கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
774 topics in this forum
-
உயிரோடு கரைதின்ற கடல்..! ************************************* கண் இமைக்குள் உனை வைத்தே! காலம் எல்லாம் வாழ்ந்தோம் கடல் எங்கள் தாயென்றே- உன்கால் ஓரம் கிடந்தோம். அலை கரத்தால் எம் உடலை அன்போடு தொடுவாய்…. அதை எடுத்து எம் நெஞ்சின் ஆழத்தில் புதைப்போம். உனை விட்டு ஒரு நாளும் ஊர் தள்ளி போகோம். உன் வாழ்வில் எம் வாழ்வை ஒன்றாகக் கலந்தோம். ஓர் இரவில் உன் உயரம் ஓங்கியது ஏனோ? உயிர் குடிக்க உந்தனுக்கு தூண்டியது யாரோ? தாயே தன் பிள்ளைகளின் தலை கொய்யலாமோ? தடை உடைத்து மதம் பிடித்து- எம்தடம் அழிக்கலாமோ? உன் மீது நாம் கொண்ட உயிர் பாசம் எங்கே? …
-
- 0 replies
- 306 views
-
-
"மடியில் ஏந்திக் கொள்ளடா மன்னவா!" "மாடி வீட்டில் உன்னைக் கண்டேன் தாடி மீசை அழகு பார்த்தேன்! வாடி இருந்தவளை தூக்கி நிமிர்த்தினாய் தேடி என்னிடம் அடைக்கலம் வாடா!" "கடிதம் எழுதி கையில் தந்தாய் ஈட்டி கொண்டு நெஞ்சைத் துளைத்தாய்! கட்டிப் பிடித்து இன்பம் பகிர்ந்தாய் அடிமை அற்ற வாழ்வு கொடடா!" "ஓடி விளையா…
-
- 0 replies
- 1.2k views
-
-
"ஒதுங்கி மூலையில் மலர்ந்த ரோசா" "ஒதுங்கி மூலையில் மலர்ந்த ரோசா ஒளியில் மிளிர்ந்து அழகைக் காட்டி ஒலி எழுப்பும் வண்டைப் பார்த்து ஒய்யாரி கேட்குது நீ யார் ?" "துள்ளி பாயும் காட்டு மான் துணையுடன் மறைவில் ஒளிந்து இருந்து துரத்தி வந்த புலியைப் பார்த்து துணிந்து கேட்குது நீ யார் ?" "வாமச் சொரூப கோழிக் குஞ்சு வாட்டம் கொண்டு நிழலில் பதுங்கி வானத்தில் வட்டமிடும் கழுகைப் பார்த்து வாக்குவாதம் செய்யுது நீ யார் ?" "மாணவி ஒருவள் கண்ணீர் வடிய மாதா வாக்கிய குருவை நொந்து மாழை மடபெண் வெட்கத்தை விட்டு மாசுபடுத்தியவனைக் கேட்குது ந…
-
- 0 replies
- 1.1k views
-
-
"காதல் ஈன்ற இன்பம் மகிழ்ச்சியே!" "புரிந்துணர்வில் புதிய பரிமாணம் கண்டு புத்தம்புது வாழ்வைக் கூடி அமைத்து புதுமை படைக்கும் எண்ணம் கொண்ட புதுமணத் தம்பதிகள் இல்லம் சொர்க்கமே!" "காரணம் தெரிந்து சொற்களை அளந்து காலம் அறிந்து மனம் ஒன்றி காமம் கலந்த பாசம் தரும் காதல் ஈன்ற இன்பம் மகிழ்ச்சியே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 582 views
-
-
செக்கச் சிவந்த முகம் எப்பவுமே சிரித்த முகம் எங்க ஊரு சொந்தக்காறி தங்கமான உதட்டுக்காறி இவளை விட அழகுராணி எவள் இருப்பாள் அந்த அழகு ரோசா தோத்துப்போகும் இவள் ஆடிப்பாடி சிரிக்கும் போது .
-
- 0 replies
- 908 views
-
-
இறுதியில் கிடைத்த உனதன்பு இளைப்பாறிக் கொண்டு இருக்கிறது இதயத்தில்.... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 1.2k views
-
-
"நில்லாமல் நிற்கும் உன்கால் அழகினால்" [அடி எதுகை 'ல்,ள்,ழ்' யிலும் இணை மோனை: (1,2) லும் பாடல் தரப்பட்டுள்ளது] "நில்லாமல் நிற்கும், உன்கால் அழகினால் சொல்லாமல் சொல்லும், உன் பார்வையால் கொல்லாமல் கொல்லும், உன் வனப்பினால் செல்லாமல் செல்லும், என்னைத் தடுக்கிறாய்!" "துள்ளாமல் துள்ளும், என் உள்ளத்தில் கிள்ளாமல் கிள்ளி, ஆசை கூட்டி அள்ளாமல் அள்ளி, அன்பைக் கொட்டி தள்ளாமல் தள்ளி, என்னை அணைக்கிறாய்!" "பள்ளியில் படிக்காத, பாடம் சொல்லி வள்ளல்கள் வழங்காத, காதல் கொடுத்து நுள்ளாமல் நுள்ளி, ஊடல் கொண்டு பள்ளத்தில் பதுங்கி, என்னை ஏங்கவிடுகிற…
-
- 0 replies
- 150 views
-
-
"வானுயர்ந்த கற்பனைகள்" "வானுயர்ந்த கற்பனைகள் மனதில் ஓங்கட்டும் மண்ணுயிர் எங்கும் கருணை பொழியட்டும் வாட்டமற்ற செயல்கள் உலகைத் தழுவட்டும் கூட்டம்போடும் ஆடம்பரம் ஒழிந்து போகட்டும் விண்ணில் தோன்றும் வானவில் போல் கண்ணில் காணும் கனவு ஒளிரட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 646 views
-
-
யுத்தமும் அழிவும் அநீதியும் அவலமும் ஆக்கிரமிப்பும் பசியும் பட்டினியுமாக மனிதம் மறைந்துபோன உலகத்தின் மேனி சீழ் பிடித்து ஒழுகிக்கொண்டிருக்கும் போது உண்மைகளையும் சத்தியங்களையும் எழுதுங்கள் உலகத்தின் ஒரு மூலையில் ஒரு ஒரமாக நின்று அழும் குழந்தை எப்படியாவது வாழ்ந்து தான் ஆகவேண்டும் என்ற ஒரு சிறு நம்பிக்கையுடன் .
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்றைய வாழ்க்கை கொடுக்கும் அழுத்தத்தை அளக்க ஒரு சுட்டி, அளவீடு இங்கில்லை. மருத்துவமும் அறியாதது அது. அளவில்லா விருப்பங்களே அழுத்தங்களாக பின்னர் இழப்புகளாக மாறுகின்றன என்று சொன்னாலும், அதைக் கேட்போர் என்று எவரும் இல்லை. *************************** பழைய நீதிக்கதை ------------------------------ ஒரு ஊரில் ஒருவர் இருந்தார் அவர் பெயர் அப்துல் கலாம் 'கனவு காணுங்கள்' என்று அவர் சொன்னார் கலாம் ஐயா பொதுவானவர் எளிமையானவர் நல்லவையே சொன்னார் ஆகவே கனவிற்கு மேல் கனவென்று எல்லோரும் காண்கின்றனர் உத்தியோகம் உயர ஊதியம் இரண்டு மடங்காக வீடு மாளிகையாக வாகனம் வசதியாக பிள்ளைகள் தனியே…
-
- 0 replies
- 377 views
-
-
“ராஜ பார்வையின் ரகசியங்கள்” "ராஜ பார்வையின் ரகசியங்கள் எதுவோ ராதை கொடுத்த ஊடலின் வலியோ ராத்திரி துயிலாத விழிகளின் கோலமோ ராணியைக் காணாத ராமனின் சீற்றமோ?" "கண்கள் ஏங்கும் பார்வை ஏனோ கண்மணி சுற்றி சிவந்தது எதற்கோ கவலைகள் தந்த கண்மணி யாரோ களங்கம் படுத்திய செயல் என்னவோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 294 views
-
-
டிட்வா!துயர். **************** மண் சரிவு இது மற்றவர்களுக்கு ஒரு செய்தி. நாளை விடிந்தால் மகிழ்வான.. எத்தனை எண்ணங்கள் எத்தனை கனவுகள்.. எத்தனை குழந்தைகளின் மழலைப் பேச்சுக்கள் வேலை, பாடசாலை. திருமணங்கள்.காதல். கொ̀ண்டாட்டங்கள். அத்தனையும் ஒரு நொடியில் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்டு விட்டதே! இறைவா! அப்பா,அம்மா,அண்ணன்,தம்பி அக்கா,தங்கை நண்பர்களென வெளியில் நின்று தேடும் உறவுகளுக்குத் தான் தெரியும் மூடிய மலையைவிட பெரியது. இந்த இழப்புகளின் வலியென்பது. மண்சரிவு இது மற்றவர்களுக்கு ஒரு செய்தி. துயருடன் -பசுவூர்க்கோபி.
-
- 0 replies
- 184 views
-
-
பொருள் விசையும் போலத்தான் மனிதரும் காதலும்❤❤❤ இரு பொருட்களாகிய ஆணும் பெண்ணும் ஒரு நேர்கோட்டில் சீரான வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது விசையாகிய காதல் பொருட்களாகிய ஆணையும் பெண்ணையும் அவர்களது சீரான வாழ்க்கை முறையிலிருந்து மாற்ற முயற்சிக்கும் தள்ளும்,இழுக்கும்,வீழ்த்தும் அதுவே காதல்🤣 எந்த ஒரு விசையாகிய காதலுக்கும் சமமான எதிர் விசையாகிய காதல் உண்டானாலே அது வெற்றியளிக்கும் ஆணாகிய பொருளுக்கும் பெண்ணாகிய பொருளுக்கும் சமமான எதிர் விசையாகிய காதல் உருவாகினாலே அது நிலைக்கும் இல்லையெனின் ஆணோ பெண்ணோ ஏதோ ஒரு பொருளை விசை எனும் காதல் ஒருதலைக் காதல் எனும் கவலைக் கிடங்கில் இழுத்து வீழ்த்தும்,தள்ளும்🙄 நிறைகளை மட்டுமே கண்டு…
-
- 0 replies
- 463 views
-
-
தீபாவளித் துளிகள்! ************************ தீப ஒளியில் இருளகன்றது குடிசை எங்கும் வெளிச்சம் அடுப்புக்குள் பூனை கிடப்பது தெரிந்தது. தீபாவளி எப்போது வருமென காத்துக் கிடந்தார்கள் குழந்தைகள் அடுத்த புது உடுப்புக்காக. விற்கும் விலையை இருமடங்காக்கி பாதிவிலைக்கு தருவதாக கொடுக்கிறார்கள் கடைக்காரர்கள். நரகாசூரனை அழித்த நாளென கொண்டாடுகிறார்கள் உயிரோடே இருக்கிறான் போதைப்பொருள் அசுரனாக. தீபாவளி கொண்டாட்டத்துக்காக பழய உடுப்புகளை களட்டி வீசுகிறார்கள் பாவம் ஆடு மாடுகள். கோயில்களை விடவும் நிரம்பி வழிகிறது மக்கள் கூட்டம் மதுக்கடை வாசல்களில். ஆலயங்களுக்கு எல்லா பூக்களும் எடுத்து செல்கிறார்கள் ஆனால் செவ்வந்தியை தவிர்த்து. பெற்றோலுக்கு பதிலாக மது ஊற்றி ஓடும் வாகனங்கள் பயணிகள் எச்சரி…
-
- 0 replies
- 553 views
-
-
உயிர் தமிழே நீ வாழ்வாய்! ********************* பட்டாளம் எம்மை சுட்டாலும் குண்டு பட்டாலும் உதிரம் குடித்தாலும் உணவு மறுத்தாலும். பிரித்தாலும் முறைத்தாலும்-சிறை தன்னில் அடைத்தாலும் அறுத்தாலும் தோல் உரித்தாலும் அவயங்கள் எடுத்தாலும். அழித்தாலும்,புதைத்தாலும் அடியோடு வெறுத்தாலும் கருவோடு கலைத்தாலும் கலையெல்லாம் பறித்தாலும். இருக்குமிடம் எரித்தாலும் இடம் மாறியலைந்தாலும் உருக்குலைந்து போனாலும் உயிர் தமிழே நீ வாழ்வாய். இத்தனை வதைகள் வந்தபோதும் செத்து மடியாத செந்தமிழே-உலகம் உயிருடன் இருக்குமட்டும் அழிவு உனக்கும் இல்லையென்பேன். அன்புடன் -…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 397 views
-
-
"நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்" "நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள் தஞ்சம் கொடுத்தேன் ஆறுதல் அளித்தேன் வஞ்சனை இல்லாமல் அன்பை கொட்டினாள் கொஞ்சம் மயங்கி சந்தோசம் கண்டேன்!" "மஞ்சள் நிலாவில் குளிர் காய்ந்தோம் மஞ்சத்தில் நெருங்கி அருகில் இருந்தோம் அஞ்சா நெஞ்சத்தாள் எதோ உளறினாள் நஞ்சு கலந்து காதல் வீசினாள்!" "கொஞ்சி வஞ்சி இன்பத்தில் பூத்தாள் வஞ்சனை இதழால் முத்தங்கள் தந்தாள் நெஞ்சத்தை விஞ்சும் கதைகள் சொன்னாள் வஞ்சிவீரி மஞ்ஞை வீராப்பு பேசினாள்!" "நஞ்சு தந்த போதை மயக்கத்திலும் காஞ்சி வீரனாய் அவளை தடுத்தேன் செஞ்ச தெல்லாம் செய்தது போ…
-
- 0 replies
- 321 views
-
-
"நெஞ்சம் பாடும் வீரவணக்கம்" "நெஞ்சம் பாடும் வீரவணக்கம் இன்றோ வஞ்சம் செய்து மாண்டவர்கள் இவர்களோ கொஞ்சும் மழலையின் தலையும் சிதறியது கெஞ்சும் மங்கையின் கற்பும் பறந்தது தஞ்சம் புகுந்த அப்பாவிகள் எங்கேயோ?" "மஞ்சம் தேடிய போராட்டம் இதுவல்ல குஞ்சும் குழந்தைகளின் எதிர்காலம் நோக்கி விஞ்சும் அடக்குமுறையைத் தட்டிக் கேட்க மிஞ்சும் அநீதி கண்டு கொதித்தெழுந்த நெஞ்சு நிமிர்த்திய தியாகிகள் தெய்வங்களே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 316 views
-
-
"மூன்று கவிதைகள் / 12" விலங்குகளுக்கு விலங்கிட்டு கூண்டில் அடைத்து மனித விலங்குகளை சுதந்திரமாய் விட்டோம் விலங்குகளை ஒவ்வொன்றாக அடக்கி அடக்கி குப்பை மனிதர்கள் செழிக்க விட்டோம்! ஆசையில் மூழ்கி அசிங்கத்தைப் பூசி புண்ணிம் கண்ணியம் புதையுண்டு போக பாதை தவறி அழுக்கைச் சுமந்து மனிதன் வாழ்கிறான் மனிதம் இல்லாமலே! ........................................................ பெரிய தோற்றத்தில் நடக்கும் யானையே உன் அறிவும் உனக்குப் பெரிதோ? சிலவேளை மதம் பிடித்து அலைந்தாலும் உன்னிடம் மதம் [சமயம்] இல்லாதது எனோ? பரிவாக உன்னைக் கவனிக்கும் பாகன் உன் நிழலிலேயே இளைப்பாறுவது தெரியாதோ? வேடிக்கைப் பார்க்கும் மக்களை எல்லாம் தள்ளி நிற்க பயப்படுத்துவது எனோ? பாசத்தின் அருமை உனக்குத் …
-
- 0 replies
- 178 views
-
-
நல்லதோர் வாழ்வு இருந்தது நல்லதோர் வாழ்வு ஒன்று இருந்தது ஒரு காலம் நாலு பேர் வந்து போயினர் நமக்காய் ஒரு வாழ்வு இருந்தது ஒற்றுமை ஒன்று இருந்தது ஒரு காலம் உறவுகள் வந்து போயினர் பிரியாமல் முற்றத்தில் வந்து இருந்தது முழுநிலவு பக்கத்தார் வந்து பேசினர் பல நேரம் ஆயிரம் சனம் இருந்தனர் அருகோடு அமைதியாய் கூடி வாழ்ந்தனர் குலையாமல் அங்கு ஓர் பிரிவும் இல்லை அனாதை என்ற ஓர் சொல்லும் இல்லை அழகான பனை இருந்தது அருகில் ஒரு வேம்பு நின்றது அதன் கிளையில் ஒரு குயில் இருந்தது கூவிப் பல பாடல் கேட்டது காடு இருந்தது காடு நிறையப் பூ இருந்தது பூவோடு கனவு இருந்தது கனவு மெய்ப்படக் காத்து இருந்தது பாட்டும் கேட்டது கூத்தும் கேட்…
-
- 0 replies
- 1k views
-
-
"சிந்தை சிதறுதடி" "சிந்தை சிதறுதடி மயானம் அழைக்குதடி உந்தன் காலடி வணங்கத் துடிக்குதடி! நிந்தை பேசா உன்னையும் கெடுத்தானே விந்தை உலகமடா கொடியவன் பூமியடா கந்தைத் துணியுடன் வீசிச் சென்றானே!" "தீந்தை விழியால் என்னை மயக்கியவள் சாந்தை பூசி பெட்டிக்குள் போறாளே! வேந்தையும் ஏழையும் ஒன்றே என்றவள் சுந்தரத் தமிழில் கொஞ்சிக் குலாவியவள் சந்திர ஒளியில் தீபமாய் ஒளிர்கிறாளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 299 views
-
-
"மனமும் மனிதனும்" "மனமும் மனிதனும் போராடும் உலகில் கானம் அழித்து சூழலைக் கெடுக்கிறான் தானம் போட்டு இணையத்தில் பதிக்கிறான் மானம் புரியாமல் மனிதநேயம் தேடுகிறான்!" "மதி நுட்ப சிந்தனையாளனா மரத்துப்போனவனா நெருக்கடி வந்தபின்பே மாற்றுவழி தேடுகிறானா தொழில்நுட்பம் எம்மை அடக்கி ஆள்கிறதா எண்ணம் குறுகியதா மனிதம் தோற்றதா?" "உள்ளம் அலைபாயும் மனிதன் இவன் நெஞ்சம் முழுக்க மெய்யும் பொய்யும் மனது மாந்தனை உயர்த்தும் வீழ்த்தும் மனிதனின் விருப்பம் பாசாங்கும் தேடும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 292 views
-
-
"மூன்று கவிதைகள் / 14" 'புகைப்படக் கவிதை' தோற்றத்தில் பெரியவனே - தும்பிக்கை கொண்டவனே ஆற்றலில் பலமானவனே - நம்பிக்கைத் தோழனே மதம் பிடித்து - சிலவேளை அலைந்தாலும் மதம் [சமயம்] உன்னிடம் - ஒருவேளையும் இல்லையே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ------------------------------------------- 'மலைமுடியில் பனியழகு மனங்கவரும் இயற்கையழகு' மலைமுடியில் பனியழகு - மனங்கவரும் இயற்கையழகு மகளிர் வடிவத்தையும் - மகிமையிழக்கச் செய்து மடவரலின் அன்னநடையையும் - மறைத்து விடுமே! கொடுமுடியில் மஞ்சுபெய்ய - கொடிகளில் வெண்மைபடர கொடிச்சியின் எழிலையும் - கொன்று மங்கலாக்கி கொற்றவையின் கவினையும் - கொடுமையாய் மாற்றுமே! [கந்தையா தி…
-
- 0 replies
- 174 views
-
-
"உயிரின் உயிரே!" "அன்பு கொண்டு .... அருகில் வந்தேன் ஆதரவு சொல்லி .... ஆனந்தம் தருவாயோ? இன்பம் மலர .... இருவரும் சேர்ந்தோம் ஈருடல் ஒன்றாக .... ஈரமான ரோசாவே உலகம் மறந்து .... உவகை கொண்டோமே!" "ஊமை விழியில் .... ஊர்வலம் சென்று எழுச்சி கொண்ட .... எம் காதலே ஏமாற்றாமல் இவனின் .... ஏக்கம் தணியாயோ? ஐம்புலனும் தேடும் .... ஐயமற்ற அழகியே ஒப்பில்லா என் .... உயிரின் உயிரே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 316 views
-
-
"ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும்" [ஆசை திருப்தியடையாது] "ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும் ஆபரணம் ஆக்கித் தன்னை அலங்கரிக்கிறான் ஆகாயம் வரை சேர்க்க அல்லும்பகலும் ஆரவாரத்துடன் ஓய்வு மறந்து ஓடுகிறான் !" "நேசிக்கிறான், வெறுக்கிறான், பகுத்தறிவு மறந்து நேர்த்தி அற்ற செயல்களில் ஈடுபடுகிறான் நேசக்கரம் மறந்து பண்பு தொலைத்து நேராராகி செல்வத்தில் மட்டும் குறியாயிருக்கிறான் !" "விருப்பம் மட்டும் வாழ்வு இல்லை விஞ்ஞான உண்மைகளைப் புரிந்து கொள் விரைந்து விரைந்து செல்வம் குவிக்காதே விருந்தோம்பல் உடன் அன்பையும் வளர் !" "மகிழ்ச்சி என்பது மனிதனின் …
-
- 0 replies
- 1.5k views
-