தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
வீரன் - ஆண்பால். வீரி / வீராங்கனை - பெண்பால் போராளி - ஒரு நாட்டில் ஓர் இனத்தின் மீது மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகளை எதிர்த்து அந்தினத்தின் விடுதலைக்காக போராடும் வீரனையோ (அ) வீராங்கனையோ குறிக்கும் சொல். பண்டைய காலத்தில் தமிழகத்தில் இருந்த படைவீரர்களுக்கான ஒத்த சொற்கள்: வீரர்களைக்(soldier) குறிக்கும் பொதுச் சொற்கள் :- 'கலிங்க வீரர்கள்' SHIELD BEARER: பரிசைக்காரன் தேவன் வெட்டுப்படை வீரர்கள் :- வாளினை படைக்கலமாகக் கொண்டவன் - வாளி, வாள்வீரன், வாளேந்தி, வாளாளன் வாளுழவன் - வாளை உடைய உழவன்(மக்கள் படை) கொங்கவாளர் - கொங்கவெள்ளம் என்னும் ஒருவகை கொடுவாளினைப் பயன்படுத்துவோர் சொட்டையாளன் - …
-
- 0 replies
- 2.3k views
- 1 follower
-
-
தமிழர்களிடம் அக்காலத்தில் பல்வகையான படைகள் இருந்ததாக அறியக் கிடைக்கின்றது. → சேனையின் உட்பிரிவே ஒவ்வொரு விதமான படைகளாகும். ஆனால் பொதுவாக சொல்லும்போது படையென்னும் பெயரே ஆய்தம் தாங்கிய அரச ஆணைபெற்ற படைகளைக் குறிக்கின்றன.. முதலில் படைகளை அதன் நிலை அடிப்படையைக் கொண்டு அகப்படை - Internal Defensive Force மறப்படை - Expeditionary Force - என்று இரண்டு படைகளாகப் பகுத்துள்ளனர். கோட்டைப் போரின் போது பொருதும் படைகள் உழிஞைப்படை - பகை அரசனுடைய கோட்டையைத் தாக்கும் படை. நொச்சிப்படை - தங்கள் கோட்டையைக் காத்துக் கொள்ளப் போரிடும் படை. என்று அழைக்கபட்டன. இப்படைகள், அவை பெற்ற பயிற்சியின் அடிப்படையில் இரண்ட…
-
- 0 replies
- 2.6k views
- 1 follower
-
-
படைத்தலைவன் என்னும் சொல்லைக் குறிக்கும் வேறு தமிழ்ப் பெயர்கள்: பொருநன் - நன்கு சண்டையிடும் படைத் தலைவன் சேனையர்கோன்/ சேனைக்குடையார்(சேனைக்கு உடையவர்) - அத்துனை சேனைகளிற்கும் தலைவன் . இளவரசர் போன்றோரே இப்பதவிகளில் இருப்பர். சேனைமுதலி/ பெரும் படைத் தலைவன் - ஒவ்வொரு சேனைக்குமான தலைவன் இவன் மறுபெயர் மாசாமந்தன் என்பதாகும் சேனாதிபதி - Tamil + Sanskrit சேனாதிராயன் - (சேனை + அதி + அரையன்) - பல சேனாவரையர்களிற்கு தலைமையானவன் சேனாதிராயன் ஆவான். சேனாவரையன் - (சேனை + அரையன்) - அரையர் என்போர் உள்ளக தலைவர்களாகவே இருந்து வந்துள்ளனர் என்கிறார் ஒய் சுப்புராயலு. எனவே சேனாவரையர் என்பது சேனையின் …
-
- 0 replies
- 2.8k views
- 1 follower
-
-
தமிழின் சுவை! நம் தமிழ் மொழியின் சுவையை உணர முற்பட்டால் திகட்டத்திகட்ட சுவைக்க ஆயிரமாயிரம் விசயங்கள் உள்ளன. அதிலும் இலக்கணச்சுவையை அறிந்தோர் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனாலும் இலக்கணம் அதிகம் அறியாத என் போன்றோரும் கொண்டாட நிறையவே இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த வஞ்சப்புகழ்ச்சி அணி. வஞ்சப்புகழ்ச்சி அணி என்பது ஒருவரைத் திட்டுவது போல் பாராட்டுவது. நம் ஆதிகாலப் புலவர்களில் மிகவும் குசும்பு படைத்தவர்கள் பலர்.. இரட்டுற மொழிதல் – சிலேடை அணிப் பாடல் என்ற ஒருவகை உள்ளது. அதில் வல்லவர் நம் கவி காளமேகப்புலவர். இவர் அம்மனையே வம்புக்கு இழுக்கிறார் என்றால் இந்தப் புலவர்களுக்கு அந்த தெய்வங்களே எவ்வளவு செல்லம் கொடுத்து வைத்திருந்திருக்கிறார்கள் பாருங்கள். இவர் தில்லை சிவ…
-
- 2 replies
- 2.7k views
-
-
*தமிழுக்கு இனிமை என்றொரு பெயர் உண்டு காரணம் ஏன் தெரியுமா?*.. தேன் கொண்டு வந்தவனை பார்த்து, நேற்று ஏன் தேன் கொண்டு வரவில்லை? என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவன் கூறிய இனிமை பொருந்திய பதில்.... ஐயா நீங்கள் கூறியதை நினைத் தேன் ! கொல்லிமலைக்கு நடந் தேன்! பல இடங்களில் அலைந் தேன்! ஓரிடத்தில் பார்த்தேன் ! உயரத்தில் பாறைத் தேன்! எப்படி எடுப்பதென்று மலைத் தேன்! கொம்பொன்று ஒடித் தேன்! ஒருகொடியை பிடித் தேன் ! ஏறிச்சென்று கலைத் தேன்! பாத்திரத்தில் பிழிந் தேன்! வீட்டுக்கு வந் தேன்! கொண்டு வந்ததை வடித் தேன்! கண்டுநான் மகிழ்ந் தேன்! ஆசையால் சிறிது குடித் தேன் ! மீண்டும் சுவைத் தேன் ! உள்ளம் களித் தேன்! உடல் களைத் தேன் ! உடனே படுத் தேன்! கண் அயர்ந் தேன்! காலையில் கண்வி…
-
- 3 replies
- 950 views
-
-
சங்க இலக்கியத்தில் விலங்கியல் - 8 - குரங்கு முன்னுரை: குரங்கு - என்று சொன்னவுடனே நாம் சாதாரணமாகப் பார்த்தாலும் நம்மை முறைத்துப் பார்த்தவாறு 'உர் உர்' என்று சத்தமிடுவதும் நம் கையில் இருக்கும் உணவுப் பொருட்களை எப்போது பிடுங்கிக் கொண்டு செல்லலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஓரிடத்தில் இல்லாமல் அங்கும் இங்கும் தாவிக்கொண்டிருப்பதுமான குறும்பு நிறைந்த கூனிய உடலுடைய உருவம் தான் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். குரங்கு என்றாலே அதன் சேட்டைகளுக்குப் பஞ்சமில்லை. குழந்தைகளுக்குக் குரங்கைப் பார்த்துவிட்டால் போதும்; அதன் அருகில் செல்வதற்கு அஞ்சினாலும் அதன் செயல்பாடுகளைக் கண்டு சிரித்து மகிழ்வர். தமிழகத்தில் பரவலாகப…
-
- 0 replies
- 1.3k views
-
-
'மேதகு’ என்னும் சங்கச் சொல் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்னும் மன்னன் உலகத்து இன்ப மாகிய இல்லறத்தோடு இருத்தலை மறந்து போர் ஒன்றையே இன்பப் பொருளாகக் கருதி வாழ்ந்தான் என்னும் பொருள்பட நக்கீரரால் நெடுநல்வாடை என்னும் நூல் இயற்றப்பட்டது. காதலும் வீரமும் சங்க காலத் தமிழர் வாழ்க்கையின் இரண்டு கூறு களாக இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் வழி அறிகிறோம். இந்த இரண்டுள் போர் ஒன்றையே தொழிலாகக் கருதிப் பெருவீரனாக விளங்கிய பாண்டிய மன்னனை நோக்கிக் காதல் இன்பத் தையும் கண்டு வாழுமாறு நெடுநல்வாடையில் நக்கீரர் அறிவுறுத்தியுள்ளார். காதல் இன்பத்தைக் காணுமாறு கூறும் இந்நூற்பொருளின் தொடர்ச்சி யாகவே மதுரைக்காஞ்சி நூல் பாடப்பட்டுள்ளது. கா…
-
- 0 replies
- 664 views
-
-
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்! பாண்டிய மன்னனின் மகளைக் குலோத்துங்க சோழனுக்கு பெண்கேட்டு வந்த ஒட்டக்கூத்தருக்கும், பாண்டியமன்னன் மகளின் குருவான புகழேந்திப்புலவருக்கும் தந்தம் நாட்டுப்பற்றால் மோதல் ஏற்பட்டது. இருவரும் புலவர்கள் ஆதலால் கவிதைத் திறத்தால் மோதிக்கொண்டனர். புலவர்கள் இருவரும் தத்தம் அரசுகளைப் புகழ்ந்து பாடியதை பாண்டிய மன்னன் இரசித்துக் கேட்டான். எனினும் அந்நாளில் தமிழகத்தை ஆண்ட மன்னர்களுக்குள் தன் மகளுக்கு ஏற்ற கணவனாக வரும் தகுதி குலோத்துங்க சோழனுக்கு இருந்ததை பாண்டிய மன்னன் அறிந்திருந்ததாலும், அரசியல் காரணங்களுகக்காகவும் அத்திருமணத்திற்கு உடன்பட்டான். திருமணம் முடித்து குலோத்துங்கனுடன் செ…
-
- 0 replies
- 632 views
-
-
மணிமேகலையின் காதலும் துறவும் மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். இப்பெயரைக் கொண்டு இவரது ஊர் சீத்தலை என்றும் இவர் மதுரையில் கூல வாணிகம் செய்து வந்தவர் என்றும் அறிகிறோம். பௌத்த மதப் பரப்பலுக்காக ஒரு தனிக் காவியமே படைத்த இச்சாத்தனார் ஒரு பௌத்த நெறியாளர். இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பார் மயிலை சீனி வேங்கடசாமி. தமிழின் முதல் காப்பியம் என்ற பெருமைக்குரிய சிலப்பதிகாரமும் சாத்தனாரின் மணிமேகலையும் கதைத் தொடர்ச்சியால் இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப் படுகின்றன. சிலப்பதிகாரத்தின் முப்பெரும் கதை மாந்தர்களாம் கண்ணகி, கோவலன், மாதவி மூவரில் கோவலன் மாதவி இருவருக்கும் பிறந்த ஒரே மகளே மணிமேகலை.…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் நீர் மேலாண்மை... வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள்-16) என்கிறார் வள்ளுவர். அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர். மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது. இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார். "இடியுடைப் பெருமழை எய்தா ஏகப் பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்'' (வரி.26-28) இப்பாடலடியில், "மழை பிணித்து ஆண்ட மன்னவன்' என்பதன் பொருள், முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்…
-
- 1 reply
- 2.5k views
-
-
தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள் - 1 புறநானூற்றுப் பாடல் ஒன்று. காலையில் பாலில் அரிசிப் பொரியைச் சேர்த்து உண்பதாகக் குறிப்பிடுகிறது. இன்று பிரிட்டனிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வாழும் மக்கள் காலை உணவில் "கார்ன் ப்ளேக்ஸ்" (மக்காச் சோளம்), "ரைஸ் கிரிஸ்பிஸ்" (அரிசிப் பொறி) ஆகியவற்றைச் சாப்பிடுவதைக் காண்கிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் கண்டு பிடித்த காலைத் தானிய உணவு (breakfast cereal) உலகெங்கிலும் பரவியதெப்படி? இதுவும் ஆராய்ச்சிக்குரிய பொருள்! சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான கலித்தொகையில் ஒரு அதிசயச் செய்தி வருகிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோ இயற்றிய பாடலில், ஒரு மரத்தின் கீழ் பொய் சொல்பவன் நின்றால் அந்த ம…
-
- 1 reply
- 870 views
-
-
கக்கத்தில் இடுக்கடி, பாயைச் சுருட்டடி, அரங்கத்திற்கு ஏகடி! காளமேகப் புலவர் வீட்டுத் திண்ணையில் நண்பர்களோடு அமர்ந்திருந்தார். அப்போது வெளியூர்க்காரர் ஒருவர் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டார். புலவர் சிலேடைப் பாடல்களைப் பாடி விளக்கம் கூறியதைக் கேட்ட அவர், புலவரின் புலமையைக் கண்டு வியப்படைந்தார். ""ஐயா, தங்கள் பாடல்கள் தேனும் தினைமாவும் சேர்த்து உண்டதைப்போல சுவையாக உள்ளன. தங்களிடத்து எனது வேண்டுகோள் ஒன்றுண்டு. என்னை இடுக்கடி, பாயைச் சுருட்டடி, ஏகடி அம்பலத்தே என்னும் சொற்கள் பயின்றுவர ஒரு பாடல் தர வேண்டும்'' என்றார். அதை ஏற்றுக்கொண்ட புலவர், சில வினாடிகள் கண்களை மூடித் தலையை அசைத்தார். அடுத்த நொடியில், ""வெளியூர் நண்பரே, நீங்கள் கேட்ட பாடல் வருகிறது…
-
- 0 replies
- 525 views
-
-
-யானை சண்டை திருச்சிக்கு அருகிலுள்ளது உறையூர். ஒரு காலத்தில் சோழரின் தலைநகராக விளங்கியது . இதற்கு மற்றோரு பெயர் கோழியூர் . புறநாநூற்றில் (பாடல் 212) கோப்பெருஞ்சோழனை பிசிராந்தையார் ‘கோழியோன்’ என்று பாடுகிறார். இதன் பின்னாலுள்ள கதையை வைத்து சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் ‘வார்த்தா ஜாலம்’ செய்கிறார். சம்ஸ்கிருதத்தில் ‘வாரணம்’ என்ற சொல்லுக்கு யானை, கோழி/சேவல் என்று இரு பொருள் உண்டு. இவைகளை இளங்கோ அடிகள் ‘முறச் சிறை வாரணம்’, ‘புறச் சிறை வாரணம்’ என்று வருணிக்கிறார். அதாவது முறம் போன்ற காதுகளுடைய யானையும் புறத்தே சிறகுகளுடைய கோழியும் போரிட்டதில் இறுதியில் கோழி வென்றது. இதன் காரணமாக உறையூருக்கு ‘கோழியூர்’ என்றும் அதைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட சோழனுக்கு ‘க…
-
- 0 replies
- 694 views
-
-
'படிமப்புரவு: சொந்தமாக உருவாக்கியது' படை - தற்காலத்தில், ஒருநாட்டின் ஆணையமுள்ள படைக்கலம் ஏந்திய வீரர்கள் கூட்டத்தையும்(Military) அவற்றினுட்படும், மூவேறு பூதங்களிற்கான படைகளையும்[தரைப்படை(நிலம்), கடற்படை(நீர்), வான்படை(காற்று)], விதவிதமான போர்ச் செயல்கள் செய்யும் வீரர்களை அவர்தம் செயல்களிற்கு ஏற்ப தனித்தனிப் படையாக(force) பிரித்து (அதிரடிப்படை, தற்கொடைப்படை, துணைப்படை, எல்லைப்படை போன்றவை) அவற்றையும் படை என்னும் சொல்லால் குறிப்பதுவே படை என்னும் சொல்லின் பொருளாகும். பகுதி - படையில் உள்ள ஒரு சிறிதளவு(section) பக்கம் - படையின் ஒரு பக்கம்(side) கை - Flank (பண்டைய காலம் & தற்காலம்) இறகு - தற்காலத்தில் Wing-இற்கு நிகர…
-
- 0 replies
- 2.7k views
- 1 follower
-
-
உதயணகுமார காவியம் வத்தவ நாட்டரசன் சதானிகனுக்கும் அவன் மனைவி மிருகாவதிக்கும் பிறந்த உதயணனின் கதையை விளம்புவது இக்காவியம். 6 காண்டங்களில், 369 விருத்தப்பாக்களால் ஆனது இந்நூல். கந்தியார் (சமணப் பெண்துறவி) ஒருவரால் இயற்றப்பட்டது. இந்நூலில் உதயணன் நான்கு மனைவியரை மணந்து இறுதியில் துறவு நிலையை மேற்கொண்டதை அறிய முடிகிறது. கதையமைப்பு சிக்கலானதாகவும், இரு கதைத் தலைவர்களைக் கொண்டும் உள்ளது. பெயர் தான் காவியமே தவிர காவிய இயல்போ ஏற்றமோ நடை நலமோ சிறிதும் இல்லாதது. பெருங்கதை என்கிற நூலின் சுருக்கம் என்று கூட இதனைச் சொல்லலாம். இதன் காலம் கி.பி.15 ஆம் நூற்றாண்டு. நாககுமார காவியம் இதன் ஆசிரியரும் ஒரு சமணப் பெண்துறவியே. பெயர் அறியக் கிடைக்கவில்லை. 5 சருக்கங்கள…
-
- 0 replies
- 748 views
-
-
பலா பழத்தை வெட்டாமலேயே, அதிலுள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறிந்துகொள்ள, பழம்பெரும் கணித நூலான, "கணக்கதிகாரம்' ஒரு வழி சொல்லியிருக்கிறது. அதெப்படி பலாப்பழத்தை வெட்டாமலேயே அதில் உள்ள சுளைகளை அறியமுடியும்? விந்தையாக இருக்கிறதல்லவா? ஆனால், நம் பழந்தமிழ் கணக்கியல் இதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது விந்தைதான்! பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி வருவதை ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே வேறெண்ண வேண்டாஞ் சுளை ஒரு பலாப்பழத்தை அறுப்பதற்கு முன்பு அதிலுள்ள சுளைகள் இவ்வளவென்று கண்டு பிடிக்கலாமா என்ற கேள்விக்கு, பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை - எண்ணிக்கையை 6-ஆல் பெருக்கி வரும் விடையை 5-ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவானது…
-
- 0 replies
- 713 views
-
-
புகார் நகரை விட்டு தன் காதல் மலையாளான கண்ணகியோடு நீண்ட நடை பயணமாக கோவலன் புறப்பட்டதை மான யாத்திரை என்று குறிப்பிடுவார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தன்னுடைய பொருளே ஆனாலும் வறுமையிலிருந்து விடுபட ஒரு பொருளை விற்பது என்பது கௌரவமான செயல் அல்ல. அதுவும் சீரும் சிறப்போடும் தான் வாழ்ந்த புகார் நகரத்திலேயே அந்த கண்ணகியின் சிலம்லை விற்பது சாத்தியமே இல்லை என்பதால் மதுரைக்க போனான். இது தன்மானத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் செயலாகும். ஒரு நாளில் ஒரு காதத் தொலைவு தான் அந்த மண்மைகள் அறியா மென்பாதங்களால் நடக்க முடிந்த தொலைவு மதுரை மூதூருக்கும் புகாருக்கும் இடையில் முப்பது காதம். முதல் காதம் நடப்பதற்கு முன்பே கண்ணகி கேட்டது மதுரை எவ்வளவு தொலைவு என்று தான். உண்மையையும் மறைக்காமல் பொய்ய…
-
- 0 replies
- 809 views
-
-
தோட்டாமூன்றாவதுகண் கர்ணன் மஹாபாரதத்தின் விசித்திரமான கதாபாத் திரங்களில் ஒருவன். ஒருபுறம் தனது கவச குண்டலத்தையும் தானமளிக்கும் பெருஉள்ளம், மறுபுறம் குலப் பெண்மணியை சபையில் அவமானப்படுத்தும் சிறுஉள்ளம். ஒருபக்கம் நண்பனுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் விசுவாசம், மறுபக்கம் குருவிடமே பொய் கூறும் கபடத்தனம். அறச் செயல்களில் ஆர்வம் கொண்டு போரிடத் துடிக்கும் அதே இதயம், அதர்மவாதிகளையும் ஆதரிக்கின்றது. மொத்தத்தில், கர்ணன் முரண்பாடுகளில் சிக்கிய ஒரு கதாபாத்திரம். கர்ணன் - நல்லவனா, கெட்டவனா என்பது பலருக்கும் புரியாத புதிர். நற்குணம் படைத்தவன், ஆனால் தீயோரின் சகவாசத்தினால் அதர்மத்திற்கு துணை நின்று அழிந்து போனவன் என்பதே பெரும்பாலா…
-
- 0 replies
- 717 views
-
-
தற்கால தரைப்படையில் உள்ள ஒவ்வொரு பிரிவுகளுக்குமான தமிழ் சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன...படித்து மகிழுங்கள்! இச்சொற்கள் எல்லாம் சங்க இலக்கியங்களில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும். பிரிவு :- Unit துணைப்பிரிவு - Sub-Unit சூட்டணி/ சூடு & தடூக அணி:- fireteam/ fire and maneuver team = 2–4 சதளம் :- squad /crew = 8–12 பகுதி/ சுற்றுக்காவல் :- section / patrol = 8–24 நாரி/ படையினர் :- platoon/ troop = 26–55 குவவு - staffel/ echelon = 50- 90 குழாம்/ சேணேவித் தொகுதி :- Company /Artillery battery = 80–250 சமரணி :- battalion /cohort = 300–1000 படையணி :- regiment/ group= 1,000– 3000 படைத்தொகுதி/அதிகம் :-…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்திய படைத்துறை (Indian military) தர நிலைகளுக்கான தமிழ்ப்பெயர்கள்: ★ NAVY- கடற்படை:- Secretary of the navy - நீர்த்தே (நீர் + தே) Admiral of the fleet- கலக்கூட்டக் சேர்ப்பர் | சேர்ப்பன் ->(பொது) சேர்ப்பர் Admiral- சேர்ப்பர் Vice admiral- துணைச் சேர்ப்பர் Rear admiral- பிற் சேர்ப்பர் Commodore- மூப்பர்(சோழர் காலத்துச் சொல்லாடல்) Ship Captain- தண்டையல்/தண்டல், கப்பித்தார், மேந்தலை, நீயார் (எச்சொல்லை வேண்டுமானாலும் கையாளலாம்) Commander- வியவர், கட்டளையாளர்(ஈழத்துச் சொல்லாடல்) Lieutenant commander- இள வியவர் Lieutenant- இளயரையர் Sub lieutenant- உதவி இளயரையர் Master Chief Petty Officer 1 …
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
-
- 2 replies
- 798 views
-
-
தமிழர் கலைகள் எனப்படுபவை தமிழர் வாழ்க்கையைச் சிறப்பித்த கலைகள் ஆகும் சிலம்பம் கோலாட்டம் பட்டிமன்றம் வில்லுப்பாட்டு ஆட்டங்கள் கும்மி மயிலாட்டம் காவடியாட்டம் பொய்கால் குதிரை ஆட்டம் தெருக்கூத்து ஒயிலாட்டம் பாம்பாட்டம் உருமி ஆட்டம் புலி ஆட்டம் பறை ஆட்டம் கரகாட்டம் மாடு ஆட்டம் உறியடி ஆட்டம் கொல்லிக் கட்டை ஆட்டம் புலி ஆட்டம் சிலம்பாட்டம் குறவன் குறத்தி ஆட்டம் கைச்சிலம்பாட்டம் தேவராட்டம் தப்பாட்டம் காளியாட்டம் சேவையாட்டம் பேயாட்டம் சாமியாட்டம் கூத்துக்கள் சாந்திக் கூத்து சாக்கம் மெய்க் கூத்து அபிநயக் கூத்து நாட்டுக்கூத்து விநோதக் கூத்து குரவைக் கூத்து கலிநடனம் என்னும் 'கழாய்க் கூத்து' கரகம் என்னும…
-
- 0 replies
- 2k views
-
-
இன்றைய சூழலில் எல்லாப் பெண்களும் மலரணிகிறார்கள். அவர்களிடம் ஏன் மலரணிகிறீர்கள்? என்று கேட்டால்....... அவர்கள் சொல்வார்கள்..... அழகுக்காக அணிகிறோம்..... மணத்துக்காக அணிகிறோம்..... என்று இன்னும் பல காரணங்களைக் கூறுவார்கள்..... எப்போதிருந்து மலர் அணிகிறீர்கள் என்று கேட்டால்..... நீண்ட காலமாகவே அணிகிறோம் என்பார்கள்............. அவர்களில் பலருக்குச் சங்க கால மகளிர் மலரணியும் மரபு புதுமையாகவும், வியப்பாகவும் இருக்கும். ஆம்.... சங்க காலத்தில் எல்லாப் பெண்களும் மலரணியவில்லை. திருமணமான பெண்கள் மட்டும் தான் மலரணிந்தனர். திருமணமாகாத பெண்கள் மலரணிவது இல்லை. அவ்வாறு திருமணம் ஆகாத பெண் ஒருத்தி மலரணிந்திருந்தால் அவள் யாரையோ காதலிக்கிறாள்.... அவன் சூட்டிய மலர் தா…
-
- 0 replies
- 698 views
-
-
மோதலால் பிறந்த தமிழ்க் கவிதை! சோழ மன்னன் குலோத்துங்கனின் அரசவையில் தலைமைப் புலவராக இருந்தவர் ஒட்டக்கூத்தர். பாண்டிய மன்னனின் தலைமைப் புலவராக இருந்தவர் புகழேந்தி. இருவரும் சமகாலத்தவர்கள். ஒட்டக்கூத்தர், தம் புலமையில் மிகுந்த செருக்குக் கொண்டவர். பிற புலவர்களின் கவிதையில் குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர். சோழ மன்னன், பாண்டிய மன்னன் மகளைத் திருமணம் செய்ய விரும்பினான். அக்காலத்தில் மன்னர்களின் குடும்பத்தில் திருமணம் நடைபெறுவதற்கு - பெண் கேட்கச் செல்வதற்கு மன்னரின் சார்பாக அவைக்களப் புலவரை அனுப்பும் அளவுக்கு அவர்கள் செல்வாக்கு பெற்றிருந்தனர். அதனால் சோழ மன்னன், ஒட்டக்கூத்தரைத் தன் தந்தைபோல் கருதிப் பாண்டிய மன்னனிடம் பெண்கேட்க அனுப்பினான். ÷ஒட்டக்கூத்தர், பாண்டிய …
-
- 0 replies
- 769 views
-
-
தும்மல் விளைவித்த ஊடல்! தும்மல்' என்ற செயல் உடற்கூற்றியல் சார்ந்த நிகழ்வு. அளவுக்கு மீறிய நெடியைத் தாங்கமுடியாமல், அதை முகர்வதால் மூச்சு விடுவதில் உருவாகும் தடையழர்ச்சியின் வெளிப்பாடாக, திணறல் ஏற்பட்டு அதை, விடுவிக்க மூக்கும் வாயும் முழு ஆற்றலுடன் மூச்சை வெளியேற்றுவதால் உண்டாவது. தும்மல், "நீர்க்கோவை'யாலும் (ஜலதோஷம்) ஏற்படும். இஃதன்றி, காற்று மாசு, சுற்றுச்சூழல், உணவு, உடை, அணிகலன் இவற்றின் ஒவ்வாமையாலும் தும்மல் வரும். இவைதவிர மனவியல் காரணங்களாலும் தும்மல் உருவாகும் என்று கூறப்படுகிறது. மங்களகரமான செயல்களைப் பற்றிப் பேசும்போது தும்மல் போடுபவர்கள் கடிந்துகொள்ளப்படுவதும் நடைமுறையில் உள்ளது. தும்முபவர் ஒற்றைத் தும்மலுடன் நிறுத்திவிடாமல், மேலும்…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-