கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
662 topics in this forum
-
கிணற்றடியில் குளித்து கொண்டு நின்றவனுக்கு ,தம்பி குளிக்கும் பொழுது அந்த தேசிக்காய் மரத்துக்கு வாய்க்கால் தண்ணியை வெட்டிவிடு என தந்தை சொன்ன ஞாபகம் வரவே ஒடிப்போய் மண்வெட்டியை கொண்டு வந்து தண்ணியை திருப்பிவிட்டான். காலில் சேறு அதிகமாக படிந்துவிடவே கிணற்று படியில் தேய்த்து கழுவிவிட்டு மீண்டும் குளிக்க தொடங்கினான்.. "நீ உன்னை அறிந்தால் நீ உன்னை " என்ற பாடலை பாடியபடி வாளியை கிணற்றினுள் இறக்கினான் ,தொம் என கீழே விழுந்தது வாளியினுள் தண்ணீர் நிறைந்தவுடன் " உன்னிடம் மயங்குகிறேன்" என்ற அடுத்த பாடலை பாடியபடி இழுக்க தொடங்கினான் ,பக்கத்து வீட்டு வளவில் இருந்த கிணற்றடியிலிருந்து கண்ணா ஆரிடம் மயங்கிறாய் என்ற குரல் கேட்க வெட்கத்தில் "இல்லை அண்ரி சும்மா ரேடியோவில் போகின்றது அதை …
-
-
- 11 replies
- 974 views
-
-
கலப்புத் திருமணம் ------------------------------- சினிமாவில் வருகின்ற அமெரிக்க மாப்பிள்ளைக்கும், உண்மையான நிலவரத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளி சைபீரியா பாலைவனம் போல நீண்டதும், கொடியதும், பொதுவில் மற்றவர்களுக்கு தெரியாததும். அமெரிக்க மாப்பிள்ளை என்றவுடன் அடித்து பிடித்து பெண்ணைக் கொடுப்பார்கள் என்ற காலம் தமிழ்நாட்டில் எப்பவோ வழக்கொழிந்துவிட்டது. பெண் பார்க்கப் போகும் இடத்தில், பெண் வீட்டாரிடம் இருந்து 'மாப்பிள்ளை அமெரிக்காவில் என்ன விசாவில் இருக்கின்றார்....' என்ற முதலாவது கேள்வி வரும். என்ன விசா என்று பதில் சொல்ல ஆரம்பித்தாலே, கிரீன் கார்ட் இல்லையா, இன்னும் சிட்டிஷன் ஆகவில்லையா என்று அடுத்தடுத்த கேள்விகள் வரும். அவை வந்திடும் என்று சும்மா சொல்லித் தப்பவும் …
-
-
- 7 replies
- 1k views
-
-
காலை வேலையை முடிச்சிட்டு மெட்ரோவில் பப்பரக்கா என்று முன்சீட்டு வரை காலை நீட்டி இருந்தது வந்தேன் ஒரு இடத்தில ஒரு அண்ணை ஏறினாறு அப்படியே வந்து என் முன்னாடி இருந்தாரு நானு காலை மடிச்சு மரியாதையா இருந்தேன் .. காரணம் ஏறினவர் நல்ல அழகா உடை அணித்து ஒரு உயர்தர வேலைக்கான மிடுக்குடன் அவ்வளவு அழகா இருந்தார் சிறிய புன்னைகையை தவழவிட்டபடி .. ஒரு சிறிய அமைதியின் பின் பேச்சு கொடுத்தார் தம்பி நீங்க தமிழா நான் மனதில் (படிச்சபயல் நம்மகூட பேசுது )நினைத்தபடி ஆமா அண்ணே என்று சொல்லிட்டு இருக்க சொன...்னாரு உலகத்தில வன்முறை ;பயங்கரவாதம் தலை தூக்கி ஆடுது (ஒருவேளை இவன் ரகசிய போலீஸோ) இதில இருந்து மீள ஒருவழிதான் இருக்கு .. நான் ஆவலா என்ன வழி அண்ணே நீங்கள்எல்லோரும் ஆண்டவரிடம் சரண் அடையவேணும் (இத…
-
- 5 replies
- 987 views
-
-
"ஆசையில் ஓர் காதல்" மலை அடிவாரத்தில் உஷா என்ற அழகிய இளம் பெண், தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள். அவள் நீண்ட கருங் கூந்தலையும் பிரகாசிக்கும் அழகிய கண்களையும் கொண்டு இருந்தாள். அவள் ஒரு உண்மையான காதல் தனக்கு கிடைக்க வேண்டும் என்று பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து ஏங்கி வந்தாள். ஆனால் இப்ப அவள் பல்கலைக்கழகம் போன பின்பும், இன்னும் அப்படியான ஒரு காதலை அவளால் அடைய முடியவில்லை. ஒரு நாள், பல்கலைக்கழக விடுமுறை நாளில், தன்னந்தனிய சிறு பத்தைகள் நிறைந்த காட்டுப்பகுதியில், இயற்கையின் அழகையும் அங்கு பறந்து திரியும் பறவைகளையும் ரசித்தபடி நடந்து சென்றாள். அப்பொழுது அவளுக்கு எதிராக நல்ல உயரமும் அழகிய வலிமை பொருந்திய உடல் அமைப்பும் கொ…
-
- 0 replies
- 176 views
-
-
"தாயின் பரிசு" [உயிர் பிழைத்த வளையல்] இலங்கையின் தமிழ் மக்களின் முதன்மையான தாயகமான யாழ்ப்பாணம் டச்சு காலனித்துவ அம்சங்கள் மற்றும் தென் இந்திய கலாச்சாரம் போன்றவற்றின் தாக்கங்களால் உருவான சுவாரசியமான கலாச்சாரத்தைக் கொண்ட தனித்துவமான ஒரு பகுதியாகும். அப்படியான, அதேநேரம், பெரும்பாலும் வெயிலின் கொடுமையில் வாடிய யாழ்ப்பாண நகரத்தில், அழகு மற்றும் உள்நாட்டு போரின் போதும் அதன் பின்பும் பல விதமான கஷ்டங்கள், பாதிப்புகள் கொண்ட ஒரு பகுதியாகவும் இருந்தது. அங்கே, தெருக்கள் குறுகலாக, மிதிவண்டிகள், பழ வியாபாரிகள், காற்றில் கலந்த தமிழ் மொழியின் ஓசைகள் என பரபரப்பாக இருக்கும் அதன் மையப் பகுதியில் அடக்கமான ஒரு சிறிய வீட்டில் மாரியம்மா என்ற விதவை வாழ்ந்து வந்தார். அவளது வாழ்க்கை …
-
- 0 replies
- 131 views
-
-
01 திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர்ப்பிரதேசம் விடுதலைப்போராட்டத்திற்கு மிக முக்கிய பங்காற்றிய பிரதேசங்களில் ஒன்றாகும். மேஜர் கணேஸ், லெப் கேணல் புலேந்தியம்மான் காலம் தொடக்கம் அந்த மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்பை வைத்து, பல உதவிகளைச் செய்து, போராட்ட அமைப்பு வளர்ச்சியடைய காரணமாக இருந்திருக்கிறார்கள். அந்த கிராமத்தின் பெரும்பான்மையானோர் இறுதிவரை விடுதலைப்போராட்டத்தோடு பயணித்திருக்கின்றார்கள். அதற்காக அவர்கள் இழந்தது ஏராளம். இக்கிராமத்தில் ஒரு போராளி குடும்பம் இருந்தது. அக்குடும்பத்தில் தந்தை, தாய், மூன்று பெண்பிள்ளைகள் இரண்டு ஆண்கள் என ஏழுபேரைக் கொண்ட குடும்பம். அதில் மூன்றாவது மகன்தான் தன்னைப் போராட்டத்தில் (காந்தன் புனைபெயர்) இணைத்திருந்தான். 2002…
-
- 24 replies
- 3.1k views
-
-
"அவளோடு என் நினைவுகள்…" "உன் நினைவு மழையாய் பொழிய என் விழியோரம் கண்ணீர் நனைக்க மென்மை இதயம் அன்பால் துடிக்க அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது " "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய மண்ணை விட்டு நானும் விலக மங்கள அரிசியும் கை மாறியதே!" நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவுபடுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை] வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன் நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின், காலி, மாத்தறை, அம்பாந்தோட்…
-
- 0 replies
- 254 views
-
-
வருடம் பிறந்தவுடன் உறவுகளுக்கு தொலைபேசி மூலமும், இணைய நண்பர்களுக்கு இணையத்தின் மூலமும்,மின்னஞ்சல் மூலம் பாடசாலை நண்பர்களுக்கும்,முகப்புத்தகத்தின் ஊடாக முகபுத்தக நண்பர்களுக்கும் புது வருட வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டேன்.பதிலுக்கு அவர்களும் நன்றிகள் உங்களுக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றனர்.சிலர் இது எங்கன்ட புத்தாண்டு இல்லை ஆரியரின்ட புத்தாண்டு என்றனர்.அப்படி சொன்னவரில் கந்தரும் ஒருத்தர்.இவர் உப்படிதான் சொல்லுவார் என்று தெரிந்து அவரை கண்டவுடன் அண்ணே ஆரிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றேன்..நன்றி ஆனால் நான் தமிழர் புத்தாண்டைதான் கொண்டாடுவேன் இவங்கன்ட புத்தாண்டை கொண்டாமாட்டேன் என்றார். நானும் ஒவ்வொரு முறையும் சித்திரை புத்தாண்டு,தமிழ் புத்தாண்டு,சிங்கள புத்தாண…
-
- 17 replies
- 6.2k views
-
-
சிறு கதை - 197 / எல்லாளன் & விஹாரமஹாதேவி (இரு ஆசிரியர்களின் காதல் கதை) திருகோணமலையில் உள்ள அந்த தமிழ் பாடசாலை, வெளியில் பார்க்கும் போது சாதாரண பள்ளிக்கூடமாகத் தோன்றினாலும், உள்ளே அது ஒரு சிறிய பாராளுமன்றம் போல இயங்கியது. சட்டங்களுக்குப் பதிலாக சுற்றறிக்கைகள்; வாக்காளர்களுக்குப் பதிலாக மேற்பார்வையாளர்கள் [இன்ஸ்பெக்டர்கள்]; பாடப் புத்தகங்களை விட உண்மையான அரசியலை, வரலாற்றை நன்கு புரிந்து கொண்ட மாணவர்கள். அங்கு இளம் பட்டதாரி எல்லாளன் கணிதமும் இயற்பியலும் கற்பித்தான். அரசாங்கங்கள் மக்களுக்குக் கீழ்ப்படிந்ததை விட, எண்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தன. அதே பாடசாலையில், இளம் பட்டதாரி விஹாரமஹாதேவி தமிழ் மாணவர்களுக்கு சிங்களம் கற்பித்தாள். மொழி ஆயுதமல்ல — ஆனால் அரசும் அதன் கூட்டா…
-
- 0 replies
- 93 views
-
-
இன்றுடன் அவள் இங்கு வந்து இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டன. எட்டு மாதப் பிள்ளை அங்கு என்ன செய்கின்றதோ என்பதே எந்நாளும் இவள் கவலையாக இருக்கிறது. எத்தனை கெஞ்சியும் பிள்ளையைக் கண்ணில்க் காட்டுகிறார்களே இல்லை. அதுவும் முதல் பிள்ளை. எனக்குத் தெரியாமல் அவனுக்குப் பிள்ளையைக் காட்டுவார்களோ என்று எண்ணும்போதோ மனம் பதட்டப்படத் தொடங்கிவிட்டது தாரணிக்கு. “நீ தேவையில்லாமல் எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகாதை. இன்னும் கொஞ்ச நாள்த்தான். பொறுமையாய் இரு.” “நீ எண்டாலும் தருணை ஒருக்காய் போய்ப் பாரனடா. இரவிலை என்னால நித்திரையே கொள்ள ஏலாமல் இருக்கடா” “நான் இண்டைக்கே போய்க் கதைக்கிறன். நீ நின்மதியாய் இரு அக்கா” விடைபெற்றுச் செல்லும் தம்பியைக்கூட அவளால் முற்றிலுமாக நம்பமுடியாவிட…
-
- 44 replies
- 5.6k views
-
-
[போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில்] "வேரைத் தேடும் தளிர்கள்" ஒரு சமயம், இலங்கையின் முல்லைத்தீவில், ரவி என்ற இளைஞனும் அவனது சகோதரி மாயாவும், போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தனர். 2009 ஆம் ஆண்டு, மோதலின் வடுக்கள் இன்னும் மனதில் இருந்து நீங்கவில்லை, தங்களைப் போன்ற பல அனாதைகளின் தடயங்களை அது விட்டுச் சென்றுள்ளதை உணர்ந்தார்கள். அவர்களது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனரா? அல்லது இடைவிடாத குண்டுவெடிப்பு மற்றும் ஷெல் வீச்சுக்கு பலியாகினரா?, ஒன்றுமே அவர்களுக்குத் தெரியவில்லை. அப்பொழுது அவர்கள் குழந்தைப் பருவம். ஆனால் இப்ப, உயர் வகுப்பு பயிலும்18 வயது ரவியும்…
-
- 0 replies
- 199 views
-
-
"யுத்த வடுகளுக்கு மத்தியில் ஒரு காதல்" 25 ஆண்டுகால இனவாத யுத்தத்தின் போது, வடக்கு மற்றும் கிழக்கில் வைத்தியசாலை கட்டமைப்புகள் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் நாசமாக்கப்பட்டுள்ளதோடு அவை இன்றைய தேவைகளுக்கு ஏற்ப அபிவிருத்தி செய்யப்படவில்லை. அது மட்டும் அல்ல, 2009 இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தின் குண்டுத் தாக்குதல்களால் வன்னி பிரதேசத்தின் முழு உட்கட்டமைப்பும் தரைமட்டமாக்கப்பட்டு இரண்டரை இலட்சத்துக்கும் மேலானவர்கள் இராணுவம் நடத்திய முகாம்களில் அடைக்கப்பட்டதுடன் 40,000க்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த சூழலில் தான், போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா நகரில், குழப்பம் …
-
- 0 replies
- 282 views
-