்டக்களப்பு தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர…
-
- 0 replies
- 594 views
-
-
நாச்சிக்குடாவிலிருந்து வந்துகொண்டிருந்த கடற்புலிகளுக்குச் சொந்தமான சண்டைப்படகொன்று கிளிநொச்சி இரணைதீவுக்கருகே வைத்து 08/02/1997 அன்று கடற்சமரொன்றிற்குப்பின் கடற்படையினரால் அழிக்கப்பட்டது (உதயன்: 11/02/1997). இத்தாக்குதலில் 14 போராளிகள் வீரச்சாவடைந்தனர். பெயர் விரிப்பு பின்வருமாறு: மேஜர் முத்துக்குமரன் (ஜாக்கர்) மேஜர் ரகுவரன் மேஜர் சிங்கன் மேஜர் ஜெயந்தன் கப்டன் மழவன் (விமல்) கப்டன் செம்முகிலன் கப்டன் தமிழரசன் (சிவா) கப்டன் சரித்திரன் (குமரன்) கப்டன் ஜீவாகரன் கப்டன் முகுந்தன் 2ம் லெப்டினன்ட் குலசிங்கம் (மலரவன்) 2ம் லெப்டினன்ட் தவக்குமார் வீரவேங்கை வேணுதாசன் (மதியழகன்) வீரவேங்கை புலித்…
-
- 0 replies
- 336 views
-
-
தமிழீழ தேசிய இன விடுதலை போராட்டத்தின் தேசிய தலைவரின் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் பின்னால் ஒரு வரலாறு உண்டு. அதே போன்று தான் இந்த புகைப்படத்திற்கும் பெரிய வரலாறு உண்டு. இந்த புகைப்படமானது 1987 ஜனவரி 6 ஆம் தியதி தொண்டமானாறு கெருடாவில் உள்ள விடுதலைப் புலிகளின் பேஸ் ஒன் எனும் முகாமில் 1987 ஜனவரி அன்று இரவு எடுக்கப்பட்டது. இதற்கு முன்பாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தேசியத் தலைவர் தமிழகத்தில் இருந்து வந்த நிலையில், கடைசியாக இந்தியாவில் இருந்து 1987 ஜனவரி 5ஆம் தியதி அன்று தான் புறப்பட்டு மாதகல் வழியாக யாழ்ப்பாணம் வந்தது குறிப்பிடத்தக்கது. தாயகம் திரும்பிய அன்றைய மறு தினமே இந்த முகாமிற்கு தலைவர் வருகை தந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் தளபதி கிட்டு தலைமையில் யாழ்குடா நாடு அன…
-
- 0 replies
- 254 views
-
-
https://m.facebook.com/story.php?story_fbid=2986697364765531&id=100002758898211
-
- 0 replies
- 447 views
-
-
நெருப்பாற்றில் தீக்குளித்த தளபதிகளின் 12ம் ஆண்டு நினைவு! AdminApril 4, 2021 ஆனந்தபுரம் எதிரிக்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே தமிழரின் வீரத்தை உணர்த்தியது. நெருப்பாற்றில் தீக்குளித்த தளபதிகளின் 12 ஆம் ஆண்டு நினைவு நாள் 04.04.2021 ஆகும். ஆனந்த புரத்தில் ஆகுதியாகிய வீரத் தளபதிகளுக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு வீரவணக்கம் தெரிவித்துள்ளது. http://www.errimalai.com/?p=62886
-
- 0 replies
- 333 views
-
-
வவுனியாவில், ‘தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2018 நினைவேந்தல்! அகரன்November 24, 2018 in: நிகழ்வுகள் தமிழீழ தேசிய மாவீரர் நாள் – நவம்பர் 21 தொடக்கம் 27 வரையான ‘நினைவேந்தல் வாரத்தை’ இல்லாமல் செய்து, பிறிதொரு நாளை ‘நினைவு கூருதலுக்கான பொதுநாளாக’ தேர்ந்தெடுக்கும் விசமத்தனமான பிரசாரத்தில் கயமைக்கூட்டம் ஒன்று ஈடுபட்டிருக்கும் சூழலில், ‘தமிழ் தேசிய இனத்தின் வீரஆத்மாக்களை’ நெஞ்சத்தில் இன்னும் இன்னும் உயர உயர ஏந்திப்பிடித்து விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைந்துருகி, கர்வத்தோடும் – பெருமையோடும் அஞ்சலித்து ‘வீரவணக்கம்’ செலுத்துமாறு தமிழீழ மக்களிடம் வலியுறுத்தி கூறியுள்ள வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, 2018 நவம்பர் 27 செவ்வாய் கிழமை அன்று, வழமை போன்றே இம்முற…
-
- 0 replies
- 1.1k views
-
-
வேங்கையணி தளபதி பிரிகேடியர் துர்க்கா - காணொளி “அண்ணா! எங்களை நம்புங்கள், நீங்கள் வெளியே இருந்து கட்டளை இடுங்கள். நாங்கள் அதனைச் செயற்படுத்துகின்றோம். நீங்கள் எங்களுக்கு மட்டுமல்ல எங்கட மக்களுக்குக் கட்டாயம் தேவை. அதனால் தயவு செய்து ஆனந்தபுரத்திலிருந்து வெளியேறுங்கள் அண்ணா இதனை உலகெங்கும் பரந்து வாழ்கின்ற எங்களுடைய தமிழ்மக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.” இதுதான் அவள் தலைவருக்கு எழுதிய கடைசிக் கடிதம். உண்மையிலேயே ஆனந்தபுரத்திலிருந்து வெளியேறுவது என்ற எண்ணம் தலைவர் அவர்களிடம் ஒருதுளியும் இருக்கவில்லை. இறுதிவரை நின்று போராடுவது என்றே தலைவர் முடிவெடுத்திருந்தார். https://www.thaarakam.com/news/5dbb84f1-6af3-4d3d-b5b9-81000c9b6127
-
- 0 replies
- 307 views
-
-
பிரிகேடியர் விதுசா எனும் விடுதலை தீ -காணொளி பிரிகேடியர் விதுசா வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத ஆளுமையின் வடிவம். பார்த்தவுடனே தளபதி என்கின்ற மரியாதை பார்ப்பவர் அனைவருக்குமே வந்துவிடும். உலகமே விழிநிமிர்த்திப் பார்க்கும் அளவுக்குப் பெண்புலிகளை வழிநடத்தி, வான்முட்டும் வெற்றிகளை, மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதங்களைப் படைக்க வைத்த இரண்டாம் லெப். மாலதி படையணியின் சிறப்புத்தளபதி. ஓப்பரேசன் லிபரேசனில் தொடங்கிய அவரது களமுனைப் பயணம் விடுதலைப்புலிகளின் இறுதி முற்றுகைச் சமராக இருந்த ஆனந்தபுரத்தில் தனது இறுதி மூச்சைத் தமிழீழ மண்ணுக்காய் அர்ப்பணிக்கும் வரை ஓய்வு என்பதையே அறியாத உழைப்பாளி. https://www.thaarakam.com/news/d9710c17-5b89-4ae0-a565-a723172ea977
-
- 0 replies
- 717 views
-
-
இன்று செப்டம்பர் 26. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவுநாள். ஒவ்வொரு ஆண்டும் திலீபன் தியாகச் சாவடைந்த நாளை நினைவுகூர்ந்து கொண்டே இருக்கிறேன். சின்ன வயதில் இடம்பெயர்ந்து வீடுகளே இல்லாத நாட்களில்கூட திலீபனின் தியாகத்தை நினைவுகூர்ந்தோம். 1995இற்கு முன்பாக ஒரு வருடத்தில், அதுவும் ஒரு நாவற்பழக்காலம் வீட்டின் முன்பாக உள்ள நாவல் மரத்தின் கீழ் எங்கேயோ வாங்கி வந்த திலீபனின் படத்தை கொண்டு வந்து தீபம் ஏற்றிய நினைவு இப்பொழுதும் அந்த நாவல்மரத்தின் கீழிருக்கிறது. இடம்பெயர்ந்து ஸ்கந்தபுரத்தில் இருந்த பொழுது எங்களுக்கு வசிக்க வீடே இருக்கவில்லை. ஒரு மர நிழலில் வாழ்ந்துகொண்டிருந்தோம். அப்பொழுதும் திலீபனின் நினைவுநாள் வந்தது. ஒரு துணியால் ச…
-
- 0 replies
- 774 views
-
-
என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி - காணொளி 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது. சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்கப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி பிரிகேடியர் தீபன், பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை “என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்.” தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அ…
-
- 0 replies
- 464 views
-
-
கப்டன் பண்டிதர் எமது விடுதலை அமைப்பின் மூத்த உறுப்பினரும் அவரது ஆழுமையும் வழிகாட்டலும் 31 Views எமது விடுதலை அமைப்பின் அத்திவாரம் போடப்பட்ட போது ரவீந்திரன் என்ற இயற் பெயரைக் கொண்டவரின் ஆழுமையும் அறிவும் பண்பும் ஒருங்கே அமைந்திருந்ததால் எல்லா மூத்த உறுப்பினர்களும் அவரைப் பண்டிதர் என்றே அழைத்தனர். முதல் மாவீரரான சங்கரின் அயல் வீட்டினரும் நெருங்கிய நண்பருமான பண்டிதர் வசதி படைத்த குடும்பத்தில் பிறக்காவிடினும் தமிழ் மக்களின் விடுதலைக்காக நேர்மையுடனும் கடமை கண்ணியத்துடனும் செயற்பட்ட ஒரு சிந்தனையாளர். நான் பண்டிதர் என்ற உயர் சிந்தனை கொண்டவரை 1981 ஆரம்ப காலங்களில் சந்தித்த போது மிகவும் பயத்துடனேயே சந்தித்தேன். அந்த முதல் சந்தி…
-
- 0 replies
- 441 views
-
-
அண்ணன் அப்துல்லா வழியில் ஆகுதியான தங்கை திலகா நிதித்துறை மகளிரிலிருந்து போர்முன்னரங்குகளுக்கான மேலதிக ஆட்கள் தேவை கருதி அணி ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. முத்தையன்கட்டு சோதியா படையணியின் பயிற்சிப் பாசறை நோக்கி மேஜர் ஜெயந்தி களப்பயிற்சிக்காக அவ் அணியை அழைத்துச் சென்றார். நீண்டகாலம் வெளிக்களப்பணிகளில் இருக்கும் போராளிகளுக்கு இப்பயிற்சி மிகவும் இன்றியமையாததாகும். அது 1999 ஆம் ஆண்டின் முற்பகுதி, “நான் ஆர்.பி.ஜி (RPG) பயிற்சி எடுக்க விரும்புறன்” என்று பயிற்சியின் போது பொறுப்பாளரைக் கேட்டது வேறு யாருமல்ல. உயரமான நிமிர்ந்த உருவமும், தீர்க்கமான பார்வையும் கொண்ட திலகா அக்கா தான். திலகா அக்காவின் குடும்பத்தின் போராட்டப் பங்களிப்பானது மிகவும் முதன்மையானது. “அப்துல்லா குடும்ப…
-
- 0 replies
- 170 views
-
-
அன்பரசன் (லோறன்ஸ்) அவர்கள் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறிலங்கா அரசு தமிழர்கள் மீதும், தமிழர் தாயகத்தின் மீதும் காலத்திற்குக் காலம் மேற்கொண்டு வந்த ஆக்கிரமிப்புகளாலும், இராணுவத்தின் தாக்குதல்களாலும் மக்கள் அனுபவித்த அவலங்களையும் வலிகளையும் கண்டு 1989 இன் பிற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். மணியந்தோட்டம் 03 பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று அன்பரசன் என்னும் பெயருடன் யாழ். மாவட்டப் படையணியில் சேர்க்கப்பட்டார். யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களில் இவரும் பங்கு கொண்டார். தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதித்துறை ஆரம்பிக்கப்பட்டு. துறை சார்ந்த சார்ந்த பணிகளைச் செய்வதற்காகத் தமிழீழத்தின் அனை…
-
- 0 replies
- 65 views
-
-
எமது நீண்டபெரும் விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் களமான முள்ளிவாய்க்கால் வராலாற்றுப் பூமியில் உறுதியோடு போராடி தம் இன்னுயிர்களைத் தமிழீழ விடுதலைக்காய் அர்ப்பணித்துக் கொண்ட எண்ணற்ற மாவீரர்களுள் ஒருவராக மாவீரர் வீரவேங்கை அறிவும் வித்துடலாய் சாய்ந்தார். இவர் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு செல்லையா சிவகுமார் என்னும் இயற்பெயரோடு துடிப்புள்ள இளஞராக வளர்ந்து வந்தார். 1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட யாழ். இடப்பெயர்வின் மூலம் அதிகமான மக்கள் இவர் வாழ்ந்து வந்த தொட்டியடி. விசுவமடு பகுதியிலும் குடியேறவே அவரது கண்முன்னே தம் இருப்பிடங்களை இழந்து எம் மக்கள் படும் இன்னல்களையும் அவர்கள் சந்தித்த இழப்புகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டும் தேச விடியலின் அவசியம் பற்றிச் சிந்தித்தவரா…
-
- 0 replies
- 82 views
-
-
விதைக்கப்பட்டது வீரமும்தான் நவம்பர் 15, 2020/தேசக்காற்று/வழித்தடங்கள்/0 கருத்து மேஜர் ரவிசங்கர் யூலியஸ் வின்சன் கெனடி சாவற்காடு, மன்னார். பிறப்பு: 08.09.1970 வீரச்சாவு: 09.06.1992 சிறுநாவற்குளம் படை முகாமிலிருந்து 300யார் தூரத்திலுள்ள பிரதான வீதிச் சந்தி. எப்போதும் இராணுவத்தினரின் அணி ஒன்று அங்கு காவலுக்காகப் பதுங்கி இருப்பது வழமை. முன்னிலையில் ஒரு ஏ.கே.எல்.எம்.ஜி யைக் கொண்டதாக, எந்த நேரமும் இரைதேடியபடி அந்த அணி காத்திருக்கும். இந்த இராணுவ அணியை வளைத்துத் தாக்கி அழித்துவிடுவதற்கு முடிவுசெய்யப்பட்டது. வேவு பார்த்து – திட்டமும் தயாரிக்கப்பட்டது. ரவிசங்கர் இந்த முயற்சியில் ஓய்வின்றிச் செயற்பட்டுக்கொண்டிருந்தான். …
-
- 0 replies
- 666 views
-
-
ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட்டு 12-02-2015 உடன் ஆறு ஆண்டு பூர்த்தி கொள்கின்றது. தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார். மட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தையின் பணி நிமிர்த்தம் யாழ்ப்பாணம் மண்டதீவில் வசித்து தன…
-
- 0 replies
- 998 views
-
-
சிறுத்தைகளைப் போன்று பதுங்கிப் பாயும் அணியொன்றின் நிர்வாக வேலையில் சிலகாலம் பங்கேற்ற பின் விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்திருந்தார் நித்தியா. எப்போதும் சிரித்த முகம். மனம் சிரிப்பது விழிகளில் வெளிப் படையாகத் தெரியும் படியான சிரிப்பு. சளைக்காமல்இ களைக்காமல் எத்தனை கடின பயிற்சியையும் செய்தார். விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்த நாளிலிருந்து தொடர்ந்து சண்டைதான். தொடர்ந்து காயங்கள்தான். பயிற்சி செய்வார். களம் செல்வார். காயத்தோடு வந்து ஓய்வெடுப்பார். மறுபடி பயிற்சி சண்டை காயம் ……. ……. என்று ஒரு தொடர் சங்கிலி. அமைதியான இயல்பைக் கொண்ட அவர் கண்டிப்பான அணி முதல்வியாக அல்லாமல் அன்பான அணி முதல்வியாகவே தனது ; முதற் களமான…. 1992 ஆம் ஆண்டில் தொண்டைமானாற்றில…
-
- 0 replies
- 186 views
-
-
வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் அன்ரன் பாலசிங்கம் http://www.eelamview.com/2011/12/12/anton-balasinga/
-
- 0 replies
- 830 views
-
-
தமிழீழ விடுதலை போரின் போது சிங்கள படைகளுக்கு எதிராக களமாடி 09.09 அன்று வீரகாவியமாகிவிட்ட மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும். தானைத் தலைவனின் வழியில் நின்று மண் மீட்பு போரில் இந்த நாளில் வீரமரணமடைந்துவிட்ட மாவீரர்களுக்கு ஈழதேசம் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது. http://www.eeladhesam.com/index.php?option=com_joomgallery&func=watermark&catid=14&id=4338&Itemid=53 http://www.eeladhesa...=4337&Itemid=53 http://www.eeladhesa...=4339&Itemid=53 http://www.eeladhesa...=4340&Itemid=53 http://www.eeladhesa...=4341&Itemid=53 http://www.eeladhesa...=4343&Itemid=53 http://www.eeladhe…
-
- 0 replies
- 613 views
-
-
கடற்கரும்புலிகள் காவியத்தில் கடற்கரும்புலி மேஜர் புகழரசன் கடற்கரும்புலிகள் அணிக்குள் இவனது வீரச்சாவு சற்றும் வித்தியாசமானதே. விடுதலை போராட்டம் தமிழீழத் தேசியத் தலைவர் காலத்தில் விருட்சமாக வளர்ந்து விடிவை நோக்கி நகர்கிறது; பல வரலாறுகள் பதிந்தும் – தொடர்ந்தும் பல இடைவெளிக்கு பின்பு விடுதலை சேனையில் இணைந்து எமக்கு முன்னர் விதையாக விழ்ந்தவர்கள் வழித்தடங்கள் விடிவை நோக்கிய நெஞ்சங்களின் பாதையாக, கிட்டண்ணா முதல் பல மூத்த தளபதிகள் கடலில் உலாவந்து மேற்கொண்ட ஈழத்தின் விடியலுக்காக திரவியங்கள் சேர்த்திட சுற்றும் பூமியை சூற்றுகின்றேன் ஈழக் கனவுடன்………….. இது இயல்வளவன் உதிர்க்கும் வார்த்தைகள், வார்த்தைகள் போன்று விடுதலை உரம் இவன் மனதில் நிறைந்திருந்தது ஆனால் அப்படியே அவன…
-
- 0 replies
- 304 views
-
-
உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் விததுச்சென்ர ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில் ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் தேதி அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி 7பக்கங்களுக்கு’உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்’ என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தமிழீழத்தின் விடியளுக்காகா தீயில் வீரகாவியமான ஈகப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ஈகைப்பேரொளி முருகதாசன் உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள் என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறு…
-
- 0 replies
- 1.7k views
-
-
வடக்கு புன்னாலைக்கட்டுவனில் இந்தியப் படையின் முகாம் பொறுப்பதிகாரியான மேஜர் கே.பி.தாஸ் அச்செழு அங்கிளிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். அதாவது அக்காச்சி எப்படிப்பட்டவன் என்பதே அக்கேள்வி. அதற்கு அங்கிள் நல்ல போராளி அதைவிட மிகச் சிறந்த சமூகசேவையாளன் என்று பதில் கொடுத்தார். இதன் பின் அக்காச்சியின் பொதுப் பணிகள் பற்றி ஆராய்ந்த மேஜர் கே.பி. தாஸ் தான் அக்காச்சியைப் பார்க்க வேண்டும் என்றும், அக்காச்சியருகில் இருந்து தேனீர் குடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அடுத்த போர் நிறுத்தம் வரும்போது தனது கண்களைக் கட்டிக்கொண்டுபோயாவது அக்காச்சியின் முன் நிறுத்துங்கள் என்றார். தெற்கு புன்னாலைக்கட்டுவன் முகாம் அதிகாரியான மேஜர் ஒபரோய் பத்து நாட்களுக்குள் அக்காச்சியை உயிருடன் பிடிப்பேன் எனச்சொ…
-
- 0 replies
- 85 views
-
-
சோதனைக்குள்ளேயே சாதனை படைத்த கரும்புலி மேஜர் தனுசன்...! சோதனைக்குள்ளேயே சாதனை படைத்தவன். வேதனை தந்தவர் வீட்டினுள் ஆட்லறிகள் உடைத்தவன். திருகோணமலையில் நாளும் துயரச் செய்தியோடு விடியும் கிராமங்களில் ஒன்றில்தான் தனுசன் பிறந்தான். நாளுக்கு நாள் சுற்றிவளைப்புக்கள், கைதுகள், சித்திரவதைகள் என்று அந்த ஊரிற்கே பழகிப்போன அவலங்கள் அது. நித்தம் ஒரு வீட்டில் ஒப்பாரி கேட்கும். சின்ன வயதில் காயங்கள் மேல் காயங்களாக அவனில் பதிந்த காட்சிகள் ஒவ்வொன்றும் மாறாத தளும்பாக என்றும் அவனின் நினைவில் இருந்தன. அந்த நினைவுகளிலிருந்து அவன் தன்னை மீட்டுக்கொள்ள முடியாதவனாய் அலைந்தான். அவன் சிந்திக்கத் தொடங்கியபோது அந்த நாட்கள் மிகக் …
-
- 0 replies
- 836 views
-
-
ஒவ்வொரு நாளும் வாழ்கையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எம்முடன் வாழ்ந்தவர்களைப்பற்றி நினைக்க வைத்து விடும் அப்படித்தான் இன்றும் நெல்ஷா அக்காவின் நினைவுடன்… வழமையான பாடசாலை விடுமுறை நாட்களில் சின்னமகள்(கவிநிலா)விற்கு இரவு தூக்கத்திற்கு போகும் போது கதைசொல்லவேண்டும் இன்று வழமைக்கு மாறாக மகளிடம் நான் கேட்டேன். “அம்மாவிற்கு தூக்கம்வரவில்ல இன்று நிங்கள் கதை சொல்லி என்னை முதலில் தூங்கவைத்த பின்தான் தூங்கவேண்டும் என்றேன் சரி இதற்கு ஒரு வழி இருக்கு என்று சொல்லி முதலில் கண்களை இருவரும் மூடுவம் என்றாள் .இப்போ நான் சொல்லுவதை கற்பனை பண்ணுங்க எண்டன் ஒரு பட்டியில் நிறைய ஆட்டுக்குட்டிகள் நிக்கிறது தெரிகிறதா? என்ன நிறம் எண்டு கேட்டன் பிடிச்ச கலரைவையுங்கள் என்றாள் இப்போ ஆட்டுக்குட்டிக…
-
- 0 replies
- 121 views
-
-
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் இறுதிக்களம் முள்ளிவாய்க்கால் சமர்க்களத்திலும் எமது தேசியத்தலைவருடனே களத்தில் நின்றவர் தலைவருக்கு எப்போதும் உண்மையாகவும் விசுவாசமாகவும் செயல்படவேண்டும் என்பதையே இலக்கணமாக கொண்டு வாழ்ந்தவர். அவர்தான் கேணல் சுயாகி 23வருடங்கள் இவரின் பணி வெளியில் அறியப்படாத, ஏன் போராளிகளுக்குக் கூட பெரியளவில் அறிமுகமில்லாதவன். ஆனால் எமது ஆயுதபோராட்டத்தை தாங்கி நிற்கும் ஆணிவேர் போன்றவர். எமது தலைவரால் பாராட்டப்பட்டவர் தமிழீழவிடுதலைப்புலிகளின் படைக்கல பாதுகாப்பு அணியின் பொறுப்பாளர் இவரே, ஆரம்ப காலத்தில் மணலாற்றுக் காடுகளில் எமது தேசியத்தலைவருடன் இருந்த காலந்தொட்டு இறுதி முள்ளிவாய்க்கால் வரை தலைவரோடு நின்று ஒரே பணியை செய்தவன். அண்ணனின் நம்பிக்கைக்குரி…
-
- 0 replies
- 672 views
-