- Open Club
- 57 members
- Rules
ரசித்தவை

72 topics in this forum
-
தேவராஜ்-மோகன் இயக்கத்தில் உருவான "உறவாடும் நெஞ்சம்" படத்தில் வந்த மீசை அரும்பும் கல்லூரி பருவத்தில் கேட்ட பாடல் இது.. மனதை வசீகரிக்கும் இசை..திரும்பத் திரும்ப காசெட் ரெக்கார்டரில் கேட்ட பாடல்.. இசைஞானியின் ஆரம்பகால பாடல்களில் பிரசித்தி பெற்றவைகளில் இதுவும் ஒன்று..! இந்தப் பாடலின் காணொளியை யுடுயூபில் தேடியபோது இந்தக் காணொளிதான் கிடைத்தது..!! பாடலுக்காகவே பார்க்கலாம்..
-
- 2 replies
- 813 views
- 1 follower
-
-
இளங்காற்று வீசுதே... இப்பாடலை கேட்கும்போதெல்லாம் அரசுப்பணியின் ஆரம்ப காலங்களில், தேனி மாவட்டத்தில் கம்பம், போடி, வருசநாடு, உடங்கல், பெரியகுளம் போன்ற மலையடிவாரப்பகுதிகளில், இளங்காளையாய் சக அலுவலர்களுடன் திட்டப்பணிகளுக்காக சுற்றித் திரிந்த பசுமையான நினைவுகளை மீட்டுச் செல்லும்.. இப்பகுதிகளைப் பார்த்து இப்போ பல வருசமாச்சுது.. போடி, கம்பம் பள்ளத்தாக்குகளின் சுழல்காற்றின் வாசத்தில், இவ்விளங்காற்றும் தவழட்டும் இனிமையாய்..!
-
-
- 2 replies
- 1.7k views
- 1 follower
-
-
வழக்கமான திருமண காணொளிகளை பார்த்திருப்போம்.. "அடச் சே..! இவ்வளவுதானா..?" என அலுத்திருப்போம்..! சிலர் வித்தியாசமான முறையில் முயற்சித்திருப்பர்... அவ்வகையில் இந்தக் காணொளி தெலுங்கில் இருந்தாலும் சற்று ரசிக்கக் கூடியதுதான்..!! (கீழேயுள்ளது திருமணக் காணொளிதானா? என்ற ஐயப்பாடும் உண்டு..)
-
-
- 4 replies
- 704 views
- 1 follower
-
-
தாயின் நம்பிக்கை.. குழந்தையின் மீதான தாயின் நம்பிக்கையை பற்றிய அருமையான சொற்பொழிவு..!
-
- 1 reply
- 432 views
-
-
இந்த காணொளியில் வரும் தம்பி யாரென தெரியாது..! ஆனால், இவர் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டின் சென்னையில் இறங்கி, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, தமிழ் தாய்நாட்டின் பூமியை தொட்டு வணங்கியபோது நேசத்தில் கண்கள் கலங்கியது உண்மை. 💔 வாழ்க வளமுடன்..! 🙌 வெகுளி மனதோடு செங்கல்பட்டு அருகேயிருக்கும் கிராமத்து கடைகளிலும், வீதியோரம் செல்பவர்களோடும் ஈழத்து தமிழில் பேச முயலும்போது அவர் அனுபவித்த சுகமான சிரமங்கள் அலாதியானது. (சில வருடங்களுக்கு முன் துபை வந்த பாஞ் மற்றும் அவரின் துணைவியாரிடமும் நான் தமிழக தமிழில் பேச, அவர்கள் ஈழத்து தமிழில் பேச, நாங்கள் தடுமாறிய நொடிகளின் இனிமையான தருணங்களை நினைத்து இன்னமும் ரசிக்கிறேன்..!) காணொளி முடிவில், ஒரு அம்மா "என்னையும…
-
-
- 21 replies
- 2.2k views
- 1 follower
-
-
சில நாட்களுக்கு முன், யாழ்கள உறவு திரு.பாஞ் அவர்கள் இந்தக் காணொளியை வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தார்.. காணொளி பாடலை திரும்ப திரும்ப கேட்டு ரசிக்கும்படி அமைந்திருப்பது சிறப்பு.. பொறுமையாக கேட்டால் மெய்மறந்து ரசிக்கலாம்..!
-
- 1 reply
- 716 views
- 1 follower
-
-
இன்று தற்செயலாக இந்தக் கவிதையை யாழ்க் களத்தில் பார்க்க நேர்ந்தது. இதை ரசிகை என்ற அம்மணி பதிந்திருந்தார். என்னைக் கவர்ந்திருந்ததால் மீள் பதிவு இது..! ரசிகைக்கு நன்றி. அன்னை ஒரு பிறவி தருவாள் அடுத்தடுத்து பல பிறவி.... உன் மேல் ஆசை கொண்டவள் தருவாள். மண்ணில் தன் வாழ்வு முடியும் வரை உன்னை சுத்தி சுத்தியே வந்து.. உனக்கு முன்னமே தான் சாக நினைப்பாள் தன்னை உனக்கு தந்தவளை... தரணியே நீதான் என்று வழ்பவளை.. தருணம் கிடைக்கும் போதெல்லாம் நாய் பேய் என்று நாக்கிழந்து பேசும் மனிதா ஒரு வேளை அவளுக்கு முதலாய் உன் ஆவி பிரிந்தால் உண்மையாய் உனக்காய் அழ உலகில் ஒருத்தி அவள் மட்டுமே இருப்பா…
-
- 0 replies
- 874 views
- 1 follower
-
-
சென்னை மாமல்லபுரத்தில், உலகின் 188 நாடுகளிலிருந்து பல்வேறு வீரர்கள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மிக பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சதுரங்க விளையாட்டினை கற்பித்து மாநில அளவிலும், தேசிய அளவிலும், உலக அளவிலும் நம் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்று பதக்கங்களை வெல்லும் நோக்கத்துடன் சதுரங்கம் தொடர்பான பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கான வரவேற்பு காணொளி தற்பொழுது வெளியாகியுள்ளது.
-
-
- 18 replies
- 2.2k views
- 2 followers
-
-
மீன்கொடி பறந்தபாண்டிய நாட்டின்வான்புகழ் மதுரைஎங்கள் ஊர் ! வேப்பம்பூ எங்கள் பூ வீரம்தான் எங்கள் வாழ்வு வெற்றி ஒன்றே எங்கள் உயிர் ! இறைவன் என்றாலும் குற்றம் குற்றமே என்று நின்ற ஊர் எங்கள் மதுரை ! அபலை என்றாலும் நீதி கிடைக்கும் என்று நிறுவிய கண்ணகியின் காதை நிகழ்ந்த நகர் எங்கள் மதுரை ! வேலை சரியாகச் செய்யவில்லைஎன்றால் சொக்கன் என்றாலும் சாட்டைச் சொடுக்கு கொடுப்போம் நாங்கள்! உலகப் பொது மறை திருக்குறளை உரசிச் சரிபார்த்த சான்றோர் சங்கம் எங்களூர் தமிழ்ச் சங்கம் ! நீதிக்குத் தலை கொடுத்த நெடுஞ்செழியன் ஆண்ட மதுரை எங்கள் மதுரை ! முத்துடைத்து எங்கள் நாடு முகம் சுழிக்கா விருந்து படைக்கும் பெயருடைத்து மல்லிகை வாசமாய் மணம் ப…
-
- 0 replies
- 474 views
-
-
இந்த தெலுகு நாட்டுப்புற பாடல், இணையத்தில் பிரபலமாகி வருகிறது.. இந்த பாடலை காப்பியடித்து பலர் ரீல்ஸ் வெளியிட்டும் வருகின்றனர். நேரமிருக்கும்போது கேட்டுப் பாருங்கள்..
-
-
- 4 replies
- 664 views
- 1 follower
-
-
இதர் ஆவோ...! தமிழ் நாட்டில் அந்நியநாட்டு மொழியாம் 'இந்தி'யை திணிக்க முயலுகையில், நம் பார்போற்றிய கான்ராக்டர் "நேசமணி", இந்தி சொல்லித்தரும் பாங்கை இங்கே பார்க்கலாம்..!
-
- 0 replies
- 800 views
-
-
சில மாதங்களுக்கு முன் கிளிநொச்சி சந்தையில் படமாக்கப்பட்ட நாட்டுப்புற பாடல் காணொளியை பார்த்தது முதல் அடுத்து ஏதாவது ஈழத்து மண் வாசனையுடன் கிராமிய பாடல் எதுவும் இணையத்தில் உள்ளதா..? என தேடியபோது கிடைத்தது கீழேயுள்ள பாடல். பால்ய வயதில் கிராமத்து வயல்களில், ஓடைகளில் தோழர்களுடன் சட்டையில்லாமல் விளையாடிய எனது அனுபவம்.. கனாக் காலங்கள்..! இப்பொழுது கிராமத்திற்கு சென்றால் ஏக்கத்துடன் நினைத்துக் கொள்வதுண்டு. அக்காலத்தை இரைமீட்டிய பாடல் இது..!
-
- 0 replies
- 614 views
-
-
'நானும் பாட்டுப் பாடுறேன் பேர்வழி'யென அஸ்ட கோணலாய் ஆடி பந்தா காட்டும் சில தன்னார்வ பாடகர்களுக்கிடையே இந்தக் காணொளியில் வருபவர் எளிமையாக ஆர்ப்பாட்டமில்லாமல் நன்றாக பாடியுள்ளார். முகச்சாயலில், இவர்கள் ஈழத்தை சார்ந்தவராக இருக்கலாமென தோன்றுகிறது..!
-
-
- 12 replies
- 1.8k views
- 1 follower
-
-
"நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு.. பகை வந்த போது துணை ஒன்று உண்டு.. இருள் வந்த போது விளக்கொன்று உண்டு.. எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு.. உண்மை என்பது எங்கும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும்.. நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்..!" கவிஞர் வாலியின் பாடல் வரிகளில் பிடித்த ஒன்று.. இந்தக் காணொளியை யூ டுயூபில் காண நேர்ந்தது.. பாடகர் நன்றாகவே பாடியுள்ளார்..!
-
-
- 4 replies
- 710 views
-
-
இரைமீட்டல்.. பொறியியற் கல்லூரியின் இறுதியில் படிக்கும்பொழுது... காலை ஏழே முக்கால் மணி வாக்கில் மாயவரத்திலிருந்து வரும் புகைரத வண்டி, சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று பல்கலைக்கழக மாணவர்களை இறக்கிவிட்டுச் செல்லும்.. அடுத்த சில நொடிகளில் கடலூரிலிருந்து வந்து நிற்கும் மாணவர்களின் ரயில்.. ரயில் நிலையத்தின் எல்லையிலேயே எம் பொறியியற் கல்லூரி அமைந்துள்ளது. காலை 08:10 க்கு கல்லூரி வகுப்புகள் ஆரம்பிக்கும்.. ஆனால் நாங்கள் 07:30 மணிக்குள் விடுதியின் உணவகத்தில் உணவருந்திவிட்டு, விடுதியின் வாசலில் 07:50 மணிக்கு சரியாக வந்து அமர்ந்துவிடுவோம்..! அப்புறமென்ன..? கல்லூரி மாணவ, மாணவிகள் பட்டாளம், பல்கலைக்கழகத்தை நோக்கி வண்ண வண்ண மாணவியரோடு ஊர்வலமாக செல்லும்.. It'…
-
- 0 replies
- 1.3k views
-
-
சில பாடல்களில், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர் இருவரும் இணைந்து பாடலை உருவாக்க அவர்கள் பட்ட கடின உழைப்பை நடிகர்கள் உணர்வுகளை திரையில் பிரதிபலித்து மக்களின் அங்கீகாரத்தை பெற்று வெற்றி பெறுவது மிக அரிதாக அமையும்..! சில நேரம் சிவாஜி கணேசனின் மிகைப்படுத்தபட்ட நடிப்பு நம்மை சோதித்தாலும், இந்தப் பாடல் காட்சியில் சிவாஜியின் பாடலுக்கேற்ற உடல் மொழிகளும், உதட்டசைவும், சிகரட்டை அனாசயமாக ஊதித் தள்ளிக்கொண்டே அலட்சியமாக நடந்து சென்று பாடியிருப்பதும் மிக அருமை.. இந்தப்பாடலுக்கு பாடகர், இசையமைப்பாளர், நடிகர் ஆகிய மூவரின் பங்களிப்பும் ஒரு புள்ளியில் சேர்ந்து சிறப்பாக மிளிர்கிறது. என்னை மிகவும் கவர்ந்த டி.எம்.எஸ் பாடல்களில், இப்பாடல் மிக முக்கியமானது.
-
-
- 3 replies
- 1.4k views
-
-
வேலை களைப்பிற்கிடையே நேற்று பார்த்து ரசித்த பாடல்.. பொடுசுகளின் குரலும், உடல் பாவங்களும் அசத்தல்..!! 💯 இறுதியாக இந்த பாடல் வரிகள்.. "கட்டுப்பாட்ட மீறாமே.. சட்ட திட்டம் மாறமே.. காத்திருக்க வேணும், கொஞ்ச காலம் வரையில் பிறகு கல்யாணம் ஆகிவிட்டால், ஏது தடை? ஏது தடை? மாமா மாமா மாமா..!" ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்.. ஒல்டு ஈஸ் கோல்ட்..! 😍
-
- 0 replies
- 348 views
-
-
வாட்ஸ் அப்பில் வந்த அருமையான செய்தி: ஐந்து மாநிலங்களின் கழிவுகளை சுமந்தாலும் கங்கைதான் புனித நதி, காவிரி அல்ல! ஐவரைக் கலந்தாலும் பாஞ்சாலிதான் பத்தினி, கண்ணகி அல்ல! பல மொழிகள் கலந்திருந்தாலும் இந்தியும், சமற்கிருதமும்தான் உயர்ந்தவை, தமிழ் அல்ல! உலகின் முதல் மாந்தனாக இல்லாத போதும் ஆரியனே உயர்ந்தவன், தமிழன் அல்ல! மனித வாழ்வியலுக்கான உலகப் பொதுமறையாக போற்றப்பட்டாலும் மகாபாரத, இராமாயண புராணப் புரட்டுகளே உயர்ந்தவை, திருக்குறளோ, சங்க இலக்கியங்களோ அல்ல! எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ஆரிய இந்துத்துவா கழிசடைகள் ஆளும் இந்தியாவின் பார்வை இதுதான்! இது மாறாது, தமிழினம் இதை உணர்ந்துள்ளது! ஆகையால்தான் தமிழ்த்தேச விடுதலையே தமிழ்த்தேசியம் என்று இறுதி செய்துள்ளது ந…
-
- 0 replies
- 382 views
-
-
ஏறக்குறைய 47 வருடங்களுக்கு முன் சொந்த கிராமத்தை விட்டு கல்லூரி வாசலை தொட்ட நேரம் வந்த இந்தப்படம் "அலைகள்" (1973). அதிகம் கவனத்தை பெறாவிட்டாலும், இதில் இடம்பெற்ற இந்தப் பாடல் தமிழகத்திலும், ஈழத்திலும் மிகப் பிரபலமானது.. களைப்புடன் வீடு தேடி வந்து படுக்கையில் விழும்போது, இம்மாதிரி பாடல்களே மனதிற்கு அருமருந்து..! தமிழில் கர்நாடக நடிகர், விஷ்ணுவர்த்தன்(நடிகை பாரதியின் கணவர்) நடித்த முதல் படம் என நினைக்கிறேன். பாடகர் ஜெயச்சந்திரனின் இனிமையான குரலில், பொன்னென்ன பூவென்ன கண்ணே..! உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே.. ஒரு கல்யாண பெண்ணாக உன்னை, புவி காணாமல் போகாது பெண்ணே..!
-
- 0 replies
- 868 views
- 1 follower
-
-
என் இதயத்தில் தாக்குதல்.. இந்தோனிசியாவின் பாப் பாடகி 'சிட்டா சிட்டட்டா'வின் பாடலுக்கு நடனமாடும் குழந்தைகள்..! So cute..
-
- 0 replies
- 389 views
-
-
ரொம்ப நாட்கள் கழிந்து, இன்று தீபாவளிக்காக கேட்ட ஜிக்கியின் இனிமையான பாடல்.. என்னை அக்காலத்திற்கே இழுத்துச் சென்றது..!
-
- 1 reply
- 607 views
- 1 follower
-
-
பிரதமர் மோடி இந்த நாட்டுக்கு தேவையா? காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது விடயமாக இன்றைய நியூஸ்7 தொலைக்காட்சி விவாதத்தில் 'வழக்கறிஞர் பிரசன்னா'வின் சில கருத்துக்கள் கவர்ந்ததன.. அவற்றில் இது ஒன்று..
-
-
- 1 reply
- 999 views
-