பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
தொழூஉப் புகுத்தல் - 43 https://app.box.com/s/hque5sn1x55esq8fn1ine0co8p0fnb2q நீ நீங்கு ! கன்று சேர்ந்தார் கண் கத ஈற்று ஆ சென்றாங்கு வண் கண்ணள் ஆய் வரல் ஓம்பு! யாய் வருக ஒன்றோ! பிறர் வருக! மற்று நின் கோ வரினும் இங்கே வருக! தளரேன் யான் நீ அருளி நல்க பெறின் (முல்லைக் கலி: 611:08-12) பொருள் இளம் கன்றைஎவர் நெருங்கினாலும் தாய்ப்பசு விரட்டி விரட்டித்தாக்கும். என் பின்னால் நீ தொடர்ந்து வராதே ! கடும் சினத்தொடு என் ஆயி வருகிறாள் உன்னைக் காத்துக்கொள் என்று எச்சரிக்கை செய்கிறாள் ஒரு பெண். உன் தாய் வந்தாலும் வேறு எவர் வந்தாலும் வரட்டும்! எனக்கு ஒன்றுதான். உன் அரசனே வந்தாலும் இங்கே வரச்சொல்! நான்அஞ்ச மாட்டேன். நீ மட்டும் என்னை விரும்புவதாக ஒத்துக் கொண்ட…
-
- 0 replies
- 460 views
-
-
https://app.box.com/s/tiq0mpoy4ockv05yph6nltobi0nsgusq தொழூஉப் புகுத்தல் - 42 தொழுவினுள் கொண்ட ஏறு எலாம் புலம் புகத் தண்டாச் சீர் வாங்கு எழில் நல்லாரும் மைந்தரும் மல்லல் ஊர் ஆங்கண் அயர்வர் தழூஉ (முல்லைக்கலி 104: 60-62) தம் புல ஏறு பரத்தர உய்த்த தம் காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர் இன்புற்று அயர்வர் தழூஉ (முல்லைக்கலி 106: 31-33) பொருள்:- முல்லைக் கலியில் ஏறு தழுவுதல் இல்லை. காதலர்கள் தழுவுவது நிறையவே இடம் பெற்றுள்ளது. உரையாசிரியர்கள் ஆரிய வைதிகத்தைத் தழுவி உரைசெய்த படியால் தெரியாமல் ஏறுகளையும் தழுவி விட்டனர் போலும்! இதனை நுட்பமாக ஆய்வு செய்து கழுவி விட வேண்டியது தமிழ் அறிஞர்களின் கடமை.
-
- 0 replies
- 503 views
-
-
https://app.box.com/s/wgp9l95fcza3ubmxfcnqgk8w9hx4s3yb தொழூஉப் புகுத்தல் - 41 தண்ணுமைப்பாணி தளராது எழூஉக பண் அமைஇன் சீர்க் குரவையுள் தெள் கண்ணித் திண்தோள் திறல் ஒளி மாயப்போர் மாமேனி அம்துவர் ஆடைபொதுவனோடு ஆய்ந்த முறுவலாள் மென் தோள் பாராட்டிச் சிறுகுடி மன்றம் பரந்தது உரை (முல்லைக் கலி 102: 35-40) போர் ஏற்று அருந்தலை ஏறுஅஞ்சலும் ஆய்ச்சியர் காரிகை தோள் காமுறுதலும் இவ்விரண்டும் ஓராங்குச் சேறல் இலவோ எம் கேளே! கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் சொல்லும் சொல் கேளா அளை மாறியாம் வரும் செல்வம் எம் கேள்வன் தருமோ? எம் கேளே (முல்லைக் கலி 106:40-45) பொருள்:- தளராத இசையோடு ஒன்றிய ஒரு பெண் எந்த வீரனை விரும்புகிறாள் என்பது அவனது உடல் மொழியாலும், குரவ…
-
- 0 replies
- 683 views
-
-
https://www.youtube.com/watch?v=Z_d8BFQ1DIc
-
- 0 replies
- 700 views
-
-
உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது ! அது மொரீசியசு (Mauritius) (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2, ௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.5 தமிழில் ௫) இடம் பெற்றிருப்பதை இப்படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரிசியசின் பல பகுதிகளில் ஏறக்குறைய 75,000 தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்கள் தங்களை தமிழர்கள் எனத் தெரிவித்துள்ளனர். இவர்களில் 54, 000 தங்களது தாய்மொழி தமிழ் எனத் வாழ்கின்றனர்.. இவர்களில் 3,650 பேர் மட்டுமே தங்கள் வீட்டில் தமிழை அதிகமாகப் பேசுவதாகவும், …
-
- 3 replies
- 1.5k views
-
-
-
பின்வரும் இரண்டு வசனங்களுக்கும் கருத்தில் என்ன வித்தியாசம்? இரண்டு வசனத்திலும் ஒரே சொற்கள்தான் உள்ளன ஆனால் ஒழுங்கமைப்பு வேறு. வசனம் 1: இறுதியில் அவன் தான் வெல்வான் வசனம் 2: அவன் இறுதியில் தான் வெல்வான்
-
- 6 replies
- 823 views
-
-
தொழூஉப் புகுத்தல் - 40 https://app.box.com/s/sbliny1zot6nfh8k1ajvchpqxsmh3avh அரும் தலை ஏற்றொடு காதலர்ப் பேணி கரும்ம்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும் ஏற்றவர் புலம் கெடத் திறை கொண்டு மாற்றாரைக் கடக்க எம் மறம்கெழு கோவே! (முல்லைக்கலி 106: 47-50) பொருள்:- தை முதல் நாளில் பிறந்த காளைக்கன்று வளர்ந்து போர்ப் பயிற்சி பெற்றுள்ளது. காதலனையும் தேர்வு செய்தாயிற்று. காளை காதலன் வரிசையில் காடும் போற்றுதற்குரியது ஆகிறது. பெரு வேந்தர்களுக்கு ஏறுகளைத் திறையாகத் தரும் வழக்கம் இருந்துள்ளது. அதனோடு தொடர்பு உடைய ஏதோ ஓர் அரிய அகச்செய்தி இதனுள் புதைந்து கிடக்கிறது. இது முற்றிலும் உயர் ஆய்வுக்கு உரியது. முல்லைக் கலியில் மிகப்பெரிய செய்தியைத் தாங்கியுள்ள மிகச்சிறிய பாடல்…
-
- 0 replies
- 542 views
-
-
தொழூஉப் புகுத்தல் - 39 https://app.box.com/s/x8zuxwnvl9cwoxi5gz26qs7eiyjfyvhu மணி வரை மருங்கின் அருவி போல அணி வரம்பு அறுத்த வெண் கால் காரியும் மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்ம்பு போல் வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும் கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல் வளையபு மலிந்த கோடு அணி சேயும் பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து அரிமாவும் பரிமாவும் களிறும் கராமும் பெருமலை விடர் அகத்து ஒருங்குடன் குழீஇ படுமழை ஆடும் வரை அகம் போலும் கொடி நறை சூழ்ந்த தொழூஉ (முல்லைக்கலி 103: 11-21) பொருள்:- கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்துக் காளைகள் பலவும் களமாடும் காட்சி சிங்கமும், குதிரையும், யானையும், முதலையும் மலை இடுக்குகளின் இடைவெளியில் ஒன்று கூடி பருவமழை அடித்…
-
- 0 replies
- 493 views
-
-
தொழூஉப் புகுத்தல் - 38 https://app.box.com/s/9bt4976dpxbb8gl4f7k800ctu6jt5c43 மெல் இணர்க் கொன்றையும் மென் மலர்க் காயாவும் புல் இலை வெட்சியும் பிடவும் தளவும் குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும் கல்லவும் கடத்தவும் கமழ்கண்ணி மலைந்தனர் பல ஆன் பொதுவர் கதழ்விடை கோள் காண்மார் முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லர் பெருமழைக் கண்ணர் மடம் சேர்ந்த சொல்லர் கடரும் கனம் குழைக் க்ஆதினர் நல்லவர் கொண்டார் மிடை (முல்லைக்கலி 103: 1-9) பொருள்:- கொன்றை மலர், காயாம்பூ, வெட்சி, பிடவம், தளவம், கஞ்சா, குருந்த மலர், கோடல், பாங்கர் போன்ற மணமுள்ள மலர்களைக் கண்ணியாகத் தொடுத்து ஏறுகளோடு மோதும் வீரர்கள் அணிந்து கொண்டனர். அழகிய இளம் பெண்கள் மேடைகளில் இடம் பிடித்தனர். '…
-
- 0 replies
- 453 views
-
-
தொழூஉப் புகுத்தல் - 37 https://app.box.com/s/x3sldzhrfoaypkbbb9jwj52ldfidzctv முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி நறையோடு துகள் எழ நல்லவர் அணி நிற்பத் துறையும் ஆலமும் தொல்வலி மரா அமும் முறையுளிப் பரா அய்ப் பாய்ந்தனர் தொழூஉ (முல்லைக்கலி 101:10-14) இரும் புலித் தொகுதியும் பெருங் களிற்று இனமும் மாறு மாறு உழக்கியாங்கு உழக்கிப் பொதுவரும் ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ விட்டனர்! விட்டாங்கே மயில் எருத்து உறழ் அணிமணி நிலத்துப் பிறழப் பயில் இதழ் மலர் உண்கண் மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்றுத் தாதுஎரு மன்றத்து அயர்வர் தழூஉ (முல்லைக்கலி 103: 56, 62) பொருள்:- ஆற்று நீர்த்துறை, பெரிய ஆலமரம், பழமையான மரங்கள் உள்ள இடங்கள…
-
- 0 replies
- 521 views
-
-
செம்மொழியால் தமிழ் கண்ட நன்மை... 'செம்மொழியான தமிழ் மொழியே' என்ற பாடல் சிலருக்கு சங்க நாதமாகவும், சிலருக்கு சகிக்க முடியாத இரைச்சலாகவும் பாடப்பட்டு, 5 வருடம் முன்பு தொடங்கப்பட்ட செம்மொழி மாநாடு சாதித்தது என்ன ? தமிழ் செம்மொழி ஆன பின், 'ஆகா... ஓஹோ...!' என வானுயர குதித்தார்கள். இனி தமிழுக்கு ஏற்றம்தான் என்றார்கள் .கண்டது ஏமாற்றம் தான். தமிழை அறிவித்த பின் அப்போதைய காங்கிரஸ் அரசு மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளையும் அறிவித்து, தமிழ் மொழிக்கு செம்மொழி என்று தனி பெருமை ஒன்றும் கிடையாது என்பது போல் குறுக்கி விட்டார்கள். முந்தைய காங்கிரஸ் அரசு மலையாள மொழிக்கும் தமிழின் சேய் மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளாம் முதலான மொழிகள் செம்மொழித் தகுதி பெறுகின்றன என அறிவித்ததால் …
-
- 8 replies
- 1.5k views
-
-
இன்றையத் தமிழக அரசு 14.04.2015-ல் கொண்டாடிய தமிழ்ப் புத்தாண்டு பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சித்திரை முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு, அரசு விடுமுறை, மக்கள் வரிப் பணத்தில் பரிசுகள், விழாக்கள், விருதுகள் என்று இவ்வாண்டின் தமிழ்ப் புத்தாண்டினைச் சட்டப்படி கொண்டாடியிருக்கிறது இன்றையத் தமிழக அரசு. அதனை நம்புகிறவர்கள் மகிழ்ந்திருப்பார்கள். மறுப்பவர்கள் கறுவிக் கொண்டு இருக்கிறார்கள். அறிஞர்கள் அழகாக அமைதி காத்து வருகிறார்கள். ஊடகங்கள் இது பற்றிக் கூச்சல் எழுந்து விடாமல் பார்த்துக் கொள்கின்றன. திராவிடக் கழகத்தினர் தாலியை முன் வைத்து மக்களைத் திசை திருப்பி, சித்திரை மீது கல்விழாமலும் எக்குத்தப்பாகச் சொல்விழாமலும் காத்து வருகின்றனர். வாழ்த்துச் சொன்னவர்களை…
-
- 0 replies
- 552 views
-
-
இதை படித்த பிறகு தமிழன் என்ற பெருமையில் உடம்பு சிலிர்த்து போகும். அதிக நீளம் என கருதி நம் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பயணித்து விடாதீர்கள். தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றே போதுமானது… இந்திய விடுதலைக்காக நேதாஜி மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டனர் “இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்” என்று நேதாஜி அறைக்கூவல் விடுத்தார். அந்த அறைக்கூவல் நம் வீர இனத்தின் காதுகளில் விழ, தமிழ்நாட்டிலும் மலாயாவிலும் பர…
-
- 2 replies
- 935 views
-
-
தொழூஉப் புகுத்தல் – 32 https://app.box.com/s/c34k102ifqhbd29184h6dr58owli7cg3 https://app.box.com/s/c34k102ifqhbd29184h6dr58owli7cg3 எல்லா! இது ஒன்று கூறும் குறும்பு இவர் புல் இனத்தார்க்கும் குடம் சுட்டவர்க்கும் எம் கொல் ஏறூ கோடல் குறை எனக் கோவினத்தார் பல் ஏறு பெய்தார் தொழூ உ (முல்லைக் கலி. 107: 1,4) விலை வேண்டார் எம் இனத்து ஆயர் மகளிர் கொலை ஏற்று கோடு இடைத் தாம் வீழ்வார் மார்பின் முலை இடைப் போலப் புகின் (முல்லைக் கலி. 103:71,73) பொருள்:- கோவினத்தார் தம்மை உயர்வாகக் கருதிக்கொண்டு புல்லினத்தார், குடம்சுட்டவர் ஆகியோர் தமது ஏறுகளை வென்று அதன் வழியே கோவினத்து ஆயர் மகளிரை அடைந்து விடக் கூடாது என்று திட்டமிடுகின்றனர். அதற்காக மிகுதி…
-
- 1 reply
- 654 views
-
-
தொழூஉப் புகுத்தல் - 36 https://app.box.com/s/36iyxisru0pdpj4nyat7w6f99cm1oldn தளி பெறு தண்புலத்துத் தலை பெயற்கு அரும்பு ஈன்று முளிமுதல் பொதுளிய முன் புற பிடவமும் களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று ஞெலியுடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும் மணிபுரை உருவின காயாவும் பிறவும் அணிகொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன் மாறு எதிர் கொண்ட தம் மைந்துடன் நிறுமார் சீரு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ ஏறு தொழூஉப் புகுத்தனர் இயயைபு உடன் ஒருங்கு (முல்லைக் கலி 101: 1-9) பொருள்:- முல்லைக் கலியின் முதற் பாடல், தளியென்பது கோயில் ஆகிய அரண்மனை. அங்கு பெய்யும் முதல் மழை நாட்காட்டியின்படி அமையும். அன்று பிடவ மலர் அரும்பு விடும். அதைச் சேர்த்து வைத்துக் கண்ணியாக ம…
-
- 0 replies
- 440 views
-
-
சமீபத்தில் வெளியான "A concise History of South India" ஆசிரியர் நொபுரு கராசிமா என்னும் புத்தகத்தில் திராவிட தெலுங்கர் திரு. சுப்பராயலு என்பவர் கல்லணை கட்டியது கரிகாலன் அல்ல. வெள்ள நீர் வடிவதற்குண்டான அமைப்பையே கரிகாலன் செய்தான் என் கிறார். இது நிகழ்கால தமிழரின் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாக தமிழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது மிக அவசியம். கரிகாலன் தான் கல்லணையை கட்டினான் என்பதற்குண்டான ஆய்வுகள், அதாரங்களை தமிழர்கள் பதிவிடுங்கள். http://www.thehindu.com/books/books-reviews/fresh-perspectives-on-south-indian-history/article6926001.ece
-
- 17 replies
- 24k views
-
-
ஒலிபெயர்ப்புப்போர்வையில் தமிழைச் சிதைக்கும் முயற்சி: அதிர்ச்சியில் தமிழறிஞர்கள்... கணிப்பொறியில் தமிழில் ஓரிடத்தில் அடிப்பதை அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரி புரிந்துகொள்ள உருவாக்கப்பட்டது ஒருங்கு குறி (யூனிகோடு). இதனைப் பயன்படுத்திக் கிரந்தத்தைப் புகுத்தச் சிலர் முயன்றனர். தமிழ்க் காப் புக்கழகமும் பிற தமிழமைப்புகளும் தமிழறிஞர்களும் கடுமையாக எதிர்த்த தால் இது கைவிடப்பட்டது. உண்மையிலேயே கைவிடப்பட்டதா, அல்லது சமயம் பார்த்து நுழைய காத்து இருக்கிறதா என்ற ஐயம் தமிழறிஞர்களிடையே இன்னமும் இருக்கிறது.. இது தொடர்பாக தமிழ்க் காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவனிடம் பேசினோம். கணிப்பொறி மூலம் ஒருங்குகுறி என்னும் சீருருவைப் பயன்படுத்தித் தமிழைச் சிதைக்கும் முயற்சிகள் ஓய்ந…
-
- 1 reply
- 891 views
-
-
தொழூஉப் புகுத்தல் - 35 https://app.box.com/s/m3vf15ei1qxu28qa1cmbl7zptgem8xot பார் முதிர் பனிக்கடல் கலங்க உள் புக்கு சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல் (திருமுருகு 45-46) வென்வேல் விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் ஓரியர் திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக இடைகழி அறை வாய் நிலை இய மலர் வாய் மண்டிலத்தன்ன... -அறத்துறை நின்னே! (புறம் 175: 5-9) பன்மீன் இமைக்கும் மாக விசும்பின் இரங்கு முரசின் இனம் சால் யானை நிலம் தவ உருட்டிய நேமியோரும் (புறம் 270: 1-3) கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும் காவற் சாகாடு உகைப்போன் (புறம் 185: 1-2) பொருள்: சூர்ப்பு எனப்படும் வளிமண்டல உள் இழுப்பினால் உலக உருண்டையின் ஆட்டை தளர்வதைக் கண்டு அறிந்து, அவ…
-
- 0 replies
- 646 views
-
-
https://app.box.com/s/3rv2nsuu2epb7t2rhkn7v7zrw62u5i12 தொழூஉப் புகுத்தல் - 34 பாடு இமிழ் பரப்பு அகத்து அரவு அணை அசை இய ஆடுகொள் நேமியான் பரவுதும் (முல்லைக் கலி: 105: 70-71) சுடர் திகழ்பு ஒல்லா மயலொடு பாடிமிழ்பு இழிதரும் மடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல் துப்பு (பதிற்றுப்பத்து 62: 6-9) பாடு இமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எமிலி (முல்லைப்பாட்டு 4-5) நேர்கொள் நெடுவரை நேமியின் தொடுத்த சூர்புகல் அடுக்கத்து ப்ரசம் காணினும் ஞெரேகரன நோக்கல் ஓம்புமின் உரித்தன்று! நிரைசெலல் மெல் அடி நெறி மாறு படுகுவிர் (மலைபடுகடாம் 238:41) நீல் நிற ஒரி பாய்ந்தென நெடுவரை நேமியின் செல்லும் நெய்க்கண் இறால் (மலைபடுகடாம் 524-525) …
-
- 0 replies
- 565 views
-
-
https://app.box.com/s/e2kbetc4yvbm8peiff1sqcfsfoqblqtl தொழூஉப் புகுத்தல் – 33 தரு மணல் தாழப் பெய்து இல் பூவல் ஊட்டி எருமைப் பெடையொடு எமர் ஈங்கு அயரும் பெருமணம் தனித்தே ஒழிய வரிமணல் முன்துறைச் சிற்றில் புனைந்து திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த ஒரு மணம் தான் அறியும் ஆயின் எனைத்தும் தெருமரல் கவிட்டு இருக்கோ! அலர்ந்த விரிநீர் உடுக்கை உலகம் பெறினும் அருநெறி ஆயர் மகளிர்க்கு இருமணம் கூடுதல் இல் இயல்பு அன்றே (முல்லைக்கலி 114: 12-21) பொருள்:- புதிய மணல் கொண்டு வந்து பரப்பி, வீட்டின் சுவர்களில் செம்மண் குழம்பு பூசி, பால் தரும் எருமைகளைப் பரிசாகத் தந்து, எமது பெற்றோர் கொண்டாடும் இந்தத் திருமணம் எனது மந்தில் நிற்கவில்லை! சிற்றில் புனைந்து சிறுமிகளோடு விளை…
-
- 0 replies
- 556 views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசிய அறிவு இயக்கம் நாள்: 10.04.2015 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- “மாட்டு இறைச்சி விருந்தும் தாலி கழற்றுதலும்” என்றதொரு நிகழ்வைப் பகுத்தறிவாளர்கள் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. பகுத்தறிவாளர்கள் என்றால் திராவிடர்கள் என்றும், திராவிடர்கள் என்றால் ஆரிய எதிர்ப்பாளர்கள் என்றும், அத்தகையோரே உண்மைத் தமிழர்கள் என்றும் பரப்புரை செய்து அரசியல் களத்தில் வெற்றியும் பெற்று, ஆள்வினை ஏற்றுத் தின்று கொழுத்து இன்று உண்மைத் தமிழர்களின் வாழ்வியலுக்கு நேர் எதிர் நிலையை எடுத்துத் தாலியறுப்பது ஏன…
-
- 4 replies
- 4.4k views
-
-
தொழூஉப் புகுத்தல் – 31 https://app.box.com/s/c34k102ifqhbd29184h6dr58owli7cg3 https://app.box.com/s/c34k102ifqhbd29184h6dr58owli7cg3 சொல்லுக பணி யேம் என்றார் அறைக! என்றார் பாரித்தார் மாணிழை ஆறு ஆகச் சாறு சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து நோக்கும் வாய் எல்லாம் மிடை பெறின் நேராத் தகைத்து தகை வகை மிசை மிசைப் பாயியர் ஆர்த்து உடன் எதிர் எதிர் சென்றார் பலர் (முல்லைக்கலி 102: 13-18) பொருள்:- தொழூ உப் புகுத்தல் என்பது ஒரு விழாவாகத் தொடங்குகிறது. முதலில் பெண்களைப் பாணி சொல்ல வேண்டுகின்றனர். அவர்கள் முறையாக அணியமாகி அறைக என்று ஆணையிட்ட அந்த நொடியில் பறைக் கருவியில் அடி தொடப்படுகிறது. அதற்கேற்பக் கதிரவன் பார் கோத்து இயங்கும் முறையில் பெண்கள் கணக்கிட்டு இயங்…
-
- 0 replies
- 430 views
-
-
முப்பாட்டன் முருகன் அல்ல; கணியன் பூங்குன்றன் — அ.ராமசாமி இரண்டு வாரங்களுக்கு முன் எனது சொந்தக் கிராமத்திற்கும் எனது மனைவியின் கிராமத்திற்கும் சென்று வந்தேன். இந்தக் கிராமங்களோடான உறவு முறிந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவ்வப்போது போய்வருவது வழக்கம். உசிலம்பட்டியிலிருந்து கிளம்பும் நகரப் பேருந்தில் பயணம் செய்யும் அனுபவம் ஒவ்வொரு முறையும் வேறாக இருக்கும். இந்தமுறை பேருந்தில் செல்லவில்லை; காரில் சென்றேன். பேருந்துப் பயணத்தில் நேராக எங்கள் கிராமங்களுக்குச் சென்று உறவினர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடும் வழக்கத்திற்கு மாறாகக் கைவசம் இருந்த கார் புதிய யோசனைகளைத் தூண்டியது. 30 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகளால் இணைக்கப்படாமல் வண்டிப்பாதைகளாலும் ஒற்றையடிப்பாதைகளா…
-
- 2 replies
- 2.2k views
-
-
தொழூஉப் புகுத்தல் – 30 https://app.box.com/s/iiyn4b62rd37yjr8qsslaryt6aaxce06 கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் கறங்க ஊர் எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க நேர் இதழ் நிரை, நிரை நெறி வெறக் கோதையர் அணி நிற்பச் சீர்கெழு சிலை நிலை செயிர் இகல் மிகுதியின் சினப் பொதுவர் தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த ஆர்பு உடன் பாய்ந்தனர் அகத்து (முல்லைக் கலி 105: 24-29) பொருள்:- வில்லில் நாண் ஏற்றி அம்பு பூட்டிய சிலை நிலையோடு பெண்கள் அணி வகுத்து நிற்கும் கோலம் ஒப்பிடப்படுகிறது. தாக்கணங்கு முன்னே செல்ல தாய் நிழலாகப் பின்னே தொடர, பின்னே! முன்னே! முன்னே! பின்னே! என்று பெண்கள் குரவையாட வீரர்கள் தமது கால்களால் மண்ணை உதைத்துக் கிளப்பிய புழுதியானது விசு…
-
- 0 replies
- 381 views
-