- Open Club
- 57 members
- Rules
நினைவலைகள்

17 topics in this forum
-
டிஸ்கி: எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் தேவிகாவும் ஒருவர்.. குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களுக்கேற்ற அற்புதமான நடிப்புத் திறன் கொண்டவர், ஆனால் சொந்த வாழ்க்கையில் சரியான துணை அமையாமல் அவர் கண்ட துயரம் பரிதாபமானது. அவரை பற்றிய கட்டுரை படிக்க நேர்ந்தது, பகிர்கிறேன்..! 60களில் கே.ஆர்.விஜயா, காஞ்சனா, ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா என பல கதாநாயகிகள் அறிமுகமாகித் திரையில் மின்னினாலும், வண்ணப் படங்களின் விகிதம் கூடினாலும் 50களின் நாயகிகளும் அவர்களுடன் சரி சமானமாகப் போட்டியிட்டார்கள். அவர்களில் தேவிகாவுக்கும் முதன்மையான இடம் உண்டு. பாவ மன்னிப்பு, கர்ணன், நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, வாழ்க்கைப்படகு, வானம்பாடி, நீலவானம், மறக்க முடியுமா?, …
-
-
- 8 replies
- 2.4k views
- 1 follower
-
-
'70களில் தென் தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளிலெல்லாம் கோலோச்சி, எங்கள் மனதை கொள்ளைகொண்ட இலங்கை வானொலி அறிவிப்பாளர்களின் குரல்களைக் கேட்டு அக்காலத்தை இரைமீட்கும் நினைவுகள் இங்கே.. கே.ஜெயக்கிருஷ்ணா.. திருமதி. ராஜேஸ்வரி சண்முகம்..
-
- 1 reply
- 842 views
-
-
(கல்லூரியில் படிக்கும்போது பாண்டிச்சேரி ரத்னா திரையரங்கில் ஜாஸ் படத்தை இரவுக்காட்சியில் பார்த்தேன். ஊரே அடங்கிப்போன அவ்விரவில் கடைசிக் காட்சி வரை மிரட்டிய படம். இன்றும் பசுமையாக உள்ளது. படம் பார்த்து முடித்து விடுதிக்கு திரும்பும் வரை காட்சிகள் நினைவிட்டு அகலவே இல்லை. அடுத்த சில நாட்கள் கடலில் காலை நனைக்கவே பயந்த காலம் உண்டு.) 48 வருடங்கள் கழித்து அதே ஜாஸ் படத்தை முப்பரிமாணத்தில் -3Dயில் மறுபடியும் புதுப்பித்து வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தை இயக்கும்போது பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்பீல்பெர்க்கிற்கு வயது வெறும் 26 தானாம். இந்த ட்ரெயிலரை பார்த்தால் அக்காலத்திலேயே எடுக்கப்பட்ட நேர்த்தியான பிரமாண்டம் புரியும். …
-
-
- 7 replies
- 660 views
-
-
நாம் பிறந்து விளையாடிய சொந்த கிராமத்திற்கு சென்றால், பால்ய வயது தோழர்கள், பெரியவர்கள், குழப்படி செய்து உருண்டோடிய இடங்கள், அடி வாங்கிய தருணங்கள் என அனைத்தும் நம் நினைவை தாக்கும்.. ஆனால் இன்னமும் பதட்டதுடன், மரியாதையுடன் நோக்கும் இடங்கள், நாம் பயின்ற ஆரம்ப பள்ளிகள் தான்..! அந்த பால்ய நாட்களை நினைவுகூரும் போது இன்றும் கண்களில் நீர் கோர்க்கும்..😢 ஏறக்குறைய 63 வருடங்களுக்கு முன் என் சிறிய கிராமத்து பள்ளியையும், அதனருகில் வசித்த வகுப்பாசிரியரையும் இன்று(17-04-2022) நினைக்க வைத்த அருமையான பாடல் இது..! இப்பாடலை, இப்பொழுதுள்ள மேடை பாடகர்களின் அதே குரல் வளத்தில், பிசிறாமல் கேட்பதும் சிறப்புதான்..! 😍 அசல்: நகல்:
-
- 0 replies
- 426 views
- 1 follower
-
-
சிறுவயதில் கிராமத்திலுள்ள "டென்ட் கொட்டா"யில் படம் ஆரம்பிக்கும் முன் சுழலவிடும் இசையில் இது முதன்மையானது.. குவித்து வைத்த மணல்மீது உட்கார்ந்து சகதோழர்களுடன் படம் பார்த்த அந்த இனிமையான நினைவுகள்.. ! என் பால்ய வயது தோழர்கள் சிலர் மறைந்துவிட்டனர்.. இந்த இசையை கேட்கும்போதெல்லாம் அழியாத கோலங்களாய் அவர்களின் நினைவை இரைமீட்டிச் செல்லும்..! Simply Nostalgia revisited..
-
- 0 replies
- 489 views
- 1 follower
-
-
ஊரெல்லாம் கொரானா.. நாடெங்கும் கொரானா.. வாழ்க்கையே மாறிப் போச்சு..! 'இந்த கிராமங்களில் எப்படி இந்த கொரானா பயமில்லாமல் வாழ்கிறார்கள்..?' என்ற ஊர் நினைப்பு வந்தது.. அலைப்பேசியை எடுத்தேன்.. குக்கிராமத்தில் வசிக்கும் என் பள்ளித் தோழன் சுப்பு எடுத்தான்.. பேரப் பிள்ளைகளின் குறும்பு, ஊரில் வசிக்கும்/வசித்த ஆட்களைப் பற்றிய விசாரிப்புகள்.. கிராமத்து நினைவுகளை, அழியாத கோலங்களை பகிர்ந்து கொண்டோம்..! அதில் மீசை அரும்பும் வயதில்(1971) கிராமத்திலிருந்து மதுரைக்கு சென்று பார்த்த இந்தப் பாடலை பற்றி (முதலில் பார்த்த இந்திப் படம்.. மொழி இன்னமும் தெரியாது ) பேசி சிரித்தோம்.. "டேய், இன்னமும் பசுமையாய் கொரானா போல…
-
- 0 replies
- 883 views
- 1 follower
-
-
என்னுரை: இரு சதாப்தங்கள் ஆயிற்று. இந்தியில் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே எனக்கு புரியும். அவை... 'இந்தி நகி மாலும்.. முஜே பைட்டியே ஆவோ மாதாஜி பிதாஜி' இவற்றை வைத்தே 21 வருடங்களை ஓட்டிவிட்டேன்.. இந்தி இன்னமும் புரியவில்லை.. இந்தியை விட சில 'அரபி சொற்கள்' அதிகம் புரியும் திட்டப்பணியில் வேலை செய்பவர்கள் பலர் வட இந்தியர்கள் இருந்தாலும், முதன்முறையாக என்னிடம் பேசும்போது மட்டும் இந்தியில் பேச எத்தனிப்பர். நான் பதில் சொல்லாமல் அமைதியாகிவிடுவதுண்டு. திரும்பவும் இந்தியில்கேட்டால், "நீங்கள் பேசுவது புரியவில்லை..! Sorry I can't understand what you are saying..!" என ஆங்கிலத்தில் சொல்வது வழக்கம். அத்தோடு அவர்களும் ஆங்கிலத்த…
-
- 1 reply
- 603 views
-
-
பராக்... பராக்... நம்ம... மதுரை, ராஜவன்னியன்... களத்தில், இறங்கி விட்டார்.
-
-
- 4 replies
- 1k views
- 1 follower
-
-
நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா.. தா.. தற்செயலாக யூடுபில் பழைய பாடல்களை தேடியபோது இந்த அருமையான பாடல் கிடைத்தது. இதில் என்ன சிறப்பு என்றால் பாடலை ரசித்து சிரிக்கும் செயலலிதா அம்மணி தான்.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீது இருந்தாலும், இப்பொழுது இருப்பது மாதிரி தமிழகத்தை வடக்கை அண்டி இருக்க விட்டிருக்க மாட்டார் என்பது மட்டும் திண்ணம்.. அவர் இல்லாதது மனதில் லேசான நெருடலே..!
-
- 6 replies
- 1.5k views
-
-
ஒவ்வொருவருக்கும் திரைப்பட நடிகர்களின் நடிப்பு ஒருவிதத்தில் வசீகரிக்கும், எனக்கு பிடித்த நடிகர் எஸ்.வி.ரங்காராவ் தான்..! தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவராயினும், தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் இவரின் ஆளுமை தனித்தன்மையானது. இன்றுவரை இவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை யாரும் நிரப்பவில்லை. ஆரவாரமில்லாத ஆழிப்பேரலை நடிப்பு! - எஸ்.வி.ரங்காராவ் அது ஒரு நிலாக்காலம்..! அப்போதெல்லாம் சினிமா மட்டுமே மக்களுக்கான ஒரே பொழுதுபோக்கு. திரை நட்சத்திரங்கள் எளிதில் மனத்துக்கு நெருக்கமானவர்களாக மாறிவிடுவார்கள். டெண்ட் கொட்டாயில் சினிமா பார்த்த அனுபவங்களை வீட்டுப் பெரியவர்கள் பகிர்ந்து கொள்ள, சுற்றி அமர்ந்திருக்கும் சிறுவர்கள் வாய் பிளந்தபட…
-
-
- 5 replies
- 1.8k views
- 1 follower
-
-
சென்னை வீட்டில், பரண் மீது துழாவியபோது, கல்லூரியில் படிக்கும் காலத்தில்(1976) விரும்பிக் கேட்ட "டினா சார்ல்ஸ்" பாடிய இந்தப் பாடல் காசட் கிட்டியது.. 'பனாசோனிக்' காசட் ப்ளேயரில் சுழலவிட்டேன்.. அதன் பிரதிபலிப்பு, கீழே ஒளியாக..
-
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
கல்லூரியில் படிக்கும்போது 'விடுதி நாள்' (Hostel Day)என்றொரு விழா ஒவ்வொரு வருடமும் எடுப்பது வழக்கம். அனைத்து ஐந்து வருட மாணவர்களும் உற்சாகமுடன் பங்கெடுத்து விடுதியே ஆட்டம், பாட்டம், விருந்து, இசை நிகழ்ச்சி, கொண்டாட்டமென 'தூள்' பறக்கும்.. 70 களின் இறுதியில் பிரசித்திபெற்ற கிழேயுள்ள பாடலான "ஒன் வே டிக்கட்" One Way Ticket (Eruption)அப்பொழுதும் விடுதியின் திறந்தவெளி அரங்கத்தில் இம்மாதிரியே பாடப்பட்டது.. சுற்றி நின்று கைதட்டி ரசித்தவர்களில் நானும் ஒருவன்..! 'பழைய நினைப்புடா பேரான்டி' என்பது போல இப்பொழுது கேட்டாலும் என் நாளங்களில் புத்துணர்ச்சி!
-
-
- 5 replies
- 1.7k views
- 1 follower
-
-
சென்ற மாதம் மதுரைக்கருகே எங்கள் கிராமத்திற்கு சென்றபோது, ஊரின் எல்லையில் "டெய்ஸி டூரிங் டாக்கீஸ்" இருந்த இடத்தை கடந்து செல்லும்போது ஏதோ ஒரு இனிமையையும், சந்தோசத்தையும் தொலைத்து விட்ட உணர்வு மேலோங்கியது. அன்று 50 பைசா கொடுத்து 'டூரிங் டாக்கீஸில்' பார்த்த அனுபவமும், சந்தோசமும் இன்று சென்னையிலும், துபாயிலும் ஐமாக்ஸ்(IMAX) திரையரங்குகளில் டால்பி அட்மாஸ்(Dolby Atmos) தொழிற்நுட்பத்திலும் ஏற்படவில்லை. 'டூரிங் டாக்கீஸில்', நமக்கு விருப்பான கதாநாயகர்களின் படத்திற்கு சென்று மண் தரையில் ஆவலுடன் எப்போது படம் திரையில் தோன்றும் என உட்கார்ந்திருக்கையில், படம் போடப்போகிறார்கள்... என்ற முன்னறிப்பாக இந்த பிரபலமான "கம் செம்டம்பர்"(Come September) இசைத்தட்டை திரைக்குப்பின்னால் ஒலி…
-
-
- 3 replies
- 1.5k views
-
-
இதுவரை.. நீங்கள் பார்த்திராத காணொளி காட்சிகள்.
-
- 0 replies
- 562 views
-
-
நம்பினார் கெடுவதில்லை.. நான்கு மறை தீர்ப்பு..! நாலுவேலி நிலம்(1959) படத்தில் வரும் இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் பால்ய வயது நினைவுகளும், சிறுவயதில் இலங்கை வானொலி எப்படி எம்மை இனிமையான பாடல்களால் வசீகரித்தது என்ற எண்ணமும் மேலோங்கும்.. யாழ் களத்தில் 1955 முன் பிறந்தவர்களின் நினைவில் இப்பாடல் நிச்சயம் குடிகொண்டிருக்கும்..! என்ன இனிமையான நாட்கள் அவை..! "இந்த மாநிலத்தை பாராய் மகனே..! உந்தன் வாழ்க்கைதனை உணர்வாய் மகனே.!!"
-
- 0 replies
- 6.3k views
- 1 follower
-
-
100 ஆண்டுகளுக்கு முன்னர்... மதுரையில் எடுக்கப்பட்ட, பலசரக்கு கடையின் நிழற்படம். தமிழகத்தில் இயக்கப்பட்ட, முதல் அரசு பேருந்து. சேலம் - தஞ்சாவூர். 1969.
-
-
- 1 reply
- 1.5k views
-
-
அனுபவித்ததுண்டா..? இளமைக்கால நினைவுகள் பற்றிய புகைப்படங்களை பார்க்கும்போது, முகத்தில் நம்மையும் மீறி புன்முறுவலும், "..ச்சே..! அக்காலத்திலேயே இருந்திருக்கலாம்..! என்ன இனிமையான நாட்கள் அவை..!!" என மனதில் ஏக்கம் மீள்வதுண்டு.. அவற்றின் இரைமீட்டல்கள் இங்கே..
-
- 0 replies
- 793 views
-