கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
"தவமின்றிக் கிடைத்த வரமே" "தன்னந் தனியே தவித்து இருந்தவனை தட்டிக் கொடுத்து தெம்பு அளித்து தத்துவம் தவிர்த்து யதார்த்தம் உணர்ந்து தன்னையே தந்து மகிழ்வை ஈன்று தலைவி நானேயென நாணிக் கூறி தளர்வு இல்லாக் காதல் தந்தவளே!" "அவல நிலையில் நின்ற இவனை அவனியில் வெறுத்து தனியே சென்றவனை அவனது மேலே கொண்ட கருணையால் அவதிப் படாதே ஆயிரம் வந்தாலுமென அவதாரமாக வந்தவளே! அன்பின் அழகே! தவமின்றிக் கிடைத்த வரமே! நீயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 644 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
குறளோடு கவிபாடு / "குறள் 1175" "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கண்களும் பேசின காதலையும் தந்தன வண்ண உடலின் கவர்ச்சி ஈர்த்தன ஆண்மை கண்டு அவளும் நெருங்கினாள் கண்ட கோலம் காமம் கொடுத்தன!" "பெண்ணின் அழகில் மயங்கி நின்றவனோ எண்ணம் எல்லாம் அவளே என்றவனோ கண்ணீர் தந்து உறவு மறந்து அண்டம் எங்கோ பிரிந்து போனானே கண்ணனை நினைத்து துயிலும் மறந்தேனே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.1k views
-
-
"மடியில் ஏந்திக் கொள்ளடா மன்னவா!" "மாடி வீட்டில் உன்னைக் கண்டேன் தாடி மீசை அழகு பார்த்தேன்! வாடி இருந்தவளை தூக்கி நிமிர்த்தினாய் தேடி என்னிடம் அடைக்கலம் வாடா!" "கடிதம் எழுதி கையில் தந்தாய் ஈட்டி கொண்டு நெஞ்சைத் துளைத்தாய்! கட்டிப் பிடித்து இன்பம் பகிர்ந்தாய் அடிமை அற்ற வாழ்வு கொடடா!" "ஓடி விளையா…
-
- 0 replies
- 1.2k views
-
-
நாய்களுக்கும் நரிகளுக்குமான போட்டியில் ஒவ்வொரு முறையும் குயில்கள் பலியாகின்றன குயில்களுக்கு தெரிவதில்லை தாம் தான் தூண்டிலில் கொழுவப்பட்ட புழுக்கள் என.. பேய்களுக்கும் பிசாசுகளுக்குமான போரில் ஒவ்வொரு முறையும் வண்ணாத்திப் பூச்சிகள் கொல்லப்படுகினறன வண்ணாத்திப் பூச்சிகளுக்கு தெரிவதில்லை தாம் தான் வலையில் சிக்க வைக்கப்படும் சிறு கண்ணிகள் என.. மனிதர்களுக்கும் மனிதமற்றவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒவ்வொரு முறையும் கடவுள்கள் கொல்லப்படுகின்றனர் கடவுள்களுக்கு தெரிவதில்லை தாம் தான் மனிதர்களின் பொறியில் வைக்கபடும் இரைகள் என யார் யாருக்கோ இடையிலான யுத்தத்தில் எப்போதும் தோற்றுக் கொண்டே இருப்பவர்களுக்கு ஒரு போதும் தெரிவதில்லை எப்பவுமே …
-
-
- 5 replies
- 674 views
-
-
கனவு பலிக்குமா? ********************** கந்தையா அண்ணரும் காசிம் நானாவும் றம்பண்டா மல்லியும் ஒரு குடும்பமாய் திரிந்த காலம் அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. புத்த பெருமானுக்கும் நபிகள் நாயகத்துக்கும் ஜேசு பிரானுக்கும் சித்தர் சிவனுக்கும்-மதம் பிடித்ததாய்.. அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. கண்டியில பெரகராவும் திருக்கேதீச்சரத்தில சிவராத்திரியும் கொச்சிக்கடையில பாலன் பிறப்பும் மட்டக்களபில நோன்புப் பெருநாளும் அன்பாக நடந்ததே தவிர அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. ஒவ்வொரு இடத்தி…
-
-
- 3 replies
- 1.3k views
-
-
நவீன கவிதை / "விடுதலையின் வித்து" "சரியான நேரத்தில், சரியான மண்ணில் சரியான விதை போட்டால், உரம் இட்டால் கிருமி நாசினி தெளித்தால், மரம் வளரும் பூ பூத்து பயன் தரும்! ஆனால் வித்து மண்ணோடு மண்ணாக போய்விடும்!!" "நாம் வாழ்ந்தோம் இருந்தோம் என்று இல்லாமல், எங்கு வாழ்கிறோம், எப்படி இருந்தோம், எப்படி வாழ்கிறோம் சற்று சிந்தி உன் வரலாறு புரியும் உன் பெருமை தெரியும் உன் இன்றைய வாழ்க்கைக்கான விடுதலையின் வித்து அறிவாய்!" "உலகத்தை தூக்கத்திலிருந்து ஒரு வித்து கிழித்தெறிந்தது அனைத்து உண்மை இதயங்களிலும் இரத்தம் சிந…
-
-
- 2 replies
- 1.4k views
-
-
"அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !" "அப்பாவை கடத்தி இல்லாமல் செய்தான் அநியாயம் கேட்க புத்தனும் இல்லை அம்மாவின் கண்ணீரை இன்று துடைக்கிறேன் அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 2 replies
- 1.3k views
-
-
மொழித்திறன் கவிதை ] / "காதலியின் ஏக்கம்" [படக் கவிதை] & "பொட்டு" [இரு இடங்களில் இருவேறு பொருளோடு] "காதலியின் ஏக்கம்" [படக் கவிதை] "அன்பின் பரிசில் காதலியைப் பொறித்து அழகாக மலர்களால் வடிவு அமைத்து அருகில் அணுகி கட்டி அணைத்து அகவைத் தின வாழ்த்து கூறாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ...................................................................... "பொட்டு" [இரு இடங்களில் இருவேறு பொருளோடு] "பொட்டு வெளிச்சம் இல்லாத இரவில் பொட்டு வழியாகப் புகுந்து வந்தான் மட்டு மரியாதை நன்கு தெரிந்தவன் பொட்டு இட்டு என்னை அணைத்தான் பட்டு மேனியைத் தொட்டுப் பார்த்தான் கட்டு உடல் கொண்ட அழகன்!"…
-
- 1 reply
- 454 views
-
-
நாட்டில் நின்ற காலம் தொடர்-2 பஸ் பயணம்! ************* பஸ்.. நிக்கமுன்னே ஏறச்சொல்லி நடத்துனரோ கத்திறார் நாங்கள் ஓடி ஏறமுன்னே சாரதியோ இழுக்கிறார் யன்னல் சீற்று அத்தனையும் தண்ணிப்போத்தல் கிடக்குது நாம் இருக்க போனாலே-அருகில் ஆள் இருக்கு என்கிறார் அத்தனைக்கும் காசு வாங்கி ஆளைப் பின்பு ஏற்றுறார் ஆரம்பத்தில் ஏறியவர் அவலப்பட்டுத் தொங்கிறார். ஏறிவரும் அனைவர் முதுகிலும் சாக்கு பைகள் தொங்குது என்னொருவர் இடத்தை கூட அந்தபைகள் பிடிக்குது இறங்கிப் போகும் போதுகூட கையில் எடுப்பதில்லை இழுத்திழுத்து அனைவருக்கும் இடஞ்சல் கொடுத்து போகுறார். …
-
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
அந்தாதிக் கவிதை / "சிந்தனை" & "பாமாலை" "சிந்தனை" "சிந்தனை செய்து சீராக வாழ்ந்தால் வாழ்ந்ததின் பெருமை உலகுக்கு புரியும்! புரிந்த வழியில் நேராக சென்றால் சென்றதின் பயன் மகிழ்வைக் கொடுக்கும்! கொடுத்து வாங்கி ஒழுங்காய் இருந்தால் இருந்ததின் அர்த்தமே நல்ல சிந்தனை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................... "பாமாலை" "பாமாலை தொடுத்து பூமாலை போட்டேன் போட்ட மலர்களை முகர்ந்து பார்த்தாள்! பார்த்து என்னை அருகில் அழைத்தாள் அழைத்த எனக்கு பாடினாள் பாமாலை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 995 views
-
-
"வரமாக வந்தவளே" "வரமாக வந்தவளே துணையாய் நின்றவளே உரமாக வாழ்வுக்கு பண்பாடு தந்தவளே தரமான சொற்களால் உள்ளம் கவர்ந்தவளே ஈரமான கருணையால் மனிதம் வளர்த்தவளே கரங்கள் இரண்டாலும் உழைத்து காப்பேனே!" "தோரணம் வாசலில் மாவிலையுடன் தொங்க சரமாலை கொண்டையில் அழகாக ஆட ஓரக்கண்ணாலே ஒரு ஓரமாய் பார்த்து காரணம் சொல்லாமல் அருகில் வந்தவளே மரணம் பிரித்தாளும் மறவேன் உன்னை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 2 replies
- 1.5k views
-
-
ஊர்த் தாய்க்கு ஒரு கடிதம்! ************************* உயிருக்கு பயந்து ஒழித்தோடிப்போனவர்கள் என்று கேலி செய்கிறார்கள் அம்மா… அன்று நீதானே சொன்னாய் ஓடித்தப்பு பின் ஊர்களைக் காப்பாற்றவேண்டுமென்று. அதனால்.. வெளிநாடொன்றில் தஞ்சம் புகுந்து விட்டோம். எங்களை.. ஏற்றுக்கொள்ள எத்தனை கேள்விகள் எத்தனை விசாரணைகள் எத்தனை இழுத்தடிப்புகள் இப்படியே எத்தனை வருடங்கள் காத்துக்கிடந்தோம். அகதியென்ற பெயருடனும் கையில்.. அன்னத் தட்டுடனும் அவர்களின் முகாங்களில் அலைந்தபோது கூட எங்கள் துன்பங்களை உனக்கு சொல்ல நாம் விரும்பியதேயில்லைத் தாயே…
-
-
- 5 replies
- 692 views
-
-
https://timesofindia.indiatimes.com/videos/toi-original/kolkata-doctors-last-words-before-horrific-rape-murder-revealed-i-want-to-be-watch/videoshow/112552183.cms?fbclid=IwY2xjawEv0CZleHRuA2FlbQIxMAABHbKHKGXNSWu7n7YWPY1GNOELchx1Bs1iz558QA-bMuJm0VQbs4taiGEesw_aem_lcxvXznR72fMYKeYy-gYXw கிழித்தெறியப்படும் கவிதைகள் இந்தக் கவிதைகளை எங்கள் பண்பாடென ஒருகாலத்தில் நாங்கள் உறுதி பூண்டிருந்தோம் புழுக்கத்தில் கசியும் இரவுகளில் கூட நெறி தவறாமல் நாம் எம் கவிதைகள் படித்தோம் காலம் உருண்டோடி இச்சைக் கருவிக்குச் சண்டை போட்டபோது கசக்கி எறியப்பட்டன பல கவிதைத் தாள்கள் …
-
-
- 2 replies
- 703 views
-
-
எங்கள் அன்புக்குரிய குழந்தைகளை இப்போர் சிதைத்துள்ளது கேள்விகள் ஏதுமின்றி பிசாசுகள் அப்பாவிக் குழந்தைகளை இப் போரில் சுட்டுக் கொன்றனர் நேசிப்புக்குரிய குழந்தை தன் தாயின் கண்ணெதிரே புதைக்கப்பட்டது இதயங்கள் உடைந்து நொறுங்கி ஊமைக் காயங்கள் நிலைபெற்றன மாணவர்கள் எங்கும் இல்லை பறவைகள் அற்ற வனாந்தரமாய் தாயில்லாப் பிள்ளைகள் போல் தனிமையில் கிடந்தன பாடசாலைகள் காகிதப் பறவைகள் காற்றில் சிறகு விரித்துப் பறந்தன தூசி படிந்த பள்ளி மணி அடிப்பாரற்று அநாதையாயிருந்தது பள்ளிகளைப் போர் சூழ்ந்த பின்னொரு நாளில் வகுப்பறை நாற…
-
- 1 reply
- 2k views
-
-
"இரு கவிதைகள்" [1] "கடவுள் கேட்கிறார்" "பாலை ஊற்றி என்னை குளிப்பாட்டுகிறாய் காலை மாலை எனக்கு படைக்கிறாய் சாலை ஓரத்தில் என் மகன் மாலை வரை இருக்க தவிக்கிறான் !" "பட்டும் பகட்டும் எனக்கு எதற்கடா? தட்டும் படையலும் எனக்கு எதற்கடா? கொட்டும் பாலை அவன் குடிக்கட்டும் சொட்டும் தேன் வயிற்றை நிரப்பட்டும்!" "தடல் புடலாக என்னை பூசிக்கிறாய் கடல் கடந்து யாத்திரை போகிறாய் குடல் வற்றி அவன் சாகிறான் உடல் சிதறி அவன் வாடுகிறான்!" "எங்கும் என்னை தேடி அலையாதே இங்கு கொட்டும் கறந்த பாலை அங்கு வறியவன் வாயில் கொட்டு அங்கு அவன் சிரிப்பில் நானே !" [2] "பிள்ளையார் கோவிலில் ஒரு திருவிழா" "பிள்ளையார் கோவிலில் ஒரு திரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
நவீன கவிதை / "காதலற்ற கோடைக் காலம்" "ஏழு வர்ண அழகு தொலைத்து எங்கும் விரிந்து பரந்த நீல ஆகாயமே விண்மீன்கள் சிமிட்டாத வானமே கனவுகள் தொலைத்தேன் மகிழ்ச்சி இழந்தேன் நீண்ட பகல் கோடையே வரட்ச்சி தந்து வாழ்வை கடினமாக்கி இதயத்தை வலியால் நிரப்புவது ஏன்?" "காய்ந்த இலைகள் சருகாகி வறண்ட மண்ணில் விளையாடுது வெப்பம் தாங்காது குருவிகள் கூட்டுக்குள் உறங்குது …
-
- 0 replies
- 2.1k views
-
-
"பூ பூக்கும் நேரம் இது" "பூ பூக்கும் நேரம் இது பூவையர் வரும் காலம் இது பூரித்த காளையர் வண்டாய் மாறி பூந்தேனை மொய்க்கும் நேரம் இது!" "புன்னகை பூ முகத்தில் தவழ புரியாத மோகத்தில் விழிகள் தேட புதுமை அனுபவம் ஊசல் ஆட புருவம் பேசும் காலம் இது!" "தரிசு நிலத்திலும் பூ பூக்கும் தருணம் வந்தால் காய் காய்க்கும் தலைவி நெஞ்சிலும் இடம் கிடைக்கும் தளிர் விட்டு காதல் மலரும்!" "மல்லிகை வாசம் மனதை கவர மகரத் தோடு அழகைத் தர மஞ்சள் நிலா குளிர் பொழிய மயக்கம் தரும் நேரம் இது!" …
-
- 1 reply
- 1k views
-
-
நவீன கவிதை / "நிழல்" "என்னை பின்தொடரும் இருண்ட நிழலே நான் நடக்க ஏன் நீயும் நடக்கிறாய் சிலவேளை முன்னுக்கு நிற்கிறாய் மறுவேளை பின்னுக்கு நிற்கிறாய் குட்டையாய் தெரிகிறாய் நெட்டையாய் தெரிகிறாய் ஏன் உனக்கு இந்த கோலம்?" "வெளிச்சத்தில் கூட்டாளியாய் வருகிறாய் இருட்டில் ஏனோ ஒழிந்து விடுகிறாய் ? நிழலே , உன்னை பார்த்து ரசிக்கிறேன் என்றாலும் உன் கோலம் உண்மை சொல்லாது கை விரல்கள் விந்தை காட்ட நீ நாயாவாய், குருவியாவாய் எப்படி உன்னை நம்புவது? நான் ஏங்கி துடிக்கிறேன் நண்பனே!" "உன்னை மதிலில் பார்க்கிறேன் ஒரு கத்தி என் முதுகை குத்து…
-
- 0 replies
- 1.8k views
-
-
"எதைத் தேடி என்ன பயன் ?" "அறிவைத் தேடி பள்ளிக்கூடம் போனேன் பட்டம் வாங்க பல்கலைக்கழகம் சென்றேன் வேலை செய்ய நிறுவனம் நுழைந்தேன் எதைத் தேடி என்ன பயன் ?" "அழகை ரசிக்க ஆசை வேண்டாமா? அன்பைப் பகிர நண்பி வேண்டாமா? இன்பம் கொள்ளக் காதல் வேண்டாமா? கணவன் மனைவி உறவு வேண்டாமா?" "உறவு கொள்ள காமம் தேடினேன் உள்ளம் பறிக்க காதல் கொட்டினேன் வாழ்வு முழுமையாக மழலை வேண்டினேன் எதைத் தேடி என்ன பயன்?" "வயது போக முதியோர் இல்லம் தேடிய சொத்துக்கு பிள்ளைகள் சண்டை மகிழ்ச்சி தந்த வனப்பும் போச்சு மஞ்சத்தில் படுத்தும் நித்திரை இல்லை?" …
-
- 0 replies
- 2.2k views
-
-
"◆என்◆இதயம்◆எரிகிறது◆" [நவீன கவிதை] "உன்னை நினைத்து என் இதயம் எரிகிறது! உன் இன்றைய காதலன் பொறாமை வாசனையை எனக்கு வீசுகிறான்!" "எதற்காக இப்படி செய்தாய்? கேட்டிருந்தால் எல்லாமே தந்திருப்பேனே 'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'! " "எனக்கு நீ மட்டுமே வேண்டும் எடுத்திடு என் பணம் எல்லாவற்றையும் என் இதயம் எரிகிறது!" "உனக்கு 'நான் விரும்புகிறேன்' சொல்ல, நீயோ மறுபக்கம் திரும்பி என்னை விட்டுவிடு என்கிறாய் என் இதயம் எரிகிறது!" "என்னை பார்த்து அன்று சொன்னாய் விரும்புகிறேன், மணம் முடிப்பேன் என்று கனவ…
-
-
- 3 replies
- 1.8k views
- 1 follower
-
-
"வீழ்ந்தாலும் வித்தாகிடு!" "வீழ்ந்தாலும் வித்தாகிடு மீண்டும் முளைத்திடு வீரம் நிறைந்த தமிழன் நீயடா! வீசும் காற்றின் பக்கம் சாயாதே வீறு கொண்டு எழுந்து நில்லடா!" "தோல்வி கண்டு மனதில் குழம்பாதே தோழன் இருக்கிறான் துணை தர! தோரணம் கட்டி பின்னால் போகாதே தோண்டிப் பார் அவனின் நடத்தையை!" "மாண்டாலும் உன் நோக்கம் வாழனும் மாரி வெள்ளமாய் பரவி ஓடனும்! மானம் கொண்ட தலைமுறை பிறக்கனும் மாட்சிமை கொண்ட மரபு ஓங்கனும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.5k views
-
-
"ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும்" [ஆசை திருப்தியடையாது] "ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும் ஆபரணம் ஆக்கித் தன்னை அலங்கரிக்கிறான் ஆகாயம் வரை சேர்க்க அல்லும்பகலும் ஆரவாரத்துடன் ஓய்வு மறந்து ஓடுகிறான் !" "நேசிக்கிறான், வெறுக்கிறான், பகுத்தறிவு மறந்து நேர்த்தி அற்ற செயல்களில் ஈடுபடுகிறான் நேசக்கரம் மறந்து பண்பு தொலைத்து நேராராகி செல்வத்தில் மட்டும் குறியாயிருக்கிறான் !" "விருப்பம் மட்டும் வாழ்வு இல்லை விஞ்ஞான உண்மைகளைப் புரிந்து கொள் விரைந்து விரைந்து செல்வம் குவிக்காதே விருந்தோம்பல் உடன் அன்பையும் வளர் !" "மகிழ்ச்சி என்பது மனிதனின் …
-
- 0 replies
- 1.5k views
-
-
"ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும்" [அரசியல், சமயம் மற்றும் வரலாற்று வாதிகளுக்கு, இன்று 24/07/2024 இல்] "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!" "சுயநல ஆசைகள் எங்கும் வளர்கிறது சுதந்திரமாக மனித மனதிலும் பதுங்குகிறது சுழன்று சுழன்று அவனை கெடுத்து சுருக்கி விடுகிறது அவனின் இதயத்தை!" "எமக்கு வேண்டியதை நாங்கள் எடுக்கிறோம் எம்மை பற்றி மட்டுமே சிந்திக்கிறோம் எதுக்கு எடுத்தாலும் எம்மை முதல்நிறுத்தி எடுத்த காரியத்துக்கு நியாயம் கூறுகிறோம்!" …
-
- 1 reply
- 216 views
-
-
"வேகாத வெயிலிலே விறகொடிக்கப் போறபொண்ணே..!" / நாட்டுப்புற எசப்பாட்டு ஆண்: "வேகாத வெயிலிலே விறகொடிக்கப் போறபொண்ணே காலுனக்குப் பொசுக்கலையோ கற்றாழைமுள்ளுக் குத்தலையோ?" பெண்: "திண்ணை திண்ணையாத் தாண்டிப் போறவனே பாசாங்கு வேண்டாம்டா பசப்புவார்த்தை வேண்டாம்டா?" ஆண்: "இடுப்புச் சிறுத்தவளே இறுமாப்புநீ பேசாதேடி சிவத்த பாவாடை சித்தம் கலக்குதடி?" பெண்: "நேற்றுவரை உன்னை வெகுவாக நம்பினேனே அறம் அற்றவனே நானே விலகுகிறேனே?" ஆண்: "சிவத்த புள்ள நெனப்பெல்லாம் ஓமேல கரம்நீட்டி இவனைச் சந்திக்கக் கூப்பிடாயோ?" பெண்: "சந்திலே பொந்திலே மேஞ்சு பார்ப்பவனே உன் ஆசைதீர்க்க என்னை நண்பியேன்றாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 3 replies
- 540 views
-