சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1006 topics in this forum
-
கிழச்சிங்கமும், நரிகளின் திரி(ணி)ப்பும் !!! கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு (Systematic Genocide), ஒரு இனத்தின் வரலாற்றை சிறுகச்சிறுகக் கருவறுக்கும். இது பாரிய இனவழிப்பு யுத்தத்தின் மூலம் மக்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழிப்பதை விட அபாயமானது. அதுபோன்றே, திட்டமிட்ட கருத்தியல் விதைப்புக்களூடாக வரலாற்று மகோன்னதங்களின் விம்பங்களை உடைத்து, அவற்றுக்கு மாற்றீடாக நேரெதிர் விம்பங்களை மக்கள் சிந்தைக்குள் புகுத்தி, பட்டாபிஷேகம் நடத்தும் நுண்ணரசியற் பொறிமுறை. …
-
- 0 replies
- 1k views
-
-
திரைப்பட ஆக்கம் பற்றிய தீராத வெறிகொண்ட ஒருவர் : மற்றயவர் இசைமீது தீராத வெறிகொண்டவர் : இதனால்தான் இருவரும் ஒருபோதும் மோதிக்கொள்ளவில்லை ! இளையராஜா பாலுமகேந்திராவால் - அறிமுகப்படுத்தப்பட இருந்தவர் - சலீல் சௌத்திரியின் நட்பு தடுத்துவிட்டது : இசையருவி ராஜாவை தனது படத்தில் எந்த பின்னணி இசையுமற்று மூடுபனி - மூன்றாம் பிறை படங்களில் சில இடங்களில் காட்சிகள் நகரும் : அங்குதான் இயக்குனரும் - இசையமைப்பாளரும் கவனிக்கப்படுகிறார்கள் : பார்வை வடிவம்தான் (Visual art) திரைப்படம் - அலங்காரமற்ற அழகே அது - பாலுமகேந்தி…
-
- 0 replies
- 496 views
-
-
வாசலில் பெரிதாக A.M.Agrawal என்று போர்டு இருந்த வீட்டுக் கதவைத் தட்ட நினைத்து, எதிர்வீட்டு பெல்லை அழுத்திவிட்டேன். கடுப்புடன் கதவைத் திறந்த பெண்மணியின் தீப்பொறி பறக்க நோக்கி, படார் எனக் கதவை அறைந்து சார்த்திவிட்டார் . ”நல்லநாளிலேயே அந்தம்மா அதிகம் பேசாது. அதுவும் அகர்வால் வீடுன்னு கேட்டீன்னா” என்றார் முகேஷ் அகர்வால் சிரித்துக்கொண்டே. “ எங்களுக்குள்ள கொஞ்சம் ஆகாது.அத விடு. எப்படி இருக்கே? பாத்து பன்னெண்டு வருஷம் இருக்குமா? 2004ல இடார்ஸில பாத்தது இல்லையா?” முகேஷ் அகர்வால் ரிடையர்டு ஆகி பல வருடங்கள் இருக்கும். அரசு நிறுவனம் என்றால் சோம்பேறிகளாக , லஞ்சம் வாங்குபவர்களாகவே இருப்பார்கள் என்ற முத்திரைகளை உடைத்தவர். “மூத்தவன் வீடு இது. ரெண்டாவது பையன் போப்பால்ல இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
கட்டுப்பாடற்ற வாழ்க்கைக்குள் இருந்தவள், முற்றிலுமாக மாறி வெற்றிகரமான ஒரு பெண்ணாக இப்பொழுது இருக்கிறாள். காரணம் அவளுடய மகன். சொனி டெய்லர்(39) அவுஸ்திரேலியா சிட்னியைச் சேர்ந்தவள் . ஒரு ஒன்லைன் நிறுவனத்தின் சொந்தக்காரி. மில்லியன் கணக்கில் இன்று சம்பாதிக்கும் அவளது இளமைக் காலம் நன்றாக இருக்கவில்லை. நியூ சவுத் வேல்ஸ்தான் அவளது இருப்பிடம். பெற்றோருடன் அங்கிருந்துதான் அவள் வளர்ந்தாள், படித்தாள். அவளிடம் எப்போதும் ஒரு பயம் கூடவே இருந்தது. அந்தப் பயம் வெளியிடங்களில் மட்டுமல்ல அவளது வீட்டுக்குள்ளேயும் அவளுடன் இணைந்திருந்தது. இந்த உலகம் தனக்குப் பாதுகாப்பானதுதானா? என்ற ஒரு அச்சத்துடன்தான் அவளது பள்ளிப் பருவம் போய்க் கொண்டிருந்தது. பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருந்த…
-
- 2 replies
- 718 views
- 1 follower
-
-
கதறும் மாடுகள், இரத்த வெள்ளத்தில் ஆடுகள். யேர்மனியில் செல்ம் (Selm) நகரத்தில் உள்ள இறைச்சிக் கூடத்தில் சட்ட விரோதமான முறையில் மிருகங்களுக்கு வேதனைகள் தந்து கொல்லப்படுவதாக விலங்கு உரிமை ஆர்வல நிறுவனமான Soko Tierschutz தொடர்ந்த வழக்கு 15.09.2023 விசாரணைக்கு வந்தது. டோர்ட்மூண்டிற்கு அருகிலுள்ள செல்ம் நகரத்தில் உள்ள இறைச்சிக் கூடத்தில் மூன்று ஆண்கள் தங்கள் இஸ்லாமிய முறையில் குறைந்தது 188 விலங்குகளை படுகொலை செய்துள்ளனர். இந்த முறையில் விலங்குகள் கொல்லப்படும் போது அவை மிகுந்த வேதனைகளை அனுபவிக்கின்றன என்பதே வழக்கின் விபரம். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறைச்சிக் கூடத்தின் உரிமையாளரும்(54) அவரது இரண்டு மகன்களும் ஆவர். மயக்க மருந்து இல்லாமல் விலங்குகளின் கழுத்தை …
-
- 0 replies
- 447 views
-
-
-
- 1 reply
- 431 views
-