Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. "எழுதுகோல் கொண்டு பா தொடுக்கிறேன்" "எழுதுகோல் கொண்டு பா தொடுக்கிறேன் எக்களிப்பு இல்லை ஏற்றத்தாழ்வு இல்லை எள்ளளவு வெறுப்பு எவரிடமும் இல்லை என்றாலும் என்னை நானே வெறுக்கிறேன் !" "நேரம் போகாத சில நாட்கள் நேசம் கிடைக்காத சில உறவுகள் நேரார் தூற்றும் சில வசைகள் நேசகன் துவைக்கும் துணி ஆனேன் !" "வெறுப்பு மனதில் குடி கொள்ள வெளிச்சம் மெல்ல விலகிப் போக வெறுமை தனிமை என்னை வாட்ட வெண்மணல் தரையில் கருவாடு ஆனேன் !" "அல்லும் பகலும் என்னை சுற்றி அக்கம் பக்கம் நடப்பதைப் பார்த்து …

  2. "அம்புலி முகத்தாளே, கை தூக்காயோ" "சூரியன் மறைய, தனிமை வாட்டுதா சூனிய வாழ்வில், வெளிச்சம் வேண்டுமா சூதுவாது தெரியா, அழகு தேவதையே சூசகமாய் கேட்கிறேன், ஏமாற்ற வேண்டாம்" "நேர்த்தியான சுருள்முடி, தோளைத் தழுவ நேரே வந்து, புன்முறுவல் எனோ நேரார் வருமுன், நான் அணைக்கவா நேசம் கொண்டு, என்னிடம் வந்தாய்" "புத்தன் சொன்ன, கருனை இரக்கம் புரிந்தோர் சொற்பர், இன்று இருக்கினம் புருவம் நெளித்து, கண்சிமிட்டி நீ புங்கலம் குளிர, கருணை பொழிகிறாய்" "அரசு தராத, பேச்சு சுதந்திரம் அழகி உன்னில், நான் காண்கிறேன் அக்கம் பக்கம், யார் இருந்தாலும் …

  3. "நிழலாடும் நினைவுகள்" "நிழலாடும் நினைவுகள் கதை சொல்லும் நித்திரை செய்கையில் கனவாய் வரும்! மகரிகை தொங்க வலதுகால் வைத்து மணமகளாய் வந்தது படமாய் போச்சு! ஆறடி சேலையில் தொட்டில் கட்டி, காலடியில் வளர்த்தது செய்தியாய் போச்சு! வாழையடி மரபை பெருமையாக பேணி வந்தாரை மகிழ்வித்தது மனதில் ஆடுது! இறக்கும் தருவாயிலும் புன்னகை பூத்தது இறவாமல் 'நிழலாடும் நினைவுகள்' ஆயிற்று!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  4. யாரைத்தான் நம்புவதோ? **************************** எழுபது ஆண்டுகளாக எம்மேல் ஏறி உழக்கியவர்களும் எம்மில் சவாரி செய்தவர்களும் எம்மினத்தை கொத்துக் கொத்தாக கொண்றழித்தவர்களும் எம்மை பயங்கர வாதிகளாக காட்டி வாக்கு பறித்தவர்களும் எம் தேசமெங்கும்-புத்தர் சிலை விதைத்தவர்களும் ஊழல் லஞ்சமென பெருக்கி உயிர் வாழ்ந்த அந்த அரசியல் தலைமைகளை.. சிங்களமக்களே! ஓடவெருட்டி ஒன்றுசேரும் இந்நேரம் இங்கோ. அனைத்துத் தரப்பும் மேடையில் ஏறி தமிழ் உரிமை தமிழ் விடிவு தமிழ் சுதந்திரம் தமிழ் ஈழத்துக்கான சம உரிமை. தமிழ்! தமிழ்! தமிழ்! எனக் கத்திவிட்டு-பின் தமிழை அழித்த இன…

  5. "பூவாசம் வீசுதே" "பூவாசம் வீசுதே நீலக் கருங்குயிலே பூத்து குலுங்குதே புன்னகை உன்னிலே! பூவையர் கண்களும் உன்னை நாடுதே பூரண சந்திரனும் வெட்கித் தலைகுனியுதே!" "மஞ்சள் ஆடையில் செக்கச் சிவந்தவளே மருண்ட விழியால் பூரிப்பு தாராயே! மகிழ்ச்சி பொங்குதே இடுப்புச் சிறுத்தவளே மடவரல் இடையை கூந்தலும் வருடுதே!" "மனம் மயக்கும் அழகு மலர்களே மணம் வீசி இதயத்தை தொடுகிறாயே! மங்கையின் கையில் ஏன்தான் போனாய் மந்திர மொழியால் உன்னை ஏமாத்துகிறாளே!" "பக்குவமாக இருந்து பூவை முகர்ந்து பல்வரிசைக் காட்டி சித்தம் கலக்குகிறாளே! பவளக் கொடியாளே உதட்டு அழகியே பல்லாயிரம் பூக்களும் உனக்கு நிகரில்லையே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தி…

  6. அந்தாதிக் கவிதை / "உயிரோடு இணைந்தவளே!" "உயிரோடு இணைந்தவளே உடலோடு கலந்தவளே! கலந்த காதலால் இதயத்தில் மலர்ந்தவளே! மலர்ந்து மயக்கி இன்பம் கொட்டியவளே! கொட்டிய தேளிலும் கொடுமை கூடியவளே! கூடி மகிழ்ந்து பரவசம் தருபவளே! தருவதும் எடுப்பதும் உனது உரிமையே! உரிமை கொண்டு நெஞ்சில் உயர்ந்தவளே! உயர்ந்த எண்ணங்களால் சிந்தனையைத் தூண்டியவளே! தூண்டிய உணர்வுகள் எல்லையைத் தாண்டியும் தாண்டாமல் பிரியாமல் இணைந்தாளே உயிரோடு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  7. "காதல் என்பது மாய வலையோ..?", "சிறுவர்களே" & "ஆசைவார்த்தை பேசிப்பேசி அயித்தானை மசக்குறியே!" "காதல் என்பது மாய வலையோ..?" "காதல் என்பது மாய வலையோ காமம் சேரும் அன்பு பொறியோ காலம் போக்கும் களி ஆட்டமோ கானல் நீரின் ஒரு வடிவமோ காரணம் புரியா நட்பின் பிணைப்போ?" "கண்ணும் கண்ணும் சேர்ந்த பின் மண்ணும் மழையும் கலந்தது போல எண்ணமும் கனவும் பின்னிப் பிணைந்து உண்மை ஆசைகள் நெஞ்சில் சுமந்து பெண் பேசும் கண்ணீர் கதையோ?" "சிறுவர்களே" "கைபேசியில் விளையாடி மகிழும் சிறுவர்களே! கைகால் ஓய்ந்து உடலெடையை ஏற்றதே! உலகம் சுருங்கி கையில் இருக்குது உண்மையைத் தேடி உயரப் பாரு!" "இளமை உன்னை சுண்டி இழுக்கும் இதயத்தை என்றும் …

  8. படக்கவிதை / "மணமகள் மகிழ்ச்சியில் காத்து இருக்கிறாள்!" "உணர்வுகள் எல்லாம் உள்ளத்தில் பூரிக்க ஆணவம் அற்ற மனத்தைக் கொண்டு ஆணழகன் வருகையை எதிர்ப் பார்த்து மணமகள் மகிழ்ச்சியில் காத்து இருக்கிறாள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  9. தன்முனைக் கவிதை / "நினைவுகள்” "நினைவுகள் பறக்குது அவள் பிரிந்தது வதைக்குது! நினைவுகள்அணைக்குது அவள் வாழ்ந்தது இனிக்குது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  10. 'மாலைக் காற்று மெதுவாய் வீச' "மாலைக் காற்று மெதுவாய் வீச மார்பு நிறைய அன்பு ஏந்தி மாண்ட வாழ்வை திருப்பி தர மாற்றம் ஒன்றை நட்பில் காட்டியவளே !" "பாடும் குயில்கள் பறந்து செல்ல பாதை நிறைய பாசம் விதைத்து பாலைவனத்தை சோலை வானம் ஆக்கி பாடல் ஒன்றை நட்பில் பாடியவளே !" "வெண் புறா மாடத்தில் பதுங்க வெண்நிலா புன் முறுவல் பூக்க வெற்றி மகளாய் இதயத்தில் பதுங்கி வெறுமை நீக்கி உத்வேகம் தந்தவளே !" "வானம் தொடும் வண்ணத்துப் பூச்சியாய் வாசமிகு மலராய் பாசமிகு உறவாய் வான வில்லாய் ஜாலங்கள் புரிந்து வாழ வைக்க தன…

  11. "தவமின்றிக் கிடைத்த வரமே" "தன்னந் தனியே தவித்து இருந்தவனை தட்டிக் கொடுத்து தெம்பு அளித்து தத்துவம் தவிர்த்து யதார்த்தம் உணர்ந்து தன்னையே தந்து மகிழ்வை ஈன்று தலைவி நானேயென நாணிக் கூறி தளர்வு இல்லாக் காதல் தந்தவளே!" "அவல நிலையில் நின்ற இவனை அவனியில் வெறுத்து தனியே சென்றவனை அவனது மேலே கொண்ட கருணையால் அவதிப் படாதே ஆயிரம் வந்தாலுமென அவதாரமாக வந்தவளே! அன்பின் அழகே! தவமின்றிக் கிடைத்த வரமே! நீயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  12. குறளோடு கவிபாடு / "குறள் 1175" "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கண்களும் பேசின காதலையும் தந்தன வண்ண உடலின் கவர்ச்சி ஈர்த்தன ஆண்மை கண்டு அவளும் நெருங்கினாள் கண்ட கோலம் காமம் கொடுத்தன!" "பெண்ணின் அழகில் மயங்கி நின்றவனோ எண்ணம் எல்லாம் அவளே என்றவனோ கண்ணீர் தந்து உறவு மறந்து அண்டம் எங்கோ பிரிந்து போனானே கண்ணனை நினைத்து துயிலும் மறந்தேனே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

  13. "மடியில் ஏந்திக் கொள்ளடா மன்னவா!" "மாடி வீட்டில் உன்னைக் கண்டேன் தாடி மீசை அழகு பார்த்தேன்! வாடி இருந்தவளை தூக்கி நிமிர்த்தினாய் தேடி என்னிடம் அடைக்கலம் வாடா!" "கடிதம் எழுதி கையில் தந்தாய் ஈட்டி கொண்டு நெஞ்சைத் துளைத்தாய்! கட்டிப் பிடித்து இன்பம் பகிர்ந்தாய் அடிமை அற்ற வாழ்வு கொடடா!" "ஓடி விளையா…

  14. Started by nochchi,

    உருவப்படுமா? --------------------- எங்கும் ஒருவித மயான அமைதி காடைத்தனத்தின் உச்சத்தைக் கடந்த பொழுதில் நிலமெங்கும் மனிதமலைகளாய் உடலங்கள் குருதியும் சகதியுமாய்... எனக்கு உயிர் இருந்தது அதுவே எனக்குப் போதுமானது கடற்காற்று ஊவென்று வீசியது உடம்பெங்கும் சில்லிட்டுக் குளிர்ந்தது ஆடையற்று அம்மணமாகக் கிடக்கும் உணர்வு நானும் செத்திருக்கக் கூடாதா மனம் சொல்லிற்று குப்புறக் கிடந்த என்னால் அசையக்கூட முடியவில்லை பிணங்களில் இருந்துவரும் வாடை வாடைக்காற்று வீசிய கடலோரம் பிணவாடை உலுப்பியது சட்டென அம்மாவின் குரல் என் காதில் ஒலித்தது டேய் அரைநாண் கயிறைக் கட்டடா அவிழ்ந்தால் நீ அம்மணக்கட்டையடா ஒட்டுத் துணிகூட இல்லாதபோதிலும் அரைநாண் கயிறிருந்த…

  15. நாய்களுக்கும் நரிகளுக்குமான போட்டியில் ஒவ்வொரு முறையும் குயில்கள் பலியாகின்றன குயில்களுக்கு தெரிவதில்லை தாம் தான் தூண்டிலில் கொழுவப்பட்ட புழுக்கள் என.. பேய்களுக்கும் பிசாசுகளுக்குமான போரில் ஒவ்வொரு முறையும் வண்ணாத்திப் பூச்சிகள் கொல்லப்படுகினறன வண்ணாத்திப் பூச்சிகளுக்கு தெரிவதில்லை தாம் தான் வலையில் சிக்க வைக்கப்படும் சிறு கண்ணிகள் என.. மனிதர்களுக்கும் மனிதமற்றவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒவ்வொரு முறையும் கடவுள்கள் கொல்லப்படுகின்றனர் கடவுள்களுக்கு தெரிவதில்லை தாம் தான் மனிதர்களின் பொறியில் வைக்கபடும் இரைகள் என யார் யாருக்கோ இடையிலான யுத்தத்தில் எப்போதும் தோற்றுக் கொண்டே இருப்பவர்களுக்கு ஒரு போதும் தெரிவதில்லை எப்பவுமே …

  16. கனவு பலிக்குமா? ********************** கந்தையா அண்ணரும் காசிம் நானாவும் றம்பண்டா மல்லியும் ஒரு குடும்பமாய் திரிந்த காலம் அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. புத்த பெருமானுக்கும் நபிகள் நாயகத்துக்கும் ஜேசு பிரானுக்கும் சித்தர் சிவனுக்கும்-மதம் பிடித்ததாய்.. அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. கண்டியில பெரகராவும் திருக்கேதீச்சரத்தில சிவராத்திரியும் கொச்சிக்கடையில பாலன் பிறப்பும் மட்டக்களபில நோன்புப் பெருநாளும் அன்பாக நடந்ததே தவிர அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. ஒவ்வொரு இடத்தி…

  17. மொழித்திறன் கவிதை ] / "காதலியின் ஏக்கம்" [படக் கவிதை] & "பொட்டு" [இரு இடங்களில் இருவேறு பொருளோடு] "காதலியின் ஏக்கம்" [படக் கவிதை] "அன்பின் பரிசில் காதலியைப் பொறித்து அழகாக மலர்களால் வடிவு அமைத்து அருகில் அணுகி கட்டி அணைத்து அகவைத் தின வாழ்த்து கூறாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ...................................................................... "பொட்டு" [இரு இடங்களில் இருவேறு பொருளோடு] "பொட்டு வெளிச்சம் இல்லாத இரவில் பொட்டு வழியாகப் புகுந்து வந்தான் மட்டு மரியாதை நன்கு தெரிந்தவன் பொட்டு இட்டு என்னை அணைத்தான் பட்டு மேனியைத் தொட்டுப் பார்த்தான் கட்டு உடல் கொண்ட அழகன்!"…

  18. அந்தாதிக் கவிதை / "சிந்தனை" & "பாமாலை" "சிந்தனை" "சிந்தனை செய்து சீராக வாழ்ந்தால் வாழ்ந்ததின் பெருமை உலகுக்கு புரியும்! புரிந்த வழியில் நேராக சென்றால் சென்றதின் பயன் மகிழ்வைக் கொடுக்கும்! கொடுத்து வாங்கி ஒழுங்காய் இருந்தால் இருந்ததின் அர்த்தமே நல்ல சிந்தனை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................... "பாமாலை" "பாமாலை தொடுத்து பூமாலை போட்டேன் போட்ட மலர்களை முகர்ந்து பார்த்தாள்! பார்த்து என்னை அருகில் அழைத்தாள் அழைத்த எனக்கு பாடினாள் பாமாலை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

  19. "அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !" "அப்பாவை கடத்தி இல்லாமல் செய்தான் அநியாயம் கேட்க புத்தனும் இல்லை அம்மாவின் கண்ணீரை இன்று துடைக்கிறேன் அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  20. நவீன கவிதை / "விடுதலையின் வித்து" "சரியான நேரத்தில், சரியான மண்ணில் சரியான விதை போட்டால், உரம் இட்டால் கிருமி நாசினி தெளித்தால், மரம் வளரும் பூ பூத்து பயன் தரும்! ஆனால் வித்து மண்ணோடு மண்ணாக போய்விடும்!!" "நாம் வாழ்ந்தோம் இருந்தோம் என்று இல்லாமல், எங்கு வாழ்கிறோம், எப்படி இருந்தோம், எப்படி வாழ்கிறோம் சற்று சிந்தி உன் வரலாறு புரியும் உன் பெருமை தெரியும் உன் இன்றைய வாழ்க்கைக்கான விடுதலையின் வித்து அறிவாய்!" "உலகத்தை தூக்கத்திலிருந்து ஒரு வித்து கிழித்தெறிந்தது அனைத்து உண்மை இதயங்களிலும் இரத்தம் சிந…

  21. "வரமாக வந்தவளே" "வரமாக வந்தவளே துணையாய் நின்றவளே உரமாக வாழ்வுக்கு பண்பாடு தந்தவளே தரமான சொற்களால் உள்ளம் கவர்ந்தவளே ஈரமான கருணையால் மனிதம் வளர்த்தவளே கரங்கள் இரண்டாலும் உழைத்து காப்பேனே!" "தோரணம் வாசலில் மாவிலையுடன் தொங்க சரமாலை கொண்டையில் அழகாக ஆட ஓரக்கண்ணாலே ஒரு ஓரமாய் பார்த்து காரணம் சொல்லாமல் அருகில் வந்தவளே மரணம் பிரித்தாளும் மறவேன் உன்னை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  22. நாட்டில் நின்ற காலம் தொடர்-2 பஸ் பயணம்! ************* பஸ்.. நிக்கமுன்னே ஏறச்சொல்லி நடத்துனரோ கத்திறார் நாங்கள் ஓடி ஏறமுன்னே சாரதியோ இழுக்கிறார் யன்னல் சீற்று அத்தனையும் தண்ணிப்போத்தல் கிடக்குது நாம் இருக்க போனாலே-அருகில் ஆள் இருக்கு என்கிறார் அத்தனைக்கும் காசு வாங்கி ஆளைப் பின்பு ஏற்றுறார் ஆரம்பத்தில் ஏறியவர் அவலப்பட்டுத் தொங்கிறார். ஏறிவரும் அனைவர் முதுகிலும் சாக்கு பைகள் தொங்குது என்னொருவர் இடத்தை கூட அந்தபைகள் பிடிக்குது இறங்கிப் போகும் போதுகூட கையில் எடுப்பதில்லை இழுத்திழுத்து அனைவருக்கும் இடஞ்சல் கொடுத்து போகுறார். …

  23. ஊர்த் தாய்க்கு ஒரு கடிதம்! ************************* உயிருக்கு பயந்து ஒழித்தோடிப்போனவர்கள் என்று கேலி செய்கிறார்கள் அம்மா… அன்று நீதானே சொன்னாய் ஓடித்தப்பு பின் ஊர்களைக் காப்பாற்றவேண்டுமென்று. அதனால்.. வெளிநாடொன்றில் தஞ்சம் புகுந்து விட்டோம். எங்களை.. ஏற்றுக்கொள்ள எத்தனை கேள்விகள் எத்தனை விசாரணைகள் எத்தனை இழுத்தடிப்புகள் இப்படியே எத்தனை வருடங்கள் காத்துக்கிடந்தோம். அகதியென்ற பெயருடனும் கையில்.. அன்னத் தட்டுடனும் அவர்களின் முகாங்களில் அலைந்தபோது கூட எங்கள் துன்பங்களை உனக்கு சொல்ல நாம் விரும்பியதேயில்லைத் தாயே…

  24. https://timesofindia.indiatimes.com/videos/toi-original/kolkata-doctors-last-words-before-horrific-rape-murder-revealed-i-want-to-be-watch/videoshow/112552183.cms?fbclid=IwY2xjawEv0CZleHRuA2FlbQIxMAABHbKHKGXNSWu7n7YWPY1GNOELchx1Bs1iz558QA-bMuJm0VQbs4taiGEesw_aem_lcxvXznR72fMYKeYy-gYXw கிழித்தெறியப்படும் கவிதைகள் இந்தக் கவிதைகளை எங்கள் பண்பாடென ஒருகாலத்தில் நாங்கள் உறுதி பூண்டிருந்தோம் புழுக்கத்தில் கசியும் இரவுகளில் கூட நெறி தவறாமல் நாம் எம் கவிதைகள் படித்தோம் காலம் உருண்டோடி இச்சைக் கருவிக்குச் சண்டை போட்டபோது கசக்கி எறியப்பட்டன பல கவிதைத் தாள்கள் …

      • Sad
    • 2 replies
    • 738 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.