மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
வட தமிழீழத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் வன்னித் தலை நிலத்தையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையிலே மொட்டைக் கறுப்பன்,பச்சைப் பெருமாள் ஆகிய பாரம்பரிய நெல்லினங்கள் விளையும் விவசாயப் பூமியும் எத்தனையோ மாவீரர்களையும் கரும்புலி வீரர்களையும் நாட்டுக்கீந்த வீரப்பூமியுமான பூநகரி எனும் ஊரிலே ஐந்து அக்காக்கள்,மூன்று அண்ணாக்கள் கொண்ட மிகப் பெரிய அழகான குடும்பத்திலே திரு.திருமதி கந்தர் தம்பதியினருக்கு கடைசிப் புதல்வியாக 09.04.1974 இல் ஞானசகுந்தலா அக்கா பிறந்தார்.அவர்களது குடும்பமானது எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆரம்ப காலம் முதல் தோள் கொடுத்து வந்த குடும்பம் ஆகும்.தேசப் பற்றுக் கொண்ட அந்தக் குடும்பத்தில் பிறந்த ஞானசகுந்தலா அக்காவின் புறச்சூழல்கள்…
-
- 0 replies
- 86 views
-
-
தடைகள் பல தகர்த்த லெப் கேணல் ராஜசிங்கனின் நீரில் கரைந்த நிமிடங்கள் பிரதான கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை 10.2000 விடுதலைப் போர்களத்திற் புலிகள் இயக்கம் தீக்குளித்த நாட்களுள் அன்றைய நாளும் ஒன்று. ஆனையிறவை முற்றுகையிட்டிருந்த புலிகளின் இத்தாவிற் போர்க்களம் அது. அமைதியாகவே விடிந்திருந்த அந்தப் போர்க்களத்தைச் சிறிது நேரத்திலேயே பெரும் எரிமலைபோல் வெடிக்கச் செய்தான் எதிரி. புலிகளை மட்டுமல்ல, தமிழனின் வீரம்பேசி எழுந்துநின்ற அந்…
-
- 0 replies
- 537 views
-
-
கரை புரண்டோடும் வெள்ளக் காடாக காட்சி தருகிறது உடையார்கட்டுப் பகுதி. திரும்பும் இடமெங்கும் சன நெரிசலால் திணறிக்கொண்டிருக்கிறது. ஒரு புறம் காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் முற்றிலும் நிறைந்து வழிந்தன. மறுபுறம் சாவடைந்த மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏறு வரிசையில் இருந்தது. அவ்வாறான ஒரு நிலையில் தான் வன்னியின் முக்கிய அரச மருத்துவமனையாக இருந்த முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை இடம் பெயர்ந்து வந்து வள்ளிபுனத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. அங்கு அரச மருத்துவர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை தமிழீழ மருத்துவப்பிரிவுக்கு இருந்ததால் பல மருத்துவப் போராளிகள் மக்களுக்கான மருத்துவப் பணியில் இருக்கிறார்கள். அதில் அல்லி என்று அன்பாக அழைக்கப்படும் பெண் போராளியும் இர…
-
- 0 replies
- 144 views
-
-
எங்கள் தெருவெங்கும் அன்னை பூபதிகள்! தீபச்செல்வன்.. April 19, 2019 ஈழத்தில் அன்னையர்களின் போராட்டத்திற்கு தனித்துவமான இடமுண்டு. தாய்மை உலகில் உன்னதமான உணர்வு. மனிதர்கள் மாத்திரமின்றி அனைத்து உயிரினங்களிலும் தாய்மை மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது. விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களிலும் தாய்மையின் மகத்துவத்தை உணரலாம். ஈழத்து அன்னையர்களின் வாழ்வு துயரத்தில் தோய்ந்தது. இன்றைக்கு ஈழமெங்கும் அன்னையர்கள் தவித்து வாழும் ஒரு வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக, அவர்களின் விடுதலைக்காக, நீதிக்காக ஈழத்தில் அன்னையர்கள் தெருவில் வாழும் ஒரு போராட்டத்திற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அன்னையர்கள் கண்ணீர் சி…
-
- 0 replies
- 860 views
-
-
மாவீரர் வாரம் தொடங்கிவிட்டது. மாவீரர்நாள் வருகிறது. ஒவ்வொரு வருடமும் வந்து போகிறது. தெய்வங்களாக வணங்குவோரும் தூற்றுவோரும் துண்டாடுவோரும் ஒரு வைபவமாக கடந்து செல்கின்றோம் ஒரு முறையாவது சிந்தித்தோமா? 2009க்கும் தற்பொழுதும் எமது பலம் எவ்வாறுள்ளது? தாயகத்தை தற்போதைக்கு விடுவோம். புலத்தில் எமது அமைப்புக்கள் வலுவாக உள்ளனவா? வலுவிழக்க யார் காணரம்?? நாமே தான். இதை உணருவோமா?? 2009 இலிருந்து எழுதி வருகின்றேன் அமைப்புக்களை பலமிளக்க செய்யாதீர்கள். மீண்டும் கட்டியமைப்பதென்பது???? அமைப்புக்கள் பாடசாலைகள் விளையாட்டுப்பகுதிகள் கலைப்பிரிவுகள் என தூர நோக்கோடு அவை கட்டியமைக்கப்பட்டன அவை எல்லாம் ஒழுங்காக…
-
- 0 replies
- 1.7k views
-
-
மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக…. தங்கையர்கள் தாருஜா, போன்றோரின் ஞாபகார்த்தமாக லண்டன் ஐபிசி தமிழில் வாசிக்கப்பட்ட இக்கவிதையை மாவீரர் நாளுக்காக இங்கு பதிகிறேன் அன்னை மண்மீட்புக்காய் அணிவகுத்த தங்கையரே இன்னுயிரை ஈந்தீர் எமக்காய் உம் வாழ்வளித்தீர் பொல்லாப் பகையின் புறங்காணப் போரிட்ட மெல்லியலார் நீங்கள் விதிமாற்றப் பாடுபட்டீர் …
-
- 0 replies
- 414 views
-
-
பூ விரியும் ஓசையைவிட மென்மையானது அவனது மனம். எத்தனை சவால்களைக் கடந்து இந்தப் போராட்ட வாழ்வில் வழி நெடுக நடந்திருப்பான். எத்தனை இரவுகள் தூக்கங்களைத் தொலைத்து காயமடைந்த தோழர்களின் காயத்திற்கு மருந்திடுவது மட்டுமன்றி கூடவே ஒரு தாயாகி, கண்ணீர் துடைத்து தலைகோதி, ஆறுதல் தந்திருப்பான். கப்டன் மணிமாறன் (சிலம்பரசன்) நாங்கள் அவனை மணி என்று தான் அழைப்போம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பகுதியின் எல்லா நுழைவாயிலிலும் முட்டி மோதி யாழ் கண்டி நெடுஞ்சாலையை கைப்பற்றி வன்னியின் பூகோள ஒருமைப்பாட்டை சிதைத்து போராட்டத்தை கூறுபோடுவதற்காக தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கை தான் ஒப்பிறேசன் ஜெயசிக்குறு. இந் நடவடிக…
-
- 0 replies
- 205 views
-
-
கப்டன் கஜன் கப்டன் கஜன் ஒரு எழுதுலகப் போராளி. ஒரு முற்போக்கு கவிஞன். 1988ஆம் ஆண்டு இந்திய இராணுவம் அமைதி பணி புரிந்த காலகட்டம். சிங்கள பேரினவாத அரசு குதூகலித்து நிற்க அகில பாரதம் எம்மீது போர் தொடுத்த காலம் அவை அப்போது எமது மக்களின் இந்திய எதிர்பார்ப்புகள் மெல்ல மெல்ல நொருங்கி தமிழர்கள் தம் சொந்த கால்களில் நின்றே விடுதலையை வென்றெடுக்க வேண்டுமென்ற புவிசார் அரசியல் கோட்பாடுகள் புலப்படத் தொடங்கிய நேரம் அவ்வேளையில் எமது விடுதலை இயக்கத்தின் பிரெஞ்சுப் பணியகம் விடுதலை மாலை என்னும் உணர்வுமிக்க கலைநிகழ்வை மக்கள் மத்தியில் அரங்கேற்றியது. அந்த விடுதலை விழாவில் மக்களின் சமகால கேள்விகளையும் சந்தேகங்களையும் உள்வாங்கி இலக்கியம் என்பது நிகழ்வுகளின் பிரதிபலிப்பு …
-
- 0 replies
- 587 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கப்டன் கீர்த்திகா என்ற பெயரை அறியாத போராளி கள் அனேகமாக இருக்க மாட்டாரகள். அதுவும் வன்னிக் கிழக்கில் பணியில் இருந்தவர்கள் அறியாமல் இருப்பதற்கு வாய்ப்புக்கள் குறைவு. ஏனெனில் தமிழீழ மருத்துவப்பிரிவி ன் மிக முக்கிய இராணுவ மருத்துவமனை களில் ஒன்று கப்டன் கீர்த்திகா நினைவு இராணுவ மருத்துவமனை. புதுக்குடியிருப்புப் பகுதியில், வீதியில் இருந்து அதிக தூரம் இல்லாது இருப்பினும், வான வெளி தாண்டி வரும் சூரியக்கதிர்கள் நிலத்தைத் தொடமுடியாதபடி முற்றுமுழுதாக உருமறைக்கப்பட்ட நிலையில் அந்த மருத்து வமனை சாதாரணமாக இயங்கிக் கொண்டி ருக்கும். தமிழீழத்தின் முக்கியமான மூத்த மருத்துவர்களான மருத்துவக்கலாநிதி எழு மதி கரிகாலன், மருத்துவக்கலாநிதி சூரிய கும…
-
- 0 replies
- 196 views
-
-
லெப். கேணல் நாதன் லெப். கேணல் நாதன் தூணாக விளங்கிய ஒரு மாவீரன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயல்பாடுகளுக்கு தூணாக நின்ற ஒரு போராளி. புலம் பெயர் தமிழர் வாழும் பரப்பெங்கும் இயக்கத்தின் செயல்பாடுகளை பரப்பலாக்கி விடுதலைப் போரின் அடிப்படைத் தேவைகளுக்கு தோள் கொடுத்த மாவீரன். 12 ஆண்டுகள் இயக்கத்தின் கால்களாக நின்று ஓடி ஓடி உழைத்த மாவீரன் நாதன். யாழ்ப்பாணம் அரியாலையில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவன். தாயின் அரவணைப்பில் வாழ்ந்த நாதன் சிங்கள அரச பயங்கரவாத புயல் எம் தேசத்தை சூறையாடிய போது தாயாலும் சகோரராலும் பிரான்சுக்கு அனுப்பப்பட்டவன். அரச பயங்கரவாத புயல் தமிழர் மண்ணில் விதைத்து விட்ட விடுதலை தாகம் நமது நாதன் உயிரிருப்…
-
- 0 replies
- 520 views
-
-
எமது தேசத்துக்கான விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாம் எத்தனையோ ஒப்பற்ற அர்ப்பணிப்புக்கள்,தியாகங்கள்,உயிர்க்கொடைகள் போன்றவற்றைக் கண்டு வந்திருக்கின்றோம்.அந்த வகையில் தமிழீழத் தாயின் வீரப் புதல்வியாகவும் எம் ஒப்பற்ற பெருந் தலைவனின் வீரத் தங்கையாகவும் வாழ்ந்திருந்தாள் லெப்ரினன்ட் மிருணா/முல்லையரசி அக்கா. ஈழத் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் செங்கோலோச்சிய அடங்காப்பற்று என்று அழைக்கப்படும் வன்னிப் பெரு நிலப்பரப்பிலே இயற்கை எழில் கொஞ்சும் வட்டக்கச்சி எனும் ஊரிலே திரு.திருமதி சேதுபதி மண இணையருக்கு ஆசைப் புதல்வியாக மதிவதனி 1974.03.09 இல் பிறந்தாள்.வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக வாழ்ந்த பண்டார வன்னிய மன்னன் ஆண்ட வன்னி வள நாட்டில் பிறந்ததால் மதிவதனிக்கும் வீரம் எனும் சொல்லானத…
-
- 0 replies
- 97 views
-
-
மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும் - கரும்புலி மேஜர் டாம்போ கரும்புலி மேஜர் டாம்போ காசிப்பிள்ளை தயாபரன் நாச்சிக்குடா சந்தி, கிளிநொச்சி வீரப்பிறப்பு:17.08.1967 வீரச்சாவு:19.03.1991 நிகழ்வு:மன்னார் சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டு வீரச்சாவு 1991 மூன்றாம் மாத நடுப்பகுதி: சிலாபத்துறை படைத் தளம் மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது. “அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்” இது கரும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது. தாக்குதலுக்கான நாள் வந்தது. அவனது விருப்பப்படியே அம் முகாம் மீதான தாக…
-
- 0 replies
- 473 views
-
-
அது 1995 காலப்பகுதி,வெள்ளை மேற்சட்டையும்(shirt) கறுப்பு நிற நீளக் காற்சட்டையும் அணிந்து தமக்கு இடப்பட்ட கணக்காய்வுப் பணியுடனும் வெளிவாரி வர்த்தகப் பட்டப் படிப்பை (first in commerce) படிக்கவென யாழ் நாவலர் வீதியூடாக தனது ஈருருளியில் செல்லும் ஒரு போராளியாக கலைமதி அக்காவைக் காணலாம்.எப்பொழுதும் எதற்கும் தயாராக இருப்பது போல் அவருடைய எறும்பு போன்ற சுறுசுறுப்பான ஆனால் அடக்கி வைத்திருக்கும் அமைதியான ஆளுமை முதிர்வு எல்லோர் மனதிலும் நிறைந்திருக்கிறது. கலைமதி அக்காவும் எல்லோரும் போலவே திரு,திருமதி ஜெகதீசன் தம்பதியினருக்கு மகளாக 28.06.1966 இல் ரேணுகாதேவி என்ற இயற் பெயருடன் அக்காமார் , அண்ணன்,தங்கை ,தம்பிகள் கொண்ட சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான்.தந்தை ஒரு புகைப்பட வல்லுனராக அந…
-
- 0 replies
- 214 views
-
-
எமது தமிழீழ போரியல் வரலாற்றில் எத்தனையோ வீரமறவர்களையும் கல்விமான்களையும் பிரசவித்த யாழ்ப்பாணத்தின் புன்னாலைக்கட்டுவன் எனும் கிராமத்தில் திரு.திருமதி திருநாவுக்கரசு தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனாக 14.04.1987 இல் ஞானகணேஷன் எனும் கரிகாலன் வந்துதித்தான்.மூன்று சகோதரிகள், ஒரு சகோதரன் என்று எல்லோருக்கும் கடைக்குட்டியாய் வீட்டில் மிகுந்த செல்லத்துடன் வளர்ந்து வந்தான்.அவனது தந்தையார் ஒரு வைத்தியராகக் கடமை புரிந்தார்.அத்துடன் ஒரு தமிழ் ஆர்வலராகவும் செயற்பட்டு வந்தார். தாயார் ஒரு ஆசிரியையாக இருந்த போதிலும் பிள்ளைகளை சிறந்த கல்விமான்களாகவும் பண்பாளர்களாகவும் சிறந்த முறையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கில் தனது ஆசிரியப் பணியைத் துறந்து பிள்ளைகளை வளர்த்து வந்தார்.பெற்றோரது சிறந்த ஊ…
-
- 0 replies
- 109 views
-
-
பெண்ணாக பிறந்து புலியாக மாறி புயலாக எழுந்து பல களம் கண்ட வீரத் தளபதி இவள். ஆனந்தபுரத்தில் மோட்டார் அணியின் பெண் போராளிகளை வழிநடத்தி களத்தில் காவியமானவள். அமுதா பயிற்சிமுகாம் முடிந்த கையோடு கனரக ஆயுதப்பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். அங்கு 60mm மோட்டார் அணியில் ஒரு காப்பாளராக பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் போதே எனக்கு அறிமுகம். நிறத்த மெல்லிய நெடுத்த அவளது தோற்றம் கனரக ஆயுதத்திற்குப் பொருத்தமில்லாதவாறே பார்ப்பவர்கள் கணிப்பிடுவர்.முகத்தில் என்றும் அமைதி குடிகொள்ள யாரை கண்டாலும் ஒரு சிரிப்பே இவளது பதிலாக இருக்கும். கதைப்பது குறைவு ஆனால் பயிற்சி வேளையில் உருவத்திற்கு பொருத்தமில்லாதா சுமையை 60mm செல் பெட்டியை நிறைத்த மணலோடு தூக்கி கடின பயிற்சிகளை எல்லாம் இலாவகரமாகச்…
-
- 0 replies
- 105 views
-
-
நாட்டுப்பற்றாளர் மாசிலாமணி கனகரெத்தினம் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டம் வீரப்பிறப்பு : 25-01-1950 வீரச்சாவு : 13-05-1980 தொண்டனாக வாழ்ந்து மறைந்த நாட்டுப்பற்றாளர் மா. கனகரெத்தினம்! அமரர் மா.கனகரெத்தினம் அதிபர், தான் வாழ்ந்த 38 வயதுக்குள் தன் மேலதிகாரிகள், தன்னோடொத்தவர்கள், தன்னிலும் இளையோர் ஆகிய முத்திறத்தாரையும் ஒரு சேரக் கவர்ந்துள்ள தனிச்சிறப்புப் பெற்றவர். தன் நல்லெண்ணத்தாலும், ஆளுமையினாலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் அவர் விரும்பப்பட்டார். இப்படியான சிறப்புக்கள் பொருந்திய மட்டக்களப்பு மண்ணுக்கும், தமிழ் பேசும் நல்லுலகத்துக்கும் பெருமை சேர்த்த மா.கனகரெத்தினம் ஐயாவின் நினைவு தினம் இன்றாகும். எந்தவொரு காரியத்தைப் பொறுப்பெடுத்தாலும் …
-
- 0 replies
- 271 views
-
-
-
- 0 replies
- 704 views
-
-
தணலை மூட்டிய தமிழ்க்கவி வாணன் புதுவையென்னும் புகழுக்குரியவன் புனிதவேள்விக் கவிகளியற்றுவோன் எதுகை மோனை இலக்கணச் சாத்திரம் எதிலுங் கட்டுப் படாதவன் ஆயினும் வதுவை செய்து கவிமகள் தன்னையே வாழ்வு முற்றும் அவட்கென வாழ்ந்தவன் மதுவைத் தன்றன் தமிழிற் கலந்தனன் மாந்தி வீழ்ந்து மயங்கினர் ஆயிரம். அகவை ஐம்பது ஆனது அவன் கவிக்(கு) ஆயினும் பதினாறின் இளமையாள் தகைமையால் தமிழ் ஈழமறவரின் தழலெரிந்திடு நெஞ்சினை மூட்டினாள் பகைமை தோற்றது பாயும் மறவரின் படை நடந்தது பாரதம் சோர்ந்தது இகமெலாம் தமிழ் வீரம் தெரிந்தது ஈழதேசம் உயிர்த்து எழுந்தது. நீரிலே நெருப்பேற்றிய எங்களின் நேரிலாத் தலைவன் ஒளிர் சு+ரியன் போரிலேற்றிய வெற்றிச் சுடர்களைப் பொன்னெழுத்திற் புதுவ…
-
- 0 replies
- 284 views
-
-
புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லு தெரிய சிரிக்கும் கள்ளமில்லா வெண் சிரிப்பும் “லொட லொட” என்று எந்நேரமும் வாயோயாமல் அலட்டும் பேச்சும் கட்டைக் காலை வைத்துக் கொண்டு பாதம் பெடல் கட்டையில் முட்டக் கஷ்டப் பட்டு “தெண்டித் தெண்டி”சைக்கிள் ஓடும் அழகும் தான்.அவளிடம் அணியும் ஆடை,செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். எந்நேரமும் அயர்ன் பண்ணி(ironing) மடிப்புக் கலையாத ஆடை தான் அணிவாள். எந்த வேலையென்றாலும் நாளைக்குச் செய்து முடிப்போம் என்று எண்ணாமல் அன்றே செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள்.எங்களின் நாவற்பழ நிறத்தழகி அவள்.தெற்றுப் பல் தெரிய அவள் சிரிக்கும் அழகோ அழகு தான்….பார்த்துக் கொண்டே இருக்கலாம்.அவள் சராசரி உயரத்தை விட சற்…
-
- 0 replies
- 210 views
-
-
நம்மெல்லோரைப் போலவே அவனுக்குமொரு குடும்பம் இருந்தது. அதுவும், மதிவதனி என்றால், மதி(நிலவு) போல வதனம்(முகம்) உடையவள் என்று பொருள். அப்பேர்ப்பட்டவளை ஆசையாசையாய் காதலித்துக் கரம்பிடித்து, அவள் அமைத்துக்கொடுத்த அழகான குடும்பம் அது. ஆஸ்திக்கொன்று. ஆசைக்கொன்று. இரண்டும் கலந்தவொன்று என மூன்று மொட்டுகளால் மலர்ந்த குடும்பம் அது. அவன் நினைத்திருந்தால், தானுண்டு தன் குடும்பமுண்டு என்றிருந்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், தன் காதல் மனைவியை ஒரு மஹாராணி போல் வாழ வைத்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், உள்ளூரிலேயே விலைபோய் தன் குடும்பத்தோடு சுகவாசியாய் இருந்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், குடும்பத்தோடு புலம்பெயர்ந்து ராஜாவைப்போல் வாழ்ந்திருக்க முடியும். அவன் ந…
-
- 0 replies
- 198 views
-
-
'படிமப்புரவு: NTT' இம்மறத்தியைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. வேசுபுக்கில் மேய்ந்து கொண்டு போகும்போது இவர்தொடர்பாய் கிடைத்த வைரத்திற்குச் சமனான சிறு தகவலை விரித்து எழுதியிருக்கிறேன். இவர் முதலில் மாலதி படையணி போராளியாய் இருந்து பல களங்கள் கண்டவர். அப் படையணியில் '2ம் லெப்டினன்' (துய தமிழில் 'அரையர்') தர நிலையில் இருந்தார். சிங்களத்தை எதிர்த்து சுடுகலனால் களத்திலும், தூவலால்(பேனா) கவிதையாலும் ஆடினார். ஓம், நன்றாக கவிதை எழுதுவார். தான் எழுதிய கவிதையை தானே கவிமொழிவார். நான்காம் ஈழப்போர் காலத்தில் இவர் எழுதி, இவரே கவிமொழிந்த ஒரு கவிதை த.தே.தொ. இன் 'கவிப்பயணம்' என்னும் நிகழ்ச்சியில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்நிகழ்ச்சி: kavippayanam-poem-travel …
-
- 0 replies
- 1.4k views
-
-
வைகாசி மாதம் வருகின்றதென்றால் அது ஓர் இருள் சூழ்ந்த மாதமாகவும், மனதில் கவலைகள் பெருகி குரல்வளையை நெரிக்கின்ற ஓர் உணர்வையும் தரும். இம் மாதத்திலே எங்களோடு இருந்த எத்தனையோ நூற்றுக்கு மேற்பட்ட போராளிகளை இழந்துள்ளோம். அவர்கள் இறுதிவரை நின்று களமாடியும், அவர்களது இவ்வுலக இருப்புப்பற்றி உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் நாங்கள் இன்னும் எத்தனையோ மாவீரர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்த முடியாத நிலையில், ஓர் ஆண்டின் பின்போ அல்லது மூன்று, ஐந்து ஆண்டுகளின் பின்போ அவர்களைப் பற்றி கேள்விப்பட்டு ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் ஊமைகளாக உள்ளோம். அந்த வகையில் எங்களோடு நிதித்துறை கணக்காய்வுப் பகுதியில் இருந்து இறுதிப்போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட பூம்பாவை அக்காவைப் பற்றி எழுத நான் கடமை…
-
- 0 replies
- 100 views
-
-
போராட்ட வரலாற்றில் பல புகழ்பூத்த படையணி பூநகரிப் படையணி! Last updated Dec 31, 2019 தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல புகழ்பூத்த படையணிகள் பற்றியும் அவற்றின் நீண்ட போரியல் வரலாறு பற்றியும் நாமறிவோம். ஆயினும் பல்வேறு காலகட்டங்களிலும் தேவைகருதி உருவாக்கப்பட்டு பின்னாளில் வேறு படையணிகளுடன் அல்லது பிரிவுகளுடன் இணைக்கப்பட்ட படையணிகள், பிரிவுகள் இப்போராட்ட வரலாற்றில் இருந்தன என்பது நம்மில் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அடுத்த தலைமுறைக்கு அவைபற்றி எதுவுமே தெரியாமல் போகலாம். அந்தந்த காலகட்டங்களில் அவ்வப் படையணிகள், பிரிவுகள் ஆற்றிய போராட்டப் பங்களிப்புகள் வரலாற்றில் பதியப்படவேண்டிய மிகவும் தார்மீகக் கடமையாகும். அந்தவகையில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் …
-
- 0 replies
- 903 views
-
-
நான் நடுராத்தியில் பல தடவை நித்திரையில் இருந்து எழுப்பியிருக்கின்றன். எந்தவித சலிப்பின்றி அவரே வந்து வேலை செய்து தருவார். பிரின்ரர் சிலவேளைகளில் வேலைசெய்யாமல் இருக்கும், சிலவேளைகளில் ரோணர் பிரச்சினையாக இருக்கும், உடனயாடியாக அன்புமணி அண்ணையிடம் ஓடிபோனா காணும், வேலை முடிஞ்சதிற்கு சமன். தன்னுடைய இடத்திலே வேலை செய்ய சொல்லிவிடுவார். யாருடைய வெளியீடு என்றாலும் உதவி என்று கேட்டால், எந்த மறுப்பின்றி உரிய நேரத்திற்குள் செய்து கொடுக்கும் அன்புமணி அண்ணையை இழந்து 12 ஆண்டுகளை கடக்கின்றோம். விடுதலைப்புலிகளின் உத்தியோக பூர்வ ஏடான “விடுதலைப்புலிகள்” பத்திரிகையின் இதழ் -01 தொடக்கம் 138 வரையான பதிப்புக்களை இணையத்தில் அனைவரும் பார்வையிடலாம். அந்த பணிகளுக்கு உரித்தானவர் இவரே. ஆவணப்…
-
- 0 replies
- 172 views
-
-
தமிழீழத்தின் வளம்மிக்க கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுர கிராமத்தில் இராசு ரட்ணசிங்கமாக 09/01/1980 ஆண்டு மூன்று சகோதரிகளுக்கு தம்பியாக பிறந்தான் மிகவும் செல்லமாக வளர்ந்து வந்தான் அவனது சிறுவயதில் தந்தை இறந்துவிட தாயார் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பிள்ளைகளை படிக்கவைத்து வளர்த்து வந்தார் இவனை எல்லோரும் சுதா என்றே அழைத்துவந்தனர் பாடசாலை கல்வி கற்றுவந்த வேலையில் யாழ்ப்பாணத்தை சிறிலங்கா படைகள் ஆக்கிரமித்ததன் விளைவாக பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து வன்னியில் குடியேறியிருந்தனர் அதன்படி தர்மபுர கிராமத்திலும் மக்கள் குடியேறியிருந்தனர் அவனுக்கு போரின் தாக்கம் அவனை பாதிக்க தொடங்கிய வேலை கிளிநொச்சி யை இராணுவம் ஆக்கிரமித்தவுடன் விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்து கொள்கிறான். அதன…
-
- 0 replies
- 380 views
-