கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
"வண்ணங் கொண்ட வெண்ணிலவே" "வண்ணங் கொண்ட வெண்ணிலவே வாராயோ கண்கள் இரண்டும் காணத் துடிக்குதே! மண்ணின் வாசனை உடையில் தெரியுதே பண்பின் இருப்பிடமே வாழ்த்தி வணங்குகிறேன்!" "அன்ன நடையில் மனத்தைக் கவர்ந்தவளே சின்ன இடையில் கலக்கம் தந்தவளே! என்னை மறந்து உலகம் துறந்து உன்னை அடைய விரும்பியது எனோ?" "ஏராளம் பூவையரை நான் முகர்ந்தாலும் ஏமாற்றம் இல்லா நடத்தை கொண்டவளே! ஏற்றவள் எனக்கு நீயென நான் ஏதேதோ எண்ணி ஏங்குவது ஏன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 374 views
-
-
புல்லை வெட்டுங்கோ ---------------------------------- நாலு நாள் ஆகிவிட்டது ஒவ்வொரு குழாயின் கீழும் அண்டா குண்டா என்று வைத்து தேனும் பாலும் இனி வீடு தேடி வரும் என்றனர் வைத்த அண்டாவும் குண்டாவும் அப்படியே காத்து வாங்கிக் கொண்டு காத்துக் கிடக்கின்றன தேன் எப்ப வரும் பால் எப்ப வரும் என்று கொஞ்சம் முன்னரே சொன்னால் தனி தனியே பிடித்து வீடு முழுக்க வைத்துக் கொள்வேன் எட்டு வருடம் முந்தியும் வரும் வரும் என்றீர்கள் வரவே இல்லை கடைசி மட்டும் பின்னர் நீங்கள் போய் விட்டீர்கள் இப்ப வந்து விட்டீர்கள் இந்த தடவை என்றாலும் ஓட விடுங்கள் பாலையும் தேனையும் …
-
-
- 11 replies
- 706 views
- 1 follower
-
-
"ஒதுங்கி மூலையில் மலர்ந்த ரோசா" "ஒதுங்கி மூலையில் மலர்ந்த ரோசா ஒளியில் மிளிர்ந்து அழகைக் காட்டி ஒலி எழுப்பும் வண்டைப் பார்த்து ஒய்யாரி கேட்குது நீ யார் ?" "துள்ளி பாயும் காட்டு மான் துணையுடன் மறைவில் ஒளிந்து இருந்து துரத்தி வந்த புலியைப் பார்த்து துணிந்து கேட்குது நீ யார் ?" "வாமச் சொரூப கோழிக் குஞ்சு வாட்டம் கொண்டு நிழலில் பதுங்கி வானத்தில் வட்டமிடும் கழுகைப் பார்த்து வாக்குவாதம் செய்யுது நீ யார் ?" "மாணவி ஒருவள் கண்ணீர் வடிய மாதா வாக்கிய குருவை நொந்து மாழை மடபெண் வெட்கத்தை விட்டு மாசுபடுத்தியவனைக் கேட்குது ந…
-
- 0 replies
- 1.1k views
-
-
"தாய்மை" "காதல் உணர்வில் இருவரும் இணைய காதோரம் மூன்றெழுத்து வார்த்தை கூற காதலன் காதலி இல்லம் அமைக்க காமப் பசியை மகிழ்ந்து உண்ண காலம் கனிந்து கருணை கட்டிட காணிக்கை கொடுத்தாள் 'தாய்மை' அடைந்து!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.1k views
-
-
-
-
- 5 replies
- 715 views
-
-
"முகநூல்" "முகநூல் படும்பாடு தலையை சுற்றுது முகர்ந்து பார்க்கினம் காமம் தேடி முகத்தை ரசிக்கினம் காதல் நாடி முழுதாய் அலசினம் நட்பு வேண்டி" "முத்து முத்தான அறிவும் அங்குண்டு முழக்கம் இடும் கவிதைகளும் உண்டு முடங்க வைக்கும் போலிகளும் அங்குண்டு முடிந்தவரை ஏமாற்றிக் கறப்பவரும் உண்டு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 304 views
-
-
'பாட்டு படித்து வாழ்த்து கூறினேன்' "ஒட்டாவா நகரில் காலை பொழுதில் கேட்காத இனிமை காதில் ஒலித்தது வாட்டாத நிலவு வானத்தில் ஒளித்தது மொட்டு விரிந்து வாசனை தந்தது" "சுட்டி பொண்ணு புன்னகை சிந்தி பாட்டன் கையை மெல்ல பிடித்து வட்ட மிட்டு துள்ளி குதித்து முட்டி மோதி இன்பம் பொழிந்தது" "மெட்டி ஒலி காற்றோடு கலக்க பாட்டு படித்து இனிமை காட்டும் குட்டி பாட்டி மழலையில் மகிழ்ந்து எட்டு திக்கும் துள்ளி குதித்தேன்" "சொட்டு சொட்டாய் விழும் மழையில் பட்டும் படாமலும் நனைந்து விளையாடி நீட்டி நிமிர்ந்து வாங்கில் படுத்து லூட்டி அடித்து சிரித்து மகிழ்ந்தோம்" "ஒட்டி உறவாடும் அன்பு மழலைக்கு வெட்டி பேச்சு பட்டாம் பூச்சிக்கு மொட்டாய், மலரா க…
-
- 0 replies
- 438 views
-
-
சிறகு --------- ஒட்டி உலர்ந்த தேகம் ஒன்று எப்பவும் அங்கே பாதையில் கழிவுநீர் ஆறு என்று ஓடும் அந்தக் கரையில் சுருண்டு கிடந்தது அது கையை நீட்டவும் இல்லை கண்களை பார்க்கவும் இல்லை புதிதாக வெளியில் வந்தது போல வெட்கம் அதன் உயிரைக் கொன்று அதன் பசியை மூடி வைத்திருந்தது இது செத்து விடுமோ என்று பழிபாவம் அஞ்சும் யாரோ ஒருவர் அதுக்கு தெரியாமல் அங்கே ஒரு தட்டும் அதில் உண்ணும் பொருளும் வைத்தார் வேறு சிலரும் வைக்க வைக்க எழும்பி இருந்து வானம் பார்க்கத் தொடங்கி பின்னர் நடக்கத் தொடங்கி இப்பொழுது அது உலாத்துகின்றது இன்று காலை அது ஒரு பாட்டும் பாடியது …
-
- 0 replies
- 955 views
-
-
"அன்பு செலவானால் ஆதரவு வரவு....!" "அன்பு செலவானால் ஆதரவு வரவு பண்பு திடமானால் மனிதம் உயர்வு துன்பம் இறந்தால் இன்பம் பிறப்பு தென்பு உதித்தால் தோல்வி மறைவு!" "அன்பு என்பது கடமை அல்ல அக்கம் பக்கத்தாருக்கு நடிப்பு அல்ல அற்பம் சொற்பம் தேடல் அல்ல அறிவு உணர்ந்த பாசம் அதுவே!" "பருவம் மலர்ந்தால் காதல் நாடும் படுத்து கிடந்தால் பரிவு தேடும் பரிவு காதல் இரண்டும் அன்பே பலபல வடிவில் எல்லாம் பாசமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 485 views
-
-
"முப்பெருந் தேவியர்" "மூன்று வடிவில் முப்பெருந் தேவியர் நன்று சிந்தித்தால் மூவரும் ஒருவரே! ஊன்றிக் கவனித்தால் விளக்கம் புரியும் தோன்றிய மூவரின் வரலாறும் தெரியுமே!" "கல்வி இருந்தால் நாகரிகம் வளரும் கருத்துக்கள் தெளிந்தால் தீர்மானம் சரியாகும்! செல்வம் இன்றேல் வறுமை சூழும் இல்லற வாழ்வும் முறிந்து போகும்!" "வீரம் இல்லா சமூகம் அழியும் கரங்கள் இணைந்தால் வாழ்வு இனிக்கும்! அறம் காக்க மூன்றும் வேண்டும் பரம்பொருளாய் உருப் பெற்றதும் இதற்கே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 1 reply
- 524 views
-
-
"காதல் என்னும் நினைவினிலே" "காதல் என்னும் நினைவினிலே நான் சாதல் தேடி என்னை வருத்துகிறேனே முதல் அன்பு உணர்வுமட்டுமே என்றாலுமே மோதல் வேண்டாம் என்னிடம் வாராயோ!" "காத தூரம் விலகிப் போனாலும் காமம் துறந்து தனிமை தேடினாலும் காந்தை உன்னை மனதில் பதித்து காலம் கடந்தும் காத்து இருப்பேனே!" "காதலைத் தீண்டாமல் வாழ்வும் இல்லை காரிகையை எண்ணாமல் மனிதனும் இல்லையே காதணி ஆடும் அன்னநடை சிங்காரியே காலம் தாழ்த்தாமல் அருகில் அமராயோ!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 415 views
-
-
செவ்வாய் [29/10/2024] தரணியில் வந்த என் பேரப்பிள்ளைக்கு, மனமார வாழ்த்துக்கள்!! வியாழன் இரவு, 31 /10 / 2024 என் கையில் வீடு வந்து தழுவினார். இதை விட, வேறு என்ன பிறந்த நாள் 01/11/2024 பரிசு, தேவை எனக்கு ? "மழலையின் மொழி கேட்டு" "மழலையின் மொழி கேட்டு நான்பேசும் மொழி மறந்தேன் மழலையின் மொழி பேசி என்னையே நான் மறந்தேன்!" "மழலையின் குறும்பு கண்டு துன்பங்கள் ஓடி மறைந்தன மழலையின் புன்னகை பார்த்து இதயமே வானில் பறந்தன!" "குழலூதும் குழவியை பார்த்து குறும்பு கண்ணனை மறந்தேன் குழந்தை காட்டும் நளினத்தில் குமரி ஊர்வசியை மறந்தேன்!" "கு…
-
-
- 2 replies
- 450 views
-
-
"விடிவை நோக்கி" "விடிவை நோக்கி புறப்படும் மனிதா அடி வருடுவதை மறந்து விடடா குடித்து கும்மாளம் அடித்தது போதும் இடித்து முழங்கி விடியலைத் தேடடா !" "படிப்பு ஈன்ற அறிவைக் கொண்டு நடிக்கும் தலைவனை விலத்தி விடடா துடிக்கும் இதயத்தில் துணிவை ஏற்றி கூடி ஒன்றாய் விடிவை நோக்கடா!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 1 reply
- 512 views
-
-
"மண்ணும் மரமும்" "மண்ணும் மரமும் பண்பு காட்டும் ஒன்றுபட்டு மனிதனை வாழ வைக்கும் கண்ணும் இமையும் போல இருந்தே மனித வாழ்வைத் தக்க வைக்கும்!!" "வானத்தின் அடியில் மண் இருக்கும் நீண்டு நிரப்பும் வேருக்கு தொட்டிலாகும்! விதை புதைந்து மரம் உயரும் மண்ணில் வளர்ந்து வானம் தொடும்!!" "பழைய கதைகளை மண் கிசுகிசுக்கும் தோண்டிப் பார்த்தால் வரலாறு புரியும்! காலத்தின் தழுவலில் இயற்கையின் பிணைப்பில் மண் உடலே! மரம் கருணையே!!" . [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 582 views
-
-
"பேதையே போதையேன்" "சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே சிற்றிடையாள் ஒளவை அன்று கூறினாள் சினம் ஏன் இன்று உனக்கு ?" "பேதையே போதையேன் நானும் கேட்கிறேன் பேரறிவு கொண்ட தலைவனே சொல்லாயோ? பேச்சில் எதற்குத் தையல் மட்டும் பேரொலி உடன் விடலையைச் சேர்க்கையோ?" "தெண்கள் தேறல் மாந்தி மகளிரென தென்னாட்டு மூதை பாட்டுப் பாடினாள் தெளிவாகத் தெரியுது இருவரும் அருந்தினரென" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 607 views
-
-
"காற்றில் ஆடுது வெள்ளை ரோசா" "காற்றில் ஆடுது வெள்ளை ரோசா காதல் பேசுது பொன் வண்டு கானம் பாடுது சுற்றி வருகுது காமம் கொண்டு தேன் பருகுது!" "இதயம் கவருது சிவப்பு ரோசா இதழ்கள் தொட்டு வண்டு கொஞ்சுது இச்சை கொண்டு துள்ளிக் குதிக்குது இணக்கம் சொல்லி ரோசா அணைக்குது!" "அழகாய் மலருது ஊதா ரோசா அருகே வருகுது கருத்த வண்டு அங்கம் எல்லாம் தொட்டு ரசிக்குது அடக்கமாய் ரோசா விட்டுக் கொடுக்குது!" "கண்ணைக் கவருது ஆரஞ்சு ரோசா கதிரவன் அன்பில் தன்னை மறக்குது கபடன் வண்டு கொஞ்சிக் குலாவுது கள் குடித்து மயங்கிப் படுக்குது!" "உள்ளம் பறிக்குது இளஞ்சிவப்பு ரோசா உரிமை கொண்டாடுது சிவப்பு வண்டு உறிஞ்சி குடித்து முத்தம் இட …
-
- 0 replies
- 507 views
-
-
வழிவழியாய் வந்த மரங்களின் வாழிடம் எல்லாம் வலுக்கட்டாயமாய் பிடுங்கியதாய் வலுக்குது குற்றச்சாட்டு நடுகை வாரமென்று நட்டுவைத்த நாலுமரம் தளிர்த்த நாள் முதலாய் ஆறுதலாய் வந்தமர்ந்த காக்கைகளை காணவில்லை தனிமையோ தாழவில்லை. வாழ்க்கை வெறுத்துப்போன வௌவால்களின் தற்கொலைத் தளமானேன் விடிந்ததும் வீழ்வதறியா விட்டில்கள் விளையாடும் களமானேன் முடியவில்லை முறிந்து விடுகிறேன். . நாலு நாள் நாறட்டும் வீடெல்லாம்..... இப்படிக்கு..... நான் உங்கள் - மின்கம்பம் - By…
-
-
- 2 replies
- 505 views
- 1 follower
-
-
"மஞ்சள் ரோசா மனதை இழுக்குது!" "இரத்தம் சிந்த வைக்கும் முட்களே இரகசியமாக வருடும் மென் இதழ்களே இதழ்கள் நடுவே மஞ்சள் மகரந்தங்களே இத்தனையும் கொண்ட அழகு ரோசாவே!" "மாசி தரும் காதல் மாதமே மாதர் சூடும் ரோசாவின் வாசனையே மாட்சிமை பொருந்திய காதலர் சிறப்பே மாதவி - கோவலன் போற்றிய காதலே " "காதல் கடவுள் மன்மத அழகனே காம தேவனின் இனிய ரதியே காதல் பெருமை ரோமியோ ஜூலியட்டே காதோரம் சொன்ன காதல் மொழியே!" "ரோசா சிவப்பு சொல்லுது - காதலிக்கிறேன் ரோசா மஞ்சள் சொல்லுது - மகிழ்கிறேன் ரோசா இளஞ்சிவப்பு சொல்லுது - விரும்புகிறேன் ரோசா செம்மஞ்சள…
-
- 0 replies
- 1.2k views
-
-
மாறுமா? *********** தேர்தல் திருவிழாக் காலமிது-தன் தேவைக்கு வாக்குறுதி மழை கொட்டும் நேரமிது. வாசலுக்கு வந்துநிற்கும் வருங்கால.. தலைவர்களைப் பாருங்கள் வாக்குறுதிப் பொட்டலத்தை வாங்கிப்பிரியுங்கள்-உள்ளே தேன் இருக்கும் தினைமா இருகும் தித்திகும் பண்டங்கள் நிறைந்திருக்கும்-தமிழ் தேவைகள் அனைத்தும் நிவர்த்தி செய்வதாய்-பல திட்டங்கள் எம்முன்னே கொட்டிக் கிடக்கும். வாக்குதனை வாங்கிப்போனபின்னோ? உங்களிடம்வெறும் வாய் மட்டுமேயிருக்கும். பசியிருக்கும் கியூவிருக்கும் பட்டினியே தொடர்திருக்கும் அரசமரத்தடியில் புத்தர் சிலையிருக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
"காலம் மாறினால் காதல் மாறுமா?" "காலம் மாறினால் காதல் மாறுமா? கோலம் கலைந்தால் அன்பு போகுமா? ஓலம் எழுப்பினால் பிணம் எழும்புமா? நிலம் வறண்டால் பயிர் துளிர்க்குமா?" "கானல் நீராய் காதல் இருக்காது காமுறல் உடன் வாழ்வும் இருக்கும் காமம் மட்டும் மனதில் ஏற்றிய காதலர் மட்டும் பொய் ஆகலாம்?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1k views
-
-
எரியும் ரகசியங்கள் ----------------------------- ஒருவருக்குமே சொல்லாத ஒன்றை உங்கள் ஒருவருக்கு மட்டுமே சிலர் சொல்லியிருப்பார்கள் ரகசியம் பத்திரம் என்று நீங்களும் உங்களின் சில ரகசியங்களை சிலருக்கு மட்டும் சொல்லியிருப்பீர்கள் பத்திரம் என்று வீடு ஒன்று வாங்கும் விசயம் கூட ரகசியம் என்று சொல்லப்பட்டிருக்கும் அந்த வீட்டை வாங்க முன் இன்னார் இன்னாரை கட்டப் போகின்றார் அதுவும் ரகசியம் என்று சொல்லப்பட்டிருக்கும் அவர்கள் கட்ட முன்னர் எப்போதும் வெளியே சொல்லி விடாதே என்று சத்தியமும் கேட்டிருப்பார்கள் அந்த வீட்டை வா…
-
-
- 2 replies
- 1.2k views
-
-
"உயர்ந்திடு உயர்த்திடு....!" "உயர்ந்திடு உயர்த்திடு பணப்பைக் காத்திடு உள்ளம் பூரிக்கும் செயலைச் செய்திடு உடமை எல்லாம் பகிர்ந்து கொடுத்திடு உதவிக்கரம் நீட்டி அன்பைக் காட்டிட்டு!" "உடன்பட்டு உண்மை அறிந்து ஒற்றுமையாகிடு உலகம் போற்றும் சமதர்மம் நாட்டிடு உரிமை கொண்ட சமூகம் அமைத்திடு உயர்ந்த கொள்கை என்றும் விதைத்திடு!" "உயிரிலும் மேலாக ஒழுக்கம் வளர்த்திடு உறவு நிலவும் நட்பைக் கொடுத்திடு உதிரம் சிந்தா அமைதி வழங்கிடு உன்னால் முடிந்ததை துணிந்து செய்திடு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.6k views
-
-
எச்சரிக்கை! *************** கடிக்க வந்த நாய்க்கு கல்லெறிந்தேன் அது ஓடித் தப்பியது. தேன் கூட்டுக்கு கல்லெறிந்தேன் ஒற்றுமையாக துரத்திவந்தது என்னை ஓடவைத்தது. இது போன்ற ஒற்ருமையே தமிழர்க்கும் தேவை ஒன்றுசேர் இல்லையேல் தனித் தனியாய் நின்று அழிந்தே! போவாய். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
-
- 5 replies
- 1.2k views
-
-
அந்தாதிக் கவிதை / "சமாதானம்" [இரு கவிதைகள்] "சமாதானம் தொலைத்த புத்தரின் பக்தர்களே பத்தர்கள் என்பது காவி உடுப்பதுவா? உடுத்த காவியின் பொருள் தெரியமா? தெரியாத உண்மைகளை தேடி உணராமல் உணர்ந்த மக்களை போற்றி வாழ்த்தாமல் வாழ்த்து பாடி மக்களை ஏமாற்றாதே? ஏமாற்றி குழப்பி துவேசம் பரப்பி பரப்பிய பொய்யில் மனிதத்தைக் கொல்லாதே! கொல்லாமல் இருப்பதுவே புத்தனின் சமாதானம்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ..................................................... "சமாதானம் வேண்டாமென இலங்கையில் போர் போர் தொடுத…
-
- 0 replies
- 629 views
-
-
மாயபிம்பம் ------------------ ஆரம்பத்தில் தூரத்திலிருந்து அது ஒரு சிலையாக சிற்பமாக தெரிந்தது அப்படித்தான் அது ஒரு அழகு மிளிரும் சிலை என்றும் சொல்லியிருந்தனர் அதுவும் ஒரு காரணம் கொஞ்சம் நெருங்க அது சிற்பம் இல்லை அதில் அங்கங்கே சில செதுக்கல்கள் மட்டும் தெரிந்தது சிலையாக இல்லாவிட்டாலும் வெறும் பாறாங்கல்லாக அப்படியே படுத்தே இருக்காமல் செதுக்கல்கள் இருக்குதே இதுவே இந்நாளில் அரிது என்று இன்னும் இன்னும் நெருங்க பூமியுடன் தோன்றிய அதே கல்லுத் தான் இதுவும் என்று புரிந்தது.
-
-
- 2 replies
- 8.2k views
- 1 follower
-