Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. ”மோசமான கவிதைகள் எழுதியுள்ளேன்ஆனால் எப்போதும் வாழ்ந்தேன்நல்ல கவிதையாய்” வாழ்வின் கவிதை. - வ.ஐ.ச.ஜெயபாலன். . நீர்க்கரையின் கோரையிடை பாம்பின் கண்கள். புல்பூத்த தட்டானில் மயங்கும் தவளை. துருதுருத்து மோந்தபடி கீரிப்பிள்ளை. பசுமை இனிக்க மான் கிளை வரும் தடத்தில் விரிகிறது மனிதன் கண்ணி. அச்சத்தில் சாகாதவை வாழ்கிறது இக்கணம். என்றும்போல் மருதமரம் செழிக்க ஊட்டியும் வேர் அறுத்தும் நகர்கிறது பாலி ஆறு. . டைட்டானிக் கனவு மனிதா உன் விஞ்ஞான வரைபடத்தில் ஏது மிதக்கும் பனிப்பாறை. எனினும் உன்னால் இயலுமே முழ்கையிலும் வயலின் மீட்டி சாவையும் வாழ்தல். ஞான் அறியும் நஞ்சு பருக விதித்த பின்னும் வாழ்ந்த ஒரு கிரேக்கத்து மனிதன் …

    • 2 replies
    • 1.2k views
  2. "காற்றில் ஆடுது வெள்ளை ரோசா" "காற்றில் ஆடுது வெள்ளை ரோசா காதல் பேசுது பொன் வண்டு கானம் பாடுது சுற்றி வருகுது காமம் கொண்டு தேன் பருகுது!" "இதயம் கவருது சிவப்பு ரோசா இதழ்கள் தொட்டு வண்டு கொஞ்சுது இச்சை கொண்டு துள்ளிக் குதிக்குது இணக்கம் சொல்லி ரோசா அணைக்குது!" "அழகாய் மலருது ஊதா ரோசா அருகே வருகுது கருத்த வண்டு அங்கம் எல்லாம் தொட்டு ரசிக்குது அடக்கமாய் ரோசா விட்டுக் கொடுக்குது!" "கண்ணைக் கவருது ஆரஞ்சு ரோசா கதிரவன் அன்பில் தன்னை மறக்குது கபடன் வண்டு கொஞ்சிக் குலாவுது கள் குடித்து மயங்கிப் படுக்குது!" "உள்ளம் பறிக்குது இளஞ்சிவப்பு ரோசா உரிமை கொண்டாடுது சிவப்பு வண்டு உறிஞ்சி குடித்து முத்தம் இட …

  3. "சமாதானம்" [அந்தாதிக் கவிதை] "சமாதானம் வேண்டாமென இலங்கையில் போர் போர் தொடுத்து அப்பாவிகளை கொன்றார்கள்! கொன்று குவித்ததை புத்தபிக்கும் மகிழ்ந்தனர் மகிழவு இதுவாவென புத்தர் தலைகுனிந்தான்!" "தலைகுனிந்து உலகமும் கண் மூடியது மூடிய வீட்டுக்குள்ளும் கற்பை சூறையாடினான்! சூறையாடி உண்மையை புதைத்து தலைவனானான் தலைவன் இன்று போதிக்கிறான் சமாதானம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  4. ஊர்த் தாய்க்கு ஒரு கடிதம்! ************************* உயிருக்கு பயந்து ஒழித்தோடிப்போனவர்கள் என்று கேலி செய்கிறார்கள் அம்மா… அன்று நீதானே சொன்னாய் ஓடித்தப்பு பின் ஊர்களைக் காப்பாற்றவேண்டுமென்று. அதனால்.. வெளிநாடொன்றில் தஞ்சம் புகுந்து விட்டோம். எங்களை.. ஏற்றுக்கொள்ள எத்தனை கேள்விகள் எத்தனை விசாரணைகள் எத்தனை இழுத்தடிப்புகள் இப்படியே எத்தனை வருடங்கள் காத்துக்கிடந்தோம். அகதியென்ற பெயருடனும் கையில்.. அன்னத் தட்டுடனும் அவர்களின் முகாங்களில் அலைந்தபோது கூட எங்கள் துன்பங்களை உனக்கு சொல்ல நாம் விரும்பியதேயில்லைத் தாயே…

  5. அழகிய நிலவு சிரிக்கிறது ஆயிரம் பறைவைகள் பறக்கிறது ஆயிரம் பறைவைகள் பறக்கையிலே அழகிய கீதங்கள் இசைக்கிறது காலைச் சூரியன் கண் விழிக்க காற்றினில் ஆடிய கார்த்திகை பூ காலையின் அழகை பூமியில் வரையுது கண்ணைத் திறந்து ஒரு மல்லிகை மொட்டு சோம்பலை முறித்து சிரிக்கிறது காற்றினில் ஆடிய திசைகளில் என் மனம் பாட்டுக்கு மொட்டு ஒலி இசைக்கிறது கண்ணுக்கு தெரியா தூரத்தில் இருந்து என் கனவினை ஒருத்தி பாடுகிறாள் கனவுகள் எழுதிய கவிதையின் நினைவினை காத்திடம் சொல்லி அனுப்புகிறாள் .

    • 0 replies
    • 997 views
  6. "சிந்தை சிதறுதடி" [1] "சிந்தை சிதறுதடி மயானம் அழைக்குதடி உந்தன் காலடி வணங்கத் துடிக்குதடி! நிந்தை பேசா உன்னையும் கெடுத்தானே விந்தை உலகமடா கொடியவன் பூமியடா கந்தைத் துணியுடன் வீசிச் சென்றானே!" "தீந்தை விழியால் என்னை மயக்கியவள் சாந்தை பூசி பெட்டிக்குள் போறாளே! வேந்தையும் ஏழையும் ஒன்றே என்றவள் சுந்தரத் தமிழில் கொஞ்சிக் குலாவியவள் சந்திர ஒளியில் தீபமாய் ஒளிர்கிறாளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  7. வித்து.... விதைக்கப்பட்டு.. மரமாகிறது..... ! மரத்தின் இலைகள்.... புதைக்கப்பட்டு.... உரமாகிறது.... ! விதைத்தாலும்... புதைத்தாலும்.... பயன் இருக்கிறது.... ! நம் மண்ணில்..... உடலங்கள்... இலட்சக்கணக்கில்..... புதைக்கப்பட்டன.... ஆயிரக்கணக்கில்... விதைக்கப்பட்டன...! புதைத்ததால் நம்.. இனத்தை உலகறிந்தது... ! விதைத்ததால் நாம்... தலைநிமிர்ந்து... வாழ்கிறோம்..... !!! @ கவிப்புயல் இனியவன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.