கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
"மனக்கதவை திறவுங்கள் மாற்றம் உனதாகும்" "மனக்கதவை திறவுங்கள் மாற்றம் உனதாகும் உங்கள் எண்ணத்துக்குள் அவை வெளிப்படட்டும் கட்டுகளை விடுவித்து சங்கிலிகளை உடைத்து உங்கள் மனம் திறந்தவெளியில் உலாவட்டும்!" "திறந்த இதயத்துடனும் திறந்த மனதுடனும் மாற்றம் மென்மையாக அன்பாக அமையட்டும் எதிரியை விட நண்பனை அறிந்தால் புதிய மாற்றம் புரிந்து வளரும்!" "மனதைத் திறந்து தன்பாட்டில் பறக்கவிட்டால் எதிர்காலத்தை தழுவி புதியதை வரவேற்றால் உங்கள் கனவுகள் விரைவில் நனவாகும் தேடிய எதிர்பார்ப்பு தானாக திறக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியட…
-
- 0 replies
- 215 views
-
-
"இடையது கொடியாய் இளமையது பொங்க" "இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க உச்சாகம் தந்து சடையது அலைபாய சஞ்சலம் தந்தவளே!" "அழகில் மயிலாய் அன்பில் தாயாய் ஆனந்தத் தேனாய் ஆசைக்கு நாயகியாய் வானின் தேவதையாய் வாழ்க்கைக்கு துணையாய் தன்னையே தந்து தந்திரமாய் பறித்தவளே!" "பணிந்து உன்னை பலவாறு காட்டி பண்பின் திறனை பலவாறு விளக்கி பருவ எழிலை பலவாறு வீசி பந்தத்தை ஏற்படுத்தி பத்தினியாய் வந்தவளே!" "என்னை …
-
- 0 replies
- 197 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
"எல்லாமாய் அவளே" "எல்லாமாய் அவளே இறைவியும் அவளே! சொல்ல முடியா அழகில் வந்து வெல்ல முடியா நெஞ்சைக் கவர்ந்து நல்லாய் வாழ தன்னைத் தந்தவளே!" "கள்ளம் இல்லா நெஞ்சம் கொண்டவளே! உள்ளம் தேடும் அன்பு தந்து அள்ள அள்ள இன்பம் சொரிந்து உள்ளது எல்லாம் எமக்கு கொடுத்தவளே!" "ஆழ் கடலில் மலர்ந்த முத்தே! வாழ்வு தர உன்னையே கொடுத்து தாழ்வு மனப்பான்மை எம்மிடம் அகற்றி சூழ்ச்சி சூது அறியா இல்லத்தரிசியே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 473 views
-
-
"உயர்ந்திடு உயர்த்திடு....!" "உயர்ந்திடு உயர்த்திடு பணப்பைக் காத்திடு உள்ளம் பூரிக்கும் செயலைச் செய்திடு உடமை எல்லாம் பகிர்ந்து கொடுத்திடு உதவிக்கரம் நீட்டி அன்பைக் காட்டிட்டு!" "உடன்பட்டு உண்மை அறிந்து ஒற்றுமையாகிடு உலகம் போற்றும் சமதர்மம் நாட்டிடு உரிமை கொண்ட சமூகம் அமைத்திடு உயர்ந்த கொள்கை என்றும் விதைத்திடு!" "உயிரிலும் மேலாக ஒழுக்கம் வளர்த்திடு உறவு நிலவும் நட்பைக் கொடுத்திடு உதிரம் சிந்தா அமைதி வழங்கிடு உன்னால் முடிந்ததை துணிந்து செய்திடு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.6k views
-
-
ஏமாந்த கடிகாரம் ----------------------------- கையில் கட்டுவதெல்லாம் கடிகாரமே என்னும் பழைய ஒரு பிறவி நான் கடிகாரம் ஒன்றும் இருந்ததும் இல்லை எந்த வேளையிலும் இரவலாகவும் கட்டினதும் இல்லை மாமனார் கொடுத்த ஒன்று தங்கம் போல தகதகத்தது கல்யாணம் முடிந்த அன்றே கழட்டி வைத்தேன் இப்ப அது எங்கேயோ மாமாவிற்கு கடைசிக் காலத்தில் இதுவும் ஒரு கவலை ராத்திரி ஆழ்ந்த தூக்கம் இல்லை என்கின்றான் ஒருவன் எப்படி என்றால் அவனின் கடிகாரம் சொன்னது என்கின்றான் விளையாட்டின் நடுவிலேயே அய்யோ........... இதயம் எக்கச்சக்கமாக துடித்து விட்டது என்று அலறுகின்றான் இன்னொருவன் அதுவும் கடிகாரம் தான் சொன்ன…
-
- 0 replies
- 680 views
-
-
"பொன்னந்தி மாலையிலே" "பொன்னந்தி மாலையிலே தனியே நிற்பவளே அன்ன நடையில் மனதைக் கவர்பவளே சின்ன இடையில் அழகு காட்டுபவளே அன்பு கொண்டேன் அருகில் வருவாயோ?" "முந்தானை காற்றில் மேலே பறக்குதே சிந்தனை தடுமாறி ஆசை தூண்டுதே எந்தன் இதயத்தை தொட்ட தேவதையே இந்திர மண்டலத்து ஊர்வசி நீயோ?" "வண்ணக் கோலத்தில் மயக்கம் தருபவளே மண்ணின் வாசனையை பண்பில் சொல்பவளே எண்ணம் எல்லாம் உன்னையே நாடுதே கண்ணே கண்மணியே பூச்சூட வரலாமா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 318 views
-
-
-
- 0 replies
- 961 views
-
-
என் அன்பு இதயங்களுக்கு.. பணம் பற்றிய எனது 15 (குறும்)வரிகள்..! ******************************** பணக்கார மனிதனும் ஏழை மனிதனும் உலகத்தில் வாழ்ந்தோம்-இன்று ஒன்றாகவே போகிறோம்-கையில் ஒன்றுமில்லாமல். ************************************** பணமெனும் கடுதாசிக்காகவே காலத்தை வீணடித்தேன் ஏழைபோல் உலகத்தை ரசிக்கமுடியல்லையே என்னால். *************************************** நான் பிறந்த காலம் தொட்டு எல்லாம் அறிந்து விட்டேன் பார்க்காமலே போகப் போகிறேன் சில்றையை விட பெரிய காசுகளை. ***************************************** உழைத்து சாப்பிடும் மற்ற உயிரினம் போல் என்னால் எழும்பமு…
-
- 0 replies
- 997 views
-
-
"ஆலமரக் கிளியே ! அத்தானப் பாரடியே!" [எசப்பாட்டாக நாட்டுப்புறப் பாடல்] "ஆலமரக் கிளியே ! அத்தானப் பாரடியே! நீலக் கருங்குயிலே! அருகில் வாராயோ காலம் கடத்தாமல் நெற்றியிலே பொட்டுவைக்கவா?" "வேகாத வெயிலுக்குள்ளே குந்தி இருப்பவனே தகாத உன்னுறவு எனக்கு வேண்டாம் ஆகாச கோட்டை பொடிப்பொடியாகப் போகட்டும்!" "மண்டை பெருத்தவளே வீறாப்புநீ பேசாதேடி கண்டகண்ட பயல்கள்தான் உனக்குத் தேவையோ வண்ணக்குயிலே நெருங்கிநிண்ணு நான் பேசவாடி" "கால்ரூபாய்க்கு விறகுவிற்று காலம் கழிப்பவனே அல்லும்பகலும் திண்ணை திண்ணையாத் தாண்டுபவனே கல்லுநெஞ்சம் எனக்கில்லை கண்டவனுக்கும் தலைகொடுக்க!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 355 views
-
-
காலச்சக்கரம் சித்திரையில் கொட்டித் தீர்த்த பெருமழையில் சிந்திய விதைகள் வளர்ந்து பெருவிருட்ஷமாகி கோடையில் நல் நிழல் தந்து பச்சை பசேலென்ற வண்ணங்க்காட்டி மலர்தல் காய்த்து கனி தரும் என மக்கள் மனம் குளிர்ந்த வேளை "சட்டென மாறுது வானிலை "என அயலூரில் சுழன்று அடித்த சூறாவளியுடன் எங்கள் மண்ணிலும் மெல்ல குளிர் எட்டிப்பார்க்கிறது ."நேற்று போல் இன்று இல்லை என்றுமே மாற்றம்" தான் இனி மரம் கிளைகள் அனைத்து தாவரங்களும் அணையப் போகும் விளக்கு சுடர் விட்டு ஒளிர்வது போல பல வண்ணம் காட்டி நிற்கும்,மெல்லிய …
-
- 0 replies
- 702 views
- 1 follower
-
-
"கடவுள் கேட்கிறார்" "பாலை ஊற்றி என்னை குளிப்பாட்டுகிறாய் காலை மாலை எனக்கு படைக்கிறாய் சாலை ஓரத்தில் என் மகன் மாலை வரை இருக்க தவிக்கிறான் !" "பட்டும் பகட்டும் எனக்கு எதற்கடா? தட்டும் படையலும் எனக்கு எதற்கடா? கொட்டும் பாலை அவன் குடிக்கட்டும் சொட்டும் தேன் வயிற்றை நிரப்பட்டும்!" "தடல் புடலாக என்னை பூசிக்கிறாய் கடல் கடந்து யாத்திரை போகிறாய் குடல் வற்றி அவன் சாகிறான் உடல் சிதறி அவன் வாடுகிறான்!" "எங்கும் என்னை தேடி அலையாதே இங்கு கொட்டும் கறந்த பாலை அங்கு வறியவன் வாயில் கொட்டு அங்கு அவன் சிரிப்பில் நானே !" [க…
-
- 0 replies
- 483 views
-
-
"எழுதுகோல் கொண்டு பா தொடுக்கிறேன்" "எழுதுகோல் கொண்டு பா தொடுக்கிறேன் எக்களிப்பு இல்லை ஏற்றத்தாழ்வு இல்லை எள்ளளவு வெறுப்பு எவரிடமும் இல்லை என்றாலும் என்னை நானே வெறுக்கிறேன் !" "நேரம் போகாத சில நாட்கள் நேசம் கிடைக்காத சில உறவுகள் நேரார் தூற்றும் சில வசைகள் நேசகன் துவைக்கும் துணி ஆனேன் !" "வெறுப்பு மனதில் குடி கொள்ள வெளிச்சம் மெல்ல விலகிப் போக வெறுமை தனிமை என்னை வாட்ட வெண்மணல் தரையில் கருவாடு ஆனேன் !" "அல்லும் பகலும் என்னை சுற்றி அக்கம் பக்கம் நடப்பதைப் பார்த்து …
-
- 0 replies
- 1.1k views
-
-
"நேரிய பாதையில்" "நேரிய பாதையில் மனிதா நட நேர்மை கொண்ட தீர்மானம் எடு! நேசம் உள்ள நண்பர்களை அணைத்து நேரார் தரும் தொல்லைகளை அகற்று! ஆர்வம் வேண்டும் ஆராவாரம் வேண்டாம் ஆசை வைத்து செயலில் ஈடுபாடு! இன்பம் துன்பம் யாரும் தருவதில்லை இருப்பதை அறிந்து நடையைக் கட்டு! கொள்கை ஒன்றைத் தரமாக வகுத்து கொடுத்து எடுத்து சமாதானம் காணு! தெரிந்ததும் தெரியாததும் அறிந்து உணர்ந்தால் தெளிவான முடிவு தருமே வெற்றி!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 243 views
-
-
"நொட்டி நொடிய விடாதே பெண்ணே?" "ஒட்டி உடையில் பெண்மை காட்டி எட்டி நடையில் வேகம் காட்டி சுட்டி விடையில் புத்தி காட்டி வெட்டி பேச்சில் வெகுளி காட்டி தட்டி கழித்து நாணம் காட்டி முட்டி மோதி போகும் பெண்ணே!" "பட்டி தொட்டி எங்கும் சொல்லி கட்டி தங்கம் வெட்டி எடுத்து செட்டி செய்த மோதிரம் மாற்றி மெட்டி காலில் கண் சிமிட்ட தட்டி கேட்கத் துணை சேர ஒட்டி உரசிப் போகலாம் பெண்ணே!" "மூட்டி அடுப்பில் சமைக்க வேண்டும் கூட்டி பெருக்கித் துடைக்க வேண்டும் ஊட்டி பிள்ளை வளர்க்க வேண்டும் லூட்டி அடித்து குழப்ப வேண்டும் போட்டி போட்டு கொஞ்ச வேண்டு…
-
- 0 replies
- 1.5k views
-
-
"சயனகோலம் அவளின் அழகு கோலம்" "சயனகோலம் அவளின் அழகு கோலம் சரிந்த படுக்கையில் தேவதை கோலம் சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து சங்கடம் தருகிறது அவளின் பார்வை" "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில் சற்று நானும் என்னை மறந்தேன்" "சக்கர தோடு கழுத்தை தொட சடை பின்னல் அவிழ்ந்து விழ சலங்கை கால் இசை எழுப்ப சங்காரம் செய்யுது இள நகை" "சகுனம் பார்த்தே வெளியே வருவாள் சஞ்சலம் தந்து பலரை வருத்துவாள் சகிதமாய் தோழிகள் சூழ உலாவுவாள் சந்தோசம் பொங்க நானும் ரசிப்பேன்" "ச…
-
- 0 replies
- 834 views
-
-
"நாம் ஆணா பெண்ணா.. ?" [வித்தியாசமாக இருக்கட்டும் என இப்படி வசன கவிதையில் ஒரு முயற்சி.] "மழலையாய் பிறந்தோம் தாய் தந்தை மகிழ்வில் விளக்கம் இல்லை நாம் வேறா வேறா.." "குழந்தையாய் வளர்ந்தோம் ஒன்றாய் கட்டி உருண்டோம் குழப்பம் இல்லை நாம் ஆணா பெண்ணா.." "சிறு…
-
- 0 replies
- 158 views
-
-
"வானம்" "மேகங்கள் நகரும் வீதி கொண்டு மோகங்கள் தரும் வண்ணம் நீயே! தாகங்கள் தீர்க்கும் மழையைப் பொழிந்து சோகங்கள் துடைக்கும் கருணை வள்ளலே! போகங்கள் போக்கும் நிலவைத் தாங்கி தேகங்கள் வெப்பம் குறைக்கும் வானே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 371 views
-
-
பேசாமல் நகர்வதும் பேசிவிட்டு செல்வதும் பாசத்தின் வெளிப்பாடு அன்பிற்கு இல்லை எந்நாளும் பாகுபாடு சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 598 views
-
-
"இதயமே பேசு" "இதயமே பேசு ஆறுதல் கொடு இனிய காதலை மீண்டும் தந்திடு! இன்பம் காட்டி ஏமாற்றியது போதும் இரட்டை வேடம் இனிமேலும் வேண்டாம் இணக்கம் கொண்டு திரும்பி வந்திடு!" "அன்பு பொழிந்து ஆசை தெளித்து அழகு மொழியில் கொஞ்சிக் குலாவினியே! அகன்ற கண்ணும் சிறுத்த இடையும் அளவான மார்பும் கனவில் தோன்றி அக்கினியாய் இன்று என்னை எரிக்கிறியே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 379 views
-
-
எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் என்னை நீ தொலைத்து எங்கே சென்றாய் என்னை நீ அழைத்து எங்கே சென்றாய் தினந்தோறும் பணந்தேடி எங்கே சென்றாய் திசைதோறும் புகழ்தேடி எங்கே சென்றாய் உடலுக்குள் உயிர் காணாமல் எங்கே சென்றாய் உடலை தினம் பேணாமல் எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எதிலும் நான் தெரிகின்றேன் எங்கே சென்றாய் எல்லாம் நான் அறிகின்றேன் எங்கே சென்றாய் பேதமின்றி அள்ளித் தந்தேன் எங்கே சென்றாய் பேரிடரிலும் துணை வந்தேன் எங்கே சென்றாய் மும்மலம் நீ அறியாமல் எங்கே சென்றாய் முற்பிறவி நீ தெரியாமல் எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ …
-
- 0 replies
- 765 views
-
-
அன்னையர் தினத்தைக் கொண்டாடி அம்மாவை அடுத்த வேளை உணவுக்குத் திண்டாட வைக்கும் பிள்ளைகளும் உள்ளனர் இந்தப் பூவுலகில்... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 696 views
-
-
"கண்ணீரில் நனையும் பூக்கள்" "கண்ணீரில் நனையும் பூக்கள் இவளோ ஊண் உறக்கம் மறந்த மங்கைதானோ அண்டத்தில் அழகாய் பிறந்த விதியோ கண்ட ஆண்களையும் நம்பிய கதியோ கொண்ட கோலம் உண்மையை மறைத்ததோ?" "உள்ளங்கள் இரண்டும் உண்மையில் இணைந்தால் உயிர்கள் கலந்து காதல் மலர்ந்தால் உலகம் என்றும் இன்பச் சோலையே! உணர்ச்சியை மட்டும் கொண்ட நட்பு உனக்கு ஈவது விழிநீர் மட்டுமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 346 views
-
-
"குழலூதும் இவனை பார்த்து" "மழலையின் மொழி கேட்டு நான்பேசும் மொழி மறந்தேன் மழலையின் மொழி பேசி என்னையே நான் மறந்தேன்!" "மழலையின் குறும்பு கண்டு துன்பங்கள் ஓடி மறைந்தன மழலையின் புன்னகை பார்த்து இதயமே வானில் பறந்தன!" "குழலூதும் இவனை பார்த்து குறும்பு கண்ணனை மறந்தேன் குழந்தை காட்டும் நளினத்தில் குமரி ஊர்வசியை மறந்தேன்!" "குழவி தளர்நடை கண்டு குதூகலித்து நான் மகிழ்ந்தேன் குழவியின் கொஞ்சிக் குலாவுதலில் குரத்தி வள்ளியை மறந்தேன்!" "தரணியில் ஓர்நிலவு கண்டேன் மழலையில் பலநிலவு கண்டேன் தரணியில…
-
- 0 replies
- 347 views
-
-
உயிரோடு கரைதின்ற கடல்..! ************************************* கண் இமைக்குள் உனை வைத்தே! காலம் எல்லாம் வாழ்ந்தோம் கடல் எங்கள் தாயென்றே- உன்கால் ஓரம் கிடந்தோம். அலை கரத்தால் எம் உடலை அன்போடு தொடுவாய்…. அதை எடுத்து எம் நெஞ்சின் ஆழத்தில் புதைப்போம். உனை விட்டு ஒரு நாளும் ஊர் தள்ளி போகோம். உன் வாழ்வில் எம் வாழ்வை ஒன்றாகக் கலந்தோம். ஓர் இரவில் உன் உயரம் ஓங்கியது ஏனோ? உயிர் குடிக்க உந்தனுக்கு தூண்டியது யாரோ? தாயே தன் பிள்ளைகளின் தலை கொய்யலாமோ? தடை உடைத்து மதம் பிடித்து- எம்தடம் அழிக்கலாமோ? உன் மீது நாம் கொண்ட உயிர் பாசம் எங்கே? …
-
- 0 replies
- 305 views
-