மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
956 topics in this forum
-
விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் படையணியில் அங்கம் வகித்த ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் கடற்புலிகளின் மகளீரணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த பூரணியக்காவைப் பற்றி ஏதொவொரு நினைவுகள் அலைபாய்ந்து கொண்டேயிருக்குமென நம்புகின்றேன். விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் படையணியானது பல தாக்குதல் அணிகளையும் பல நிர்வாக அணிகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு பெரும்படைக் கட்டமைப்பாகும். இங்கு அனைத்து அணிகளிலும் மகனார் மற்றும் மகளீர் ஆகிய இருபாலாரும் இணைந்தே களப்பணிகள் மற்றும் நிர்வாகப்பணிகள் ஆகியவற்றை முன்னெடுத்திருந்தனர். அந்தவகையில் பூரணியக்கா தான் வகிக்கின்ற பொறுப்பு நிலைகளுக்கு அப்பால் ஒவ்வொரு போராளிகளிடமும் ஒரு நல்ல அக்காவாக தனது வயதில் மூத்தவர்களிடம் ஒரு நல்ல தங்கையாக இடம்பிடித்துக்கொண்டார் என்று கூ…
-
- 0 replies
- 525 views
-
-
எழுத்துருவாக்கம்..சு.குணா. ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் தாக்கத்தால் 1998ம் ஆண்டில் விடுதலைப் புலிகளமைப்பில் இணைந்து கொண்டவர்களில் ஒருவனாக இணைந்தவன் தான் தமிழ்முரசு. கரும்புலி லெப் கேணல் சுபேசன் அவர்கள் நினைவாக அவரது பெயரைச் சுமந்த பயிற்சி முகாமான சுபேசன் 02ல் பயிற்சி முடித்து கடற்புலிகளனியில் இணைக்கப்பட்டு மாவீரரான லெப் கேணல் தமிழன் அவர்கள் தலைமையில் செம்மலையில் கடற்புலிகளின் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிகள் பெற்று பயிற்சிகள் முடிவடைந்ததும். விடுதலைப் புலிகளால் மேறகொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையான ஒயாத அலைகள் மூன்றில் பங்குபற்றி தனது முதலாவது சமரில் மிகவும் திறம்பட செயற்பட்ட தமிழ்முரசு.அதன் பின்னர் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற பணிகளுக்க…
-
- 0 replies
- 449 views
-
-
https://www.uyirpu.com/?p=9537 நினைவுப்பகிர்வு:- கொற்றவன். தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் சுமார் பதினெட்டு ஆண்டுகளாக ஓய்வின்றி உழைத்த உத்தமத்தளபதிதான் லெப் கேணல் மங்களேஸ் அண்ணா அவர்கள். 1990ம் ஆண்டின் முற்பகுதிகளில் தனது பதினாறாவ துவயதில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு ‘மங்களேஸ்’ என்ற நாமத்தைத் தனதாக்கிக்கொண்டு அன்றுமுதல் அவர் விழிமூடும் நாள்வரையிலும் அவர் விடுதலைக்காக ஆற்றிய பணிகள் மிக நீண்டது. தொடக்கத்தில் ஒரு போராளி பெற்றுக்கொள்ள வேண்டிய படையப் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு இயக்கத்தின் அப்போதய பிரதித்தலைவர் திரு மாத்தையா அவர்களின் தாக்குதலணியில் தனது களப்பணிகளை முன்னெடுத்திருந்தார். 1991ம் ஆண்டு யூலை மாதத்தில் ஆனையிறவுப்…
-
- 0 replies
- 376 views
-
-
தணலை மூட்டிய தமிழ்க்கவி வாணன் புதுவையென்னும் புகழுக்குரியவன் புனிதவேள்விக் கவிகளியற்றுவோன் எதுகை மோனை இலக்கணச் சாத்திரம் எதிலுங் கட்டுப் படாதவன் ஆயினும் வதுவை செய்து கவிமகள் தன்னையே வாழ்வு முற்றும் அவட்கென வாழ்ந்தவன் மதுவைத் தன்றன் தமிழிற் கலந்தனன் மாந்தி வீழ்ந்து மயங்கினர் ஆயிரம். அகவை ஐம்பது ஆனது அவன் கவிக்(கு) ஆயினும் பதினாறின் இளமையாள் தகைமையால் தமிழ் ஈழமறவரின் தழலெரிந்திடு நெஞ்சினை மூட்டினாள் பகைமை தோற்றது பாயும் மறவரின் படை நடந்தது பாரதம் சோர்ந்தது இகமெலாம் தமிழ் வீரம் தெரிந்தது ஈழதேசம் உயிர்த்து எழுந்தது. நீரிலே நெருப்பேற்றிய எங்களின் நேரிலாத் தலைவன் ஒளிர் சு+ரியன் போரிலேற்றிய வெற்றிச் சுடர்களைப் பொன்னெழுத்திற் புதுவ…
-
- 0 replies
- 296 views
-
-
நாச்சிக்குடாவிலிருந்து வந்துகொண்டிருந்த கடற்புலிகளுக்குச் சொந்தமான சண்டைப்படகொன்று கிளிநொச்சி இரணைதீவுக்கருகே வைத்து 08/02/1997 அன்று கடற்சமரொன்றிற்குப்பின் கடற்படையினரால் அழிக்கப்பட்டது (உதயன்: 11/02/1997). இத்தாக்குதலில் 14 போராளிகள் வீரச்சாவடைந்தனர். பெயர் விரிப்பு பின்வருமாறு: மேஜர் முத்துக்குமரன் (ஜாக்கர்) மேஜர் ரகுவரன் மேஜர் சிங்கன் மேஜர் ஜெயந்தன் கப்டன் மழவன் (விமல்) கப்டன் செம்முகிலன் கப்டன் தமிழரசன் (சிவா) கப்டன் சரித்திரன் (குமரன்) கப்டன் ஜீவாகரன் கப்டன் முகுந்தன் 2ம் லெப்டினன்ட் குலசிங்கம் (மலரவன்) 2ம் லெப்டினன்ட் தவக்குமார் வீரவேங்கை வேணுதாசன் (மதியழகன்) வீரவேங்கை புலித்…
-
- 0 replies
- 342 views
-
-
1996 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளமைப்பில் இணைந்து லெப். கேணல் பொன்னம்மான் 06ல் அடிப்படைப் பயிற்சியை முடித்து கடற் புலிகளிகள் அணியில் உள்வாங்கப்பட்ட விடுதலை அதன் பின் கனரக ஆயுதப் பயிற்சிக்கு உள்வாங்கப்பட்டு கனரக ஆயுதப் பயிற்சியில் தனது திறமையான செயற்பாட்டால் பொறுப்பாளர்களின் பாராட்டைப்பெறுகிறான். இவரின் திறமையான செயற்பாடு காரணமாக இவர் அணிகள் பிரிக்கப்படும் போது கடற்புலிகளின் கடற்தாக்குதலணியான சாள்ஸ் படையணிக்குள் உள்வாங்கப்பட்டு அங்கே நடந்த பெரும்பாலான கடற்சமர்களில் அதாவது விநியோகப் பாதுகாப்புச் சமராகிலும் வலிந்த தாக்குதலாகிலும் சரி பங்குபற்றினார் விடுதலை. 1996ம் ஆண்டு தந்திரோபாயப் பின்வாங்கல் மூலம் வன்னிக்கு வந்து மரபுவழிச் சமருக்கான புதிது புதிதாக அணிகளை உருவாக்கினார் …
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல்.! தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக…
-
-
- 20 replies
- 2.7k views
- 1 follower
-
-
முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு! விடுதலை போராட்டத்தில் வீரச்சாவடைந்த முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று இடம் பெற்றது. கிளிநொச்சியில் நடைபெற்ற மாலதியின் 35 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்தோடு அவர் வீரச்சாவடைந்த இடத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு வேலன் சுவாமிகளால் மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செய்யப்பட்டது. 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி கோப்பாய் கிறேசர் வீதியில் இந்திய இராணுவத்துடனான மோதலில் அவர் வீரச்சாவடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 410 views
-
-
பொறுப்பு: சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி நிலை: லெப்.கேணல் இயக்கப் பெயர்: மதன் (அரசன்) இயற்பெயர்: துரைசாமி சுந்தரலிங்கம் பால்: ஆண் ஊர்: கூழாங்குளம், வவுன்யா மாவட்டம்: வவுனியா வீரப்பிறப்பு: 07.06.1972 வீரச்சாவு: 11.04.2000 நிகழ்வு: கிளிநொச்சி முகமாலை பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: ஆலங்குளம் மேலதிக விபரம்: ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டம் கூழாங்குளத்தில் 07-06-1972 ல் பிறந்த துரைசாமி சுந்தரலிங்கம் , 1990 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான் . மதன் என்ற இளம் போராளியாக விளைபூமி – 06 ல் அடிப்படைப் பயிற்சிகளை…
-
- 0 replies
- 383 views
- 1 follower
-
-
வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு: தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல், குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன், ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன், தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம், சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம், செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன், அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும் செல்லதுரை ஜெயரெத்தினம், அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன், ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம், சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப் பிள்ளை சுரேஷ்குமார், சின்னதுரை அருந்தவராசா, தேவன் என்றும்…
-
- 0 replies
- 620 views
-
-
யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப் பயணத்தில் தளபதி ராதா ஆகினார். கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ். வீதிகளில் உந்துருளியில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச மேலாளரைப் போலவோ அல்லது மருத்துவரைப் போலவோ தோன்றினாரே அன்றி வேறு வகையான பார்வையைக் கொடுக்கவில்லை. அமைதியும் கவர்ச்சியும் கொண்ட…
-
- 2 replies
- 2.4k views
-
-
தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதல் ஒரு பார்வை 10.06.1997 அன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த ‘ஜெயசிக்குறு’ நடவடிக்கைப் படைகளின் விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 25ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்…. கரும்புலி கப்டன் சாதுரியன் நடராசா அரசரட்ணம் மட்டக்களப்பு கரும்புலி மேஜர் யாழினி சிவசுப்ரமணியம் ராகினி யாழ்ப்பாணம் கரும்புலி மேஜர் நிதன் (பர்வதன்) மாணிக்கம் அருள்ராசா மட்டக்களப்பு தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர…
-
- 0 replies
- 605 views
-
-
கலைஞனுக்கும் போராளிக்குமுரிய அடிப்படைத் தகுதியான மென்மையான மனமுடையவர் சிங்கோ மாஸ்ரர். வீரவேங்கை சிங்கோ மாஸ்ரர் கந்தையா பகத்சிங் வந்தாறுமூலை, மட்டக்களப்பு. வீரப்பிறப்பு:-29.03.1945 வீரச்சாவு:-15.05.1986 நிகழ்வு:-மட்டக்களப்பு மட்டக்களப்பில் சிறிலங்கா அதிரடிப்படையால் கைதாகி முறக்கொட்டாஞ்சேனை முகாமில் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதையின் போது வீரச்சாவு சிறந்த ஓவியக் கலைஞன் - இந்தியாவில் திரைப் படங்கள் தயாரிக்கும் ஏ.வி.எம் ஸ்ரூடியோ , யாழ்ப் பாணத்தில் செல்லம்ஸ் ஸ்ரூடியோ ஆகியவற்றில் பணிபுரிந்தவர்; மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள பல ஆலயங்களில் ஓவியங்கள் வரைந்தவர். மின் இணைப்பு வேலைகள் செய்பவர். இசைத்துறையில் நாட்டமுள்ளவர். யாழ்நகர் கண்ணன்…
-
- 0 replies
- 437 views
-
-
2ம் லெப். மாலதி படையணி துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் ரத்தி! AdminMay 15, 2022 http://www.errimalai.com/wp-content/uploads/2022/05/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D.%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-1024x683.jpg லெப்.கேணல் ரத்தி (கிருஸ்ணபிள்ளை சுபாஜினி) கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 30.06.1975 வீரச்சாவு: 15.05.1997 வவுனியா ஓமந்தையில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு. 2ம் லெப். மாலதி படையணி துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் ரத்தி. எமது தலைவன் பூத்த மண்ணாம் வடமராட்சியின் ஒர் கிராமமான துன்னாலையில் பிறந்து வளர்ந்தவள் தான் ரத்தி. இவள் தனது கல்வியை …
-
- 0 replies
- 377 views
-
-
வெளியில் தெரியாத வேர் கேணல் மனோ மாஸ்டர் அவர்களின் வீரவணக்க நாள் April 29, 2021 கதிரவேல் சந்திரகாந்தன்-திருகோணமலை- கேணல் மனோமாஸ்டர் 1983 இல் தமிழீழ விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்டவர்.இந்திய மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிபெற்ற அவர் அங்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறைச் செயலகத்தில் பணியாற்றினார்.இந்திய படையினரின் ஆக்கிரமிப்பு நாட்களில் மணலாற்றில் பயிற்றுவிப்பு செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.1989 இல் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியங்களில் படைத்துறை பயிற்சி நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.போராளிகளை சிறந்த போரிடும் ஆற்றல் கொண்ட வீரர்களாக வளர்த்தெடுப்பதில் மட்டுமன்றி அவர்களை அறிவியல் ரீதியிலும் வளர்க்க வேண்டும் என்ப…
-
-
- 2 replies
- 2.2k views
-
-
ஓட்டுக்குழு கருணா சதிவலையில் சிக்குண்ட லெப். கேணல் நீலன் என்றும் அழியாத சுவடு மட்டு – அம்மாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் நீலன் வீரவணக்க நாள் இன்றாகும். தென் தமிழீழத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுக்குழு கருணாவின் துரோகத்தனத்தால் துரோகிகள் மேற்கொண்ட தீய செயல்களால் 12.04.2004 அன்று துரோகி கருணாவால் சுட்டபட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் நீலன் உட்பட ஏனைய போராளிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலை போராட்டத்தின் கறுப்பு பங்கங்களில் முதல் பக்கமாக பெயர் கூட குறிப்பிட முடியாத துரோகங்கள் சி…
-
-
- 7 replies
- 1.9k views
-
-
பல வெற்றிக்கு வித்திட்ட வீரத்தளபதி லெப். கேணல் அமுதாப் ! Last updated Mar 31, 2020 சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் அவர்களின்11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள். லெப். கேணல் அமுதாப் சிதம்பரப்பிள்ளை சிவநாயகம் பிறப்பு- 15.04.1976 வீ.சாவு-31.03.2009 சொந்த முகவரி- தவசியாகுளம்,சாஸ்திரிகூழாங்குழம்,வவுனியா 18 ஆம் ஆண்டில் காலடி வைக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கடந்த காலச் சாதனைகளை அப்படையணியின் துணைத் தளபதி அமுதாப் விபரித்துள்ளார். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, 18 ஆம் ஆண்டில் கால் பதிப்பதனையிட்டு கடந்த வியாழக்கிழமை (10.04.08) நடைபெற்ற நிகழ்வில் அவர் பேசியதாவது: இன்று நெருக்கடியான கால கட்டத்தில், நெருக்கமான…
-
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
http://tamieelam.blogspot.com/2016/07/16.html சிறிலாங்க வான்படையால் மட்டு கரடியனாறு அரசியல்துறை செயலகம்(தேனகம்) மீது கடந்த யூலை 29, 2006 நடத்தப்பட்ட கிபீர் வான் தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் தமிழ்ச்செல்வன், மேஜர் கவி, மேஜர் அரிகரன், கப்டன் அனலி/செஞ்சுடர், கப்டன் ஊரவன், 2ம் லெப்.மதிசுதன், 2ம் லெப்.சுஜீவன், கிராமியப்படை வீரர் லோகிதன் ஆகிய எட்டுப் போராளிகளின் திருவுருவப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
-
- 0 replies
- 431 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 1k views
-
-
வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும். வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று மேற்கொள்ளப்பட்ட வான்கரும்புலி வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் ஆகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் வான்கரும்புலி மறவர்களின் 13 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள…
-
- 1 reply
- 459 views
-
-
லெப். கேணல் பொன்னம்மான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். லெப். கேணல் பொன்னம்மான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் கைதடிப் பகுதியில் எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிவிபத்தின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதி லெப். கேணல் பொன்னமான், தென்மராட்சி பொறுப்பாளர் மேஜர் கேடில்ஸ், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு, லெப்.சித்தார்த்தன், 2ம் லெப். பரன், வீரவேங்கை ஜோகேஸ், வீரவேங்கை குமணன், வீரவேங்கை அக்பர், வீரவேங்கை கவர், வீரவேங்கை தேவன் ஆகிய மாவீரர்களின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் நாவற்குழி படைமுகாம் மீதான தாக்குதலுக்கு 14.02.1987 அன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒ…
-
- 2 replies
- 685 views
-
-
ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 13ம் ஆண்டு நினைவுதினம் ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தியின் 13ம் ஆண்டு நினைவுதினம் நேற்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற நினைவுதின நிகழ்வில் அன்னாரின் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்ததுடன் சத்தியமூர்த்தியின் அனுபவங்கள் குறித்தும் இதன்போது பகிர்ந்துகொள்ளப்பட்டது. ஊடகத்துறையில் 1990களில் இருந்து ஈடுபடத் தொடங்கிய இவர், 2009 பெப்ரவரி 12ஆம் திகதி இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் சிக்கி படுகாயமுற்று சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்…
-
- 0 replies
- 438 views
-
-
தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆளுமை...! வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது ஒரு புனிதப் பயணம்! ஈழத்து மண்ணில் பல ஆண்டுகளாகப் பாய்ந்தோடும் தமிழ் மக்களின் குருதி வெள்ளத்தை இல்லாமற் செய்ய பிரித்தானிய அமைப்பொன்றின் சமாதானத் திட்டத்தைச் சுமந்து நகர்ந்து கொண்டிருந்தது! அது! வங்கக் கடலும் வெண்புறா பறக்கும் நாட்களுக்காக ஆதரவளித்து அக்கப்பலை தொட்டு அரவணைந்தது! இந்திய உளவுப்பிரிவின் நச்சுக் கண்கள் அதன் மேல் பாய்கின்றன. பாரதக் கடற்படை அகத் கப்பலைச் சுற்றி வளைக்கிறது. ஆயுத பலத்தால் அதை பாரதக் கப்பல் தன் கடல் எல்லைக்குள் இழுத்துச் செல்கிறது. கப்பலில் பயணித்த போராளிகளை சரணடையும்படி கட்டளை பிறக்கிறது! உயிரணைந்து போனாலும் சரண…
-
- 4 replies
- 2.6k views
-
-
சூரியனும் சந்திரனுமாய் தலைவரைத் தாங்கிய சிகரங்கள்.! Last updated Mar 2, 2020 யாழ் மாவட்டம் காரைநகர் பகுதியில் 09.01.1988 அன்று இந்தியப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டவேளை எதியியிடம் பிடிபடாமல் தன்னைத் தானே சுட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் பாண்டியன் அவர்களின் 32ம் ஆண்டு வீரவணக்க நாள் சூரியனும் சந்திரனுமாய் தேசியத் தலைவரைத் தாங்கிய தோழமையின் சிகரங்கள் இம்ரான் – பாண்டியன். விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். இம்ரான் – பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த …
-
-
- 9 replies
- 1.4k views
-
-
கரும்புலி மேஜர் அருளன் நவம்பர் 5, 2020/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து மௌனக் குமுறல்: கரும்புலி மேஜர் அருளன் அமைதியான பொழுது… சூரியன் விழுந்துவிடக்கூடாது என்று வானம் போராடியதற்கு அடையாளமாய் முகில்கள் இரத்தமாய் சிவந்திருந்தது. அருளன் தனிமையில் நடந்து கொண்டிருந்தான். அவனிற்கும் பூமிக்குமான இடைவெளி நீண்ட தூரமாகிக்கொண்டு போனது. நினைவுகள்தான் இப்போது அவனுடன் ஒட்டியிருந்தன. அவன் மனசைத்தவிர எல்லா இடமுமே அமைதி நிலைகொண்டிருந்தது. அந்த வெளியில் முளைத்திருந்த பற்றைகளும் இடிந்து போன கட்டடங்களும் அமைதியாக இருந்தாலும் அவனிற்கு அவை பேசுபவையாகவேயிருந்தன. அவனது நடையில் தளர்வு இல்லை. துயர் தெரிந்தது. இதுதான்… இந்த இடம்தான்… தாண்டிக்குளச் சண…
-
- 3 replies
- 1.7k views
-