கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
"அன்பின் வடிவே அழைப்பது புரியாதா?" "அன்பின் வடிவே அழைப்பது புரியாதா பண்பின் இருப்பிடமே பழகியது தெரியாதா அன்ன நடையாளே அருகினில் வருவாயா சின்ன இடையாளே சினம் மறவாயா மண்ணின் வாசனை அள்ளி வீசுபவளே வண்ணப் பூந்தென்றலே தோள் சாயவா?" "உண்மையை உணர்ந்து உள்ளம் தாராயா கன்னக் குழிக்குள் என்னை வீழ்த்தாயா மின்னல் வேகத்தில் தோன்றி மறைபவளே எண்ணம் எல்லாம் என்றும் நீதானே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 808 views
-
-
"கிள்ளை மொழி பேசும் பிள்ளைக்கு ஒரு தாலாட்டு" "கிள்ளை மொழி பேசும் மரகதமே கிளியே எங்கள் குலக் கொடியே கிண்கிணி யோடு சிலம்பு கலந்தாட கிருத்திகை நன்னாளில் கண் உறங்காயோ?" "மஞ்சள் முகத்தாளே குதலை மொழியாளே மடியில் தவழ்ந்து தள்ளாடி சத்தமிட்டு மல்லிகை பந்தலில் ஓடி விளையாடி மகரிகை தொங்கும் மஞ்சத்தில் உறங்காயோ?" "சின்ன பூவே சிங்கார பூவே சிஞ்சிதம் காதில் தேனாய் விழ சித்திரம் பேசும் கண்ணும் ஓய சிந்தைநிறுத்தி இமைகள் மூடாயோ ?" "வடந்தை உன்னை தழுவாது இருக்க வண்ண மலர்களால் தூளி கட்டி வஞ்சகர் கண் படாது இருக்க வட்ட பொட்டிட்டு விழி…
-
- 0 replies
- 445 views
-
-
"அகிம்சையின் பிறப்பிடம் அண்ணலின் இருப்பிடம்" "அகிம்சையின் பிறப்பிடம் அண்ணலின் இருப்பிடம் அன்பின் மகிமையை அன்று கண்டோம்! அமைதியான போரில் சுதந்திரம் பெற்றதும் அனைவரும் இணைந்து மகிழ்ச்சி அடைந்தோம்!" "இந்தியா பிரிந்தது பாகிஸ்தான் உடைந்தது இன்றைய ஆட்சியில் சுதந்திரம் எங்கே ? இணைந்து வாழ்வது அறவழியின் பெருமை இருப்பை மதிப்பது மனிதத்துக்கு மதிப்பு!" "காந்தி பெருந்தகையை மனதாரக் வணங்குகிறேன் காகிதமடலில் மட்டுமே வருத்தாமை இன்று! காந்தி ஜெயந்தி அக்டோபர் இரண்டு காரணம் அறிந்து முழுமையாக பின்பற்றுவோம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 398 views
-
-
"முற்றத்து மல்லிகையில் மூழ்கும் நினைவு" "முற்றத்து மல்லிகையில் மூழ்கும் நினைவு முட்டி மோதுது கொண்டையில் சூட்டியவனை! முல்லைக் கொடியாக கைகளில் ஏந்தினான் முத்துச்சரமாக நானும் புன்னகை சிந்தினேன்! "பட்டத்து ராணி நீயே என்றான் பகல் இரவாக காதல் தூவினான்! பகட்டு வார்த்தையில் என்னைக் கொடுத்து பருந்து வாயில் இரையாய் போனேன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 219 views
-
-
"பல்கலைக்கழக வாழ்வின் நினைவுகள்" [பாடல் 01] [உயிர் எழுத்துக்கள் வரிசையில் / பல்கலைக்கழக நினைவு இதழில் வெளியானது / மெல்பேர்ண், ஆஸ்திரேலியா] "அறிவிற்கு பத்தொன்பதில் ஒன்று கூடினோம், அறுபது ஆயிரம் கனவு கண்டோம், ஆறு பாயும் பேராதனை வளாகத்தில், ஆறுதல் அடைந்து ஆனந்தம் கண்டோம்!" "இறுமாப்பு இல்லை வேற்றுமை இல்லை, இதயங்கள் கலந்து கூடிக் குலாவினோம், ஈரம் சொட்டும் மலை அடிவாரத்தில், ஈசனைக் கண்டு பரவசம் அடைந்தோம்!" "உலகத்தை கட்ட பொறியியல் படித்தோம், உண்மையை உணர்ந்து நட்பை வளர்த்தோம், ஊருக்கு ஊர் ஊர்வலம் போனோம், ஊசி முனையிலும் நடனம் ஆடினோம்!" "எறும்புகள் போல் சுமை தாங்கினோம், எண்ணங்கள் வளர்த்து அறிவை கூட்டினோம், ஏற்றம் இறக்கம் எம்மை …
-
- 0 replies
- 484 views
-
-
வைகறை நேரத்தில் கரை தாண்டி கடல் தீண்டி கட்டுமரம் சென்றதே அந்தி மாலை ஆனதே அந்த ஆதவனும் அரைபாதியாக மேற்கு எல்லையில் நின்றதே கரை திரும்புமா கட்டுமரம் அதில் எனை மணம்முடித்த மணவாளனும் பாதுகாப்பாக திரும்பி வந்திடுவானா என காத்திருக்கும் மனைவியின் கன்னத்தில் கண்ணீர் துளிகளும் தாமத்தின் பதற்றத்தில் மங்கை அவள் மனதில் நடுகடலில் ஆழிசுழல் வந்து களத்தினை பாதித்ததோ அண்டை நாட்டு கள்வர்களால் பாவம் நிகழ்ந்திருக்குமோ என எல்லைக்கடந்ததே எண்ணங்கள் என்னவளின் மனதில் என கூறிடும் அலையின் சலனங்கள் அதை என்றும் கைது செய்திட ஆளில்லை என்னவளின் அச்சத்தினால் அதை நிறைவு செய்திட இயலவில்லை கண்ணெதிர கணவனை காணும் வரை....
-
- 0 replies
- 786 views
-
-
எனது பிரித்தானிய பயணத்தின் போது கண்டது,கேட்டது,மகிழ்ந்தது.என்ற வரிசையில்.. இது முதலாவது கவிதை. இதைஉங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன். நன்றிகள். Bed ford வெட் வோர்ட் நகரமும் “கிரேட் நதியும்” ******************************** லண்டன் இருந்து நூறு மைல் கற்களுக்கப்பால் அமைந்துள்ள அழகான நகரமிது. அண்ணளவாக.. இருநூற்றி முப்பது கிலோமீற்றர் நீளம் கொண்ட ரிவர் கிரேட் நதி (The River Great Ouse) புல்வெளிகளையும் காடுகளையும் கட்டிடங்களையும் வீடுகளையும் கரையோர மரங்களையும் இருபக்கமும் அணைத்தபடியே! வளைந்து நெழிந்து …
-
- 0 replies
- 816 views
-
-
"பிறந்தநாள் வயதைக் கூட்டுது ஒருபக்கம்" [01/11/2023 எழுதியது] "எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நானே எதையும் அலசி என்போக்கில் வாழ பழகி விட்டேன்!” "குழந்தை பருவம் சுமாராய் போக வாலிப பருவம் முரடாய் போக படிப்பு கொஞ்சம் திமிராய் போக பழக்க வழக்கம் கரடாய் போச்சு!” "உண்மை தேடி அலச தொடங்கினேன் வேஷம் போட்ட பலதை கண்டேன் ஒற்றுமை அற்ற மதங்களை கண்டேன் ஜனநாயகம் அற்ற ஜனநாயகம் கண்டேன்!” "நானாய் வாழ அமைதி தேடினேன் வாழத் தெரியாதவன் என்று திட்டினர் நாலு பக்கமும் ஓடித் திரிந்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
"தவமின்றிக் கிடைத்த வரமே" "தன்னந் தனியே தவித்து இருந்தவனை தட்டிக் கொடுத்து தெம்பு அளித்து தத்துவம் தவிர்த்து யதார்த்தம் உணர்ந்து தன்னையே தந்து மகிழ்வை ஈன்று தலைவி நானேயென நாணிக் கூறி தளர்வு இல்லாக் காதல் தந்தவளே!" "அவல நிலையில் நின்ற இவனை அவனியில் வெறுத்து தனியே சென்றவனை அவனது மேலே கொண்ட கருணையால் அவதிப் படாதே ஆயிரம் வந்தாலுமென அவதாரமாக வந்தவளே! அன்பின் அழகே! தவமின்றிக் கிடைத்த வரமே! நீயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 647 views
-
-
நவீன கவிதை / "நிழல்" "என்னை பின்தொடரும் இருண்ட நிழலே நான் நடக்க ஏன் நீயும் நடக்கிறாய் சிலவேளை முன்னுக்கு நிற்கிறாய் மறுவேளை பின்னுக்கு நிற்கிறாய் குட்டையாய் தெரிகிறாய் நெட்டையாய் தெரிகிறாய் ஏன் உனக்கு இந்த கோலம்?" "வெளிச்சத்தில் கூட்டாளியாய் வருகிறாய் இருட்டில் ஏனோ ஒழிந்து விடுகிறாய் ? நிழலே , உன்னை பார்த்து ரசிக்கிறேன் என்றாலும் உன் கோலம் உண்மை சொல்லாது கை விரல்கள் விந்தை காட்ட நீ நாயாவாய், குருவியாவாய் எப்படி உன்னை நம்புவது? நான் ஏங்கி துடிக்கிறேன் நண்பனே!" "உன்னை மதிலில் பார்க்கிறேன் ஒரு கத்தி என் முதுகை குத்து…
-
- 0 replies
- 1.8k views
-
-
புலனங்களில் கடலை போடும் உரையாடல் படிப்புக்கான தகவல் தேட மறந்திடல் பிறர் நசை நிலையை தகுதி பக்கத்தில் 30 நிமிடம் குறும்படமாக காணாமல் தவிர்த்தால் சிலர் உறவுகள் முறிந்திடல் விடலை பருவத்தில் விளையும் உணர்வுகள் வன்மமும் திகைக்கும் மோதல்கள் காமமும் பகைக்கும் பலருடன் பாலியல் உறவுகள் கிளை இல்லாத மரங்களா வலைதளத்தில் வரதா தகத விளம்பரங்களா நற்பண்புகள் வளர்வது நாம் கொண்ட எண்ணங்களாளா தீமைகள் விளைவது உள்ளுணர்வை கட்டமைக்காததளா பாலையின் கானலில் நீரில்லை பாலும் கல்லும் ஒன்றில்லை இலையின் நிறம் பச்சை என்றுமே நீரின் மீது அதற்கில்லை இச்சை அதே போல் என் மனசாட்சியை மதிப்பிடல் செய்திடுங்கள் பரிச்சயம் இல்லாமல் பா…
-
- 0 replies
- 696 views
-
-
"மூன்று கவிதைகள் / 15" 'நீல நயனங்களில் நீண்டதொரு கனவு' நீல நயனங்களில் நீண்டதொரு கனவு ஓலம் இடுகிறது மனதை வருத்துகிறது! காலம் கனிந்து கைகூடிய காதல் கோலம் மாறி கூத்து அடிக்கிறது உலக வரையறை காற்றில் பறக்கிறது! கண்ணோடு கண் கலந்த அன்பு மண்ணோடு மண்ணாய் போனது எனோ? விண்ணில் தோன்றிய கதிரவன் மாதிரி வண்ண ஒளி பரப்பிய அவன் பண்பு துறந்து ஏமாற்றியது எதற்கோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................ 'பாரதி' "அடிமை ஒழிக்கும் குரலோன் பாரதி விடிவை நோக்கி வரிகள் முழங்கும்! இடித்து உரைப்பான் காரணம் சொல்வான் அடித்துப் பொய்யை தூர விரட்டுவான்!!" "தமிழின் அரவணைப்பில் வரிகள் மலரும் பூமி எங்கும் பரந்து விரியும…
-
- 0 replies
- 122 views
-
-
சிறகு --------- ஒட்டி உலர்ந்த தேகம் ஒன்று எப்பவும் அங்கே பாதையில் கழிவுநீர் ஆறு என்று ஓடும் அந்தக் கரையில் சுருண்டு கிடந்தது அது கையை நீட்டவும் இல்லை கண்களை பார்க்கவும் இல்லை புதிதாக வெளியில் வந்தது போல வெட்கம் அதன் உயிரைக் கொன்று அதன் பசியை மூடி வைத்திருந்தது இது செத்து விடுமோ என்று பழிபாவம் அஞ்சும் யாரோ ஒருவர் அதுக்கு தெரியாமல் அங்கே ஒரு தட்டும் அதில் உண்ணும் பொருளும் வைத்தார் வேறு சிலரும் வைக்க வைக்க எழும்பி இருந்து வானம் பார்க்கத் தொடங்கி பின்னர் நடக்கத் தொடங்கி இப்பொழுது அது உலாத்துகின்றது இன்று காலை அது ஒரு பாட்டும் பாடியது …
-
- 0 replies
- 957 views
-
-
-
- 0 replies
- 836 views
-
-
"அடைமழை" [அந்தாதிக் கவிதை] "அடைமழை தொடர்ந்து ஐப்பசியில் பெய்யுது பெய்த நீரோ வெள்ளமாய் நிற்குது நிற்கும் தண்ணீரில் கழிவுகள் மிதக்குது மிதக்கும் எண்ணங்கள் தேடுது கடுதாசி கடுதாசி கப்பலாக அங்கே ஓடுது ஓடும் மீன்கள் அதைத் துரத்துது துரத்தும் மீனைப் பறவை கொத்துது கொத்தும் பறவை பசியைத் தீர்க்குது தீர்க்கும் பிரச்சனைகள் அப்படியே இருக்குது இருக்கும் வடிகாலும் முடங்கிக் கிடக்குது கிடக்கும் குப்பைகள் ஒட்டத்தை தடுக்குது தடுக்கும் எதையும் உடைக்குது அடைமழை" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 269 views
-
-
பாதைகள் மாறினோம் ஆனால் ஒரு வழியாய் இணைக்கிறது வாழ்க்கை... பயனற்ற யாக்கையை பயன்படுத்தி வீடுபேறு அடைவது பேரறிவின் நிலை மூலம் அறிந்த பின் முக்தி கிடைப்பது முதிர்ச்சி நிலை... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 869 views
-
-
-
- 0 replies
- 976 views
-
-
"காற்றில் ஆடுது வெள்ளை ரோசா" "காற்றில் ஆடுது வெள்ளை ரோசா காதல் பேசுது பொன் வண்டு கானம் பாடுது சுற்றி வருகுது காமம் கொண்டு தேன் பருகுது!" "இதயம் கவருது சிவப்பு ரோசா இதழ்கள் தொட்டு வண்டு கொஞ்சுது இச்சை கொண்டு துள்ளிக் குதிக்குது இணக்கம் சொல்லி ரோசா அணைக்குது!" "அழகாய் மலருது ஊதா ரோசா அருகே வருகுது கருத்த வண்டு அங்கம் எல்லாம் தொட்டு ரசிக்குது அடக்கமாய் ரோசா விட்டுக் கொடுக்குது!" "கண்ணைக் கவருது ஆரஞ்சு ரோசா கதிரவன் அன்பில் தன்னை மறக்குது கபடன் வண்டு கொஞ்சிக் குலாவுது கள் குடித்து மயங்கிப் படுக்குது!" "உள்ளம் பறிக்குது இளஞ்சிவப்பு ரோசா உரிமை கொண்டாடுது சிவப்பு வண்டு உறிஞ்சி குடித்து முத்தம் இட …
-
- 0 replies
- 509 views
-
-
"சமாதானம்" [அந்தாதிக் கவிதை] "சமாதானம் வேண்டாமென இலங்கையில் போர் போர் தொடுத்து அப்பாவிகளை கொன்றார்கள்! கொன்று குவித்ததை புத்தபிக்கும் மகிழ்ந்தனர் மகிழவு இதுவாவென புத்தர் தலைகுனிந்தான்!" "தலைகுனிந்து உலகமும் கண் மூடியது மூடிய வீட்டுக்குள்ளும் கற்பை சூறையாடினான்! சூறையாடி உண்மையை புதைத்து தலைவனானான் தலைவன் இன்று போதிக்கிறான் சமாதானம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 338 views
-
-
அழகிய நிலவு சிரிக்கிறது ஆயிரம் பறைவைகள் பறக்கிறது ஆயிரம் பறைவைகள் பறக்கையிலே அழகிய கீதங்கள் இசைக்கிறது காலைச் சூரியன் கண் விழிக்க காற்றினில் ஆடிய கார்த்திகை பூ காலையின் அழகை பூமியில் வரையுது கண்ணைத் திறந்து ஒரு மல்லிகை மொட்டு சோம்பலை முறித்து சிரிக்கிறது காற்றினில் ஆடிய திசைகளில் என் மனம் பாட்டுக்கு மொட்டு ஒலி இசைக்கிறது கண்ணுக்கு தெரியா தூரத்தில் இருந்து என் கனவினை ஒருத்தி பாடுகிறாள் கனவுகள் எழுதிய கவிதையின் நினைவினை காத்திடம் சொல்லி அனுப்புகிறாள் .
-
- 0 replies
- 988 views
-
-
"சிந்தை சிதறுதடி" [1] "சிந்தை சிதறுதடி மயானம் அழைக்குதடி உந்தன் காலடி வணங்கத் துடிக்குதடி! நிந்தை பேசா உன்னையும் கெடுத்தானே விந்தை உலகமடா கொடியவன் பூமியடா கந்தைத் துணியுடன் வீசிச் சென்றானே!" "தீந்தை விழியால் என்னை மயக்கியவள் சாந்தை பூசி பெட்டிக்குள் போறாளே! வேந்தையும் ஏழையும் ஒன்றே என்றவள் சுந்தரத் தமிழில் கொஞ்சிக் குலாவியவள் சந்திர ஒளியில் தீபமாய் ஒளிர்கிறாளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 383 views
-
-
வித்து.... விதைக்கப்பட்டு.. மரமாகிறது..... ! மரத்தின் இலைகள்.... புதைக்கப்பட்டு.... உரமாகிறது.... ! விதைத்தாலும்... புதைத்தாலும்.... பயன் இருக்கிறது.... ! நம் மண்ணில்..... உடலங்கள்... இலட்சக்கணக்கில்..... புதைக்கப்பட்டன.... ஆயிரக்கணக்கில்... விதைக்கப்பட்டன...! புதைத்ததால் நம்.. இனத்தை உலகறிந்தது... ! விதைத்ததால் நாம்... தலைநிமிர்ந்து... வாழ்கிறோம்..... !!! @ கவிப்புயல் இனியவன்
-
- 0 replies
- 945 views
-