தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10268 topics in this forum
-
நளினி, முருகன் விடயத்தில் மனிதாபிமானத்துடன் நடவுங்கள் -தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தெரிவிப்பு நளினி, முருகன் விவகாரத்தில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர்கள் நளினி, முருகன். அண்மையில் இலங்கையில் வசித்து வந்த முருகனின் தந்தை மரணமடைந்தார். அவரது இறுதிசடங்கை ‘வாட்ஸ்-அப்’ வீடியோ கோலில் பார்க்க அனுமதி கேட்ட முருகனின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. இந்தநிலையில் இலங்கையில் உள்ள முருகனின் தாயாரிடமும், லண்டனில் உள்ள முருகனின் சகோதரியிடமும், நளினியும், முருகனும் ‘வாட்ஸ்-அப்’ வீடியோ கோலில் பேச அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீத…
-
- 1 reply
- 494 views
-
-
இளநீர் திருட்டால் இரு கிராமத்தினர் இடையே மோதல்: தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை- 30 வீடுகள் சேதம், கடும் பதட்டத்தால் போலீஸ் குவிப்பு தூத்துக்குடி தூத்துக்குடி அருகே இளநீர் திருடிய தகராறில் கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் எதிர் தரப்பைச் சேர்ந்தவர்களின் 30 வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இரண்டு தரப்பினரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் சத்தியமூர்த்தி (22). இவர் தூத்துக்குட…
-
- 5 replies
- 678 views
-
-
கதைய முடிச்சிட்டாங்கய்யா... கலங்கிய துரைமுருகன் மின்னம்பலம் திமுக பொருளாளராக இருந்து, பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு உயர்த்தப்படுவதாக இருந்த துரைமுருகன், மீண்டும் பொருளாளராகவே தொடருவார் என்று அறிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். சில நாட்களுக்கு முன்னே இது அரசல் புரசலாக துரைமுருகனுக்கு தெரிவிக்கப்பட்டபோதிலும் அது அறிவிப்பாக வெளிவந்ததில் குறிப்பாக ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்டதில் துரைமுருகன் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்.. ஜூன் 2 ஆம் தேதி காலை மின்னம்பலத்தின் டிஜிட்டல் திண்ணையில் பொதுச் செயலாளர் பதவி: துரைமுருகனுக்கு ஷாக் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் குறிப்பிட்டிருந்தவாறே இன்று (ஜூன் 3) துரைமுருக…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையிலிருந்து யுத்தம் காரணமாக தமிழ் நாட்டுக்கு இடம்பெயர்ந்தவர்களில் கணிசமானவர்கள் யுத்தம் முடிந்த பின்னர் இலங்கைக்குத் திரும்பிவிட்டனர். ஆனாலும் இலங்கைக்குத் திரும்ப முடியாத சூழ்நிலையில் பல ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொரோனா நிவாரணமாக உலர்உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி ஒன்றியத்திலுள்ள வாணியாறு ஈழத்தமிழர் முகாம் மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு தலைமையிலான குழுவினர் நேற்று(02) நேரில் சென்று நிலைமையினைப் பார்வையிட்டு உலர்உணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர். அங்கு ஈழத்…
-
- 0 replies
- 422 views
-
-
கறைபடியாத கலைஞர்,பிறந்த நாள் ஷ்பெசல் பார்வை... By Alias - திமுக என்னும் ஓர் உத்தமக் கட்சி ! தமிழ்நாட்டிலே ஏன் உலகத்துலயே ஊழல் கறை படியாத கட்சின்னா அது திமுகதான்னு நம்மில் எத்தன பேருக்கு தெரியும். இதுவரை எந்த ஊழல், கொலை வழக்கிலும் பெருசா தண்டனை பெற்றதே இல்லன்னு சொல்லலாம்; அந்த அளவுக்கு தெளிவா செய்வோம். எங்க ஊர்ல ஒரு அண்ணன் அடிக்கடி சொல்லுவாரு திருடுனா திமுக காரன் மாதிரி திருடனும்னு… அண்ணா இருந்த ரெண்டு வருசம் எந்த குற்றச்சாட்டும் வராத நிலைல தலீவர் வந்த கொஞ்ச நாள்ல வீராணம், விமானத்தில பூச்சிமருந்து தெளிக்கறது உட்பட 28 குற்றச்சாட்டுகள் (கடைசில இணைச்சிருக்கேன்) எழுகிறது. …
-
- 0 replies
- 594 views
-
-
பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட வட இந்தியப் பெண்: வீட்டு வேலைக்கு அழைத்து வந்து கொடுமை தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட வட இந்தியப் பெண் ஒருவர், தாம் கட்டாயப்படுத்தப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சாலையில் ரத்தக் காயங்களுடன் கிடந்த அந்த பெண்ணைக் காப்பாற்றி, கடந்த திங்கள்கிழமை அன்று (மே 1) தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டு பகுதி அருகே, திங்களன்று கொரோனா தடுப்பு ஊரடங்கில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் குடும…
-
- 0 replies
- 712 views
-
-
சலூன்கள், பியூட்டி பார்லர் சென்றால் கட்டாயம் ஆதார் அட்டை - தமிழக அரசு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சலூன்கள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்களில், வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, கைபேசி மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களை குறித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கையுறை மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கவும், நுழைவு வாயிலில் சானிடைசர் அல்லது கைகளை கழுவதற்காக வசதி ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் வருவதை தடுக்க ஆன்லைன் மூலம் நேரம் நிர்ணயித்து சேவை வழங்கவும், ஒருமுறை பயன்படுத்திய அழகு சாதனப் பொருட்களை சுகாதார முறையில் அப்புறப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்…
-
- 0 replies
- 495 views
-
-
இரண்டாம் நாளாக ஆயிரத்தைக் கடந்த கரோனா: தமிழகத்தில் இன்று 1,162 பேருக்கு தொற்று; சென்னையில் 972 பேர் பாதிப்பு தமிழகத்தில் இன்று 1,162 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 972 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 14,798 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 15,770 ஆக அதிகரித்துள்ளது. 1,162 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 83.72 சதவீதத் தொற்று சென்னையில் (972) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 23,495-ல் சென்னையில் மட்டும் 15,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 66.26 சதவீதம் ஆகும் மொத்த எண்ணிக்கையில் 184 பேர் இறந்துள…
-
- 0 replies
- 424 views
-
-
ஏழை மக்களுக்கு உதவிய மதுரை சிறுமி: பிரதமர் மோடி பாராட்டு மதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்த மோகன் என்பவர் அதே பகுதியில் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார். அவரது எட்டாம் வகுப்பு படிக்கும் மகளான நேத்ரா, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் எனக் கோரினார். இதையடுத்து, மகளின் படிப்பு செலவுக்கு சேர்த்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அவரது செயலை பிரதமர் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டியது, தமக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நேத்ரா கூறினார். https://www.dailythanthi.com/News/State/2020/05/31172644/Madurai-girl-who-helped-poor-people--P…
-
- 1 reply
- 542 views
-
-
தென்கொரியாவில் இருந்து 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தன இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. இதுவரை 1 லட்சத்து 82 ஆயிரத்து 143 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 164 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு 21 ஆயிரத்து 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 160 பேர் பலியாகி உள்ளனர்.இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமான அளவில் பி.சி.ஆர். கருவிகள் மூலம் கொரோனா நோய் பரிசோதனை செய்யப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சோதனைகளை விரைவுப்படுத்துவதற்காக தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பி.சி.ஆர். கருவிகளை வாங்க தமிழக அரசு முட…
-
- 0 replies
- 478 views
-
-
தமிழகம்: அனுமதி, தளர்வுகள், கட்டுப்பாடுகள்-முழு விவரம்! மின்னம்பலம் தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதியிலிருந்து நான்கு கட்டங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. ஆனாலும், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் ஊரடங்கை நாடு முழுவதும் நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன. இந்த நிலையில் நாடு முழுவதும் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 31) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், மத்தி…
-
- 0 replies
- 420 views
-
-
வேகமாக பரவுகிறது தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா 6 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 938 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பதிவு: மே 31, 2020 05:30 AM சென்னை, கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வருகிறவர்களில் பலர் கொரோனா தொற்றுடன் வருவது கண்டறியப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 938 பேர் பா…
-
- 0 replies
- 383 views
-
-
இலங்கை தொடர்பிலான இந்தியாவின் கொள்கைகள் காரணமாக 15 ஆயிரம் இந்தியர்களை இழந்ததாக இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வார் சிங் இந்தியாவின் ஹெட்லைன்டுடோ தொலைக்காட்சிக்கு கடந்த காலங்களில் வழங்கியிருந்த பேட்டி தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவையில் கலந்தாலோசிக்காமலேயே இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கைக்கு அமைதிப்படைகளை அனுப்பினார். இலங்கை விடயத்தை ராஜீவ் காந்தி தவறாக கையாண்டார். இதன் காரணமாகவே இலங்கையில் 15 இந்தியர்களை இழந்தோம். யாழ்ப்பாணம் குடாநாட்டின் புவியியல் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பான புரிதல்கள் இல்லாமாலேயே இந்திய அமைதிப்படையினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னேற்பாடுகள் …
-
- 76 replies
- 6.7k views
- 1 follower
-
-
ஊட்டியை மிரட்ட வந்த கொடூர வெட்டுக்கிளிகள் ஊட்டி:கிழக்கு ஆப்ரிக்காவின் பாலைவனப்பகுதியிலிருந்து கிளம்பி கண்டம் விட்டு கண்டம் தாக்கும் கொடூர வெட்டுக்கிளிகள் தற்போது ஊட்டி காந்தள் பகுதியில் காணப்பட்டதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். ஆப்பிரிக்க, அரேபிய நாடுகளைத் தாக்கிய வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தாண்டு இந்திய மாநிலங்கள் சிலவற்றிலும் கடும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வடமேற்கு மாநிலங்களைத் தாக்கிய இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்தைத் தாக்காது என்று தமிழக வேளாண் துறை சொல்லியிருந்த நிலையில், கேரளா மாநிலம் வயநாடு பகுதிவழியாக வந்து ஊட்டியில் காணப்பட்டதால் அதை பாட்டிலில் அடைத்து அதை காட்டிய ஒருவர் அது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ…
-
- 3 replies
- 909 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images வெட்டுக்கிளி தாக்குதல் இந்தியாவின் வடமேற்குப் பகுதியை தற்போது தாக்க ஆரம்பித்துள்ளது. தக்காணப் பீடபூமியைத் தாண்டி அவை வரும் வாய்ப்பில்லை என்கிறது தமிழக வேளாண் துறை. ஆனால், தமிழ் இலக்கியத்தில் வெட்டுக்கிளி தாக்குதல் குறித்த பதிவுகள் விரிவாகவே இருக்கின்றன. வெட்டுக்கிளி தாக்குதல் குறித்து புதன் கிழமையன்று அறிக்கை வெளியிட்ட தமிழக வேளாண்துறை தக்காணப் பீடபூமியைத் தாண்டி அவை வருவதற்கான வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தது. ஆனால், தமிழ் இலக்கியங்களில் வெட்டுக் கிளி தாக்குதல் குறித்த பதிவுகள் நிறையவே இருக்கின்றன. 1976ல் கி. ராஜநாராயணன் எழுதி வெளிவந்த கோபல்ல கிராமம் நாவல், இம் மாதிரி ஒரு தாக்குதலை விரிவாகவே விவரிக்கிறது. "ஸ்ரீனி நாயக…
-
- 0 replies
- 428 views
-
-
ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கும் வழக்கு; தீபா, தீபக் 2ம் நிலை வாரிசுகள் என தீர்ப்பு முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கும் வழக்கில் அவரது அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் 2ம் நிலை வாரிசுகளாக நியமித்து தீர்ப்பு வெளிவந்துள்ளது. பதிவு: மே 27, 2020 12:06 PM சென்னை, தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையை சேர்ந்த அ.தி.மு.க.வினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின் சொத…
-
- 4 replies
- 1k views
- 1 follower
-
-
மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாஞ்சா நூல் (கோப்புப்படம்) சென்னை: தமிழகத்தில் மாஞ்சா நூல் பட்டம் விடுவதற்கு ஏற்கனவே தடை இருக்கிறது. ஆனால் அதனையும் மீறி சிலர் பட்டம் விடுவதால் சில நேரங்களில் பட்டத்தின் கயிறு சாலைகளில் செல்வோரின் கழுத்தை நெரித்து உயிரிழப்பும் ஏற்படுகிறது. சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை, மாஞ்சா நூலில் பட்டம் விட மேலும் 2 மாதங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 16-…
-
- 2 replies
- 539 views
-
-
நளினி- முருகன் இணைய வழி ஊடாக உறவினர்களிடம் பேச முடியாது- உயர் நீதிமன்றம் உத்தரவு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் முருகன் இணைய வழி ஊடாக வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாதென சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் இருவரும் இலங்கையிலுள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம், இணைய வழி ஊடாக பேச அனுமதி அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும், முருகன் லண்டன…
-
- 0 replies
- 463 views
-
-
கனடிய பிரமரின் ஆதரவு குரல் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கில் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு அரசு அஞ்சலி செலுத்தாது ஏன் ❓
-
- 2 replies
- 873 views
-
-
போர்க்காலத்தைப் போலவே இன்றும் உதவும் புலம்பெயர் உறவுகள்: மனித உரிமை செயற்பாட்டாளர் சண்மாஸ்டர் Bharati May 26, 2020போர்க்காலத்தைப் போலவே இன்றும் உதவும் புலம்பெயர் உறவுகள்: மனித உரிமை செயற்பாட்டாளர் சண்மாஸ்டர்2020-05-25T20:09:41+00:00 கொரோனாவால் உயிர் இழப்புக்களோடு, கடுமையான பொருளாதார, சமூக நெருக் கடிகளையும் சந்தித்துள்ள நிலையில் கூட போர்க்காலத்தில் உதவியதைப் போலவே இன்றும் தமது உதிரத்தை உதவியாக வழங்கும் புலம்பெயர் உறவுகளின் உணர்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக சென்னையிலிருந்து செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் சண்மாஸ்டர் தெரிவித்துள்ளார். கனடா ஐக்கிய தமிழர் தோழமை முன்னணி என்ற அமைப்பின் நிதி ஆதரவுடன் தமிழ்நாடு சென்னையில் கொரோனா பேரிடரில் சிக்க…
-
- 0 replies
- 751 views
-
-
திருநெல்வேலி: தமிழகத்தில் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி (வயது 89) உடல் நலக்குறைவால் காலமானார். . திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டியின் 31-வது ஜமீனாக இருந்தவர் முருகதாஸ் தீர்த்தபதி வயது 89. இவர் தான் தமிழகத்தின் முடிசூட்டப்பட்ட கடைசி ஜமீன் ஆவர், இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1952-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்தது. இந்தச் சட்டம் வருவதற்கு முன் பட்டம் சூட்டிய ராஜாக்களில் தமிழகத்தில், சிங்கம்பட்டி ஜமீன் பரம்பரையை சேர்ந்த தீர்த்தபதி தான் முருகதாஸ் தீர்த்தபதி. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலை சிங்கம்பட்டி ஜமீன்தான் நிர்வகித்து வந்தது. இந்த ஜமீன் பரம்பரையின் 31-வது மற்றும் கடைசி ஜமீனான முருகதாஸ் தீர்த்தப…
-
- 5 replies
- 1.9k views
-
-
கொரோனா வைரஸ் ஊரடங்கால் மீண்டும் உயிர் பெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் பா.காயத்திரி அகல்யா பிபிசி தமிழ் Getty Images இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தாலும் நோய் தொற்று பரவாமல் இருக்க மக்கள் ஆரோக்கியமான சில வழி முறைகளை கடைப்பிடித்து வருகின்றனர். அதே போல குழந்தைகளை நாள் முழுவதும் வெளியில் அனுப்பாமல் வீட்டிலேயே இருக்க வைப்பதும் பலருக்கு பெரிய சவாலாக உள்ளது. எனவே அவர்களை நீண்ட நேரம் ஒரு விளையாட்டில் ஈடுபடுத்த முடிவு செய்து குடும்பத்துடன் ஒன்று கூடி தாயம் விளையாட துவங்கி விடுகிறார்கள். தாயம் விளையாட துவங்கினால் பல மணி நேரம் அந்த விளையாட்டில் குழந்தைகளை ஈடுப்பாடுடன் வைத்திருக்க முடியும், மேலும் குடும்…
-
- 1 reply
- 1.2k views
-
-
கரு. நாகராஜன் வந்தால் பெண்கள் வரமாட்டோம்: விவாதத்தில் ஆபாசம்! மின்னம்பலம் தமிழக செய்தித் தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்களில் பெண்களுக்கு எதிரான ஆபாசத் தாக்குதல்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் நியூஸ் 7 தொலைக்காட்சியில் நேற்று (மே 18) நடந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியிடம், பாஜகவைச் சேர்ந்த கரு. நாகராஜன் கடுமையாக தனி நபர் தாக்குதலில் ஈடுபட்டார். இதையடுத்து விவாதத்தில் இருந்து வெளியேறினார் ஜோதிமணி. இதுகுறித்து ஜோதிமணி எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று ( 18/05/2020 ) நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம் விவாதத்தில் இருந்து பாஜகவின் கரு. நாகராஜன் என்கிற மூன்றாந்தரமான மனிதரின் தரம்கெட்ட பேச்சால் வெளியேறினேன். புலம் பெயர்த்தொழிலாளர்…
-
- 56 replies
- 4.9k views
- 1 follower
-
-
தூத்துக்குடி: மே 22... கடக்கும் நினைவேந்தலில் காத்துக் கிடக்கும் நீதி! மின்னம்பலம் ச.மோகன் அந்தக் கறுப்பு நாள் மே 22இன் நினைவுகள் சிவக்கின்றன. தூத்துக்குடி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் நிலம், நீர், காற்று ஆகியன ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுக்கழிவுகளால் மாசுபடுவதைத் தடுக்க அமைதியான முறையில், அறவழியில் போராடிய மக்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் காவல் துறையின் கொடூரத் தாக்குதலுக்கும், ஒரு பெண்மணி பேருந்தில் பற்றிய தீயிலும் பலியானார்கள். பலர் உடல் உறுப்புகளை இழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர். இக்கொடிய நிகழ்ச்சி நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. நீதி …
-
- 1 reply
- 536 views
-
-
திமுக கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வி.பி. துரைசாமி பாஜகவில் இணைந்தார் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகனுடன் வி.பி. துரைசாமி (இடது) தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து வி.பி. துரைசாமி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்பட்டிருக்கிறார். வி.பி. துரைசாமி அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நேற்று, வியாழக்கிழமை, நீக்கப்பட்ட வி.பி. துரைசாமி இன்று, வெள்ளிக்கிழமை, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்துவந்த வி.பி. துரைசாமி, 1989லிருந்து 1991வரையிலும் 2006லிருந்து 2011வரையிலும் தி.ம…
-
- 0 replies
- 658 views
-