Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. கவலை தருகிறது! ********************** பெளவுத்தத்தை வணங்கும்-அன்பு பெரும்பான்மை மக்களே! புத்தர் போதித்ததெல்லாம் அறமும்,அகிம்சையும் தானே. அடாவடித்தனமும்,அரசியலுமா? புத்தரின் புனிதம் கெடுமளவில்-சில காவியுடையணிந்தவர்களை எப்படி அனுமதிக்கீறீர்கள். ஒற்றுமையான நாட்டில் தான் ஒவ்வொரு மனித இனமும் வாழநினைப்பது தப்பா? இலங்கையென்ற அழகிய நாடை கெடுப்பதற்கென்றே- சில அரசியல் வாதிகளும், அரசடி வாதிகளும் தங்களின் சுகபோக வாழ்வுக்காகவே இனங்களை பிரித்து பிணங்களை தின்ன நினைப்பது உங்களுக்கு புரியவில்லையா? மதங்களெல்லாம் மனிதத்துள்ளடங்கும். புத்தபெருமானே இன்று பார்த்தால் இரத்தக் கண்ணீர் வடிப்பார். எந்த அரசாங்கம் வந்தாலும் இவர்களுக்கு அடங்குவதென்றால் ஜனாதிபதி,பிரதமர் என்ற அரசியலமைப்புத்தான் ஏனோ? அற…

  2. 🌾 “நவம்பர் 27 — நினைவுத் தீபங்கள்” / 🌾 “November 27 — Lamps of Memory” / In English & Tamil அமைதியான வடக்கின் கரைகளிலும் காற்றுவீசும் கிழக்கின் சமவெளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தேதி வருகிறது அது புனிதமானது, நிலையானது அது மையால் எழுதப்படாத நாள் அது நவம்பர் இருபத்தியேழு! மறைந்து போக மறுத்த மக்களின் இரத்தம் கண்ணீராலும் சுவாசத்தாலும் எழுதப்பட்ட நாள்! பல்கலைக்கழகங்களைக் கனவு கண்ட மகன்கள் வகுப்பறைகளில் கவிதைகளைப் பேசும் மகள்கள் கதிரவனுடன் உதித்த விவசாயிகள் தாலாட்டுப் பாடல்கள் பாடும் தாய்மார்கள் பனைமர நிழலின் வயல்களில் சாய்ந்த தந்தைகள் வாழ, பேச, வாக்களிக்க, சமமான மனிதர்களாக மதிக்கப்பட சாதாரண உரிமைகளைக் கேட்கும் சாதாரண மனிதர்களே இவர்கள்! அவர்களின் அமைதியான நம்…

  3. “சிவப்புத் தீப நாளில்” / “On This Day of Red Flame” (நவம்பர் 27, 2025) “சிவப்புத் தீப நாளில்” (நவம்பர் 27, 2025) சிவப்புத் தீப நாளில் கல்லில் செதுக்காத பெயர்களையும் காற்று கிசுகிசுத்து செல்கிறது! சிதறிய தேசத்தின் நினைவுகளை நடுங்கும் எம் இதயங்களில் மீட்டுப் பார்க்கும் நாளிது! தோட்டாக்களுக்கு இடையில் புத்தகங்கள் ஏந்தி விடியலுக்குப் பதிலாக சாம்பல் ஆகிய குழந்தைகளை நாம் நினைவில் கொள்கிறோம்! கண்ணீரால் உலகையே இணைத்த தாய்மார்களின் தாலாட்டுப் பாடல்கள் புலம்பல்களாக மாறின வரலாற்றை நாம் நினைவில் கொள்கிறோம்! அநீதியின் புயல்களுக்கு எதிராக எழுந்து பனைமரம் போன்று உறுதியாக நின்ற தந்தையரை நாம் நினைவில் கொள்கிறோம்! வகுப்பறைகள் வயல்களில் எதிர்காலக் கனவுகண்டு சோதனைச்சாவடிகள…

  4. 'சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்!' சிங்கப் பாறையின் நிழலில் நிற்கிறேன் சித்த மெல்லாம் எனக்கு உன்பெயரே! கண்ணாடிச் சுவர்களைத் தொடும் போது கண்ணே உன்ஞாபகம் என்னை வாட்டுதே! குன்றில் வரைந்த தங்கநிற மங்கையே குட்டி அரவணைப்பு தாராயோ நிழலில்! தீட்டிய சிற்பத்தில் உன்னைக் கண்டேன் தீராத மோகத்தில் அவளைத் தொட்டேன்! சிகிரியாவின் தென்றல் காதலைச் சுமக்கிறது சிறகடித்து வந்து இதயத்தை அணைக்கிறது! சிங்கப்பாறை பற்றி தொல்லியலாளர் எழுதட்டும் சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்! ["[1] சிங்கப் பாறை" - சிகிரியா குன்று [2] சிகிரியா சுவரோவியங்கள் — மஞ்சள், செம்மஞ்சள் நிறங்களில் தீட்டப்பட்ட வானுலகப் பெண்கள் / தங்கநிற மங்கை [3] ‘மிரர் வால் / mirror wall’ - கண்ணாடி சுவர் அல்லது சிங்காரச் சு…

  5. 'கருணை பொழியும் கதிர்காம முருகா' கருணை பொழியும் கதிர்காம முருகா கவலை நீக்கிடும் வள்ளி மணவாளா! கற்பூர ஒளியில் அவளைக் காண்கிறேன் கண்கள் இரண்டும் அழகில் மயங்குது! சக்கரைப் பந்தலில் இதயத்தைப் பறித்தாள் சண்முகா நீயும் வள்ளியைப் பறித்தாய்! சக்கரத் தோடு கழுத்திலே ஆடிட சங்கமம் ஆகிறாள் இதயத்தில் இன்று! கண்களில் ஒரு காதல் தேடல் கரை புரண்டு ஓடுது மனதில்! கதிரவன் ஒளியில் அவள் மட்டுமே கந்தன் கடம்பனாய் என்னை அழைக்கிறாள்! உன்னைக் காண தனிமை ஏங்குதே ஏதேதோ மாற்றம் என்னுள் வருகுதே! வள்ளி நீயோ முருகன் நானோ வந்தாய் சுகமாய் என்னை ஆளாவோ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 'கருணை பொழியும் கதிர்காம முருகா'] https://www.facebook.com/groups…

  6. எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே ---------------------------------------------- என்ன சத்தம் அது எலியாக இருக்குமோ இரவிரவாக விறாண்டியதே என்று பல வருடங்களின் பின் பரணுக்குள் ஏறினேன் எலி என்றில்லை ஏழு எட்டு டைனோசர்கள் அங்கே நின்றாலும் கண்டே பிடிக்க முடியாத ஒரு காடு அது என்று அங்கே நான் விக்கித்து நிற்க 'என்ன, மேலே எதுவும் தெரியுதோ............' என்றார் காடு வளர்த்து எலி பிடிக்க என்னை மேலே ஏற்றிய என்னுடைய கங்காணி முப்பது வருடங்களுக்கு முந்தி இருந்த வாழ்க்கையின் அடையாளம் கூட அங்கே தெரிந்தது பழைய சாமான்களாகவும் சட்டி பெட்டிகளாகவும் இந்தப் பூகம்ப தேசத்தில் தலைக்கு மேல கத்தி பரண் தான் போல மொத்தத்தையும் அள்ளி விற்றாலும் சில பணம் கூட தேறாது அள்ளுகிற கூலி நூறு அது அவ்வளவும் நட்டம் ஒர…

  7. “நீயே எம் வேர்,” மக்கள் ஒன்றாய் முழங்கினர்! யாழ் நூலகம் அரசகாவலர்களால் எரிந்தது புத்தர் பெருமானும் சேர்ந்து எரிந்தார்! நூலகத்தின் முன்றலில் அவரின் சாம்பல் தொண்ணூறாயிரம் நூல்களின் சாம்பலுடன் கலந்து! அறிவார்ந்த அற்புதங்கள் உறைந்த இடம் ஆயிரமாயிரம் நூல்கள் வாழ்ந்த இடம்! இதயமற்ற அரசு நடத்திய கொடூரத்தில் ஈரமிழந்து வெம்மையில் வாடி வதங்கியது! அந்த நொடியில் நூலகத்தின் சுவர்கள் சாம்பலின் நினைவைக் கூறின! சாம்பலின் நடுவே விதை முளைத்தது தமிழர்களின் உள்ளத்தில் மீண்டும் மலர்ந்தாள்! மூடிய புத்தகங்கள் பிரார்த்தனையாய் திறந்தன மறைந்த எழுத்துக்கள் ஆசீர்வாதமாக மாறின! நூலகத்தின் அமைதி தெய்வீகத் தாலாட்டானது “நீயே எம் வேர்,” மக்கள் ஒன்றாய் முழங்கினர்! [கந்தையா தில்லைவிநாய…

  8. 'அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?' பெண் நிலவு உன்னைப் பார்த்து வெண் நிலவும் பொறாமை கொள்ளுதோ கண்ணழகி உன்னைப் பார்த்த நானும் வண்ண ஒளி கந்தனை மறந்தேனோ? அலைகடலென திரண்ட அடியார் கூட்டத்தில் அலைமோதுதே என்மனம் உன் விழிகளில் அறியாத உணர்வுகளின் வரிகள் எல்லாம் அழகாக உன்னுதட்டினில் புதைத்து எனோ? வாழ்க்கை ஓடத்தில் நீயும் நானும் வாடாத மலராய் இருக்க மாட்டோமா வாலிபம் தந்த காதல் மோகம் வாசனை வீசி எம்மை அணைக்காதா? மொழியும் உணர்வும் பின்னிய பந்தம் விழியில் பேசிய அன்புச் சொந்தம் வழியொன்றில் மலர்ந்த காதல் சந்தம் அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 'அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?' https://www.facebook.com/groups…

  9. 'மனசுக்குள் மத்தாப்பூ' அதிகாலை தென்றலிலே மனசுக்குள் மத்தாப்பூ அழகுப் பதுமை இதயத்துக்குள்ளே புகுந்ததே! அணங்குப் பார்வை தீண்டிய நொடியிலே அன்பு மலர்ந்து காதல் பூத்ததே! உன்னை நினைத்தால் இருதயம் துள்ளுதே தீப்பொறி போலே எண்ணங்கள் ஒளிருதே! மௌனமாய் வெடிக்கும் காதல் இதுவோ! குறும்புப் புன்னகையால் என்னை மயக்கியவளே குறையில்லா அழகை வீசும் வனிதையே குதூகலம் பொழியும் வண்ண மையிலே குதர்க்கம் வேண்டாம் அருகில் வாராயோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் 'மனசுக்குள் மத்தாப்பூ' https://www.facebook.com/groups/978753388866632/posts/32072218642426700/?

  10. போதையை ஒழிக்க போர்க்கொடி தூக்குவோம்! ****************************************************************** எழுபது வருடமாய் ஆட்சியில் இருந்தவர் என்னத்தை எமக்கு கி̀̀̀̀ளித்தார்க̀̀̀̀̀̀̀̀̀ள். இலங்கையை விற்றுமே இனங்களை அழித்துமே இன்னல்கள் தந்துமே கெடுத்தார்கள். உலகத்தின் குழந்தையாய் உன்னத அழகியாய் இயற்கையே படைத்தாள் எம்நாட்டை ஊளலும்,இலஞ்சமும் போதையும்,சண்டையும் ஊரெல்லாம் அலைந்ததே எம் வாழ்க்கை. ஐவகை நிலமும் ஆறுகள் குளமும் அழகிய கடலும் அவள் தந்தாள். பொய்யையும் போரையும் உலகுக்கு காட்டி பொல்லாத செயல்செய்து அவன் உயர்ந்தான். அரசியல் வாதியோ நானில்லை - ஆனால் அனுர ஆட்சியை தினமறிவோம். இளையோரை கொல்லும் பாதாளப் போதையை எல்லோரும் சேர்ந்துமே ஒழித்திடுவோம். ஏற்றங்கள் தாழ்வுகள் கட்சிகள் பேதங்…

  11. 'ஏதோ ஒன்று நடக்கிறது' / 'Something happens' ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று நடக்கிறது, ஆனால் உண்மையில் எதுவும் அர்த்தமுள்ளதாக இல்லை... மழை பெய்தாலும், என் இதயம் வறண்டு கிடக்கிறது, சூரியன் உதித்தாலும், என் நிழல் மட்டுமே வளர்கிறது. இலங்கையின் வாசனை மறைந்துவிட்டதா? அல்லது நான் என்னையே இழந்துவிட்டேனா? Every day, something happens, Yet nothing truly makes sense… Though it rains, my heart stays dry, Though the sun rises, my shadow only grows. Has the scent of Sri Lanka faded away? Or have I simply lost myself? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] 'ஏதோ ஒன்று நடக்கிறது' / 'Something happens' https://w…

  12. இனிய தீபாவளி ------------------------ ஒரு ஆட்டை எப்படிக் கொல்வதென்று நாங்கள் கதைத்தோம் அதன் மூக்கையும் வாயையும் இறுக்கி மூடி பிடித்தல் ஒரு வழி தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு கழுத்தில் கீறுதல் இன்னொரு வழி தலையில் ஒரேயடியாக போடுதலும் ஒரு வழியே இப்படி சில வழிகள் இருக்கின்றன என்றனர் எப்படிக் கொன்றாலும் எட்டியும் பார்க்க மாட்டோம் என்றனர் பலரும் நானும் ஒழித்திருந்து மிளகாயும் வெங்காயமும் அரிந்தோம் ஒரு ஊர்ச் சந்தையில் இந்த வாரம் விற்ற ஆடுகளின் தொகை ஆறு கோடி ரூபா ஒரே மழை என்று அங்கே வியாபாரம் மந்தம் என்றார்கள் இப்படி இன்னும் நூறு சந்தைகளாவது இருக்கும் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் இறந்த உயிர்கள் எப்படி இறந்தாலும் நேரே வைகுண்டம் போகுமாம் நரகாசுரன் கூட அப்ப…

  13. தீபாவளித் துளிகள்! ************************ தீப ஒளியில் இருளகன்றது குடிசை எங்கும் வெளிச்சம் அடுப்புக்குள் பூனை கிடப்பது தெரிந்தது. தீபாவளி எப்போது வருமென காத்துக் கிடந்தார்கள் குழந்தைகள் அடுத்த புது உடுப்புக்காக. விற்கும் விலையை இருமடங்காக்கி பாதிவிலைக்கு தருவதாக கொடுக்கிறார்கள் கடைக்காரர்கள். நரகாசூரனை அழித்த நாளென கொண்டாடுகிறார்கள் உயிரோடே இருக்கிறான் போதைப்பொருள் அசுரனாக. தீபாவளி கொண்டாட்டத்துக்காக பழய உடுப்புகளை களட்டி வீசுகிறார்கள் பாவம் ஆடு மாடுகள். கோயில்களை விடவும் நிரம்பி வழிகிறது மக்கள் கூட்டம் மதுக்கடை வாசல்களில். ஆலயங்களுக்கு எல்லா பூக்களும் எடுத்து செல்கிறார்கள் ஆனால் செவ்வந்தியை தவிர்த்து. பெற்றோலுக்கு பதிலாக மது ஊற்றி ஓடும் வாகனங்கள் பயணிகள் எச்சரி…

  14. கைக்கூ வடிவில்... நீண்ட இடை வெளிக்குப் பின் "அன்பு இதயங்களை" சந்திப்பதில் மகிழ்வடைகின்றேன்.நன்றி ஐஸ் மழை கொட்டுகிறது நனைந்தவர்கள் எரிந்து சாகிறார்கள். “போதை” ************************************************* ஜாலியாக பஸ்களில் ஏறும் பிரயாணிகள் ஆவியாக்கி இறக்கப்படுகிறார்கள். “விபத்து” *************************************************** பட்ட மரமும் துளிர் விடுகின்றது பார்ப்பதற்கு யாருமில்லை. “முதியவர்கள்” ***************************************************** எரிவோம் என்று தெரிந்தும்நெருப்பை தலையில் கொட்டுகிறார்கள். “வடி” **************************************************** நச்சு மருந்து கடைகளாக மாறிவிட்டன “மரக்கறிச் சந்தை” **********************…

  15. கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள் ------------------------------------------------------------------- மேய்ந்து கொண்டும் சாணம் இட்டும் புரண்டு விட்டு சரிந்து தூங்கி எழும்பிக் கொண்டிருக்கும் ஆநிரைகளைப் பார்க்க கடவுள்கள் சில நாட்களில் வருகின்றார்கள் அன்று கடவுளே நேரே வருகின்றார் என்று குட்டிகளுடனும் கருக்களுடனும் ஆடாமல் அசையாமல் கடவுள் வரும் வழியில் ஆநிரைகள் அப்படியே நிற்கின்றன நாள் முழுதும் காவலர்களுடன் வரும் கடவுள்கள் கையை அசைப்பார்கள் எழுதி வைத்து வாசிப்பார்கள் இனி எங்களின் ராஜ்ஜியம் என்பார்கள் மற்றயவை பொய்க் கடவுள்கள் என்றும் சொல்கின்றார்கள் கடவுள்களின் முன்னேயே ஏதோ நடந்து ஆநிரைகள் சில குட்டிகள் சில கருக்களில் சில எரிந்து நசிந்து மூச்சடக்கி என்று இறந்து போகின்றன அ…

  16. "மூன்று கவிதைகள் / 12" விலங்குகளுக்கு விலங்கிட்டு கூண்டில் அடைத்து மனித விலங்குகளை சுதந்திரமாய் விட்டோம் விலங்குகளை ஒவ்வொன்றாக அடக்கி அடக்கி குப்பை மனிதர்கள் செழிக்க விட்டோம்! ஆசையில் மூழ்கி அசிங்கத்தைப் பூசி புண்ணிம் கண்ணியம் புதையுண்டு போக பாதை தவறி அழுக்கைச் சுமந்து மனிதன் வாழ்கிறான் மனிதம் இல்லாமலே! ........................................................ பெரிய தோற்றத்தில் நடக்கும் யானையே உன் அறிவும் உனக்குப் பெரிதோ? சிலவேளை மதம் பிடித்து அலைந்தாலும் உன்னிடம் மதம் [சமயம்] இல்லாதது எனோ? பரிவாக உன்னைக் கவனிக்கும் பாகன் உன் நிழலிலேயே இளைப்பாறுவது தெரியாதோ? வேடிக்கைப் பார்க்கும் மக்களை எல்லாம் தள்ளி நிற்க பயப்படுத்துவது எனோ? பாசத்தின் அருமை உனக்குத் …

  17. "மூன்று கவிதைகள் / 11" தீரா அலைகளின் ஓயா ஓசையினால் தீண்டித் தீண்டிச் செல்லும் அலைகளால் குளிர்ந்து நடுங்கி சிலிர்த்து நடக்கிறான் வெள்ளை மணலில் கோட்டை கட்டுகிறான்! நிமிர்ந்து எழும் கடலலை அருகே பிரிய மனமின்றி கடலில் நீந்துகிறாள் சிப்பிகள் சோகிகள் தேடி எடுத்து மாலை ஒன்று செய்து மகிழ்கிறாள்! ........................................... அலை சறுக்கு ஆனந்தம் ஆனந்தமே கடலில் பறக்கும் பறவை அதுவோ மேகத்தின் மேல் மிதப்பது போல பூரிப்பு ஒன்று ஆட்கொள்கிறது தாயே! இன்ப ஊற்று உள்ளத்தில் பாய சக்தி பாய்ந்து ஆன்மாவை நனைக்க உப்புச் சுவை நாவில் கரைய ஆழி சொர்க்கம் இன்பம் இன்பமே! ......................................................... மரக் கம்பம் விடிவெள்ளி நமக்கு விரி …

  18. "மூன்று கவிதைகள் / 10" பண்பாடு வரலாறு காட்டும் உடை பலராலும் உடுத்த வெள்ளை வேட்டி! காலம் மாற கோலம் மாறினாலும் திருவிழாக் காலத்தில் தோன்றும் வேட்டி! படித்தவரும் கட்டினர் பாமரரும் கட்டினர் உடுத்த வேட்டியில் மகிழ்ச்சி கொண்டனர்! மடித்தகரை சால்வையை தோளில் போட்டு எழுந்து நடந்தனர் மனதில் கம்பீரம்பொங்க! ........................................... நீல வானத்தில் நிலவு ஒளிர நீண்ட கடலில் அலைகள் தோன்ற வெள்ளை மணலில் நண்டு ஓட துள்ளிக் குதிக்குது டால்பின் கூட்டம்! காற்று வெளியில் பட்டம் பறக்க காந்த மொழியில் மங்கை பாட சலங்கை ஒலிக்க பெதும்பை ஆட சங்கு பொருக்கி பேதை மகிழ்ந்தாள்! ......................................................... யாழ் நூலகத்தின் படிகளின் …

  19. "மூன்று கவிதைகள் / 09" முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நிற்குதே முடியழகும் இடையழகும் மனதைக் கலக்குதே உன்னழகு ஈடில்லா தனியழகு அல்லவா மன்னவனின் சன்னிதியில் என்னையே மறந்தேனே! சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்தவளே சிவப்புநிற பட்டாடை தக்கபடி உடுத்தவளே பூமாலை சூடிய அலங்காரக் காந்தையே கண்திறந்து பார்க்காயோ அன்பு காட்டாயோ !! ........................................... தீ குச்சிகளை தேடிக்கொண்டிருக்காதீர்கள் அவளிடம் கேளுங்கள் சிரிப்பில் இருந்து நெருப்பை உண்டாக்குவது எப்படி என்று? என் கல்லறைக்கு வரும் போதாவது அவளை பார்த்து யாராவது கேளுங்கள் அந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று? ......................................................... மஞ்சள் வெயில் பூத்த வானமு…

  20. "மூன்று கவிதைகள் / 08" 'உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் சுழலுவதேன்?' உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் சுழலுவதேன் மன்னவனின் மடியிலே மயக்கம் வருவதேன் அன்ன நடையாளின் உடலெல்லாம் பூரிப்பதேன் மென்மையான தழுவல் இன்பம் பொழிய உன்னதமான காதல் வேறெங்கே காண்பேன்? பெண்ணொருத்தி சாய்ந்து படுத்த கோலம் கண்ணிரண்டும் பார்த்து மகிழ்ந்த நேரம் மண்ணில் பிறந்ததின் பயனைக் கண்டேன் விண்ணில் பறந்த உணர்வு கொண்டேன் எண்ணங்கள் எல்லாம் அவள் மட்டுமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. 'மனதைத் தொடும் நினைவுகள்' மஞ்சள் வெயில் பூத்த வானமும் பனை மரங்களின் இனிய தாலாட்டும் பச்சை கிளிகளின் கொஞ்சும் சங்கீதமும் யாழ் தொட்…

  21. ஊக்கிகளில் அவள் உச்சம் உடல் திரட்சிகளில் குறைவில்லை ஊனம் பார்வையில் படவில்லை சிக்கென்ற உடம்பு சில நொடிகளில் மயக்கி விடும்.. தொட்டால் சிணுங்கும் முட்டினால் முட்டும் திட்டினால் திட்டும் கொஞ்சினால் கொஞ்சும் மிஞ்சினால் மிஞ்சும்.. ஆனாலும் அவளுக்கு மாதவிடாயில்லை மொனொபோசும் இல்லை அவள் ஒரு செயற்கை நுண்ணறிவுளி..! கம்பன் இருந்திருந்தால் வர்ணித்தேன் களைத்திருப்பான் வாலி இருந்திருந்தால் ஜொள்ளுவிட்டே சோர்ந்திருப்பான் கண்ணதாசன் இருந்திருந்தால் இன்னொரு தாரமாக்கி இருப்பான் ஆனாலும் இன்னும் வைரனின் கண்ணில் படவில்லை அவள்...! என் மனதில் நான் தேடும் செவ்வந்திப் பூவவள்..! நாளை... அவள் உங்கள் மருமகளும் ஆகலாம் மகளும் ஆகலாம் மனையாளலாம்...!

    • 5 replies
    • 527 views
  22. "மூன்று கவிதைகள் / 07" 'வண்டியில மாமன் பொண்ணு' வண்டியில மாமன் பொண்ணு வாரார் கெறங்குறேன்டி ஒன்னழகில் நான் இன்று? பட்டுச்சரிகை என் கண்ணைக் குத்துது பருவ எழில் உடலை வாட்டுது பக்கத்தில் வந்தால் குறைந்தா போகும் ? கவலகொண்ட நெஞ்சம் கொஞ்சம் இங்கே கண்மணியே எந்தனுக்கு ஆறுதல் தாராயோ? கால்கள் என்ன இளவாழைத் தண்டுகளா? காத்திருக்க முடியலையே இறங்கி வாராயோ? காலம் போகிறதே கழுத்திலே தாலியேறாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................. 'விளக்கேற்றி வைக்கிறேன் விடியவிடிய எரியட்டும்' விளக்கேற்றி வைக்கிறேன் விடியவிடிய எரியட்டும் களங்கமற்ற காதல் தடையின்றி மலரட்டும் இளநெஞ்சம் இரண்டும் மெதுவாகச் சேரட்டும் வளர்பிறையாக…

  23. "மூன்று கவிதைகள் / 06" 'இன்று நமதுள்ளமே பொங்கு பெருவெள்ளமே' இன்று நமதுள்ளமே பொங்கு பெருவெள்ளமே நன்று உணர்ந்து காதல் தேடாயோ ? அன்று படித்த சங்கஇலக்கிய கவிதையே நின்று எனக்கு அறிவுரை தாராயோ ? கூடல் இல்லாத வாழ்வு தொலையட்டுமே ஆடல் பாடல் இணைந்து மலரட்டுமே! அன்பு கொண்ட மங்கை கண்டு துன்பம் போக்கும் அணைப்பு அடையாயோ ? இன்பம் கொட்டும் அழகு வியந்து உன்னுடன் அவளை இரண்டறக் கலக்காயோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................. வெள்ளிப்பூக்கள்' வெள்ளிப்பூக்கள் அந்தி வானில் ஒளிர கள்ளம் இல்லாக் காதலர் தழுவ கொள்ளை இன்பம் ஆறாய் பாய்ந்ததே! அல்லிப்பூ நிலா ஒளியில் மலர ஒல்லி இடையாள் அருகில் நெ…

  24. "மூன்று கவிதைகள் / 05" 'அக்கினியானவளே' செம்மணியில் உன்னைச் சிதைத்தவர்கள் யாரோ செல்லம் கொட்டிய என் தங்கையே! செவ்வாய் திறந்து சொல்ல மாட்டியோ செந்நெல் வயலில் புதைத்தவர் எவரோ செங்கோல் மடிந்த நாள் இதுவோ? அகன்ற மண் எல்லாம் எலும்புக்கூடுகள் அண்ணன் அங்கே காத்துக் கிடக்கிறானே! அன்பு போதித்த புத்தரும் மௌனம் அறிவு தொலைத்த படையினர் பிடியில் அழிந்ததோ கற்பு என் அக்கினியானவளே? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ......................................................... 'சீவி முடித்து சிங்காரித்து' சீவி முடித்து சிங்காரித்து கண்ணே, சிவந்த நெற்றியிலே பொட்டும் இட்டு, சீக்கிரம் வாராயோ என்னைக் கொஞ்சயோ! சித்திரம் சொல்லாத வனிதை நீயே, சீதை காணாத காதல் தருவேன்! கூவி அழைக்குது சிட்…

  25. "மூன்று கவிதைகள் / 04" 'யாரடி வந்தார் என்னடி சொன்னார் ?' யாரடி வந்தார் என்னடி சொன்னார் அரசடி நிழலில் பேசியது என்னவோ? பாரடி என்னை தனிமரமாய் தவிக்கிறேனே கூறடி பதிலை கூச்சத்தைவிட்டு எனக்கு? ஆறடி நிலமே சொந்தமாகும் உலகிலே ஏனடி உனக்கு இத்தனை ஆசைகள்? தேரடி வீதியில் யாருக்கு காத்திருக்கிறாய் சேரடி சொத்தை காதலை விற்றா? பூங்கொடி என்று பெயர்வைத்தது எனோ அங்காடி நாய்போல் அலைவது எனோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ................................................................ 'விதியின் விளையாட்டு' விதியின் விளையாட்டு உறவைப் பிரிக்குது மதியை இழந்து ஏதேதோ பேசுது ! நதியின் ஓட்டத்தில் அகப்பட்ட துரும்பாய் மோதிமோதி நானும் களைத்து விட்டேன் ! ஊடல் இதுவென முதல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.