பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
வேங்கைத் திட்டம் 2.0 சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (CIS), விக்கிமீடியா இந்தியா, இந்திய விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் பயனர் குழுக்களின் உறுதுணையுடன் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளூர் வாசகர்களின் தேவைக்குத் தக்க உயர் தரக் கட்டுரைகளை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுக்கிறது. மூன்று மாதங்களுக்கு இப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு மாதமும் சிறப்பாகப் பங்களிப்பவர்களுக்குத் தனிப்பட்ட பரிசுகள் வழங்குவதுடன், ஒட்டு மொத்தமாகச் சிறப்பாகச் செயற்படுகிற விக்கிப்பீடியா சமூகத்துக்குத் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பயிற்சி முகாம் ஒன்றும் நடத்தப்படும். https://ta.wikipedia.org/wiki/விக…
-
- 0 replies
- 307 views
-
-
11-ம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு அமைப்பு" படத்தின் காப்புரிமை Google சுமார் 51 ஏக்கர் பரப்பளவை கொண்ட சிதம்பரம் நடராஜர் கோயிலின் உட்பகுதியில் விழும் மழைநீர் முழுவதையும் சேமிக்க வேண்டும் என்று கருதி அதற்கேற்றாற்போல் 11ஆம் நூற்றாண்டிலேயே கோயில் கட்டுமானம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. "சிதம்பரம் நடராஜர் கோயிலின் வடகிழக்கு பகுதியில் இரண்டாம் குலோத்துங்க சோழனால் உருவாக் கப்பட்ட திருப்பாற்கடல் என்ற குளம் தமிழக அரசால் தூர்வாரப்பட்டது. அப்போது குளத்தின் தெற்கு பகுதியில் ஒரு கால்வாய் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. …
-
- 0 replies
- 307 views
-
-
சமஸ்கிருதமாக்கப்பட்ட சொல்லை தவிர்த்து.. மீண்டும், தமிழ் சொல்லை பேசுவோம். பூவை புஷ்பமாக்கி அழகை சுந்தராக்கி முடியை கேசமாக்கி தீயை அக்னியாக்கி காற்றை வாயுவாக்கி பிணத்தை சவமாக்கி கெட்டதை பாவமாக்கி முகத்தை வதனமாக்கி அறிவைப் புத்தியாக்கி அவையை சபையாக்கி ஆசானைக் குருவாக்கி இசையை சங்கீதமாக்கி குண்டத்தை யாகமாக்கி பெரியதை மஹாவாக்கி மக்களை ஜனங்களாக்கி நிலத்தை பூலோகமாக்கி அமிழ்தை அமிர்தமாக்கி அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி ஆடையை வஸ்திரமாக்கி உணர்வற்றதை சடமாக்கி ஓவியத்தை சித்திரமாக்கி கலையை சாஸ்திரமாக்கி விண்ணை ஆகாயமாக்கி …
-
- 0 replies
- 297 views
-
-
-
- 1 reply
- 289 views
-
-
படக்குறிப்பு, சோழர் ஆட்சியில் மருத்துவமனை செயல்பட்ட திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 26 மே 2024, 08:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள தற்போதைய கால கட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் பல உள்ளன. சாதாரண தலைவலி முதல் இதயம் உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வரை மருத்துவத்துறை வெகுவாக முன்னேறிவிட்டது. நகர்ப்புறங்களில் பல மருத்துவமனைகள் 24 மணிநேரமும் இயங்குகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற மருத்துவமனைகள் இருந்தனவா? மக்கள் நோய்வாய்ப்பட்ட போது என்ன செய்த…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
-
இந்தப் படத்தில் இடது புறத்திலிருப்பது... 2000 ஆண்டுகள் பழைமையான ஒரு சிற்பம். பக்கத்தில்... இந்நாளைய புகைப்படம். இந்தக் கால இடைவெளியை கரைத்து இரண்டையும் இணைக்கும் ஒத்த அம்சம் ஒன்று இரண்டிலும் உண்டு. பொருளை நிறுக்க பயன்படும் துலாக்கோல் தான் அது. சிற்பம் சொல்லும் கதை: இருக்கையில் அமர்ந்திருப்பது சிபி சக்கரவர்த்தி. காலடியில் புறா. அடுத்து அமர்ந்த நிலையில் தொடைக்கறியை அறுத்தெடுக்கும் பணியாள். துலாக்கோலை கையில் பிடித்து தொடைக்கறியை எடைபோடுபவன். பின்புலத்தில் சிலர். இது தான் இந்த சிற்பம் விவரிக்கும் காட்சி. எடைக்கல் இல்லாமல்... பொருளை எடை போடும் ஒத்தத் தட்டு தராசு தொழில் நுட்பத்தை... ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே நமது முன்னோர்கள் பயன்படு…
-
- 0 replies
- 276 views
-
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் .க. பதவி, பிபிசி தமிழுக்காக 13 டிசம்பர் 2023 மன்னராட்சி காலகட்டத்தில் கட்டப்பட்ட, இன்று நம் கண்முன்னே காணக் கிடைக்கும் அரண்மனைகளும் கோட்டைகளும் மற்றக் கட்டுமானங்களும் சிதைந்திருக்கலாம், அழிவின் விளிம்பில் நிற்கலாம். ஆனாலும் அவை கம்பீரமானவை, காண்போரை வியக்க வைப்பவை. இவை, முன்னோர்களின் வீரத்தை, போர்த் திறனை, நிர்வாகத் திறனை, வாழ்வியலை, உணர்த்தி நிற்கும் மௌன சாட்சியங்கள். கால ஒட்டம் இந்த சின்னங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்து வந்தாலும், தன் கடைசி அடையாளம் இம்மண்ணில் உள்ளவரை இவைதம் பணியை நிறுத்தப் போவதில்லை. கோட்டை என்பது அக்கால அரசர்களால் பாதுகாப்பு காரணங்களுக்காக கட்ட…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
இலங்கையை தமிழர்கள் நேசித்தது போல, சிங்களவர் கூட நேசிக்கவில்லை. - புதுவை இரத்தின துரை. -
-
- 0 replies
- 264 views
-
-
பொன்னியின் செல்வன்: குந்தவையின் பழையாறை நகரம் இப்போது எப்படியிருக்கிறது? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LYCA/MADRAS TALKIES பொன்னியின் செல்வன் நாவலில் குந்தவை, வானதி, செம்பியன் மாதேவி ஆகியோர் வசிக்கும் நகரமாக பழையாறை நகரம் காட்டப்படுகிறது. அந்தப் பழையாறை நகரம் எங்கே இருக்கிறது? இப்போது எப்படியிருக்கிறது? பொன்னியின் செல்வன் நாவலில் தஞ்சாவூர், நாகப்பட்டனம், காஞ்சிபுரம், கடம்பூர், பழையாறை ஆகிய நகரங்கள் முக்கிய சம்பவங்கள் நடக்கும் நகரங்களாக வருகின்றன. இதில் தஞ்சைக்கு அடுத்தபடியாக கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறும் நகரமாக ப…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
சோழர்கால செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டிலுள்ள லெய்டன் பல்கலைகழத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நெதர்லாந்திலில் உள்ள இந்த லெய்டன் நகரத்தின் பெயரைத்தான் யாழ்ப்பாணத்திலுள்ள தீவுகளில் ஒன்றான வேலணைக்கு டச்சுக்கார் வைத்தார்கள். (Velanai Island (Tamil: வேலணை), also known as Leiden in Dutch, is a small island off the coast of Jaffna Peninsula in the North of Sri Lanka.) ஆனைமங்கலச் செப்பேடுகள் எனவும், Leiden Copper plates எனவும் அழைக்கப்படும் இந்தச் செப்பேடுகள், சோழ வரலாறு குறித்த முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகின்றன. இந்தச் செப்பேடுகள் இரண்டு காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. 21 ஏடுகளைக் கொண்ட முதல் தொகுதி ராஜேந்தி…
-
- 1 reply
- 250 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, இந்தத் தூம்புக் கல்வெட்டுகள் சோழர் கால நீர் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து விளக்குவதாகக் கூறுகிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலையை அடுத்த மெய்யூரிலும் தண்டரையிலும் சோழர்கள் கால தூம்புக் கல்வெட்டுகளை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கல்வெட்டுகள் பல முக்கிய வரலாற்றுச் செய்திகளைக் கூறுகின்றன. திருவண்ணாமலை வட்டம் மெய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியின் வடக்குப் பகுதியில் கல்லால் ஆன தூம்பு இருக்கிறது. தூம்பு என்பது நீர்நிலைகளில் நீரை வெளியேற்ற அமைக்கப்பட்டிருக்கும் ஒரு வகையான திறந்து - மூடும் அமைப்பு. இந்தத் தூம்பின் ஒர…
-
-
- 4 replies
- 246 views
- 1 follower
-
-
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மறைவுக்குப் பின் தமிழ்த் தேசியம் மற்றும் தமிழ்நாட்டு விடுதலை குறித்த நூல் ஒன்றும் வேளி வந்ததாகத் தெரியவில்லை. அண்மையில் முத்து திருமலை அருமையான நூல் ஒன்று வெளியிட்டிருக்கிறார். ஐம்பதுக்கு மேலான கட்டுரைகள் தாங்கிய நூல் இப்ப்பொது இலவசமாகக் கிடைக்கிறது. https://archive.org/details/tamil-book-tamil-nadu-viduthalai-independence தமிழ் நாட்டு விடுதலை இயக்கங்கள் - வரலாறும் விளக்கங்களும் (தமிழ்த் தேசியம்) Tamil Nadu Independence Movements - History and Analysis (in Tamil)
-
- 0 replies
- 244 views
-
-
தமிழர் வரலாறு: கண்ணகியும் எகிப்தின் இசிஸ் தெய்வமும் ஒன்றா? பண்டைய எகிப்திய மன்னரின் மூதாதையர் திராவிடரா? பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 1 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டைப் போன்று சேகர், சேகரன் மற்றும் ஆதிரை என்ற பெயருள்ளவர்கள் எகிப்திலும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். (சித்தரிப்புப்படம்) (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளி…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 14 ஏப்ரல் 2023 புதுப்பிக்கப்பட்டது 14 ஏப்ரல் 2025 (தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பிபிசி தமிழின் பழைய கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது) தமிழ் ஆண்டுகள் ஒவ்வொன்றும் சமஸ்கிருதப் பெயர்களைச் சொல்லியே குறிப்பிடப்படுகின்றன. அறுபதாண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் பயன்படுத்தப்படும் இந்தப் பெயர்ப் பட்டியல் தமிழ் ஆண்டுகளோடு இணைந்தது எப்படி? தமிழ்நாட்டில் ஒவ்வொரு புத்தாண்டு நெருங்கும்போதும், "தமிழ் புத்தாண்டு என்பது தை மாதம் பிறக்கிறதா அல்லது சித்திர மாதம் பிறக்கிறதா?" என்ற சர்ச்சையோடு, தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் அவை எப்போதிருந்து புழக்கத்…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
இனக்கலவரம் யூலை 1983 - ஒரு சாட்சி ஆமர்வீதிச்சந்தியில் கீழே அண்ணரின் உணவகம் மேலே நாலாம் மாடியில் எனது வசிப்பிடம். யூலை 23 இல் தெற்கின் பல பாகங்களிலும் கலவரம் உச்சமடைந்த போதிலும் இதன் முன்னர் பல இனக் கலவரங்கள் வந்தபோதிலும் எமது உணவகமோ எமது கட்டிடமோ தாக்கப் பட்டிருக்கவில்லை என்ற அதீதமான நம்பிக்கை கைகொடுக்க யூலை 24 அதிகாலை வரை நாம் இருப்பிடத்தில் இருந்து நடப்பவைகளை அவதானித்தபடி.... யூலை 24 அதிகாலையில் மொட்டை மாடியில் நின்றபடி பார்த்தபோது தெமட்டகொட பக்கமாக இருந்து சில குழுக்கள் (அநேகமான பதின்ம வயதினர்) வீதியில் இருந்த தமிழ் கடைகளை உடைத்தும் நெருப்பு வைத்தபடியும் ஆமர்வீதி சந்தி நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஆனாலும் எமக்கு எந்த பயமோ பதட்டமோ ஏற்படவில்லை. காரணம் எமக்கு கீழே ஆமர்…
-
-
- 2 replies
- 238 views
-
-
பட மூலாதாரம்,NARAYANAMOORTHY படக்குறிப்பு, 4 லட்சம் ஆண்டுகள் பழமையான கல்லாங்குழிகள் கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பழனி அருகே கிராம மக்கள் விளக்கேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த குழிகள் மனித இனத்துக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ எரக்டஸ் மனிதர்களால் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட வடிவங்கள் என்பதை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளர் நேரில் வந்து ஆய்வு செய்து உறுதி செய்து இருக்கிறார். இவற்றின் சிறப்பு என்ன? 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களின் மூதாதை இனத்தவர் பழனியில் என்ன செய்து கொண்டிருந்தனர்? இந்தக் கண…
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
செவ்வியல் தமிழ் மொழிக்கான பேரகராதி ‘தமிலெக்ஸ்’: முழு வரலாற்றுடன் ரூ.10 கோடி செலவில் ஜேர்மனி வெளியிடுகிறது Published By: Rajeeban 01 May, 2023 | 11:19 AM ஜேர்மனி அறிவியல் அறிஞர்கள் அகாடமி சார்பில், ‘தமிலெக்ஸ்’ (Tamilex) எனும் செவ்வியல் தமிழ் மொழிக்கானப் பேரகராதி வெளியாக உள்ளது. அனைத்து வார்த்தைகளின் முழு வரலாற்றுடன், ரூ.10 கோடியில் இதை ஜெர்மனி வெளியிடுகிறது. செம்மொழியான தமிழ் மொழி இலக்கியங்களின் தொகுப்புகள், மனிதகுலத்தின் சிறந்த பாரம்பரியத்திற்கு பெரும் பங்களித்து வருகின்றன. இருப்பினும் இவற்றை பற்றி இன்னும் மேற்கத்திய நாடுகள் அதிகம் அறியாமலேயே உள்ளன. இதனால், சிறப்புமிக்க செவ்வி…
-
- 0 replies
- 233 views
-
-
கூடியம் குகைகள் ( vikatan ) இதுநாள்வரை நாம் படித்துக்கொண்டிருந்த மானுட வரலாறு என்பது, ஆப்பிரிக்காவில் இருந்துதான் தொடங்குகிறது. 60 லட்சம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒரு குரங்கு இனத்தின் தொடர்ச்சிதான் மனிதர்கள். படிப்படியாக பரிணாமம் அடைந்து, நிமிர்நிலை மனிதர்கள் உருவானார்கள். வாலற்று, நிமிர்ந்து நின்ற உலகின் முதல் மானுடன் ஆப்பிரிக்காவில் தோன்றியதாகவும், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அவன் பிற நிலப்பரப்புகளுக்குப் பரவினான் என்றுமே இதுவரை படித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த வரலாற்றை மாற்றி எழுத வேண்டியிருக்கிறது. இந்தக் கற்குகைகளில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த மனிதர்கள் பயன்படுத்திய ஏராளமான கற்கருவிகள் மீட்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 231 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,YAAKKAI TRUST கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் கோவையில் காட்டுப் பகுதிக்குள் மறைந்திருக்கும் ஒரு கல்வெட்டு, முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் இருந்த ராசகேசரிப் பெருவழியையும், வணிகர்கள் மற்றும் மக்களுக்குப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டிருந்த சீருடையற்ற நிழல் படையையும் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கிறது. அது எந்தக் கல்வெட்டு? கோவை மாவட்டத்தில் கோவைப் புதுார் என்ற மாநகர எல்லைப் பகுதிக்கு அருகிலேயே சில மலைப் பகுதிகள் இருக்கின்றன. வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த காப்புக் காட்டுப் பகுதி, பாலக்காடு கணவாய்க்கு நேர் பாதையில் உள்ளது. அங்கு பாறைகள் சூழ்ந்த புதர்களுக்கு மத்திய…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
"தை மாதம் ஒரு சிறப்பான மாதம்! / Thai is a special month for Tamils!" / பகுதி / Part 01 [In English & Tamil] பொதுவாக நாட்டு வழக்கில், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற மூதுரை எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், இதில் எவ்வளவு செய்திகள் உள் அடங்கியிருக்கின்றன என்பது யாருக்கும் பொதுவாக தெரியாது. தமிழ் நிலங்களில் கார்த்திகை மாதம் வரை மழை இருக்கும். மார்கழி மாதம் வெள்ளம் வடிந்து ஆங்காங்கே குளம் போல நீர் தேங்கி இருக்கும். மார்கழி முடிந்து வரும் தை மாதத்தில் நீர் தெளிந்து விடும். தெளிவாக இருக்கும் தை மாத நீர், மக்கள் எண்ணங்களைத் தைத்துக் கொள்ளும் பளிங்கு போல இருக்கிறது. அதனால் தை என்னும் பெயர் இந்த மாதத்திற்கு வந்திருக்கலாம…
-
- 0 replies
- 230 views
-
-
பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி இந்தி 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஒன்பதாம் நூற்றாண்டில் (கி.பி 850 வாக்கில்) தெற்கு இந்தியாவில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விஜயாலயச் சோழன் எனும் மன்னர் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். சோழ சாம்ராஜ்ஜியத்திற்கான அடித்தளம் இவ்வாறு தான் நிறுவப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில் (கிபி 907 ஆம் ஆண்டு) சோழ சாம்ராஜ்ஜியத்தின் முதலாம் பராந்தக மன்னர் அரியணை ஏறி 48 ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் வந்த பலவீனமான மன்னர்களால் சோழ சாம்ராஜ்ஜியம் சரியத் தொடங்கியது. கிபி 985 ஆம் ஆண்டு முதலாம் ராஜராஜ சோழன் அரியணை ஏறியபோது சோழ சாம்ராஜ்ஜியம் மீண்டும் எழத் தொடங்கியது. முதல…
-
-
- 2 replies
- 224 views
- 1 follower
-
-
முக்கிய சாராம்சம் முசிறித் துறைமுகம் குறித்த குறிப்புகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் சங்க இலக்கியங்களில் உள்ளன 14ஆம் நூற்றாண்டில், இந்த வர்த்தக துறைமுகம் மர்மமான முறையில் காணாமல் போனது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவில் உள்ள 37 பண்பாடுகளுடன் முசிறியில் கிடைத்த தொன்மங்கள் ஒத்துப் போகின்றன தங்க ஆபரணங்கள், கண்ணாடி மணிகள், சேர மன்னர்கள் கால நாணயங்கள் போன்றவை முசிறி நகரத்தை கண்டு பிடிக்கும் முயற்சியின் போது தொல்லியல் ஆய்வாளர்களுக்கு கிடைத்தன ரோமானிய பேரரசர் அகஸ்டஸ் சீசரிடம் இருந்ததை போன்ற மோதிரம் பட்டணம் அகழாய்வில் கிடைத்துள்ளது முசிறி துறைமுகத்திற்கும், கொச்சி துறைமுகத்திற்கும…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
தை மாதம் ஒரு சிறப்பான மாதம்! / Thai is a special month for Tamils! / பகுதி / Part 03 [In English & Tamil] "ஏற்றுக உலையே! ஆக்குக சோறே!''கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக "-புறநானூறு 172[ கி மு 500 ஆம் ஆண்டை சேர்ந்தது இந்த புறநானுறு ] "உலையை ஏற்றுக; சோற்றை ஆக்குக; கள்ளையும் நிறைய உண்டாக்குக;அழகாக செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த,பாடுவதில் சிறந்த,விறலியர் மாலைகளைச் சூடுக; " அதாவது "உலையை ஏற்றுக;சோற்றை ஆக்குக"என்பது பொதுவாகக் கூறப்பட்ட பொங்கலிடும் முறையாகும். “புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து'' (சிலப். 5:68-69) எனும் இ…
-
- 0 replies
- 207 views
-