வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
ஆசியாவின் லாஸ் வேகாஸ் என்று அழைக்கப்படும் சீனாவின் நிர்வாகத்தில் உள்ள மக்காவ், கொரோனா தாக்கத்தால் வெறிச்சோடி காணப்படுகிறது. சூதாட்டங்களுக்கு பெயர் போன மக்காவ் இப்போது கொரோனாவின் ஆட்டத்தால் கதிகலங்கி உள்ளது. பெரும்பாலான கேளிக்கை விடுதிகளும், வீதிகளும் வெறிச்சோடிப் போய் உள்ள நிலையில், அரிதாக அவ்வப்போது மாஸ்க் அணிந்து வரும் சுற்றுலாப்பயணிகள் தெர்மல் கேமராக்களின் சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு 4 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்த மக்காவ் நகரில் கொரோனா தாக்குதலுக்குப் பிறகு அவர்களின் வருகை 87 சதவிகிதம் குறைந்து விட்டது. பாதுகாப்பு ஆடை அணிந்த சுகாதாரப் பணியாளர்களும், சைரன்களுடன் சுற்றும் ஆம்புலன்சுகளும் மட்டுமே இப்போது மக்காவ் நகரின் அடையாளங்களா…
-
- 0 replies
- 586 views
-
-
-எஸ்.குகன் பருவ கால மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில், கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால், தொண்டமனாறு, மண்டான், ஆவரங்கால், உப்பாறு ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில், 10 இலட்சத்து 60 ஆயிரம் இறால் குஞ்சுகள், நேற்று (02) விடப்பட்டன. இவ்வாறு விடப்பட்ட இறால் குஞ்சுகள், இன்னும் மூன்று மாதங்களில், சராசரியாக ஓர் இறால் 40 கிராம் எடை வரையில் வளர்ந்து, இந்தப் பிரதேசத்தில் உள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட மக்களுக்கு, ஏறத்தாழ 200 மில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டிக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/10-இலட்சம்-இறால்-குஞ்சுகள்-விடப்பட்டன/71-244918
-
- 0 replies
- 412 views
-
-
உலகம் சர்வதேச பொருளாதாரத்தையும் அச்சுறுத்தும் கொரோனா..! Feb 03, 2020 0 200 உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு, சீனாவில் இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா தாக்குதலால் சர்வதேச பொருளாதாரத்திலும் ஓரளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். பயண தடைகள்: உயிர்கொல்லி வைரஸான கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில், பல்வேறு நாடுகள் பயண தடைகள் விதித்துள்ளன. சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறும், ஒரு சில நாடுகள் சீன மக்கள் தங்கள் நாடுகளில் நுழைவதற்கும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட பலநாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பாதிப்புகள்: பயணத்த…
-
- 0 replies
- 333 views
-
-
இக்கட்டான பொருளாதாரத்திலும் நம்பிக்கை தரும் நீண்டகால முதலீடு அனுதினன் சுதந்திரநாதன் இலங்கை போன்ற நாடொன்றில் தற்போதைய நிலையில் பொருளாதார ரீதியான உறுதிப்பாடற்ற நிலையொன்றே காணப்படுகின்றது. இந்த நிலையில், வருமானம் மூலமாக வருகின்ற பணத்தில், எத்தகைய சேமிப்பை மேற்கொள்ள வேண்டுமென்கிற குழப்பம், நம்மிடையே நீடிக்கிறது. இதன்காரணமாக, வருமானம் உழைக்கக் கூடிய மேலதிக வழிகளை நாடாமல், பணத்தை சாதாரண சேமிப்பு, நிலையான வைப்புகளில் வைத்திருக்கின்ற நிலை தொடர்கின்றது. சேமிப்புக்கு மேலான வருமானத்தை மிகக்குறைந்த இடநேர்வுடன் நமக்குத் தருகின்ற பாதுகாப்பான முதலீடுகளும் நம்மிடையே உள்ளன. ஆனால், அது தொடர்பில் போதுமான அறிவூட்டல்கள் இல்லாமையின் காரணமாக, முதலீடுகளை இழக்கக்கூடிய அதிகூடிய இடநேர…
-
- 0 replies
- 265 views
-
-
உங்களுடைய இறுதி மாதச் சம்பளம் என்னவானது? அனுதினன் சுதந்திரநாதன் 2020ஆம் ஆண்டு எனும் புதியவோர் ஆண்டு ஆரம்பித்திருக்கிறது. புதியவோர் ஆண்டில், அனைத்தையும் புதிதாகத் தொடங்கவும் செயற்படுத்தவும் அனைவருமே சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இந்தச் சந்தர்ப்பத்தில், மாதாந்தம் உங்களுடைய செயற்பாடுகளைக் கொண்டு நடத்த மூலாதாரமாக இருக்கக்கூடிய உங்களுடைய வருமானத்துக்கு/ மாதச் சம்பளத்துக்கு என்ன ஆகிறது என்பதையும் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. காரணம் எல்லாவற்றையும் நீங்கள் திட்டமிடுவதற்கும், அவற்றை நடைமுறைப்படுத்திடுவதற்கும் இந்த மாதாந்த வருமானம் அவசியமானது. எங்களில் பெரும்பாலானோர் எப்போதுமே மாதாந்த வருமானம் போதவில்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்களாகவே இருக்கிறார்…
-
- 0 replies
- 305 views
-
-
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவிவரும் நிலையில், அதன் விளைவாக பல நாடுகள் பயணத்தடை விதித்திருப்பதுடன், பயண எச்சரிக்கைகளையும் விடுத்திருக்கின்றன. இதனால் சுற்றுலாத்துறை பாதிப்படைந்திருக்கிறது. இது பூகோள அபிவிருத்தி மற்றும் நாட்டின் தேசிய ரீதியான அபிவிருத்தி ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் டபிள்யு.டி.லக்ஷ்மன் தெரிவித்தார். அத்தோடு கடந்த காலத்தில் சீனாவிலும், ஹொங்கொங்கிலும் சார்ஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டபோது பொருளாதார ரீதியில் பாதகமான தாக்கங்கள் ஏற்பட்டமையை சுட்டிக்காட்டியிருக்கும் மத்திய வங்கி ஆளுநர் டபிள்யு.டி.லக்ஷ்மன், எனினும் பொருளாதாரத்தில் ஏற்படத்தக்க பாதிப்பை புள்ளிவிபர ரீதியி…
-
- 1 reply
- 323 views
-
-
மூன்று மாவட்டங்களில் நெல் கொள்வனவு 43 Views மூன்று மாவட்டங்களில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நெற்கொள்வனவை ஆரம்பிக்க முடியுமென சபை குறிப்பிட்டுள்ளது. இந்தத் தடவை, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மெற்றிக் தொன் நெற்கொள்வனவை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது. ஒரு கிலோகிராம் உலர்ந்த நெல், நிர்ணய…
-
- 0 replies
- 396 views
-
-
வர்த்தக ஏற்றுமதி உயர்வு... 41 Views இந்த ஆண்டு 18 பில்லியன் அமெரிக்க டொலரை இலக்காக கொண்டு செயற்படுவதாக இலங்கை ஏற்றுமதி ஊக்குவிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 16 தசம் 1 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக ஏற்றுமதிகள் 2019 ஆம் ஆண்டு 0.19 வீதத்தால் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது http://www.hirunews.lk/tamil/business/233433/வர்த்தக-ஏற்றுமதி-உயர்வு
-
- 0 replies
- 392 views
-
-
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக சீனாவில் இதுவரை 170 பேர் உயிரிந்ததுடன், உலகளாவிய ரீதியில் இதுவரை 8,000 பேர் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் சர்வதேச நாடுகள் சீனாவுக்கான விமானங்களை தற்காலிகமாக இரத்து செய்துள்ளது. 1. ஏயார் கனடா - ஏயார் கனடா ஜனவரி 28 சீனாவுக்கான விமானங்களை இரத்து செய்துள்ளதாக கூறியது. 2. ஏயார் பிரான் - ஏயார் பிரான் ஜனவரி 31 முதல் பெப்ரவரி மாதம் 9 வரை சீனாவின் பிரதான நகரங்களுக்கான அனைத்து திட்டமிட்ட விமானங்களையும் இரத்து செய்துள்ளது. 3. ஏயார் இந்தியா - ஏயார் இந்தியா தனது மும்பை, டெல்லி - ஷாங்காய்க்கிடையிலான விமான சேவையை ஜனவரி 31 முதல் பெப்ரவரி 10 வரை இரத்து செய்துள்ளது. 4. ஏயார் சியோல் - தென்கொரியாவின் ஏயார் சியே…
-
- 1 reply
- 732 views
-
-
லண்டனிலுள்ள புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளில் முதலமைச்சர் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ், அரசு அதிகாரிகள், கிங்ஸ் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிங்ஸ் மருத்துவமனை கிளையை அமைப்பது குறித…
-
- 0 replies
- 276 views
-
-
கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சுமார் நூறு கோடி ரூபாய் நிதியை, அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா சீன அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேகமாக பரவி வரும் இந்த வைரசால் சீனாவில் இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சீனாவின் பெரும் பணக்காரரான ஜாக் மா, தனது தொண்டு நிறுவனம் வாயிலாக சீன அரசுக்கு நிதியுதவி அளித்துள்ளார். இதில் சுமார் 41 கோடி ரூபாய் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள, இரண்டு அரசு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது. மீத தொகை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் என, அமெரிக்க நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/98719/கொரோனா-வைரஸ்-…
-
- 0 replies
- 280 views
-
-
மட்டக்களப்பு, வாகரை பிரதேசம், கறுவா பயிர்ச் செய்கைக்கு உகந்த இடமாக தற்போது அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக, கட்டுமுறிவு விவசாய அமைப்பின் பொதுச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார். ஏற்றுமதிப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில், விவசாயத் திணைக்களத்தால் வாகரைப் பிரதேசத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட 15 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தலா 250 கறுவா கன்றுகளை, அவ்விவசாயிகள் பயிரிடத்துவங்கியுள்ளதாகவும் அப்பயிர்கள் தற்போது செழித்து வளரத் துவங்கியுள்ளதாகவும் குருகுலசிங்கம் மேலும் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “வாகரைப் பிரதேசத்து மண் வளம் கறுவா செய்கைக்கும் உகந்ததாக இருப்பது ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டிருந்தது. அதனடிப்படையில், 2013ஆம் ஆண்டில…
-
- 1 reply
- 491 views
-
-
யாழில், சர்வதேச வர்த்தக கண்காட்சி சர்வதேச வர்த்தக சந்தை கண்காட்சி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளது. அதற்கமைய நாளை (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ள இந்த கண்காட்சி தொடர்ந்து 3 நாட்கள் இடம்பெறவுள்ளது. யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண வணிகர் சங்கத்தின் தலைவர் கே.விக்னேஷ் கண்காட்சி குறித்த தகவலை வெளியிட்டார். குறித்த வர்த்தக சந்தையில் சர்வதேச தரத்திலான உற்பத்திப் பொருட்கள் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்த உள்ளதுடன், விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார். சர்வதேச ரீதியாக உள்ள 20 நாடுகள் பங்குபற்றும் குறித்த வர்த்தக சந்தையில், 20 நாடுகளைச் சேர்ந்தோர் இங்குள்ள முதலீட்டாளர்களுடன் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் வணிகர் கழகத்தின்…
-
- 1 reply
- 531 views
-
-
உலகப் பொருளாதாரம் 2020: இன்னொரு நெருக்கடியை நோக்கி... தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜனவரி 23 சில பழக்க வழக்கங்கள், முறைமைகள் போன்றவற்றில் இருந்து மாற்றமடையாமல், மீட்சிக்கு வழி இல்லை. இலகுவில் மாற்றங்களுக்கு உள்ளாக, மனித மனம் தயாராக இருப்பதில்லை. இதன் பாதகமான விளைவுகள் எல்லாவற்றையும் அது, தொடர்ந்து அனுபவித்து வருகிறது. வரலாறும், எமக்குத் தவறாது பாடங்களை இடித்துரைத்தபடியே இருக்கிறது. நாமோ அவற்றைக் கேட்காது, புறந்தள்ளிய படியே, புதிய திசையில் பயணிப்பதானது, சொல்லியபடி புதைகுழியை நோக்கி நகர்ந்து கொண்டிப்பதற்கு ஒப்பானதாகும். குழியில் விழுவதும், சகதியில் சிக்கி உடலெங்கும் ஒட்டிய சகதியையும் தூக்கி அள்ளிக் கொண்டு நடந்து, திரும்பவும் படுகுழியில் விழுகிறோம். …
-
- 0 replies
- 497 views
-
-
வர்த்தக போர்: அமெரிக்காவுக்கும்- சீனாவுக்கும் இடையேயான முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது! அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான முதற்கட்ட ஒப்பந்தம், கையெழுத்தாகியுள்ளது. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக நீடித்துவந்த வர்த்தக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதற்கமைய நேற்று (புதன்கிழமை) தலைநகர் வொஷிங்டனில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், …
-
- 0 replies
- 244 views
-
-
பொதுவாக பாடசாலைகளில் கற்றுத்தராத ஒன்றாகவும் வாழ்க்கையில் மனா உளைச்சலை தரும் ஒன்றாகவும் உள்ளது வரவு - செலவை திட்டமிடல். இன்றை சர்வதேச உலக வலைப்பின்னல், சமூக வலைத்தளங்கள் என்பன உலகில் எனக்கும் ஒரு செல்வந்தரை போல வாழ்ந்து காட்ட வேண்டும் என எதிர்பார்ப்பும் உறவினர்களால் மற்றும் நண்பர்களால் தரப்படும் அழுத்தமும் எம்மில் பலரையும் எமது எல்லைக்கு அப்பால் சென்று கடனாளிகளாக மாற்றி நிம்மதியற்ற பிரச்சனையான வாழ்க்கைக்கு வழி சமைத்து விடுகின்றது. எளிமையான சூத்திரம் 50-25-25 50% உழைப்பதில் ஐம்பது வீதத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு செலவழிப்பது ( உணவு, உடை, உறையுள், மருத்துவ காப்புறுதி, கல்வி .... ) 25% உழைப்பதில் இருபத்தி ஐந்து வீதத்தை விரும்பும் தேவைகளுக்கு செலவழிப்பது …
-
- 6 replies
- 1.1k views
-
-
பங்குச் சந்தையில் என்ன இருக்கிறது? அனுதினன் சுதந்திரநாதன் / 2019 டிசெம்பர் 23 கடந்த சில வருடங்களாக, பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ளத் தொய்வும் உறுதியில்லாத அரசியல் கொள்கையும் முதலீட்டாளர்களைக் குழப்பத்துக்குட்படுத்தி தொடர்ச்சியாக முதலீடு செய்வதில் ஒரு பின்னடைவையே ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும், பங்குசந்தையில் எல்லா பங்குகளுமே நாம் நினைப்பதுபோல குறைவானப் பெறுபேற்றை வெளிப்படுத்துவன அல்ல. சராசரியாகப் பார்க்கும்போது, பங்குச் சந்தையில் பங்குகளின் பெறுபேறு எதிர்பார்த்த அளவுக்கு குறைவாகயிருந்தாலும் முதலீட்டுக்கு இலாபத்தைத் தரக்கூடியப் பங்குகளும் அவைசார் பங்குச் சந்தைப் பரிமாற்றங்களும் நிகழந்துகொண்டே இருக்கின்றன. எனவே, பங்கு முதலீட்டு விடயங்கள் தொடர்பில் அடிப்ப…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஹுண்டாய் நிறுவனமும், உபேரும் இணைந்து பறக்கும் டாக்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. நாசாவின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கீழிருந்து நேராக மேலே உயரும் வகையிலான மின்கார்களை இதற்காக ஹுண்டாய் நிறுவனம் வடிவமைக்கும். 1000 அடி முதல் 2000 அடி உயரத்தில் மணிக்கு 290 கிலோ மீட்டர் என்ற அதிகபட்ச வேகத்தில் இது பறக்கும். ஒரு முறை மின்னூட்டம் செய்தால் 100 கிலோ மீட்டர் தூரம் பறக்க வல்லது. 4 பேர் அமரும் வகையில் இருக்கை வசதியும், பயணப் பெட்டிகளை வைக்கும் வசதியும் இருக்கும். முழுதும் மின்சக்தியால் இந்த வாகனம் இயக்கப்படும். முதலில் ஓட்டுநர் உதவியுடனும் பின்னர் தானாக பறக்கும் வகையிலும் இவற்றை உருவாக்க ஹுண்டாய் திட்டமிட்டுள்ளது. பறக்கும் டாக்சிக்கான சேவை மற்றும் செயல்முறைகளை …
-
- 0 replies
- 254 views
-
-
நிதி முறைகேடு வழக்கில் சிக்கி, ஜப்பானில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிஸான் கார் நிறுவன முன்னாள் தலைவர் கார்லோஸ் கோஷன்,(Carlos Ghosn) லெபனானுக்கு தப்பிச் சென்று விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. நிஸான் மோட்டார் மற்றும் ரெனால்ட் கார் நிறுவனத்தின் தலைவராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் கார்லோஸ் கோஷன். நிஸான் பங்குதாரர்களிடம் தவறான தகவல் அளித்து அவர் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்தார் என்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அவரை ஜாமினில் விடுவித்த ஜப்பான் நீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவரை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்த வழக்கில் அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் துருக்கி வழியாக லெபனான் தலைநகர் பெய்ர…
-
- 3 replies
- 809 views
-
-
-
முழுக்க முழுக்க தாவரங்களை கொண்டு உருவாக்கும் ' பேர்கர்கள் ' விலங்குகளை வளர்ப்பது புவி வெப்பம் அடைய ஒருகாரணாமாக உள்ளது. அத்துடன் வளர்ந்து வரும் நாடுகளில் மக்களின் வாழ்க்கை தரம் உயரும் பொழுது அவர்களும் மேற்கத்திய உணவுகளை விரும்பி வருகின்றனர். இந்த நிலையில் ஒருபகுதி மக்கள் இறைச்சியை தவிர்த்து வருகின்றனர், இவர்கள் சைவ உணவை உண்பவர்கள் ஆனால் அசைவ உணவு போல் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். இவர்களை குறிவைத்து மேற்குலகில் பலவேறு தாவர அசைவம் போன்ற உணவுகளை உருவாக்கி வருகின்றனர். சில உணவகங்களில் இது அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டு வருகின்றது . இதன் மூலம் மக்கள் ஆரோக்கியமாகவும் வாழவும் முடியும் என கூறப்படுகின்றது. கீழ்வரும் நிறுவனங்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனர…
-
- 2 replies
- 801 views
-
-
இந்தியாவும், அமெரிக்காவும் வர்த்தக உடன்பாடுகளை எட்டும் தறுவாயில் இருப்பதாக அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ஹர்ஷவர்தன் சிறிங்கலா கூறியுள்ளார். கடந்த செப்டம்பரில் நியூயார்க்கில் பிரதமர் மோடியை சந்தித்தபோது, இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகையில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். அத்தகைய விரிவான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முன்னோட்டமாக, இரு நாடுகளிடையே வர்த்தக உடன்பாடுகள் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளன. அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் பொறுப்பில் இருந்து விடைபெற உள்ள ஹர்ஷவர்தன் சிறிங்கலா இதைத் தெரிவித்துள்ளார். இந்த வர்த்தக உடன்பாடுகள் மூலம் இந்திய, அமெரிக்க சந்தைகளை இரு நாடுகளும் பரஸ்பரம் அணுகுவது எளிதாகும் …
-
- 0 replies
- 231 views
-
-
தமிழகத்தில் 256 இடங்கள் உட்பட, நாடு முழுவதும் 62 நகரங்களில் 2,636 பேட்டரி வாகன சார்ஜ் மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியால், மத்திய அரசுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டால், சுற்றுச்சூழலும் மாசடைகிறது. இந்த பிரச்னையை களைய, மாசு ஏற்படுத்தாத, 'பேட்டரி'யால் இயங்கும், கார், பைக் உள்ளிட்ட, எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும்படி, மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். பேட்டரி வாகன பயன்பாடை ஊக்குவிக்க மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் 62 நகரங்களில் 2,636 இடங்களில் பேட்டரி வாகன சார்ஜ் மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. https://www.dinamalar.com/n…
-
- 2 replies
- 426 views
-
-
இன்றைய உலகின் உலக யுத்தம் இந்த நூற்றாண்டில் எங்கோ ஒரு நாட்டிற்குள் ( உள்நாட்டு) சண்டை நடந்து கொண்டே தான் இருக்கின்றது ( உதாரணம் யேமன்) . நாடுகளுக்கு இடையான சண்டை பெரிதாக நடக்க வாய்ப்பில்லை. காரணம், பல பலமான நாடுகள் அணு ஆயுதத்தை கொண்டு இருப்பதே அல்லது அந்த நாடுகள் தமது ஆதரவை தெரிவிப்பதுதான் ( வெனிசுவேலா இல்லை சிரியா) . ஆனால், உலகின் மிகப்பெரிய சண்டை ஒன்று நடந்து கொண்டிருப்பது, பொருளாதார சண்டை; அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில். சீனாவின் சடுதியான பொருளாதார வளர்ச்சிற்கு காரணம் அமெரிக்க முதலாளித்துவ பொருளாதார கொளகை - மலிவான தொழில்திறன். ஆனால், சீனா கடந்த நாற்பது வருடங்களில் அமெரிக்காவையும் வளர்த்து தன்னையும் கெட்டித்தனமாக வளர்த்துக்கொண்டது. அமெரிக…
-
- 41 replies
- 5.3k views
-
-
வீ வேர்க் We Work - புதிய வியாபார கட்டமைப்பும், வளர்ச்சியும், சரிவும் அமெரிக்காவில் புதிய சிந்தனைகளுக்கும் அவை சார்ந்த வியாபார வடிவமைப்புக்களுக்கும் பலமான நிதி உதவிகள் உண்டு. அவ்வாறாக ஆண்டு தோரும் வரவும் ஆயிரக்கணக்கான நிறுவனங்களில் ஒரு சிலவே பெரும் வெற்றிகளை சந்திக்கும். கோடை 2019இல் கிட்ட்டத்தட்ட 47 அமெரிக்க பில்லியன்கள் மதிக்கப்பட்ட நிறுவனம் வீ வேர்க். ஆரம்பிக்கப்பட்ட புதிய நிறுவனங்களில் அதிகூடிய பெறுமதியை கொண்ட நிறுவனங்கலில் ஒன்றாக அன்று இருந்தது. வியாபார வடிமைப்பு: 2010இல் அமெரிக்காவில் ஒரு இஸ்ரேலியரால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் வியாபார நோக்கத்திற்காக இடங்களை வாடகைக்கு விடுவதாகும். அண்ணளவாக நாலு மில்லியன்கள் சதுர மீ…
-
- 0 replies
- 338 views
-