கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
647 topics in this forum
-
"நிலவே முகம் காட்டு .. " ஞாயிறு, செப்டம்பர் 23, 2018, நிலாவில் பாபாவின் முகம் தெரிவதாக சென்னை நகரம் இரண்டு மணித்தியாலத்துக்கு ஆர்வமும், அதிர்ச்சியும் அடைந்தது. பலர் கைகளில் டெலஸ்கோப் இருந்தது. நிலாவையே பார்த்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் பிரத்தியேக கண்ணாடி அணிந்தும் இருந்தனர். அப்போது அவர்களில் சிலர், "ஆமாம்.. பாபா முகம் தெரிகிறது" எனக் கூறி பரவசப்பட்டனர். ஒருசிலர் நிலாவை பார்த்து வணங்கவே ஆரம்பித்து விட்டனர். எனக்கு இவர்களை பார்க்க வேடிக்கையாக இருந்தது, நான் உயர் வகுப்பு படிக்கும் கூலித் தொழிலாளியின் மகன். எங்கள் குடிசைக்கு கொஞ்சம் அருகில் தான், ஒரு மாட மாளிகையில் ஒரு கோடீஸ்வரர் வாழ்ந்து வாரார். அவர் குடும்பமும் தமது மொட்டை மாடியி…
-
- 0 replies
- 414 views
-
-
"நேர்மைக்கு கிடைத்தப் பரிசு!" அது ஒரு அழகிய குக்கிராமம். அதனூடாகத்தான் தூர இடத்து பேரூந்துகள் போவது வழமை. பேரூந்து தரிப்பு நிலையம் முன்பாக பல வகையான பழத் தோட்டம் ஒன்று இருந்தது. அதன் முதலாளி அதற்கு முன்னால் ஒரு பெட்டிக் கடை திறந்து வெவ்வேறு பழங்களுடன், சிற்றுண்டிகளும், தேநீர் மற்றும் பானங்களும் விற்கத் தொடங்கினார். அதுமட்டும் அல்ல, மக்களை கவருவதற்காக அவர்களின் அடிப்படை தேவையான கழிப்பறை வசதியும் அங்கு அமைத்து இருந்தார். அதனால், பேரூந்து வந்து நிற்கும் ஒவ்வொரு தடவையும் அவரின் பெட்டிக் கடை மிக ஆரவாரமாக இருக்கும். இந்த ஆரவாரத்தை பாவித்து, அந்த கிராமத்து சில இளைஞர் யுவதிகள் அங்கு பழங்களை களவெடுத்து போகத் தொடங்கினர். அவரின் கடைக்கு அ…
-
- 3 replies
- 637 views
-
-
"பார்வை ஒன்றே போதும்" திடீரென எதேச்சையாக இருவர் சந்திக்கும் பொழுது அவர்களின் கண்கள் அப்படியே ஒருவரை ஒருவர் அசையாமல் கணப்பொழுது நின்றுவிட்டது என்றால், அதுவும் இளம் ஆணும் பெண்ணும் என்றால், 'கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!' என்பதைவிட அது வேறு ஒன்றாக இருக்க முடியாது. இதை பட்டாசு வெடிப்பது போல இதயங்கள் வெடிக்கின்றன என வர்ணிப்பார்களும் உண்டு. இருவரின் தனித்துவமான வெளிப்படையான இயல்புகள் ஒருங்கினையும் பொழுது மின்சாரம் பாய்வது போல அந்த உணர்வு தானாக ஏற்படுகிறது. அது அப்படியே இருவரையும் விழுங்கிவிடுகிறது என்று நான் முன்பு படித்த கவிதை ஒன்று எ…
-
- 0 replies
- 155 views
-
-
"பிரியமான தோழிக்கு [காதலிக்கு]" இலங்கை, யாழ் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில், அன்று மகிழன் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் பொதுவாக கருணையும், இரக்கமும் கொண்டவன். அவன் இளம் பொறியியலாளராக இருந்தும் எழுத்தின் மீதும் ஆழ்ந்த ஆர்வம் கொண்டு இருந்தான். ஒரு நாள் யாழ் நூலகத்தில், இலக்கிய புத்தகங்களை அவன் கண் மேய்ந்துகொண்டு இருந்தபொழுது, தற்செயலாக அவன் கண்ணில் பட்டவள் தான், இன்று அவனின் பிரியமான தோழியான, அன்பு மனைவியான இலக்கியா. இலக்கியத்தில் முதுநிலைப் பட்டம் பெற யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருக்கும் அழகான மற்றும் புத்திசாலி இளம் பெண் அவள். இருவர் கண்களும் அங்கு தங்களை அறியாமலே ஒருவரை ஒருவர் மேய்ந்தன. 'ஹாய்' என்று மகி…
-
- 0 replies
- 466 views
-
-
"பிரியமான தோழிக்கு [நண்பிக்கு]" இலங்கையின் தலைநகரமான கொழும்பு நகரத்தில், வெள்ளவத்தை என்ற குட்டி யாழ்ப்பாணத்தில், இனியா மற்றும் ஓவியா என்ற இரண்டு நெருங்கிய நண்பிகள் வாழ்ந்தனர். அவர்கள் குழந்தை பருவத்திலிருந்தே பிரிக்க முடியாதவர்களாக பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தனர், சிறு குழந்தை பருவத்தில் ஒன்றாக விளையாடியும், பின் ஆரம்ப பாடசாலையிலும் உயர் பாடசாலையிலும் ஒன்றாக கற்றனர். அவர்கள் இருவரும் தங்களுக்குள் உள்ள ஒவ்வொரு ரகசியத்தையும், கனவுகளையும், சாகசங்களையும் ஒன்றாக ஒளிவு மறைவு இன்றி பகிர்ந்து கொண்டனர். அவர்களின் பிணைப்பு பிரிக்க முடியாதது, அவர்கள் வெள்ளவத்தையின் இரட்டையர் என்று கூறும் அளவுக்கு அங்கு பிரபலமாக இருந்தனர். பறவைக்கு கூ…
-
- 0 replies
- 106 views
-
-
"புத்தாண்டுப் பரிசு" ஞாயிற்றுக் கிழமை 26, டிசம்பர் 2004 அன்று, நான் என் பெற்றோருடனும் சகோதரங்களுடனும் கொழும்பு கோட்டையில் இருந்து காலிக்கு காலை 6:50 மணிக்கு, குறைந்தது 1500 பயணிகளுடன் புறப்பட்ட புகையிரத வண்டியில் புத்தாண்டு பரிசுகளுடன் மாமா வீட்டுக்கு போய்க்கொண்டு இருந்தோம். மாமா காலியில் உள்ள சீமெந்து தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலை பார்ப்பதுடன், தென்னிலங்கையில் தனிப்பெருந் தன்மையுடன் திகழும் ஒரே சிவாலயம் என பெருமை கொண்ட, 1850 ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட காலியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திலும் அதன் ஆலய பரிபாலன சபையின் ஒரு உறுப்பினராகவும் இருந்தார். இலங்கையின் காலியில் சீனக் கடற்படைத் தளபதியும், நாடுகாண் பயணியும் ஆனா 'செங் கே' [Chin…
-
-
- 2 replies
- 436 views
- 1 follower
-
-
"புரிதலின் போது" "புரியாத கர்வம் பலரைத் தள்ளிவைக்கும் அறியாத உண்மை உன்னைச் சிதைத்துவிடும் நெறியான வாழ்வு இல்லாமல் போய்விடும் 'புரிதலின் போது' எல்லாமே தேடிவரும்!" கதிரழகி ஒரு அழகின் தரிசனம். அவளுடைய இருப்பு எவரையும் சலிப்படைய முடியாதவாறு, அது எந்த இடமாக இருந்தாலும் அதை ஒளிரச் செய்வது, அவளுடைய அற்புதமான உடல் அம்சங்கள் அவளைப் பார்த்த அனைவரையும் கவர்ந்திழுக்கும். தினமும் காலையில், அவள் தன் உருவத்தை கண்ணாடியில் பார்க்கிறாள், அது அவளுக்கு ஒரு மகிழ்ச்சி, ஒரு தற்பெருமை! அவளது தோள்களின் மேல் படர்ந்திருக்கும் அவளது நீளமான, கருமையான கூந்தலையும், அவளது பெரிய, மான் போன்ற மயக்கம் தரும் கண்களையும், அவளது குறைபாடற்ற உடலின் முழுத் தோற்றத்தையும் மீண்டும் …
-
- 0 replies
- 229 views
-
-
"பெண்ணே புயலாகு” இலங்கைத் தீவானது, தொன்மை வாய்ந்த இரு நாகரீகங்களின் வரலாற்றுத் தாயகமாகும். வேறுபட்ட மொழிகள், பாரம்பரியங்கள், பண்பாடுகள், வேறுபட்ட நிலப்பரப்புகள், வெவ்வேறான வரலாறுகளைக் கொண்ட இரு தனித்துவமான தேசிய இனங்களாக அது விளங்கின என்பது வரலாற்று உண்மையாகும். என்றாலும் சிங்களப் பெரும்பான்மையினரிடம் அரசியல் அதிகாரம் கைமாறியதை அடுத்து, சிங்களப் புத்த பேரினவாதம் மேலாண்மை பெற்றது. இதனால் தமிழர்களுக்கு எதிரான அரச அடக்குமுறை குரூரமான வன்முறை வடிவமாக, கொஞ்சம் கொஞ்சமாக 1956, 1958, 1966, 1977, 1981, 1983, 1985, கலவரமாக மாறத் தொடங்கி, அது 2009 உச்சகட்டத்தை அடைந்தது வரலாறு ஆகும். வன்னி அடிப்படையில் நீர் மேலாண்மைக் குடியிருப்பு ஆகும். ஆறுகளும், கடல்களும், குளங்…
-
- 0 replies
- 218 views
-
-
"பெண்ணை மதித்திடு" கி.மு. 500க்கு முன்னர் திருகோணமலையில் பாரிய சனத்தொகையையோ, கட்டமைக்கபட்ட ஆட்சிமுறையையோ கொண்டிருந்திருக்காத சில மனித குழுக்கள் - அவர்களை இயக்கர், நாகர் என்ற இனமாக - தங்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் என வரலாற்று ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர். மேலும் 1917ஆண்டு கந்தரோடையில் ஆய்வு செய்த சேர் போல் பிரிஸ் அவர்கள் 1919 ஆண்டு டெயிலி நியூஸ் என்ற ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “இதுவரை கனவிலும் எண்ணிப் பாராத நமது நாகரிகத்தின் கவரத்தக்க வளர்ச்சிக்கட்டம் பற்றிய சான்றுகள் உண்மையாகவே மண்ணுக்குள் புதைந்து இருப்பதை தமிழ் மக்கள் ஒருகாலத்தில் உணர்வார்கள் என்று நம்புகிறேன்…” …
-
-
- 3 replies
- 628 views
-
-
"பொண்டாட்டி ராஜ்ஜியம்" இலங்கையின் வடமாகாணத்தில் ஒரு அமைதியான புறநகர் பகுதியில், அகிலா மற்றும் துகிலன் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் திருமணமாகி ஐந்து ஆண்டுகளாக ஒன்றாக மகிழ்ச்சியாக, அவர்களின் காதலின் அடையாளமாக ஒரு அழகிய பெண் குழந்தையும் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். என்றாலும் நாளடைவில் மூடிய கதவுகளுக்குப் பின்னால், ஒரு இருண்ட மற்றும் ஒரு 'பொண்டாட்டி ராஜ்ஜியம்' மெல்ல மெல்ல தலை தூக்க தொடங்கியது. அகிலம் எல்லாம் தன் கையில் என்ற ஒரு திமிர் அகிலாவிடம் வளர்ந்துவிட்டது. துகிலன் அவளின் காதலிலும் அழகிலும் தன்னை இழந்து, அதை கவனிக்காமல் தூங்கி விட்டான் போலும்! இதைத்தான் தலையணை மந்திரம் என்கிறீர்களா? அகிலா ஒரு வலுவான விருப்பமும்…
-
- 0 replies
- 289 views
-
-
"பொய் சாட்சி" ஒர் அரசாங்கம் அல்லது பிறர் ஒருவரைச் சிறைப் படுத்துதல், தடுத்து வைத்தல், ஆட்கடத்தல அல்லது வேறு விதத்தில் ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்தல் ஆகிய செயற்பாடுகள் வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல் எனப்படுகிறது. காணாமல்போகச் செய்த பின், அதை ஏற்றுக் கொள்ள மறுத்தல் அல்லது காணாமல போனோர் பற்றிய விபரத்தை மறைத்தல். இது (வலுக்கட்டாயமாக) காணாமல் போகச் செய்தலாகும். பல நாடுகளின் குற்றவியல தொகுப்பில் இதனைச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் அந்த நாடுகளில் இதனை சட்டத்திற்கு மாறாக தடுத்துவைத்தல் அல்லது சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட கைதும் தடுத்துவைப்பும என்று வழக்குத்தொடர முடியும் . அந்த ரீதியில் தான் இலங்கையில் 19/05/2009 பின் மக்களின் போராட்டம் தீவீரம் அடைந்த…
-
-
- 1 reply
- 462 views
- 1 follower
-
-
"போதும் இந்த நரகம்..!" குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோநிலையை ஏற்படுத்தக் கூடியதாக [a blissful mood… with joy in the [innards][and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" என கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற் பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi ] ஒன்று குடியை போற்றுகிறது. அதேபோல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியமும் புறநானுறு 235 இல், "சிறியகட் பெறினே, எமக்கீ யும் மன்னே; பெரிய கட் பெறினே யாம்பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே;" என்று பெண் புலவரான ஒளவையார் புகழ்ந்து கூறுகிறார். …
-
- 2 replies
- 429 views
-
-
"மனிதம் தொலைத்த மனங்கள்"……. அந்தக்கிராமத்தில் அதிகாலைவேளையிலும் சூரியன் உக்கிரமூர்த்தியாக இருந்தான் .அருகே இருந்த கோவில் மணி ஓசை காலை ஆறு மணி என்பதை ஆறுமுகம் வாத்தியருக்கு உணர்த்தியது . அருகே படுத்திருந்த மனோரஞ்சிததை சிறிதுநேரம் உற்றுப்பார்த்தபொழுது அவரை அறியாது அவர்கண்ணில் எட்டிப்பார்த்த கண்ணீரை , உள்ளே செல் என்று அவரால் சொல்ல முடியாது இருந்தது . ஏனெனில் சிறிது நேரத்திற்கு முதலே தனது ஏக்கப்பார்வையுடன் ஆறுமுக வாத்தியாரின் மடியில் அவளது மூச்சு அடங்கியிருந்தது. அவளது இழப்பால் ஒருகணம் தடுமாறிப் பெருங்குரலெடுத்துக் குளறினார் ஆறுமுகவாத்தியார் . உள்ளே படுத்திருந்த சுகுணா கலவரத்துடன் ஓடிவந்தாள் . ஆறுமுகம் வாத்தியார் தன்னுடன் படிப்பித்த மனோரஞ்சித்தை பலத்த எதிர்ப்பகளு…
-
- 46 replies
- 4.2k views
-
-
"மர்ம காடு" 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' பற்றி அலசி ஆராய, அதன் மூலப்பிரதியான மகாநாம தேரரால் பாளி மொழியில் தொகுக்கப்பட்ட மகாவம்சம் நூலின், ஆங்கில பிரதியை [1912ம் ஆண்டு வில்ஹெய்ம் கெய்கர் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படட] வாசிக்கத் தொடங்கினேன். ஆறாம், ஏழாம் அத்தியாயத்தில், இலங்கைக்கு விஜயனின் வருகை மற்றும் அவனின் ஆட்சி மிக சுவாரசியமாக பல பொய்களையும் நம்ப முடியாத நிகழ்வுகளையும் கொண்டு இருந்தன. விஜயனும் தோழர்களும் இலங்கைத் தீவில் கரை ஒதுங்கி இலங்கைக்கு வந்தேறு குடிகளாக நின்ற போது 'அங்கு பெண் நாய் உருவில் குவேனியின் பரிவாரத்தைச் சேர்ந்த ஒரு யக்ஷினி (Yakshini) தோன்றினாள் என்றும், குவேனி 'பதினாறு வயதுப் பருவ மங்கை…
-
- 1 reply
- 280 views
-
-
"மர்மம் விலகியது" இலங்கைக் கம்யூனிஸ்ட் (சீன சார்பு) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ரோகண வீஜயவீர, மக்கள் விடுதலை முன்னணி [சிங்களத்தில் Janatha Vimukthi Peramuna] என்ற ஒரு கட்சியை நிறுவினார். இவற்றால் கவரப்பட்ட படித்த கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், முக்கியமாக சிங்கள மக்கள் பெருமளவாக ஜே.வி.பி.யில் இணைந்தனர். அவர்கள் 1971ம் ஆண்டும் மீண்டும் 1987-1989 ம் ஆண்டும் ஆயுதப் புரட்சி அரசுக்கு [பெரும்பாலும் சிங்களவர்களை கொண்ட] எதிராக செய்தனர். அப்படியான ஒரு காலகட்டத்தில், நான் பேராதனை வளாகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனாக இருந்தேன். என்னுடன் பல்கலைக்கழக நூலகத்தின் உதவி நூலகர், ஆறுமுகம், மிகவும் நண்பராக இரு…
-
- 0 replies
- 407 views
-
-
"மழைக்காலம்" ஒரு காலத்தில், பசுமையான மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு அழகிய சிறிய நகரத்தில், ஒரு இளம் பெண் வசித்து வந்தாள். அவள் எப்பொழுதும் இயற்கையின் அழகில் தன்னை இழந்து, அதில் இன்பம் காண்பவள். அதிலும் அவளுக்கு பிடித்தமான காலம் மழைக்காலம். ஆவணி புரட்டாசி மாதம் என்றால் அவளின் மகிழ்வை சொல்லவே முடியாது. மழைத்துளிகள் மலையில் நடனமாடி ஓடும் விதம், தன் பாதையில் உள்ள அனைத்தையும் புரட்டிக்கொண்டு நெளிந்து வளைந்து துள்ளி செடிகள் மரங்களுக்கிடையே, பெரிய பாம்புபோல ஊர்ந்து போவது, அவள் இதயத்தை நிரப்பி ஒரு மகிழ்ச்சி உணர்வை, ஒரு மயக்கத்தை தானாகவே ஏற்படுத்தும். அதை பார்த்து ரசிக்கத்தான் அவள் கார்காலத்தை விரும்பினாள். ஏன் பெயர்கூட ஈரநிலா, ஆமாம் மழையில் நனைந்த …
-
- 0 replies
- 390 views
-
-
"மாயா" செப்டம்பர் 22, 1995 , என்னால் மறக்க முடியாத ஒருநாளாக இன்னும் என் மனதை வருத்திக்கொண்டு இருக்கிறது. அன்று தான் என் அன்பு சிநேகிதி இறந்த தினம். அவர் சாதாரணமாக இறக்கவில்லை, அந்த கொடுமையை நினைத்தால் எவருமே கதிகலங்குவார்கள். அவளும் அவளின் மாணவிகளும் புத்தரின் தர்ம போதனைக்கும் உலக நீதிக்கும் எதிராக துண்டு துண்டாக உடல்கள் சிதறி நாகர்கோவில் மகாவித்தியாலத்தில் பிற்பகல் 12.50 மணியளவில் விமானப் படையினரின் குண்டுத் தாக்குதலில் 21 - 26 மாணவர்கள் உட்பட கொல்லப் பட்ட தினம் ஆகும். அது தான் நான் இன்று, இந்த கார்த்திகை தினத்தில் நேரத்துடன் துயிலில் இருந்து எழும்பி யன்னல் வழியாக ஆகாயத்தை வெறுத்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அரசியல், யுத்தம…
-
-
- 4 replies
- 646 views
-
-
"மாற்றம்" [யாழ்ப்பாணத்து தமிழ் மருத்துவ மாணவனின் கதை] துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தார். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தார். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவர் மட்டுமல…
-
- 0 replies
- 308 views
-
-
"மீட்டாத வீணை.." வரலாறும், கலாச்சாரமும், இயற்கை அழகும் நிறைந்த யாழ்ப்பாண மாவட்டமானது எழில் கொஞ்சும் கடற்கரையினையும் ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலப்பகுதிகளில் அதிக வெப்பநிலையினையும் டிசம்பர் - பெப்ரவரி வரை குளிரான காலநிலையினையும் கொண்டு இருப்பதுடன் தரைத் தோற்றத்தினை அவதானிக்கு மிடத்து கரையோர சமவெளியினை கொண்டும், அழகியத் தீவுகளினையும், பல்லுருவத்தன்மை கொண்ட கடற் கரைகளினையும், பாரிய மணல் மேடுகளினையும், நாற்புறமும் பனை சூழவும் காணப்படுகின்றது. அங்கு தான் கவிதா என்ற ஒரு இளம் பட்டதாரி ஆசிரியை, பெற்றோருடனும் சகோதர, சகோதரிகளுடனும் வாழ்ந்து வந்தார். அழகு மற்றும் நாகரிகம் என்ற வார்த்தைகளுக்கு அவளே உதாரணம். அவள் படிக்கும் காலத்திலும் சரி, இன்று ஆசிரியையாக பணிபுரிய…
-
- 0 replies
- 165 views
-
-
அவுஸ்ரேலியாவில் நவம்பர் மாதம் வரும் முதல் செவ்வாய்கிழமை எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம் வந்தேறு குடிகளை(ஐம்பது வருடத்திற்கு முன்பு வந்தவர்கள்) தவிர,முக்கியமா விக்டோரியா மாநிலத்தில் அரச விடுமுறையும் விடுவார்கள்.வேலைத்தலங்களில் எந்த குதிரை வெற்றி பெறும் என்று பந்தயம் போடுவார்கள்.ஒவ்வோரு வருடமும் நானும் பந்தயம் கட்டுவேன் இதுவரை வெற்றி பெற்றதில்லை. சாப்பாடு, தண்ணி என்று அமர்க்களப்படும் சில வேலைத்தளங்கள். எல்லோரும் குதிரை பைத்தியமா இருப்பார்கள் .எனக்கு கிருஸ்ன்ரின்ட தேரில் பூட்டிய ஐந்து குதிரையையும் ,கிருஸ்னரைப்பற்றியும் தான் கொஞ்சம் தெரியும் ....ஆனால் சக தொழிலாளிகள் ஒவ்வோரு குதிரையைப்பற்றியும் அதில் சவாரி செய்பவரைப்பற்றியும் பேசிகொண்டிருப்பார்கள்.நான் எனக்கு கிடைத்த பந்…
-
- 7 replies
- 2.7k views
-
-
"மே மாதத்தின் மத்தியில், அந்த சில நிமிடங்கள்" தேம்சு ஆற்றின் ஓரத்தில் ஒரு கல்லில் நான் இருந்தவண்ணம், இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் பிக் பென் (Big Ben) மணிக்கூட்டு கோபுரத்தின் நேரத்தை பார்த்தேன். அது மூன்று மணிக்கு இன்னும் அரை மணித்தியாலயம் என்று காட்டியது. சுமார் 100,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய லண்டனில் பாலஸ்தீனத்திற்கு தங்கள் ஆதரவைக் காட்டவும் காசா மீது இஸ்ரேலின் குண்டுவீச்சை நிறுத்தக் கோரவும் "இப்போதே போர்நிறுத்தம்" மற்றும் "காசா மீது குண்டு வீச்சை நிறுத்து" என்று எழுதப்பட்ட பலகைகளை எதிர்ப்பாளர்கள் கையில் ஏந்தியவண்ணம், பாராளுமன்ற சதுக்கத்துக்கு திரண்டு வந்துகொண்டு இருந்தனர். எனக்கு அங்கு நடப்பதில் …
-
- 0 replies
- 343 views
-
-
"யாழ் மீனவனின் துயரம்" "தரைமேல் பிறக்க வைத்தான்- எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான். கரைமேல் இருக்க வைத்தான்- பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்." கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கையில் கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் முன்புறத்தில் இரு மீன் கோட்டுருவமும் பின்புறத்தில் "பரத திஸ" என்றும் காணப்படுகிறது. இதில் வரும் மீன் சின்னங்கள் மீன்பிடி தொழிலோடு பரததிஸ என்பவனுக்குள்ள தொடர்பைக் காட்டுகின்றது. இதில் முன்னொட்டுச் சொல்லாக வரும் பரத என்பது பரதவ சமூகத்தைக் குறிக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வாறு புராணங்களிலும் பண்டைய இலக்கியத்திலும் புகழ் பெற்ற பரதவ சமூகம், மருதம் வளம் பெற்று அதிகாரத்துடன் ஆட்சி செய்யும் இ…
-
-
- 3 replies
- 348 views
-
-
"யுத்த வடுகளுக்கு மத்தியில் ஒரு காதல்" 25 ஆண்டுகால இனவாத யுத்தத்தின் போது, வடக்கு மற்றும் கிழக்கில் வைத்தியசாலை கட்டமைப்புகள் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் நாசமாக்கப்பட்டுள்ளதோடு அவை இன்றைய தேவைகளுக்கு ஏற்ப அபிவிருத்தி செய்யப்படவில்லை. அது மட்டும் அல்ல, 2009 இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தின் குண்டுத் தாக்குதல்களால் வன்னி பிரதேசத்தின் முழு உட்கட்டமைப்பும் தரைமட்டமாக்கப்பட்டு இரண்டரை இலட்சத்துக்கும் மேலானவர்கள் இராணுவம் நடத்திய முகாம்களில் அடைக்கப்பட்டதுடன் 40,000க்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த சூழலில் தான், போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா நகரில், குழப்பம் …
-
- 0 replies
- 533 views
-
-
"யுத்த வடுகளுக்கு மத்தியில் ஒரு காதல்" 25 ஆண்டுகால இனவாத யுத்தத்தின் போது, வடக்கு மற்றும் கிழக்கில் வைத்தியசாலை கட்டமைப்புகள் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் நாசமாக்கப்பட்டுள்ளதோடு அவை இன்றைய தேவைகளுக்கு ஏற்ப அபிவிருத்தி செய்யப்படவில்லை. அது மட்டும் அல்ல, 2009 இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தின் குண்டுத் தாக்குதல்களால் வன்னி பிரதேசத்தின் முழு உட்கட்டமைப்பும் தரைமட்டமாக்கப்பட்டு இரண்டரை இலட்சத்துக்கும் மேலானவர்கள் இராணுவம் நடத்திய முகாம்களில் அடைக்கப்பட்டதுடன் 40,000க்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த சூழலில் தான், போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா நகரில், குழப்பம் …
-
- 0 replies
- 259 views
-
-
"ரதியின் கனவு" [போதை பொருள் மற்றும் பாலியல் விழிப்புணர்வு] வடக்கே கிளிநொச்சியையும் கிழக்கே இந்துசமுத்திரத்தையும், மேற்கே மன்னாரையும், தெற்கே திருகோணமலை மற்றும் வவுனியாவையும் எல்லைகளாக கொண்ட, சங்க கால நிலக்கூறுகளின் பண்பை ஒத்த நானிலத்தன்மை கொண்டதாகவும் உள்ள முல்லைத்தீவில் தனது சிறு வீட்டில் பெற்றோர் சகோதரர்களுடன் வாழும் இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி இரண்டு அகவை மதிக்கத்தக்க, எழுத்தாளரும் சமூக தொண்டாளருமான இளம் பெண் ரதி, காலை தேநீரை அருந்திக் கொண்டு, ஹால் இல் இருந்த தொலைக்காட்சியில் அன்றைய செய்திகள் கேட்டுக் கொண்டு இருந்தார். கிழக்கு வானம் சிவந்து சூரியன் மெல்ல மெல்ல கீழ்வானில் இருந்து மேலே ஏறிக் கொண்டு இருந்தது. பறவைகள் தமது கூட்…
-
- 0 replies
- 146 views
-