தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
சென்னையில் உள்ள கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்ற தீர்மானம்! சென்னையில் உள்ள கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்ற சுகாதாரத்துறை தீர்மானித்துள்ளது. இதன்படி சென்னையில் உள்ள 19 கல்லூரிகள் கொரோனா மையங்களாக மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன்காரணமாக வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை நிலவுதாக கூறப்படுகிறது. இந்நிலையிலேயே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், சளி மற்றும் காய்ச்சல் என அறிகுறி உள்ளவர்களை இங்கு தங்க வைத்து சிகிச்சை அளிக்கவும், தீவிர …
-
- 0 replies
- 303 views
-
-
மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சை பெற்று வந்த நபரை கொலை செய்த மர்ம நபர்கள்..! மதுரை மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 5-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்து காரணமாக கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் முருகனுக்கு துணையாக இருந்த அவரது மனைவி தேநீர் வாங்க வெளியே சென்றிருந்தார். அப்போது, முருகன் சிகிச்சை பெறும் சிகிச்சை அறைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு முருகனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதனைத்தொடர்…
-
- 0 replies
- 439 views
-
-
கொரோனாவின் பிடியில் தலைநகர் சென்னை எம். காசிநாதன் / 2020 ஜூன் 08 தமிழகத்தின் தலைநகரான சென்னை, கொரோனா வைரஸ் தொற்றின் பேரிடரில், சிக்கித் தவிக்கும் முக்கிய மாநகரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள, மக்கள், தமது அன்றாட கருமங்களில் ஈடுபடுவதற்கு, 'சாரைசாரை'யாக வீடுகளில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தாலும், தங்களின் உயிருக்கு என்ன ஆகுமோ என்ற பதற்றமும் பீதியும், அவர்களின் 'முகக்கவசங்களில்' எதிரொலிக்கிறது. 30.6.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தில், அனேகமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஒவ்வொருவரும், பின்பற்ற வேண்டிய தனிநபர் பாதுகாப்பு நடவடிக்கைகள், அரசின் சார்பில் விளம்பரம் செய்யப்படுகின்றன. ஆனால், சென்னை ம…
-
- 0 replies
- 405 views
-
-
கரூர் அருகே நடந்த சேவல் சண்டையில் விபரீதம்: சேவல் காலில் கட்டியிருந்த கத்தி குத்தி இளைஞர் உயிரிழப்பு நேற்று நடைபெற்ற சேவல்கட்டு கரூர் கரூர் அருகே நடந்த சேவல் சண்டையில் சேவல் காலில் கட்டியிருந்த கத்தி குத்தி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்.து க.பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருவதுடன் தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள பூலாம்வலசுவில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் சேவல்கட்டு மிக பிரசித்திமானது. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சேவல்கட்டில் சேவல் காலில் கட்டியிருந்த கத்தி குத்தி இருவர் உயிரிழந்ததையடுத்த 5 ஆண்டுகளுக்கு பூலாம்வலசு சேவல்கட்டுக்க…
-
- 0 replies
- 374 views
-
-
தமிழகத்தில் பரவிவரும் தீவிரத்தன்மை கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் சென்னை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 18 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரையில் மொத்தமாக 269 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 135 பேரும், திருவள்ளூரில் 55 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸில் ஏ 1, ஏ2, ஏ3, பி 1, பி2 உள்ளிட்ட வகைகள் இருப்பதாகவும், அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கொரோனா வைரஸில் சில மாற்றங்கள் ஏற்பட்டு கிளேட் ஏ…
-
- 0 replies
- 421 views
-
-
திருப்பதி சர்ச்சை பேச்சு: சிவக்குமார் மீது வழக்கு! மின்னம்பலம் திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 'இலக்கியம், ஆரோக்கியம், இல்லறம்' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சிவக்குமார் 'இன்றுவரை கோயில்களில் தீண்டாமை தொடர்கிறது' என்று குறிப்பிட்டு சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும் போது, "கோயில்களில் இன்னும் தீண்டாமை இருக்கிறது. ஏழை பணக்காரன் பாகுபாடு இருக்கிறது. தஞ்சாவூர் கோயிலைக் கட்ட ஆயிரக்கணக்கான சிற்பிகளும், கொத்தனார்களும், சித்தாள்களும் வேலை பார்த்து இருப்பார்கள். இரவு பகலாக கோயிலைக் கட்டிக் கொண்ட…
-
- 0 replies
- 557 views
-
-
சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை வழக்கு: மீண்டும் வெடிக்கும் எதிர்ப்பு சேலம்-சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கை ஆன்லைன் விசாரணையில் நடத்தக்கூடாது எனத் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜூன் 4-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சேலம் சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுக்கக்கோரி தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. தமிழக அரசின் நகர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடிகளை ஏற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் விவசாயிகள் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் சூரியபிரகாஷிடம் பேசியபோது, தற…
-
- 0 replies
- 345 views
-
-
தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 30,000த்தை கடந்தது ARUN SANKAR / Getty தமிழகத்தில் இன்று (ஜூன் 6) புதிதாக 1,458 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,152-ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 19 நபர்கள் இறந்துள்ள நிலையில், இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 251-ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று இறந்த 19 நபர்களில் பெரும்பாலானவர்கள், நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக கோளாறு, பல உறுப்புகள் செயலற்ற நிலை, மூச்சுதிணறல் மற…
-
- 0 replies
- 433 views
-
-
சீனா, பாகிஸ்தானின் அத்துமீறல்கள்.. திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி போராட்டம்.. 15 பேர் கைது .! திண்டுக்கல்: திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் இந்திய எல்லையில் அத்துமீறும் சீனா மற்றும் பாகிஸ்தானை கண்டித்து இரு நாட்டின் பிரதமர்களின் உருவபடங்களை காலணியால் அடித்து போராட்டம் நடத்தப்பட்டது. இந்திய நாட்டின் எல்லை பகுதிகளில் அத்துமீறும் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை கண்டித்தும், பாஜகவிற்கு முன்பு ஆண்ட காங்கிரஸ் கட்சியின் பிரதமர்கள் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து அகண்ட பாரதம் அமைக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இந்து மக்கள் கட்சி சார…
-
- 1 reply
- 599 views
-
-
`ரஜினியைத் திருப்திப்படுத்தத்தான் இந்த நியமனமா?’- செம்மொழித் தமிழாய்வுமைய விவகாரத்தில் சீமான் தினேஷ் ராமையா சீமான் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமித்த செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அதில் ஆட்சியாளர்களின் பெயரோடு நடிகர் ரஜினிகாந்த் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார். சென்னை தரமணியில் அமைந்துள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குநராக முனைவர் இரா.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். அந்த ட்வீட்…
-
- 0 replies
- 750 views
-
-
தமிழகத்தில் தொடர்ந்து பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டி விட்டது. தமிழகத்தில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் ஓரே நாளில் 585 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை சுமார் 15 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பரிசோதனை 5 லட்சத்து 45 ஆயிரத்தை எட்டி உள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்ததால், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 220 ஆக அ…
-
- 0 replies
- 379 views
-
-
லண்டனில் தவிக்கும் தமிழர்கள்: விமான சேவை எப்போது? மின்னம்பலம் சொந்த ஊர் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லண்டன் வாழ் தமிழர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் உலக அளவில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்பமுடியாமல் தவித்தனர். இதைத் தொடர்ந்து, மத்திய அரசு அவர்களை மீட்பதற்காக 'வந்தேபாரத்' எனும் திட்டத்தின் கீழ் சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் தாயகம் திரும்ப வழிவகை செய்துள்ளது. அந்த வகையில் லண்டனில் உள்ள தமிழர்களை மீட்பதற்காக பேஸ் ஒன்றில் கடந்த மே 14ஆம் தேதி சென்னைக்குச் சிறப்பு விமானம் இய…
-
- 0 replies
- 627 views
-
-
ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன் கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார். மனைவி மற்றும் மகளுடன் மோகன். மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர். மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் பட…
-
- 2 replies
- 839 views
-
-
கதைய முடிச்சிட்டாங்கய்யா... கலங்கிய துரைமுருகன் மின்னம்பலம் திமுக பொருளாளராக இருந்து, பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு உயர்த்தப்படுவதாக இருந்த துரைமுருகன், மீண்டும் பொருளாளராகவே தொடருவார் என்று அறிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். சில நாட்களுக்கு முன்னே இது அரசல் புரசலாக துரைமுருகனுக்கு தெரிவிக்கப்பட்டபோதிலும் அது அறிவிப்பாக வெளிவந்ததில் குறிப்பாக ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்டதில் துரைமுருகன் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்.. ஜூன் 2 ஆம் தேதி காலை மின்னம்பலத்தின் டிஜிட்டல் திண்ணையில் பொதுச் செயலாளர் பதவி: துரைமுருகனுக்கு ஷாக் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் குறிப்பிட்டிருந்தவாறே இன்று (ஜூன் 3) துரைமுருக…
-
- 0 replies
- 1.2k views
-
-
உங்களை போல் ஒரு தலைவனை தந்தையாக பெற்றது... என் வாழ்க்கையின் பெரும் பேறு -கனிமொழி சென்னை: கருணாநிதியை போல் ஒரு தலைவனை தந்தையாக பெற்றது தன் வாழ்க்கையின் பெரும் பேறு என திமுக மகளிரணிச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.உடன்பிறப்பே என்று கருணாநிதி அழைப்பதும், கூட்டம் அலைகடல் என ஆர்ப்பரிப்பதும் பேரிசையாக இருக்கும் என நினைவுகூர்ந்துள்ளார். கருணாநிதி உயிருடன் இருந்தபோது அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சுவையான சில நிகழ்வை கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கருணாநிதியை சந்திக்க ஒரு நாள் தலைவரோடு அறிவாலயத்தில் அவரது அறையில் நின்று கொண்டிருந்தேன். மாலை நேரம்; பல ஊர்களில் இருந்து கழகத்தோழர்கள் தலைவரை சந்திக்கக் காத்திருந்தார்க…
-
- 16 replies
- 1.5k views
-
-
தமிழ் சினிமாவில் என்றைக்கும் நிலைத்திருக்கும் பெயர் இயக்குநர் மகேந்திரன். 'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்கள்' என கிளாசிக் படங்களை இயக்கியவர். இவரும் இவரது மகன் ஜான் மகேந்திரனும் இலங்கைக்குச் சென்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் தங்கியிருந்தனர். அந்நாள்களைப் பற்றிப்பேசினேன். இயக்குநர் பாலா தயாரிக்கும் மலையாள ரீமேக் படமான 'ஜோசப்' படத்துக்கு நீங்கதான் வசனம் எழுதிட்டிருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி இருக்கு? ''இயக்குநர் பாலா சாரும், நானும் பக்கத்து வீட்டுக்காரங்கன்றதால எங்களுக்குள்ள நெருக்கம் அதிகம். அடிக்கடி மீட் பண்ணிப் பேசிக்குவோம். நிறைய படங்கள் பற்றின டிஸ்கஷன் எப்பவும் எங்களுக்குள்ள போயிட்டே இருக்கும். பாலா சாரின் 'தார…
-
- 16 replies
- 2k views
- 1 follower
-
-
இலங்கையிலிருந்து யுத்தம் காரணமாக தமிழ் நாட்டுக்கு இடம்பெயர்ந்தவர்களில் கணிசமானவர்கள் யுத்தம் முடிந்த பின்னர் இலங்கைக்குத் திரும்பிவிட்டனர். ஆனாலும் இலங்கைக்குத் திரும்ப முடியாத சூழ்நிலையில் பல ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொரோனா நிவாரணமாக உலர்உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி ஒன்றியத்திலுள்ள வாணியாறு ஈழத்தமிழர் முகாம் மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு தலைமையிலான குழுவினர் நேற்று(02) நேரில் சென்று நிலைமையினைப் பார்வையிட்டு உலர்உணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர். அங்கு ஈழத்…
-
- 0 replies
- 414 views
-
-
கறைபடியாத கலைஞர்,பிறந்த நாள் ஷ்பெசல் பார்வை... By Alias - திமுக என்னும் ஓர் உத்தமக் கட்சி ! தமிழ்நாட்டிலே ஏன் உலகத்துலயே ஊழல் கறை படியாத கட்சின்னா அது திமுகதான்னு நம்மில் எத்தன பேருக்கு தெரியும். இதுவரை எந்த ஊழல், கொலை வழக்கிலும் பெருசா தண்டனை பெற்றதே இல்லன்னு சொல்லலாம்; அந்த அளவுக்கு தெளிவா செய்வோம். எங்க ஊர்ல ஒரு அண்ணன் அடிக்கடி சொல்லுவாரு திருடுனா திமுக காரன் மாதிரி திருடனும்னு… அண்ணா இருந்த ரெண்டு வருசம் எந்த குற்றச்சாட்டும் வராத நிலைல தலீவர் வந்த கொஞ்ச நாள்ல வீராணம், விமானத்தில பூச்சிமருந்து தெளிக்கறது உட்பட 28 குற்றச்சாட்டுகள் (கடைசில இணைச்சிருக்கேன்) எழுகிறது. …
-
- 0 replies
- 589 views
-
-
பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட வட இந்தியப் பெண்: வீட்டு வேலைக்கு அழைத்து வந்து கொடுமை தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட வட இந்தியப் பெண் ஒருவர், தாம் கட்டாயப்படுத்தப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சாலையில் ரத்தக் காயங்களுடன் கிடந்த அந்த பெண்ணைக் காப்பாற்றி, கடந்த திங்கள்கிழமை அன்று (மே 1) தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டு பகுதி அருகே, திங்களன்று கொரோனா தடுப்பு ஊரடங்கில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் குடும…
-
- 0 replies
- 706 views
-
-
நளினி, முருகன் விடயத்தில் மனிதாபிமானத்துடன் நடவுங்கள் -தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தெரிவிப்பு நளினி, முருகன் விவகாரத்தில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர்கள் நளினி, முருகன். அண்மையில் இலங்கையில் வசித்து வந்த முருகனின் தந்தை மரணமடைந்தார். அவரது இறுதிசடங்கை ‘வாட்ஸ்-அப்’ வீடியோ கோலில் பார்க்க அனுமதி கேட்ட முருகனின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. இந்தநிலையில் இலங்கையில் உள்ள முருகனின் தாயாரிடமும், லண்டனில் உள்ள முருகனின் சகோதரியிடமும், நளினியும், முருகனும் ‘வாட்ஸ்-அப்’ வீடியோ கோலில் பேச அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீத…
-
- 1 reply
- 489 views
-
-
சலூன்கள், பியூட்டி பார்லர் சென்றால் கட்டாயம் ஆதார் அட்டை - தமிழக அரசு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சலூன்கள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்களில், வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, கைபேசி மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களை குறித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கையுறை மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கவும், நுழைவு வாயிலில் சானிடைசர் அல்லது கைகளை கழுவதற்காக வசதி ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் வருவதை தடுக்க ஆன்லைன் மூலம் நேரம் நிர்ணயித்து சேவை வழங்கவும், ஒருமுறை பயன்படுத்திய அழகு சாதனப் பொருட்களை சுகாதார முறையில் அப்புறப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்…
-
- 0 replies
- 485 views
-
-
இரண்டாம் நாளாக ஆயிரத்தைக் கடந்த கரோனா: தமிழகத்தில் இன்று 1,162 பேருக்கு தொற்று; சென்னையில் 972 பேர் பாதிப்பு தமிழகத்தில் இன்று 1,162 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 972 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 14,798 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 15,770 ஆக அதிகரித்துள்ளது. 1,162 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 83.72 சதவீதத் தொற்று சென்னையில் (972) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 23,495-ல் சென்னையில் மட்டும் 15,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 66.26 சதவீதம் ஆகும் மொத்த எண்ணிக்கையில் 184 பேர் இறந்துள…
-
- 0 replies
- 420 views
-
-
பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை- தமிழக அரசு அதிரடி உத்தரவு தமிழகத்தில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகின்றன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்து கிடையாது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக சுகவீனமானவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் ஆகியோர் மருத்துவ காரணங்கள் மற்றும் அவசர தேவைகளுக்காக மட்ட…
-
- 7 replies
- 1.8k views
-
-
தென்கொரியாவில் இருந்து 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தன இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. இதுவரை 1 லட்சத்து 82 ஆயிரத்து 143 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 164 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு 21 ஆயிரத்து 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 160 பேர் பலியாகி உள்ளனர்.இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமான அளவில் பி.சி.ஆர். கருவிகள் மூலம் கொரோனா நோய் பரிசோதனை செய்யப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சோதனைகளை விரைவுப்படுத்துவதற்காக தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பி.சி.ஆர். கருவிகளை வாங்க தமிழக அரசு முட…
-
- 0 replies
- 472 views
-
-
ஏழை மக்களுக்கு உதவிய மதுரை சிறுமி: பிரதமர் மோடி பாராட்டு மதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்த மோகன் என்பவர் அதே பகுதியில் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார். அவரது எட்டாம் வகுப்பு படிக்கும் மகளான நேத்ரா, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் எனக் கோரினார். இதையடுத்து, மகளின் படிப்பு செலவுக்கு சேர்த்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அவரது செயலை பிரதமர் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டியது, தமக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நேத்ரா கூறினார். https://www.dailythanthi.com/News/State/2020/05/31172644/Madurai-girl-who-helped-poor-people--P…
-
- 1 reply
- 536 views
-