வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
2019 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சிவிகிதம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முந்தைய காலாண்டான ஜனவரி - மாரச் காலகட்டத்தில் இருந்த 5.8% விட குறைவாக உள்ளது. அதேவேளையில், 2018 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஜிடிபி வளர்ச்சிவிகிதம் 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது கடந்த 5 ஆண்டுகளில் இதுதான் மிகவும் மெதுவான வளர்ச்சிவிகிதமாக கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாக இந்திய பொருளாதாரம் தொய்வடைந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்தத தரவுகள் வெளியாகி உள்ளன. முன்னதாக, இன்று (வெள்ளிக்கிழம…
-
- 1 reply
- 348 views
-
-
லண்டனிலுள்ள புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளில் முதலமைச்சர் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ், அரசு அதிகாரிகள், கிங்ஸ் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிங்ஸ் மருத்துவமனை கிளையை அமைப்பது குறித…
-
- 0 replies
- 276 views
-
-
வாஷிங்டன் : அமெரிக்காவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெஸ்லா கார் நிறுவனத்தை பார்வையிட்டார். உலக அளவில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனம் மின்சார வாகன தயாரிப்பிலும் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டெஸ்லா கார் நிறுவனத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். அப்போது அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயக்குமார் மற்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாத மின்சார வாகன உற்பத்திக்கு தமிழக அரசு வழங்கி வரும் ஒத்துழைப்பு குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் டெஸ்லா அதிகாரிகளுக்கு எடுத்து…
-
- 3 replies
- 763 views
-
-
நம் கைகளிலுள்ள பணம் தொடர்பில் அறிவோமா? அனுதினன் சுதந்திரநாதன் இவ்வுலகில் பணமானது பல்வேறு வகை பெயர்களுடன் பல்வேறு பரிணாமங்களில் பலமில்லியன் பேர்களின் கைகளில் கொட்டிக் கிடக்கிறது. அவற்றில் எவை எல்லாம் பரிமாற்றத்துக்கு உகந்தவை ? எவை எல்லாம் சட்டச் சிக்கல் நிறைந்தவை? என்பது தொடர்பில் சிறிதாவது நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான், நம் கைகளில் உள்ள பணம் கறை படிந்ததா? இல்லையா? என்பதை உணர்ந்து செயற்பட முடியும். இன்றைய நிலையில், நாம் பணத்தைக் கொண்டு எதனை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலைக்கு வந்துவிட்டோம். அந்தளவு தூரத்துக்கு மக்களின் பணத்தேவையும் பணம் மீதான மதிப்பும் அதிகரித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். சாதாரணமாக பணமானது சேவை வழங்கல், உற்பத…
-
- 0 replies
- 278 views
-
-
கொரோனா வைரஸ் பரவில் காரணமாக ஒரு மாத காலத்திற்கும் மேலாக சீனாவில் மூடப்பட்ட தனது 42 பிரபல வர்த்தக நிலையங்களையும் ஆப்பிள் நிறுவனம் இன்று மீண்டும் திறக்கவுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீனாவில் உள தனது 42 பிரபல வர்த்தக நிலையங்களை பெப்ரவரி மாத தொடக்கத்தில் மூடுவதாக அறிவித்தது. இதனால் பெப்ரவரி மாதத்தில் இந் நிறுவனம் சீனாவில் அரை மில்லியனுக்கும் குறைவான கைத் தொலைபேசிகளை மாத்திரம் விற்பனை செய்ததாக குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியது. இந் நிலையில் தற்போது கடந்த சில நாட்க்களாக புதிய கொரோனா நோயாளர்கள் குறைந்த அளவில் அடையாளம் காணப்பட்டுள்ளமையினாலும், சீனாவை விட்டு கொரோனாவின் பாதிப்பு தணிந்துள்ளமையினையும் கருத்திற் கொண்டே ஆப்பிள் நிறுவன…
-
- 0 replies
- 265 views
-
-
பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதற்கு முன்பு தங்கத்தின் விலை இவ்வளவு உயர்வைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. சில மாதங்களுக்கு முன்பு தங்க நகைகளை வாங்கியவர்கள் அல்லது தங்கத்தில் முதலீடு செய்தவர்கள், இன்னும் அதிகமாக வாங்கியிருக்க வேண்டும் என்று இப்போது வருத்தப்படுகிறார்கள். அவ்வாறு முதலீடு செய்யாதவர்கள், தங்கத்தின் விலை இப்படியே உயர்ந்துகொண்டே செல்லுமா என்று கேட்கிறார்கள். உடனடியாக தங்க நகைகளை வாங்குவது அல்லது தங்க ஈடிஎஃப்-களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமா என்றும் அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை, தங்கத்தின் தேவை குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதை உணர்த்துகிறது. உண்மையில் தங்கத்திற்கான தேவை அதிகரித்திருக்க…
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
காற்று வாங்கும் சைனா பஜார்.. தடுமாறும் சீனா.! உலகமே இன்று கொரோனாவால் அரண்டுபோய் கிடக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் சீனா தான் என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு சரியான ஆதாரம் இல்லாவிட்டாலும், சீனா நினைத்திருந்தால், இந்த கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கனை சீனாவோடு அழித்திருக்கலாம் என்பது உண்மையே. கொரோனா சீனாவில் பரவிய ஆரம்ப காலத்தில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சி கண்டது.தொழில் சாலைகள் மற்றும் நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சி கண்டன. உலகம் முழுக்க விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டது. இப்படி உலகமே திரும்பி பார்க்கும் ஒரு நாடாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீனா இருந்தது குறிப்பிடத்…
-
- 0 replies
- 649 views
-
-
மலிவான தரமற்ற சீன இறக்குமதிகளுக்கு விரைவில் விதிகள் அறிவிக்கப்படும்.! கடந்த சில தினங்களாகவே, இந்தியா சீனா எல்லை பிரச்சனை தொடர்பான செய்திகள் ஒரு வித பதற்றத்தை நோக்கி தள்ளிக் கொண்டு இருக்கிறது.அது ஒரு பக்கம் இருக்க, இந்திய ராணுவ வீரர்கள் பலர் வீர மரணம் அடைந்து இருப்பதாக வெளி வரும் செய்திகள் கோவப்படச் செய்கின்றன. இந்த கோபத்தின் வெளிப்பாடாக பலரும், சீன பொருட்களை புறக்கணிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இப்போது மத்திய அரசும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்கிறது. சீனாவில் இருந்து இறக்குமதி சீனாவின் ஏற்றுமதி வியாபாரத்தில் ஒரு கணிசமான பங்கு, இந்தியாவுக்கும் உண்டு. 2017 - 18 நிதி ஆண்டில் சீனா, இந்தியாவுக்கு சுமாராக 76.38 பில்லியன் …
-
- 0 replies
- 426 views
-
-
முதலீடுகள் செய்வதற்கும், எளிதாக தொழில்புரிவதற்கும் இந்தியாவுக்கு வாருங்கள் என தாய்லாந்தில் தொழில்துறையினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ஆதித்ய பிர்லா தொழில்குழுமத்தின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை சுட்டிக்காட்டி பேசிய அவர், முதலீடுகள் செய்வதற்கும் எளிதாக தொழில்புரிவதற்கும் உலகிலேயே மிகவும் சிறந்த இடம் இந்தியா எனக் குறிப்பிட்டார். எளிதாக தொழில்செய்வதற்கான சூழல், வாழ்க்கைத் தரம், உள்கட்டமைப்பு, உற்பத்தித் திறன், காப்புரிமைகள், வனங்களின் பரப்பு என பல விஷயங்கள் வளர்ந்திருப்பதாகவும், அரசு அதிகாரிகளின் தலையீடு, வரிகள், வரி விகிதங்கள், ஊழல் போன்றவை குறைந்திருப்…
-
- 3 replies
- 336 views
-
-
சீனாவை உலுக்கி எடுத்த கொரோனா அந்நாட்டின் பல முன்னணி நிறுவனங்களின் வர்த்தகத்தை அடியோடு மாற்றி உள்ளது. மின்சார வாகனங்கள் தயாரிப்பில் பிரபலமாக விளங்கிய BYD Co., என்ற ஆட்டோ மொபைல் நிறுவனம், தற்போது உலகின் மிகப்பெரிய முகக்கவச தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஃபேஸ் மாஸ்க்குகளை தயாரிக்க துவங்கியது BYD Co நிறுவனம். தற்போது நாளொன்றுக்கு 5 மில்லியன் மாஸ்க்குகளை தயாரித்து வருவதாகவும், இந்த உற்பத்தி திறனை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தீவிர வைரஸ் பரவல் காரணமாக மாஸ்க்குகள் மற்றும் சானிட்டைசர்களுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்தது. இவற்றுக்கு ஏற்பட்ட பற்றாக்குறை சீன தொழில்துறை நிறுவனங்கள…
-
- 0 replies
- 457 views
-
-
யாழ்ப்பாணத்தில் இளம் சுற்றுலா தூதுவர்கள் Editorial / 2018 டிசெம்பர் 20 வியாழக்கிழமை, பி.ப. 06:41 Comments - 0 இளம் சுற்றுலாத்துறை தூதுவர் முயற்சியின் யாழ் நிகழ்ச்சித்திட்டம், அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரமைப்பின் (USAID) நிதியுதவியுடன் செயற்படுத்தப்பட்டு வரும் YouLead இன் ஆதரவுடனும், ஜெட்விங்கின் கைகோர்ப்புடனும் தனியார் துறை சுற்றுலா திறன்கள் குழுவினால் நடத்தப்பட்ட இந்த முதன்மை நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக சமையற்கலை முதற்கொண்டு கழிவு முகாமைத்துவம் வரை அனைத்து விடயங்கள் குறித்தும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 15 இளம் ஆண்கள், பெண்களுக்கு கற்பிக்கப்பட்டிருந்தனர். சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க மு…
-
- 0 replies
- 406 views
-
-
வட்டி விகிதங்களை குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய வங்கியில் நிலையான வைப்பு வசதி விகிதம் மற்றும் நிலையான கடன் வசதி விகிதம் ஆகியவற்றை 7 மற்றும் 8 சதவீதங்களால் குறைத்துள்ளளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/63222
-
- 0 replies
- 511 views
-
-
தீபாவளி: டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன? தற்போது ஏன் அது பிரபலம்? அஹ்மீன் கவாஜா பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பல இந்தியர்கள் இந்த தங்க நகைகளை வாங்க கடைகளுக்கு சென்றாலும், இன்றைய இளைஞர்கள் 'டிஜிட்டல் தங்கம்' வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இந்துக்கள் கொண்டாடும் இந்த பண்டிகை, இந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில்…
-
- 0 replies
- 275 views
- 1 follower
-
-
ரூபாயின் மதிப்பு உண்மையில் உயர்ந்துள்ளதா? ச.சேகர் அண்மைய சில நாட்களில் இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடைந்த வண்ணமுள்ளது என்பது பலர் மத்தியில் பரவலாக பேசப்படும் விடயமாக அமைந்திருப்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அரசாங்கத்தின் நிதி அமைச்சைச் சேர்ந்தவர்கள் இதற்கு அரசினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானங்கள் காரணமாக அமைந்திருப்பதாக தெரிவித்திருந்தனர். பொருளியலைப் பொறுத்தமட்டில், ஏதேனும் ஒரு பண்டத்தின் அல்லது சேவையின் விலை அல்லது பெறுமதி உயர்வடைகின்றதாயின், அதற்கு காணப்படும் கேள்வி அதிகரித்திருக்க வேண்டும் அல்லது அதன் விநியோகம் குறைவடைய வேண்டும். இது சாதாரணமாக பாடசாலைக் கல்வியில் பொருளியல் பாடத்தில் கற்றுக் கொண்ட அடிப்படை விடயமாகும். இலங்கைச் …
-
- 1 reply
- 326 views
- 1 follower
-
-
இப்பொழுது உலகம் முழுவதும் செல்லக்கூடிய மாதிரியும்; தமிழ் மொழி தெரியாதவர்கள் கூட பார்க்கக்கூடிய மாதிரியும்; எமது கதைகளை புலம்பெயர் மக்களுக்கு எடுத்து சொல்லக்கூடிய விதத்திலும்; இதன்மூலம் திரை உலகம்; தொழில்நுட்பம் பற்றிய அறிவை வளர்க்கவும் ; இவற்றை தரைவேற்றம் செய்து யூட்டிட்யூப் போன்ற தளங்களில் ஏற்றி பின்னர் புலம்பெயர் ஊடகங்கள் மற்றும் தனிநபர் ஆதரவுடன் வளரலாம். இது வருமானத்தை பெற்றுத்தருவதுடன் ஒரு பரப்புரை காரணியாகவும் வளரலாம். சில தரவுகள்: - ஐந்து நிமிடத்திற்கு உட்பட்டாத்தாக இருப்பது நன்று - மொழி இல்லாத படங்களை உருவாக்கலாம் - மொழி சார்ந்து உருவாக்கப்படும் பொழுது கீழே ஆங்கிலத்தை அல்லது வேற்று மொழிபெயர்ப்பை இணைக்கலாம் கீழே ஒரு …
-
- 1 reply
- 849 views
-
-
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக சீனாவில் இதுவரை 170 பேர் உயிரிந்ததுடன், உலகளாவிய ரீதியில் இதுவரை 8,000 பேர் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் சர்வதேச நாடுகள் சீனாவுக்கான விமானங்களை தற்காலிகமாக இரத்து செய்துள்ளது. 1. ஏயார் கனடா - ஏயார் கனடா ஜனவரி 28 சீனாவுக்கான விமானங்களை இரத்து செய்துள்ளதாக கூறியது. 2. ஏயார் பிரான் - ஏயார் பிரான் ஜனவரி 31 முதல் பெப்ரவரி மாதம் 9 வரை சீனாவின் பிரதான நகரங்களுக்கான அனைத்து திட்டமிட்ட விமானங்களையும் இரத்து செய்துள்ளது. 3. ஏயார் இந்தியா - ஏயார் இந்தியா தனது மும்பை, டெல்லி - ஷாங்காய்க்கிடையிலான விமான சேவையை ஜனவரி 31 முதல் பெப்ரவரி 10 வரை இரத்து செய்துள்ளது. 4. ஏயார் சியோல் - தென்கொரியாவின் ஏயார் சியே…
-
- 1 reply
- 732 views
-
-
ஸ்டிச் & ஸ்டோரி (Stitch & Story) படத்தின் காப்புரிமைFELIPE GONCALVES ``சமையல் மேடை ஸ்டார்ட்-அப்'' என்ற அளவில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காலத்தில் செழிப்பாக வளரும் தொழிலாக மாறியுள்ளது. ஸ்டிச் & ஸ்டோரி என்ற இந்த ஆன்லைன் கைவினைக் கலை நிறுவனம் வெறும் 11 முழுநேர அலுவலர்களை மட்டும் கொண்டு இயங்குகிறது. துணி மற்றும் கம்பிகளைப் பயன்படுத்தும் பின்னல் வேலைகளால் உருவாக்கப்பட்ட பொருட்களை இந்த ஆன்லைன் நிறுவனம் விற்கிறது. விருப்பம் உள்ளவர்களுக்குப் பயிற்சியும் தருகிறது. கடந்த சில வாரங்களில் இந்த நிறுவனம் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. பின்னலாடை தயாரிப்பு மற்றும் கம்பிகளையும் சேர்த்த பின்னல் பொருள் தயாரிப்புத் திறன்களை சொல்லித் தர…
-
- 0 replies
- 566 views
-
-
ஊழியர்களின் கொடுப்பனவுகளை செலுத்தாமல் உரிமையாளர் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது.! வணிகமொன்றின் ஊழியராக இருக்கிறீர்களா? அல்லது வணிகமொன்றைக் கொண்டு நடத்துகின்றீர்களா? ஊழியராக இருப்பின், இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக, எத்தகையை அடிப்படை உரிமைகளைப் பெற்றிருக்கிறீர்கள் என்பைத அறிவீர்களா? அல்லது வணிக உரிமையாளராக, உங்களுடைய ஊழியர்களுக்கு எத்தகைய உரிமைகளை வழங்கவேண்டும் என்பது தொடர்பிலான அறிவைக் கொண்டுள்ளீர்களா? இலங்கையில் இயற்றப்பட்டுள்ள எண்ணிலடங்காத சட்டங்களில் பல சட்டங்கள், ஊழியர்களின் நலன் பாதுகாப்புச் சட்டங்களாகவும் சில தொழில்தருநரின் சார்பாக, ஊழியர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்திடாத சட்டதிட்டங்களாகவும் அமைந்துள்ளன என்பதனை அறிவீர்களா? அதற…
-
- 0 replies
- 437 views
-
-
அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் அதன் இரண்டாம் மிகப் பெரிய எலக்டானிக்ஸ் உற்பத்தி ஆலையினை 1,152 கோடி ரூபாய் செலவில் பெங்களூருவில் அமைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதற்காகக் கர்நாடகா மாநில தொழிற் துறை வடக்குப் பெங்களூருவில் உள்ள தேவனஹலியில் 36 ஏக்கர் நிலப்பரப்பினை ஒதுக்கி அளித்துள்ளது. இதற்காகப் போய்ங் நிறுவனத்தின் இந்திய தலைவரான பரத்யூஷ் குமாரும் கர்நாடக முதல்வர் எச் டி குமாரசாமியைச் சந்தித்துப் பேச்சு வார்த்தையினை நடத்தியுள்ளார். வேலை வய்ப்புகள் பெங்களூருவில் அமைய உள்ள போயிங் நிறுவனத்தின் இஞ்சினியரிங் மற்றும் டெக்னாலஜி மையத்தின் கீழ் 2,600 புதிய வேலைப்புகள் உருவாக உள்ளது என்றும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் கூறுகின்றன. அனுமதி சித்தராமையா கர…
-
- 0 replies
- 645 views
-
-
கோவிட்-19 தாக்கம்: உலக பொருளாதாரம் 8.8 ட்ரில்லியன் டாலர்கள் இழப்பைச் சந்திக்கும், சீனாவுக்கும் பேரிழப்பு இது தொடர்பாக ஆசிய வளர்ச்சி வங்கி கூறியிருப்பதாவது: உலகப்பொருளாதாரம் 5.8 முதல் 8.8 ட்ரில்லியன் டாலர்கள் வரை பாதிக்கப்படும். அதாவது உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் 6.4% முதல் 9.7% வரையில் இழக்கப்படும். தெற்காசியாவில் ஒட்டுமொத்த உற்பத்தி 3.9% முதல் 6% வரை குறையும். பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருக்கும் இறுக்கமான கட்டுப்பாடுகளினால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி பெரிய அளவில் அடிவாங்கும். ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் குறைந்த அளவு நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் 3 மாதங்கள் என்று இருந்தால் 1.7 ட்ரில்லியன் டாலர்கள்…
-
- 0 replies
- 485 views
-
-
8 வயதே ஆன சிறுவன் ரியான் காஜி, நடப்பு ஆண்டில் யூ டியூப் சேனல் மூலம் 26 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டி சர்வதேச அளவில் முதலிடத்தை தக்க வைத்து இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் ரியான்ஸ் டாய்ஸ் ரிவியூ என்ற பெயரில் இயங்கிய சேனல், தற்போது ரியான்ஸ் வேல்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. புதிய பொம்மைகளை அறிமுகம் செய்து ரியான் விளையாடும் வீடியோக்கள் அந்த சேனலில் வெளியிடப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டு அவனது பெற்றோரால் தொடங்கப்பட்டு, 4 ஆண்டுகளே ஆன நிலையில், அந்த சேனலுக்கு 2 கோடியே 29 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். பல வீடியோக்கள் 100 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளன. டியூட் பெர்பெக்ட் என்ற யூடியூப் சேனல் 20 மில்லியன் டாலர் வருமானத்…
-
- 0 replies
- 388 views
-
-
வரலாறு காணாத வீழ்ச்சியில் இலங்கையின் பொருளாதாரம்? 13 Views நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பாரிய வீழ்ச்சியை நோக்கி செல்வதாக இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி 16.3 சதவீத வீழ்ச்சியை நோக்கி சரிவடைந்துள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையில், 2019ம் ஆண்டின் 2ஆவது காலாண்டில் பதிவான வளர்ச்சி வீதத்தின் 1.1 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியை நாடு சந்தித்துள்ளது. கோவிட்-19 தாக்கத்திற்கு மத்தியில…
-
- 1 reply
- 658 views
-
-
வாஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ரூ.1.12 லட்சம் கோடி சீன பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததுஅமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே தற்போது வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சீனாவின் வர்த்தகத்தை முற்றிலும் முடக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கும் முடிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்தார். இதன் படி, கடந்த ஜூலை 6ல் ரூ.2.38 லட்சம் கோடி சீன இறக்குமதி பொருட்களுக்கும், நேற்று முன்தினம் ரூ.1.12 லட்சம் கோடி சீன பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இதை அறிந்ததும் ச…
-
- 0 replies
- 754 views
-
-
சீனாவின் EV சந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய BYD விலைக் குறைப்பு! BYD பல மொடல்களின் விலையைக் குறைத்து சீனாவில் மற்றொரு மின்சார வாகன விலைப் போரைத் தூண்டியுள்ளது. இதனால், சீனாவில் மின்சார வாகன உற்பத்தியாளர்களின் பங்குகள் சரிந்தன. உலகின் மிகப்பெரிய புதிய ஆற்றல் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனம் (NEV), பல மொடல்களில் 10-30% வரை விலைகளைக் குறைத்துள்ளதாக cnevpost அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மலிவு விலையில் கிடைக்கும் BYD சீகல் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் போன்ற மொடல்களுக்கு, இப்போது குறிப்பிட்ட காலத்திற்கு $A7,736க்கும் குறைவான விலையில் விலை தொடங்குகிறது. அதாவது அதன் வழக்கமான தொடக்க விலையான சுமார் $A9,670 இலிருந்து கிட்டத்தட்ட $A1,934 விலைக் குறைப்பு. சீனா உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்…
-
- 2 replies
- 269 views
- 1 follower
-
-
வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1500 புள்ளிகள் சரிந்து 36,071 ஆக வர்த்தகம் தொடங்கியுள்ளது.தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 7 மாதத்தில் இல்லாத அளவு பெரும் சரிவை கொண்டுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிஃப்டி 425 புள்ளிகள் சரிந்து 10,564 ஆக வர்த்தகம் ஆகிவருகிறது. டாடா ஸ்டீல், பாரத ஸ்டேட் வங்கி, இன்டஸ் இன்ட் வங்கி, ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி பங்குகள் சரிவை சந்தித்தன. அதே போல் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சி அடைந்தது. …
-
- 0 replies
- 234 views
-