Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. இலட்சிய உறுதியுடன் வாழ்ந்த லெப் .கேணல் நீலன் ஒரு கட்டுப்பாடான இயக்கத்துடன் முரண்படுவோர் எந்த நிலைக்குச் செல்வர். என்பதைக் கருணாவின் பிளவு நமக்கு வெளிப்படுத்தியது. அதன் மோசமான விளைவுகளில் ஒன்று லெப்.கேணல் நீலனின் படுகொலை. இயக்கத்தில் இணைந்து கொண்டோர் இலட்சியத்திற்கும், இயக்கத்திற்கும், அதன் தலைமைக்கும் விசுவாசமாக நடந்து கொள்வேன் என சத்தியப்பிரமாணம் செய்திருந்தனர். அதன்படி என்றுமே தலைமைக்கு விசுவாசமாக இருந்தார் நீலன். அதுவே அவரது இழப்புக்கும் காரணமாகியது. துரோகம் செய்யப் புறப்படுபவன் தனிப்பட்ட நட்பையும் பொருட்படுத்த மாட்டான் என்பதை நிரூபித்தார் கருணா ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் நீலன். விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் புலிகளின் பிரதான தளங்களுள் …

  2. தமிழீழம் மன்னாரை சேர்ந்த சகாயசீலி பேதிருப்பிள்ளை (1967 சனவரி 01 பிறந்தார் எமது சமூகத்தில் பெண் எப்படி இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை முறியடித்து. தேசிய விடுதலைப் போராட்டத்தில் இந்திய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள் நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு 1984 முதல் பெண்கள் ஆயுதப் போராட்டத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டனர். விதைத்த விடுதலை மூச்சு என்னும் விதை தமிழீழப் பெண்களிடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்தும்…

  3. https://www.uyirpu.com/?p=9537 நினைவுப்பகிர்வு:- கொற்றவன். தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் சுமார் பதினெட்டு ஆண்டுகளாக ஓய்வின்றி உழைத்த உத்தமத்தளபதிதான் லெப் கேணல் மங்களேஸ் அண்ணா அவர்கள். 1990ம் ஆண்டின் முற்பகுதிகளில் தனது பதினாறாவ துவயதில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு ‘மங்களேஸ்’ என்ற நாமத்தைத் தனதாக்கிக்கொண்டு அன்றுமுதல் அவர் விழிமூடும் நாள்வரையிலும் அவர் விடுதலைக்காக ஆற்றிய பணிகள் மிக நீண்டது. தொடக்கத்தில் ஒரு போராளி பெற்றுக்கொள்ள வேண்டிய படையப் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு இயக்கத்தின் அப்போதய பிரதித்தலைவர் திரு மாத்தையா அவர்களின் தாக்குதலணியில் தனது களப்பணிகளை முன்னெடுத்திருந்தார். 1991ம் ஆண்டு யூலை மாதத்தில் ஆனையிறவுப்…

  4. Started by karu,

    https://www.facebook.com/photo?fbid=10159695301231950&set=a.10151018148611950

    • 0 replies
    • 542 views
  5. ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 13ம் ஆண்டு நினைவுதினம் ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தியின் 13ம் ஆண்டு நினைவுதினம் நேற்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற நினைவுதின நிகழ்வில் அன்னாரின் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்ததுடன் சத்தியமூர்த்தியின் அனுபவங்கள் குறித்தும் இதன்போது பகிர்ந்துகொள்ளப்பட்டது. ஊடகத்துறையில் 1990களில் இருந்து ஈடுபடத் தொடங்கிய இவர், 2009 பெப்ரவரி 12ஆம் திகதி இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் சிக்கி படுகாயமுற்று சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்…

  6. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே… நவம்பர் 24, 2020/தேசக்காற்று/வழித்தடங்கள்/0 கருத்து 1981ம் ஆண்டு பங்குனி மாசக் கடைசியில் நீர்வேலியில் இடம்பெற்ற வங்கிப் பணப்பறிப்பு நடவடிக்கையினைத் தொடர்ந்து சிறிலங்காவின் சி.ஐ.டி. பொலிசார் எப்படியும் அதில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடிக் கண்டுபிடித்து விடவேண்டும் என்ற நோக்கில் அலைந்து கொண்டிருந்தார்கள். இந்தச் சம்பவத்தினைத் தொடர்ந்து தங்கத்துரை, குட்டிமணி, தேவன் என்கின்ற மூவர் இச் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் ( அப்போது நாங்களும் அவர்களும் ஒன்றாக இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்த காலம்). தமிழகத்திற்குச் செல்வதற்காக படகேறச் சென்ற சமயம், வல்லிபுரக் கோயிலுக்கு கிழக்குப் புறமாக உள்ள கடற்கரைப் பகுதியில், கள்ளக் கடத்தல் இடம்…

  7. நாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி வீரவணக்கம் ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட்டு 12-02-2010 உடன் ஓராண்டு பூர்த்தி கொள்கின்றது. தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார். மட்டக்களப்ப…

    • 0 replies
    • 750 views
  8. பல வெற்றிகளுக்கு வேவுத்தகவல்களை மிகத் துல்லியமாக பெற்றுத்தந்தவர் மேஐர் அசோக். வேவுப்புலி மேஐர் சேரன் / அசோக் குணசிங்கம் குணராஐ் வீரச்சாவு 02.8.1994 1990 ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த அசோக் பயிற்சியின் பின் வலிகாமப் பகுதியில் நின்று பல்வேறு களம் கண்ட ஒரு வீரனாவான் கந்தையாவைப் போலவே இவனும் பலாலிக்கான ஒரு வேவுக்காரன்.ஆனால் இவனோ வலிகாமப் பகுதியிலிருந்து தனது வேவு நடவடிக்கையை ஆரம்பித்தான்.ஒவ்வொருமுறை வேவு நடவடிக்கையின் போதும் இவனது தூரம் அதிகரித்துக் கொண்டபோனது. அதிலும் ஒரு ஆனந்தம் ஏனெனில் தான் ஓடித்திரிந்து விளையாடிய தான் படித்த பாடசாலை இவைகளை சக போராளிகளுடன் பகிர்ந்து கொண்டதுடன் .குறைந்தளவு போராளிகளுடன் எதிரிக்கு பெரும் சேதத்தை ஏற்ப…

  9. https://www.thaarakam.com/news/97892 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதியும், மாலதி படையணியின் தாக்குதல் தளபதியுமான லெப்.கேணல் ஜெரோமினி/விடுதலை அவர்களின் வரலாற்று நினைவுகள்...! லெப் கேணல் ஜெரோமினி/விடுதலை [தங்கராசா வினீதா] யாழ்மாவட்டம். வீரச்சாவு:- 15.11.2007 "தமிழீழ தாயகம் விடுதலை பெற்று மக்கள் சுதந்திரமாக வாழ போராடப் புறப்பட்ட புலிமகள்" வரலாறு தான் சிலரை படைக்கிறது ஆனால் சிலர் தான் வரலாற்றைப் படைக்கிறார்கள். அந்த வகையில் எத்தனையோ போராட்டக்களங்கள்,சவால்கள் ஏற்றத் தாழ்வுகள் கண்டு தான் ஜெரோமினி வீரவரலாற்றைப் படைத்தாள். இலங்கை இனவாத ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடப் புறப்பட்ட இந்தப் புலிமகள் 1990 …

  10. கிளிநொச்சி படைத்தளம் தாக்கியழிக்கப்பட்ட ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையில் காவியமான 293 மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது “ஓயாத அலைகள் 2” படை நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின்போது 2000 வரையான படையினர் கொல்லப்பட்டதுடன் பெருமளவானோர் படுகாயமடைந்தனர். பெருமளவான போர் ஆயுதங்கள், வெடிபொருட்கள், படை ஊர்திகள் என்பன விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.கிளிநொச்சிப் பகுதி சிறிலங்கா படைகளின் வல்வளைப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட “ஓயாத அலைகள் – 2” நடவடிக்கையின் வெற்றிக்காக 400 வரையான போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.இவ்வெற்றிச் சமரில் முக்கிய பங்கேற்று ஊடறுப்பு அணி ஒன்றின் தலைவியாகச் சென்று வீரச்சாவை…

  11. தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் ஓய்வின்றி உழைத்த உத்தமத்தளபதி லெப் கேணல் மங்களேஸ்.! நினைவுகளில் நிலைத்துநிற்கும் லெப். கேணல் மங்களேஸ்… தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் சுமார் பதினெட்டு ஆண்டுகளாக ஓய்வின்றி உழைத்த உத்தமத்தளபதிதான் லெப் கேணல் மங்களேஸ் அண்ணா அவர்கள். 1990ம் ஆண்டின் முற்பகுதிகளில் தனது பதினாறாவது வயதில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு ‘மங்களேஸ்’ என்ற நாமத்தைத் தனதாக்கிக்கொண்டு அன்றுமுதல் அவர் விழிமூடும் நாள்வரையிலும் அவர் விடுதலைக்காக ஆற்றிய பணிகள் மிக நீண்டது. தொடக்கத்தில் ஒரு போராளி பெற்றுக்கொள்ள வேண்டிய படையப் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு இயக்கத்தின் அப்போதய பிரதித்தலைவர் திரு மாத்தையா அவர்களின் தாக்குதலணியில் த…

  12. எழுத்துருவாக்கம்..சு.குணா. ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் தாக்கத்தால் 1998ம் ஆண்டில் விடுதலைப் புலிகளமைப்பில் இணைந்து கொண்டவர்களில் ஒருவனாக இணைந்தவன் தான் தமிழ்முரசு. கரும்புலி லெப் கேணல் சுபேசன் அவர்கள் நினைவாக அவரது பெயரைச் சுமந்த பயிற்சி முகாமான சுபேசன் 02ல் பயிற்சி முடித்து கடற்புலிகளனியில் இணைக்கப்பட்டு மாவீரரான லெப் கேணல் தமிழன் அவர்கள் தலைமையில் செம்மலையில் கடற்புலிகளின் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிகள் பெற்று பயிற்சிகள் முடிவடைந்ததும். விடுதலைப் புலிகளால் மேறகொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையான ஒயாத அலைகள் மூன்றில் பங்குபற்றி தனது முதலாவது சமரில் மிகவும் திறம்பட செயற்பட்ட தமிழ்முரசு.அதன் பின்னர் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற பணிகளுக்க…

  13. மட்டக்களப்பு பெற்ற லெப்கேணல். சித்தா மாஸ்டர் 20ம்ஆண்டு நினைவு நாள் மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் தளப்பகுதி. அடிப்படைப் பயிற்சி முகாம் ஒன்று நிறைவடைந்து புதிய போராளிகள் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அத்தகைய வேளைகளில் இயல்பாகக் காணப்படும் புத்துணர்வும், கலகலப்பும் அவர்களின் முகங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆயினும் எமது முகாமிற்கு வரவிருந்த புதிய போராளிகள் அநேகரின் முகங்களில் ஒருவகையான கலக்கத்தை அவதானிக்க முடிந்தது. காரணத்தை ஊகிப்பது அவ்வளவு கடினமல்ல. படைத்துறைப் பயிற்சிப் பிரிவாக செயற்பட இம் முகாம் சற்று வேறுபாடானதுதான். மிகக் கடுமையான விதிமுறைகளுக்கும், விசித்திரமான தண்டனைகளுக்கும் பெயர் பெற்றது. அதேவேளை ஆற்றல்…

  14. விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் - அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் அவருடைய காதல் மனைவி வினிதா சமரசிங்க குணசேகர பற்றி நிசங்க கட்டுகம்பொல (Nissanka Katugampola) என்ற சிங்கள நண்பர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதிக்கு அண்மித்த நாளொன்றில் நடேசன் படுகொலை செய்யப்பட்டபோது வினிதா, நடேசன் மீது கொண்ட காதலுக்காகத் தன்னைத் தியாகம் செய்தாள் என்ற தொனியில் அவருடைய பதிவு அமைந்துள்ளது. இவர்களுடைய சிறந்த காதல் கதையை எதிர்காலச் சந்ததிக்கு எழுதி வைக்க வேண்டாமா என்று மற்றொரு சிங்கள நண்பரிடம் இவர் கேள்வி தொடுத்துள்ளார். தமிழ் மொழி பெயர்ப்பு வருமாறு... அற்புதமான, அன்பான இந்த காதல் ஜோடியை நாங்கள் முதன் முதலில் 1993 ஆம் ஆண்டு ஒக்டோபர்…

  15. 🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul” ஓ… முள்ளிவாய்க்கால் ஆன்மாக்களே காற்றில் அலையும் ஜீவன்களே அலைகளுடன் நகரும் மென்மையானவர்களே உங்களின் முன் தலை குனிந்து வணங்குகிறோம்! உங்கள் துன்பம் மறக்கமுடியாதது உங்கள் பெயர்கள் மறையமுடியாதது உங்கள் கனவுகள் எங்களால் வாழட்டும்! குழந்தைகளைப் பாதுகாத்த தாய்மார்களுக்கும் கதிரவனைக் காணாத குழந்தைகளுக்கும் நம்பிக்கையை மட்டுமே சுமந்த இளைஞர்களுக்கும் நாங்கள் இந்த தீபத்தை ஏற்றுகிறோம்! உங்களை கைவிட்ட உலகிற்கு இந்த தீபம் வழிநடத்தட்டும்! நாங்கள் வழங்க முடியாத பாதுகாப்பை அமைதி சூழ்ந்து கொடுக்கட்டும்! முள்ளிவாய்க்காலின் ஆன்மாக்களே நாங்கள் உங்களைப் போற்றுகிறோம் உங்களுக்காகப் பேசுகிறோம்! ஒவ்வொரு தீபத்திலும் …

  16. விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் படையணியில் அங்கம் வகித்த ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் கடற்புலிகளின் மகளீரணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த பூரணியக்காவைப் பற்றி ஏதொவொரு நினைவுகள் அலைபாய்ந்து கொண்டேயிருக்குமென நம்புகின்றேன். விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் படையணியானது பல தாக்குதல் அணிகளையும் பல நிர்வாக அணிகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு பெரும்படைக் கட்டமைப்பாகும். இங்கு அனைத்து அணிகளிலும் மகனார் மற்றும் மகளீர் ஆகிய இருபாலாரும் இணைந்தே களப்பணிகள் மற்றும் நிர்வாகப்பணிகள் ஆகியவற்றை முன்னெடுத்திருந்தனர். அந்தவகையில் பூரணியக்கா தான் வகிக்கின்ற பொறுப்பு நிலைகளுக்கு அப்பால் ஒவ்வொரு போராளிகளிடமும் ஒரு நல்ல அக்காவாக தனது வயதில் மூத்தவர்களிடம் ஒரு நல்ல தங்கையாக இடம்பிடித்துக்கொண்டார் என்று கூ…

  17. மன்னார் மாவட்டம் பெரியமடுவை சொந்த ஊராகக் கொண்ட தென்னரசன் 1994ம் ஆணடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டான். படைய தொடக்கப் பள்ளியில் அடிப்படை பயிற்சியை முடித்த தென்னரசன் மன்னார் மாவட்ட படையணியில் இணைக்கப்பட்டான். வேவுப் புலியாக தனது களச் செயற்பாடுகளைத் துவங்கிய இளம் போராளி தென்னரசன் மன்னார் பகுதியில நிலைகொண்டிருந்த எதிரியின் தளங்களுக்குள் தனது குழுவை இலகுவாக அழைத்துச் சென்று ஏராளமான தரவுகளை சேகரித்து வந்தான். இவனுடைய நுண்ணறிவு, பொறுமை, திசைகாட்டி மற்றும் வரைபடங்களை சரியாக பயன்படுத்தும் திறன், காடுகளில் விரைவாக நகரும் திறன் ஆகியவற்றால் தனது சக வேவுப் போராளிகளுக்கு சிறந்த முன்னுதாரணமான வேவு வீரனாக தென்னரசன் வளர்ந்தான். சுமார் இரண்டு வருடங்கள் தொடர்ச்சிய…

  18. எழுத்துருவாக்கம்: குணா ஜெயசிக்குறு இராணுவநடவடிக்கைக்கு எதிரான மறிப்புச் சமரை படையணிகள் நடாத்திக்கொண்டிருந்த அதேவேளை அந் நடவடிக்கைக்குத் தேவையான பொருட்களை தலைவர் அவர்களின் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையிலும் தலைவர் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் கடற்புலிகளின் விநியோக அணிகள் செயற்பட்டுக் கொண்டிருந்தவேளையில் அதாவது 01.05.1999 அன்று முல்லைத்தீவுக் கரையிலிருந்து லெப் கேணல் தர்சன் அவர்கள் தலைமையிலான படகுத் தொகுதி 110கடல்மைல்களுக்குச் சென்று கப்பலில் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தவேளையில், 55 கடல்மைல் தூரத்தில் இலங்கைக் கடற்படையின் டோறாப் பீரங்கிப் படகுகள் வழிமறிக்கமுற்பட்ட வேளையில் அக்கடற்படையினருடன் சண்டையிட்டு வந்து கொண்டிருந்த அதே சமயம் தளபதி நி…

  19. முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு! விடுதலை போராட்டத்தில் வீரச்சாவடைந்த முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று இடம் பெற்றது. கிளிநொச்சியில் நடைபெற்ற மாலதியின் 35 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்தோடு அவர் வீரச்சாவடைந்த இடத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு வேலன் சுவாமிகளால் மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செய்யப்பட்டது. 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி கோப்பாய் கிறேசர் வீதியில் இந்திய இராணுவத்துடனான மோதலில் அவர் வீரச்சாவடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. …

  20. 11-06-2008. அதிகாலை 5.00 மணியிருக்கும். புதுக்குடியிருப்பு- கைவேலிப்பகுதியில் அமைந்திருந்த எனது முகாம் வோக்கி “அல்பா றோமியோ……. அல்பா றோமியோ….. பப்பா சேரா……” என்று தொடர்ச்சியாக அழைத்துக்கொண்டிருந்தது. அரைத்தூக்கத்தில் படுத்திருந்த நான் வோக்கி அழைக்கும் சத்தம் கேட்டதும் அவசரமாக எழுந்து வோக்கியின் அழைப்பை ஏற்றுக்கொண்டபோது எதிர்முனையில் கடற்புலிகளின் நிர்வாகச்செயலகப்போராளி கதைத்தார். “சீர்மாறனும் இன்னும் நான்கு போராளிகளும் வீரச்சாவு. மன்னார்- எருக்கலம்பிட்டியில் எங்கடயாட்கள் நல்ல அடி கொடுத்திருக்கிறார்கள். நவீனரக ராடர்களும் ஆயுதங்களும் எடுத்திருக்கிறார்கள்.” என்றுடி கூறிவிட்டு தொடர்பை துண்டித்துக்கொண்டார் அந்தப்போராளி. இந்தத்தகவல் கிடைத்ததும் நான் உடனேயே குளித்து வெளிக்க…

  21. 2ம் லெப். மாலதி படையணி துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் ரத்தி! AdminMay 15, 2022 http://www.errimalai.com/wp-content/uploads/2022/05/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D.%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-1024x683.jpg லெப்.கேணல் ரத்தி (கிருஸ்ணபிள்ளை சுபாஜினி) கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 30.06.1975 வீரச்சாவு: 15.05.1997 வவுனியா ஓமந்தையில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு. 2ம் லெப். மாலதி படையணி துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் ரத்தி. எமது தலைவன் பூத்த மண்ணாம் வடமராட்சியின் ஒர் கிராமமான துன்னாலையில் பிறந்து வளர்ந்தவள் தான் ரத்தி. இவள் தனது கல்வியை …

  22. ஆண்டாண்டு காலமாக அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் அடைபட்டு, ஆக்கிரமிப்பாளர்களால் ஆண்டுக்காண்டு அடித்துத் துரத்தும் போது ஓடி ஒளிந்து கொண்டிருந்த மென்மையான சுபாவம் கொண்ட இனத்திற்குள், வீரத்தையும் ஓர்மத்தையும் விதைத்து, அடித்த எதிரியை திரும்ப அடித்து ஓட ஓட விரட்டிய வரலாற்றைப் படைத்த வரலாற்று நாயகன் தான் எங்கள் தலைவர். ஓரு குட்டித் தீவில், அதியுச்ச சுயநலமிக்க, ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் சிறுபான்மை இனத்திற்காக, அந்த இனத்தின் ஆட்பலத்தையும் வளங்களையும் வைத்தே, எந்தவித வெளிநாடுகளின் உதவிகளுமின்றி, முப்படைகளையும் உருவாக்கி, சர்வதேச ஆதரவுடன் போரிட்ட ஒரு அரசாங்கத்தை தோல்வியின் விளிம்புவரை கொண்டு செல்லும் ஆற்றல் படைத்த இராணுவ வித்தகன் தான் எங்கள் தலைவர். …

    • 0 replies
    • 528 views
  23. கலைஞனுக்கும் போராளிக்குமுரிய அடிப்படைத் தகுதியான மென்மையான மனமுடையவர் சிங்கோ மாஸ்ரர். வீரவேங்கை சிங்கோ மாஸ்ரர் கந்தையா பகத்சிங் வந்தாறுமூலை, மட்டக்களப்பு. வீரப்பிறப்பு:-29.03.1945 வீரச்சாவு:-15.05.1986 நிகழ்வு:-மட்டக்களப்பு மட்டக்களப்பில் சிறிலங்கா அதிரடிப்படையால் கைதாகி முறக்கொட்டாஞ்சேனை முகாமில் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதையின் போது வீரச்சாவு சிறந்த ஓவியக் கலைஞன் - இந்தியாவில் திரைப் படங்கள் தயாரிக்கும் ஏ.வி.எம் ஸ்ரூடியோ , யாழ்ப் பாணத்தில் செல்லம்ஸ் ஸ்ரூடியோ ஆகியவற்றில் பணிபுரிந்தவர்; மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள பல ஆலயங்களில் ஓவியங்கள் வரைந்தவர். மின் இணைப்பு வேலைகள் செய்பவர். இசைத்துறையில் நாட்டமுள்ளவர். யாழ்நகர் கண்ணன்…

  24. எண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோலோச்திய கனாக் காலம் அது. தொள தொள trousersகளில் shirtஐ வெளியே விட்டுக் கொண்டு, இடுப்பில் மறைவான பிஸ்டலோடு, யாழ்ப்பாண வீதிகளில் மிடுக்காக வலம் வந்த அண்ணாமாரை ஆவென்று பார்த்து பிரமித்த கனாக் காலங்களை எப்பவும் மறக்க முடியாது. 1987 ஒக்டோபரில் இந்திய இராணுவத்துடனான சண்டையுடன் இயக்கம் வன்னிக் காடுகளிற்குள் தனது தளத்தை மாற்றிக் கொண்டது. “காட்டுக்குள் போன இயக்கம் வேற, காட்டுக்கால திரும்பி வந்த இயக்கம் வேற” என்பார்கள் இயக்கத்தின் வர…

    • 0 replies
    • 374 views
  25. கடற்கரும்புலிகள் ஜெயந்தனும், சிதம்பரமும் கடலில் 04.05.1991 அன்று! AdminMay 4, 2019 கடற்கரும்புலி சிதம்பரம நிறையப் படிக்க வேண்டும் என்று அவன் சின்னவனாக இருக்கும் போது ஆசைபடுவான். ஆனால், குடும்பத்தின் நிலை அவனது கனவுகளைச் சிதைத்தது, நான்காம் வகுப்பிற்குப் பிறகு அவன் புத்தகங்களைத் தூக்கியதில்லை. அவர்கள் குடியிருந்த வீட்டில்தான் ஏழ்மையும் குடியிருந்தது. வீட்டில் அம்மாவும் அக்காமாரும் செய்கின்ற எள்ளுப்பாகுவையும், பலகாரங்களையும் தோளில் வைத்துக்கொண்டு அவன் தெருவில் இறங்குவான். திரும்பி வந்த பிறகுதான் அவர்களின் வீட்டில் அடுப்பெரியும். வளர்ந்தபின் ‘றோலரில்’ கடலில் மீன் பிடிக்கச் செல்வான். மீன் கிடைக்காது போனால், வாட்டத்தோடு திரும்பிவருவான். முற்றத்தில் நிற்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.