வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
நடப்ப நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதத்துக்கும் கீழாக வீழ்ச்சிஅடையும்: பிட்ச் ரேட்டிங்ஸ் கணிப்பு கரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதாரச் சரிவு, இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் ஆகியவற்றால் நடப்பு நிதியாண்டில் (2020-21) நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.8 சதவீதமாக அதாவது ஒரு சதவீதத்துக்கும் கீழாக வீழ்ச்சி அடையும் என பிட்ச் ரேட்டிங்ஸ் கணித்துள்ளது. இதற்கு முன் பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த நிதியாண்டில் 4.9 சதவீதம் வளர்ச்சி அடையும் எனக் கணித்திருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 0.8 சதவீதமாக வீழ்ச்சி அடையும் எனத் தெரிவித்துள்ளது. ஆனால், வரும் 2021-22ம் நிதியாண்டில்…
-
- 0 replies
- 344 views
-
-
நாட்டை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக,கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 5.33 % வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையால் இவ்வாறு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 2.61% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் இவ்வாறு தொடர்ச்சியாக இவ்வாறு இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/78269
-
- 0 replies
- 290 views
-
-
கொரோனாவின் ஊற்றுக்கண்ணான சீனாவின் ஊகான் நகரில் 2 மாத இடைவேளைக்குப் பிறகு ஷாப்பிங் மால்கள் திறக்கப்பட்டதாக சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷாப்பிங் மால்களுக்கு வருபவர்களின் உடல்நிலையை நுழைவாயில்களிலேயே ஸ்கேன் செய்து திருப்திகரமானது என உறுதி செய்தபின்னரே அனுமதிக்கப்படுவதாகவும் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில் சீனாவில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்களில் சுமார் 97 சதவிகிதம் மீண்டும் இயங்கத் துவங்கி விட்டதாகவும், 90 சதவிகித பணியாளர்கள் பணிக்குத் திரும்பி விட்டதாகவும் சீனாவின் தொழில்துறை துணை அமைச்சர் ஜின் கவுபின் (Xin Goubin) தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் அமெரிக்கா ஊரடங்கை நீட்டித்துள்ள நிலையில், சீனா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவத…
-
- 0 replies
- 320 views
-
-
ஒரு காலத்தில் இன்ஜினீயரிங் என்பது இளைஞர்களின் கனவாகவும், அவர்களுக்கு மரியாதையையும் சம்பளத்தையும் அள்ளித்தரும் படிப்பாகவும் பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கு சமூகத்திலும் கம்பெனிகளிலும் 'மவுசு' குறைந்திருக்கிறது. எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படித்த கரூரைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர், கரூர் பேருந்துநிலையம் அருகில் உள்ள கடையில் டீ ஆத்துகிறார். பிரபல கம்பெனிகளில் பணிபுரிந்த அவருக்கு, மாதம்தோறும் 15,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைக்காமல் போக, தன் தந்தை நடத்தி வந்த, டீ மற்றும் கூல்ட்ரிங்ஸ் கடையைப் பொறுப்பேற்று திறம்பட நடத்தி வருகிறார். அவரைச் சந்தித்தோம். அட்டகாசமான ஒரு டீ கொடுத…
-
- 0 replies
- 901 views
-
-
கொழும்பு துறைமுக நகரத்தால் பாதுகாப்பு அணிகலன்கள் விநியோகம் கொவிட்-19 தொற்று பரவலுக்கு மத்தியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வகையில் இயங்கும் புறக்கோட்டை மெனிங் மொத்த விற்பனைச் சந்தையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை கொழும்பு துறைமுக நகரம் (CHEC Port City Colombo) நேற்று முன்தினம் (05) நன்கொடையாக வழங்கியுள்ளது. பொலிஸ் படையினருக்கான மற்றொரு பாரிய அளவிலான பாதுகாப்பு கருவிகளின் வழங்கலைத் தொடர்ந்து, நிறுவனம் அடுத்த வாரம் சுகாதார மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்க…
-
- 0 replies
- 330 views
-
-
சுயசார்பு பொருளாதாரம் சாத்தியமா? முகம்மது ரியாஸ் riyas.ma@hindutamil.co.in அன்றாடப் பொது நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. பள்ளிகள் செயல்படும் முறை மாற்றப்படுகிறது; வீட்டிலிருந்து பணி புரிதல் புதிய நடைமுறையாக மாறியிருக்கிறது. அலுவலகங்களில் ஷிப்ட் முறைகளில் ஊழியர்கள் பணிக்கு வரச் செய்யப்படுகின்றனர்; பேருந்துகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பயணிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சிகளை அனைத்து நாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இவை அனைத்தும் அந்நாடுகளுக்குள்ளான சமூகப்பழக்கவழக்கம் தொடர்பான மாற்றங்கள். இது ஒருபுறம் இருக்க, உலக நாடுகள் தங்களின் பொருளாதார கட்டமைப்பிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத…
-
- 0 replies
- 715 views
-
-
1991-க்குப் பிறகு வரலாறு காணா வீழ்ச்சி கண்ட கச்சா எண்ணெய் உற்பத்தி! Organization of Petroleum Exporting Countries என்று அழைக்கப்படும் OPEC நாடுகள், உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் அளவு பயங்கரமாக குறைந்து இருக்கிறதாம். 1991-ம் ஆண்டு கால கட்டத்தில், உலக நாடுகளை எல்லாம் உலுக்கி எடுத்த வளைகுடா போர் நடந்தது. அந்த கால கட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு கணிசமாக குறைந்தது. அதன் பின், இப்போது தான் கச்சா எண்ணெய் உற்பத்தி வரலாறு காணாத அளவுக்கு சரிந்து இருக்கிறதாம். கடந்த ஜூன் 2020-ல், ஒபெக் குழுவில் இருக்கும் நாடுகள் வழக்கமாக நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் அளவை விட 1.93 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை குறைவாகத் தயாரித்து இருக்கிறார்களாம். …
-
- 0 replies
- 453 views
-
-
சீனாவிடம் இருந்து மேலதிகமாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாக பெறுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. நிதி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. சக்திவள மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்திக்காக இந்த கடன்தொகை கோரப்பட்டு வருகிறது. இதற்காக சீனாவின் ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த ஆண்டு இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து 1.2 பில்லியன் டொலர்கள் பெறுமதியான கடன்தொகையை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.hirunews.lk/tamil/business/218831/சீனாவிடம்-மேலும்-கடன்-பெற-இலங்கை-அரசாங்கம்-முயற்சி Sri Lanka in talks with China for $ 1 b loan …
-
- 0 replies
- 575 views
-
-
உலக வர்த்தக பதற்றநிலையைத் தணித்த ஜி - 20 உச்சிமகாநாடு சர்வதேச நிதித்துறையில் உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு அவசியமான கொள்கைகளை ஆராயும் நோக்குடன் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் தாபிக்கப்பட்ட 20 நாடுகள் குழு என்ற ( ஜி- 20) அமைப்பின் வருடாந்த உச்சிமகாநாடு கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் தென் அமெரிக்க நாடான ஆர்ஜன்டீனாவின் தலைநகர் புவனஸ் அயர்ஸில் நடைபெற்றது. உலகளாவிய வர்த்தக சீர்குலைவுநிலையொன்று ஏற்படுவதைத் தடுக்கக்கூடிய அணுகுமுறையொன்று கடைப்பிடிக்கப்பட்டமையை இந்த மகாநாட்டின் முக்கியமான உடனடி விளைபயன் என்று கூறமுடியும்.இதன் விளைவாக உலகளாவிய பொருளாதாரச் சீர்குலைவும் தற்போதைக்கு தவிர்க்கப்படக்கூடிய சாத்தியப்பாடுகள் தோன்றியிருக்கின்றன. யதார்த்தநில…
-
- 0 replies
- 371 views
-
-
மேக்ஸ் ஜெட் ரக விமானங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் போயிங் நிறுவனம் மேலும் பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பை சந்திக்க நேரிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. போயிங் நிறுவனத்தின் தயாரிப்பான 737 MAX ரக விமானங்களை பல்வேறு விமான போக்குவரத்து நிறுவனங்கள் வாங்கி பயன்படுத்தி வந்த நிலையில், 2 விமானங்கள் விபத்தில் சிக்கி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தின. இதனால் போயிங் நிறுவனத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டதோடு, அதன் விளைவாக பெரும் இழப்பையும் சந்தித்தது. இந்நிலையில், சோதனையின்போதே மேக்ஸ் ரக விமானங்களின் இயக்கத்தில் பிரச்சனைகள் இருந்தது, இரு போயிங் ஊழியர்கள் தகவல் பரிமாற்றத்தின் மூலம் தெரியவந்திருப்பதாக செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக போயிங் நிறுவன பங்குகள் 5.7 சதவீதம் அளவுக்கு ச…
-
- 0 replies
- 461 views
-
-
மீண்டும் அங்கு அரிசி ஆலையொன்றை அமைத்தால் ஆயிரக் கணக்கானோருக்கு தொழில் வாய்ப்பு அடையாளமே தெரியாமல் அழிந்து போய்க் கிடக்கும் சவளக்கடை அரிசி ஆலை அதிகமான வளங்களைக் கொண்ட பிரதேசம் கிழக்கு மாகாணமாகும். ஒரு காலத்தில் பல தொழிற்சாலைகள் கிழக்கில் இயங்கின. வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை, மண்டூர் ஓட்டுத் தொழிற்சாலை, மிகப் பெரிய அரிசி ஆலைகள், மீன் பதனிடும் நிலையங்கள் என்பவை இவற்றுள் சிலவாகும். இவையெல்லாம் கடந்த கால போர்ச் சூழலின்போது கைவிடப்பட்டன. பல அழிக்கப்பட்டன. இன்று அவை பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்றன. வளமோடு வாழ்ந்த இம்மக்கள் இன்னும் மீண்டெழவில்லை. கிழக்கில் அழி…
-
- 0 replies
- 760 views
-
-
டொலருக்கு எதிரான ஸ்ரேர்லிங் பவுணின் பெறுமதி சரிவை கண்டுள்ளது! புதிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அரசாங்கம் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் நோக்கிய அனுமானத்தில் செயற்படுவதால் டொலருக்கு எதிரான ஸ்ரேர்லிங் பவுணின் பெறுமதி 28 மாதங்களுக்கு குறைந்த அளவிற்கு சரிவை கண்டுள்ளது. ஸ்ரேர்லிங் பவுண்ட் 1.1% க்கு முறையே டொலருக்கு எதிராக $1.2242 மற்றும் யூரோவுக்கு எதிராக €1.1004 ஆகக் குறைவடைந்துள்ளது. ஐ.என்.ஜி குழுமத்தின் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஸ்ரேர்லிங் நாணயமானது மேலும் வீழ்ச்சியடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வணிகமுயற்சியாளர்கள் கடைசி நிமிட பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படலாம் என்று பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது. பன்னாட்டு வணிகக் குழுக்கள் இங்கிலாந்தில் முதலீட்டை …
-
- 0 replies
- 513 views
-
-
ஜெர்மனியை சேர்ந்த தனியார் நிறுவனம் ஏர் டாக்சியை மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. விமானத்தை போல் இறக்கை, 36 மின்மோட்டார்கள் மற்றும் பேட்டரி உதவியுடன் இயங்கும் வகையில் லிலியம் என்ற நிறுவனம் 5 பேர் அமர்ந்து செல்லக்கூடிய ஏர் டாக்ஸியை உருவாக்கியிருந்தது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டதும், நேரே மேலே எழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏர் டாக்ஸி, மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வானில் பறந்து சோதனை முயற்சியில் வெற்றிப்பெற்றுள்ளது. இதையடுத்து அதே மாடல் ஏர் டாக்ஸியை உருவாக்கி, 2025ம் ஆண்டுக்குள் வணிக ரீதியிலான சேவையை தொடங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்டும் நோக்கிலும், தடையில்லா சான்று பெறவும் …
-
- 0 replies
- 395 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்டவை ஆகும். ஆனால், இந்த இரு நாடுகளும் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையை சந்திக்கும் என புதிய தரவுகள் கூறுகின்றன. 2020ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பொருளாதாரம் 6 சதவீதம் சுருங்கிவிட்டதாக பேங்க் ஆஃப் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. 1945ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் இவ்வளவு மோசமான சூழலை பிரான்ஸ் சந்திக்கிறது. ஜெர்மனியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே சுமார் 10 சதவீதம் குறையும் என்று அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. https://www.bbc.com/tamil/live/global-52210173
-
- 0 replies
- 293 views
-
-
உங்கள் எதிர்காலத்துக்கு ஒரு கோடி ரூபாய் போதுமா? உண்மையில் எவ்வளவு ரூபாய் தேவைப்படும்? கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 36 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதி திட்டமிடல் உங்கள் எதிர்காலத்துக்கு எவ்வளவு பணம் தேவை என உங்களுக்குத் தெரியுமா? அதை எப்படி கணக்கிடுவது? அதை எப்படி சம்பாதிப்பது? இதுபோன்ற கேள்விகளுக்குத்தான் இங்கே விடை காணப் போகிறோம். மனிதர்களின் வாழ்கை தரத்தை நிர்ணயிப்பது எப்போதுமே சிக்கலான விஷயமாக இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் ஒரு வீட்டில் தொலைபேசி இருப்பது ஆடம்பரம், 30 ஆண்டுகளுக்கு முன் டிவி பெரிய வி…
-
- 0 replies
- 395 views
- 1 follower
-
-
இது படைப்புக்கும் வணிகத்திற்கும் இடையில் சமநிலைப்படுத்தும் ஒரு கலை - ஏ.ஆர். ரகுமான் “தயாரிப்பாளராக மாறுவது ஒரு புதிய மனிதனாக மீண்டும் பிறப்பது போன்றது” என ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். ஆஸ்கார் நாயகன் ‘இசைப் புயல்' ஏ.ஆர் ரகுமான் '99 songs' திரைப்படத்தின் மூலம் எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். இதனை ஏ.ஆர்.ரகுமானின் YM மூவீஸ் நிறுவனத்துடன் ஐடியல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. “நான் தயாரிப்பாளராக மாற முடிவு செய்த காலத்திலிருந்தே நான் மறுபிறவி எ…
-
- 0 replies
- 274 views
-
-
அமெரிக்காவின் அடுத்த குறி சீன மாணவர்களா.. கவலையில் கல்வியாளர்கள்.. பங்கு சந்தைகள் என்னவாகுமோ.? வாஷிங்டன்: சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் அடுத்த ஆயுதம் சீன மாணவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.இதுவரை வர்த்தகத்தினை கையில் எடுத்து வந்த அமெரிக்கா, அடுத்து சீன மாணவர்களை ஆயுதமாக பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் விசாக்களை நீட்டிப்பதில் சிக்கலை கொண்டு வரலாம் என்றும் சில ஊடகங்கள் கூறுகின்றன.இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா சீனா இடையிலான பிரச்சனையினால், அமெரிக்கா பல்கலைக் கழகங்களில் சேர்ந்துள்ள மாணவர்களை வெளியேற்றலாம் என்றும் கூறப்படுகிறது. டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை இது குறித்து வெளியான லைவ் மிண்ட் செய்தியில், சீனா மாணவர்களின் வ…
-
- 0 replies
- 500 views
-
-
2 ஆண்டுகளாக நீடித்துவந்த வர்த்தக போருக்கு முற்றுப்புள்ளி: சீனா அறிவிப்பு உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக நீடித்துவந்த வர்த்தக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால், இத்தனை காலமாக மந்த நிலையில் நகர்ந்துக் கொண்டிருந்த உலகளாவிய பொருளாதார நிலை, புத்துயிர் பெறவுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கும் முடிவை சீனா கைவிட்டுள்ளதாக, சீனாவின் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கமைய, இந்த பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனா நியாயமற்ற வர்த்தக…
-
- 0 replies
- 357 views
-
-
கொவிட்-19 எதிரொலி: ஜேர்மனியின் தொழில்துறை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 17.9 சதவீதம் சரிந்தது! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, ஜேர்மனியின் தொழில்துறை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 17.9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை மூடியதன் பின்விளைவு இதுவென கூறப்படுகின்றது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் 8.9 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்திருந்தது. தொழில்துறை உற்பத்தி தரவு முதன்முதலில் 1991ஆம் ஆண்டு ஜனவரியில் பதிவு செய்யப்பட்டதிலிருந்து அதன் மிகப்பெரிய வீழ்ச்சி இதுவென விபரிக்கப்படுகின்றது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, தொழில்துறை உற்பத்தி 25.3 சதவீதம் குறைந்துள்ளது. வகைப்படி…
-
- 0 replies
- 343 views
-
-
பன்னாட்டு தூதுவர்களுடான சந்திப்பில் a) பிரித்தானிய தூதுவர்: பிரெக்சிட் மூலம் ஜி.எஸ்,பி.+, பாதிக்கப்படாது ; திறந்த வர்த்தகம் தொடரும்; பொதுநலவாய அமைப்பு தொடரும்; பல பிரித்தானிய கல்வி நிறுவனங்கள் உள்நாட்டு அமைப்புக்களுடன் இணைந்து கல்வி வழங்குகின்றன; உல்லாசத்துறையில் வன மற்றும் விலங்குகளை பாதுகாப்பதன் மூலம் அதிகளவில் உல்லாச துறையை ஊக்குவிக்கலாம். b) கனேடிய தூதுவர்: உயர் கல்வி கற்க முன்னணியில் நிற்கும் நாடு ; இலங்கையில் கல்வி கற்ற பல பெண்கள் அதி உயர் தொழில்முறைகளில் உள்ளனர் அதை உள்ளூரில் உள்ள பெண்களுக்கும் கிடைக்க வழி செய்யவேண்டும் c) ஸ்விஸ் தூதுவர்: ஒரு காலத்தில் உள்நாட்டு சண்டையை பார்த்த நாடு இன்று உலகின் பணக்கார நாடாகி உள்ளது d) சீன உறுப்பினர் : கொழு…
-
- 0 replies
- 544 views
-
-
அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் மூளும் அபாயம் May 10, 2019 epaselect epa04947798 Demonstrators with Chinese and United States national flags gather at sunset in Washington, DC, USA, 24 September 2015. Chinese President Xi Jinping begins an official state visit at the White House with US President Barack Obama on 25 September. EPA/ERIK S. LESSER அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்தினால், அதற்குரிய பதில் நடவடிக்கையை எடுக்க தயங்கமாட்டோம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளதனால் இரு நாடுகளிடையே மீண்டும் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்பட…
-
- 0 replies
- 520 views
-
-
KFC உணவகம் பற்றி இன்று தெரியவாதவர்களே இருக்க முடியாது. இதன் நிறுவனர் பெயர் கலோனல் சாண்டர்ஸ் சாண்டர்ஸ் 1890ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பிறந்தார். அவருக்கு ஐந்து வயதாக இருக்கும் போது அவர் தந்தை காலமானார். குடும்ப கஷ்டத்தால் தனது 16 வயதுடன் சாண்டர்ஸ் படிப்பை நிறுத்தினார். பின்னர் ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்த சாண்டர்ஸ்க்கு 18 வயதிலேயே திருமணம் ஆனது. பின்னர் சமையல் கலையை பற்றி நன்றாக அறிந்து கொள்ள ஆரம்பித்தார், காலம் ஓடியது, தனது 65வது வயதில் வேலையிலிருந்து அவர் விடைபெற்றார். இத்தனை வருடத்தில் நாம் எதுவுமே சாதிக்கவில்லை என அவருக்கு தோன்ற வாழ பிடிக்காமல் தற்கொலை முயற்சி செய்து பின்னர் காப்பற்றப்பட்டார். Category
-
- 0 replies
- 472 views
-
-
"வெரைட்டி" தோசை, மாசம் 60,000 ரூபாய் வருமானம்... சவாலில் வென்ற தள்ளுவண்டிக் கடை மோகன்! வழிநெடுக சவால்கள் நிறைந்த மனித வாழ்வில், எங்கோ யாரோ ஒருவரிடம் விடுக்கும் சவால், ஒருவரின் முன்னேற்றத்துக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. கரூர் நகரில், தள்ளுவண்டியில் தோசைக் கடை நடத்தும் மோகனின் கதையும் அதுதான். ஆட்டோ டிரைவராக இருந்து வறுமையில் உழன்றுகொண்டிருந்த அவர், நண்பர் ஒருவரிடம் விட்ட சவாலை நிறைவேற்ற, தள்ளுவண்டியில் தோசை விற்கத் தொடங்கினார். இன்று, சவாலையும் வறுமையையும் ஒருசேர வென்று, மாதம் 60,000 வரை சம்பாதிக்கிறார். கரூர் ஜவஹர் பஜார் மாரியம்மன்கோயில் செல்லும் வழியில், சாலையோரம் இருக்கிறது இவரது தள்ளுவண்டிக் கடை. இரவு மட்டுமே இவர் கடை நடத்துவதால்…
-
- 0 replies
- 606 views
-
-
கடந்த ஆறு மாதங்களில், பங்குச் சந்தையில், அனில் அம்பானியின் சொத்து மதிப்பு, 73 சதவீதம் அளவுக்கு குறைந்து, 970 கோடி ரூபாயாக ஆகியுள்ளது.அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ்' குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 2008ல், 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது, 2,361 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. அதேபோல், அனில் அம்பானியின் பங்குகளின் மதிப்பும், ஆறே மாதங்களில், 73.43 சதவீதம் அளவுக்கு சரிந்து, 970.10 கோடி ரூபாயாகியுள்ளது. கடந்த ஜூன், 11ம் தேதி, இவற்றின் மதிப்பு, 3,651 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த, 2008ம் ஆண்டு, அனில் அம்பானி உச்சத்தில் இருந்த சமயத்தில், இந்தியாவின் ஆறாவது பெரிய பணக்காரராக இருந்தார். அந்த சமயத்தில் அவரது சொத்து மதிப்பு, 2.98 லட்சம் கோடி ரூபாயாக …
-
- 0 replies
- 894 views
-
-
இலங்கை மத்திய வங்கி மக்களுக்காகவா? அரசியல்வாதிகளுக்காகவா? அனுதினன் சுதந்திரநாதன் இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கின்ற, வெளியிடுகின்ற ஒரு ஸ்தாபனாக இருக்கக்கூடிய மத்திய வங்கி, 15ஆம் திகதி தங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தை எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். நாட்டின் முதன்மை மனிதனாக அறியப்படுகின்ற ஜனாதியால், “என்னுடைய பொருளாதார கொள்கைகளை முன்கொண்டு செல்வதற்கு, நீங்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறீர்கள்” எனச் சொல்லும் அளவுக்கு, எங்கள் மத்திய வங்கியின் நிலை இருக்கிறதா? என்கிற கேள்வியை எல்லோரிடத்திலும் எழுப்பி இருக்கிறது. உண்மையில், இலங்கையின் மத்திய வங்கி வினைத்திறனற்று இருக்கிறதா? கொரோனா காலத்தில் நாட்டின் நலன்கருதி எதனையும் செய்யாமல் இருந்…
-
- 0 replies
- 533 views
-