Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. படக்குறிப்பு,கடல் நடுவே புதிதாக செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 5 ஏப்ரல் 2025, 07:13 GMT மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து, ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே புதிதாக செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு நவம்பரில் முடிவடைந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பாலத்தை ஆய்வு செய்து, பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு சான்றிதழ் வழங்கினார். அதனை அடுத்து நாளை (ஏப்ரல் 6-ஆம் தேதி) பிரதமர் நரேந்திர மோதி புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். பாம்பன் பாலத்தின் வரலாறு இந்திய நாட்ட…

  2. பொது வாக்கெடுப்பு நடத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்-விஜய்! 3 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இலங்கை வரவுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் இடைக்காலத் தீர்வு பெற பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு. ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும். அத்துடன் மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை. மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம்,…

  3. 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சட்டவிரோத கருக்கலைப்பு… சிக்கிய செவிலியர். 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சட்டவிரோத கருக்கலைப்பினை மேற்கொண்ட குற்றச் சாட்டில் செவிலியர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி வசந்தம் நகர் பகுதியில், சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சுற்றிவளைப்பின் போதே குறித்த விடயம் அம்பலமாகியுள்ளது. இதன்போது குறித்த செவிலியருடன் தொடர்பை பேணி வந்த மேலும் இருவரைப் பொலிஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427438

  4. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,பிடிபட்ட தங்க நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன 2 ஏப்ரல் 2025 கர்நாடக மாநில வங்கியில் கொள்ளையடித்த தங்கத்தை, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள விவசாய கிணற்றில் பதுக்கி வைத்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 மாதங்களுக்குப் பின்னர் சகோதரர்கள் போலீஸாரிடம் சிக்கியது எப்படி? திசை தெரியாமல் சென்ற விசாரணையில் முக்கிய திருப்பம் எப்படி நடந்தது என்பது குறித்து அதிர்ச்சி தரும் விவரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2024 அக்டோபர் 28 ஆம் தேதி, திங்கள்கிழமை. சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு கர்நாடக மாநிலம், தாவனகரே மாவட்டத்தில் உள்ள நியாமதி எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் நுழைந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. வங்கிக் கிளையின் ஜன்னல் உடைக்கப்பட்டு ல…

  5. மாற்று சாதி இளைஞரை காதலித்த தங்கை கொலை - கைதான அண்ணன் அளித்த வாக்குமூலம் என்ன? பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தில் 22 வயது கல்லுாரி மாணவியைக் கொலை செய்ததாக அவரது உடன் பிறந்த அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இது, இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே இருந்த காதலின் காரணமாக நடந்த ஆணவக்கொலை என்று தகவல்கள் பரவியுள்ள நிலையில், இருவருமே மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். அதே நேரத்தில் ஆணவக்கொலைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டால் இத்தகைய கொலைகள் நிகழ்வது தடுக்கப்படும் என்று தீண்டாமை ஒழிப்பு மு…

  6. கட்டுரை தகவல் எழுதியவர், மேகா மோகன் பதவி, பிபிசி உலக செய்திகள் 2 ஏப்ரல் 2025, 01:20 GMT கடந்த 2019ஆம் ஆண்டில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, தமிழ்நாட்டில் சட்டபூர்வமாக திருமணமான முதல் திருநங்கை என்ற பெருமையை ஸ்ரீஜா பெற்றார். தற்போது, அம்மாவின் பெருமை எனப் பொருள்படும் 'அம்மாஸ் பிரைட்' (Amma's pride) என்ற புதிய ஆவணப்படம், ஸ்ரீஜாவின் திருமணத்திற்கு அரசு அங்கீகராம் கிடைக்க வேண்டும் என்று அவர் நடத்திய போராட்டத்தையும், அதில் அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது அம்மா வள்ளியின் முக்கியப் பங்கையும் விவரிக்கிறது. தனது மகளைக் கட்டி அணைத்துக்கொண்டே,"ஸ்ரீஜா, எனக்குக் கிடைத்த வரம்," என்று 45 வயதான வள்ளி பிபிசியிடம் கூறினார். தமிழ்நாட்டின் தூத்துக்குடியைச் சே…

  7. 02 APR, 2025 | 12:55 PM சென்னை: கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை: தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது. அங்கு எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது. தமிழ்நாட…

  8. அண்ணாமலையின் பதவி பறிப்பு…? தமிழக பா.ஜ.க கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பாஜக தேசியத் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அண்ணாமலைக்கு பதில், புதிய மாநிலத் தலைவரை நியமிக்கவும் பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில் புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பெயர்களும் தலைவர் பதவிக்கு பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்…

  9. UK இன் முப்படைகளும் மூன்றாம் உலக யுத்தத்தை எதிர்கொள்ளத் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

  10. நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல் நித்தியானந்தா இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் தகவல் தெரிவித்துள்ளார். நித்தியானந்தா திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் நித்தியானந்தா. கர்நாடகா, பிடதியில் ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நிறுவினார். பின் நடிகை ஒருவருடன் தனிமையில் இருந்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து பெண் சீடர்களைத் தவறாக நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் பெங்களூரில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்ட நிலையில், தலைமறைவானார். சகோதரி மகன் தகவல் அதனையடுத்து திடீரென கைலாசா என்ற தனித் தீவை உருவாக்கியிருப்பதாக அறிவித்தார். அது இந்துக்களுக்கான நாடு, தனி கரன்சி, பாஸ்போர்ட்…

  11. 31 Mar, 2025 | 01:04 PM சென்னை: இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பித்த விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக கூறி ரம்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் கடந்த 1984 ம் ஆண்டு உள் நாட்டு போர் காரணமாக சரவணமுத்துஇ தமிழ்செல்வி தம்பதியர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தனர். பின் வெளிநாட்டவருக்கான மண்டல பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கோவையில் பல ஆண்டுகளாக தங்கியுள்ளார் இந்நிலையில் கடந்த 1987 ஆம் ஆண்டு கோவையில் அத்தம்பதியருக்கு ரம்யா என்ற…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் "இந்த தவறு எப்படி நடந்திருக்கும் எனக் கண்டறிய முடியவில்லை. ஆனால், எதையோ செய்து எங்கள் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டார்கள் என்று மட்டும் புரிகிறது. நான் இப்போது உயிருடன் இருப்பதே பெரிய விஷயம்..." எனக் கூறி கண்கலங்கினார் சிவநேசன். தேனி மாவட்டம் தேவாரத்தில் மளிகைக்கடை நடத்தி வரும் சிவநேசன், சைபர் குற்றங்களில் ஈடுபடும் கும்பலிடம் 24 லட்ச ரூபாயை இழந்திருக்கிறார். குழந்தைகளிடம் செல்போனை கொடுத்ததன் விளைவாக இந்த மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார், தேனி சைபர் குற்றப் பிரிவு ஆய்வாளர். மளிகைக் கடைக்காரரிடம் மோசடி நடந்தது எப்படி…

  13. தளபதி விஜயை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்! தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உள்ளனர். காலை 10 மணி அளவில் கூட்டம் நடைபெறும் மையத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய், கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும், மதுபானசா…

  14. 28 MAR, 2025 | 10:11 AM புதுடெல்லி: இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்கள் சிறைப் பிடிக்கப்படுவது குறித்து திமுக உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "இலங்கையில் இரண்டு சட்டங்கள் உள்ளன. 1996-ஆம் ஆண்டின் மீன்வள மற்றும் நீர்வாழ் வளச் சட்டம் மற்றும் 1979-ஆம் ஆண்டின் வெளிநாட்டு மீன்பிடி படகுகளின் மீன்வள ஒழுங்கு முறைச் சட்டம். இந்த இரண்டு சட்டங்களும் 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் திருத்தப்பட்டன. இதனால் மிகவும் கடுமையான தண்…

  15. மொழி சர்ச்சையில் யோகி ஆதித்யநாத்துக்கு ஸ்டாலின் பதிலடி! எல்லை நிர்ணயம் மற்றும் மும்மொழிக் கொள்கை தொடர்பான உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கருத்துகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (27) கடுமையாக விமர்சித்தார். ஆதித்யநாத், செய்தி நிறுவனமான ANI-க்கு அளித்த பேட்டியில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பிராந்தியம் மற்றும் மொழி அடிப்படையில் பிளவுகளைத் தூண்ட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து ஸ்டாலினின் கருத்துக்கள் வந்துள்ளன. “நாட்டை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக, மொழி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் பிளவுகளை உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். இத்தகைய அரசியல் தேசத்தை பலவீனப்படுத்துகிறது,” என்று உத்தரப் பிரதேச முதல்வர் குறித்த பேட்டி…

  16. கச்சத்தீவு மீட்பு வழக்கு; செப்-15 அன்று இறுதி விசாரணை! கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது செல்லாது என அறிவிக்க கோரி இந்திய உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கருணாநிதி மறைந்துவிட்டதால் அவருக்கு பதிலாக திமுக பொருளாளர் டிஆர் பாலுவை மனுதாரராக சேர்க்கவும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (25) அனுமதித்தது. தமிழ்நாட்டுக்கு சொந்தமானது கச்சத்தீவு. ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் வசம் இருந்தது கச்சத்தீவு. ஆனால் மத்திய அரசு 1974-ம் ஆண்டு இலங்கைக்கு தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை தாரைவார்த்தது. கச்சத்தீவு தாரைவார்க்கபட்டதால் தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கை கடற்படையால் சுட்டுக் க…

  17. திடீரென இடிந்து விழுந்த பாரதியார் வீட்டின் மேற்கூரை! எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லம், செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வீட்டில் மகாதேவி என்பவா் காப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த இல்லம் காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரையும், பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 6 மணிவரையும் பொதுமக்கள் பாா்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும். இங்கு பகுதிநேர நூலகமும் செயற்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 500-க்கும் மேற்பட்ட நபர்கள் இங்கு வந்து செல்வர். விடுமுறை நாள்களில் பாா்வையாளா்கள் எண்…

      • Haha
    • 2 replies
    • 415 views
  18. கட்சியின் முக்கியத் தலைவர்களோடு எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருக்கிறார். எடப்பாடி அமித் ஷாவுக்கு பூங்கொத்து கொடுத்த வேகத்திலேயே அமித் ஷாவிடமிருந்து ட்வீட்டும் வந்திருக்கிறது. அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடி உட்பட அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் மத்திய அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்திருக்கின்றனர். இந்த சந்திப்புக்குப் பிறகு, '2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்.' என அமித் ஷா ட்வீட் செய்திருக்கிறார். அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று காலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்குப் பயணம் செய்திருந்தார். எஸ்.பி.வேலுமணி,…

  19. சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஊடகவியலாளர் சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரது வீட்டில் கழிவு நீர் ஊற்றி வீட்டை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-”ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் இன்று (24.3.2025) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். அத்துடன் அவரது படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் எ…

  20. Published By: DIGITAL DESK 3 23 MAR, 2025 | 04:33 PM இந்தியாவில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 152 அடி உயர தேர் திடீரென சாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் பெங்களூர், ஹுஸ்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த மத்தூரம்மா அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அம்மனுக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே திருவிழாவையொட்டி சனிக்கிழமை (22) தேரோட்ட நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றுள்ளது. இதன்போது, 152 அடி உயர தேரில் அம்மன் எழுந்தருளிய நிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துள்ளனர். இந்த தேருடன் சேர்த்து நாகமங்களா மற்றும் ராயசந்திரா சாமி தேர்களும் சென்றுள்ளன. இந்நிலையில் தேரோட்ட நிகழ்ச்சியி…

  21. பட மூலாதாரம், HANDOUT படக்குறிப்பு, கோவையில் ஒரு வீட்டில் பாம்பை பிடிக்கும் போது பாம்பு கடித்து உயிரிழந்த சந்தோஷ் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 22 மார்ச் 2025, 06:18 GMT கோவையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ள பாம்பு பிடிக்கும் நபரான சந்தோஷ், பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். பாம்பு பிடிக்கும் போது உருவாகிற சூழ்நிலையும், அவர்களின் அறியாமையுமே இந்த மரணங்களுக்குக் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். பாம்பு பிடிப்பதற்கான முறையான பயிற்சி மற்றும் உபகரணங்களை அளித்து, இவர்களை துறையுடன் சேர்த்து ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக வனத்துறையின் தலைவர் சீனிவாச ரெட்டி பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். பாம்பு பிடிப்பவர்கள…

  22. மீன்கள் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றும் வழக்கமான வரையறை எதற்குள்ளும் பொருந்தி வராதவை விலாங்கு மீன்கள். மெல்லிய, வழுவழுப்பான மற்றும் நீண்ட பாம்பு போன்ற உடலமைப்பைக் கொண்டவை. அத்தகைய விலாங்கு மீன்களில், ஒரு புதிய இனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விலாங்கு மீன் அதிகம் பேசுபொருள் ஆவதற்குக் காரணம் அதன் பெயர். அதற்கு அரியோசோமா தமிழிகம் (Ariosoma tamilicum) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை அடையாளப்படுத்தும் விதமாக விலாங்கு மீனுக்கு பெயர் சூட்டியது ஏன்? சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இந்தப் புதிய வகை விலாங்கு மீன் குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன? இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) கீழ் செயல்படும் தேசிய மீன் மர…

    • 1 reply
    • 324 views
  23. 19 Mar, 2025 | 02:15 PM புதுடெல்லி: இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ “கடந்த 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். ஜனவரி 25-ம் தேதி முதல் 45 நாட்களில் பல்வேறு தாக்குதல்களை இலங்கை கடற்படை நடத்தி இருக்கிறது. ஜனவரி 25 அன்று 3 படகுகளில் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்தது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கிளிந…

    • 1 reply
    • 313 views
  24. போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது! பணிக்கு வருகை தராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையிலேயே தமிழக அரசு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, ஏனைய விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது என்றும், காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை சேகரிக்குமாறும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425746

  25. 'இவர்களின் கதைகளை சொல்ல வேண்டும்' - பெற்றோர்களின் கடின உழைப்பை புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் மாணவர்கள் பட மூலாதாரம்,JAYARAJ S படக்குறிப்பு,பழனியம்மாள் அதிகாலையில் 2 மணிக்கெல்லாம் எழுந்து செங்கல் சூளையில் வேலை செய்ய வேண்டும் கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 17 மார்ச் 2025, 05:55 GMT புதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர் அதிகாலை 2 மணிக்கெல்லாம் ஜெயராஜின் அம்மா பழனியம்மாளுக்கு விடிந்துவிடும். இரவு எத்தனை மணிக்குத் தூங்கினாலும் 2 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பது, செங்கல் சூளையில் வேலை பார்க்கும் அவருக்கு ஓர் அனிச்சை செயல். தலைப்பாகை அணிந்து சேறும் சகதியுமான ஆடையுடன் நாள் முழுக்க தன் அம்மா வேலை செய்வதை புகைப்படங்களாக ஆவணப்படுத்தியுள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.